சனி, 9 ஜூன், 2012

நேர்மை என்றால் என்ன விலை? 

 நேர்மை என்றால் என்ன? என்று கேட்டு வாழுபவர்களுக்கு மத்தியில் நேர்மையின் சிகரமாக வாழும் மதுரை மாவட்ட ஆட்சியர் சகாயத்தின் பழைய பேட்டி ஒன்றை பார்ப்போமா.

"தடக், தடக், தடக், தடக்' -பெரும் சத்தத்துடனும் கரும் புகையை வெளியிட்டபடியேயும் கோக், பெப்சி உற்பத்தி ஆலை இயங்கிக் கொண்டிருக்க "சர்ர்ரென... காற்றை கிழித்தபடி அங்கு வந்து நிற்கிறது அரசு ஜீப். பருத்தி ஆடையில் ரப்பர் செருப்பில் அதிகாரி ஒருவர் இறங்க அவரை கண்டு மிரண்ட நிர்வாகத்தினர் உள்ளூர் கவுன்சிலரிலிருந்து வெளிநாட்டு அதிகாரிகளின் பெயர்கள் வரை சொல்லி பார்க்க எதையும் சட்டை செய்யாமல் கேட்டை இழுத்து மூடி ஆலைக்கு சீல் வைத்து, மாவட்டத்தில் சாதாரண பெட்டிக்கடை உட்பட எங்கும் கோக், பெப்சி விற்கக் கூடாதென தடை விதிக்கிறார். 

உலகத்திலேயே முதன்முறையாக ஒரு பன்னாட்டு நிறுவனத்திற்கு சீல் வைத்து காஞ்சி புரத்தையே கலங்கடித்த அன்றைய டி.ஆர்.ஓ. அதிரடி சகாயம் தான் இன்றைக்கு நாமக்கல் கலெக்டர் "சக்சஸ்' சகாயமாகி இந்தியாவிலேயே முதல் கலெக்டராக தன் சொத்து கணக்கை வெளியிட்டு தேசத்தையே திரும்பி பார்க்க வைத்துள்ளார்.
"மதுரையில் சொந்தமாக 9 லட்சத்தில் ஒரு வீடு, 7,172/- ரூபாய் வங்கி இருப்பு' இதுதான் சகாயத்தின் சொத்து. 4000 கோடி ரூபாய் பதுக்கி வைத்த மதுகோடாக்கள் தேசத்தில் இப்படியும் ஒரு அதிகாரியா? ஆச்சர்யத்தோடு "சக்சஸ்' சகாயத்தை பேட்டியெடுக்க நாமக்கல் மாவட்ட ஆட்சியர் வீட்டிற்கு சென்றோம். "பேட்டியா? ப்ளீஸ் அதெல்லாம் வேண் டாமே?' என மறுத்தவரை எப்படியோ பேசி ஒப்பக்கொள்ளவைத்து "வாழ்த் துக்கள்' சொல்லி "உங்கள் சொத்து விவரங்களை சொல்லுங்கள்' என் றோம். "மதுரையில் என் மனைவிக்கு அவங்க அப்பா 9 லட்சத்தில் வாங்கித் தந்த ஒரு வீடு உள்ளது. அதற்கு எல்.அய்.சி. லோன் ஏழரை லட்சம் இருக்கு. மாத தவணையாக ரூ.8,500/- கட்டி வருகிறோம். அதில்லாமல் வங்கியில ரூ.7,172/- இருப்பு இருக்கு.

பொது வாழ்வில் இருப்போர் தங்களது சொத்து விபரங்களை வெளியிடவேண்டும் என்ற கருத்து வலுவான பின்தான் நீங்கள் வெளியிட துணிந் தீர்களா?
 

சகாயம்
: இல்லை. அப்படியில் லை. வருடம் ஒருமுறை அசையா சொத்துக்களை ஒவ்வொரு கலெக்டரும் அரசுக்கு தெரியப்படுத்த வேண்டு மென்பது அரசு விதி. கடந்த மாதம் ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு கூட்டம் நாமக்கல்லில் நடந்தது. அக்கூட்டத்திலேயே இதை வெளியிட்டேன். அத் தோடு சேர்த்து என் வங்கி இருப்பையும் வெளி யிட்டு அதை அப்பொழுதே எங்கள் மாவட்ட நிர்வா கம் பற்றிய இணையதளத்தில் வெளியிட்டுவிட்டேன்.

இதை வெளியிடும் நோக்கமென்ன?

சகாயம்
: மக்கள்தான் நம் எஜமானர்கள். மக்களின் நம்பிக்கையை நாம் பெற்றாக வேண்டும். அதற்கு நாம் மக்கள்முன் வெளிப்படையாக இருக்க வேண்டும். அதிகாரிகள், அரசு அலுவலர்களுக்கு தனிப்பட்ட வாழ்க்கையென்று ஒன்று கிடையாது. அவர்கள் மக்களில் ஒருவரே. மக்களுக்கான அவர் பணியில் மக்கள் முன் ஒளிவு மறைவில்லாமல் இருக்க வேண்டி என் கணக்கை வெளியிட்டேன்.
 
ஆனால் கடனில் ஒரு வீடு, 7,172 ரூபாய் பேங்க் பேலன்ஸ் என்பது நம்ப முடியவில்லையே?
 
சகாயம் : "ஹா ஹா ஹா' (சிரிக்கிறார்) பின், தொடர்ந்து... இவையில்லாமல் வேற சொத்துக்கள் என் பெயரிலோ, குடும்பத்தின் பெயரிலோ இருப்பதாக யாராவது கண்டுபிடித்தால் அதை அவர்களே எடுத்துக் கொள்ளட்டும்.
 
நேர்மையாக இருந்தால் சராசரியாக தான் இருக்க முடியுமா?
 
சகாயம்:  ஆம் அதிலென்ன சந்தேகம். ஆடம்பரமாக இருக்க முடியாது. ஆனால் அழகான வாழ்க்கையாக இருக்கும். ஆசைக்கான வருமா னத்தை அமைத்துக் கொள்வதை விட தேவைக் கான வருமானம், அந்த வருமானத்திற்குள்ளேயே வாழ்க்கையை அமைத்து கொள்வது நமக்கு மனநிம்மதியை தரும். என் 20 வருட அனுபவம் இதுவே. இதுவே யதார்த்தனமானது.
 
நேர்மையாக இருக்க யார் இன்ஸ்பிரேசன்?
 
சகாயம்:  என் அம்மாவும் என் துணைவி யும்தான். விவசாயம் செய்யும்போது வரப்புக்கு அருகே ஒரு அங்குல புறம்போக்கு இடமிருந்தா கூட அதை பயன்படுத்த மாட்டாங்க எங்கம்மா. "எது நமக்கு உரியதோ அதை மட்டுமே நாம் அனுபவிக்க வேண்டும்' எங்கம்மா சொல்லிக் கொடுத்தது. அப்புறம் என் துணைவி. 2003-ல என் குழந்தை யாழினிக்கு பயங்கர வீசிங் பிரச்சனை. மருத்துவமனையில சேர்க்கிறோம். அப்ப நான் கோவை கலால் துறையில டெபுடி கமிஷனரா இருக் கேன்.

 யாழினி சீரியசா இருக் காள். நாலாயிரம் ரூபாய் கட்டணும். மாத கடைசிங்கற தால சுத்தமா பணமில்லை. என் துணைவி ஆஸ்பிடல்ல துடிச்சிக்கிட்டு இருக்காள். அக்கம்பக்கத்தில் உள்ளவங்களோ "உங்க வீட்டுக்காரர்தானே கலால் துறையில இருக்காரு. சிக்னல் காண்பிச்சாலே பிராந்தி கடைக்காரங்க லட்சம் ரூபாயினாலும் வந்து கொட்டிடுவாங்களே'னு சொன்னாங்க. ஆனா என் துணைவியோ "லஞ்சப் பணத்தில் என் குழந்தை உயிரோடு வாழ்றதை விட இங்கே சாவுறது பெரிய சுமையில்லை'னு சொன்னாங்க. 

என் கொள்கைக்கேற்ப துணைவி கிடைத்ததில் பெருமகிழ்ச்சி. அப்புறம் ஆசிரியர் நண்பர் ஒருவரிடம் கடன் பெற்று குழந்தையை காப்பாற்றினோம்' எனும்போதே ""ஆனா சாருக்கு கோபம்தான் ஜாஸ்தி'' என்றபடியே தேநீர் கொடுத்து உபசரித்த கலெக்டர் மனைவி விமலா, ""போனவாரம் மதுரைக்கு குடும்ப விழா ஒன்றுக்கு என்னை போக சொன்னாரு. பஸ் ஏறி ஸ்டேன்டிங்க்ல போறேன். கொஞ்ச நேரத்திலேயே போன் செய்து "இன்னும் அங்கு போய் சேரலையா'னு கோபமா பேசுறாரு. கூட்டம் அதிகம்ங்கிறதால பஸ் மெதுவா போனதுக்கு நான் என்ன செய்வேன்' முகம் சுருக்க 

"சரிம்மா நம்ம நக்கீரன். முன் னாலேயே சுயவிமர்சனம் செய்து வருத்தம் தெரிவிச்சுக்கிறேன் போதுமாம்மா' வேடிக்கையாக கேட்டவர் தொடர்ந்து ""If you have Power, use it for Poor' அதாவது "உனக்கு அதிகாரம் இருந்தால் அதனை ஏழைகளுக்கு பயன்படுத்து' என்பதுதான் என்னுடைய கொள்கை. அந்தடிப்படையிலேயே நானும் நேர்மை யோடு என் பணியை தொடர்கிறேன்'' என்றார் சிந்திக்கும்படி.உண்மைதான். 

ஒருபக்கம் நாள் ஒன்றுக்கு ஒருவேளை உணவு கூட சரியாக கிடைக்காமல் 45 கோடி மக்கள் இருக்கும் வறுமை இந்தியா. மறுபக்கம் 4000 கோடி பதுக்கல் செய்யும் ஊழல்வாதிகளின் வளமை இந்தியா -சகாயம் போல ஒவ்வொரு குடிமகனும் நேர்மையோடு செயல்பட்டால் வறுமை ஒழிந்த "சமத்துவ இந்தியா'வாக தேசம் ஒளிருமே! 

நன்றி  : s.shockan,

நவீன தொழிற்சாலையாகும் சிறைச்சாலைகள்

                

  தமிழகத்தில் உள்ள 9 மத்திய சிறைச்சாலைகள், பெண்களுக்கான சிறப்பு சிறைச்சாலைகள் மற்றும் மாவட்ட சிறைச்சாலைகளில் இருக்கும் சிறைக் கைதிகளுக்கு பொருட்களின் தயாரிப்பு முறைகளில் நவீன தொழிற்நுட்பத்தை கற்றுக்கொடுக்கும் திட்டம் ஒன்றை தமிழக சிறைத்துறை முன்வைத்துள்ளது. இத்திட்டத்திற்கு தமிழக முதல்வரும் அனுமதி வழங்கிவிட்டார் என்பதே சிறைத்துறை அதிகாரிகளின் தற்போதைய சந்தோஷம். சிறைகளின் நிலைமைகளை படிப்படியாக மாற்றும் புதிய பார்வை கொண்டுள்ள தமிழக முதல்வர் அனைத்து முயற்சிகளுக்கும் தாராளமாக உதவிவருகிறார் என்கிறார் கூடுதல் காவல்துறை இயக்குனர் [சிறைத்துறை] எஸ்.கே.டோக்ரா.
ஜவுளி, தோல், சலவைக்கட்டி, புத்தகங்கள் அடுமனை [பெகேரி] உள்ளிட்ட பல்வேறு பொருட்களை சிறைக்கைதிகள் தயாரித்துக் கொடுக்கின்றனர்.காவல்துறை மற்றும் சில அரசு நிறுவனங்களுக்கு மட்டும் இதுவரை வழங்கப்பட்டு வந்த தயாரிப்பு பொருட்களை அதன் தரம், இனம், எண்ணிக்கையை அதிகரித்து வெளிச்சந்தைக்கு கொண்டுவரவும் திட்டமிட்டிருக்கிறார்கள்.இத்திட்டத்திற்கு பிரிசியன் பஜார் என்று பெயரிட்டுள்ளனர்.பிரீடோம் என்ற முத்திரையுடன் சிறைத்தயாரிப்பு பொருட்கள் சில்லறை விற்பனைக்கு வர இருக்கின்றன. மற்ற கம்பெனி தயாரிப்புகளை விடவும் இதன் விலை குறைவாக இருக்குமாம். போட்டியை எதிர்கொள்ள இந்த விலை குறைப்பு என்றாலும் அதன் தரத்தில் குறைவிருக்காது என்கின்றனர் அதிகாரிகள். சிறையில் தயாரிக்கப்படும் பொருட்களை வெளிச்சந்தைக்கு கொண்டுவந்து விற்பனை செய்வதில் சிக்கல் இருக்காது என்று கூறும் எ.டி.ஜி.பி.டோக்ரா, தயாரிப்பு பொருட்களின் தரத்தை உயர்த்த ஆய்வுகள் நடத்தப் படுகின்றன என்கிறார்.
கைதிகளில் பலர் அதிக திறமை உடையவர்கள்.சிறைச்சாலைகளில் அவர்கள் குற்றச் செயல்களில் ஈடுபடாவிட்டால் எதிர்கால நம்பிக்கையுடன் தொடர்ந்து வேலை செய்யலாம்.தயாரிப்பு முறைகளில் நவீன தொழிற்நுட்பத்தை அவர்கள் கற்றுக் கொள்வதால், விடுதலையாகி சமூக வாழ்க்கைக்கு திரும்பும் போது அவர்கள் சுயமாக தொழில் செய்து வாழ முடியும்.
சிறைவாசிகளுக்கு நவீன தொழிற்நுட்பங்களை கற்றுக் கொடுப்பதற்கு சிறந்த பயிற்சியாளர்களை காவல்துறை தேடுகிறது. சமூகத்தை சீர்திருத்தும் நோக்கத்தில் சிறைகளில் பொருட்களை தயாரிப்பு செய்ய விரும்பும் அமைப்புகளோடு ஒப்பந்தமிட சிறைத்துறை தயாராக உள்ளது.இந்த தயாரிப்புகளை விற்பனை செய்து ஈட்டும் வருவாயில் ஒரு பகுதி அவர்கள் பெயரில் சேமிக்கப்படும்.சிறைகளை சீர்திருத்தம் செய்யும் திட்டத்தின் ஒரு பகுதிதான் இந்த பிரிசன் பஜார் என்கிறார் எ.டி.ஜி.பி.டோக்ரா. சிறையில் கிடைக்கும் மனிதர்களையும், நேரங்களையும் அரசு பயனுள்ளதாக்கிக் கொள்ளமுடியும். நல்லத்திட்டம், வெற்றிபெற வாழ்த்துக்கள்.

வியாழன், 7 ஜூன், 2012பெரம்பலூரில் இலவச திறன் பயிற்சிக்கான ஆலோசனை கூட்டம்

பெரம்பலூரில் இலவச திறன் பயிற்சிக்கான ஆலோசனை கூட்டம்
பெரம்பலூர்,
 
தமிழக அரசின் இலவச திறன் பயிற்சி வழங்கும் திட்டத்திற்கு தகுதியான பயனாளிகளை தேர்வு செய்யும் முகாம் பெரம்பலூரில் நடக்கிறது.
 
பெரம்பலூர் நகராட்சி கூட்டமன்றத்தில் பயனாளிகளை தேர்வு செய்யும் முகாம் நடத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் நகராட்சி தலைவர் ரமேஷ் தலைமையில் நடந்தது. நகராட்சி துணை தலைவர் ராமச்சந்திரன் முன்னிலை வகித்தார்.
 
கூட்டத்தில் நகராட்சி கமிஷனர் குருசாமி பேசியதாவது:-
 
தமிழக அரசின் இலவச திறன் பயிற்சி வழங்கும் திட்டத்தின்கீழ் பொன்விழா ஆண்டு நகர்ப்புற வேலை வாய்ப்பு திட்டம் (2012-2013) மூலம் வறுமை கோடு பட்டியலிலுள்ள தகுதியுள்ள பயனாளிகளை தேர்வு செய்து அவர்களுக்கு இலவச திறன் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
 
இதன்படி பெரம்பலூர் நகராட்சி பகுதியில் உள்ள 18 வயது முதல் 45 வயதுக்குட்பட்ட வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள ஆண்கள் மற்றும் பெண்களுக்கு வேலை வாய்ப்பு அல்லது சுய தொழில் தொடங்கும் வகையில் இலவச பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
 
முகாமில் வறுமை கோட்டு பட்டியலில் உள்ள பயனாளிகள் தங்களது கல்வித்தகுதி சான்றிதழ் பள்ளி மாற்று சான்றிதழ் சாதிச்சான்றிதழ் ரேசன் கார்டு வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்டவற்றின் அசல் மற்றும் நகல் இரண்டு பாஸ்போர்ட் சைஸ் போட்டோக்களுடன் சென்று வறுமை கோட்டு பட்டியலில் உள்ள பதிவு எண்ணை பெற்றுக்கொண்டு உரிய படிவத்தை பூர்த்தி செய்து முகாமில் பங்கேற்கும் அரசு மற்றும் அரசு சாராத பயிற்சி நிறுவனங்களின் நேர்காணல் முகாமில் பங்கேற்கலாம்.
 
ஏற்கனவே சொர்ண ஜெயந்தி நகர்ப்புற சுய வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் பயனடைந்த பயனாளிகள் திட்டத்தின் கீழ் பயன் பெற தகுதியுடையவர்கள் ஆவார்கள். எனவே பெரம்பலூர் நகரட்சிக்குட்பட்ட பயனாளிகள் கலந்து கொண்டு பயன் பெறலாம்.
 
இது தொடர்பான கூடுதல் விவரங்கள் பெறவும் பயனாளிகள் தங்களது வருகையை முன்பதிவு செய்து கொள்ளவும் நகராட்சி அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் பேசினார்.
 
கூட்டத்தில் நகராட்சி பொறியாளர் சனல்குமார் நகராட்சி கவுன்சிலர்கள் ரமேஷ் பாண்டியன் செந்தில் குமார் கண்ணன் பால்ராஜ் திவேல் பழனிசாமி லெட்சுமி சவுமியா தமிழ்ச்செல்வி மலர்விழி உட்பட பலர் பங்கேற்றனர்.

கோவா குண்டு வெடிப்பு வழக்கில் தொடர்பு: தமிழகத்தில் பதுங்கியுள்ள தீவிரவாதி பற்றி துப்பு கொடுத்தால் ரூ.1 1/2 லட்சம் பரிசு

கோவா குண்டு வெடிப்பு வழக்கில் தொடர்பு: தமிழகத்தில் பதுங்கியுள்ள தீவிரவாதி பற்றி துப்பு  கொடுத்தால் ரூ.1 1/2 லட்சம் பரிசு
 
 
சென்னை, ஜூன் 7-

                         கோவாவில் கடந்த 2009ம் ஆண்டு அக்டோபர் மாதம் 16-ந்தேதி மாலையில் மார்கேன் என்ற இடத்தில் சக்தி வாய்ந்த மோட்டார் சைக்கிள் குண்டு வெடித்து சிதறியது.

இந்த பரபரப்பு அடங்கும் முன்னர் மேலும் 7 இடங்களிலும், குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடைபெற்றன. இதுகுறித்து தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்தில் உயர் போலீஸ் அதிகாரிகள், வெடிகுண்டு நிபுணர்கள் குவிந்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில் 10 பேர் கொண்ட கும்பல் இக்குண்டு வெடிப்பு செயலில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. 2 பேர் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

மால்கொண்டா, யோகேஸ் ஆகிய 2 தீவிரவாதிகளும் குண்டு வெடிப்பின் போது படுகாயம் அடைந்தனர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர்கள் 2 நாட்கள் உயிருடன் இருந்தனர். அப்போது குண்டு வெடிப்பின் பின்னணியில் இருந்தவர்கள் பற்றியும் வாக்குமூலம் அளித்தனர்.

இதை தொடர்ந்து இக்குண்டு வெடிப்பில் தொடர்புடைய 6 பேர் உடனடியாக கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டு வழக்கு விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்த குண்டு வெடிப்பு வழக்கில் முதல் குற்றவாளியாக கருதப்படும் கேரளாவை சேர்ந்த தீவிரவாதி ஜெயபிரகாஷ், மற்றும் ருத்ரா படேல், குல்கர்னி, பிரவின் லிம்காரி ஆகியோர் போலீசில் சிக்காமல் தொடர்ந்து தலைமறைவாகவே உள்ளனர்.

இவர்கள் 4 பேரும் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு அவர்களை தேடும் பணி நாடு முழுவதும் முடுக்கி விடப்பட்டுள்ளது. இவர்களை கைது செய்வதற்காக தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

குண்டு வெடிப்பு வழக்கில் மூளையாக செயல்பட்ட ஜெயபிரகாஷ், கர்நாடக மாநிலம், மங்களூரில் வசித்து வருகிறான். இவன் தமிழகத்தில் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் தேசிய புலனாய்வு பிரிவு போலீசார் இங்கு முகாமிட்டு அவரை தேடி வருகிறார்கள்.

தேனி மாவட்டம் கூடலூர், கேரளா மாநிலம் காசர்கோடு ஆகிய பகுதிகளில் ஜெயபிரகாஷ் சுற்றி திரிவதாக கிடைத்த தகவலின் பேரில் உளவு பிரிவு போலீசாரின் துணையுடன் உள்ளூர் போலீசார் ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

மற்ற தீவிரவாதிகளும் மகாராஷ்டிராவை சேர்ந்தவர்கள். போலீசார் தேடப்படும் குற்றவாளிகள் அனைவரும் சனார்தன் சம்சா என்ற அமைப்பை சேர்ந்தவர்கள். டி.ஐ.ஜி. ரவிசங்கர் மேற்பார்வையில் இக்குற்றவாளிகளை கைது செய்ய தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இவர்களைப் பற்றி தகவல் கொடுப்பவர்களுக்கு ரூ.1 1/2 லட்சம் பரிசு வழங்கப்படும் என்றும், தகவல் தருபவர்களின் பெயர்கள் ரகசியமாக வைக்கப்படும் என்றும் போலீசார் அறிவித்துள்ளனர்.

குண்டு வெடிப்பு குற்றவாளி ஜெயபிரகாஷ் மற்றும் அவரது கூட்டாளிகள் பற்றி தகவல் தெரிந்தவர்கள் 040-27764488 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றும் போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.
செய்தி - மாலைமலர்
நீதிமன்ற நீதிபதிகளின் கார்களிலும் கறுப்பு நிற ஸ்டிக்கர் அகற்றும் பணி தொடக்கம்                     நெடுஞ்சாலை போக்குவரத்தின் போது கார் கண்ணாடிகளுக்கு கறுப்பு நிற ஸ்டிக்கர் ஒட்டுவதற்கு தடை விதித்து உச்சநீதிமன்றம் அண்மையில் தீர்ப்பு வழங்கியிருந்தது. இதையடுத்து இப்புதிய நடைமுறை உடனடியாக அமலுக்கு வந்தது.

இந்நிலையில் இத்தீர்ப்பை மதித்து உயர் நீதிமன்ற நீதிபதிகள், மாவட்ட நீதிமன்ற நீதிபதிகள் பயன்படுத்தும் கார்கள் மற்றும் நீதிமன்ற தேவைகளுக்காக பயன்படுத்தப்படும் கார்கள், வாகனங்களில் ஒட்டப்பட்டுள்ள கறுப்பு நிற ஸ்டிக்கரை அகற்ற வேண்டும் என தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால் உத்தரவிட்டார். அந்த உத்தரவின் படி, நீதிபதிகளின் கார்களில் உள்ள கறுப்பு ஸ்டிக்கர்கள் அகற்றும் பணி உயர் நீதிமன்ற வளாகத்தில் நேற்று தொடங்கியுள்ளது. இந்த பணியை தனியார் நிறுவனத்தை சேர்ந்த மூன்று ஊழியர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

உயர் நீதிமன்ற நீதிபதிகள், பதிவாளர்கள் ஆகியோருக்கு 64 கார்கள் உள்ளன. இந்த கார்களில் உள்ள ஸ்டிக்கர்களை அகற்றும் பணி முடிவடைய 4 நாட்கள் வரை ஆகும் என்று கூறப்பட்டது. இதையடுத்து மாவட்ட செசன்சு கோர்ட்டு நீதிபதிகள் பயன்படுத்தும் கார்களில் உள்ள கறுப்பு ஸ்டிக்கர் அகற்றும் பணி தொடங்க உள்ளது.


அனைத்து மருத்துவமனைகளிலும் சிசிடிவி கெமரா : அமைச்சர் விஜய் வாக்குறுதி


                  
               அரசு மருத்துவமனை மருத்துவர்கள் தாக்கப்படும் சம்பவத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, அவசர சிகிச்சை வார்டில் போலீஸ் பாதுகாப்பு வழங்கவும், அனைத்து அரசு
மருத்துவமனைகளில், சிசி "டிவி' கேமரா பொருத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும்  என மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார்.

அண்மையில் சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்த வழக்கறிஞர், சென்னை அரச மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்ற போது, பணியிலிருந்த முதுநிலை மருத்துவருடன் தகராறு ஏற்பட்டது. வழக்கறிஞர் குழுவினர் அம்மருத்துவரை தாக்க முனைந்தனர். இச்செயலை கண்டித்தும், உடனடியாக குறித்த வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க கூறியும், அரசு மருத்துவமனை முது நிலை பயிற்சி மருத்துவர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

திருச்சி அரசு மருத்துவமனையில், முதுகலை மற்றும் பட்ட மேற்படிப்பு மாணவர்கள், பயிற்சி மருத்துவர்கள், 100க்கும் மேற்பட்டோர், நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனால், மருத்துவமனைக்கு வந்த நோயாளிகள் அவதியடைந்தனர்.

இந்நிலையில் புதுக்கோட்டை இடைத்தேர்தலுக்காக வந்திருந்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜய், திருச்சி அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். இதையறிந்த, பயிற்சி மருத்துவர்கள் சங்க தலைவர் சைமன், அருண் மற்றும் மருத்துவப் படிப்பு மாணவர்கள் அமைச்சர் விஜயை சந்தித்தனர். அப்போது, "புதுக்கோட்டை இடைத்தேர்தல் முடிந்ததும், உங்கள் பிரச்னையை தமிழக முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும'' அமைச்சர் விஜய் தெரிவித்தார். இதையடுத்து, போராட்டத்தை கைவிட்டு, பயிற்சி டாக்டர்கள் பணிக்கு திரும்புவதாக கூறியுள்ளனர்.

பின், அமைச்சர் விஜய் நிருபர்களிடம் கூறியதாவது : பயிற்சி மருத்துவர்களின் கோரிக்கை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். அவசர சிகிச்சை, பிரசவ வார்டுகளில், 24 மணி நேரம் போலீஸ் பாதுகாப்பு வழங்குவது குறித்து, முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும். தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும், சிசி "டிவி' கேமரா பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

திருச்சி, கோவையில் சர்வதேச விமானங்கள் இயக்கப்படும் : பிரதமர்              பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில், டெல்லியில் நேற்று உள் கட்டமைப்பு மேம்பாட்டுக் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் பேசியபின், அனைத்துத் தரப்பினரும் பயணம் செய்வதை மேம்படுத்தும் விதத்தில் திருச்சி, கோவை, லக்னோ, வாரணாசி ஆகிய ஊர்களில் சர்வதேச விமான நிலையங்கள்  அமைக்கப்பட்டு, விமானங்கள் இயக்கப்படும் என பிரதமர் தெரிவித்தார்.
     நேற்றைய கூட்டத்தில் மின்சாரத்துறை அமைச்சர், கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர், சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர், நிலக்கரி வளத்துறை அமைச்சர், திட்டக்குழுத் துறை தலைவர் ஆகியோர் பங்கேற்றனர்.

      கூட்டத்தில் ஆலோசனை முடிந்தபின் செய்தியாளர்களை சந்தித்த பிரதமர் மன்மோகன் சிங், அனைத்துத் தரப்பினரும் பயணம் செய்வதை மேம்படுத்தும் வகையில், திருச்சி, கோவை, லக்னோ, வாரணாசியில் இவ்வாறு சர்வதேச விமானங்கள் இயக்கப்படும் என்றும், அதற்கான ஒப்பந்த புள்ளிகள் விரைவில் தீர்மானிக்கப் படும் என்றும் கூறினார்.
   
மேலும், இனி ஏர்லைன்ஸ் விமானங்கள் ஏர்லைன்ஸ் ஹப் என்று மாற்றப் படும் என்றும் கூறினார். தவிர, நாட்டின் பொருளாதாரம் மிக மோசமான சூழலில் இருப்பதாகவும், நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டு வருகிறது என்றும் தெரிவித்தார்.
இரகசியமாக உலகைச் சுற்றி 270 நாட்கள் வேவு பார்த்த அமெரிக்க விமானம் ஜூனில் தரை இறக்கம்?
                 சர்வதேச விண்வெளி நிலையத்துக்குச் செல்லல், சந்திரனை ஆய்வு செய்தல், செவ்வாய்க் கிரகத்துக்கு
மனிதர்களை அனுப்பத் திட்டமிடல் ஆகிய பணிகளுக்காக விண்ணில் ஏவப்படும் விண்கலங்களைப் பற்றிக் கேள்விப் பட்டிருப்போம். இதற்கு உதாரணமாக அமெரிக்காவின் டிஸ்கவரி, என்டேவர், மற்றும் ரஷ்யாவின் சோயுஷ் ஆகிய விண்கலங்களைக் கூறலாம்.

ஆனால் ஊடகங்களுக்குத் தெரிவிக்காமல் முற்றிலும் ரகசியமாக அரசியல் வேவு பணிக்காக ஒரு விண்கலம் இயங்கி வருகின்றது என்றால்? அப்படியான ஒரு விண்கலம் அல்லது உளவு விமானம் போயிங் நிறுவனத்தினது X-37B 2 எனப் பெயரிடப்பட்ட அமெரிக்க விமானம் ஒன்று 17 000 mph வேகத்தில் பூமியை 110 - 500 மைல் உயரத்தில் 270 நாட்களாக சுற்றி வந்தது. இது இம்மாதம் (ஜூன்) கடைசியில் தரையிறக்கப் படவுள்ளது.

இவ் விமானம் முக்கியமாக சீனாவின் டியாங்கொங் நகரில் சமீபத்தில் அமைக்கப் பட்ட புதிய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் செயற்பாடுகளை உன்னிப்பாக மாட்டிக் கொள்ளாமல் அவதானிக்கவே உருவாக்கப் பட்டது. எனினும் இதன் மூலம் வடகொரியா,ஈரான்,இராக்,பாகிஸ்தான் மற்றும் ஆஃபகானிஸ்தான் ஆகிய நாடுகளில் உள்ள அணு உலைகள் மற்றும் இராணுவப் பாசறைகள் வாகனங்கள் என்பவற்றையும் அவதானிக்கவும் இவ் விமானம் உபயோகப் படுத்தப் பட்டிருக்கும் எனவும் நம்பப் படுகின்றது.


இந்தியாவின் புதிய தலைமை தேர்தல் ஆணையராக வி.எஸ்.சம்பத் நியமனம்


இந்தியாவின் புதிய தலைமை தேர்தல் ஆணையராக வி.எஸ்.சம்பத் நியமிக்கப்படுகிறார். தற்போதைய தலைமை தேர்தல் ஆணையளரான எஸ்.ஒய்.குரேஷி எதிர்வரும் 10ம் திகதியுடன் ஓய்வு பெறுவதை அடுத்து வி.எஸ்.சம்பத்தை புதிய தேர்தல் ஆணையாளராக குடியரசு தலைவர் பிரதிபா படேல் நியமித்தார்.
இவர் 2015ம் ஆண்டு வரை தலைமை தேர்தல் ஆணையராக பதவிவகிக்கவுள்ளார்.   இதன் மூலம் 2013ம் ஆண்டு குஜராத், கர்நாடகா உள்ளிட்ட 10 மாநிலங்களில் நடைபெறும் சட்டமன்ற தேர்தல்கள், 2014ம் ஆண்டு ஆந்திரா உள்ளிட்ட 7 மாநிலங்களில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தல்கள் மற்றும் 2014 இல் நடைபெறவுள்ள இந்திய நாடாளுமன்ற தேர்தல் ஆகியவற்றை வழிநடத்தும் பொறுப்பு இவருக்கு வந்துள்ளது.

1973ம் ஆண்டு ஆந்திராவில் ஐ.ஏ.எஸ் தேர்ச்சி பெற்ற வி.எஸ்.சம்பத், நிதித்துறை முதன்மை செயலர், மாவட்ட ஆட்சியர் உட்பட பல்வேறு பதவிகளை பகித்துவந்தவர். முன்னதாக தேர்தல் ஆணையராக கடமையாற்றினார்.  தற்போது தலைமை தேர்தல் ஆணையராக பதவி உயர்த்தப்பட்டிருப்பதால் அவருடைய தேர்தல் ஆணையர் பதவி வெற்றிடமாகியுள்ளது. இதற்கு, குடியரசு துணை தலைவரின் செயலராக இருக்கும் சம்ஷேர் ஷெரிப், டெல்லி தலைமை செயலர் பி.கே.திரிபாதி ஆகியோரின் பெயர்கள் பரிசீலணையில் உள்ளன. ஏற்கனவே ஒரு தேர்தல் ஆணையராக இருக்கும் எச்.எஸ்.பிரம்மா பதவி மூப்பு அடிப்படையில் இரண்டாவது இடத்துக்கு முன்னேறவுள்ளார்.

தலைமை தேர்தல் ஆணையரை தேர்வு செய்வதற்கு தனிக்குழு அமைக்க வேண்டும் என பாரதிய ஜனதாவின் மூத்த தலைவர் எல்.கே.அத்வானி அண்மையில் கருத்து தெரிவித்திருந்ததுடன், அதனை திமுக தலைவர் கருணாநிதியும் ஆமோதித்திருந்தார். இந்நிலையில் மத்திய அரசு புதிய தலைமை தேர்தல் ஆணையரை தன்னிச்சையாக அறிவித்துள்ளதாக விமர்சனம் எழுந்துள்ளது.
 மரங்களை வெட்டுங்கள்!!
         உலகமே ஒட்டு மொத்தமாக வெப்பமயமாதல் (குளோபல் வார்மிங்) பற்றி பயந்து கொண்டு இருக்கும், இன்றைய காலகட்டத்தில் 'மரங்களை நடுங்கள்' என்ற ஒரே கோஷம் தான் எங்கும் கேட்கிறது, இந்த நேரத்தில் 'மரங்களை வெட்டுங்கள்' என்று கூறுவது முரண்பாடாக தோன்றுகிறது அப்படிதானே. ஆனால் இங்கே நான் சொல்வதை முழுவதும் கவனித்தால் நீங்களும்' ஆமாம் கண்டிப்பாக வெட்ட வேண்டும் ' என்று சொல்வீர்கள். அப்படி அந்த மரத்தை வெட்டினால் தான் நம் மண்ணின் மாண்பை காப்பாற்ற முடியும் என்பதுதான் விஞ்ஞானிகள் நமக்கு கொடுக்கும் ஒரே எச்சரிக்கை.

மண்ணின் வில்லன்
அமெரிக்க தாவரவியல் பூங்கா , 'வளர்க்க கூடாத நச்சு மரங்கள்' என்று ஒரு தனி பட்டியலே வெளியிட்டு இருக்கிறது. அதில் முன்னணியில் இருப்பது தான் நான் குறிப்பிட போகிற விஷ மரம். தமிழ் நாட்டின் ரோட்டின் ஓரங்களிலும், பல கிராமங்களின் வயல்வெளிகளிலும் சகஜமாக இருக்க கூடிய முள் மரம் எனப்படும் 'காட்டு கருவேல மரம்' தான் அது. (பேராண்மை படத்தில் கூட ஜெயம்ரவி மாணவிகளுடன் சேர்ந்து காட்டுக்குள் இருக்கும் மரத்தை
வெட்டிகொண்டே விளக்கம் சொல்வாரே ! )
நம் மண்ணின் தன்மையை கெடுப்பதற்காக வெளி நாட்டினர் இந்த மரத்தின் விதையை இங்கு தூவியதாக ஒரு கருத்தும், கிராம மக்களுக்கு அடுப்பு எரிக்க விறகு வேண்டும் என்பதற்காக ஒரு அரசியல்வாதி (நல்ல எண்ணம்தான், இதன் நச்சு தன்மை பற்றி தெரியாமல் இருந்திருக்கலாம்) வெளிநாட்டில் இருந்து தருவித்ததாகவும் இரு விதமான கருத்துகள் உலவுகின்றன. உண்மை எதுவென்று 'யாம் அறியேன் பராபரமே'
ஆனால் எப்படி வந்தது என்பது அல்ல...., இப்போதைய பிரச்சனை....!?, இம்மரத்தால் என்னவெல்லாம் பாதிப்பு ஏற்படுகிறது என்று பார்பதுதான் அவசியம். முதலில் இந்த மரத்தின் தன்மைகளை பார்க்கலாம்.

இதன் கொடூரமான குணங்கள்:
இவை எந்த வித வறட்சியிலும் நன்கு வளரக்கூடியது . மழை பெய்யாமல் போனாலும், நிலத்தில் நீரே இல்லாமல் இருந்தாலும் இவை கவலை படாது.பூமியின் அடி ஆழம் வரை கூட தன் வேர்களை அனுப்பி நீரை உறிஞ்சி, தன் இலைகளை வாடவிடாமல் பார்த்து கொள்கிறது. இதனால் நிலத்தடி நீர் முற்றிலுமாக வற்றி அந்த பூமியே வறண்டு விடுகிறது...!
இதன் கொடூரம் அத்துடன் நிறைவு பெறுவது இல்லை, ஒருவேளை நிலத்தில் நீரே கிடைக்கவில்லை என்றாலுமே தன்னை சுற்றி தழுவி செல்லும் காற்றில் இருக்கும் ஈரபதத்தையும் இம்மரம் உறிஞ்சிவிடுகிறது. இப்படி காற்றின் ஈரபதத்தையும், நிலத்தடி நீரையும் இழந்து அந்த பகுதியே வறட்சியின் பிடியில் தாண்டவமாடும்.
தென் தமிழகத்தில் விருதுநகர், ராமநாதபுரம் போன்ற மாவட்டங்களின் வறட்சிக்கு இந்த மரங்களே முக்கிய காரணம் என்பது அதிர்ச்சியான ஒன்றுதான். ஆனால் இதை அறியாமல் அந்த மக்கள், இன்னும் புதிதாக மரங்களை வளர்த்து பராமரிக்கிறார்கள் என்று என்னும் போது அறியாமையை குறித்து வருந்த வேண்டி இருக்கிறது.

உடம்பு முழுதும் விஷம்:
இந்த மரத்தின் இலை, காய், விதை என எதுவுமே எந்த உயிரினத்துக்கும் பயன்படாது. முக்கியமான விஷயம் ஒன்றும் உள்ளது, ஆச்சரியமாக இருந்தாலும் உண்மை அதுதான். இந்த மரத்தில் கால்நடைகளை கட்டி வைத்து வளர்த்தால் அவை மலடாகிவிடும், அதாவது சினைபிடிக்காமலேயே போய்விடும், ஒருவேளை மீறி கன்று ஈன்றாலுமே அது ஊனத்துடன்தான் பிறக்கும்....?!!
ஒருபுறம் இதன் வேர் நிலத்தடி நீரை விஷமாக மாற்றிவிடுகிறது மற்றொரு புறம் இதன் நிழலில் மற்ற உயிரினங்கள் வாழ முடியாத நிலை இருக்கிறது. இதன் பக்கத்தில் வேறு எந்த செடியும் வளராது, தவிர மரத்தில் எந்த பறவை இனங்களும் கூடுகட்டுவதும் இல்லை. காரணம் என்னவென்றால் இந்த வேலிகாத்தான் மரங்கள், உயிரிவளி (Oxygen) மிக குறைந்த அளவே உற்பத்தி செய்கிறது, ஆனால் கரிமிலவாயுவை மிக அதிக அளவில் உற்பத்தி செய்து வெளியிடுவதால் சுற்றுப்புற காற்று மண்டலமே நச்சுதன்மையாக மாறிவிடுகிறது .

அறியாமை:
நமக்கு தெரியாமலேயே இப்படிப்பட்ட மரங்களை கண்டுகொள்ளாமல் இருக்கிறோம் என்பது வருத்தத்துக்கு உரியதுதான்.

கேரளாவின் விழிப்புணர்வு:
நமது அண்டை மாநிலமான கேரளாவில் இந்த மரத்தை பற்றிய விழிப்புணர்வை வனத்துறையினர் மக்களிடம் ஏற்படுத்தி உள்ளனர்.....!! அதனால் கேரளாவில் இந்த மரத்தை ஒரு இடத்தில் கூட காண முடியாது. ஆனால் நம் தமிழ்நாட்டில் விறகிற்காக இந்த மரத்தை வளர்த்து வருகின்றனர்....??!

என்ன முரண்பாடு...?? என்ன அறியாமை..??
ஆராய்ச்சியாளர்களும், இந்த மரங்கள் இருக்கும் இடங்களில் வாழும் மனிதர்களின் மனதையும் இந்த மரம் மாற்றி வன்முறை எண்ணத்தை கொடுக்கும் என்று கண்டு பிடித்து உள்ளனர்.

நல்ல மரம் ஆரோக்கியம்:
வேப்பமரம் வளர்ப்பது எவ்வளவு நல்லது என்பதை யாவரும் அறிவோம், மற்றும் ஆலமரமும் , அரசமரமும் மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கிறது என்பதை உணர்ந்தவர்கள் நாம். இருந்தும் இந்த முள் மரத்தை பற்றி சரியாக விழிப்புணர்ச்சி நம்மிடம் இல்லையே என்பதே என் ஆதங்கம். சுற்றுபுறத்தில் புல், பூண்டை கூட வளரவிடாமல் தடுக்கும் இந்த முள் மரத்தை பூண்டோடு அழிக்கவேண்டும் என்ற விழிப்புணர்வை அரசாங்கம் தீவிர முயற்சி எடுத்து மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் . சமூக ஆர்வலர்கள் இந்த மரத்தை பற்றிய பிரசாரங்களை செயல் படுத்தலாம், செய்வார்களா?
இந்த மரங்களை நீங்கள் சிறிய செடியாக இருந்தால் கூட புடுங்கி எறியுங்கள் ! அது வளரும் வரை காத்திருக்க வேண்டாம்.நம் அடுத்த தலை முறை குழந்தைகளுக்கும் தெரியப்படுத்துங்கள்
இந்த பதிவை படிப்பவர்களும் முடிந்தவரை இந்த செய்தியை மற்றவர்களிடம் கொண்டுபோய் சேர்க்கும் ஒரு சிறிய விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்.

மரங்களை வளர்ப்பது எவ்வளவு அவசியமோ அதை விட இந்த மரத்தில் ஒன்றையாவது வெட்டி அழிப்பது அதை விட அவசியம்....

எப்படி அந்நியர்களை நாட்டை விட்டே விரட்டினோமோ ! அதே போல் நம் நீர் வளத்தை சுரண்டும் இந்த அந்நியனையும் விரட்டுவோம் ! !
வெட்டுவதோடு மட்டும் நில்லாமல்..நம் பாரம்பரிய பூ அரச மரம், புங்கை மரம் , வேப்பம் மரம் போன்ற வற்றை அந்த இடத்திலேயே நட்டு பராமரிப்போம்
இந்த மரத்தை வெட்டி வீழ்த்துவோம்.....! நம் மண்ணின் மாண்பை காப்போம்.


புதன், 6 ஜூன், 2012வியாபாரம் பற்றி இஸ்லாம்


 வியாபாரத்தைப் பற்றி திருமறை:

 

வியாபாரத்தைப் பற்றி அல்லாஹ் தன் திருமறையில் 2:275 வசனத்தில் குறிப்பிடுகிறான்: அல்லாஹ் உங்களுக்கு வியாபாரத்தை அனுமதித்திருக்கிறான்.

ஆனால் அல்லாஹ் கூறும் வியாபாரத்தில் அளவை நிறுவையில் மோசடி, பொய்யான வாக்குறுதி, பொருள் கலப்படம், குறையுள்ள பொருள் விற்பனை, வாங்குபவரை ஏமாற்றுதல், பொருள் விற்பனைக்காக அல்லாஹ் மீது சத்தியம் செய்தல், பொருளை பதுக்குதல், கொள்ளையடித்தில், திருடுதல், அல்லாஹ் ஹராமாக்கிய பொருளை விற்பனை செய்தல் அல்லது வாங்குதல், வாங்கிய பொருள் கைக்கு வருவதற்கு முன் விற்பனை செய்தல் போன்ற எண்ணற்ற குறைபாடுகள் கிடையாது. ஆனால் இன்றைய வியாபாரத்தில் இவையெல்லாம் வியாபார நுணுக்கங்களாக தலை தூக்கிவிட்டன.

பலர் எந்த வியாபாரம் ஹலாலானது, எந்த வியாபாரம் ஹரமானது என்பதை அறியாமலேயே வியாபாரம் செய்து வருகின்றனர். இதனால்தான் வியாபாரியாக இருந்து வாழ்க்கையை நடத்தும் முஸ்லிம்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பற்கு இஸ்லாம் சில வரையறைகளை விதிக்கிறது.


அளவையிலும், நிறுவையிலும் மோசடி கூடாது!


“அளவையிலும், நிறுவையிலும் மோசடி” செய்பவர்களைக் குறித்து அல்லாஹ் தன் திருமறையில் 83:1-3 வசனங்களில் கடுமையாக எச்சரிக்கின்றான்:

அளவையிலும் நிறுவையிலும் யார் மோசடி செய்கிறார்களோ அவர்களுக்கு கேடுதான். அவர்கள் மனிதர்களிடம் இருந்து அளந்து வாங்கினால் நிறைய அளந்து கொள்வார்கள். ஆனால் அவர்கள் மற்றவர்களுக்கு அளந்தோ, நிறுத்தோ கொடுக்கும் போது குறைத்து விடுவார்கள். அளவையிலும் நிறுவையிலும் குறைத்து வியாபாரம் செய்வது வியாபார நுணுக்கமாக சில வியாபாரிகள் நினைக்கின்றனர்.

ஆனால் இது ஒரு மாபெரும் மோசடி. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

“(அளவை, நிறுவை என) இரண்டு விஷயங்களில் பொறுப்பேற்றுள்ளீர்கள். இதில்தான் உங்களுக்கு முன் இருந்த சமுதாயத்தினர் அழிந்தனர்” என்று எச்சரித்தார்கள். (இப்னு அப்பாஸ் (ரலி) – திர்மிதீ).வியாபாரத்தில் பொய்ச்சத்தியம் கூடாது!

இது பற்றி நபி (ஸல்) அவர்கள் கடுமையாக எச்சரித்தார்கள்.

“(வியாபாரத்தில்) சத்தியம் செய்வது, சரக்கை விற்கச் செய்திடும். (ஆனால்) லாபத்தை அழித்துவிடும்” என்று கூறினார்கள். (அபூஹுரைரா (ரலி) முஸ்லிம், நஸாயீ, அஹ்மத், அபூதாவூத்).

இவ்வாறு விற்கும் பொருளில் இல்லாததை இருப்பதாக பொய்ச்சத்தியம் செய்து விற்றால் மறுமை நாளில் எவ்வளவு பெரிய பாதிப்பு ஏற்படும் என்று மற்றொரு ஹதீஸில் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

“மறுமை நாளில் மூன்று நபர்களை அல்லாஹ் பார்க்க மாட்டான், அவர்களைத் தூய்மைப் படுத்தமாட்டான், அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு என்று கூறினார்கள். அந்த மூவரில் ஒருவன் தனது வியாபாரப் பொருளில் இல்லாததை இருப்பதாக கூறி சத்தியம் செய்தவன்.” (அபூஹுரைரா (ரலி) புஹாரி).

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ஒருவன் ஒரு சத்தியம் செய்து அதன் காரணமாக மற்றொரு முஸ்லிமுடைய சொத்தைப் பறித்துக் கொண்டு, அதில் அவன் பொய்யனாக இருப்பின், மறுமையில் அவன் மீது கோபமாக இருக்கும் நிலையில் அல்லாஹ்வைச் சந்திப்பான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.” (அஷ் அஸ் இப்னு கைஸ் (ரலி)புஹாரி, முஸ்லிம்).

இது பற்றி அல்லாஹ் தன் திருமறையில் (2:188) வசனத்தில் குறிப்பிடுகிறான்:

உங்களுக்கிடையே (ஒருவருகொருவர்) உங்கள் பொருட்களைத் தவறான முறையில் உண்ணாதீர்கள்! என்று கூறுகிறான்.


வியாபாரத்தில் போட்டி, பொறாமை கூடாது!

இது பற்றி நபி (ஸல்) அவர்கள் கடுமையாக எச்சரித்துள்ளார்கள். “ஒரு மூமின் மற்றொரு மூமினின் சகோதரர் ஆவார். தன் சகோதரரின் வியாபாரத்தில் தலையிட்டு வியாபாரம் பேச ஒரு மூமினுக்கு அனுமதியில்லை” என்று கூறினார்கள். (உக்பா இப்னு ஆமிர் (ரலி) இப்னுமாஜா, அஹ்மத்).

இதேபோன்று மற்றொரு ஹதீஸில் “உங்களில் ஒருவர் தன் சகோதரன் செய்யும் வியாபாரத்தில் (குறுக்கீடு செய்து) வியாபாரம் செய்ய வேண்டாம்” என்று கூறினார்கள். (இப்னு உமர் (ரலி) புஹாரி, முஸ்லிம், திர்மிதீ, நஸாயீ, அபூதாவூத், இப்னுமாஜா, அஹ்மத்).

(வாங்கும் நோக்கமின்றி விலையை உயர்த்திடும் நோக்கில்) விலையை கூடுதலாக்கிட முயல்வதற்கு நபி (ஸல்) அவர்கள் தடைவிதித்தார்கள். (இப்னு உமர் (ரலி) புஹாரி, முஸ்லிம், நஸாயீ, இப்னுமாஜா, அஹ்மத்).


பதுக்கல் வியாபாரம் கூடாது!

இது பற்றி நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

“தேவையான பொருளைப் பதுக்கி வைக்காமல் உரிய நேரத்தில் அவற்றை அங்காடிக்குக் கொண்டு வருபவன் அல்லாஹ்வின் அருளுக்கு உரித்தவனாவான். மேலும் அல்லாஹ் அவனுக்கு வாழ்வாதாரங்களையும் வழங்குவான். இன்னும் அவற்றை பதுக்கி வைப்பவன் அல்லாஹ்வின் சாபத்திற்குரியவனாவான்” என்று
கூறினார்கள். (உமர் (ரலி) இப்னுமாஜா).

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “பாவியைத்தவிர வேறு யாரும் உணவுப் பொருளைபதுக்கமாட்டார்கள்.” என்று கூறினார்கள். (மஃமர் இப்னு அப்துல்லாஹ் (ரலி) முஸ்லிம்).

இந்தப் பதுக்கல்காரனைப் பற்றி நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “தேவையான பண்டங்களைப் பதுக்கி வைப்பவன் எவ்வளவு கெட்டவனாக இருக்கிறான். அல்லாஹ் பொருளின் விலையை மலிவாக்கி விட்டால் இவன் வருத்தப்படுவான். விலை ஏறிவிட்டாலோ மகிழ்ச்சிகொள்கிறான்.” என்று கூறினார்கள். (முஅத் (ரலி) பைஹகீ).


கூட்டு வியாபாரத்தில் சகதோழரை ஏமாற்றுவது கூடாது!

இது பற்றி நபி (ஸல்) அவர்கள் கடுமையாக எச்சரித்துள்ளார்கள்.

“வியாபாரம் போன்ற வணிகத்தில், இரண்டு கூட்டாளிகளில் ஒருவர் தன்னுடைய தோழருக்கு மோசடி செய்யாத வரை அவர்களுடன் மூன்றாவது கூட்டாளியாக அல்லாஹ் இருப்பான் ” என்று கூறினார்கள். (அபூஹுரைரா (ரலி) அபூதாவூத்).

இது பற்றி அல்லாஹ் தன் திருமறையில் (38:24) வசனத்தில் குறிப்பிடுகிறான்:

நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்வோரைத் தவிர, உங்களில் கூட்டுச் சேர்வோரில் அதிகமானோர் ஒருவர் மற்றவர் மீது அநீதி இழைக்கின்றனர்.


வியாபாரத்தில் ஹலால் - ஹராம் பேணுவதை கைவிடல் கூடாது!

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “அல்லாஹ் யூதர்களை சபிப்பானாக! என்று மூன்று முறை கூறிவிட்டு, நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் மீது கொழுப்பை ஹராமாக்கினான். அவர்களோ அதை விற்பனை செய்து அதன் பணத்தில் சாப்பிட்டார்கள். அல்லாஹ் ஒரு சமுதாயத்தின் மீது எதை உண்ண ஹராமாக்கினானோ அதனுடைய பணமும் ஹராமாக்கிவிட்டான்” என்று கூறினார்கள். (இப்னு அப்பாஸ் (ரலி) அபூதாவூத்).

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ஹராமின் மூலம் வளர்ந்த சதைக்கு நரக நெருப்பே தகுதியானது” என்று கூறினார்கள். (இப்னு அப்பாஸ் (ரலி) தப்ரானீ).

நபி (ஸல்) அவர்கள் மேலும் கூறினார்கள்: “ஒரு காலம் வரும். அப்போது மக்கள் தாங்கள் சம்பாதிப்பவை ஹலாலா?ஹராமா? என்பதை பொருட்படுத்தமாட்டார்கள்” என்று கூறினார்கள் (அபூஹுரைரா (ரலி) புஹாரி).

நபி (ஸல்) அவர்கள் கூறிய அந்த காலத்தில்தான் நாம் இன்று வாழ்ந்துகொண்டிருக்கிறோம். இன்று ஒரு மனிதன் தான் எந்த வழியில் சம்பாதிக்கிறோம் என்பதை பார்ப்பதில்லை. அவனுடைய நோக்கம் பணம் மட்டும்தான். பணமென்றால் அனைத்தையும் இழக்கத்தயாராகிவிடுகிறான்.


ஏன் நமது துஆ அங்கீகரிக்கப்படுவதில்லை?

சிலருக்கு என்னடா! நாம் அல்லாஹ்விடம் துஆ செய்கிறோம். ஆனால் நம்முடைய துஆ இதுவரை அல்லாஹ் அங்கீகரிக்கவில்லையே? என்று எண்ணம் தோன்றலாம். அதற்கு என்ன காரணம் தெரியுமா?

நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள்: “ஒருவனது உடை, உணவு, பானம் ஆகியவை ஹராமானதாக இருக்கும் போது, அவனது துஆ எவ்வாறு அங்கீகரிக்கப்படும்?” என்று கூறினார்கள். (அபூஹுரைரா (ரலி) முஸ்லிம்).

நாம் ஹராமான முறையில் சம்பாதித்துவிட்டு பிறகு நமது தேவைக்காக அல்லாஹ்விடம் துஆ செய்தால் அந்த துஆவிற்கு பதிலும் இருக்காது, பலனும் இருக்காது.


நேர்மையான வியாபாரிகளின் நிலை என்ன?

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “உண்மை பேசி, நாணயத்துடன் நடந்து கொள்ளும் ஒரு வணிகர் மறுமை நாளில் நபிமார்கள், உண்மையாளர்கள், ஷஹீதுகள் ஆகியோருடன் இருப்பார்” என்று கூறினார்கள். (அபூ ஸயீத் அல்குத்ரீ (ரலி) திர்மிதீ).

இது பற்றி நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “வியாபாரிகளே! ஷைத்தானும் பாவமும் வியாபாரத்தின் போது ஆஜராகி வருவதால், உங்கள் வியாபாரங்களுடன் தர்மத்தையும் சேர்த்துக்கொள்ளுங்கள்” என்று கூறினார்கள். (பரா பின் ஆஸிப் (ரலி) திர்மிதீ, அபூதாவூத்).


இறுதியாக!

அன்பான வியாபாரிகளே! நீங்கள் மக்களின் அன்றாடம் தேவைகளை விற்பனை செய்கிறீகள். ஆனால் உங்கள் வியாபாரத்தில் மோசடி செய்யாதீர்கள்! எது ஹராம்? எது ஹலால் என அறிந்து வியாபாரம் செய்யுங்கள்! அல்லாஹ்வின் மீது பொய்ச் சத்தியம் செய்து பொருளை விற்பனை செய்யாதீர்கள்! விற்பனை பொருளை பதுக்கல் செய்யாதீர்கள்! விற்பனை பொருட்களில் கலப்படம் செய்து அப்பாவி மக்களின் உயிர்களை குடிக்காதீர்கள்! அடுத்தவரின் வியாபாரத்தில் குறுக்கீடு செய்து, பொறாமை கொள்ளாதீர்கள்! கூட்டுத்தொழிலில் சகதோழரை ஏமாற்றாதீர்கள்! உங்களின் வியாபாரங்களுக்கு மத்தியில் அதிகம் தர்மம் செய்யுங்கள்!

ஜாஸ்சகல்லாஹ் கைர் அபூவஸ்மீ

இன்னும் 105 வருடங்கள் காத்திருக்க வேண்டும்

இன்னும் 105 வருடங்கள் காத்திருக்க வேண்டும் (வீடியோ)

             சென்னை:- இன்று காலை சூரியனுக்கும் பூமிக்கும் இடையே வெள்ளி கிரகம் கடந்து சென்றது.  இந்த அபூர்வ நிகழ்வு இனிமேல்  105 வருடங்களுக்கு பிறகு தான் நடைபெறும் .பூமியில் இருந்து 4.1 கோடி கிலோ மீட்டர் தொலைவில் வெள்ளி கிரகம் உள்ளது. வெள்ளிக்கும் சூரியனுக்கும் இடைப்பட்ட தூரம் 10 கோடியே 82 லட்சம் கிலோ மீட்டர் ஆகும்.வெள்ளி சூரியனைக் கடக்கும் இந்த அபூர்வக் காட்சி இன்று காலை 5:55 மணிக்குத் தொடங்கியது. இந்நிகழ்வைப் பொதுமக்கள் பார்ப்பதற்காகச்  சென்னை பிர்லா கோளரங்கம் சிறப்பு ஏற்பாடு செய்திருந்தது. மெரினா கடற்கரையிலும் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன..வெள்ளி  சூரியனைக் கடந்த போது ஒரு கருப்புப் புள்ளி மெதுவாக  நகர்ந்து  சென்றதைக் காண முடிந்தது.   சூரியனின் பிம்பம் இதற்காக தயாரிக்கப்பட்ட ஒரு திரையில் தொலைநோக்கி வழியாக விழுமாறு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த அபூர்வ நிகழ்வை ஏராளமான பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் கண்டு ரசித்தனர்.வெள்ளி கிரகத்தின் இந்த  நகர்வை அமெரிக்கா முதல் தென் கொரியா வரை உலகம் முழுவதும் வசிக்கும் மக்கள் கண்டு ரசித்தனர். அமெரிக்காவில் வசிப்பவர்கள் செவ்வாய்கிழமை காலையிலும், ஆசியா பகுதியில் வசிப்பவர்களுக்கு புதன்கிழமையும் சூரியனை வெள்ளி கடந்து சென்ற நிகழ்வு தெரிந்தது.

முஸ்லிம் பெண்களுக்குப் 15 வயதில் திருமணம் செய்து கொள்ளலாம்-உயர்நீதிமன்றம் தீர்ப்பு: 


     
                      டில்லி:_ நாட்டில் பெண்களின் திருமண வயது 18 எனச் சட்டம் இருந்தாலும் இளவயதுத் திருமணங்கள்  நடந்து கொண்டு தான் இருக்கின்றன.

இந்நிலையில் முஸ்லிம்ப் பெண்கள்  பருவமடைந்திருந்தால் தங்களின் விருப்பப்படி 15 வயதிலேயே திருமணம் செய்து கொள்ளலாம்  என டில்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

முஸ்லிம் தனிச்ச்சட்டப்படி முஸ்லிம்  பெண் , பருவமடைந்திருந்தால் தனது பெற்றோரின் ஒப்புதல் இல்லாமல் 18 வயது நிரம்பாமல் இருந்தாலும் திருமணம் செய்து கொள்ள உரிமை உள்ளது என நீதிபதிகள் ரவீந்திர பட் மற்றும் எஸ்பி.கார்க் ஆகியோர் கொண்ட பெஞ்ச் தீர்ப்பளித்துள்ளது

டில்லி:_ நாட்டில் பெண்களின் திருமண வயது 18 எனச் சட்டம் இருந்தாலும் இளவயதுத் திருமணங்கள்  நடந்து கொண்டு தான் இருக்கின்றன.
இந்நிலையில் முஸ்லிம்ப் பெண்கள்  பருவமடைந்திருந்தால் தங்களின் விருப்பப்படி 15 வயதிலேயே திருமணம் செய்து கொள்ளலாம்  என டில்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
முஸ்லிம் தனிச்ச்சட்டப்படி முஸ்லிம்  பெண் , பருவமடைந்திருந்தால் தனது பெற்றோரின் ஒப்புதல் இல்லாமல் 18 வயது நிரம்பாமல் இருந்தாலும் திருமணம் செய்து கொள்ள உரிமை உள்ளது என நீதிபதிகள் ரவீந்திர பட் மற்றும் எஸ்பி.கார்க் ஆகியோர் கொண்ட பெஞ்ச் தீர்ப்பளித்துள்ளது


டில்லி:_ நாட்டில் பெண்களின் திருமண வயது 18 எனச் சட்டம் இருந்தாலும் இளவயதுத் திருமணங்கள்  நடந்து கொண்டு தான் இருக்கின்றன.
இந்நிலையில் முஸ்லிம்ப் பெண்கள்  பருவமடைந்திருந்தால் தங்களின் விருப்பப்படி 15 வயதிலேயே திருமணம் செய்து கொள்ளலாம்  என டில்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
முஸ்லிம் தனிச்ச்சட்டப்படி முஸ்லிம்  பெண் , பருவமடைந்திருந்தால் தனது பெற்றோரின் ஒப்புதல் இல்லாமல் 18 வயது நிரம்பாமல் இருந்தாலும் திருமணம் செய்து கொள்ள உரிமை உள்ளது என நீதிபதிகள் ரவீந்திர பட் மற்றும் எஸ்பி.கார்க் ஆகியோர் கொண்ட பெஞ்ச் தீர்ப்பளித்துள்ளது
டில்லி:_ நாட்டில் பெண்களின் திருமண வயது 18 எனச் சட்டம் இருந்தாலும் இளவயதுத் திருமணங்கள்  நடந்து கொண்டு தான் இருக்கின்றன.
இந்நிலையில் முஸ்லிம்ப் பெண்கள்  பருவமடைந்திருந்தால் தங்களின் விருப்பப்படி 15 வயதிலேயே திருமணம் செய்து கொள்ளலாம்  என டில்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
முஸ்லிம் தனிச்ச்சட்டப்படி முஸ்லிம்  பெண் , பருவமடைந்திருந்தால் தனது பெற்றோரின் ஒப்புதல் இல்லாமல் 18 வயது நிரம்பாமல் இருந்தாலும் திருமணம் செய்து கொள்ள உரிமை உள்ளது என நீதிபதிகள் ரவீந்திர பட் மற்றும் எஸ்பி.கார்க் ஆகியோர் கொண்ட பெஞ்ச் தீர்ப்பளித்துள்ளதுஹைதராபாத் மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு: ஐந்தாண்டுகளுக்குப் பின்னால்... 


மக்கா மஸ்ஜித்

 
          ஹைதராபாத் மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு நிகழ்ந்து ஐந்தாண்டு முடிந்துவிட்டது. இந்த குண்டுவெடிப்பில் ஈடுபட்ட முக்கியக் குற்றவாளிகளான காவி தீவிரவாதிகள், இன்னும் தண்டிக்கப்படாமல் அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் மீது பொய் வழக்குப் போட்டு துன்புறுத்திய காவல்துறை கறுப்பாடுகள் என்ற இருதரப்பார் மீதும் விரைந்து நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து ஆந்திர முஸ்லிம் தலைவர்கள் தங்கள் கொந்தளிப்பினை வெளிப்படுத்தியுள்ளனர்.
மத்திய அரசின் புலனாய்வு அமைப்பான என்.ஐ.ஏ. துரித நடவடிக்கையில் இறங்கி, மக்கா மஸ்ஜிதில் குண்டு வைத்துவிட்டு தலைமறைவாகி இருக்கும் காவி தீவிரவாதிகள் ராமச்சந்திரன் கல்சங்கரா மற்றும் சந்தீப் டாங்கே என்ற இரண்டு ஆர்.எஸ்.எஸ். தீவிரவாதிகளையும் கையும் களவுமாகப் பிடித்து சட்டத்தின் முன் ஒப்படைக்க வேண்டும் என ‘மஜ்லிஸ் தஹ்ரீக்’ அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது. இந்த அமைப்பின் பிரமுகர் அம்ஜத்துல்லாஹ் கான், தலைவர் ஆதம் மாலிக் ஒருங்கிணைந்த கருத்தரங்கில் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த அறிவு ஜீவிகள், அரசியல் தலைவர்கள் கலந்துகொண்டனர்.

மேலும் மஸ்ஜித் குண்டுவெடிப்பினைத் தொடர்ந்து விசாரணை என்ற பெயரில் ஆந்திர காவல்துறையினரால் சித்திரவதைக்கு உள்ளாக் கப்பட்டு பல ஆண்டுகளாக சிறைவாசம் அனுபவித்து மீண்ட இம்ரான்கான், இப்ராஹிம் அலிஜுனைத், முஹம்மத் ரயீசுத்தீன், அப்துல் ரஹீம் போன்றவர்கள் தங்கள் வாழ்வு வீணடிக்கப்பட்டதை, வலி நிறைந்த அனுபவத்தை விவரித்தனர்.
தங்கள் மீது எத்தகைய குற்றமும் இல்லாத நிலையிலும் ஹைதராபாத் காவல்துறை தங்களை எவ்வாறு குறிவைத்து வேட்டையாடியது என்பதை குமுறலுடன் கூறினர். அத்துமீறிய காவல்துறை அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரினர்.
முஸ்லிம் இளைஞர்களின் வாழ்வினை சூனியமாக்கிய காவல்துறையினர் தண்டிக்கப்பட வேண்டும். தங்களைத் தீவிரவாதிகள் என கொச்சைப்படுத்திய காவல்துறையும் ஊடகங்களும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் தெரிவித்தனர்.
இவர்களை இன்னும் காவல் துறை தேடிக்கொண்டே இருக்கிறதாம்...குற்றமற்றவர்கள் என விடுதலை செய்யப்பட்ட அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள்...


அசிமானந்தா...

மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு குறித்த விவகாரத்தில் முஸ்லிம் இளைஞர்களை காவல்துறை வேண்டுமென்றே சித்திரவதை செய்து சிறையில் அடைத்த விவகாரத்தில் ஆந்திர மாநில அரசு, தான் செய்தது தவறு என தெரிவித்து அதற்காக பகிரங்க மன்னிப்பும் கேட்டது. ஆனால் மீண்டும் முஸ்லிம் இளைஞர்கள் மீது பொய்வழக்குகள் போடப்படுகின்றன. புதிய புதிய சதித்திட்டங்களைத் தீட்டி வேறுவேறு காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன. ஆந்திர அரசு இதுபோன்ற இரட்டை வேடப் போக்கினை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என கருத்தரங்கில் பங்கேற்ற தலைவர்கள் உரையில் குறிப்பிட்டனர். ஒரு தகாத சம்பவம் நிகழும்போது எளிதாக முஸ்லிம் இளைஞர்களை வேண்டுமென்றே கைது செய்யும் காவல்துறையினருக்கு உண்மைக் குற்றவாளிகளைக் கைது செய்யும் துணிச்சலோ ஆண்மையோ இல்லாமல் போனது ஏன்? என மஜ்லிஸ் பச்சாவோ தஹ்ரீக் தலைவர் அம்ஜதுல்லாஹ் கான் கூறினார்.
மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பின் முக்கியக் குற்றவாளியான சுவாமி அசிமானந்தா தனது ஒப்புதல் வாக்குமூலத்தில், ஆர்.எஸ்.எஸ்.ஸின் முக்கியப் பெரும் புள்ளியான ராம் மாதவன் என்பவன்தான் முக்கிய சதியாளன் எனக் கூறிய பிறகும் அவனைக் கைது செய்யும் துணிச்சல் ஆந்திர காவல்துறைக்கு இல்லையா? அல்லது கைது செய்வதைத் தடுக்கும் சக்தி எது? என்ற ஆவேசமான வினாக்கள் ஆந்திர காவல்துறை மீது வீசப்பட்டன.
வஹ்ததே இஸ்லாமி அமைப்பின் தலைவர் மவ்லவி நசீருத்தீன் பேசும்போது, மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு தொடர்பாக தனது இரண்டு மகன்கள் கைது செய்யப்பட்டதாகவும், அவர்கள் இருவரும் தற்போது மத்தியப் பிரதேச இந்தூர் சிறையில் இருப்பதாகவும் கூறினார். இந்தியாவில் நடைபெறும் ஒவ்வொரு குண்டுவெடிப்பிலும் ஆர்.எஸ்.எஸ்.ஸின் சதிவேலை என சந்தேகமின்றி நிரூபிக்கப்பட்டாலும் காவல்துறையினர் பாரபட்சத்துடன் முஸ்லிம் இளைஞர்களையே வேட்டையாடுவதாக அவர் கூறினார்.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான அஜீஸ் பாஷா உரையாற்றும் போது, மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்புகள் நிகழ்ந்து 5 ஆண்டுகள் ஆன பின்னரும்கூட தலைமறைவாகியுள்ள குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க முடியவில்லை. சம்பவம் நிகழ்ந்தது முதல் நடுநிலையாளர்கள் கோரியபடி நியாயமாக புலனாய்வு செய்யப்பட்டிருந்தால் இன்று குற்றவாளிகள் சிறையில் அடைக்கப்பட்டிருப்பார்கள். ஆனால் ஆரம்பம் முதல் முஸ்லிம் இளைஞர்களையே காவல்துறை குறிவைத்துப் பிடித்து துன்புறுத்தியது என்றார்.
பாப்ரி மஸ்ஜித் இடிக்கப்பட்டு 20 ஆண்டுகளைத் தாண்டியும் உண்மைக் குற்றவாளிகள் தண்டிக்கப் படவில்லை. ஹைதராபாத் மக்கா மஸ்ஜிதில் குண்டு வைத்த காவி பயங்கரவாதிகளும் தண்டிக்கப்படவில்லை. அப்பாவி முஸ்லிம்களைக் குறிவைத்து வேட்டையாடிய காவல்துறை கறுப்பாடுகளும் தண்டிக்கப்படவில்லை.

--ஹபீபா பாலன்

 

ஆப்பிரிக்காவில், மரத்தின் அன்னை (The Tree Mother Of Africa)  


                                                                                                                                  வறுமையின் காரணமாக, எத்தொழிலையும் செய்யத் துணிந்த ஆப்பிரிக்கா மக்கள், தங்களின் சுயநலத்திற்காக மரங்களையும் வெட்டி பணம் சம்பாதித்துக் கொண்டிருப்பதை அறிந்த பின், இவர் மிகவும் மன உளைச்சல் அடைந்தார்.

அவர்களின் இந்நடவடிக்கைகள் எதிர்காலத்தின் அழிவிற்கு வித்திடும் என நம்பிய இவர் கிரீன் பெல்ட் (Green Belt) என்ற இயக்கத்தைத
் தொடங்கி அதில் தீவிரமாக ஈடுப்பட்டு வந்தார். இவ்வியக்கத்தின் மூலம் மரங்களின் அவசியத்தையும் அதனால் ஏற்படும் நன்மைகளையும் ஆப்பிரிக்கா மக்களிடையே விழிப்புணர்வை ஊட்டினார். இந்நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு முன்பு மாத்தாய் முதலில் கென்யா மக்களின் தேவைகளைக் கேட்டறிந்தார். இவர்களின் அவசியமானது சிலவற்றையே. அவை நல்ல குடிநீர், சமைப்பதற்கு விறகுகள், சத்துள்ள உணவு, கட்டுமானப் பொருட்கள் என இன்னும் சில தேவைகளை முன்வைத்தனர்.

அதற்கு, மாத்தாய் “உங்களுக்குப் பணம் வேண்டுமானால் மரத்தை நடுங்கள். அவை உங்களுக்குப் பணம் தரும்.” என்றார்.

ஆப்பிரிக்கா பெண்கள் “ எங்களுக்கு மரம் நட தெரியாது” என்றார்கள். சில வன அதிகாரிகளின் உதவியை நாடியப்பின் பெண்கள் மரக்கன்றுகளை நடத் தொடங்கினர். வளர்ந்த மரக்கன்றுகளைத் தங்களின் நிலத்திலேயே நட்டு வந்தனர். இப்படியே பல ஆயிர மரங்களை உருவாக்கினர். மரம் வளர்ந்த பிறகு நல்ல விலையில் போனது. இது பெரும் மாற்றத்தை பெண்களிடம் கொண்டு வந்தது. ஏனென்றால் மரம் நடுதல் அவர்களுக்குப் பணம் சம்பாதிக்கும் தொழிலாக மாறிவிட்டது.

மாத்தாய் சுற்றுச் சூழலைப் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டும் கொள்ளாமல், சமூகத்தின் வளர்ச்சியிலும் அதனால் நாட்டிற்கு ஏற்படும் முன்னேற்றங்களைப் பற்றியும் சிந்திக்கத் தொடங்கலானார். அதனால், இம்மூன்று கூறுகளையும் ஒன்றிணைத்து பார்க்கத் தொடங்கினார். தமக்கு நோபல் பரிசு வழங்கு விழாவில் “அமைதி இல்லாத ஒரு நாட்டில் வளர்ச்சி இருக்காது. மக்களாட்சி மாண்புகளை மதிக்காத ஒரு நாட்டை நீங்கள் முன்னேற்ற முடியாது. மேலும் இயற்கை வளங்களைச் சரியாக கையாளாத நாட்டின் வளங்கள் சுரண்டப்படுகின்றன. பெரும்பான்மையை ஏமாற்றி சிறுபான்மையிடம் வளங்கள் ஒப்படைக்கப்படுகின்ற ஒரு நாட்டை முன்னேற்றவே முடியாது” என தனது ஏற்புரையில் கூறினார்.

சுற்றுச்சூழலைப் பாதுக்காக்க வேண்டும் என்ற விழிப்புணவை ஏற்படுத்த அவர் மேலும் பல திட்டங்களைத் தீட்டிக் கொண்டு வந்தார். அதில் ஒன்று, இவ்விழிப்புணர்வைச் சிறுவயதில் மாணவர்களுக்கு ஏற்பட வேண்டும் என்பதற்காக புதிய பாடத்திட்டம் ஒன்றை உருவாக்கினார். இவரின் இச்செயலால் ஆப்பிரிக்கா மக்கள் தங்களின் நில அவசியத்தை மிக அருகில் புரிந்துக் கொண்டனர்.

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட வங்காரி மாத்தாய்,25 செப்டம்பர் 2011, தனது 71ஆம் வயதில், நைரோபியிலுள்ள மருத்துவமனையில் தனது உயிரைத் துறந்தார். 1 ஏப்ரல் 1940-ல் பிறந்த இவர், தனது கென்யா நாட்டின் பெண்களின் அடையாளமாய் விளங்கினார். பெண்களுக்கு மிகவும் பக்கப் பலமாகவும் முன்னுதாரணமாகவும் இருந்த இவரின் செயலைக் கண்டு பலரும் பெருமை பட்டனர். ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்த இவர், கென்யா நாட்டில் பெரும்பான்மையான கிகுயு (kikuyu) என்ற இனத்தைச் சார்ந்தவர். இந்த அழகிய பெண்மணியின் சேவையையும் தியாகத்தையும் பாராட்டி 2004ஆம் ஆண்டு உலக அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. உலக அமைதிக்கான நோபல் பரிசு வென்ற முதல் ஆப்பிரிக்கா பெண்மணி என்ற பெருமையும் இவரையே சேரும். அரசியல், சமூகம் மற்றும் சுற்றுச் சூழல் நடவடிக்கைகளில் மிகத் தீவிரமாக ஈடுபட்டும் வந்தார். கென்யா நாட்டின் சுற்றுச் சூழல் அமைச்சின் துணை அமைச்சராகவும் பொறுப்பேற்றிருந்தார்


இப்படியே பெண்கள், மனித உரிமைகள் என்று பல அடிப்படைகளில் பிரச்சாரங்களை ஆப்பிரிக்காமக்களிடையே பரப்பினார். எப்படிப்பட்ட பெண்கள் ஆப்பிரிக்காவிற்கு வேண்டும் என்பதையும் ஆழமாக உணர்த்தினார். இவரின் பணியை எண்ணில் அடக்க முடியாத வகையில் அவர் விட்டுச் சென்ற நல்ல விசயங்கள் மட்டும் உயிரோடிக் கொண்டிருக்கின்றன இன்னமும் நம்மிடம்...............

கட்டுரை
வீ.அ.மணிமொழி

- via பேகம் பானு

இந்தியாவில் பெருகும் புற்றுநோய் மரணங்கள்

        லண்டனில் இருந்து வெளிவரும் Lancet என்ற மருத்துவ மாத இதழில், இந்தியாவில் 2010ஆம் ஆண்டு நிகழ்ந்த புற்றுநோய் மரணங்கள் குறித்து அறிக்கை வெளியாகி இருக்கிறது. 30 வயதுக்கு குறைவான வயதினரையே புற்றுநோய் அதிகம் தாக்குவதாக அந்த அறிக்கை கூறுகிறது. 2010ல் நாடு முழுவதும் 5,56,400 பேர் புற்றுநோய்க்கு பலியாகி உள்ளனர். இதில் 3,95,400 பேர் 30 முதல் 69 வயதுக்கு இடைப்பட்டவர்கள். இவர்களின் விகிதம் 71 சதவீதமாக இருக்கிறது. ஆண்களில் 2 லட்சத்து 100 பேரும், பெண்களில் 1 லட்சத்து 95,300 பேரும் மரணத்திருக்கிறார்கள். இந்தியாவில் 2010ல் மரணமடைந்த 2 கோடியே 50 லட்சம் ஆண்களில் 30 முதல் 69 வயதுக்கு இடைப்பட்டு இறந்தவர்களில் 80 சதவீதம் பேரும், ஒரு கோடியே 60 லட்சம் பெண்களில் 30 முதல் 69 வயதுக்கு இடைப்பட்ட பெண்களில் 12.3 சதவீதம் பேரும் புற்றுநோயால் இறந்துள்ளனர்.

அனைத்து தரப்பு வயதினரில், ஒரு லட்சம் ஆண்களில் 59 சதவீதம் பேரும், ஒரு லட்சம் பெண்களில் 52 சதவீதம் பேரும் புற்றுநோய் காரணமாக இறந்துள்ளனர். வாய் தொடர்பான புற்றுநோய் காரணமாக (உதடு மற்றும் உணவு குழாயும் வாயும் இணையும் Pharynx பகுதி) 45,800 பேரும் (22.9%), வயிற்றுப் புற்றுநோய் காரணமாக 25,200 பேரும் (12.6%), நுரையீரல் சம்பந்தமான (குரல்வளை - Trachea;; குரல்வளையின் மேற்பகுதி-Larynx) புற்றுநோயினால் 22,900 பேரும் (11.4%), பெண்களில் கழுத்து புற்றுநோய் காரணமாக 33,400 (17.1%) பேரும், வாய்ப்புற்றுநோய் காரணமாக 27,500 (14.1%) பேரும், மார்பகப் புற்றுநோய் காரணமாக 19,900 (10.2%) பேரும் மரணித்துள்ளனர்.


இந்தியாவில் இந்துப் பெண்களை விடவும் முஸ்லிம் பெண்களிடத்தில், குறிப்பாக அவர்கள் அதிகமாக வசிக்கும் இடங்களில் கழுத்துப் புற்றுநோய் குறைவாகக் காணப்படுவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு வேறுபல காரணங்கள் இருந்தாலும் முஸ்லிம் ஆண்கள் சுன்னத் செய்துகொள்வதுதான் காரணமாக இருக்கக்கூடும் என்று ஆராய்ச்சியார்கள் தெரிவிக்கின்றனர். போதைப் பொருள் காரணமாக ஆண்களில் 84,000 பேரும் (42.0%), பெண்களில் 35,700 பேரும் (18.3%) பேர் இறந்துள்ளனர். இந்தியாவில் வடகிழக்கு மாநிலங்களில்தான் புற்றுநோய் மரணங்கள் அதிகம் நிகழ்ந்துள்ளன என்று அறிக்கை கூறுகிறது.
--ஜி.அத்தேஷ்

செவ்வாய், 5 ஜூன், 2012

லஞ்சம் வாங்குபவர்களுக்கு எந்த ஊரில் என்ன தண்டனை?

 
எந்த ஊரில் என்ன தண்டனை?
லஞ்சம் வாங்குபவர்களுக் கு அதிகபட்ச தண்டனை வழங்கினால், லஞ்சத்தை ஒழிக்கலாம் என்பது பலரது வாதம். லஞ்சத்துக்கு எந்த நாட்டில் என்ன தண்டனை?
...

ஜஸ்லாந்து: இங்கு தண்டனை என்னவோ 2 வருட சிறைச்சாலைதான். அதற்கு முன்பு லஞ்சம் வாங்கிச் சேர்த்த பணம் முழுவதும் பறிமுதல் செய்யப்படும். (ஊழல் குறைவான நாடுகள் வரிசையில் இதற்கு முதலிடம்).

எகிப்து: இங்கு லஞ்சம் வாங்குவதுகிரிமினல் குற்றம். நிரூபிக்கப்பட்ட ால் ஆயுள் முழுவதும் சிறைதான். அதுவும் உள்ளே கடுமையான வேலைகளைச் செய்யவைத்து பெண்டு நிமிர்த்துவார்க ள்.

அர்ஜெண்டினா: சிறை தண்டனையோடு வேலையும் பறிபோய்விடும். விடுதலையான பிறகும் சாகும் வரை வேறு வேலை தர மாட்டார்கள்.

செக் குடியரசு: சிறை தண்டனை, வேலைகாலி, வீடு மற்றும் பிற சொத்துக்கள் பறிக்கப்படும்.

நைஜர்: இங்கு தண்டனை கொஞ்சம் வித்தியாசமானது. லஞ்சம் பெற்றது உறுதியானால் அரசியல் மற்றும் குடி உரிமைகள் பறிக்கப்படும்.

இங்கிலாந்து: சிறை தண்டனையுடன் வாக்களிக்கும் உரிமையும் ரத்து செய்யப்படும்.

சீனா: கீழ்மட்ட அரசாங்க அலுவலர்களுக்கு சிறை தண்டனை. உயர் பொறுப்பில் இருப்பவர்களுக்க ு மரண தண்டனையும் உண்டு. விஷ ஊசி போட்டு நொடிகளில் சாகடித்து விடுவார்கள். முன்பெல்லாம் துப்பாக்கியால் நெற்றியில் சுட்டுச் சாகடிப்பார்கள். துப்பாக்கி குண்டுக்கான செலவு உறவினர்களிடம் வசூலிக்கப்படும் .

எல்லாம் சரி இந்தியாவில்..? அரசு ஊழியராக இருந்து லஞ்சம் வாங்கினால் அதிகபட்சம் ஒரு வருடம் வரை சிறை தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டுமே! உணவு, மது, பொழுதுபோக்கு போன்றவற்றை லஞ்சமாக.... ஸாரி 'கிஃப்ட்டாக' வாங்கினால் அபராதம் மட்டுமே. அரசியல்வாதியாக இருந்து லஞ்சம் வாங்கினால் அப்படியே எம்.எல்.ஏ-வாகி, அமைச்சர் ஆவதுதான் 'தண்டனை'!


திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா............


வாழ்வின் அர்த்தம் புரிந்து வாழலாம்! சத்தமில்லாமல் சமையலறை நுழைந்து முத்தம் கொடுத்து விட்டு ஓடுகிறாய்! என் பசி மறந்து உனக்காகக் காத்திருக்கும் பொழுது காத்திருக்கவேண்டாமென கண்டித்து விட்டு.. ஒரு கையால் இரு இதழுக்கு ஊட்டுகிறாய்! சாதிச்சான்றிதழுக்காக லஞ்சம் கொடுத்துவிட்டு, கெஞ்சுபவனைப்போல... மல்லிகைப்பூ தந்துவிட்டு மன்றாடுகிறாய், பள்ளிக்கு செல்லமறுத்து தூங்குவதாய் நடிக்கும் சின்னப்பையனைபோல... மடியில் படுத்துக்கொண்டு எழ மறுக்கிறாய்.....

அம்மா வருவதாக பாசாங்கு செய்யும்பொழுது...பதறி எழுந்து நிலை உணர்ந்து சிரிக்கிறாய்.கை இழுத்து வைத்து குளிக்க வைக்க முயலும்போது குளிரடிப்பதாய் கூறி - ஒரு குழந்தையை போல அழுகிறாய்! மறைந்திருந்து கட்டிப்பிடிப்பாய்... கையிலிருப்பதை தட்டிப்பறிப்பாய்,கெஞ்சுவதும்... மிஞ்சுவதும்...,,அழுவதும்... அணைப்பதும்...கண்டிப்பதும்... கண்ணடிப்பதும்...,,இடைகிள்ளி... நகை சொல்லி... அந்நேரம் சொல்வாயடா "அடி கள்ளி "
இவையெல்லாம் இரண்டே மாதம் தந்துவிட்டு...!!! எனைத் தீயில் தள்ளி வாழ்வு அள்ளிச் சென்றுவிட்டாய்...என் துபாய் கணவா!!!

கணவா - எல்லாமே கனவா? கணவனோடு இரண்டு மாதம்... கனவுகளோடு இருபத்தி இரண்டு மாதமா...? 12 வருடமொருமுறை குறிஞ்சிப்பூ ... 5 வருடமொருமுறை ஒலிம்பிக்....4 வருடமொருமுறை உலகக் கோப்பை கிரிக்கெட்... .....2 வருடமொருமுறை கணவன் ...நீளும் பட்டியலோடு நீயும் இணைந்துகொண்டாய்! இது வரமா??? சாபமா...???

அழகுக்காய் பிணத்தின் சாம்பலில்... முகம் பூசுவோர் உண்டோ ?கண்களின் அழுகையை... கண்ணாடி தடுக்குமா கணவா?நான் தாகத்தில் நிற்கிறேன் - நீ கிணறு வெட்டுகிறாய்!!நான் மோகத்தில் நிற்கிறேன் - நீ விசாவை காட்டுகிறாய்,,திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா... வாழ்வின் அர்த்தம் புரிந்து வாழலாம்விட்டுகொடுத்து.... தொட்டு பிடித்து...,,தேவை அறிந்து... சேவை புரிந்து...உனக்காய் நான் விழித்து... எனக்காக நீ உழைத்து...தாமதத்தில் வரும் தவிப்பு... தூங்குவதாய் உன் நடிப்பு...வார விடுமுறையில் பிரியாணி.... காசில்லா நேரத்தில் பட்டினி...இப்படிக் காமம் மட்டுமன்றி எல்லா உணர்ச்சிகளையும் நாம் பரிமாறிக்கொள்ளவேண்டும்...............

இரண்டு மாதம் மட்டும் ஆடம்பரம் உறவு உல்லாச பயணம்,பாசாங்கு வாழ்க்கை புளித்து விட்டது கணவா! தவணைமுறையில் வாழ்வதற்கு வாழ்க்கை என்ன வட்டிக்கடையா?எப்பொழுதாவது வருவதற்கு நீ என்ன பாலை மழையா ?இல்லை ஓட்டு வாங்கிய அரசியல்வாதியா ?விரைவுத்தபாலில் காசோலை வரும் காதல் வருமா ?
பணத்தைத் தரும்... பாரத வங்கி ! பாசம் தருமா? நீ இழுத்து செல்கின்ற பெட்டியோடு ஒட்டியிருக்கிறது என் இதயம்!.........

அனுமதிக்கப்பட்ட எடையோடு அதிகமாகிவிட்டதால்விமான நிலையத்திலேயே விட்டுவிட்டாயோ என் இதயத்தை?பித்தளையை எனக்கு பரிசளித்துவிட்டு... நீ தங்கம் தேடி துபாய் சென்றாயே?பாலையில் நீ! வறண்டது என் வாழ்வு!வாழ்க்கை பட்டமரமாய் போன பரிதாபம் புரியாமல்,,ஈச்சமரம் பக்கம் நின்று எடுத்த புகைப்படம் அனுப்புகிறாய்!உன் துபாய் தேடுதலில்... தொலைந்து போனது - என் வாழ்க்கையல்லவா..?


விழித்துவிடு கணவா! விழித்து விடு - அந்த கடவுச்சீட்டு வேண்டாம்...கிழித்துவிடு! விசாரித்து விட்டு போகாதே கணவா விசா ரத்து செய்துவிட்டு வா................!!!!!

by: தூக்கம் விற்ற காசுகள்

'தங்கமாக மாறிய ரேஷன் அரிசி பணம் '  


மயக்கம் வர செய்யும் செய்தி: தன்டாரம் பட்டு வேலு கலைஞருக்கு கொடுத்த 89 கிலோ தங்கம் .

இப்பொழுது கலைஞரின் எண்பத்து ஒன்பதாவது பிறந்த நாள் விழா சென்னை அறிவாலயத்தில் நடந்து வருகிறது.தலைவரை மகிழ்விக்கும் விதமாக தன்டாரம் பட்டு வேலு எண்பத்து ஒன்பது கிலோ தங்கத்தை அவருக்கு பரிசாக தந்து அசத்தினார் (முன்னாள் அமைச்சர் ).

உணவு பொருட்கள் வழங்கும் துறையில் மந்திரியாக இருந்தவர்.இவர் காலத்தில் ரேஷன் அரிசி பல மாநிலங்களுக்கு கடத்தப் பட்டதாக புகார் எழுந்தது.

'தங்கமாக மாறிய ரேஷன் அரிசி பணம் ' என்று ஒரு அடி மட்ட தொண்டர் போதையில் உளற அவரை பலவந்தமாக வெளியேற்றினர் சில தி.மு.க.விசுவாசிகள்.

இன்றைய தங்கம் ஒரு கிராம் ரூ.2841

மொத்தம் 89 கிலோ 89 x 1௦௦௦ = 89000 கிராம் = ரூ.252,849,000

ஐயா, தலைவரே என்ன இது?

இதுதான் பகுத்தறிவா?

இதுதான் சுயமரியதையா?

இதுதான் திராவிட கலாச்சாரமா?

இதுதான் தமிழ் பண்பாடா? தமிழ்நாடு விளங்கிரும், நாமெல்லாம் நல்லா வருவோம். தனி தமிழ்நாடு எதுக்கு கேக்குரனுகன்னு இப்போவாது புரியுதா மக்களே!!!
 

மறுக்கப்படும் மனித உரிமை - உடைத்தெறியும் ஊடக சக்தி :இணையத்தளத்தில் சாதாரணமாக நடத்தப்படும் ஒரு கருத்துக்கணிப்பில் பல மில்லியன் மக்கள் வாக்களித்திருக்க முடியுமா?
உலகின் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுக்கும் கருத்துக்கணிப்பு எனில் அது நிச்சயம் சாத்தியமென நிரூபித்திருக்கிறது Radio Times.

அமெரிக்காவின் ஆஸ்காருக்கு சமமாக அழைக்கப்படும் பிரித்தானியாவின் BAFTA விருதுகளுக்காக (British Academy of Film and Television Arts) இம்முறை பரிந்துரைக்கப்பட்ட இரு முக்கிய தொலைக்காட்சி ஆவணத்திரைபடங்கள்

1. சேனல் 4 இன் Sri Lanka's Killing Field
2. அல் ஜசீராவின் Bharain : Shouting in the Dark

இதில் சேனல் 4 இன் Sri Lanka's Killing Field - இலங்கையில் 30 வருடங்களுக்கு மேலாக நீண்டுவந்த சிவில் யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவருவதற்காக, இலங்கை அரசு இறுதியாக மேற்கொண்ட வழி என்ன என்பதை சாட்சிப்படுத்தியது. நம்மில் பலர் இத்திரைப்படத்தை பார்த்திருப்பீர்கள் என்ற நம்பிக்கையில் அடுத்த திரைப்படத்தை பற்றிப் பார்க்கலாம்.

அல்ஜசீராவின் Bharain : Shouting in the Dark -  துனிசியா, எகிப்து, லிபியா என மத்திய கிழக்கு நாடுகள் ஒவ்வொன்றாக மக்கள் புரட்சி மூலம், புதிய வரலாறு படைத்து வர,  அம்முயற்சியில் தன்னை இணைத்துக்கொள்ள  கடும் முயற்சி மேற்கொண்டு தோற்றுப்போன Bahrain நாட்டை பற்றியது.

ஆக்ரோஷமாக உருவெடுத்த பஹ்ரேய்ன் மக்கள் புரட்சி எப்படி அதைவிட ஆக்ரோஷமாக அடக்கப்பட்டது என்பதை படம்பிடிக்க தவறிய மேற்குலக கமெராக்கள் மத்தியில் அல்ஜெசிரா சரியாக படம்பிடித்து கொண்டது. பயன்படுத்தியும் கொண்டது.

இத்திரைப்படம் வெளியான நான்கு நாட்களில் யூடியூப்பில் 200,000 ஹிட்ஸ் குவிந்தன.  கட்டாருடன் (அல் ஜசீராவின் தலைமையகம் அமைந்துள்ள நாடு) தனது உறவை முறித்து கொள்ளும் அளவுக்கு பஹ்ரேன் அரசுக்கு கடுப்பேற்றிய டாக்குமெண்டரி இது. இதில் சாட்சியமளித்த பலர் இத்திரைப்படம் வெளியான பின்னர் கைது செய்யப்பட்டு இப்போதும் சிறைக்குள் உள்ளார்கள்.

ஆனால் குறித்த இரு திரைப்படங்களுமே,  ஊடக சக்தியை சிறைப்படுத்த முடியாதவை என நிரூபித்தவை.

Sri Lanka's Killing Field & Bahrain : Shouting in the Dark இவற்றில் எதை BAFTA விருதுக்கு எதை பரிந்துரைப்பீர்கள்? என்பது தான் Radio Times நடத்திய கருத்துக்கணிப்பு.
மொத்தம் 7,783,000 வாக்குகள் இரு திரைப்படங்களுக்கும் கிடைத்தன. இதில் Bahrain : Shouting in the Dark திரைப்படத்திற்கு 63% வாக்குகளும், Sri Lanka's Killing Field க்கு 37% வீத வாக்குகளும் கிடைத்தன.  Radio Times இல் ஒரு கருத்துக்கணிப்புக்கு 7 மில்லியன் பேர் வாக்களித்தது இதுவே முதன்முறை.

ஆனால் இரு படங்களையுமே  Bafta நடுவர் குழு விருதுக்கு தேர்ந்தெடுக்கவில்லை. நாம் நடத்துவது வாக்கெடுப்பு மட்டுமே. நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது என Radio Times முன்னரே அறிவித்திருந்தது.

இலங்கை, பஹ்ரேய்ன் இரு நாடுகளாலும் BAFTA விற்கு ஏற்படுத்தப்பட்ட அரசியல் அழுத்தங்கள் மற்றும் இரு திரைப்படங்களுக்கும் இருந்த எதிர் விமர்சனங்கள் தீர்ப்பில் செல்வாக்கு செலுத்தியிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. அப்படியாயின் விருதை வென்ற திரைப்படமெது?

பிபிசியின் Panroma வகை புலனாய்வு திரைப்படமான Undercover Care - The Abuse Exposed

பிரிட்டனின் விண்டர்போர்னே நகரில் உள்ள மருத்துவமனையில் கடுமையாக உடல் ஊனமுற்ற மற்றும் மிக பலவீனமான நோயாளிகள் பராமரிக்கப்பட்டு வருகின்றனர். இங்கு மருத்துவ பணியாளர்களாக சேவை செய்பவர்களினால் இந்நோயாளிகள் எவ்வாறு துன்புறுத்தப்படுகிறார்கள் என்பதனை, இரகசிய கமெராக்கள் மூலம் படம்பிடித்து உருவாக்கப்பட்ட டாக்குமெண்டரி இது.

மேற்குறிப்பிட்ட மூன்று ஆவணத்திரைப்படங்களும் BAFTA விருதுகளுக்காக பரிந்துரைக்கப்பட்டவை என்பதற்காக மாத்திரமல்ல. மனிதத்தை நேசிக்கும் எவரும் ஒருமுறையேனும் பார்த்திருக்க வேண்டியவை என்ற ரீதியில் இங்கு மீண்டும் பதிவிடுகிறோம்.

(எச்சரிக்கை : மூன்று திரைப்படங்களுமே இதயம் பலவீனமானவர்களுக்கு, 18 வயதுக்குட்பட்டோருக்கு, கர்ப்பிணி பெண்களுக்கு உகந்ததல்ல)

Sri Lanka's Killing Field


  Bahrain : Shouting in the Dark


 Panorama Undercover Care, The Abuse Exposed
                                                                                                                      - ஸாரா
திங்கள், 4 ஜூன், 2012

உலகை உலுக்கும் குறைப்பிரசவ குழந்தைகள் 


ஐக்கிய நாடுகள் சபையின் 40க்கும் மேலான அமைப்புகள், பல்கலைக்கழகங்கள், தன்னார்வ அமைப்புகள் இணைந்து, குறைப் பிரசவக் குழந்தைகள் குறித்து உலக அளவில் அறிக்கை ஒன்றினைத் தயாரித்துள்ளன. அதில் இந்தியா முன்னணியில் இருப்பதாக அதிர்ச்சி செய்தி ஒன்றினை அவ்வறிக்கை குறிப்பிடுகிறது. குறைப்பிரசவக் குழந்தைகள் பற்றி கணக்கெடுக்கப்பட்ட 199 நாடுகளில் இந்தியா 36வது இடத்தில் இருக்கிறது.
இந்தியாவில் பிறக்கும் 2 கோடியே 70 லட்சம் குழந்தைகளில் (2010-ம் ஆண்டில்) 36 லட்சம் குழந்தைகள் குறைப் பிரசவத்தில் பிறக்கின்றன. அதில் 3 லட்சத்து 36 ஆயிரம் குழந்தைகளில் 64 இறக்கின்றனவாம். பிறக்கும் மொத்த குழந்தைகளில் பாதி குழந்தைகள் குறைப்பிரசவத்தாலேயே இறக்கின்றன என்கிறது அறிக்கை. “Born too soon” (சீக்கிரம் நிகழும் பிறப்பு) என்ற தலைப்பிட்ட இந்த அறிக்கையை Save the Children என்ற அமைப்பு வெளியிட்டிருக்கிறது. நிமோனியா என்கிற நுரையீரல் சுழற்சி நோய்க்குப் பிறகு, அதிகப்படியான மரணங்கள் இந்த குறைப் பிரசவத்தால் நிகழ்கின்றனவாம். உலக அளவில், வருடம் தோறும் 1 கோடியே 50 லட்சம் குழந்தைகள் குறைப் பிரசவத்தால் இறக்கின்றன. இது விகிதாச்சாரத்தில் 10க்கு 1 என்பதைக் காட்டிலும் கூடுலாகும். இதில் 10 லட்சம் குழந்தைகள் பிறந்த உடனே இறந்துவிடுகிறதாம். உயிர் பிழைக்கும் லட்சக்கணக்கான குழந்தைகள், உடல், நரம்பு குறைபாடுகளும், கல்வி பெற முடியாத குறைபாடும் கொண்டு குடும்பங்களில் பெரும் சுமையாக இருக்கின்றன.
உலக அளவில் கட்டணமில்லா மருத்துவமும் குறைப்பிரசவ தடுப்பும் கிடைக்குமானால் நான்கில் மூன்று பங்கு குறைப் பிரசவத்தைத் தடுக்க முடியும் என்கின்றனர் நிபுணர்கள். குறைப்பிரசவம் என்பது கரு பிடித்து 37 வாரங்களிலோ அல்லது அதற்குக் குறைவான நாட்களிலோ பிறக்கும் குழந்தை என்று கூறும் உலக சுகாதார நிறுவனத்தின் (WHO) நிரந்தரமான அளவீட்டினையே Save the Children அமைப்பின் நிபுணர்கள் குழுவும் எடுத்துக் கொண்டுள்ளது.
உடல் முதிர்ச்சியற்ற திருமணம் மற்றும் கர்ப்பம், கருவுற்ற பெண்μக்குத் தேவையான ஊட்டம் கிட்டாமை, தாய் போதுமான உடல்நலமில்லாமல் இருத்தல் ஆகியன குறைப் பிரசவத்துக்கும்; தாய் மற்றும் குழந்தையின் உயிருக்கே சிக்கல் ஏற்படுவதற்கும் காரணம் என்கிறார் Save the Children-க்கான இந்தியப் பிரிவின் இயக்குனர் தாமஸ் சாண்டி.
அனைத்துக் குழந்தைகளுமே சிக்கலான சூழலில்தான் பிறக்கின்றன என்று கூறும் ஐ.நா. பொதுச் செயலாளர் பான்-கி-மூன், இந்த சிக்கல் குறைப்பிரசவ குழந்தைகளுக்கு நிச்சயம் பெரிய சவாலாக இருப்பதாக ஒப்புக்கொள்கிறார். இந்த அறிக்கையின் முன்னுரையை மூன் தான் எழுதியிருக்கிறார். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான உலகப் பார்வை (Global Strategy for Women and Children) எனும் அவரது திட்டத்தின் ஒரு பகுதி குறைப்பிரசவ பிறப்பு மற்றும் சிறப்பைத் தடுப்பதுதான் என்கிறார். வடக்கு ஆப்ரிக்கா மற்றும் தெற்கு ஆசியாவில்தான் 60 சதவீதத்துக்கும் கூடுதலாக குறைப் பிரசவங்கள் நிகழ்கின்றதாம். பிரேசில், அமெரிக்கா, இந்தியா, நைஜீரியா உள்ளிட்ட 10 நாடுகளில் குறைப்பிரசவம் பெரிய அளவிலான பிரச்சனை என சொல்லப்படுகிறது. 15 சதவீதத்துக்கும் கூடுதலான குறைப் பிரசவம் கொண்ட 11 நாடுகளில் இரண்டு நாடுகள் சகாரா பகுதியில் அமைந்துள்ள ஆப்ரிக்க நாடுகளாகும். உயர் வருமானம் கொண்ட நாடுகளில் தோராயமாக 9 சதவீதமும், ஏழ்மை நாடுகளில் தோராயமாக 12 சதவீதமும் குறைப்பிரசவத்தில் குழந்தைகள் பிறக்கின்றன.
குறைப் பிரசவத்துக்கான எண்ணற்ற காரணங்கள் கண்டறியப்பட்டுள்ளன. கருவுற்ற பெண் எடை குறைவாகவோ, கூடுதலாகவோ இருப்பது, சர்க்கரை குறைபாடு காணப்படுவது, உயரழுத்தம் காணப்படுவது, புகைப்பது, நோய் தொற்று இருப்பது, திருமண வயது 17க்கு கீழும், 40க்கு மேலும் இருப்பது, மரபியல் குறைபாடு காணப்படுவது, ஒன்றுக்கு மேற்பட்ட கருவைக் கொண்டிருப்பது, இரண்டு குழந்தைக்கு இடையில் போதிய இடைவெளியின்றி கருவுறுவது ஆகிய காரணங்கள் குறைப் பிரசவத்துக்கு காரணம் என்கின்றனர் நிபுணர்கள். கர்ப்பிணிப் பெண்களை இக்குறைபாடுகளில் இருந்து முழுவதுமாக பராமரித்தால் குறைப்பிரசவம் ஏற்படுவதைத் தடுக்கலாம்.


பெண்கள் அணியும் துப்பட்டா கழுத்தை மறைக்கவா?


சென்னை நகரில் ஆண்களுக்கு இணையாக பெண்கள் தென்படுகிறார்கள். பணி, படிப்பு நிமித்தமாக சாலைகள் முழுக்க பெண்கள் நின்றபடி, நடந்தபடி, வாகனங்களில் பயணித்தபடி இருக்கிறார்கள். இது, இரவு வரை கூட நீளுகிறது. இளம்பெண்கள் பெரும்பாலும் அழகாக தெரிகிறார்கள் என்பதைவிட, கவர்ச்சியாக தங்களைத் தெரிவிக்கிறார்கள்.
.
வாலிப நண்பனோடு டூவீலரில் பயணிக்கும் பெரும்பாலான இளம்பெண்களின் பயணம் இப்படியாகத்தான் இருக்கிறது…  ‘பின்னால் அமர்ந்திருக்கும் இளம்பெண் தனது மார்ப்பை வாகனம் ஓட்டும் ஆணின் முதுகில் நெருக்கி அழுத்தாமல் பயணிப்பதில்லை.’ அவ்வாறு பயணிக்கும் பெண்களில் பலர் இறுக்கமான ஜீன்ஸ், டிசார்ட் அணிகிறார்கள். ஆணை இறுக்கி அனைக்கும் அப்பெண்ணின் ஜீன்ஸ் கீழ் இறங்கி, அவளது பிட்டத்தை அப்படியே நிர்வாணப்படுத்துகிறது. பின்னால் வண்டி ஓட்டும் வாகனக்காரர்களில் சிலர் சங்கப்படுகிறார்கள். பலர் டிராபிக் டென்ஷனில் ‘ இது சின்ன ரிலாக்ஸ்’ என கருதுகிறார்கள்.
amutha ias
பழையகாலம் மாதிரி பாவடை தாவணி வேண்டாம். புடவையும் பணிச் சூழலுக்கு வசதியான உடையல்ல. சுடிதார், சல்வார் கமீசு சரியான உடைதான். ஜீன்ஸ், பேண்ட், சட்டை, டீசார்ட் தாராளமாக அணியட்டும். இதெல்லாம் பெண்களுக்கு வசதியானதே. நவீன உடைகளை வரவேற்போம். ஆனால் அவ்வுடைகளை அழகாக அணியலாமே. கவர்ச்சியாக அணிய வேண்டிய அவசியமென்ன? நோக்கமென்ன? அதுதான் விளங்கவில்லை.
.
முன்பு திரைப்படங்களில் கூட கதாநாயகியாக தோன்றுபவர் அழகாக மட்டுமே காட்சியளிப்பார். கவர்ச்சியாக காட்சியளிக்க தனிப் பாத்திரத்தை உருவாக்குவார்கள். இப்போது கதாநாயகியே கீழிறங்க வேண்டியதாகிவிட்டது. அதுபோல சமூகமும் மாறிவிட்டதா? கவர்ச்சி என்பது ஆபாசத்தின் தொடக்கம். அதன் அளவு எந்த கணம் வேண்டுமானாலும் மாறுபடும். ஆபாச உணர்வால் உந்தப்படும் ஆண்கள் தனது எண்ண உணர்வுகளால் அக்காட்சியை எச்சில் படுத்துகிறான். அண்மையில் அறிவியல் ஆய்வு ஓன்று ஐம்பது வயதுக்கு மேலான ஆண்களுக்கு சாலையில் காணப்படும் இத்தகைய காட்சிகளால் மனதில் ஏக்க அழுத்தம் ஏற்பட்டு ஒருவித கேன்சருக்கு வழிவகுக்கிறது எனக் கூறுகிறது. பாவ புண்ணியக்கணக்குகள் படி யோசித்தால் இத்தகைய கவர்ச்சிப் பெண்கள், மன அழுத்தத்திற்கு ஆண்களை ஆளாக்குவதன் மூலம் பாவத்தைச் சிறிதளவேனும் சம்பாதிக்கிறார்கள் என்றே கூறலாம். 
துப்பட்டாவை வைத்து  கழுத்தைமறைக்கிறார்கள்                                                                                                

இருபது ஆண்டுகளுக்கு முன்பு வயதுக்கு வந்த மகளின் உடையை, அவளது தாய் மிக கவனமுடன் கண்காணிப்பாள். மார்பு எடுப்பாக தெரியும்படி உடை உடுத்த அனுமதிக்கமாட்டாள். மாராப்பு விலகினால் எட்டியிருந்தே ஜாடை செய்வாள்.
.
அதற்கு விளக்கம் ஒரு கிராமத்து தாயிடம் இருந்து கேட்டிருக்கிறேன். அத்தாய் சொன்னாள்.   ‘ ‘பலரது கண்பட்டால் பின்னாளில் குழந்தைக்கு தாய்பால் குறைந்துபோகுமின்னு வழிவழியா ஒரு நம்பிக்கை ”என்றாள்.
.
இன்றைய காலத்தில் மாராப்பு என்பதற்கு மரியாதையே இல்லை. சுடிதார், சல்வார் அணிகிறார்கள், மாராப்பு துணியாக பயன்படுத்த வேண்டிய துப்பட்டாவை வைத்து கழுத்தை மறைக்கிறார்கள். மார்பை எடுப்பாக காட்டுகிறார்கள். கழுத்து என்ன மார்பைவிட கவர்ச்சி நிறைந்ததா? புரியவில்லை. மிகச் சிலரே துப்பட்டாவை சரியாக அணிகிறார்கள். அதில் ஒருவர் ஐ.ஏ.எஸ் அதிகாரி அமுதா.
 
இப்பொழுது பெண்கள் வயது வித்தியாசமில்லாமல் லெக்கின்ஸ் எனும் ஒருவகை இறுக்கமான உடை உடுத்துகிறார்கள். உள்ளதை உள்ளபடி இறுக்கிகாட்டும் உடையாக அது அமைந்துள்ளது. இருபது ஆண்டுகளுக்கு முன்பு ஆபாச இரவு நடனம் ஆடுவோர், கரகாட்டம், குறத்தியாட்டம் என்ற பராம்பரிய கலையைத் தவறான முறையில் ஆபாச நடனமாக மாற்றியாடும் பெண்கள் இத்தகைய லெக்கின்ஸை அணிந்திருந்தனர். அந்த உடை இப்போது நவீனப் பெண்களின் உடையாகி வருகிறது. இதனால் அத்தகைய நடனம் ஆடுவோர் அந்த லெக்கின்ஸூம் அணியாமல் தற்போது, ஆட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுவிட்டது போல…
லெக்கின்ஸ் உடை
உடை விஷயம் இப்படி என்றால்… வட இந்திய நவீனப்பெண்கள் வேறு மாதிரி சபதம் செய்கிறார்கள். பூனம் பாண்டே என்றொரு நடிகையாம், கிரிக்கெட்டில் அவள் விரும்பிய அணி ஜெயித்துவிட்டதாம் உடனே நிர்வாண போஸ் தருகிறாள். இன்னொரு நடிகை மேலாடையை மட்டும் அவுக்கிறேன் என்கிறாள். ஆக போட்டி போட்டு ஆடை அவிழ்க்கும் நிகழ்வுகள் வடநாட்டில் தொடங்கிவிட்டது. ஆக அடுத்த பத்தாண்டுகளில் நவீனப் பெண்கள் பிராவும், கால்சட்டையும் மட்டுமே அணிந்த நிலையில், சென்னை சாலைகளில் உலா வரும் வாய்ப்பு தாராளமாக தெரிகிறது.
.
உடை விஷயத்தில் பெண்களை குறித்து எழுதும் அதேவேளையில் ஆண்கள் குறித்து எழுத வேண்டியுள்ளது. அது மிகக்குறிப்பாக ஆலயங்களில் இளம் ஆண் குருக்கள்கள் மேலாடை இன்றி இருப்பது. அதுவும் ஒருவித கவர்ச்சியே. குடுமியில் இருந்து மெல்ல கிராப்புக்கு மாறி வருபவர்கள், உடை விஷயத்திலும் மாற்றம் கொண்டு வரவேண்டும். ஜிப்பா போன்று ஒரு மேலாடை அணிதல் நன்று. அதேபோல் கேரளா, தமிழகம், இலங்கையில் உள்ள சில ஹிந்து ஆலயங்களில் வழிபாட்டுக்குச் செல்லும் ஆண்களைச் சட்டையைக் கழற்ற சொல்கிறார்கள். இதுவும் தவிர்கப்பட வேண்டிய ஓன்றாகும். நான் அத்தகைய ஆலயங்களில் உள்ளே செல்வதை பெரும்பாலும் விரும்புவதில்லை. தவிர்த்துவிடுகிறேன்.