திங்கள், 4 ஜூன், 2012

உ.பி: சிறுபான்மை நலனுக்கு 81% அதிக நிதி ஒதுக்கீடு

உ.பி: சிறுபான்மை நலனுக்கு 81% அதிக நிதி ஒதுக்கீடு

உ.பி: சிறுபான்மை நலனுக்கு 81% அதிக நிதி ஒதுக்கீடு

  

UP increases Minority welfare in budgetஉத்தரபிரதேச மாநிலத்தில் சிறுபான்மையினரின் பெரும்பான்மை ஆதரவைப் பெற்று ஆட்சிக்கு வந்துள்ள சமாஜ்வாதி கட்சி  அகிலேஷ் யாதவ் தலைமை யிலான அரசின் முதல் நிதிநிலை அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. அதில் சிறுபான்மை நலனுக்கான நிதிஉதவி 81 சதவிகிதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, சிறுபான்மையினர் நலனுக்கான தொகை ரூ.2074.11 கோடி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கடந்த வருட நிதியைக் காட்டிலும் சுமார் 81 சதம் அதிகமாகும்.

மதரஸாக்கள்/மக்தப்களுக்கான வளர்ச்சி நிதி ரூ.50 கோடியிலிருந்து ரூ.100 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. பத்தாம்வகுப்பு வரை சிறுபான்மை இன மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகை 342.94 கோடியாகவும், பத்தாம் வகுப்புக்குப் பிந்தைய மேற்படிப்புக்கான கல்வி உதவித்தொகை 130.53 கோடியாகவும் ஒதுக்கப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட சில மாவட்டங்களில் பலகட்ட சிறுபான்மை வளர்ச்சி நிதியாக ரூ.480.44 கோடியும், வறுமைக் கோட்டுக்குக் கீழுள்ள முஸ்லிம் குடும்பங்களில், பத்தாம் வகுப்பு வரை படித்த மாணவிகளுக்கு மேற்படிப்புக்கு அல்லது திருமணத்திற்கென்று உதவித் தொகையாக சுமார் 100 கோடி ரூபாய்களும் ஒதுக்கப்பட்டுள்ளது.
ராம்பூரில் அமைந்துள்ள, அமைச்சர் ஆஸம்கானின் சிந்தையில் உதித்த ஜவஹர் பல்கலைகழகத்திற்காகவும் ரூ. 10 கோடி ரூபாய்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.