புதன், 25 ஜூலை, 2012

முஸ்லிம் தொழிலாளரை உயிரோடு கொளுத்தியக் காவல்துறை!

ஹுமாயூன்


                               ஒருகாலத்தில் ஸ்காட்லாந்து யார்டுக்கு இணையானது என்று பேசப்பட்ட தமிழகக் காவல்துறை, பின்னாளில் கற்பழிப்புக்குப் பேர்போனது என்ற புகழைப் பெற்றது. சிதம்பரம் பத்மினி கற்பழிப்பும், வாச்சாத்தியின் ஏழைப் பெண்கள் மீது தமிழகக் காவல்துறை நடத்திய பாலியல் அராஜகமும் தேசிய அளவில் பிரபலமடைந்து காவல்துறையைக் காறித் துப்பவைத்தது.
அண்மையில் காஞ்சி மாவட்டம் கானத்தூரில் காவல்துறை ஒரு ஏழை முஸ்லிம் தொழிலாளியை உயிரோடு கொளுத்திக் கொலை செய்துள்ள செய்தி தமிழகத்தை அதிரவைத்துள்ளது. மேலும், காஞ்சி மாவட்டத்தைக் கொந்தளிப்பில் ஆழ்த்தியுள்ளது.

கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள பனையூரில் வசித்து வந்த சகோதரர் ஹுமா யூனை (வயது 46) கானத்தூரைச் சேர்ந்த சவ்கத் அலி (வயது 48) கொசுவலை பொருத்தும் வேலைக்காக கானத்தூர் கீதா பெருமாள்சாமி என்ற பெண்மணியின் வீட்டிற்கு அழைத்துச் சென்று கொசு வலையைப் பொருத்தியுள்ளார். இந்நிலையில், தன் வீட்டில் 4 கிராம் தங்கக் கம்மலைக் காணவில்லை என்று புகார் செய்தததாகக் கூறி, கானத்தூர் ஜே12 காவல் நிலையத்தைச் சேர்ந்த காவலர்கள் ஹுமாயூனையும், சவ்கத் அலியையும் அழைத்துச் சென்றுள்ளனர்.

சவ்கத் அலியை விசாரித்துவிட்டு அனுப்பி விட்ட காவல்துறை, ஹுமாயூனை இரவு முழுவதும் வைத்து சித்ரவதை செய்துள்ளனர். மிகுந்த மார்க்கப் பற்றும், தன்மான உணர்வும் கொண்டவரான ஹுமாயூன், காவல் நிலையத்தில் இருந்த மண்ணெண்ணெயைத் தன்மீது ஊற்றி தீக்குளித்து விட்டதாக, திரைக்கதை வசனம் எழுதி தினப்பத்திரிகை களுக்குத் தெரிவித்துள்ளது. சம்பவம் குறித்து அறிந்த மாவட்ட தமுமுக நிர்வாகிகள் மற்றும் முன்னாள் நிர்வாகிகள்,தொண்டர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.


மாநிலச் செயலாளர் மீரான் மைதீன் காவல் துறை அதிகாரிகளைக் கேள்விக் கணைகளால் துளைத்தெடுத்த போது, அவர்கள் செய்துள்ள தில்லுமுல்லுகள் அம்பலமாகியுள்ளன.

• கம்மலைக் காணவில்லை என்ற கீதா பெருமாள்சாமியிடம் நள்ளிரவு 1 மணிக்கு புகார் பெற்றது ஏன்?

• காவல் நிலையத்தில் தீப்பெட்டியும், மண்ணெண்ணைக் கேனும் தயாராக இருக்குமா?

• விசாரணைக்கு அழைத்து வரப்பட்டவர் தன்னைக் கொளுத்திக் கொண்டார் என்பதை நம்பமுடியுமா?

• எரிப்பு சம்பவம் நடந்த உடனேயே சம்பந்தப்பட்டவரின் மனைவிக்கும், குடும்பத் தினருக்கும் ஏன் தகவல் தரவில்லை. மறுநாள் காலை 7 மணிக்குத் தகவல் கொடுத்த மர்மம் என்ன-?

- ஆகிய கேள்விகளுக்குத் காவல்துறையிடம் பதிலில்லை. ஹுமாயூன் உடல் வைக்கப் பட்டிருந்த சென்னை கீழ்ப் பாக்கம் மருத்துவமனையில் தென்சென்னை மாவட்ட நிர்வாகிகள் 300க்-கும் மேற் பட்டோர் திரண்டு உடலை வாங்க மறுத்தனர்.

தவறு செய்த காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உயர் அதிகாரிகள் உறுதியளித்த பிறகே உடலைப் பெற்று நல்லடக்கம் செய்துள்ளனர். தவறு செய்த காவலர்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டிருப்பதும், முதலமைச்சர் ஒரு லட்சம் நிவாரணம் தந்து, தவறு செய்த காவலர்களைக் கண்டனம் செய்திருப்பதும், துறை ரீதியான விசாரணையும் - அநியாயமாகப் பறிக்கப்பட்ட அந்த சகோதரனின் உயிரைத் திருப்பித் தருமா?

அவருடைய மன¬வி யாஸ்மின் (35), பிள்ளைகள் மகன் அபூஹுரைரா(17), மகள்கள் ராபியா(16), முபாரக் நிஷா(12) ஆகியோருக்கு யார் நியாயமும், நிவாரணமும் தருவார்கள். குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும், குடும்பத்திற்கு நஷ்ட ஈடாக 10 லட்சமும் தரவேண்டும் என தமுமுக கோரியுள்ளது. காவல்துறையில் உயர்ந்த பண்புடைய நல்லவர்களும் இருக்கிறார்கள். ஆனால், கானத்தூர் காவல் நிலையத்தில் பணியாற்றிய மனித மிருகங்களைக் கடுமையாக தண்டித்துக் களையெடுக்காவிட்டால், காவல்துறை மீது ஏழைகளுக்கு அறவே நம்பிக்கை அற்றுப்போகும் என்பது உறுதி.


மியான்மர் : உலகை உலுக்காத இன்னொரு இனச் சுத்திகரிப்பு

மியான்மர் தேச, வங்காளி மொழி பேசும் ரோஹிங்கியா இன மக்கள், இனச்சுத்திகரிப்பு செய்யப்படும் செய்தி, சமூக வலைத்தளங்களில் பரவிக் கொண்டிருந்தது. "20000 க்கும் அதிகமான ரோஹிங்கியா வங்காளிகள் இனப்படுகொலை செய்யப் பட்டதாகவும், சர்வதேச ஊடகங்கள் மௌனம் சாதிப்பதாகவும்" அந்தத் தகவல்கள் தெரிவித்தன.

பொதுவாகவே சர்வதேச ஊடகங்கள், மேற்கத்திய நலன்களுக்கு எதிரான நாடொன்றின் பிரச்சினை என்றால் மட்டுமே கவனம் செலுத்துவதுண்டு. நோபல் பரிசு வென்ற ஆயுங் சங் சுகியின் பர்மாவில் என்ன நடக்கின்றது என்று அவர்கள் விசாரிக்கப் போவதில்லை. அதற்குப் பதிலாக, சிரியாவில் நடக்கும் உள்நாட்டுப் போர் அவர்களுக்கு முக்கியமாகத் தெரிகின்றது. மியான்மரின், பங்களாதேச எல்லையோர மாநிலமான அரகானில் வாழும் வங்காளி மொழி பேசும் மக்கள் இனச்சுத்திகரிப்பு செய்யப்படுவது இதுவே முதல் தடவை அல்ல. அங்கே ஏற்கனவே பல தடவைகள் இனக்கலவரங்கள் நடந்துள்ளன. சுமார் ஒரு மில்லியன் சனத்தொகையை மட்டுமே கொண்ட, மிகச் சிறுபான்மை இனமான ரோஹிங்கியா வங்காளிகள் கடந்த பத்தாண்டுகளாகவே பெருமளவில் வெளியேறிக் கொண்டிருக்கின்றனர். அந்த மக்கள் தாமாகவே விரும்பி வெளியேறினாலும், பலவந்தமாக வெளியேற்றப் பட்டாலும், இனச் சுத்திகரிப்பாகவே கருதப்பட வேண்டும். இதனை நிரூபிக்கும் காரணிகளை பின்னர் பார்ப்போம்.
இந்தியா மட்டுமல்ல, பர்மாவும் ஒரு காலத்தில் பிரிட்டிஷ் காலனியாகவிருந்தது. அதனால், நவீன தெற்காசிய தேசங்களின் எல்லைகள்  பிரிக்கப்பட்ட காலத்தில், வங்காள இனத்தவர்கள் பர்மா (இன்று:மியான்மர்) என்ற புதிய தேசத்திற்குள் சிக்கிக் கொண்டதாகவே பலரும் கருதுகின்றனர். வங்காளிகள் தொழில் தேடி, அல்லது வணிகம் செய்வதற்காக பர்மா வந்து தங்கி விட்டதாகவும், அதனால் அவர்கள் பர்மிய குடிமக்களாக கருதப்பட முடியாதென்றும் ஒரு வாதம் முன்வைக்கப் படுகின்றது.
"தேசிய அரசுகளின் உருவாக்கம், இருபதாம் நூற்றாண்டில் ஏற்பட்ட மாற்றம்," என்பதை நாம் அடிக்கடி மறந்து விடுகின்றோம். அதற்கு முன்னர், ஒருவர் எந்த தேசிய இனத்தை சேர்ந்தவர் என்பது யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. ஏனெனில், "தேசியம்"என்ற வார்த்தையே அன்றைய மக்களுக்கு தெரிந்திருக்கவில்லை. ரோஹிங்கிய வங்காளிகள், அரேபிய வணிகர்களின் வழித்தோன்றல்கள், மொகலாய சாம்ராஜ்யத்தின் எஞ்சிய பகுதியை சேர்ந்தவர்கள் என்றெல்லாம் உரிமை கோரப்படுகின்றது. இந்த உரிமை கோரல்கள் பெரும்பாலும், "ரோஹிங்கிய தேசியவாதிகள்" மத்தியில் இருந்து தான் எழுகின்றது. "பூர்வீக தாயக பூமி" க்கு உரிமை கோரும், தேசியவாத கதையாடலுக்கு அப்பால், உண்மையை அலசுவது அவசியம். மொகலாயர்களின் ஆட்சிக் காலத்தில், பர்மிய மன்னனுடன் நடந்த போரில், சிட்டகாங் மலைப்பகுதி கைப்பற்றப் பட்டது. (அது இன்றைக்கும், வங்காளதேசத்தின் ஒரு பகுதியாக உள்ளது.) அதற்கப்பால், மொகலாய சாம்ராஜ்யம் விஸ்தரிக்கப் பட்டதாக வரலாற்றில் குறிப்பிடப் படவில்லை.
ரோஹிங்கியா வங்காளிகள், பங்களாதேஷ் வங்காளிகளிடம் இருந்து மாறுபட்ட வட்டார மொழியை பேசுகின்றனர். அனேகமாக, மொகலாய சாம்ராஜ்ய விஸ்தரிப்பு காரணமாக புலம்பெயர்ந்த ஒரு பகுதியினர் பர்மாவில் தங்கியிருக்க வாய்ப்புண்டு. அதே நேரம், அரேபிய வணிகர்களின் வழித்தோன்றல்களும் பர்மிய பெண்களை மணந்து, அங்கேயே தங்கியிருக்கலாம். ஐரோப்பிய காலனிய காலகட்டத்திற்கு முன்னர், தெற்காசிய, தென் கிழக்காசிய நாடுகளுடனான அரேபியரின் வர்த்தகத் தொடர்பு நன்கு அறியப்பட்டது தான். ஆகவே, மேற்குறிப்பிட்ட பிரிவினர் எல்லாம் கலந்து ரோஹிங்கியா வங்காளிகளாக மாறியிருக்கலாம்.


மேலும், பிரிட்டிஷ் காலனிய ஆட்சியாளர்கள், "தேசிய எல்லைகளை சரி சமமாக பிரிப்பதில் கெட்டிக்காரர்கள்". தமது முன்னாள் காலனிகளில், தேசிய இனப்பிரச்சினைகள் என்றைக்கும் தீரக் கூடாது என்ற தீர்க்க தரிசனத்துடன், ஒரே தேசிய இனத்தை பிரித்து எல்லைக்கோடு வரைவதில் கெட்டிக்காரர்கள். ஆகவே, பிற்காலத்தில் பிரிக்கப்பட்ட சர்வதேச எல்லைகளின் காரணமாக, வங்காள மொழி பேசும் இனத்தவர்கள் பர்மா என்ற புதிய தேசத்திற்குள் அடங்கி இருப்பார்கள். ஒரு தேசிய இனம், தனது பூர்வீக தாயக பூமிக்கு உரிமை கோருவதை விட, அந்த இனத்தின் இருப்பை பாதுகாப்பதே முக்கியமானது. ஆகையினால், காலனிய ஆட்சியில் இருந்து சுதந்திரமடைந்த பர்மாவின் சிறுபான்மை இனமான ரோஹிங்கியா வங்காளிகள், ஒரு தேசிய இனமாக அங்கீகரிக்கப் பட வேண்டியவர்கள்.
உலகில் சில இனங்கள், "நாடற்றவர்கள்" என்ற வகைக்குள் அடங்குவார்கள். அதாவது, அவர்களுக்கு எந்த நாட்டின் பிரஜாவுரிமையும் கிடையாது. ஏற்கனவே நமது தமிழ்த் தேசியவாதிகள், "நாடற்றவர்கள்" என்ற சொல்லுக்கு, "தேசிய அரசு அற்றவர்கள்" என்றொரு அர்த்தத்தை பரப்பி வைத்திருக்கின்றனர். ஆனால், சர்வதேச சட்டங்கள் புரிந்து கொள்ளும்,  நாடற்றவர் என்ற சொல்லின் அர்த்தம் வேறு. உதாரணத்திற்கு, பாலஸ்தீன மக்களுக்கு, இஸ்ரேலோ, அல்லது ஜோர்டானோ குடியுரிமை வழங்கவில்லை. எந்த நாட்டினதும் பிரஜாவுரிமை இல்லாதபடியால், பாஸ்போர்ட் எடுக்க முடியாது. அதனால், அவர்கள் வாழும் பிரதேசத்தை விட்டு வெளியேற முடியாது.


ஐ.நா., பாலஸ்தீனர்களை நாடற்றவர்களாக அங்கீகரித்துள்ளதால், ஒரு சில தீர்வுகள் காணப்பட்டன. வெளிநாடு செல்ல வேண்டிய தேவையுள்ளவர்கள், இராஜதந்திர கடவுச்சீட்டுடன் பிரயாணம் செய்ய முடிகின்றது. ஆனால், ரோஹிங்கியா வங்காளிகளின் நிலைமை வேறு. ஐ.நா., அல்லது சர்வதேச நாடுகள் எதுவும், அவர்களை ஒரு தேசிய இனமாக அங்கீகரிக்கவில்லை. பர்மிய அரசின் நிலைப்பாட்டை சொல்லத் தேவையில்லை. மேற்கத்திய நாடுகளினால் "கணவாட்டி" என்று மதிக்கப்படும் அவுங் சங் சுகி கூட, ரோஹிங்கிய வங்காளிகளை வெளிநாட்டு குடியேறிகளாக தான் கருதுகின்றார். இனவெறிக் காடையரினால், அப்பாவி வங்காளிகள் கொல்லப்பட்டதை கண்டித்து ஒரு வார்த்தை பேசவில்லை. ரோஹிங்கியா வங்காளிகளும், சமமான மனிதர்களாக மதிக்கப் பட வேண்டும் என்பதை ஒரு கணம் நினைத்துப் பார்க்கவில்லை.
பர்மாவில் இராணுவ சர்வாதிகார ஆட்சி நடத்திய ஜெனரல் நீ வின், 1982 ம் ஆண்டு, ரோஹிங்கிய வங்காளிகளின் குடியுரிமையை பறித்த பின்னர் தான் அவர்களது அவலம் ஆரம்பமாகியது. இன்றைக்கு, ஜனநாயக தேர்தல் மூலம் தெரிவு செய்யப்பட்ட அவுங் சங் சுகி கூட, பறிக்கப்பட்ட குடியுரிமையை திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று நினைக்கவில்லை. பர்மிய இராணுவ சர்வாதிகாரத்தை எதிர்த்து போராடிய, ஜனநாயகப் போராளிகள் கூட, "வங்காளிகள் பங்களாதேஷுக்கு  திரும்பிச் செல்ல வேண்டும்" என்று பேசி வருகின்றனர். இவர்களே இப்படிப் பேசினால், தீவிர வலதுசாரி தேசியவாதிகளைப் பற்றி சொல்லத் தேவையில்லை. "மியான்மரின் அரசியல் பிரச்சினைகள் எல்லாம் ஒரு நாளைக்கு தீர்ந்து விடும். அதன் பிறகு நாம் ஒன்று பட்டு, (ரோஹிங்கியா) வங்காளிகளை வெளியேற்றுவோம்." என்று இணையத் தளங்களில் பிரச்சாரம் செய்கின்றனர். சில வருடங்களுக்கு முன்னர், மியான்மரின் அனைத்துப் பிரஜைகளும் இராணுவ சர்வாதிகார அடக்குமுறையினால் துன்பப் பட்டார்கள். இப்பொழுது, ஜனநாயக ஆட்சியாளர்களிடம் பொறுப்பை ஒப்படைத்து விட்டு, இராணுவ ஆட்சியாளர்கள் ஒதுங்கிக் கொள்கின்றனர். ஆசிய நாடுகளில், ஜனநாயகம் என்றால், மக்களுக்கு பேரினவாத வெறியை ஊட்டித் தான் ஆட்சி நடத்த வேண்டும் என்பது எழுதப்படாத விதி போலும்.
ஜூன் மாதம், 27 வயது ஒரு ராகின் பௌத்த பெண் ஒருவர் ,  பாலியல் வன்புணர்ச்சிக்கு பின்னர் கொலை செய்யப்பட்டார். இந்தக் குற்றச் செயல் ஒரு பெரும் பிரளயத்தையே உருவாக்கி விட்டுள்ளது. குற்றவாளிகளான மூன்று வங்காள முஸ்லிம்கள் பின்னர் கண்டுபிடிக்கப் பட்டு தண்டிக்கப்பட்டாலும்,ராகின் மக்கள் மத்தியில்,வங்காளி முஸ்லிம்களுக்கு எதிராக இனவெறியூட்டும் பிரச்சாரம் நடந்தது. ஒரு குற்றச் செயலுக்காக, அனைத்து வங்காளிகளையும் பழிவாங்க வேண்டும் என்று கோரும் துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப் பட்டன. வங்காளிகளை குறிக்கும் வசைச் சொல்லான "காலர்கள்" (Kaler - கருப்பர்கள்) என்று குறிப்பிட்டு, "மியான்மரை விட்டு காலர்கள் வெளியேற்றப்பட வேண்டும்" என்று ராகின் மக்களை உசுப்பி விட்டன.ராகின் இன மக்கள், பர்மிய மொழி போன்ற, ஆனால் வித்தியாசமான மொழி ஒன்றைப் பேசுகின்றனர். முன்னொரு காலத்தில் இந்து மதத்தையும், பின்னர் பௌத்த மதத்தையும் பின்பற்றிய திபெத்தோ-இந்திய இன மக்கள். பண்டைய இந்து புராணங்களில் "ராட்சதர்கள்" என்று குறிப்பிடப்பட்டனர். அதிலிருந்து இன்றைய ராகின், அரகான் என்ற சொற்கள் தோன்றின.

ரோஹிங்கியா மக்கள் மத்தியில் வேலை செய்து கொண்டிருந்த,தொண்டு நிறுவனமான  Altsean அனுப்பி வைத்த செய்தி, நிலைமை எவ்வளவு மோசமானது என்று தெரிவிக்கின்றது.
"இது போன்ற மோசமான நிலைமையை, நாம் இதற்கு முன்னர் சந்தித்திருக்கவில்லை. இனப்படுகொலை என்பதைக் குறிக்கும் சர்வதேச சட்டத்தினால் வரையறுக்கப் படக் கூடிய சம்பவங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. ரோஹிங்கியா வங்காளிகள் என்ற இனம், மியான்மரில் அழிந்து கொண்டிருக்கிறது."  - Debbie Stothard , Alternative ASEAN-netwerk for Birma (Altsean)
ஆரம்பத்தில், இரண்டு இனங்களுக்கு இடையிலான இனக்கலவரமாகவே தோன்றியது. கலவரம் ஆரம்பித்த முதலாவது வாரம், இரண்டு பகுதியிலும் 29 பேர் மாண்டனர். 2500 வீடுகள் எரிக்கப்பட்டன. ஒன்பது விகாரைகளும், ஏழு மசூதிகளும் சேதமாக்கப் பட்டன. ஆனால், மிக விரைவிலேயே பௌத்த ராகின்களின் கை ஓங்கியது. மியான்மர் அரசும், இராணுவமும் அவர்களுக்கு பக்கபலமாக நின்றன. நிலைமையை கட்டுப்படுத்துவதாக கூறிக்கொண்டு, இராணுவம் ஊரடங்குச் சட்டம் பிறப்பித்தது. ஆனால், அது வங்காளிகளை வீட்டுக்குள் முடங்க வைக்கும் சதித் திட்டம் என்பது பின்னர் தெளிவானது. வங்காளிகளை வேட்டையாடிய, ராகின் இனவெறிக் காடையர்களை ஊரடங்குச் சட்டம் ஒன்றும் செய்யவில்லை. பல வீடுகளில், வங்காளிகளின் பிணங்கள் மட்டுமே கிடந்தன. அங்கே ஒரு திட்டமிட்ட இனப்படுகொலை நடந்து கொண்டிருந்தது. பொலிசும், இராணுவமும் அதற்கு ஒத்துழைத்தன.


"பௌத்த பிக்குகள் கை காட்டிய திசையில், வங்காளிகள் கொன்று குவிக்கப்பட்டதாக" வந்த செய்தியை ஊர்ஜிதப் படுத்த முடியவில்லை. பௌத்த பிக்குகளும் நேரடியாக வன்முறையில் ஈடுபட்டிருக்கிறார்கள்.  மொத்தம் எத்தனை வங்காளிகள் படுகொலை செய்யப்பட்டனர் என்பது யாருக்கும் தெரியாது. சுயாதீனமான ஊடகங்கள், 500 க்கும் 1000 க்கும் இடையில் கணக்குச் சொல்கின்றன. புலம்பெயர்ந்த ரோஹிங்கியா தேசியவாத ஆர்வலர்கள் 20000 பேர் கொல்லப்பட்டதாக கூறுகின்றனர். அது ஒரு மிகைப்படுத்தப் பட்ட எண்ணிக்கையாகவும் இருக்கலாம். உலகில் ஒவ்வொரு தேசிய இனமும், தமது இனத்தவர்கள் பாதிக்கப் படும் பொழுது மிகைப் படுத்திக் கூறுவது வழக்கம். அதனாலும், சர்வதேச ஊடகங்கள் அங்கு நடக்கும் இனப்படுகொலையை புறக்கணித்திருக்கலாம். இரண்டொரு வருடங்களுக்குப் பின்னர், ஐ.நா. விசாரணைக் குழு ஒன்றை நியமித்த பின்னர் தான் அதை எல்லாம் ஒத்துக் கொள்வார்கள் போலும். ஈழத்தில், முள்ளிவாய்க்காலில் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்ட பொழுதும் இதே போன்ற நிலைமை காணப்பட்டது.
வங்காள இன மக்கள் வாழும் அரகான் மாநிலப் பிரதேசம், இராணுவத்தால் உயர் பாதுகாப்பு வலையமாக பிரகடனப் படுத்தப் பட்டுள்ளது. வங்காளிகளின் பூர்வீக பிரதேசங்கள் அபகரிக்கப்பட்டு, அங்கே பௌத்த-பர்மியர்கள் குடியேற்றப் படுகின்றனர். ரோஹிங்கியா வங்காளிகள், இராணுவத்தினரால் கட்டாய வேலை வாங்கப் படுகின்றனர். பாதைகள் செப்பனிடவும், பாலங்கள் போடவும், வேறு பல கட்டுமானப் பணிகளிலும், வங்காளி அடிமை உழைப்பாளிகள் ஈடுபடுத்தப் படுகின்றனர். இராணுவத்தினரால்  வங்காளிப் பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்படுவதும் அடிக்கடி நடக்கிறது.


ரோஹிங்கியா வங்காளிகளுக்கு குடியுரிமை இல்லாத படியால், அவர்களுக்கு அடிப்படை மனித உரிமைகள் எதுவும் கிடையாது. உயர்கல்வி கற்க முடியாது. ஒரு நிறுவனத்தில் பதவி வகிக்க முடியாது. வர்த்தகம் செய்ய முடியாது. இவை எல்லாவற்றையும் விட, திருமணம் செய்வதற்கு கூட இராணுவ உயர் அதிகாரிகளின் அனுமதி பெற வேண்டும் என்பது கொடுமையிலும் கொடுமை. திருமணம் செய்ய விரும்பும் வங்காளிகள் எல்லைக்காவல் படை அலுவலகம் உட்பட, நான்கு இடங்களில் அனுமதிப் பத்திரம் பெற வேண்டும். அது கிடைப்பது இலகுவானதல்ல. திருமணம் செய்யாமல், ஒரு ஆணும், பெண்ணும் சேர்ந்து வாழ்வது குற்றமாகும். ஒரு இளம்பெண் அவ்வாறு சேர்ந்து வாழ்ந்து கர்ப்பமடைந்த பின்னர் தெரிய வந்ததால், அவர்கள் வீட்டில் இருந்த கால்நடைகளையும், பிற சொத்துகளையும் இராணுவத்தினர் அபகரித்து சென்று விட்டனர்.
கடந்த பத்தாண்டுகளாகவே, ரோஹிங்கியா வங்காளிகள், மியான்மரை விட்டு வெளியேறி வருகின்றனர். குறைந்தது மூன்று இலட்சம் பேராவது புலம்பெயர்ந்து வாழ்கின்றனர். பெருந்தொகை அகதிகள், அயல்நாடான ஒரே மொழி பேசும் பங்களாதேஷுக்கு சென்றுள்ளனர். மியான்மர்-பங்களாதேஷ் எல்லை மூடப்பட்டுள்ளது. எல்லையை ஒரு ஆறு பிரிக்கின்றது. அகதிகள், சிறு எண்ணிக்கையில் வள்ளங்களில் எல்லை தாண்டுகின்றனர். பங்களாதேஷிலும் அவர்களுக்கு வரவேற்பில்லை.


1996 ம் ஆண்டு நடந்த இனக்கலவரத்தினால் பாதிக்கப்பட்ட இரண்டு இலட்சம் ரோஹிங்கியா பங்களாதேஷில் தங்கி இருந்தனர். சில வருடங்களுக்குப் பின்னர், பங்களாதேஷ் அரசு அவர்களை மியான்மருக்கு திருப்பி அனுப்பியது. இப்பொழுதும் தஞ்சம் கோரி வரும் ரோஹிங்கியா அகதிகளை, பங்களாதேஷ் எல்லைக் காவல் படை தடுத்து திருப்பி அனுப்புகிறது. அவர்களுக்கு தஞ்சமளிக்க வேண்டாம் என்று எல்லையோர கிராம மக்கள் அறிவுறுத்தப் படுகின்றனர். பங்களாதேஷ் மக்களில் ஒரு பகுதியினர் கூட, ரோஹிங்கியா அகதிகளை வெறுக்கின்றனர். மியான்மரில் வங்காளி சிறுபான்மையினர் அனுபவிக்கும் கொடுமைகளைப் பற்றி, பங்களாதேஷ் மக்கள் அதிகமாக கேள்விப் பட்டிருப்பார்கள். ஈழப் பிரச்சினையை, தமிழக இனவாதக் குழுக்கள் எப்படிக் கையாளுகின்றனவோ, அதே போன்று தான் பங்களாதேஷை சேர்ந்த இஸ்லாமிய மதவாதக் குழுக்கள் நடந்து கொள்கின்றன.
வதந்திகள், திரிபுபடுத்தல், இவற்றை தவிர்த்து விட்டு, உண்மையை கண்டறிவது கடினமான பணியாகும். பல சமயங்களில், பலருக்கு உண்மை அறிவதில் ஆர்வம் இருப்பதில்லை. படுகொலை செய்யப்பட்ட ரோஹிங்கிய வங்காளிகளின் எண்ணிக்கை 20000 க்கும் குறைவாக இருக்கலாம். பங்களாதேஷுக்கு அகதியாக சென்றவர்களின் எண்ணிக்கையையும்  சேர்த்து, படுகொலையானவர்கள் என்று கூறி இருக்கலாம். ஆனால், எது சரி? அதை எப்படி உறுதிப்படுத்துவது? ரோஹிங்கியா மக்களின் இனப்படுகொலை பற்றி, பாகிஸ்தானை மையமாகக் கொண்டியங்கும் அமைப்புகள் மிகப் படுத்தப்பட்ட பிரச்சாரம் செய்வதாக ஒரு குற்றச்சாட்டு எழுந்தது.பாகிஸ்தான் மட்டுமல்ல, வளைகுடா அரபு நாடுகள், பிரிட்டனில் இருந்து இந்த பிரச்சார வலைப்பின்னல் இயங்கிக் கொண்டிருக்கிறது.


புலம்பெயர்ந்த ரோஹிங்கியா வங்காளிகள், பங்களாதேஷ் இஸ்லாமியவாதிகள், மற்றும் பன்னாட்டு இஸ்லாமிய -சர்வதேசியவாதிகள், இதனை ஒரு "முஸ்லிம் இனப்படுகொலையாக" சித்தரித்து, சர்வதேச அளவில் போராடிக் கொண்டிருக்கின்றனர். அவர்களது அணுகுமுறை, தமிழக மற்றும் புலம்பெயர்ந்த தமிழ் உணர்வாளர்களின் போராட்ட  முறையை பெரிதும் ஒத்திருக்கின்றது. இனவாதம், மதவாதம் முக்கியமாக கருதப்படும் இன்றைய உலகில், ஒரு பிரச்சினை பல மாறுபட்ட பரிணாமங்களை அடைகின்றது. ரோஹிங்கியா வங்காளிகளும், மியான்மார், பங்களாதேஷுக்கு இடையிலான சர்வதேச முரண்பாடாக மாற்றமடைகின்றது. ஆயிரம் வருடங்களுக்கு முந்திய மதப்போர் வரலாற்றின் தொடர்ச்சியாக இதனை மாற்ற எத்தனிக்கின்றனர். பர்மாவுக்கும், பங்களாதேஷுக்கும் இடையிலான மத முரண்பாடு பற்றி, வேறொரு கட்டுரையில் பார்ப்போம்.

-http://kalaiy.blogspot.com/

நில வளங்களோடு நிலத்தடி நீரும் இனி அரசின் கட்டுப்பாட்டில் வரும் : பிரதமர் மன்மோகன் சிங்



                       வெகுவாக உறிஞ்சப்படும் நிலத்தடி நீரால், இந்தியாவின் நீராதாரம் பாதிக்கப் பட்டுவிடும் அபாயம் இருப்பதாக எச்சரித்துள்ள பிரதமர் மன்மோகன் சிங்,
இதை தடுக்க இனி நிலத்தடி நீர் அரசின் கட்டுப்பாட்டில் வரும் என்று அறிவித்திருக்கிறார்.

உள்கட்டமைப்பு வசதிகளுக்கு என்று வெகுவாக நிலத்தடி நீர் உறிஞ்சப் படுவதால் இந்நிலைமை தோன்றியுள்ளதாக கூறியுள்ள அவர் நிலக்கரி, தாதுப் பொருட்கள் போன்ற நிலவளங்கள் மத்திய அரசின் கீழ் உள்ளது போல, நீராதாரமும் இனி அரசின் கீழ் கொண்டு வரப்படும் என்று தெரிவித்தார்.

இதற்கு இந்திய அரசியல் சாசன சட்டத்தின் கீழ், 252 வது சட்டப் பிரிவில் சில திருத்தங்கள் கொண்டுவரப் பட்டு, நடை முறைக்கு கொண்டுவரப்படவிருப்பதாகவும், அதன்படி, நிலத்தடி நீராதாரம் அந்தந்த மாநில அரசுகளின் கீழ் இயங்கும் என்றும் தெரிய வருகிறது.
 
வெகுவாக உறிஞ்சப்படும் நிலத்தடி நீரால், இந்தியாவின் நீராதாரம் பாதிக்கப் பட்டுவிடும் அபாயம் இருப்பதாக எச்சரித்துள்ள பிரதமர் மன்மோகன் சிங், இதை தடுக்க இனி நிலத்தடி நீர் அரசின் கட்டுப்பாட்டில் வரும் என்று அறிவித்திருக்கிறார்.


-4tamilmedia

தமிழகத்திலும் மாணவனை சிறுநீர் குடிக்க செய்த விவகாரம்



                         பெரம்பலூர் மாவட்டம் அகரம்சிகூரில் உள்ள பள்ளியில் படிக்கும் மாணவன் பரத் ராஜை, ஆசிரியர்கள் சிறுநீர் குடிக்க வைத்த சம்பவம் அங்குள்ள மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூரிலிருந்து பெரம்பலூர் மாவட்டம் அகரம்சிகூரில் விடுதியில் தங்கிப் படிக்கும் மாணவன் பரத்ராஜ். விடுதியில் தங்கியிருந்த போது மாணவன் சிறுநீர்கழிக்க அனுமதி கேட்டதாகவும் அனுமதி வழங்க மறுத்த ஆசிரியர்கள் மூன்று பேர் சேர்ந்து மாணவனை பிரம்பால் அடித்திருக்கிறார்கள். மேலும் உனக்கு மட்டும் எப்படி அடிக்கடி சிறுநீர் வரும் என்று கேலியும் பேசியிருக்கிறார்கள். பின்னர் உச்சகட்டமாக மாணவனின் சிறுநீரை மாணவனையே பிடிக்க சொல்லி அதை குடிக்கவும் சொல்லியிருக்கிறார்கள்.

பயத்தில் ஆசிரியர் சொல்லியதை அப்படியே செய்ய எண்ணி தான் சிறுநீரைக் குடித்து விட்டதாக சிறுவன் பரத்ராஜ் சொல்லியிருக்கிறான். ஆசிரியர்கள் பிரம்பால் அடித்ததில் காயம் ஏற்பட்டு தற்போது மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டிருக்கிறான் பரத்ராஜ். மேலும் சிறுவனை சிறுநீர் குடிக்க செய்த ஆசிரியர்கள் மூன்று பெரும் இடைக்காலப் பணிநீக்கம் செய்யப் பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் அம்மாணவன் ஏற்கனவே புகையிலை பாவிக்கும் பழக்கம் உடையவன் எனவும், பல தடவை அதற்காக கண்டிக்கப்படிருந்தான் எனவும் ஆசிரியர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

இதேபோல சென்றவாரம் மேற்கு வங்கத்தில் விடுதியில் தங்கிப் படித்து வந்த சிறுமியை விடுதி காப்பாளர் சிறுநீர் குடிக்க வைத்த சம்பவம் இந்தியாவில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத் தக்கது.

-4tamilmedia

மீண்டும் 1000 ரூபாய் நாணயத்தைப் புழக்கத்தில் விட மத்திய ரிசர்வ் வங்கி முடிவு



                       கடந்த 2010 ஆம் ஆண்டு ராஜராஜ சோழன் கட்டிய தஞ்சைப் பெரிய கோயிலின் 1000 மாவது ஆண்டுநிறைவு கொண்டாடப் பட்டது.
அப்போது அந்தநாளின் நினைவாக 1000 ரூபாய் நாணயத்தை மத்திய ரிசர்வ் வங்கி அச்சடித்தது. அது அப்போதைக்கு பொதுமக்களின் தேவைக்கு கொடுத்துவிட்டு பின்னர் நிறுத்தி வைக்கப் பட்டு இப்போது,மீண்டும் அந்த 1000 ரூபாய் நாணயத்தை பொதுமக்களின் புழக்கத்திற்கு விட மத்திய ரிசர்வ் வங்கி முடிவெடுத்திருப்பதாகத் தெரிகிறது.

மத்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட அந்த 1000 ரூபாய் நாணயம் 80% வெள்ளி, 20 % காப்பரால் உருவானது. இந்த நாணயம் ஒன்றின் மதிப்பு 4 ஆயிரத்து 725 ரூபாய் என்று சொல்லப் படுகிறது. நாணயத்தின் ஒருபுறம் தஞ்சைப் பெரிய கோயில், இன்னொரு புறம் ராஜராஜ சோழ மன்னனின் உருவம் மற்றும் கவர்னர் கையொப்பம் என இருக்கும் என்று தெரிகிறது.

இந்த நாணயத்தை பாரம்பரியம், பண்பாடு, கலாச்சாரம் என்று அத்தனையையும் பிரதிபலிக்கும் விஷயமாக அனைவரும் பார்ப்பதால், இதை வாங்கிப் பாதுகாக்க பலரும் முன்வருவார்கள் என்றும் மத்திய ரிசர்வ் வங்கியின் எதிர்பார்ப்பாக உள்ளது. இந்த நாணயத்தை பொதுமக்கள் வாங்கும்படி மத்திய அரசு ஆன்லைனில் அறிவித்தல் விட ஏற்பாடு செய்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பூமியைப் போன்ற புதிய கிரகம் கண்டுபிடிப்பு



                         சமீபத்தில் பூமியைப் போன்ற உயிர் வாழத்தக்க கிரகம் ஒன்றினை கலிபோர்னிய பல்கலைக் கழகம் மற்றும் வாஷிங்டன் கார்னேஜி நிறுவனம் ஆகியன இணைந்து கண்டு பிடித்துள்ளன.
பால்வெளி அண்டத்திலுள்ள நட்சத்திரம் ஒன்றினை சுற்றி வரும் இக்கிரகம் பூமியிலிருந்து 22 ஒளிவருடங்கள் தூரத்தில் உள்ளது.

இக்கிரகத்துக்கு 'கிளிசே 581ஜி' எனப் பெயரிட்டுள்ளனர். பூமியை விட இரு மடங்கு பெரிய இக்கிரகத்தில் உயிர்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறு காணப் படுவதாக விண் தொலை காட்டிகள் மூலம் அவதானித்து விஞ்ஞானிகள் கருத்துரைத்துள்ளனர்.

இங்கு திரவம் அல்லது தண்ணீர் உறைந்த நிலையில் காணப்படுவதாக கலிபோர்னியப் பல்கலைக் கழகப் பேராசிரியர் ஸ்டீபன் வோட் என்பவர் உறுதிப் படுத்தியுள்ளார்.

கற்பழிக்கப் படும் கஷ்மீர் தேச பெண்கள் .தட்டிகேட்க ஆள் இல்லாத அவலம் !!!!




ஷ்மீர் அங்கே இந்திய ஆக்கிரமிப்பு இராணுவம் யாரை வேண்டுமானாலும் வீடு புகுந்து கொலை செய்யலாம் , பெண்களை கூட்டு கற்பழிப்பு செய்யலாம் பாடசாலை செல்லும் மாணவியை வீதியில் வைத்துச் சுடலாம், தாயின் முன் மகளையும், மகனின் முன் தாயையும் பாலியல் வதைகள் செய்யலாம், தந்தையின் முன் மகனையும் , மகளையும் அடித்து கொலை செய்யலாம் பஸ்சுக்காக காத்திருப்பவரை கைது செய்து என்ன குற்றச்சாட்டை வேண்டுமானாலும் சுமத்தலாம், யாரை வேண்டுமானாலும் வீடு புகுந்து கைது செய்யலாம், மைதானங்களில் விளையாடிக் கொண்டிருக்கும் சிறுவர்களை அடித்து உதைத்து இழுத்து செல்லலாம் தேவையான போது கொன்று புதைக்கலாம்

பெண்களைப் கைது செய்து தொடர் வன்புணர்வுக்கு உட்படுத்தலாம், புதிய ஆயுதங்களை பரிசித்து பார்க்க இந்த மக்களை கொல்லலாம். இன்னும், இன்னும்.எது வேண்டுமானாலும் செய்யலாம் யாரும் கேட்க மாட்டார்கள் இந்தியாவை எந்த மேற்குலக அரசும் அது பற்றி கேட்காது எவர் தமக்காக பேசாவிட்டாலும் வீரச் செருக்குடன் வீதியில் இரங்கி போராடும் மக்கள் மனம் உடைந்து விடவில்லை, ஐக்கிய நாடுகள் சபையின் சர்ச்சைக்குரிய பகுதி என்ற பட்டியலில் இருந்து கஷ்மீரை நீக்கினாலும் கஷ்மீர் மக்களின் விடுதலைப் போராட்ட உணர்வை எதுவும் செய்து விடாது

ஆசியாவின் சுவிட்சர்லாந்து என வர்ணிக்கப்பட்ட காஷ்மீர், இயற்கை எழில் சூழ்ந்த உலகின் மிக அழகான நிலப்பரப்புகளின் பட்டியலில் முதன்மையாகத் திகழ்ந்தது. ஆனால் இன்று, காஷ்மீர் பள்ளத்தாக்கு, காணும் இடமெல்லாம் மரண ஓலங்கள் காணும் இடமெல்லாம் இந்திய ஆக்கிரமிப்பு இராணுவத்தின் படுகொலைகள்

உலகின் மிகக் கொடூரமான இராணுவ அடக்குமுறையின் மூலம், காஷ்மீரில் பாரிய இனப்படுகொலையை இந்திய இராணுவம் சத்தமின்றி நிகழ்த்தி வருகிறது.

“தாயின் கண்முன்பு மகளை வன்புணர்வுக்கு உட்படுத்த வேண்டும். இதுதான் அந்த இராணுவம் சிப்பாயின் ஆசை. ‘வேண்டாம் எங்கள் இருவரையும் விட்டுவிடுங்கள்’ என அந்தத் தாய் இராணுவ சிப்பாயின் மிதியடிகளைப் பிடித்து மன்றாடுகிறார், கதறுகிறார். ‘என்னால் இதை நிச்சயம் காண இயலாது; என்னை கொன்று விடுங்கள்’ என்கிறார் அவர். அந்த இராணுவ சிப்பாயின் வன்புணர்வுக்கு ஆயத்தம் ஆகும் வகையில் தன் உடைகளைக் களைந்து கொண்டே, ‘உன் ஆசைப்படியே நடக்கட்டும்’ என அவருடைய நெற்றியில் தானியங்கித் துப்பாக்கியை வைத்துச் சில சுற்றுகள் தோட்டாக்களை செலுத்துகிறான். தன் காரியத்தைத் தொடர்கிறான்”.

இதுபோன்ற ஓராயிரம் கதைகளை, காஷ்மீர் சென்று வந்துள்ள மனித உரிமைக் குழுக்கள் பதிவு செய்துள்ளன. இந்தச் சம்பவம் இந்திய ஆக்கிரமிப்பு இராணுவமும் அதன் துணைப் படைகளும் நாள்தோறும் காஷ்மீரில் வாடிக்கையாக நடத்தும் அட்டூழியங்களில் ஒன்றுதான் மேலே பதிவுசெய்யப்பட்ட சம்பவம்.

1989-2009 வரையிலான காலப்பகுதியில் மட்டும் காஷ்மீரில் 8,000 பேரை காணவில்லை. 70,000 பேர் போலி மோதல் சாவுகளிலும் அரசின் பாதுகாவலிலும் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களைப் பற்றிய தகவல்களை அறிய 1990 முதல் மட்டும் 15,000 மனுக்களை வழக்குரைஞர்கள் நீதிமன்றங்களில் பதிவு செய்துள்ளனர். இந்த மரண எண்ணிக்கைகூட, மிகக் குறைந்த அளவில்தான் கணக்கிடப்பட்டுள்ளது என்று தகவகல்கள் தெரிவிக்கின்றது....

அநீதிகள் எங்கு நடந்தாலும் எதிர்ப்பவனே உண்மையான மனிதன்..அது தன் வீட்டிலாக இருந்தாலும்கூட......
இவற்றை தடுக்கும் வழி இவற்றை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் தான் உள்ளது....எனவே கண்டிப்பாக share செய்யுங்கள்.....
தமிழால் இணைவோம்

செவ்வாய், 24 ஜூலை, 2012

அண்ணல் நபிகளாரின் 60 பொன் மொழிகள்

எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே!! 
சலவாத் எனும் கருணையும், சலாம் எனும் ஈடேற்றமும் அகிலதிற்கு அருட்கொடையாக அனுப்பப்பட்ட ஈருலகத் தலைவர் நபிகள் நாயகம் சல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்கள் மீதும் அவர்களின் குடும்பத்தவர்கள், தோழர்கள் அனைவர் மீதும் உண்டாவதாக!!

எது நேர்வழி?  
எது சத்தியம்? 
எதை இறைவன் விரும்புகிறான்?  எதை வெறுக்கிறான்? 
இறைஉவப்பைப் பெற நாம் என்ன செய்யவேண்டும்? 
இம்மை வாழ்வை நடாத்திச் செல்வது எப்படி? 
மறுமை வெற்றியை ஈட்டுவது எவ்வாறு? 
இந்தக் கேள்விகளுக்குப் பதில் பெறுவது நடக்கிற காரியமா? அசாத்தியம்: 
எனவே, நாம் பொய்யில் புரண்டு, அசத்தியத்தில் மூழ்கி, கடும் இயப்பாடுகளில் சிக்கி, இருளிலேயே தட்டுத் தடுமாறி உழன்று கொண்டு இருந்திருப்போம். மனிதர்களாகவே இருந்திருக்க மாட்டோம்.

ஆனால் இறைவன் நம் மீது மாபெரும் அருட்கொடையை பொலிந்து விட்டான். ஆம்! அந்த மாபெரும் அருட்கொடைதான் நமது நபிகள் நாயகம் (சல்லல்லாஹு அலைஹி வசல்லம்) ஆவார்கள்.
 " மனிதர்களே! இதோ, அகிலங்களுக்கு ஓர் அருட்கொடையாக, நீங்கள் நேர்வழி பெறுவதற்காக என்னுடைய இறுதித் தூதரை நான் அனுப்பிவிட்டேன். இனி உங்களின் இம்மை வெற்றியும் மறுமை ஈடேற்றமும் இந்த இறைத்தூதரைப் பின்பற்றுவதில் தான் அடங்கியுள்ளது!" என்று வல்ல இறைவன் குர்ஆனில் பல்வேறு இடங்களில் தெளிவாக அறிவித்துவிட்டான்.

இறைத்தூதராக நியமிக்கப்பட்ட அந்த நிமிடம் முதல் - அண்ணலாரின் ஒவ்வொரு சொல்லும் ஒவ்வொரு செயலும் - அவர்களின் சிறுசிறு அசைவுகளும் கூட மிகக் கவனமாகப் பதிவு செய்யப்பட்டன. காரணம்: திருநபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் வாழ்க்கை திருகுர்ஆனின் செயல்வடிவாகத் திகழ்ந்தது. அதாவது, நடமாடும் குர்ஆனாக அவர்கள் திகழ்ந்தார்கள். வாழ்வின் ஏதோ ஒன்றிரெண்டு துறைகளுக்கு மட்டுமல்ல அனைத்து துறைகளுக்கும் வழிகாட்டினார்கள். அவர்கள் நிகழ்த்திய சொற்பொழிவுகள், தந்த அறிவுரைகள், ஏவிய செயல்கள், தடுத்த காரியங்கள் ஆகிய அனைத்துமே மனிதனுக்கு வழிக்காட்டும் ஒளி விளக்குகளாய் விளங்குகின்றன.

நபிகளார் மொழிந்தவை:

1. செயல்கள் அனைத்தும் எண்ணங்களை பொறுத்தே அமைகின்றன.

2. இறைவன் உங்கள் உருவங்களையோ, உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை. மாறாக உங்கள் உள்ளங்களையும், செயல்களையும் பார்க்கின்றான்.
 
3.அமானிதத்தை ( அடைக்கலப் பொருளை) பேணிக் காக்காதவனிடம் ஈமான் இல்லை (நம்பிக்கை இல்லை) வாக்குறுதியை நிறைவேற்றாதவரிடம் தீன் (இறைநெறி) இல்லை.
 
4. உங்கள் வீடுகளில் இறைவனுக்கு மிக விருப்பமானது அனாதைகளை அரவணைக்கும் வீடேயாகும்.
 
5. நிதானம் என்பது இறைவனின் தன்மையாகும். அவசரம் ஷெய்த்தானின் தன்மையாகும்.
 
6. உங்களில் நற்குணம் உடையவரே உங்களில் சிறந்தவர் ஆவார்.
 
7. எளிமையாக வாழ்வது இறை நம்பிக்கையின் பாற்பட்டதாகும்.
 
8. எந்த மனிதனுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்து, அவன் அதை அறியாமைக்கால வழக்கப்படி உயிரோடு புதைக்கவில்லையோ, அதனை இழிவாக கருதவில்லையோ, அதைக்காட்டிலும் ஆண் குழந்தைகளுக்கு முன் உரிமை வழங்கவில்லையோ அத்தகையவனை இறைவன் சுவனத்தில் புகுத்துவான்.
 
9. இலஞ்சம் வாங்குபவர் மீதும், இலஞ்சம் கொடுப்பவர் மீதும் இறைவனின் சாபம் உண்டாகட்டும்.
 
10. கூலியாளின் வியர்வை உலருவதற்கு முன் அவருடைய கூலியை கொடுத்துவிடுங்கள்.
 
11. பதுக்கல் செய்பவன் பாவியாவான்.
 
12. தாயின் காலடியில் சுவர்க்கம் இருக்கிறது.
 
13. பெண்களிடம் நல்ல முறையில் நடந்து கொள்ளுங்கள்.
 
14. தந்தை தன் மக்களுக்கு அளிக்கும் அன்பளிப்புகளில் மிகச் சிறந்தது அவர்களுக்கு
அளித்திடும் நல்ல கல்வியும், நல்லோக்கப் பயிற்சியும் ஆகும்.
 
15. அனைத்தையும் விடச் சிறந்த சேமிப்பு பொருள்கள் இறைவனை நினைவு கூரும் நாவு, இறைவனுக்கு நன்றி செலுத்தும் உணர்வால் நிரம்பிய உள்ளம், இறைவழியில் நடந்திட தன் கணவனுக்கு உதவிடும் இறை நம்பிக்கையுள்ள நல்ல மனைவி ஆகியனவே.
 
16. நான் உங்களுக்கு மிகச்சிறந்த தர்மம் ஒன்றை கூறட்டுமா? அது, தனக்கு பொருளீட்டி உணவளிக்க வேறு யாருமில்லை என்ற நிலையில் உன் பக்கம் திருப்பி அனுப்பப்பட்ட உன் மகள் தான்.
 
17. அநாதையின் தலையை இரக்கத்துடன் தடவுங்கள்.
 
18. ஏழை எளியவர்களுக்கு உணவளியுங்கள்.
 
19. இறைவனின் மீதும் மறுமை நாளின் மீதும் நம்பிக்கை கொண்டவர்கள் தம் விருந்தாளிகளை உபசரிக்கட்டும்.
 
20. தன் பக்கத்தில் இருக்கும் அண்டை வீட்டார் பசித்திருக்க தான் மட்டும் வயிறார உண்பவர் ஓர் இறைநம்பிக்கையாளராய் இருக்க முடியாது.
 
21. பசித்தவன் ஒருவனுக்கு வயிறு நிறைய நீ உணவளிப்பது மிகச்சிறந்த தர்மமாகும்.
 
22. தன் அடிமைகளின் மீதும் பணியாட்களின் மீதும் தன் அதிகாரத்தை தவறாக பிரயோகித்தவன் சுவனத்தில் நுழைய மாட்டான்.
 
23. நோயாளிகளை நலம் விசாரியுங்கள்.
 
24. உங்களில் ஒவ்வொருவரும் தன் சகோதரனின் கண்ணாடியாவார். எனவே, ஒருவர் தன் சகோதரன் துன்பத்தில் சிக்கி இருப்பதை கண்டால் அதனை அவர் நீக்கி விடட்டும்.
 
25. உனது தந்தையின் அன்பை நீ பாத்துக்காத்து கொள். அதை முறித்து விடாதே அவ்வாறு அதை முறித்து கொண்டால் இறைவன் உனது ஒளியை போக்கி விடுவான்.
 
26. இறைவனின் உதவி என்னும் கை ஒன்றுப்பட்ட மக்களின் மீதிருக்கிறது.
 
27. உங்களில் இறந்தவர்களின் நற்செயல் பற்றியே கூறுங்கள்.
 
28. இறைவனை அஞ்சுங்கள். உங்கள் மக்களிடையே நீதமாக நடந்து கொள்ளுங்கள்.
 
29. பெருமை அடிப்பவன் சுவனத்தில் நுழைய மாட்டான்.
 
30. நீங்கள் விரும்புவதை உண்ணுங்கள். விரும்புவதை அணியுங்கள். ஆனால் ஒரு நிபந்தனை, உங்களிடம் கர்வமும், வீண்விரயமும் இருக்கக் கூடாது.
 
31. இறுதி தீர்ப்பு நாள், கொடுமைக்காரனுக்கு இருள் மிக்கதாக இருக்கும்.
 
32. குத்துச்சண்டையில் அடுத்தவனை வீழ்த்துபவன் வீரன் அல்ல. மாறாக, கோபம் வரும் போது தன்னைத்தானே அடக்கி கொள்பவனே வீரன் ஆவான்.
 
33. எவரையும் பழித்து காட்டுவதை நான் விரும்பவில்லை.
 
34. புறம் பேசுவது விபச்சாரத்தை விட கடுமையான பாவமாகும்.
 
35. கோள் சொல்பவன் சுவனம் நுழைய மாட்டான்.
 
36. நெருப்பு விறகைச் சாம்பலாக்கி விடுவதைப் போல் பொறாமை நற்செயல்களை சாம்பலாக்கி விடும்.
 
37. தன் நாவையும், வெட்கத்தலத்தையும் ஒருவர் பாதுகாத்து கொள்வதாக பொறுப்பேற்றால் அவருக்கு சுவனம் கிடைத்திட நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன். 

38. நாவை அடக்கு. உன்னால் தீய உணர்வுகளை அடக்க முடியும்.
 
39. தீமைக்கு பின் அதை அழிக்கவல்ல நன்மையை செய்யுங்கள்.
 
40. மௌனம் சாதிப்பது அறிவு நிறைந்த செயல்.
41. இனிமையான பேச்சும் ஒரு விதத்தில் தர்மம் தான்.
 
42. நாணம் நன்மையை மட்டுமே கொணர்கின்றது.
 
43. ஒரு வினாடி நேர சிந்தனை, ஓராண்டு கால இறை வணக்கத்தை விடச் சிறந்தது.
 
44. உம்முடைய உறவை துண்டித்து வாழ்பவனுடன் நீ சேர்ந்து வாழு. உமக்கு அநீதம் இழைத்தவனை மன்னித்து விடும்.
 
45. நற்குணம் என்பது நம்பிக்கைக்குரிய அடையாளமாகும். தீயகுணம் என்பது நயவஞ்சகத்தின் அடையாளமாகும்.
 
46. உண்மையான வியாபாரி நபிமார்கள், தியாகிகள், நல்லடியார்கள் முதலியோர்களுடன் சுவனத்தில் இருப்பார்.
 
47. வணக்க வழிப்பாடு உள்ள ஒரு உலோபியை விட வணக்க வழிப்பாடு குறைந்த ஒரு கொடையாளி இறைவனுக்கு மிக சிறந்தவன்.
 
48. தர்மத்தில் சிறந்தது இடது கைக்கு தெரியாமல் வலது கையால் கொடுப்பது தான்.
 
49. இரசியமாக செய்யும் தர்மம்தான் இறைவனின் கோபத்தை தடுக்கும்.
 
50. ஒரு மனிதன் பெற்றோரை ஏசுதல் பெரும் பாவமாகும்.
 
51. தன் பெற்றோரை நிந்திப்பவன் தன் மக்களால் நிந்திக்கப்படுவான்.
 
52. கல்வி கற்பதானது ஒவ்வொரு ஆண், பெண் மீது கடமையாகும்.
 
53. பிள்ளைகள் பேரில் உபகாரமாயிருக்கும் தாய் தந்தையருக்கு இறைவன் அருள் செய்கிறான்.
 
54. ஏழைகளின் கண்ணீர் கூரிய வாளுக்கு கொப்பாகும்.
 
55. வணக்கங்களில் மிக இலகுவானதை நான் உங்களுக்கு தெரிவிப்பதானால் அது மௌனம் காக்கும் நாவும், மங்களமான நற்குணமும்தான்.
 
56. மிதமிஞ்சிய உணவு அறிவை கெடுத்து, ஆரோக்கியத்தை குறைக்கும்.
 
57. செல்வவளம் என்பது அதிகமாக செல்வத்தை பெறுவதல்ல. போதுமென்ற மனதை பெறுவதே உண்மையான செல்வமாகும்.
 
58. இறைவன் யாருக்கு நலவை நாடுகிறானோ அவனுக்கு மார்க்கத்தில் விளக்கத்தை அளிப்பான்.
 
59. நம் சிறுவர்களிடம் மரியாதை காட்டாதவனும், பெரியோர்களுக்கு மரியாதை செய்யாதவனும் நம்மை சார்ந்தவனல்ல.
 
60. உன் சகோதரனின் துன்பத்தை கண்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தாதே. இறைவன் அவன் மீது கருணை புரிந்து உன்னை துன்பத்தில் ஆழ்த்திடுவான்.
 
யா அல்லாஹ்! உனது தூதர், எங்களின் சிரேஷ்டர், உலக மக்களின் நேர்வழிகாட்டி, எங்கள் ஆத்மாக்களுக்கு புத்துயிர் தந்த ஞானதீபம், அனாதைகளின் இரட்சகர், ஒப்பற்ற தலைவர் நபிகள் நாயகம் சல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்களின் இந்த உயர் மணி மொழிகளை எங்கள் வாழ்க்கையில் எடுத்து நடக்க நீ எங்களுக்கு அருள் புரிவாயாக. அவர்களோடு நாளை சுவர்க்கத்தில் இருக்கும் பாக்கியத்தை எனக்கும், என் குடும்பத்துக்கும், என் அன்பான  நண்பர்களுக்கும் நசீபாக்குவாயாக!! ஆமீன்!!

நன்றி: உண்மை உலகம்

Engr.Sulthan

உலக விளைநிலம் வர்த்தகத்தில்...

உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் விளைநிலங்களில் முதலீடு செய்வது தொடர்பாக சர்வதேச புள்ளிவிபரம் ஒன்றை வாஷிங்டனைச் சேர்ந்த Matrix Project Land என்ற ஆய்வுக்குழு வெளியிட்டிருக்கிறது. 2000ஆம் ஆண்டு முதல் நிலப் பரிவர்த்தனை நடந்துள்ள விபரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. உலகம் முழுவதிலுமாக, 2000ல் இருந்து இதுவரை 70.2 மில்லியன் ஹெக்டேர்கள் பரப்பளவு கொண்ட விவசாய நிலங்கள் விற்கவும், குத்தகைக்கு விடவும் பட்டுள்ளன. அந்த அளவு கொண்ட நிலம் சுமார் காங்கோ குடியரசு நாட்டின் பரப்பளவுக்கு இருக்கும். உலக விவசாய நிலங்களின் அளவில் 1.4 சதவீதமாக இருக்கும் என மதிப்பிடப்படுகிறது. Land Matrix பட்டியலிட்டுள்ள 82 முதலீட்டாளர்களில் இந்தியா, சீனா, பிரேசில் ஆகிய நாடுகள் மட்டும் 16.5 மில்லியன் ஹெக்டேர் நிலங்களில் முதலீடு செய்திருக்கின்றன. இது உலகம் முழுவதிலும் விற்கவோ, குத்தகைக்கு விடவோ பட்ட மொத்த ஹெக்டேர் நிலங்களில் 24 சதவீதமாக இருக்கும்.


இந்தியா, கிழக்கு ஆப்ரிக்கா நாடுகளில் இருந்து மட்டும் (குறிப்பாக எத்தியோப்பியா, மடகாஸ்கர்) 3.2 மில்லியன் (30 லட்சத்து 20 ஆயிரம்) ஹெக்டேர் நிலங்களும், தென்கிழக்கு ஆசிய நாடுகளில் (இந்தோனேசியா, லாவே மக்கள் குடியரசு) இருந்து 2.1 மில்லியன் (20 லட்சத்து 10 ஆயிரம் ஹெக்டேர்) நிலங்களையும் இந்தியா வாங்கி இருக்கிறது. அதுபோல் மற்ற நாடுகளில் நிலம் வாங்கிய நாடுகளில் முதல் 10க்குள் இந்தியா வருகிறது. சுமார் 4.6 மில்லியன் ஹெக்டேர் நிலங்கள் வெவ்வேறான 113 ஒப்பந்தங்களின் கீழ் விற்கப்பட்டுள்ளன. 2000ல் இருந்து இந்தியா வாங்கியது

• கிழக்கு ஆப்ரிக்க நாடுகளிடம் இருந்து 30 லட்சத்து 20 ஆயிரம் ஹெக்டேர்,
 
• தென்கிழக்கு ஆசிய நாடுகளிடம் இருந்து 20 லட்சத்து 10 ஆயிரம் ஹெக்டேர்,
 
• இந்தியா விற்ற நிலம் 40 லட்சத்து 60 ஆயிரம் ஹெக்டேர் நிலங்கள்,
 
• உள்ளூர் நிறுவனங்கள் வாங்கிய நிலத்தின் அளவு 1 கோடியே 60 லட்சம் ஹெக்டேர்.
 
பெரும்பாலான நிலங்கள் விவசாயம் மற்றும் வனங்கள் உருவாக்குவதற்காக வாங்கப்பட்டுள்ளன. இதில் 30 சதவீத நில பரிவர்த்தனை உணவு பயிர்களுக்காகவும், 20 சதவீத நிலங்கள் உயர் எரிபொருள் உற்பத்திக்காகவும், வளர்ப்பு பிராணிகளுக்கான உணவுகள் தயாரிக்கவும் வாங்கப்பட்டிருக்கின்றன.
- Tmmk Ramnad