சனி, 6 அக்டோபர், 2012

லப்பைகுடிகாடுடில் அன்னை ஆயிஷா மகளீர் கல்லூரி அடிக்கல் நாட்டு விழாசத்தியம் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேரா. எம். ஹெச். ஜவாஹிருல்லாஹ் பங்கேற்பு


சத்தியம் டிவியில் பேரா.ஜவாஹிருல்லாஹ் பங்கேற்கும் நிகழ்ச்சி - சத்தியம் சாத்தியமே - நாள்: 02.10.2012மகாத்மா காந்திக்கு தமிழ் சொல்லிக் கொடுத்தவர் இவர்!

தமிழகத்தில் தில்லையாடியில் பிறந்தவர் வேதியம் பிள்ளை. 13 வயதில் தென் ஆப்பிரிக்காவுக்கு சென்று, அடித்தட்டு வேளைகளை செய்தவாறு மேற்படிப்பை மேற்க்கொண்டவர்.
இவர் தாயுமானவர் அடிகளார் வழி வந்தவர் என்பது சிறப்பு.

பாரிஸ்டர் பட்ட மேற்படிப்பை முடித்த காந்தி, தென் ஆப்பிரிக்காவுக்கு வேளை நிமித்தம் சென்றார். அங்கு வெள்ளையரை எதிர்த்தும், இந்திய சுதந்திரத்திற்கும் உழைத்து வந்துள்ளார். காந்தியின் கொள்கையால் ஈர்க்கப்பட்ட, வேதியம் பிள்ளை அவர்கள், தென் ஆப்பிரிக்காவில் காந்தியிடம் நெருக்கமானார். அப்போது, திருக்குரளில் தேர்ச்சி பெற்றிருந்த, வேதியம் பிள்ளை அவர்கள், அவ்வப்போது, திருக்குறளை காந்திக்கு மேற்கோள் காட்டியுள்ளார். திருக்குரலின் மேன்மையை உணர்ந்த காந்தி, தமிழை படிக்க விரும்பினார். அதற்காக, திரு. வேதியம் பிள்ளையிடம் தனக்கு தமிழ் கற்றுக் கொடுக்க வேண்டுமாய் கேட்டுக் கொண்டார். வேதியம் பிள்ளை அவர்களும், நேரம் வாய்க்கும் போதெல்லாம், காந்திக்கு தமிழ் கற்றுக் கொடுத்துள்ளார். தமிழில் கையெழுத்திடும் வரை காந்தியவர்கள், தமிழை கற்றுக் கொண்டார்.

செக்கிழுத்த வ.வு.சிதம்பரனார், சிறையில் தள்ளப்பட்டதால், அவரது குடும்பம் அன்றாட உணவுக்கே சிரமத்தை எதிர் கொண்டது. இதை தென் ஆப்பிரிக்காவில் இருந்த வேதியம் பிள்ளை அவர்கள், மாதா மாதம் ரூ. 50 தவறாமல், ஆறு வருடங்கள், வ.வு. சிதம்பரனார் சிறையிலிருந்து வெளிவரும் வரை கொடுத்து உதவினார்.  நன்றிக் கடனாக, சிதம்பரனாரும், தனக்கு ஆண் குழந்தை பிறந்தால், இவரது பெயரை சூட்ட வேண்டும் என எண்ணினார். ஆனால், பெண் குழந்தை பிறந்தது. அதற்கு வேத நாயகி என பெயர் சூட்டி தனது நன்றியை தெரியப்படுத்தினார்.

வேதியம் பிள்ளை அவர்கள் தமிழின் மேல் கொண்ட ஆர்வம் காரணமாக, தில்லையாடியில் பள்ளி ஒன்றை தொடங்கினார். அக்காலத்தில், குழந்தைகளை ஆடு, மாடு மேய்த்தால், மதியம் ஒரு வேளை சாப்பாடு கிடைக்கும். இதனால், வேதியம் பிள்ளை தொடங்கிய பள்ளிக்கு குழந்தைகள் வரவில்லை. சூச்சுமத்தை புரிந்து கொண்டதால், மதிய உணவு கொடுத்ததால், பள்ளியில் குழந்தைகளில் வருகை பெருகிறது. திரு. காமராசர், முதல்வராக இருந்த போது, பல பள்ளிகளை தமிழகத்தில் தொடங்கினார். ஆனால், இங்கு குழந்தைகள் வருவதில்லை. சிலரின் அறிவுரையால், வேதியம் பிள்ளை அவர்களின் தந்திரத்தை தெரிந்து கொண்ட காமராசர் அவர்கள், மதிய உணவுத் திட்டத்தை பள்ளிகளில் தொடங்கினார். குழந்தைகளும் பள்ளிக்கு வந்தார்கள். இதுதான் தமிழக பள்ளியில் மதிய உணவு வந்த கதை.திரு. வேதியம் பிள்ளை அவர்களின் மகனான திரு. தச்சனா மூர்த்தி (எ) திரு. தென்னவன், வயது 86, சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. சிறந்த தமிழ் தொண்டரான வேதியம் பிள்ளையின் வாரிசுகள், எவ்வித எதிர்பார்ப்பு இல்லாமல், எளிமையாக குடும்பம் நடத்தி வருவது மகிழ்ச்சி அளிக்கிறது.

என இந்த அனுபவத்தை பகிர்ந்து கொள்கிறார்கள் மனிதம் குழுவினர்.

தகவல் : மனிதம்

அரசு ஊழியர்களுக்கு 7% வீத அகவிலைப்படி உயர்வு : தமிழக அரசு அறிவிப்பு                                              தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 7% அகவிலைப்படி உயர்வை தமிழக அரசு அறிவித்துள்ளது.
ஜூலை 1ம் திகதி முதல் கணக்கிடப்பட்டு ரொக்கமாக இத்தொகை வழங்கப்படும் என தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.

மேலும் இதன் மூலம் 18 இலட்சம் அரச ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள் எனவும், அகவிலைப்படி உயர்வு மூலம் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.1443.52 கோடி செலவாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளர்.

ஏறிவரும் விலைவாசிக்கு ஏற்றது போன்று சம்பள கமிஷன் பரிந்துரையின் படி, மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 7% உயர்த்தி வழங்க மத்திய அரசு அறிவிப்பு செய்திருந்தது. இதையடுத்தே தற்போது தமிழக அரசும் இந்த அறிவிப்பை

"சென்னை உயர் நீதி மன்றத்தின்" தமிழர் விரோத போக்கு!

 

                                   சில வாரங்களுக்கு முன்பு 14 ஆயிரம் கோடி அல்ல மக்களின் உயிர்தான் முக்கியம் என உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறபித்தது.

இப்படி, உச்ச நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு அமுலில் இருக்கும் நேரத்தில், சிலதினங்களுக்கு முன் சென்னை உயர்நீதி மன்றம் அணு உலையில் எரிபொருள் நிரப்ப அனுமதி அளித்திருப்பது, தமிழக நீதிதுறையின் நேர்மையின்மையை காட்டுகிறது.

இதை எதிர்த்து சமூக சேவகர் சுந்தர் ராஜன் உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவை உச்சநீதிமன்றம் நேற்று பரிசீலனை செய்தது. உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக, கூடங்குளம் அணு மின் நிலையத்தில் விபத்து ஏற்பட்டால் அதற்கு யார் பொறுப்பு எற்பார்கள்? என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. இது குறித்து சரியான விளக்கம் தரவேண்டும் என்று மத்திய அரசைக் கேட்டுள்ளது.


1989ல் தெளிவில்லாத ஒரு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 2010 அணுப் பாதுகாப்புச் சட்டப்படி விபத்து நடந்தால் இழப்பீடாக 1500கோடி ரூபாய் அளிக்க வேண்டும். ஆனால் கூடங்குளம் திட்டம் 1989ல் ஆரம்பிக்கப்பட்டதால் இந்த சட்டம் அதை கட்டுபடுத்தாது. மேலும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும் போது, அரசுத் தரப்பு வாதம் இன்னும் ஆரம்பிக்கப்படாத நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் சட்டத்தை மதிக்காமல் இப்படி ஒரு தீப்பை கொடுத்திருப்பது, நீதி துறையில் அரசியல் செல்வாக்கு என்பது நிரூபனம் ஆகிறது.
 
தண்ணீரில் இறங்கி, மணலில் புதைந்து, உண்ணாவிரதம் இருந்து என்று மக்களின் சத்தியாகிரக போராட்டங்கள் தொடரும் நிலையில் அணுமின் நிலைய உற்பத்திகளை உடனே துவங்குவது என்பது எளிதான காரியமில்லை என்று உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. சென்ற வாரம் மத்திய அரசைக் கண்டித்து, அணுமின் நிலையத்திற்காக செலவு செய்த பணம் முக்கியமில்லை, அங்கே மக்களின் பாதுகாப்புதான் முக்கியம், உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் இல்லையெனில் அணு உலையை மூட உத்தரவிட வேண்டியது வரும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்து இருந்தது இங்கே குறிப்பிடத்தக்கது.

வியாழன், 4 அக்டோபர், 2012

புஷ்ரா நல அறக்கட்டளைக்கு உங்களின் கேக் ஆர்டரை கொடுத்து பயனடைவீர்

                  புஷ்ரா நல அறக்கட்டளை கடந்த பல வருடங்களாக வி.களத்தூர், மில்லத் நகர் மக்களுக்கு ஈத் பெருநாள் கேக்குகளை சிறப்பாக வழங்கி வருகிறது.இந்த வருடமும் தனது சேவையை மேம்படுத்தும் விதமாக பக்ரீத் கேக்கை நீங்கள் கொடுக்கும் முகவரிக்கு குறித்த நேரத்தி்ல் டெலிவரி செய்யப்பபடும்.உங்களின் ஆர்டர்களை கீழ்கானும் பொருப்பாளர்களிடம் தருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

ஒரு கேக்கின் விலை 13 திர்ஹம் மட்டுமே! 
ஆர்டர் பெறும் கடைசி தேதி : 23.10.2012
கேக் ஆர்டர்களுக்கு கிழ்க்கண்ட சகோர்களை  தொடர்பு கொள்ளவும்:

A . அப்துல் சலாம்                          055 1153584
 

 F அப்துல் ரஹ்மான்                    050 6402386


F முஹம்மது இஸ்மாயில்      055 8498129


S பைஜுர் ரஹ்மான்                    055 2893450


அ சம்சு தீன் (அல்குஸ்)              050 3685044


S சலீம் பாஷா (ஷார்ஜா)           056 1522651


M முஹம்மது இஷாக் (அபுதாபி)     056 6737912


இப்படிக்கு

புஷ்ரா நல அறக்கட்டளை
                 


புதன், 3 அக்டோபர், 2012

இந்த நாட்டை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்" :                                                 நதிநீர் தீர்ப்பாயம் ஒன்றின் தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கு டெல்லியில் வீடு ஒதுக்கப்படாத விவகாரம் குறித்து உச்சநீதிமன்ற நீதிபதிகள்  லோதா மற்றும் தவே "இந்த நாட்டை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்" என்று கோபமாகக் குறிப்பிட்டனர்.

கர்நாடகம் மற்றும் கோவா மாநிலங்களுக்கிடையே நதியொன்றின் நீரைப் பங்கிட்டுக்கொள்வதில் சர்ச்சை எழுந்ததால் அதைத் தீர்த்து வைக்க தீர்ப்பாயம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பாயத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்களாக ஓய்வு பெற்ற நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். தீர்ப்பாயத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் டெல்லியில் தங்குவதற்கு வீடு ஒதுக்கப்படாததைக் கண்டித்து அவர்கள் உச்சநீதிமன்றத்தில் முறையிட்டனர். அரசின் பொது வழக்கறிஞர் வாதிடுகையில் 'பொது ஒதுக்கீட்டின் கீழ் வீடு ஒதுக்க இயலாது; தீர்ப்பாயத் தலைவரும் உறுப்பினரும் அந்தத் தகுதியில் வரமாட்டார்கள்" என்று கூறினார்.

இதைக் கேட்டு கோபமடைந்த நீதிபதிகள் " விதிமுறைகளின் படி, தீர்ப்பாயத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள், அரசு குடியிருப்புகளில் தங்குவதற்கு இடம் உள்ளது. ஆனால், ஓய்வு பெற்ற நீதிபதிகள், டில்லி தெருக்களில் அலைந்து திரிய வேண்டும் என்று விரும்புகிறீர்களா? ஆழ்ந்த தூக்கத்தில் உள்ள உங்களை, நீதிமன்றம் எதற்கு எழுப்ப வேண்டும்? அவ்வாறு எழுப்ப வேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறீர்களா?  தீர்ப்பாயங்கள் செயல்படுவதை, நீங்கள் விரும்பவில்லை என்றால், தீர்ப்பாய நீதிபதிகளை நியமிக்கும் சட்டத்தை உடையுங்கள். உங்களையும், இந்த நாட்டையும் கடவுள்தான் காப்பாற்ற வேண்டும். " என்று குறிப்பிட்டதுடன்  டெல்லியில் காலியாக உள்ள டைப் -7 மற்றும் 8 வகை வீடுகள் பற்றி தெரிவிக்குமாறு மத்திய நகர்ப்புற வளர்ச்சி செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளனர.
வேலை வாய்ப்பற்றோர் உதவி பெரம்பலூர் கலெக்டர் அழைப்பு

                     பள்ளியில், எஸ்.எஸ்.எல்.ஸி., பயின்று தேர்ச்சியடையாதவர்கள் முதல் பட்டதாரிகள் வரை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, ஐந்தாண்டுகளுக்கு மேலாக வேலைவாய்ப்பின்றி காத்திருக்கும் பதிவுதாரர்களுக்கு, வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை வழங்கும் திட்டத்தில், பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் விண்ணப்பங்கள் வழங்கப்படுகிறது.

இதற்கு, கல்வி தகுதியை பதிவு செய்து, ஐந்தாண்டு முடிவடைந்தவராக இருக்க வேண்டும், 30.09.2007 அன்றோ அதற்கு முன்னரோ, பதிவு செய்தவராக இருக்கலாம். மனுதாரர் வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டையை, தொடர்ந்து புதுப்பித்து வந்திருக்க வேண்டும்.

எஸ்.ஸி., எஸ்.டி., இனத்தவர்கள், 30.09.2012 தேதியில், 45 வயதை கடந்தவராக இருத்தல் கூடாது. மற்ற வகுப்பினர், 40 வயதை கடந்தவராக இருத்தல் கூடாது.மனுதாரருடைய குடும்ப வருமானம் ஆண்டுக்கு, 50 ஆயிரம் ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும். மனுதாரர் எந்த ஒரு கல்வி நிறுவனத்திலும் சேர்ந்து கல்வி பயிலும் மாணவ, மாணவியாக இருத்தல் கூடாது. தொலைதூர கல்வி பயிலுபவராக இருக்கலாம், மனுதாரர் சுய தொழில் செய்பவராகவோ, சுயமாக சம்பாத்தியம் செய்பவராகவோ இருத்தல் கூடாது.

பூர்த்தி செய்த படிவங்கள், நவம்பர், 30ம் தேதி வரை பெறப்படும். விண்ணப்ப படிவங்கள் அலுவலக வேலை நாளில் காலை, 10.00 மணி முதல், பிற்பகல் 1.30 மணி வரை பெறப்படும்.

மனுதாரர் விண்ணப்பப்படிவம் பெற, பள்ளி கல்வி சான்றிதழ் நகல், கல்லூரி படிப்பு சான்றிதழ் நகல், வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டை கொண்டு வர வேண்டும்.

ஏற்கனவே உதவித்தொகை பெறுபவர்கள், இந்த ஆண்டுக்கு செலுத்த வேண்டிய சுயஉறுதிமொழி ஆவணத்தை தவறாது செலுத்த வேண்டும், என பெரம்பலூர் கலெக்டர் தரேஷ்அஹமது தெரிவித்துள்ளார்.

மாற்றுத்திறனாளிகளுக்கு அழைப்பு:

கண் பார்வையற்ற மனுதாரர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு, தமிழக அரசு சிறப்புதிட்டத்தின் மூலம் வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை வழங்கப்படுகிறது.

மனுதாரர்,அசல் கல்வி சான்றுகள், வேலைவாய்ப்பு அடையாள அட்டை, சமூக நலத் துறையால் வழங்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகளுக்குரிய அடையாள அட்டை, ஒரு ஃபோட்டோ மற்றும் மாவட்டத்தில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் துவங்கப்பட்ட வங்கி கணக்கு புத்தகத்துடன் வந்து விண்ணப்பத்தை பெற்று,நவம்பர் 30ம் தேதிக்குள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் சமர்ப்பிக்கலாம், என்று கலெக்டர் தரேஷ்அஹமது தெரிவித்துள்ளார்.ராணுவ மருத்துவமனைகளில் செவிலியர் பயிற்சி


சென்னை: ராணுவ மருத்துவமனைகள் மூலம் நடத்தப்படும் செவிலியர் பயிற்சிப் பள்ளிகளில் இளநிலை நர்சிங் படிப்பு பயில விரும்புபவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் அழைக்கப்பட்டுள்ளன.


அரசால் அங்கீகரிக்கப்பட்ட பள்ளியில், வேதியியல், இயற்பியல், உயிரியலில் 50 சதவீத மதிப்பெண்களுடன் 10ம், 12ம் வகுப்பு பயின்றவர்கள் விண்ணப்பிக்கலாம். திருமணமாக பெண்கள், விதவைகள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பிப்பவர் 1988 ஆகஸ்ட் 1ம் தேதி முதல் 1996 ஜூலை மாதம் 31ம் தேதிக்குள் பிறந்தவராகவும், இந்தியராகவும் இருக்க வேண்டும்.

உடல்தகுதி மற்றும் எழுத்துத் தேர்வின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். A4 தாளில் தங்களது சுய விவரங்களை எழுதி அனுப்பி விண்ணப்பிக்கவும். 10ம்,12ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், சாதிச்சான்றிதழ், ஆட்மிட் Cஅர்ட்ன் 3 பிரதிகள் போன்றவற்றையும் விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்பவும். 

அக்டோபர் 8ம் தேதிக்குள் கிடைக்குமாறு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும். Integrated Hq Of MoD(ARMY), DG Of Medical Services (ARMY)/DGMS-4B, AG&'s Branch, Room NO 45, &'L&' Block Hutments, New Delhi-110 001 enRa முகவரிkku viNNappanggaLai anuppalaam. மேலும் விவரங்களுக்கு www.indianarmy.nic.in,www.indianarmy.gov.in எனும் இணையதளங்களை அணுகலாம்.

If you Want to Down Load Application Form and More Details : Click here-->


-- தகவல் மின்னஞ்சல் மூலமாக
  -- 
--------------------------------------------------------------------
Mohamed Meeran . F. 
Email    :   mohamedmeeranf@gmail.commohamed.meeran@atkinsglobal.com,                                atham_bensoft@yahoo.co.in


Thanks to labbaikudikadunews

பாராளுமன்றத்தில் எடுத்து வைத்தோம் - எம். அப்துல் ரஹ்மான்                                             முஸ்லிம் சமுதாயத்தில் திருமணம் சம்பந்தமான இன்னொரு பிரச்சினை அண்மை காலங்களில் விஸ்வரூபம் எடுத்திருப்பது வேதனை தருவதாக இருக்கிறது. மணப்பெண் 18 வயது பூர்த்தியடையவில்லை என்றால், ‘குழந்தை திருமணம்’ எனச் சொல்லி மணமேடையிலேயே கைது செய்து கொண்டு போகிற அவலநிலையை அதிகாரிகள் அரங்கேற்றி வருகிறார்கள். ‘‘ஒரு பெண் பருவம் அடைந்துவிட்டாலே அவள் திருமணத்திற்குத் தகுதியுடையவள் ஆகிறா
ள்’ என்கிறது மார்க்கம். நமக்கென பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டுள்ள ஷரீஅத் சட்டம் இதனை அப்படியே வலியுறுத்துகிறது. இதனைச் சுட்டிக்காட்டி டில்லி உயர்நீதிமன்ற தீர்ப்புகூட 15 வயதில் திருமணம் செய்த ஒரு முஸ்லிம் பெண்ணை வழக்கிலிருந்து விடுவித்திருக்கிறது. இத்தகவல்களை சென்ற மாத ‘பிறை மேடை’ தலையங்கம் விளக்கமாக விவரித்திருக்கிறது. இப்போது இந்தப் பிரச்சினையை நாடாளுமன்றத்தில் எழுப்பியிருக்கிறோம். சட்டத்துறை அமைச்சர் மாண்புமிகு சல்மான் குர்ஷித் அவர்களுடன் விவாதித்தும் இருக்கிறோம். இந்திய அரசின் தலைமை வழக்கறிஞர் திரு. வானாவதியுடன் பேசிவிட்டு இதற்கான ஒரு நல்ல தீர்வை சட்ட ரீதியாக தர உறுதியளித்திருக்கிறார் மத்திய அமைச்சர்.

மிக விரைவில் எதிர்பார்க்கக்கூடிய இந்த தீர்வு சமுதாயத்தில் ஒரு நிரந்தர தீர்வாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. சட்ட ரீதியாக அது சமுதாயத்தின் உயிரான பிரச்சினைகளுக்குச் சரியான தீர்வைப் பெறுவதில் தாய்ச்சபை முஸ்லிம் லீக் தன்னை முன்னிருத்துவதில் ஒருபோதும் தயங்கியதில்லை. அந்த சரித்திரத் தொடர் சங்கிலித் தொடராய் மிளிரும் காட்சி முஸ்லிம் லீகிற்குப் புதிதல்ல; கடமையை ஆற்றுகிறோம்;


வல்ல இறைவனின் பேரருளை நாடி.


இன்ஷா அல்லாஹ்.


அன்புடன்

எம். அப்துல் ரஹ்மான்
ஆசிரியர்.

இவரைப்பற்றி தெரிந்தால் இவருடைய குடும்பத்தாருக்கு அல்லது உறவினருக்கு தெரியபடுத்தவும்


                                           இவரைப்பற்றி தெரிந்தால் இவருடைய குடும்பத்தாருக்கு அல்லது உறவினருக்கு தெரியபடுத்தவும்.:(துபாய்# 050 51 96 433 / 050 467 43 99)

துபாய் மருத்துவமனையில் திருநெல்வேலி அருகேயுள்ள பாப்பையாபுரத்தைச் சேர்ந்த சுடலைமுத்து ராஜகோபால் ( வயது 71 ) எனற முதியவர் கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் இருதய பாதிப்பு மற்றும் பக்கவாதத்தின் காரணமாக சிகிச்சை பெற்று வருகிறார்.


திருநெல்வேலி அருகேயுள்ள பாப்பையாபுரத்தைச் சேர்ந்தவ சு

டலைமுத்து ராஜகோபால். வயது 71. கடந்த 1976ம் ஆண்டு துபாய் வந்ததாகவும், மருத்துவமனையில் சேர்க்கப்படும் வரை டிரைவராக பணிபுரிந்து வருவதாகவும் தெரிவித்தார். தனக்கு பத்மா மற்றும் சுந்தராம்பாள் ஆகிய இரு மனைவிகள் இருப்பதாகவும் அவர்களில் மூத்த மனைவிக்கு ஐந்து குழந்தைகளும், இரண்டாவது மனைவிக்கு நான்கு குழந்தைகளும் இருப்பதாக தெரிவித்தார். மூத்த மனைவி பத்மா தன்னைக் காண துபாய் வந்திருப்பதாகவும், இரண்டாவது மனைவி சுந்தராம்பாள் புதுக்கோட்டையில் இருந்து வருவதாகவும் தெரிவித்தார். இவர் சிலநேரம் மனநலம் சரியில்லாதவரைப் போல் பேசுகிறார். எனவே இவர் கூறும் தகவல்கள் எந்த அளவு உணமையானது எனத் தெரியவில்லை.

தாயகத்தில் உள்ள அவரது குடும்பத்தினருடன் சேர்ப்பிக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


இவரைப் பற்றிய முழு தகவல்கள் தெரிந்தவர்கள் ஈமான் அமைப்பின் நிர்வாகிகளை 050 51 96 433 / 050 467 43 99 எண்ணில் தொடர்பு கொண்டு விபரம் தெரிவித்து உதவிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
 
 
 


உலகெங்கிலும் உள்ள ஐஎம்சிடி உறுப்பிணர்களுக்கு ஓர் நற்செய்திஉலகெங்கிலும் உள்ள நமது உறுப்பிணர்களின் வேண்டுகோளுக்கினங்க நமது ஐஎம்சிடியின் சார்பாக பெருநாளுக்கு தரமான கேக் விநியோகம் செய்வது என்று தீர்மானிக்கப்பட்டது. கடந்த ரமலான் பெருநாளுக்கு வழங்கியது போன்று வரும் பக்ரீத் பெருநாளுக்கும் தரமான கேக் விநியோகம் செய்வது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. பக்ரீத் பெருநாள் கேக்குகளை உடணடியாக ஆர்டர் செய்து தொடர்ந்து ஆதரவு தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

ஆர்டர் பெறும் கடைசி தேதி : 22.10.2012

கேக் விநியோகம் செய்யும் இடங்கள்

வி.களத்தூர், மில்லத் நகர், மில்லத் நகர் மேற்கு, வண்ணாரம்பூண்டி, ரஹ்மத் நகர் மற்றும் தைக்கால்.


கேக்கின் விலை 

ஐக்கிய அரபு அமீரகம் : 15 திர்ஹம்
சவுதி அரேபியா : 15 ரியால்
இந்தியா : 225 ரூபாய்


தரம் என்றும் நிரந்தரம்


உங்களின் கேக் ஆர்டர் தொடர்புக்கு

1. B.அஹமது அலி ( +971551386296 - துபாய்)
2. M.சதுருல் இஸ்லாம் (+971506786153 - துபாய்)
3. M.தாஜுதீன் (+971505894146 - ஷார்ஜா,அஜ்மான்)
4. M.ஜாபர் சாதிக் (+971507565955 - அபுதாபி)
5. F.சாகுல் ஹமீது (+971509365131 - அபுதாபி)
6. K.முஹம்மது பாருக் (+971505304362 - ராசல்கைமா)

7. S.நூர் முஹம்மது (+966595957492 - சவுதி – ரியாத்)
8. A.ஹசேன் முஹம்மது (+966561254812 - சவுதி – ரியாத்)
9. H.சாதிக் பாஷா (+966545567599 - சவுதி – தம்மாம்)
10. B.அப்துல் காதர் (+966558930403 - சவுதி – ஜித்தா,மெக்கா)

11. M.சபியுல்லாஹ் (+919042156093 - வி.களத்தூர்)

குறிப்பு : கடந்தமுறை விநியோகம் செய்யப்பட்ட கேக்கில் ஏதேனும் குறைகள் இருந்தால் மேற்கானும் பொருப்பாளர்களிடம் தெரிவித்தால் அந்த குறைகள் எதிர்காலத்தில் நடைபெறாமல் தவிரக்க உதவும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

இப்படிக்கு

ஐஎம்சிடி – வி.களத்தூர்.

-vkalathur.netமில்லத் நகரில் பன்றி தொல்லை!

                            மில்லத் நகரில் அதிகமாக பன்றிகள் சுற்றித் திறிந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் இன்று கிராம சபை கூட்டத்தில் புகார் அளித்தனர்.ஆனால் ஊராட்சி மன்ற தலைவர்கள் இந்த புகாரை நிராகரித்து இது ஊராட்சி மன்றத்தின் வேலை இல்லை.நீங்கள் போலீஸ் நிலையத்தில் புகார் அளியுங்கள் என்று கூறினார்.இதனால் பொதுமக்கள் போலீஸ் நிலையத்தில் பன்றி உரிமையாளர்கள்  பன்றியை பிடித்து செல்லுமாறு வாய் மொழி  புகார் அளித்துள்ளனர்.


புகைப்படம் : நமது செய்தியாளர் ஸ்டார் ஹசன் முஹம்மது

-vkalathur.com

செவ்வாய், 2 அக்டோபர், 2012

வி.களத்தூரில் காந்தி பிறந்தநாளன இன்று சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெறுகிறது.02.10.2012 இன்று வி.களத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் காலை 11.00 மணி அளவில் கிராம சபை கூட்டம் நடைப்பெற்றது.

 இன்று நடைப்பெற்ற கிராம சபை கூட்டத்தில் ஏற்றப்பட்ட தீர்மானக்கள்:
 

1 வி.களத்தூர் ஊராட்சி மேல் ஏரிக்கரை செல்லும் பாதையைய் தார்சாலை மரவனதம் வரை அமைதல்.
 

2 வி.களத்தூர் கடை விதி பகுதில் கொடும் குப்பைகளை அகற்றுதல்.
 

3 இந்திரா நகர் பகுதியில் நிழள் குடை அமைதல்.
 

4 வண்ணரம் பூண்டி காலனி தெற்க்கு தெரு சிமெண்ட் சாலை அமைதல்.
 

5 வண்ணரம் பூண்டி காலனி சுடு காட்டு பாதை / அடிபம்பு / காம்பவுண்டு அமைதல்.
 

6 பாலத்தின் அருகில் உள்ள மில்லத் நகர் பாதையை தார்சாலையாக மாற்றுதல்.
 

7 வி.களத்தூர் தண்ணீர் துறைபாடு அருகில் பயணியர் நிழல் குடை அமைதல்.
 

8 புதிய மகளிர் சுகாதார வளாகம் அமைதல்.
 

9 வி.களத்தூர் சிமெண்ட் சாலை அமைதல்.
 

10 வாள்ளியூர், இராயப்ப நகர், வண்ணரம் பூண்டி காலனி ஆகிய பகுதிகளில் புதிய மகளிர் சுகாதார வளாகம் அமைதல்.
 

11 நைனார் தெருவை சீர் அமைதல்.
 

12 பெண்கள் மற்றும் ஆண்கள் தொடக்க பள்ளிகளுக்கு சாலையில் இருந்து படிகட்டு அமைதல்.

புகைப்படம்: M.மன்சூர்


திங்கள், 1 அக்டோபர், 2012

v.களத்தூர் ரில் PFI யின் தாவா பிரச்சாரம் ( இஸ்லாத்தின் பால் மக்களை அழைக்கும் பணி )தாவா பிரச்சாரம் ( இஸ்லாத்தின் பால் மக்களை அழைக்கும் பணி )

அல்லாஹ்வின் மாபெறும் கிருபையால் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக நாம் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக இஸ்லாத்தை அதன் தூய வடிவில் பிரச்சாரம் செய்து வருகிறோம்.

அதை நீங்களும் அறிந்ததே . அல்ஹம்துலில்லாஹ்

அதன் ஒரு பகுதியாக நம்முடைய தாவா பிரச்சாரம் வி களத்தூர் அருகிலுள்ள ஊர்களில் இஸ்லாத்தை அதன் தூய வடிவில் அறிதுக செய்யும் விதமாக தாவா பிரச்சாரம் நடைபெற்றது .


ராயப்பா நகர் , அயன்பெரையுர் , இந்திரா நகர் , சமத்துவபுரம் ஆகிய பகுதி மக்களிடம் சென்று இஸ்லாத்தை எடுத்து வைக்கப்பட்டது மற்றும் பஸ் பயணத்திலும் இஸ்லாத்தை எடுத்து வைக்கப்பட்டது . அல்ஹம்துலில்லாஹ்.


 


 


 

துபாயில் ‘ஜிடெக்ஸ் ஷாப்பர்’ துவக்கம்!


         
            மேற்காசியாவில் மிகப்பெரிய தகவல் தொழில் நுட்ப, மின்னணு பொருட்களின் கண்காட்சியான  (Gitex Shopper) ‘ஜிடெக்ஸ் ஷாப்பரை’ நேற்று (29-09-2012) துபாய் கல்ச்சர் அண்ட் ஆர்ட்ஸ் அதாரிட்டி தலைவரான ஷேக் மாஜித் பின் முஹம்மது ராஷித் துவக்கி வைத்தார். வேல்ட் ட்ரேட் செண்டரில் நடைபெறும் இந்த வர்த்தக திருவிழாவில் நேற்று காலை முதலே மக்கள் கூட்டம் அலைமோதியது.

நுகர்வோரை கவருவதற்காக பல்வேறு எலக்ட்ரானிக் நிறுவனங்கள் மிகப்பெரிய சலுகைகளுடன் 8 தினங்கள் நடைபெறும் இத்திருவிழாவில் பங்கேற்றுள்ளன.

எல்.ஜி நிறுவனம் உலகிலேயே மிகவும் கனம் குறைந்த தொலைக்காட்சிகளுடன் ஜிடெக்ஸில் பங்கேற்கிறது.

மின்னணு, தகவல் தொழில்நுட்பத் துறையில் மிகச்சிறந்த தயாரிப்புகள் இத்திருவிழாவில் அனைவரையும் ஈர்க்கும். 30 ஆயிரம் பல்வேறு தயாரிப்புகளுடன் 120 நிறுவனங்கள் ஜிடெக்ஸில் பங்கேற்கின்றன. நுகர்வோருடன் தொடர்பை ஏற்படுத்தும் மிகச்சிறந்த வாய்ப்பாக ஜிடெக்ஸ் அமைந்துள்ளது என்று இ-மேக்ஸ்(E-Max) சி.இ.ஒ நிலேஷ் பட்நாகர் கூறுகிறார்.

காலை 11 மணிமுதல் இரவு 10 மணி வரை கண்காட்சி நடைபெறும். நுழைவுக் கட்டணம் 30 திர்ஹம். தகவல் தொழில் நுட்ப துறையில் ப்ரொஃபஸனல்களை அதிகம் ஈர்க்கும் ஜிடெக்ஸ் டெக்னாலஜி வீக் அடுத்த மாதம் (அக்டோபர்) 14 ஆம் தேதி முதல்18-ஆம் தேதி வரை நடைபெறும். இந்த எக்ஸ்பிஷனில் இந்தியாவைச் சார்ந்த 40 நிறுவனங்கள் பங்கேற்கின்றன.

                                                                                                       
மக்கள் நீதிமன்றத்தில் கதறி அழுத அப்துல் நாஸர் மஃதனியின் மகன்!

மஃதனியின் மகன் உமர் முக்தார்


                                          “எனது வாப்பாவை(தந்தை) காணும் பொழுதெல்லாம் நான் உணர்ச்சியை கட்டுப்படுத்திக் கொள்வேன். ஆனால், கடைசியாக நான் அவரை சந்தித்தபொழுது என்னால் அடக்க முடியவில்லை.” என்று அப்துல் நாஸர் மஃதனியின் மகன் உமர் முக்தார் மக்கள் நீதிமன்றத்தில் கதறி அழுத காட்சி அனைவரையும் நெகிழ்ச்சி அடையவைத்தது. ஜோடிக்கப்பட்ட வழக்குகளுக்கு எதிரான விசாரணையை நடத்திய மக்கள் நீதிமன்றத்தில் கலந்துகொண்டு தனது தந்தைக்கு ஏற்பட்ட துயரங்களை எடுத்துரைத்தார் உமர் முக்தார்.

“இரண்டு வாரங்களுக்கு முன்பு நான் சிறைக்குச் சென்றபொழுது கண்களின் பார்வை இழந்துவிட்டதாக கூறிய வாப்பா, ஒரு கண்ணை மூடிக்கொண்டு பேசினார். எனது பிள்ளைகளை இனி காண முடியுமா? என கவலை தெரிவித்த அவரது கண்கள் கண்ணீரால் நிறைந்திருந்தன. என்னால் எனது உணர்வுகளை கட்டுப்படுத்த முடியவில்லை. சிறுவயது முதலே நான் போர்டிங் ஸ்கூலில் தங்கி பயின்று வருகிறேன். அரவணைப்பிற்கு பதிலாக என்னைச் சுற்றிலும் நிறைந்திருந்தது தீவிரவாத முத்திரையாகும். தன்னைப் போன்ற ஏராளமான நிரபராதிகள் நாட்டின் பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களின் விடுதலைக்காக பாடுபாட நான் வழக்கறிஞர் ஆகவேண்டும் என்பதே எனது வாப்பாவின் விருப்பமாகும்.” என்று உமர் முக்தார் கூறினார்.

வி.களத்தூர் மில்லத் நகரில் சிமெண்ட் சாலை


வி.களத்தூர் மில்லத் நகரில் பிஸ்மில்லா தெருவில் சிமெண்ட் சாலை பணி முடிந்தது. 
 
நன்றி WWW.VKALATHUR.COM

மில்லத் நகர் நூருல் இஸ்லாம் இளைஞர் அணியினரின் நடத்தும் கூட்டுக் குர்பானி!


                                    இந்த வருடமும் மில்லத் நகர் நூருல் இஸ்லாம் இளைஞர் அணியினர் கூட்டுக் குர்பானி கொடுக்க திட்டமிட்டுள்ளனர். ஒரு பங்கின் விலை ரூ 1500/- என்று நிர்னைதுள்ளர்கள். வரும் பக்ரீத் பெருநாளுக்கு கூட்டுக் குர்பானி கொடுக்க விருப்பம் உள்ளவர்கள் மில்லத் நகர் நூருல் இஸ்லாம் இளைஞர் அணியினரை தொடர்பு கொண்டு உங்கள் குர்பானியின் பங்கினை கொடுக்கவும்.

உங்களது நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கும்  இதனை பற்றி தெரிவியுகள்.

 பங்குதாரர்களுக்கு இறைச்சி வீட்டிற்கே டோர் டெலிவரி செய்யப்படும்
தொடர்புக்கு ;
 
 M.மன்சூர் அஹமது    – 9843383336
A.ஜமால் தீன்                  – 9943406510
 M.ஜாகிர்  ஹுசைன்    – 9787217179
M.அன்சர் அலி                – 9505358592
 A.முஹம்மது பாரூக் – 8122392008