வியாழன், 7 ஜூன், 2012



நீதிமன்ற நீதிபதிகளின் கார்களிலும் கறுப்பு நிற ஸ்டிக்கர் அகற்றும் பணி தொடக்கம்







                     நெடுஞ்சாலை போக்குவரத்தின் போது கார் கண்ணாடிகளுக்கு கறுப்பு நிற ஸ்டிக்கர் ஒட்டுவதற்கு தடை விதித்து உச்சநீதிமன்றம் அண்மையில் தீர்ப்பு வழங்கியிருந்தது. இதையடுத்து இப்புதிய நடைமுறை உடனடியாக அமலுக்கு வந்தது.

இந்நிலையில் இத்தீர்ப்பை மதித்து உயர் நீதிமன்ற நீதிபதிகள், மாவட்ட நீதிமன்ற நீதிபதிகள் பயன்படுத்தும் கார்கள் மற்றும் நீதிமன்ற தேவைகளுக்காக பயன்படுத்தப்படும் கார்கள், வாகனங்களில் ஒட்டப்பட்டுள்ள கறுப்பு நிற ஸ்டிக்கரை அகற்ற வேண்டும் என தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால் உத்தரவிட்டார். அந்த உத்தரவின் படி, நீதிபதிகளின் கார்களில் உள்ள கறுப்பு ஸ்டிக்கர்கள் அகற்றும் பணி உயர் நீதிமன்ற வளாகத்தில் நேற்று தொடங்கியுள்ளது. இந்த பணியை தனியார் நிறுவனத்தை சேர்ந்த மூன்று ஊழியர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

உயர் நீதிமன்ற நீதிபதிகள், பதிவாளர்கள் ஆகியோருக்கு 64 கார்கள் உள்ளன. இந்த கார்களில் உள்ள ஸ்டிக்கர்களை அகற்றும் பணி முடிவடைய 4 நாட்கள் வரை ஆகும் என்று கூறப்பட்டது. இதையடுத்து மாவட்ட செசன்சு கோர்ட்டு நீதிபதிகள் பயன்படுத்தும் கார்களில் உள்ள கறுப்பு ஸ்டிக்கர் அகற்றும் பணி தொடங்க உள்ளது.