சனி, 7 ஜூலை, 2012

கடவுள் இருக்கின்றார், 99.9 % உருதிபடுத்தியுள்ளது ஐரோப்பிய அணு ஆராய்ச்சிக் கழகம்!

 
               கடவுளின் அணுத்துகள் என்று அழைக்கப்படும் ஹிக்ஸ் போஸான் இருப்பது 99.999% உறுதி செய்யப்பட்டுள்ளதாக இது தொடர்பான ஆராய்ச்சியை நடத்தி வரும் விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.

இதன்மூலம் ஹிக்ஸ் போஸான் இருக்கிறதா இல்லையா என்பது தொடர்பான கேள்விகளுக்கு ஓரளவுக்கு விடை கிடைத்திருக்கிறது.

Big Bang எனப்படும் பெரு வெடிப்பைத் தொடர்ந்தே அணுக்களும், மூலக்கூறுகளும், கிரகங்களும், இந்த பேரண்டமும் (universe) உருவாயின என்பது தியரி.

இதன்படி பிக் பேங் வெடிப்பு நிகழ்ந்த கணத்தில் அணுக்கள் ஒலியை விட பயங்கரமான வேகத்தில் எல்லா திசைகளிலும் சிதறின. அப்போது அந்த அணுக்களுக்கு எந்த நிறையும் (mass) இல்லை.

ஆனால், ஹிக்ஸ் போஸான் எனப்படும் ‘சக்தியோடு’ அவை தொடர்பு கொண்ட பிறகே அந்த அணுக்களுக்கு நிறை கிடைத்தது. இது தான் இந்த பேரண்டம் உருவானதன் அடிப்படை என்று சொல்கிறது ஸ்டாண்டர்ட் மாடல் தியரி.

இந்த கோட்பாட்டின்படி (தியரி) இந்த யுனிவர்ஸ் உருவாக முக்கிய அடிப்படையாக இருந்தவை 12 வகையான அணுத் துகள்கள். அடுத்தடுத்து நடந்த ஆய்வுகளில் 11 அணுத் துகள்கள் அடையாளம் காணப்பட்டுவிட்டன. அவை இருப்பதையும் பார்த்துவிட்டோம்.

ஆனால், இதுவரை கண்ணுக்குப் புலப்படாத ‘சூப்பர் ஸ்டார்’ தான் ஹிக்ஸ் போஸான். சரி, இதைத் தான் கண்டுபிடிக்கவே முடியவில்லையே, விட்டுவிட வேண்டியது தானே என்றால், அதுவும் முடியாது. காரணம், அது இந்த யுனிவர்ஸ் உருவானது தொடர்பான ஒட்டு மொத்த தியரிகளையும் குப்பைக்குக் கொண்டு போய்விடும்.

இதையடுத்தே ஹிக்ஸ் போஸானை கண்டுபிடிக்கும் முயற்சிகள் தொடங்கின. அமெரிக்காவில் தான் முதலில் இந்த ஆய்வுகள் நடந்தன. பல ஆண்டுகள் நீடித்த இந்த சோதனைகள் எந்த முடிவையும் எட்டாததால், அந்த ஆய்வுகளுக்கு நிதி தருவதை அமெரிக்க அரசு நிறுத்திவிட்டது.

இதைத் தொடர்ந்தே பிரான்ஸ்-சுவிஸ் எல்லையில் ஜெனீவா அருகே ஐரோப்பிய அணு ஆராய்ச்சிக் கழகம் (CERN) அமைத்த மாபெரும் வட்ட சுரங்க ஆய்வகத்தில் இந்தச் சோதனைகள் தொடங்கின.

அணுத் துகள்களுக்கு நிறையைத் தருவதாகக் கருதப்படும் ஹிக்ஸ் போஸான் தான் நம்மைச் சுற்றியுள்ள இந்த பேரண்டத்தின் பெரும் பகுதியை நிறைத்திருக்கிறது. இதனால் பாதிக்கப்படாத ஒரே அணுத் துகள் ஒளிக் கதிர்களான போட்டான்கள் மட்டுமே. இதனால் தான் போட்டான்களுக்கு நிறை இல்லை. மற்ற எல்லா அணுத் துகள்கள் மீதும் இந்த ஹிக்ஸ் போஸான் தனது ஆதிக்கத்தைச் செலுத்தி நிறையைத் தந்துவிடுகிறது என்று சொல்கிறது ஸ்டாண்டர்ட் மாடல் தியரி.

ஆனால், அதில் விடுபட்டு நிற்கும் ஒரே கேள்வி அணுத் துகள்களுக்கு நிறையைத் தரும் ஹிக்ஸ் போஸானின் எடை என்ன என்பதே. (நிறை என்றால் என்ன?. ஒரு பொருளின் எடை மைனஸ் புவிஈர்ப்பு விசை தான் நிறை. அதாவது நமது எடை 55 கிலோ என்றால் நம் உடலின் மீது புவிஈர்ப்பு விசை செலுத்தும் இழுவிசையைச் சேர்த்தது தான் 55 கிலோ எடை. இதில் புவிஈர்ப்பு விசையை கழித்துவிட்டால் மிச்சமிருக்கும் எடையே நிறை)

பார்க்கவே முடியாத ஹிக்ஸ் போஸானை நிரூபிக்க ஒரே வழி. அதன் எடையைக் கண்டுபிடிப்பதே. இந்த ஆய்வைத் தான் CERN நடத்தியது.

இதற்காகத் தான் சிறிய அளவிலான Big Bang வெடிப்பை செயற்கையாக நடத்திப் பார்த்தனர். இதற்காகத் தான் நியூட்ரான்-புரோட்டான்களின் அதி பயங்கர மோதலை நடத்தினர். இந்த மோதலில் வெடித்துச் சிதறிய பல்வேறு அணுத் துணைத் துகள்கள், கதிர்வீச்சுகளுக்கு இடையே ஹிக்ஸ் போஸானையும் (அதன் எடையை) தேடினர்.

ஸ்டாண்டர்ட் மாடல் தியரியின் படி ஹிக்ஸ் போஸானின் எடை 125 கிகா எலெக்ட்ரோ வோல்ட்ஸ் (GeV) என்ற அளவில் இருக்க வேண்டும். அதாவது அணுக்களுக்குள் இருக்கும் துணைத் துகளான புரோட்டானின் எடையை விட 125 மடங்கு அதிகமாக இருக்க வேண்டும்.

CERN விஞ்ஞானிகள் நடத்திய ஆராய்ச்சியில் 125.3+ GeV எடை கொண்ட துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது 99.999% ஹிக்ஸ் போஸானாகத் தான் இருக்க வேண்டும் என்கிறார்கள்.

மின்கட்டண அட்டவணை.

http://www.chennai24x7.com/wp-content/uploads/2012/03/TNEB.jpg

வீட்டு இணைப்புகளுக்கானது:-


முதல் நிலை:-
 
1-100 யூனிட் வரை ரூபாய் 1.00
நிலைக்கட்டணம் இல்லை.
(நீங்கள் 100 யூனிட்டுக்குள் எவ்வளவு உபயோகித்தாலும் ஒரு யூனிட்டுக்கு ஒரு ரூபாய் மட்டும் தான். கூடுதலாக எந்த கட்டணமும் இல்லை.)
 
இரண்டாம் நிலை:-
 
1-200 யூனிட் வரை ரூபாய் 1.50.
நிலைக்கட்டணம் ரூபாய் 20.00.
(நீங்கள் 100 யூனிட்டுக்கு மேல் உபயோகிக்கும் சமயம் இந்த இரண்டாம் நிலைக்கு வந்துவிடுவீர்கள். நீங்கள் 110 யூனிட் உபயோகித்தால் உங்களுக்கான தொகை 165.00 + நிலைக்கட்டணம் ரூ.20.00 ஆகமொத்தம் ரூபாய் 185.00 செலுத்தவேண்டும்.)
 
மூன்றாம் நிலை:-
 
1-200 யூனிட் வரை ரூபாய் 2.00.
201-500 யூனிட் வரை ரூபாய் 3.00.
நிலைக்கட்டணம் ரூபாய் 30.00.
(நீங்கள் 200 யூனிட்டுக்கு மேல் உபயோகிக்கும் சமயம் இந்த மூன்றாம் நிலைக்கு வந்துவிடுவீர்கள். நீங்கள் 210 யூனிட் உபயோகித்தால் உங்களுக்கான தொகை 200 யூனிட் வரை 400.00+ 10 யூனிட்டுக்கு 3.00 வீதம் 30.00+ கூடுதல் கட்டணம் ரூ,30.00 ஆகமொத்தம் ரூபாய் 460.00 செலுத்தவேண்டும்.)
 
நான்காம் நிலை:-
 
1-200 யூனிட் வரை ரூபாய் 3.00.
201-500 யூனிட் வரை ரூபாய் 4.00.
500 க்கு மேல் ரூபாய் 5.75.
நிலைக்கட்டணம் ரூபாய் 40.00
(நீங்கள் 500 யூனிட்டுக்கு மேல் உபயோகிக்கும் சமயம் இந்த நான்காம் நிலைக்கு வந்துவிடுவீர்கள். நீங்கள் 510 யூனிட் உபயோகித்தால் 
முதல் 200 யூனிட்டுக்கு 600.00+ அடுத்த 300 யூனிட்டுக்கு 4 ரூபாய் வீதம் 1200.00+ 10 யூனிட்டுக்கு 5.75 வீதம் ரூபாய் 57.50+கூடுதல் கட்டணம் ரூபாய் 40.00 ஆகமொத்தம் ரூ.1898.00 நீங்கள் செலுத்தவேண்டும்)
 
கடைகளுக்கானது:-
 
1-100 யூனிட் வரை ரூபாய் 4.30.
100 யூனிட்டுக்கு மேல உபயோகித்தால் 1 யூனிட் விலை ரூபாய் 7.00 மட்டுமே கூடுதலாக 5 சதவீதம் சர்வீஸ் சார்ஜ் மற்றும் 1 கிலோ வாட்டிறகு 120 ரூபாய் கூடுதல் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

உங்களுக்கான அட்டவணை கீழே:-

வீடு இணைப்புக்கானது.கடை இணைப்புக்கானது.எனது கருத்து:-
 
                 நீங்கள் நான்கு ஸ்லாப்களில் (நிலைகள்)எந்த ஸ்லாப்பில் வருகின்றீர்களோ அதை தாண்டாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.உதாரணத்திற்கு நீங்கள் 210 யூனிட் உபயோகித்தால் நீங்கள் 460.00 ரூபாய் செலுத்தவேண்டும்.. கூடுதல் 10 யூனிட்டுக்கு 140.00 ரூபாய் அதிகம் செலுத்தவேண்டும்.அப்போழுது உங்களுக்கு ஒரு யூனிட் விலை 14.00 ரூபாயாக மாறிவிடுகின்றது.உங்கள் மீட்டரில் 150 யூனிட் வரும் சமயம் முதல் சிக்கனத்தை கடைபிடியுங்கள். அவசியமில்லாமல் மின்சாரத்தை பயன்படுத்தி பணத்தை செலவழிக்காதீர்கள்


சந்திரனுக்கு சென்று வர வேண்டுமா? ஒரு நபருக்கு கட்டணம் ரூ.700 கோடி மட்டுமே!

 பூமியில் பல இடங்களுக்கு சுற்றுலா சென்று வருகிறோம். தற்போது விண்வெளிக்கு சுற்றுலா செல்லும் அளவுக்கு அறிவியல் வளர்ச்சி அடைந்து விட்டது. அதை பயன்படுத்தி சந்திரனுக்கு ஆட்களை சுற்றுலா அழைத்து செல்லும் நடவடிக்கையில் இங்கிலாந்து நிறுவனம் ஈடுபட்டுள்ளது.

அதற்காக ஒரு நபர் சந்திரனுக்கு சென்று வர ரூ.700 கோடி கட்டணம் நிர்ணயித்துள்ளது. அதற்காக ரஷியா நிறுவனத்திடம் இருந்து 6 விண்கலங்களை விலைக்கு வாங்கி உள்ளது. ஒரு விண்கலத்தில் 3 பேர் மட்டுமே பயணம் செய்ய முடியும்.

சந்திரனுக்கு சென்று வரும் பயண திட்டம் வருகிற 2015-ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட உள்ளது. தற்போது, சர்வதேச விண்வெளி மையத்துக்கு சுற்றுலா பயணிகள் சென்று வருகின்றனர்.
         
             அதையும் தாண்டி பூமியில் இருந்து 3 லட்சத்து 76 ஆயிரத்து 586.5 கி.மீட்டர் தூரம் சென்று திரும்பும் பயண திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இது குறித்து லண்டனில் உள்ள வெஸ்ட் மனிஸ்டரில் நேற்று செயல்முறை விளக்கம் நடத்தப்பட்டது.

நாகரீக உடைகளை அணிந்து வாருங்கள்: ஆசிரியைகளுக்கு அரசின் திடீர் உத்தரவு

 

                     நமது கலாசாரத்திற்கு ஏற்பவும், பண்பாட்டுக்கு ஏற்பவும், நாகரீகமான முறையில் ஆசிரியைகள் உடை அணிய வேண்டும் என்று தமிழக அரசின் பள்ளிக் கல்வி இயக்குநரகம் திடீரென ஒரு அறிக்கையை அனுப்பியுள்ளது.

பள்ளிகள் எல்லாம் திறந்து ஒரு மாதத்தைத் தாண்டியுள்ள நிலையில் இந்த உத்தரவு வந்திருப்பது ஆசிரியைகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

ஜூன் மாதம் 29ஆம் திகதி இந்த சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில், அரசு மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அனைத்துத் தனியார் பள்ளிகளிலும் ஆசிரியைகள், ஆசிரியர்கள், வகுப்பறையில் நாகரீமான முறையில் உடையுடன் காணப்பட வேண்டும் என அறிவுறுத்துமாறு பள்ளி முதல்வர்கள், தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவித்துள்ளது.

நாகரீகமற்ற, நமது கலாசார, பண்பாட்டுக்குப் புறம்பான உடைகளை ஆசிரியர்கள், ஆசிரியைகள் அணியக் கூடாது என்று அதில் கூறப்பட்டுள்ளது.

ஆசிரியைகள் மாணவியருக்கு நல்ல ரோல் மாடல்களாகத் திகழ வேண்டும். அப்போதுதான் மாணவியர்களும் ஆசிரியைகளைப் பின்பற்றி நடக்க முயற்சிப்பார்கள் என்றும் அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஆனால் சில ஆசிரியைகள் சரியில்லாத உடைகளுடன் வகுப்பறைகளுக்கு வருவதாக புகார்கள் வருவது வருத்தம் தருகிறது என்று அந்த சுற்றறிக்கை மேலும் கூறுகிறது.

மாணவியரையும், மாணவர்களையும் பாதிக்கும் வகையிலான உடைகளை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் அணியக் கூடாது. அது பொதுமக்கள் மத்தியிலும் தவறான கருத்துக்களை ஏற்படுத்த வழி வகுத்து விடும் என்றும் அந்த சுற்றறிக்கை தெரிவிக்கிறது.

இருப்பினும் இந்த சுற்றறிக்கையில் என்ன மாதிரியான உடைகளை ஆசிரியைகள் அணிய வேண்டு

சென்னையில் 7 வயது குழந்தைகளுக்கு ரோபோ மூலம் அறுவை சிகிச்சை

 
                
                        சென்னையில் பிரபல மருத்துவமனை ஒன்றில், தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த 7 வயது பெண் குழந்தைக்கு ரோபோ மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டது. 


தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த 7 வயது சிறுமி அசூரா. சாலை விபத்தில் சிக்கிய அசூராவுக்கு சிறுநீர் வடிகுழாயில் காயம் ஏற்பட்டது.

இதனால் பிளாடரில் தேங்கும் சிறுநீர் கட்டுப்பாடு இல்லாமல் வெளியேறிக் கொண்டே இருந்தது. இதையடுத்து சிகிச்சைக்காக 2011ம் ஆண்டு சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார்.

மருத்துவ பரிசோதனையில் சிறுநீர் வடிகுழாய் பாதிக்கப்பட்டுள்ளதுடன், சிறுநீரை சேமித்து வைக்கும் பிளாடரும் சுருங்கி விட்டது கண்டுபிடிக்கப்பட்டது. 

பின்னர் டாக்டர்கள் குழுவினர், சிறுமியின் பிளாடரில் உள்ள தசை பகுதியையே குழாயாக(சிறுநீர் வடிகுழாய் போன்று) உருவாக்கி சிறுநீர் வெளியேறும்படி வழி ஏற்படுத்தினர். 

ஆனால் ஒரு வருடத்துக்கு பின்னர் சிறுமி அசூராவுக்கு சிறுநீர் வெளியேறுவதில் மீண்டும் பிரச்னை ஏற்பட்டது. இதையடுத்து கடந்த மாதம் அப்போலோ மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வந்தார்.

குழந்தைகள் நல சிறுநீரக மருத்துவ நிபுணர் டாக்டர் ஸ்ரீபதி தலைமையிலான டாக்டர்கள் குழுவினர் பரிசோதனை செய்தனர். திறந்த நிலை அறுவை சிகிச்சை செய்தால் செயற்கை குழாய் மூலமே ஆயுள் முழுவதும் சிறுநீர் கழிக்க வேண்டிய நிலை உருவாகும், என்பதால் ரோபாட்டிக் தொழில்நுட்ப உதவியுடன் சிகிச்சை அளிக்கப் பட்டது. 

இதுகுறித்து டாக்டர் ஸ்ரீபதி கூறும்போது, சிறுநீர் பிளாடரை திறக்காமலேயே ரோபாட்டிக் தொழில்நுட்ப உதவியுடன் பிளாடரில் உள்ள தசையில் புதிய படுக்கையை உருவாக்கி அதன் மீது சிறுநீர் குழாயை பொருத்தி தையல்கள் போட்டோம்.

ரோபோ தொழில்நுட்ப உதவியுடன் குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதால், பெரிய துவாரம் தவிர்க்கப்பட்டதுடன், நீண்ட நாட்கள் மருத்துவமனையில் தங்கியிருக்க வேண்டிய அவசியம் இல்லை. 

சிக்கலான அறுவை சிகிச்சைக்கு பின்னர் சிறுமி அசூரா தற்போது இயல்பு நிலைக்கு திரும்பி மற்ற குழந்தைகளை போன்று மகிழ்ச்சியுடன் உள்ளார். இந்த சிகிச்சைக்கு 2 லட்சம் செலவானது என்றார்.


அமெரிக்க செய்தி அமெரிக்க கல்லூரியில் 9 வயது இந்திய மாணவர்                   அமெரிக்க வாழ் இந்திய மாணவர் தனிஸ்க் ஆபிரஹாம், தனது 9 வயதில் அமெரிக்க கல்லூரியில் இணைந்து சாதனைப் படைத்துள்ளார்.
தனது 4 வயதில், மென்சா ஜீனியஸ் சொசைட்டி சார்பில் நடைபெற்ற திறனறிவு தேர்வில் 99.9 சதவீத மதிப்பெண்ணை பெற்றார்.
தற்போது அவனுக்கு 9 வயதாகி வரும் நிலையில், அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் சாக்ரமென்டோ நகரில் இயங்கி வரும் அமெரிக்கன் ரிவர் கல்லூரியில் சேர்ந்து படிக்க கல்லூரி ஒப்பு‌தல் அளித்துள்ளது.
மூலக்கூறு இயற்பியல் மற்றும் பிரபஞ்ச தோற்றம் குறித்து படிக்க ஆர்வமுள்ளதாக அவன் கூறியதாக டெய்லி மெயில் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

முஸ்லிம் சிறைவாசிகளுக்கு பாரபட்சம் காட்டும் சிறைத்துறை! - ‘தமிழக அரசியல்’ இதழுக்கு ம.ம.க. தலைவர் பேட்டி

                 தமிழக அரசியல் (23.06.2012) இதழுக்கு மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜே.எஸ்.ரிபாயீ அவர்கள் அளித்த பேட்டியிலிருந்து...
மனிதநேய மக்கள் கட்சி சார்பில் அரசியல் எழுச்சி மாநாடு நெல்லையில் ஜூன் 17ம் தேதி நடந்தது.
‘பத்து வருட சிறைவாசத்தைக் கடந்த ஆயுள் தண்டனைக் கைதிகளை விடுதலை செய்யவேண்டும். முஸ்லிம் சிறைவாசிகளுக்கு பல சலுகைகள் மறுக்கப்படுவதைத் தவிர்க்க வேண்டும்’ என்பன போன்ற கருத்துக்கள் முன்வைக்கப்பட்ட இந்த மாநாட்டில் தமுமுக மற்றும் மமகவின் மாநிலத் தலைவர் ரிபாயீயை சந்தித்து சில கேள்விகளை முன்வைத்தோம். இந்த மாநாட்டின் நோக்கம் பற்றிச் சொல்லுங்களேன்...
இந்திய அரசியல் சட்டம் பிரிவு 72 மற்றும் பிரிவு 161 ஆகியவை கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கலாம் என்ற கருத்தை அங்கீகரிக்கிறது. பொது மன்னிப்பு வழங்கப்பட்டதற்கு ஏராளமான முன் உதாரணங்கள் உள்ளன. கடந்த 15.09.2008ல் அறிஞர் அண்ணா நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு தமிழக சிறைகளில் இருந்து 1,406 கைதிகள் விடுவிக்கப்பட்டனர். இதில் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மாநகராட்சி கவுன்சிலர் லீலாவதி கொலை வழக்கில் ஆயுள் தண்டனைப் பெற்ற கைதிகளும் உண்டு. இது அப்போது பலத்த சர்ச்சையைக் கிளப்பியது. ஜனதா கட்சியின் தலைவர் சுப்ரமணியன் சுவாமி கூட இதற்கு எதிராக வழக்குத் தொடர்ந்தார். அப்போது தமிழகமெங்கும் 71 முஸ்லிம்கள் ஆயுள் கைதிகளாக இருந்தார்கள். அவர்களுக்கு இந்த வாய்ப்பு வழங்கப்படவில்லை. இந்த 1,406 கைதிகள் விடுதலை விஷயத்தில் எந்த நீதிமன்றமும் இதைத் தடுக்கவும் இல்லை. கருத்துச் சொல்லவும் இல்லை.
நாங்கள் மரணதண்டனை வேண்டாமென்று சொல்லவில்லை. ஆனால் மரண தண்டனை என்று தீர்ப்பு சொல்லப்பட்டு 20 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருப்பவர்கள், மரண தண்டனைக்கு மேலாக மனரீதியான தண்டனை அடைந்து விடுகிறார்கள். பேரறிவாளன், சாந்தன், முருகன், விஷயத்தினை எடுத்துக்கொண்டால் அவர்கள் 20 வருடங்கள் சிறையில் இருந்து மரண தண்டனையைவிட கொடுமையான தண்டனையை அடைத்து விட்டார்கள். ஒரே நேரத்தில் இரு தண்டனைகள் கூடாது என்பதுதான் எங்கள் வாதம்.
தற்போது நீதிமன்றங்கள் யாரையும் சாகும் வரை சிறையில் இருங்கள் என்றுசொல்வதில்லை. எனவே பத்து வருடங்களை சிறையில் கழித்தவர்கள் விஷயத்தில், அரசு பரிசீலனை செய்து, அவர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்க வேண்டும் என்ற கருத்தை இம்மாநாட்டின் மூலம் முன்வைக்கிறோம். முஸ்லிம் சிறைவாசிகளுக்கு பல உரிமைகள் மறுக்கப்படுவதாகக் கூறுவது எதன் அடிப்படையில்? வழக்கமாக சிறைவாசிகளுக்கு சிறைத்துறை எஸ்.பி., டி.ஐ.ஜி.யின் அதிகாரத்திற்கு உட்பட்டு பரோல் வழங்கப்படுகிறது. அமைச்சர்களின் பரிந்துரையின் பெயரிலும் பரோலில் செல்ல அனுமதிக்கப்படுகிறது. முஸ்லிம் கைதிகள் விஷயத்தில் பரோல் பலசமயம் மறுக்கப்படுகிறது. முஸ்லிம்கள் நீதிமன்றங்களில் போராடித்தான் பரோல் வாங்க வேண்டியுள்ளது.
பல கைதிகளை மிக எளிதாக பரோலில் அனுமதிக்கும்போது, முஸ்லிம்கள் விஷயத்தில் பரோலில் வெளியில் வரும்போது ஒரு டி.எஸ்.பி. தலைமையில் 24-க்கும் குறையாமல் காவலர்கள் வருகிறார்கள். இவர்கள் வீட்டின் முன்புறம், பின்புறம் என்று அணிவகுத்து நிற்பதால், உறவினர்கள், நண்பர்கள், பரோலில் வந்தவர்களை சந்திக்க மிகவும் தயங்குகிறார்கள். சந்திக்க வரும் அனைவரின் முகவரி, செல்போன் நம்பர் என்ற கெடுபிடிகள், பார்க்க வருகிறவர்களைக் கலங்கடிக்கிறது. இதனால் பரோலில் வந்தவர்கள் நெருங்கிய உறவுகளைக்கூட சந்திக்க முடியாதபடி மன உளைச்சலும் ஆளாகிறார்கள். மேலும் காலை 8 மணிக்கு பரோலில் வந்தவர்கள் மீண்டும் மாலை 6 மணிக்கு சிறைக்கு கொண்டு செல்லப்பட்டு, மீண்டும் மறுநாள் காலையில்தான் வெளியில் அழைத்து வருகிறார்கள். மற்றவர்களுக்கு பரோல் 1 மாதம் வரை சாதாரணமாக அனுமதிக்கப்படும்போது முஸ்லிம் சிறைவாசிகளுக்கு மட்டும் ஏன் கெடுபிடி என்பதுதான் எங்கள் கேள்வி.
மிக முக்கிய மரணங்களுக்கு கூட முஸ்லிம்கள் என்பதால் பரோல் மறுக்கப்பட்ட சம்பவங்களும் உண்டு. மருத்துவ ரீதியான சிகிச்சைகளுக்காக, வெளி மருத்துவமனைகளுக்கு அனுப்ப மறுப்பதும் நடந்து வருகிறது. முஸ்லிம்கள் என்பதாலேயே பலருக்கு ஜாமீன் மறுக்கப்படுகிறது.
இதுகுறித்து கோவை குண்டுவெடிப்பு வழக்கு தீர்ப்பில் நீதிபதி, ‘குற்றம் சாட்டப்பட்டுள்ள 106 பேர்களும் தம்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை ஆக்கப்பூர்வமாக எதிர்கொண்டு எதிர்வாதம் புரிய, வாய்ப்பளிக்க ஏதுவாக அந்நீதிமன்ற விசாரணையின் போது, பிணை வழங்கப் படவில்லை. இது அவர்கள் தம் தரப்பு வாதங் களுக்கு போதுமான ஆதாரங்களைத் திரட்டி சட்ட வலுவுள்ளவர்களாக ஆக்கிக் கொள்வதைத் தடுத்துவிட்டது’ என்று குறிப்பிட்டுள்ளார். எங்களுக்கு இழைக்கப்படும் அநீதிக்கு இதைவிட வேறு என்ன சாட்சி வேண்டும்?
தற்போது அதிமுக கூட்டணியில் நீடிக்கிறீர்களா? நாடாளுமன்றத் தேர்தலில் உங்கள் அரசியல் நிலைப்பாடு என்ன?
அதிமுக கூட்டணியில் நாங்கள் நீடிக்கிறோமா என்ற கேள்வியை அதிமுகவிடம்தான் கேட்க வேண்டும். சங்கரன்கோவில், புதுக்கோட்டை இடைத்தேர்தல்களில் நாங்கள் யாரையும் ஆதரிக்கவும் இல்லை, யாரையும் எதிர்க்கவும் இல்லை. நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி குறித்து தேர்தல் சமயத்தில் தகுந்த முடிவெடுக்கப்படும்’ என்று முடித்தார் ரிபாயீ.

-tmmkonline

இந்திய தேசியக் கொடியை முதன்முதலில் ஏற்றிய மாவீரன் கர்னல் சவுகத் ஹயாத் பற்றிய வீர வரலாறு.


                 இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் ஆங்கிலேய ஏகாதிபத்தியப் படைகளை ஓடஓட விரட்டி இந்திய தேசியக் கொடியை முதன்முதலில் ஏற்றிய மாவீரன் கர்னல் சவுகத் ஹயாத் பற்றிய வீர வரலாறு.

இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் ஆங்கிலேய ஏகாதிபத்தியப் படைகளை ஓடஓட விரட்டி இந்திய தேசியக் கொடியை முதன்முதலில் ஏற்றிய மாவீரன் கர்னல் சவுகத் ஹயாத் பற்றிய வீர வரலாறு இன்றைய இளைய தலைமுறையினரில் எத்தனைப் பேருக்கு தெரிந்திருக்கும்.

இந்திய சுதந்திரப் போரில் செறுகளமாடிய மாவீரர்கள் பற்றிய வரலாற்று நிகழ்வுகள் பல இந்த நாடு அறிந்தே உள்ளது. ஆனால் இரண்டாம் உலகப்போர் உலகையே இருகூறாக மாற்றியது. பிரிட்டன், அமெரிக்கா, சோவியத் யூனியன், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளின் தலைமையில் நேசப்படைகளும், ஜெர்மனி, ஜப்பான், இத்தாலி உள்ளிட்ட நாடுகளின் தலைமையில் அச்சு நாடுகள் என்ற பெயரில் ஓர் அணியும் மிகப்பெரிய யுத்தத்தில் இறங்கின.


இந்த மாபெரும் யுத்தத்தில் இரு அணிப் படைகளும் உலக வரைபடத்தின் அமைப்பையே மாற்றின. இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் ஆயுதப் புரட்சியின் மூலம் அந்நியரை விரட்ட வேண்டும் என அதிரடி முடிவெடுத்து இந்திய தேசிய ராணுவத்தை அமைத்தவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ். நேதாஜி உருவாக்கிய இந்திய தேசிய ராணுவத்தில் ஏராளமான உழைக்கும் பாட்டாளி மக்கள் பங்கேற்றனர்.

ஆங்கிலேயர் ஆட்சியை அடியோடு அகற்றி வீழ்த்திட ‘டெல்லி சலோ’ (டெல்லி செல்வோம்) என்ற முழக்கத்தினை முன்னெடுத்தார் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ். முதல் இந்திய சுதந்திரப் பிதாமகர் மாமன்னர் பகதூர்ஷா வீரத்தியாகம் செய்த ரங்கூன் மாநகரில் இருந்து வீர முழக்கத்துடன் இந்தப் படை புறப்பட்டது.

இதனிடையே இரண்டாம் உலகப்போரும் வெடித்துவிட்ட நிலையில் நேதாஜியின் இந்திய தேசிய ராணுவம் ஜெர்மனி, ஜப்பான், இத்தாலி நாடுகள் இடம்பெற்ற அச்சு நாடுகள் அணியில் நேதாஜி தலைமையிலான படைகள் இணைந்தன. 1944 ஏப்ரல் 14ஆம் தேதி இந்திய தேசிய ராணுவப் படைகள் பிரிட்டிஷ் ராணுவத்தை எதிர்த்து கடும் தாக்குதலைத் தொடுத்தது. தளபதி கர்னல் சவுகத் ஹயாத் மாலிக் தலைமையிலான இந்திய தேசிய ராணுவப் படைகள் பிரிட்டிஷ் ராணுவத்தை விரட்டியபடி மணிப்பூர் நகருக்குள் நுழைந்தன.

மணிப்பூர் தலைநகர் இம்பாலில் இருந்து 45 கிலோ மீட்டர் தொலைவில் அழகிய லோக்தாக் ஏரியின் கரையில் ‘மொய்ராங்’ என்ற எழில்மிகுந்த நகரம் கர்னல் சவுகத் ஹயாத் மாலிக் அவர்களின் தலைமையிலான படைகளின் வசம் வந்தது. இந்திய மக்களின் வீரம்செறிந்த படைகள் கைப்பற்றிய முதல் இடம் இதுவே.

மேலும் சுதந்திர இந்தியாவில் முதன்முதலில் தேசியக் கொடி ஏற்றப்பட்ட இடம் ‘சுதந்திர மொய்ராங்’ என்றால் அது மிகையன்று. இந்திய தேசிய ராணுவத்தின் முதல் வெற்றிக் கொடி ஏற்றி இன்று 69 ஆண்டுகள் ஆகின்றன. நேதாஜி சுபாஷ் சந்திரபோசும், கர்னல் சவுகத் ஹயாத் மாலிக்கும் இந்திய மக்கள் என்றும் நன்றியுடன் நினைவுகூரப்படுவார்கள் என்பது திண்ணம்.

----அபுசாலிஹ்.செவ்வாய், 3 ஜூலை, 2012

பாஸ்போர்ட் பக்கங்களை கிழித்து எரியும் விமான நிலைய அதிகாரிகள்!


             நீங்கள் பன்னாட்டு விமானத்தில் பயணம் செய்பவராக இருந்தால் பன்னாட்டு விமான நிலைய குடிபுகல்அதிகாரி (IMMIGRATION OFFICER) /சுங்க அதிகாரி (CUSTOMS OFFICER) /காவல்துறை அதிகாரி (POLICE OFFICER) மற்றும் விமான நிலைய ஊழியர் (AIRPORT STAFF) யாரிடம் உங்களது கடவுச்சீட்டை (பாஸ்போர்ட்டை) கொடுத்தாலும் மிக கவனமாக இருக்கவும் ஏனென்றால் இந்த ஊழியர்கள் உங்களது கடவுச்சீட்டை (பாஸ்போர்ட்டை) மிகச் சுலபமாக திருத்தி உங்களை இதன் மூலம் அலைக்கழித்து பணம் பறிக்கும் வழியை கையாளுகின்றனர் இது அனைத்து பன்னாட்டு விமான நிலையத்திலும் கூட்டு சதியாக நடைபெற்று கொண்டிருக்கின்றது.

விமான நிலையத்தில் பயணிகள் புறப்பாடு (DEPATURE) நேரத்தில், பயணி குடிபுகல் (IMMIGRATION OFFICER) அதிகாரியை கவனிக்காமல் இருக்கும் தருணத்தில் வெளியேற்றம் (EXIT) முத்திரை பதித்து இலாவகமாக உங்களது கடவுச்சீட்டின் ஒரு பக்கத்தை கிழித்து விட்டு அனுப்பிவிடுகின்றார். மேலும் பயணி குடிபுகல்/குடியேற்றல் மேசையைவிட்டு அகன்றதும் தனது கணினிமூலம் பயணியின் முழு விவரத்துடன் புகார் தெரிவித்து விடுகின்றார், இப்பொழுது இந்தியாவின் அனைத்து பன்னாட்டு விமான நிலையங்களிலும் குடிபுகல்/குடியேற்றல் அலுவலர் கணினியில் பயணிகளின் கடவுச்சீட்டின் என்னை தட்டினால் பயணிகளின் முழு விவரப் பட்டியல் கிடைக்கும் அதில் சிகப்பு கொடி அடையாளமிட்டு மிளிரும். இதுபோன்று பயணிகளிடம் பணம் பறிக்கும் உத்தியை கையாளுகின்றனர்.

அந்த பயணி மீண்டும் வருகைத் தரும்போது விசாரணைக்கு உட்படுத்தப்படுவார்.

அந்த பயணி வெளிநாட்டில் எத்தனை ஆண்டு வேலைசெய்தார், அவரது வருமானம், அவர் செய்யும் வேலை போன்றவைகள் விசாரிக்கப்படும், இதில் சட்டம் பேசும் அப்பாவிகள் , இந்தியாவில் உண்மையான நீதி கிடைக்கும் என நம்பும் அப்பாவிகள் நிலைதான் பரிதாபம் அவரின் எதிர்காலம் பாழ்படுத்தப்படும். இதற்காக அவரிடம் குடிபுகல் அதிகாரிகளும், காவலர்களும் பேரம் பேசி பணத்தை கறந்துவிடுவார்கள்.

தயவு செய்து அனைவருக்கும் அறிவுறுத்துவது என்னவென்றால், நீங்கள் உங்களது கடவுச்சீட்டை விமான நிலைய குடிபுகல்/ சுங்கம் மேசையில் உள்ள அலுவலரிடம் கொடுக்கும்போது மிகவும் விழிப்புடன் இருங்கள், உங்களது பார்வையை திசைத்திருப்பும் நோக்கத்தில் அந்த அலுவலர் நடந்து கொண்டாலும் உங்களது பார்வையை தவறவிடாதீர்கள்.

மேலும் இந்த தகவலை உங்களுக்கு தெரிந்த நண்பர்கள், பத்திரிக்கையாளர்கள், அரசியல்வாதிகளிடம் தெரிவியுங்கள். இதுபோன்று இந்தியாவில் ஒவ்வொரு மாதமும் 20 - 30 சம்பவங்கள் அனைத்து பன்னாட்டு விமான நிலையங்களிலும் நடைபெற்று கொண்டிருக்கின்றன. உதாரணத்திற்கு ஒன்று, சில மாதங்களுக்கு முன்பு சவுதி அரேபியா ஜித்தா (சவுதி அராம்கோ) வில் வேலைபார்க்கக் கூடிய ஹைதராபாத் சகோ. ஆரிபுதீன் தனது குடும்பம்பத்தினர் ஆறு உறுப்பினர்களுடன் அமெரிக்கா செல்ல விசா கிடைத்து நமது நாட்டின் ஹைதராபாத் வழியாக செல்ல எண்ணி ஹைதராபாத் விமான நிலையம் வந்தடைந்து, ஒருமாத காலம் தங்கிவிட்டு மீண்டும் ஹைதராபாத் விமான நிலையம் வழியாக அமேரிக்கா சென்றிருக்கின்றார். அவர் அமெரிக்காவை அடைந்து குடிபுகல் செய்யும்போது அவர் மனைவியின் கடவுச்சீட்டில் அமெரிக்காவிற்கான விசா பக்கம் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். அங்கிருந்து அவர்கள் அனைவரும் திருப்பிவிடப்பட்டனர். அவர்கள் மும்பை வந்தடைந்தவுடன் மும்பை காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டனர், கடந்த இரண்டு மாதகாலமாக கோர்ட்டுக்கும், காவல் நிலையத்திற்கும், குடிபுகல் அலுவலகத்திற்கும் அலைந்துகொண்டிருக்கின்றனர். நினைத்துப்பார்க்கவே ஆச்சரியமாக இருக்கின்றது எவ்வாறெல்லாம் குடிபுகல் அதிகாரிகள் பணம் பறிப்பதற்காக தன தாய்நாட்டு மக்களின் வாழ்க்கையில் விளையாடுகின்றார்கள் என்பது.
பாம்பே மற்றும் ஹைதராபாத் பன்னாட்டு விமான நிலையத்தின் மூலம் பயணிக்கும் அனைத்து பயணிகளும் மிகவும் கவனமாக இருக்கவேண்டும். ஒவ்வொரு மாதமும் ௨௦-௩௦ இதுபோன்ற பாஸ்போர்ட்டின் நடு பக்கங்கள் கிழிக்கப்படும் நிகழ்வுகள் மேற்கூறிய விமான நிலையங்களில் நடைபெறுவதாகவும், இதில் சிலருக்கு இந்த சம்பவம் யாரால், எப்பொழுது நடைபெற்றது என்பதே கூட தெரிவதில்லை. இதுபோன்ற அசம்பாவிதங்களில் நாம் இருந்தால் எப்படி இருக்கும் என கற்பனை செய்துபாருங்கள், நமது நாட்டின் காவல்நிளையங்களும், வழக்கடுமன்றங்களும் நம்மை அலைகளிப்பர்கள் என்பதை. இதுபோன்ற சம்பவங்கள் இரண்டு மூன்று வருடங்களாகவே அதிகரித்துக்கொண்டேதான் இருக்கின்றது. யார் இதுபோன்ற கடவுச்சீட்டு வைத்திருக்கின்றார்களோ அவர்கள் விமான நிலையத்தை அடைந்தவுடன் அவர்களிடம் விசாரணை என்னும் ரீதியில் அவர்களை அளயவிடுகின்றனர், இதுபோன்ற சம்பவங்களை செய்வது சில குடிபுகல் அதிகாரிகள்தான் என்பதும் தெரியவந்துள்ளது.
ஆகையால் நாம் அனைவரும் மிகவும் கவனமாக நமது கடவுச்சீட்டை சரிபார்த்துவிட்டு குடிபுகல் மேசையிலிருந்து அகலவேண்டும் 

திங்கள், 2 ஜூலை, 2012

"சேது சமுத்திர திட்டத்தை மாற்றுப் பாதையில் செயல்படுத்த சாத்தியமில்லை! – மத்திய அரசிடம் பச்செளரி குழு அறிக்கை                        சேது சமுத்திர திட்டத்தை மாற்றுப் பாதையில் செயல்படுத்த முடியாது என்று ஆர்.கே.பச்செளரி தலைமையிலான குழு அறிக்கை சமர்பித்துள்ளதாக உச்ச நீதிமன்றத்திடம் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
சேது சமுத்திர திட்ட தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இத்திட்டம் தொடர்பாக விளக்க மனுவை மத்திய அரசு தாக்கல் செய்தது.

அதில் சேது சமுத்திர திட்ட மாற்றுபாதையை நடைமுறைப்படுத்துவது என்பது பொருளாதார ரீதியாகவும், சுற்றுசூழல் ரீதியாகவும் சாத்தியப்படாத ஒன்று என்றும், இதுதொடர்பாக ஆர்.கே.பச்செளரி கமிட்டி அளித்துள்ள அறிக்கை தொடர்பாக மத்திய அமைச்சர்களுடன் கலந்து ஆலோசித்து உரிய முடிவு எடுக்கப்படும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.


முன்னதாக சேது சமுத்திரத் திட்டமானது இந்துக்களின் புனித ராமர் பாலம் வழியாக செல்கிறது என்றும் ஆகையால் அதை மாற்றுப் பாதையில் அமைக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றத்தில் இந்து அமைப்புகளும் சுப்பிரமணிய சாமி உள்ளிட்டோரும் மனு தாக்கல் செய்தனர்.


இதையடுத்து இதுபற்றி ஆராயுமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து சேது சமுத்திரத் திட்டப் பணிகளை நிறுத்தி வைத்த மத்திய அரசு மாற்றுப் பாதை குறித்து ஆராய நோபல் பரிசு வென்ற சுற்றுச்சூழல் வல்லுனர் ஆர்.கே.பச்செளரி தலைமையில் ஒரு குழுவை அமைத்தது.


பச்செளரி கமிட்டியின் அறிக்கையை மத்திய அமைச்சரவை இன்னும் ஆராயவில்லை என்பதால், இதன் மீது முடிவு ஏதும் எடுக்கப்படவில்லை என்றும் மத்திய அரசு உச்ச நீதிமன்றத்திடம் தெரிவித்துள்ளது.


இதைத் தொடர்ந்து சேது திட்டம் தொடர்பான அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து விளக்கம் அளிக்க 8 வார கால அவகாசம் அளித்து விசாரணையை ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்.


-thoothuகல்லூரிகளில் அதிக விலைபோகும் மருத்துவப் படிப்பு..                  தமிழகத்தில் மொத்தம் 39 மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இவற்றில், 17 அரசு மருத்துவக் கல்லூரிகளில், அகில இந்திய ஒதுக்கீடு நீங்கலாக, 1,653 எம்.பி.பி.எஸ்., இடங்கள், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்து வப் பல்கலையின் கீழ் இயங்கும் 14 தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீடாக 829 இடங்களும், நிகர்நிலைப் பல்கலைகள் மற்றும் பல்வேறு அறக்கட்டளைகளின் கீழ்வரும் தனியார் மருத்துவக் கல்லூரி களில் 1,050 இடங்களும் உள்ளன.

'கட்-ஆப்’ மதிப்பெண்கள் அடிப்படையில், அரசு மருத்துவக் கல்லூரிகள் அல்லது தனியார் மருத்துவக் கல்லூரிகளின் அரசு ஒதுக்கீட்டில், எம்.பி.பி.எஸ்., 'சீட்’ கிடைக்கப் பெற்ற விண்ணப்பதாரர்கள் போக, மீதிப் பேரில், டாக்டர் ஆகியே தீர வேண்டும் என்ற முடிவில் உள்ளோரும், தங்கள் பிள்ளைகளை டாக்டராக்கிப் பார்க்க வேண்டும் என ஆசைப்படும் பணக்காரப் பெற்றோரும், தங்கள் ஆசை நிறைவேற, தனியார் மருத்து வக் கல்லூரிகளின் நிர்வாக ஒதுக்கீட்டில் 'சீட்’ பெற வேண்டியுள்ளது.

ரூ.30 இலட்சம் முதல் 50 லட்சம்:கல்லூரிகளின் உள்கட்டமைப்பு, மாணவர் மற்றும் பெற்றோரின் முன்னுரிமை உள்ளிட்டவை அடிப்படையில், தனியார் மருத்துவக் கல்லூரிகள், 'ஏ’, 'பி’, 'சி’, என, பிரிக்கப்படுகின்றன. 'ஏ’ கிரேடு கல்லூரிகளில் 40 லட்சம் ரூபாய் வரையும், 'பி’ கிரேடு கல்லூரிகளில் 35 லட்சம் ரூபாய் வரையும், 'சி’ கிரேடு கல்லூரிகளில் 30 லட்சம் ரூபாய் வரையும், எம்.பி.பி.எஸ்., 'சீட்’ விலைபோவதாக, தனியார் மருத்துவக் கல்லூரி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எம்.பி.பி.எஸ்., 'சீட்’ கேட்டு தங்களைத் தொடர்பு கொள்வோருக்கு, தனியார் கல்லூரி நிர்வாகத்தினர் தொலைபேசியில் எந்த பதிலும் அளிப்பதில்லை. நேரில் அழைத்துப் பேசி, பேரம் படிந்தால், 'சீட்’ தருகின்றனர். தொகை அதிகம் என்பதால், கல்லூரி நிர்வாகம், பெற்றோர் இரு தரப்பினரும், இடைத் தரகர்களை பெரும்பாலும் விரும்புவதில்லை.

பிளஸ் டூவில் அதிக மதிப்பெண் பெறாத இப்படி ரூ.30 இலட்சம் முதல் 50 இலட்சம் வரை கொடுத்துப் படிக்கும் வசதிபடைத்த மாணவர்கள் மருத்துவப் படிப்பை ஒரு கெளரவமாக நினைத்துப் படிக்கின்றனர் என்று தான் சொல்லவேண்டும்.. அப்படியே படித்து முடித்தாலும் இவர்கள் என்னவோ அரசு மருத்துவமனை வேலைகளுக்கு செல்லப் போவதில்லை.. மாறாக மல்டி ஸ்பெஷாலிடி மருத்துவமனைகள் அமைத்து தான் படிக்க கல்லூரிக்கு கொடுத்த பணத்திற்கு 10மடங்கு சம்பாதிக்கவே நினைக்கின்றனர்.. பின்னர் எப்படி நம் நாட்டில் மருத்துவ சேவை இலவசமாக கிடைக்கும்?

கொசுக்களுக்கு ஒரு `சுவர்’!


நம் நாட்டைப் பொறுத்தவரை கொசுத் தொல்லையால் அவதிப்படாத அதிர்ஷ்டசாலிகள் குறைவு.

பல்வேறு கொசுத் தடுப்பு முறைகளைப் பயன்படுத்தியும் அவற்றிடம் இருந்து முழுமையாகச் சுதந்திரம் பெற முடியவில்லை. கொசுக்கடிக்கு நிரந்தரத் தீர்வாக ஒன்று வந்துவிட்டது. அது, `லேசர் சுவர்’. இந்தச் சுவர், அதிகச் செலவு வைக்காமலே பெரும் பரப்பளவை கொசுக்களின் தாக்குதலில் இருந்து தற்காக்கும் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

கொலம்பியா பல்கலைக்கழகத்தின் சபோல்க்ஸ் மார்க்கா அமைப்பினர் இந்த லேசர் சுவரை உருவாக்கியிருக்கின்றனர். இது ஒருவரது வீட்டை கூடாரம் போல மூடியிருக்கும். ஒரு கொசு கூட இந்தக் கவசத்தைத் தாண்டி வீட்டுக்குள் பிரவேசிக்க முடியாது. குடும்பத்தினரின் தூக்கத் தையும் கெடுக்க முடியாது.

நாம் இதுவரை பயன்படுத்தி வரும் எல்லா தடுப்பு முறைகளையும்விட இது சிறப்பானது என்று உறுதியாகக் கூறுகின்றனர் ஆய்வாளர்கள்.

கொசுக்களின் உணர்வுறுப்புகளுக்கு வெளிச்சமானது தொந்தரவாக அமையும், குழப்பும் என்று பல ஆண்டுகளுக்கு முன்பே மார்க்கா கண்டுபிடித்துவிட்டார். தொடர்ந்து மேற்கொண்ட ஆய்வுகளின் விளைவாக மார்க்கா தனது மனைவி சுஸா, சக ஆய்வாளர் இம்ரே பரோட்ஸுடன் இணைந்து, ஒளிச் சுவர் எனப்படும் ஒரு லேசர் தடையை உருவாக்கியிருக்கிறார். இதைத்தான் கொசுக்களால் ஊடுருவ முடியாதாம்.

"நாங்கள் யதேச்சையாகத்தான் இதைக் கண்டுபிடித்தோம். நடந்தோ, பறந்தோ வரும் கொசுக்கள் இந்தச் சுவரைத் தாண்டாமல் திரும்பிச் சென்றதைக் கண்டோம்" என்று மார்க்கா கூறுகிறார்.

ரொம்பச் செலவு வைக்காமல் அதிகப் பரப்பளவை கொசுக்களிடம் இருந்து காக்கும் இந்தத் தடுப்பு முறை பலரையும் ஆச்சரியத்துக் குள்ளாகியிருக்கிறது.
தொடர்ந்து பல கோடி ரூபாய் உதவியுடன் ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.