புதன், 5 செப்டம்பர், 2012

அறிவியல், மருத்துவத்தில் சிறந்து விளங்கும் சவுதி பெண்கள்


                                                   அறிவியல், மருத்துவம் ஆகிய துறைகளில் சவுதி அரேபிய பெண்கள் சிறந்து விளங்கு என கல்ப் நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
 

யுனஸ்கோ வெளியிட்ட அறிக்கையை மேற்கோள் காட்டி சமார்பாட்னி என்பவர் கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார்.
 

அதில், மேற்கத்திய நாட்டு பெண்களை காட்டிலும் சவுதி அரேபிய பெண்கள் அறிவியல், மருத்துவம் ஆகிய துறைகளில் அதிக அளவில் பட்டம் பெறுகின்றனர்.
 

சவுதி அரேபியாவில் 40 சதவிகித மருத்துவர்கள் பெண்களே. அறிவியல் படித்த பெண்களில் பலருக்கு சிறந்த மருத்துவராகவும், விஞ்ஞானியாகவும் சர்வதேச அளவிலும் அங்கீகாரம் கிடைத்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.கோவை சிறையில் பல ஆண்டுகள் விசாரணை கைதியாக இருந்து தற்போது விடுதலையாகியிருக்கும் சகோதரி ஆயிஷாவின் மனக்குமுறலை கேளுங்கள்


                                          கோவை சிறையில் பல ஆண்டுகள் விசாரணை கைதியாக இருந்து தற்போது விடுதலையாகியிருக்கும் சகோதரி ஆயிஷாவின் மனக்குமுறலை கேளுங்கள். இவரது தந்தை இன்றும் இந்துவாகத்தான் உள்ளார். சகோதரி ஆயிஷா புதிதாக இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவர். ஒருக்கால் இவர் இஸ்லாத்தை ஏற்றதுதான் இவர் செய்த குற்றமாக காவல் துறை கருதியதா?

கோவையில் குண்டு வைத்து அப்பாவிகள் இறக்க காரணமானவர்கள் எந்த மதத்தவராக இருந்தாலும் அவர்களை தூக்கில் கூட போடுங்கள். ஆனால் அப்பாவிகளை இத்தனை வருடம் விசாரணை கைதிகளாக வைத்திருந்து விட்டு தற்போது வெளியாக்குவதால் அவர்களின் சிறையில் கழிந்த வாழ்நாளை யார் திரும்ப கொடுப்பார்?உயிரினங்களின் மூலம் தண்ணீர் என்பது உண்மைதானா? (ஒவ்வொரு உயிரினத்தையும் இறைவன் நீரால் படைத்தான்.. குர்ஆன் 24:45)                                              பெல்ஜியத்தை சேர்ந்த ஜான் பாப்டிஸ்டா வேன் ஹெல்மண்ட் என்ற வேதியியல் நிபுணருக்கு தாவரங்களின் வளர்ச்சியைப் பற்றி ஒரு பெரும் சந்தேகம் வந்தது. இது எவ்வாறு வளர்கிறது என்பதை சோதிக்க எண்ணினார். எனவே வில்லோ மரம் ஒன்றினை ஒரு பெரிய தொட்டியில் மண்ணை நிரப்பி வளர்க்க ஆரம்பித்தார். தொட்டியில் இட்ட மண்ணின் அளவை குறித்துக் கொண்டார். அதே போல் மரத்தின் நிறையையும் குறித்துக் கொண்டார். மரமும் நன்றாக வளர்ந்தது. ஐந்து வருடங்களுக்கு பிறகு தொட்டியிலிருந்து மரத்தை வெளியில் எடுத்து அதன் நிறையை கணக்கிட்டார். மரத்தின் அளவு 164 பவுண்டாக இருந்தது. அதன் பிறகு மண்ணின் நிறையை அளக்க ஆரம்பித்தார். ஆச்சரியமாக மண்ணின் நிறையில் மிக சிறிய மாற்றமே உண்டானது. மரத்தின் நிறை கூடினால் மண்ணின் நிறை குறைய வேண்டும். அதுதான் இயற்கை என்று ஹெல்மண்ட் நம்பியிருந்தார். ஏனெனில் இந்த மரம் வளர்வதற்கு ஆதாரமாக மண்தானே இருக்கிறது என்பது அவரது எண்ணம். ஆனால் இந்த மரம் வளர்ந்ததற்கு முக்கிய காரணம் அவர் தினமும் ஊற்றிய தண்ணீர் என்பதை பிறகு தான் விளங்கிக் கொண்டார்.அதன் பிறகு பின்னால் வந்த அறிவியல் அறிஞர்கள் தண்ணீரோடு ஆக்சிஜன் மற்றும் சூரிய ஒளியும் ஒரு தாவரம் வளர அவசியம் என்பதை கண்டு பிடித்தனர். ஆக உயிரினங்கள் அனைத்தும் தங்கள் உடலில் உண்டாக்கப்பட்டுள்ள உடலமைப்பினால் தேவையான தண்ணீரை சேமித்து வைத்துக் கொள்கின்றன. அது இயலாத பட்சத்தில் அந்த உயிரினத்திற்கு இறப்பு நிச்சயம் என்பதை நாம் அறிவோம். இந்த தண்ணீரிலிருந்துதான் உயிரினங்கள் தங்கள் உடம்புக்கு தேவையான சத்துக்களை கிரகித்துக் கொள்கின்றன. நாம் உண்ணும் உணவிலிருந்து குடிக்கும் அனைத்து பானங்களின் மூலமும் தண்ணீராகவே இருக்கிறது. உயிரியல் பாடங்களை நாம் எடுத்துக் கொண்டாலும் உயிரினங்களுக்கு 80 சதவீதம் நீர் அவசியம் என்று கூறுகிறது. அதே போல் என்சைக்ளோபீடியாவும் உயிரினங்களின் உயிர் வாழ தண்ணீர் 50 சதவீத்திலிருந்து 85 சதவீதம் வரை அவசியம் என்கிறது. தாவரங்களின் ஒளிச் சேர்க்கை நடைபெற அடிப்படை பொருட்களாக கார்பன் டை ஆக்சைடு, நீர், பச்சையம், மற்றும் சூரிய ஒளி அவசியமாகிறது. இங்கும் நீரின் தேவை மிக அவசியமாகிறது. இந்த உண்மைகள் எல்லாம் அறிவியல் அறிஞர்களால் 17 ஆம் நூற்றாண்டு வாக்கில்தான் கண்டுபிடிக்கப்படுகிறது.சாதாரண மண்ணை எடுத்துக் கொள்வோம். வெறும் மணலாக இருக்கும் போது அந்த மண்ணுக்கு உயிர் வருவது இல்லை. அந்த மண்ணோடு தண்ணீரும் கலந்து சேறும் சகதியுமாக மாறியவுடன்தான் புல் பூண்டுகள் முளைக்க ஆரம்பிக்கின்றன. எனவே இந்த இடத்திலும் தண்ணீரின் அவசியத்தை நாம் பார்க்கிறோம். இன்னும் விளக்கமாக சொல்லப் போனால் நீர் இல்லாத மண்ணானது உயிர் இல்லாத உடலைப் போன்றது.


கீழே கொடுக்கப்பட்டிருக்கும் படத்தில் மணலில் எந்த அளவு தண்ணீர் உள்ளது. மக்கிய தாவரங்கள் கலந்த மண்ணில் எந்த அளவு தண்ணீர் உள்ளது. பயிர்கள் அதிகம் விளையக் கூடிய களிமண்ணில் எந்த அளவு தண்ணீர் உள்ளது என்பதை விபரமாக விளக்குகிறது.
(The table and figures were originally published by the Institute of Agriculture and Natural Resources at the University of Nebraska - Lincoln.)


டார்வினின் பரிணாம வளர்ச்சி விதி உயிரினங்கள் அனைத்தும் நீரிலிருந்தான் தோன்றின என்கிறது. அதாவது ஒரு செல் உயிரிகள் தண்ணீரிலிருந்தே தோன்றி பிறகு கால்கள் முளைத்து கரைக்கு வந்ததாக சொல்வார். அந்த ஒரு செல் உயிரி உண்டானது தண்ணீரிலிருந்தே என்பது டார்வினின் தத்துவமாகும். ஆனால் அதன் பிறகுதான் குழம்பி விடுகிறார். பலரையும் குழப்பி விடுகிறார். :-)


நமது மூளை 80% நீரால் ஆனது. கண்கள் உலர்ந்து போகாமலிருக்க இரண்டு வகையான ஈரம் தேவைப்படுகிறது. அவற்றின் விளிம்பில் 30 சுரப்பிகள் உள்ளன. கண்சிமிட்டும் போதெல்லாம் கண்விழி இவற்றின் மூலம் அலம்புகின்றன. அழுது கண்ணீர் விடும்போது கண் விழிமேல் இருக்கும் சுரப்பிகளிலிருந்து கண்ணீர் சப்ளை ஆகிறது. மனித உடலில் 97,000 இரத்த நாளங்கள் உள்ளன. ஒரு சொட்டு இரத்தத்தில் 55 லட்சம் இரத்த சிவப்பணுக்கள் உள்ளன. இதயத்திலிருந்து புறப்பட்ட இரத்தம் உடல் முழுவதும் ஒரு சுற்று சுற்றி விட்டு மீண்டும் இதயத்திற்குத் திரும்ப எடுத்துக் கொள்ளும் நேரம் 30 செகண்டு ஆகும். 70 கிலோ எடையுள்ள மனிதனுக்கு 5600 மில்லிலிட்டர் ரத்தம் உடம்பிலிருக்கும். நமது மொத்த உடல் எடையில் 12% இரத்தம் ஆகும். தினத்தோறும் 450 கேலன் இரத்தம் சிறுநீரகத்தால் சுத்தப்படுத்தப்படுகிறது. இவ்வாறு நமது உடலின் எந்த பகுதியை எடுத்துக் கொண்டாலும் நீர் சார்ந்த பொருட்களே ஆதிக்கம் செலுத்துகிறது.


ஒவ்வொரு உயிரினத்தையும் இறைவன் நீரால் படைத்தான்..
குர்ஆன் 24:45

'உயிருள்ள ஒவ்வொரு பொருளையும் தண்ணீரிலிருந்தே அமைத்தோம் என்பதையும் நம்மை மறுப்போர் சிந்திக்க வேண்டாமா? அவர்கள் நம்பிக்கை கொள்ள வேண்டாமா?'

குர்ஆன் 21:30

'அவனே தண்ணீரால் மனிதனை படைத்தான்'

குர்ஆன் 25:54


மேற்கண்ட வசனங்கள் மனிதன் மற்றும் உயிருள்ள ஜீவராசிகள் அனைத்துக்கும் மூலமாக தண்ணீர் உள்ளது என்பதை விவரிக்கிறது. இது இன்று நமக்கு ஒரு சாதாரண கண்டுபிடிப்பாக இருக்கும். ஆனால் குர்ஆன் இறங்கிய அன்றைய அறியாமை காலத்தை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும். நம் நாட்டைப் போல் நில வளம் பொருந்திய நாடு அல்ல அன்றைய சவுதி. எங்கு நோக்கினாலும் பாலைவனம்தான். ஏதோ ஒரு சில இடங்களில் அத்தி பூத்தாற்போல ஒரு சில பேரித்தம் மரங்கள் சோகமாக நின்று கொண்டிருக்கும். இது தான் அன்றைய அரேபியாவின் நிலை. அந்த சமூகமும் படிப்பறிவில்லாத சமூகம். இந்த நிலையில் எழுதவும் படிக்கவும் தெரியாத ஒரு நாட்டுப் புற அரபி இவ்வாறு வசனங்களை சொல்லியிருக்க முடியும் என்பதை நம் அறிவு ஏற்கிறதா?


இல்லை: இது உங்களையும் என்னையும் படைத்த அந்த ஏக இறைவனின் வார்த்தைகள் தான் என்பதில் எள்ளவும் சந்தேகமில்லை என்ற முடிவுக்கே நாம் வருவோம்.


உயிர் வாழ மண்ணும் தண்ணீரும் எந்த அளவு அவசியம் என்று பார்த்தோம். மண்ணை மனைகளாக்காமல் பயிர் விளையும் பூமியாக்கி நீர் வளத்தையும் நில வளத்தையும் மாசு படாமல் காப்போம். பின்னால் ஏற்படக் கூடிய சிரமங்களை தவிர்ப்போம். தமிழக கிராமங்களில் உள்ள செல்வந்தர்கள் ஆங்காங்கே குளங்களை வெட்டி மழை நீரை சேகரித்து மக்களுக்கு சேவை செய்வோம். அரசாங்கத்தை எதிர்பார்க்காமல் நமக்கு நாமே திட்டம் வகுத்தால்தான் வருங்கால சந்ததிகள் நிம்மதியாக காலத்தை ஓட்ட முடியும்..
ஈரானை தாக்கினால் அமெரிக்க தளங்களை தகர்ப்போம்: ஹிஸ்பொல்லா

 


      
                                ஈரான் இரகசியமாக அணு ஆயுதங்களை தயாரித்து வருவதாக அமெரிக்கா, இஸ்ரேல் போன்ற நாடுகள் குற்றம் சுமத்தி வருவதுடன், பல்வேறு தடைகளையும் விதித்துள்ளது.
 

இந்நிலையில் லெபனான் ஈரானியர்கள் ஆதரவுடன் செயல்பட்டு வரும் ஹிஸ்பொல்லா தீவிரவாத அமைப்பின் தலைவர் நஸ்ரல்லாகூறுகையில், ஈரான் நாட்டு அணு மின் திட்டங்களுக்கு எதிராக இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால், மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்களை தாக்குவோம்.
 

பதிலடி கொடுப்பது குறித்து முடிவு எடுத்து இருக்கிறோம். தாக்குதல் மிகக் கடுமையாக இருக்கும்.
 

இஸ்ரேல் ஈரான் மீது குறிவைத்தால், அமெரிக்க அதன் பொறுப்பை ஏற்க வேண்டியிருக்கும். ஈரானின் அணுத் திட்டங்களை அணு ஆயுத திட்டமாக கூறிவரும் அமெரிக்காவிற்கும் இஸ்ரேலுக்கும் இடையே கருத்து வேறுபாடு உள்ளது.
 

என்னைப் பொறுத்தவரை இஸ்ரேல் ஒரு எதிரி நாடல்ல, ஆனால் சமீபகாலமாக ஈரானுக்கு எதிராக பேசி வருவது ஏற்றுக் கொள்ள முடியாது என்று தெரிவித்துள்ளார்.பணத்திற்காக 10வது கணவனை எரித்துக் கொன்ற பெண்


                                                 இன்சூரன்ஸ் பணத்திற்காக 10வது கணவனை எரித்துக் கொன்ற அமெரிக்க பெண்ணுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஜில்மர் பகுதியைச் சேர்ந்தவர் ஷரோன் மேக்ஸ்வெல்(வயது 44).
இவர் ஏற்கனவே ஒன்பது முறை திருமணமாகி, விவாகரத்துபெற்றவர். இவரது 10வது கணவர் கார்டன் மேக்ஸ்வெல். இவர் 1.75 லட்சம் அமெரிக்க டொலருக்கு இன்சூரன்ஸ் செய்திருந்தார்.
 

மற்றொரு நபருடன் கள்ள உறவு வைத்திருந்ததை அறிந்த மேக்ஸ்வெல், ஷரோனை விவாகரத்து செய்ய திட்டமிட்டிருந்தார். கணவர் விவாகரத்து செய்வதற்கு முன்னதாக அவரை தீர்த்து கட்டி இன்சூரன்ஸ் தொகையை அபகரிக்கத் திட்டமிட்டார் ஷரோன்.
 

எனவே கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் ஓரி நகரில் காதலனுடன் சேர்ந்து மேக்ஸ்வெல்லை பெட்ரோல் ஊற்றிஎரித்துக் கொன்றார் ஷரோன்.
இது குறித்து பொலிசார் விசாரித்த போது தனது 19 வயது மகன் ஜேம்ஸ் கணவர் மேக்ஸ்வெல்லை துப்பாக்கியால் சுட்டுக் கொன்று தீ வைத்ததாக ஷரோன் நாடகமாடினார்.
 

சம்பவம் குறித்து பொலிசார் தீவிர விசாரணை நடத்தியதில் மேக்ஸ்வெல்லின் 1.75 லட்சம் டொலர் இன்சூரன்ஸ் பணத்துக்காக அவரை கொலை செய்த விஷயம் அம்பலமானது. இதனையடுத்து ஷரோனை பொலிசார் கைது செய்தனர்.
 

இந்த வழக்கை விசாரித்த ஜில்மார் மாவட்ட நீதிமன்றம் உள்நோக்கத்துடன் கணவனை கொலை செய்த ஷரோனுக்கு, ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு கூறியது.
 

2042ம் ஆண்டு வரை அவர் பரோலில் வெளிவர முடியாது. அது மட்டுமல்லாது 10 ஆயிரம் டொலர் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.ஒலியை விட மிக வேகமாக பயணிக்கும் விமானம்: நாசா ஒப்புதல்


                                                 ஒலியை விட மிக வேகமாகப் பயணம் செய்யக் கூடிய, அதிநவீன சூப்பர்சானிக் விமானத் தொழில்நுட்ப ஆராய்ச்சிக்கு அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு அமைப்பான நாசா ஒப்புதல் அளித்துள்ளது.
 

இது தொடர்பாக லண்டனில் இருந்து வெளிவரும் டெய்லி மெயில் பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில், நான்கு முனை கொண்ட நட்சத்திரத்தைப் போன்ற அதிநவீன சூப்பர்சானிக் விமானத்தை அமெரிக்க விஞ்ஞானிகள் உருவாக்க உள்ளனர்.
 

ஒலியை விட வேகமாகப் பயணிக்கக் கூடிய இந்த விமானம், தரையில் இருந்து புறப்பட்ட பின் ஆகாயத்தில் 90 டிகிரியில் திரும்பக் கூடிய வகையில் வடிவமைக்கப்படும். இதன் இரு புறமும் நீளமான இறக்கைகள் அமைந்திருக்கும்.
 

இந்த விமானத் தொழில்நுட்பத்தை உருவாக்க நாசா ஒப்புதல் அளித்துள்ளது.
இதற்கான தொழில்நுட்பத்தை மியாமி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் கேசெங் ஸா என்ற பேராசிரியர் உருவாக்கியுள்ளார்.
 

அவர் தலைமையிலான விஞ்ஞானிகள் குழு இந்த விமானத் தொழில்நுட்பம் தொடர்பாக மேலும் ஆராய்ச்சியில் ஈடுபட உள்ளதாகவும், சூப்பர்சானிக் விமானம் 10 ஆண்டுகளில் உருவாக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.சவுதி அரேபியா நாட்டில் குற்றவாளிகள் இருவருக்கு தலை துண்டிப்பு


                                                சவுதி அரேபிய நாட்டில் கொலை, கற்பழிப்பு, ஆயுதக்கடத்தல், போதைப்பொருள் கடத்தல் மற்றும் மதமாற்றம் போன்ற குற்றங்களுக்காக இஸ்லாமிய ஷரியா சட்டப்படிதலை வெட்டி மரணதண்டனை நிறைவேற்றப்படுகிறது.
 

நாட்டின் தென்மேற்கு பகுதியில் உள்ள அபா நகரை சேர்ந்த அஹமத் பின் ஹசன் செரி என்பவர் சக நாட்டை சேர்ந்த ஒருவரை துப்பாக்கியால் சுட்டு, கத்தியால் குத்தி கொலை செய்திருக்கிறார். இந்த குற்றத்திற்காக அவரது தலையை நீண்ட வாள் கொண்டு வெட்டி மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது.
 

பாகிஸ்தானி ஒருவர் தனது வயிற்றுக்குள் போதை பொருளை மறைத்து கடத்திய குற்றத்திற்காக மெதினா நகரில் சிரச்சேதம் செய்யப்பட்டு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது.
 

இந்த வருடம் இதுவரை 52 பேரும், சென்ற வருடம் 79 பேரும் தலைவெட்டப்பட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது என்று மனித உரிமை அமைப்புகள் குறைகூறியுள்ளது.டிரைவிங் லைசென்ஸ் பெற புதிய கட்டுப்பாடு: உடல் உருப்பு விருப்பம் தெரிவிக்க வேண்டும்வாகனங்கள் பெருக்கத்துக்கு ஏற்ப விபத்துகளும் அதிகரித்து வருகின்றன. கடந்த ஆண்டு புள்ளி விவரப்படி இந்தியாமுழுவதும் மணிக்கு 17 பேர் வீதம் சாலை விபத்தில் பலியாகி உள்ளனர். தினமும் 390 பேர் பலியானதாக ஆவணங்களில் பதிவாகி உள்ளன.
 

விபத்தில் படுகாயம் அடைபவர்களின் உறுப்புகள் பாதிக்கப்படுபவர்கள் உரிய நேரத்தில் சம்பந்தப்பட்ட உறுப்புகள் தானமாகவோ அல்லது விலைக்கோ கிடைக்காமல் அதன் மூலம் மரணம் அடைபவர்களும் உண்டு.
 

உடல் உறுப்பு தானம் குறித்து எவ்வளவோ விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை. உடல் உறுப்பு தானத்தை ஊக்கப்படுத்தும் வகையில், புதிய வழிமுறைகளை கையாள மத்திய சுகாதார அமைச்சகம் தீர்மானித்தது.
டிரைவிங் லைசென்ஸ் கேட்டுவிண்ணப்பம் செய்வோர்களிடம் விபத்து ஏற்பட்டால் உடல் உறுப்பு தானம் செய்வதாக விருப்பம்தெரிவிக்கும் வகையில், விண்ணப்பங்களில் கூடுதல் விவரங்கள் சேர்க்கப்பட உள்ளன.
 

இதற்கு வசதியாக மனித உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை விதிகள் குறித்தபுதிய மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது. இது தொடர்பாக, வல்லுனர்களுடன் சுகாதார துணை அமைச்சக அதிகாரிகள் கடந்த மாதம் 30-ந்தேதி விரிவாக ஆலோசனை நடத்தினர்.
 

டிரைவிங் லைசென்ஸ் கேட்டுவிண்ணப்பிப்பவர்கள் உடல் உறுப்பு தானம் செய்வதற்குகட்டாயப்படுத்தப்பட மாட்டார்கள். ஆனால், விண்ணப்பத்தில் அதற்கான பகுதியில் ஆம் அல்லது இல்லை என்று கட்டாயம் தங்களது விருப்பத்தை குறிப்பிட்டு ஆக வேண்டும்என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
 

இந்த மசோதா நகல் போக்குவரத்து அமைச்சகத்துக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த செயல் திட்டத்துக்கு போக்குவரத்து அமைச்சகம் ஒப்புதல் அளித்தால், மோட்டார் வாகன சட்டத்திலும் திருத்தம் மேற்கொள்ளப்படும்.
 

இதுபற்றி போக்குவரத்து துறை அமைச்சக இணை செயலாளர் நிதின் கோகர்ன் கூறுகையில், சுகாதார துறை அமைச்சகம் அனுப்பியுள்ள செயல் திட்டத்தை கவனமாக ஆராய்ந்து வருகிறோம். இந்த விஷயத்தில் அவசரப்பட்டு எதுவும் செய்ய முடியாது என்றார்.

திங்கள், 3 செப்டம்பர், 2012

காங்கிரஸ் மாணவர் அமைப்பு உறுப்பினரை தீவைத்துக் கொளுத்திய ஹிந்துத்துவா பயங்கரவாதிகள்!

Bajrang Dal sets afire NSUI activist


                                      போபால்:மத்தியபிரதேச மாநிலம் ஷாஹ்பூரில் காங்கிரஸ் கட்சியின் மாணவர் அமைப்பான நேசனல் ஸ்டுடண்ட்ஸ் யூனியன்(என்.எஸ்.யு)  உறுப்பினரான மாணவர் ஒருவரை ஹிந்துத்துவா பயங்கரவாத அமைப்பான பஜ்ரங்தளத்தைச் சார்ந்தவர்கள் மண்ணெண்ணெயை ஊற்றி தீவைத்துக் கொளுத்தியுள்ளனர். இதில் காயமடைந்த 20 வயதான மாணவர் ரோஹித் ஜோஷி மருத்துவமனையில் சிகிட்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடலில் 35 சதவீத பகுதிகளும் தீயில் கருகிவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

ஷாஹ்பூர் அரசு கல்லூரியில் போதிய பேராசிரியர்கள் இல்லை என்று சப் டிவிசனல் மாஜிஸ்ட்ரேட்டிடம் ரோஹித் இரண்டு தினங்கள் முன்பு புகார் அளித்திருந்தார். இதனைத் தொடர்ந்து ரோஹித்திற்கும், பஜ்ரங்தளத்தின் வெறிப்பிடித்த ஹிந்துத்துவாவினருக்கும் இடையே வாக்குவாதம் நடந்தது.

நேற்று முன் தினம் பஜ்ரங்தளத்தைச் சார்ந்த தீவிரவாதிகளான ஷியாம் சுக்லா, விஜய் சவுதரி, அவிநாஷ் சிங் யாதவ், வினோத் மோரே ஆகியோர் ரோஹித் ஜோஷியின் வீட்டிற்கு சென்று இப்பிரச்சனைக் குறித்து பேசித் தீர்ப்போம் என பொய்யாக கூறி வெளியே அழைத்துச் சென்றனர். இதனை நம்பி அவர்களுடன் சென்ற ரோஹித்தை, பஜ்ரங்தளத்தைச் சார்ந்த ஹிந்துத்துவா வெறியர்கள் மறைவான இடத்திற்கு அழைத்துச் சென்று அவர் மீது மண்ணெண்ணையை ஊற்றி தீவைத்தனர். இச்சம்பவத்தில் போலீசார் நான்கு பேர் மீது கொலை முயற்சி வழக்கை பதிவுச்செய்துள்ளனர்.

இந்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரோஹித் அபாய கட்டத்தைத் தாண்டிவிட்டதாக மருத்துவர்கள் உறுதிச் செய்தனர்.-thoothuonline


முஸ்லிம்களுக்கு எதிரான அடக்குமுறை: பொங்கியெழுந்த முஸ்லிம் உலகம் - மக்கா உச்சி மாநாடு ஒரு சிறப்புப் பார்வை

 


                                              புனித மக்கா நகரம் 150 கோடி முஸ்லிம்களால் புனிதமாகக் கருதப்படும் நகரம். இங்கு இந்தப் பூமிப்பந்தின் முக்கிய முஸ்லிம் அரசுகளின் தலைவர்கள் இரு புனிதத்தலங்களின் பராமரிப்பாளரும், சவூதி அரேபிய மன்னருமான அப்துல்லாவின் அழைப்பினை ஏற்று ‘மக்கா உச்சி மாநாட்டு’க்கு வருகை தந்தனர்.

துருக்கியின் அப்துல்லா குல், எகிப்தின் டாக்டர் முஹம்மது முர்ஸி, ஜோர்டான் மன்னர் அப்துல்லா, ஈரானின் மஹ்மூத் அஹ்மத் நிஜாத், கத்தரின் அமீர் ஷேக் ஹமாத் பின் கலீபா அல்தானி, ஏமனின் அப்துரப் மன்சூர் ஹாதி, பலஸ்தீனத்தின் மஹ்மூத் அப்பாஸ், மலேசியாவின் நஜீப் ரஸாக், சூடானின் உமர் அல்பஷீர், ஆப்கானிஸ்தானின் ஹமீத் கர்சாய், துனிசியாவின் முன்செப் அல்மர்ஜுக்கி, பாகிஸ்தானின் ஆசிப் அலி சர்தாரி, பங்களாதேஷின் முஹம்மது ஜில்லுர் ரஹ்மான் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் உலகம் முழுவதும் வாழும் முஸ்லிம் சமூகத்தின் பொதுப் பிரச்சினைகள் குறித்தும், முஸ்லிம் சமுதாயத்தை வேதனைக்குள்ளாக்கும் எரியும் பிரச்சினைகள் குறித்தும் விவாதித்தனர். 

சவூதி மன்னர் பாரம்பரிய முறையிலான பிரத்யேக உபசரிப்புகளுடன் இந்த சிறப்பு மாநாடு துவங்கியது.

அசாதாரணமான சூழலில் மக்காவில் அனைத் துலக இஸ்லாமியத் தலைவர்களும் கூடுவது இது இரண்டாவது தடவையாகும். 2005ஆம் ஆண்டில் மக்காவில் அவசரமாகக் கூட்டப்பட்டது. பல முஸ்லிம் நாடுகள் குழப்ப மேகங்களில் சிக்கி சிதிலமடைந்துள்ளன. குறிப்பாக சிரியாவில் நடைபெறுபவை எல்லாம் முடிவற்ற இருளான குகைப்பாதையாக நீண்டுகொண்டிருப்பதாக மன்னர் அப்துல்லா தமது உரையில் குறிப்பிட்டார். 

இதுபோன்ற நிலைகளைத் தவிர்க்க உலக முஸ்லிம் தலைவர்கள் ஒளிமயமான புதிய மாற்றத்திற்கு அடிகோல வேண்டும் என்றும் மன்னர் அப்துல்லா கேட்டுக் கொண்டார்.

புனித காபா ஒளிவெள்ளத்தில் மிதக்க, ரமலான் 27ஆம் இரவில் நிலவில்லா அந்த இரவில் மக்காவின் மணிக்கூண்டின் பச்சை விளக்குகள் ஒளிர, அந்த மலைநகரத்தில் அல்சஃபா அரண்மனையில் மன்னர் அப்துல்லாவின் கோரிக் கைக்கு ‘அல்லாஹு அக்பர்’ என பலமுறை முழங்கி தங்கள் ஆதரவை உலகத் தலைவர்கள் வெளிப்படுத்தினர். தராவீஹ் என்ற இரவுத் தொழுகைக்குப் பிறகு தமது சிறப்புரையை மன்னர் அப்துல்லா தொடர்வார் என எதிர் பார்க்கப்பட்ட நிலையில், அவரது உரையின் பிரதிகள் உலகம் முழுவதிலும் இருந்து வந்திருந்த செய்தியாளர்களுக்கு விநியோகிக்கப்பட்டது. உலக முஸ்லிம் தலைவர்கள் இடையே ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் அனைவரும் தங்களது வேற்றுமைகளை மறந்து ஓரிறையின் உத்தரவுப்படி புனித காபாவில் தொழுகையில் ஒன்றுபட்டனர். சிரியா, பலஸ்தீன், மியான்மர், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட பல நாடுகளில் ஏற்பட்டுள்ள துன்பங்களுக்கும் துயரங்களுக்கும் தீர்வு வேண்டி உருக்கமான பிரார்த்தனையில் ஈடுபட்டனர் உலகத் தலைவர்கள்.

ஜித்தா மக்கா எக்ஸ்பிரஸ்வே முழுவதுமாக மூடப்பட்டது. பிரத்யேக பாதுகாப்பு வளை யங்கள் அமைக்கப்பட்டது. உலகத் தலைவர்களும், நாடுகளின் பிரதிநிதிகளும் வாகனங்கள் மூலம் அழைத்து வரப்பட்டனர். ஒவ்வொரு மின் சாதனங்களும் தீவிரமாக சோதனை இடப்பட்டன. 

இந்த உச்சி மாநாட்டின் ஏற்பாடு களை செய்துவந்த இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு (ஓ.ஐ.சி) தங்களது 57 நாடுகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் முழுமையாக கலந்துகொண்டதாக தெரிவித்துள்ளது. சிரியா தொடர்பான விவாதம் எடுத்துக்கொள்ளப் பட்ட போது உச்சி மாநாட்டில் சிறிது பரபரப்பு நிலவியது. எனினும் ஈரான் அதிபர் மஹ்மூத் அஹ்மதி நிஜாத், சிரியாவுக்கு ஆதரவான 

நிலையை வலியுறுத்தி உரையாற்றினார்.
சிரியாவின் அதிபருக்காகப் பரிந்து பேசுவதை விட்டுவிட்டு கொஞ்சம் சிரியாவின் மக்களை நினைத்துப் பாருங்கள் என தனது வழக்கமான திரிபுவாதத்தை அமெரிக்கா இந்த உச்சிமாநாட்டில் வைத்தது. ஓ.ஐ.சி.யின் சிறப்பு அழைப்பாளராக, அமெரிக்காவின் பிரதிநிதியாகப் பங்கேற்ற ரஷாத் ஹுஸைன் இதனைத் தெரிவித்தார். ஈரான் அதிபர் நிஜார், சிரியா கிளர்ச்சியாளர்களுக்கு சவுதி அரேபியா, கத்தர், துருக்கி ஆகிய நாடுகள் மறைமுகமாக ஆயுதம் வழங்கியுள்ளதாக குற்றம்சாட்டினார். சிரியாவை முஸ்லிம் நாடுகளின் கூட்டமைப்பான ஓ.ஐ.சி.யை விட்டு விலக்கும் முடிவிற்கு ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அலி அக்பர் சாலிஹ் கண்டனம் தெரிவித்தார்.

ஆனால் ஈரான் கோரிக்கை ஓ.ஐ.சி.யினால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. மேலும், மியான்மரில் நிகழும் முஸ்லிம் இன அழிப்பு குறித்து கடுமையான கண்டனம் தெரிவிக்கப்பட்டது. ரோஹின்கியா முஸ்லிம்களின் உரிமைகளை நசுக்கியவர்கள் மீது கடுமையான விசாரணை களும், நடவடிக்கைகளும் தேவை என மக்கா உச்சி மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது. உலக அளவில் மிக மோசமாக ஒடுக்கப்படும் மக்களை மீட்க மியான்மர் அரசு உடனடியாக வன்முறையாளர்களை தண்டிக்க தயங்கக்கூடாது. 

நிவாரண உதவிகளை உடனடியாக வழங்க வேண்டும். நிவாரண உதவிகளை வழங்க விரும்புவோரைத் தடுக்கக்கூடாது. ரோஹிங்கியா முஸ்லிம்களின் நிம்மதியான வாழ்வுக்கு உத்தரவாதம் வழங்க மியான்மர் அரசு முன்வர வேண்டும் என மக்கா உச்சி மாநாடு கேட்டுக் கொண்டது.

முஸ்லிம் நாடுகள் ஒன்று திரண்டதன் எதிரொலியாக மியான்மர் பௌத்த மதவெறி அரசு வெளிநாடுகளிலிருந்து வரும் நிவாரண உதவிகளை அனுமதிக்கத் துவங்கியுள்ளது. 

துருக்கிய அரசு பெருமளவு நிவாரணங்களை தனது வெளியுறவுத்துறை அமைச்சரின் தலைமையில் அனுப்பிவைத்தது. அந்த நிவாரணக் குழுவில் முக்கிய உறுப்பினராகப் பங்கேற்ற துருக்கியப் பிரதமர் ரஜப் தய்யிப் எர்தோகனின் மனைவி ரோஹிங்கிய முஸ்லிம்களின் துயர நிலை கண்டு கண்ணீர்விட்டுக் கதறினார். இது ரத்தம் குடிக்கும் பௌத்தம் பற்றி உலகின் கண்ணோட்டத்தை பறைசாற்றியது. முஸ்லிம் உலகம் தனது நீடு துயிலைக் கலைத்து சோம்பல் முறித்து புறப்பட்டு விட்டதாகவே எடுத்துக் கொள்ள வேண்டும்.

--அபுசாலிஹ் tmmk.info


ஞாயிறு, 2 செப்டம்பர், 2012

TMMK - MMK சமுதாய கலங்கரை விளக்கம் - 2012 VIDEO


TMMK - MMK சமுதாய கலங்கரை விளக்கம் - 2012 VIDEO

 

காரைக்காலில் பள்ளிவாசல் கட்ட பூஜை...............!!அஸ்தஃபிருல்லாஹ்.........!! அஸ்தஃபிருல்லாஹ்.........!!

காரைக்காலில் நடந்த கொடுமை.............!!

பள்ளிவாசல் கட்ட பூஜை...............!!

ஒரு சகோதரர் காரைக்காலில் பள்ளிவாசல் கட்டுவதற்காக பூஜை நடத்தப்பட்டதை புகைப்பட ஆதாரத்துடன் அனுப்பி வைத்துள்ளார்.

இது உண்மையாக இருக்கும் பட்சத்தில் இது குறித்து காரைக்கால் மக்களுக்கு மிகப்பெரும் கடமை உள்ளது என்பதைச் சுட்டிக்காட்டுகிறோம்.

காரைக்காலில் ''ஹில்ரு பள்ளிவாசல்'' கட்டுவதற்கான துவக்க நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் தாடியும் தொப்பியும் வைத்துக் கொண்டு இந்து மதத்தைப் பின்பற்றி பூஜை செய்துள்ளனர்.

அல்லாஹ்வின் பள்ளிவாசல் சிறப்பாகக்கட்ட பூமிக்கு பூஜை செய்தால் நல்லபடியாக முடியும் என்று நம்பும் இவர்களுக்கு பள்ளிவாசல் எதற்கு? பேசாமல் கோவில் கட்டி கும்பாபிஷேகம் செய்ய வேண்டியது தானே?

அல்லாஹ்வின் பள்ளியை யார் நிர்வாகிக்க வேண்டும் என்று அல்லாஹ் கூறுகிறான்

''இணை கற்பிப்போர் தமது (இறை) மறுப்புக்கு, தாமே சாட்சி கூறிக் கொண்டிருக்கும் நிலையில் அல்லாஹ்வின் பள்ளிவாசல்களை நிர்வகிப்பது தகாது.

அவர்கள் செய்தவை அழிந்து விட்டன. அவர்கள் நரகில் நிரந்தரமாக இருப்பார்கள்.

அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பி தொழுகையை நிலை நாட்டி ஸகாத்தும் கொடுத்து அல்லாஹ்வைத் தவிர எவருக்கும் அஞ்சாதிருப்போரே அல்லாஹ்வின் பள்ளிவாசல்களை நிர்வகிக்க வேண்டும். அவர்களே நேர் வழி பெற்றோராக முடியும்.

ஹாஜிகளுக்குத் தண்ணீர் வழங்கி, மஸ்ஜிதுல் ஹராமை நிர்வகிப்போரை அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பி, அல்லாஹ்வின் பாதையில் போரிடுவோரைப் போல் கருதுகிறீர்களா?

அவர்கள் அல்லாஹ்விடம் சமமாக மாட்டார்கள். அநீதி இழைத்த கூட்டத்துக்கு அல்லாஹ் நேர்வழி காட்ட மாட்டான்.'' திருக்குர்ஆன் 9:17,18,19'தீங்கிழைப்பதற்காகவும், (ஏக இறைவனை) மறுப்பதற்காகவும், நம்பிக்கை கொண்டோரிடையே பிரிவை ஏற்படுத்திடவும், இதற்கு முன் அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் எதிராகப் போரிட்டோருக்குப் புகலிடமாகவும் ஒரு பள்ளிவாசலை ஏற்படுத்திக் கொண்டோர் ''நாங்கள் நல்லதைத் தவிர வேறெதனையும் நாடவில்லை'' என்று சத்தியம் செய்கின்றனர். ''அவர்கள் பொய்யர்களே'' என்று அல்லாஹ் சாட்சி கூறுகிறான்.. அதில் நீர் ஒரு போதும் வணங்காதீர்!

அதில் தூய்மையை விரும்பும் ஆண்கள் உள்ளனர். அல்லாஹ் தூய்மையானவர்களை விரும்புகிறான். அல்லாஹ்வைப் பற்றிய அச்சத்தின் மீதும், அவனது திருப்தியின் மீதும் தனது கட்டடத்தை நிர்மாணித்தவன் சிறந்தவனா? அல்லது அரிக்கப்பட்டு விழுந்து விடும் கட்டடத்தை கரை ஓரத்தில் கட்டி அதனுடன் நரகத்தில் சரிந்து விழுந்து விட்டவன் சிறந்தவனா?

அநீதி இழைத்த கூட்டத்திற்கு அல்லாஹ் நேர் வழி காட்ட மாட்டான்.'' (திருக்குர் ஆன் 9:107,108,109)

மேற்கண்ட வசனங்களின் அடிப்படையில்

இவர்கள் பள்ளியை நிர்வாகம் செய்ய தகுதியற்றவர்களாகி விட்டனர்.

இவர்களைத் தூக்கி எறிவது காரைக்காலைச் சேர்ந்த ஒவ்வொரு முஸ்லிமின் மார்க்கக் கடமையாகும்.

முடியாவிட்டால் இதைப் பள்ளிவாசலாக அங்கீகரித்து உதவிகள் செய்வதை உடனே நிறுத்த வேண்டும்.

ஏனெனில் இது போல் இணை வைப்பின் அடிப்படையில் நிர்மாணிக்கப்பட்டவை பள்ளிவாசலே அல்ல என்று அல்லாஹ் மேற்கண்ட வசனத்தின் மூலம் தெளிவுபடுத்துகிறான்.

இதை காரைக்கால் சகோதரர்கள் பிரசுரமாக வெளியிட்டு மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.


பணம் கொடுத்து மதமாற்றம் செய்யும் தொண்டு நிறுவனங்கள்: தவ்ஹீத் ஜமாஅத் குற்றச்சாட்டு.................!!


தினமணி செய்தி: பணம் கொடுத்து மதமாற்றம் செய்யும் தொண்டு நிறுவனங்கள்: தவ்ஹீத் ஜமாஅத் குற்றச்சாட்டு.................!!


சென்னை, மார்ச்.18: அரசு சாரா போலி தொண்டு நிறுவனங்கள் குடிசைப் பகுதிகளிலும், ஏழைகள் வசிக்கும் பகுதிகளிலும் சேவை செய்கிறோம் என்ற பெயரில் பணம் கொடுத்து மதமாற்றம் செய்வது நாள்தோறும் அதிகரித்து வருவதாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநிலத் தலைவர் பீ.ஜைனுல் ஆபிதீன் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:-

இந்தியாவில் கிறித்தவ மதத்தைச் சேர்ந்த அரசு சாரா போலி தொண்டு நிறுவனங்கள் குடிசைப் பகுதிகளிலும், ஏழைகள் வசிக்கும் பகுதிகளிலும் சேவை செய்கிறோம் என்ற பெயரில் பணம் கொடுத்து மதமாற்றம் செய்வது நாள்தோறும் அதிகரித்து வருகிறது. பணமாகவும், வீடுகளாகவும் எப்படி இவர்களை இத்தனை கோடிகளைச் செலவிட்டு ஆள் பிடிக்க முடிகின்றது? தனியார் தொலைக்காட்சிகளில் மாதந்தோறும் பல லட்சம் ரூபாய்கள் கட்டணம் செலுத்தி எப்படி நாடு முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட மதப்பிரச்சார நிகழ்ச்சிகளை நடத்த முடிகிறது என்ற சந்தேகங்களுக்கு இப்போதுதான் அரசின் சார்பில் விடையளிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா, ஜெர்மனி, பிரிட்டன், இத்தாலி, நெதர்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து ஆண்டுதோறும் 10 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் அந்நியப் பணம் வருவதாகவும், இவ்வாறு அந்நிய நாட்டு பணம் பெறக்கூடிய 22 ஆயிரம் நிறுவனங்கள் உள்ளதாகவும் மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. தமிழகத்துக்கு மட்டும் ஆண்டு தோறும் சுமார் 2000 கோடி ரூபாய் வருகின்றன என்றும், சென்னைக்கு மட்டும் 871 கோடி ரூபாய் வருகின்றது என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

எவ்வளவு நிதி வந்துள்ளது என்பதை அறிவித்துள்ள மத்திய அரசு, ஏழை மக்களின் வறுமையைப் பயன்படுத்தி மதத்திற்கு ஆள் பிடிப்பதற்காகவே அந்தப் பணத்தில் 90 சதவிகிதம் பயன்படுத்தப்பட்டுள்ளது என்ற உண்மையை மட்டும் இருட்டடிப்பு செய்துள்ளது.

சாதராண பொதுமக்களுக்குக்கூட தெரிந்த இந்த உண்மை மத்திய அரசுக்குத் தெரிந்திருந்தும் இதை மத்திய அரசு இருட்டடிப்பு செய்தது ஏன் என்று புரியவில்லை.

சுதந்திரப் போராட்ட காலத்தில்தான் திருச்சபைகள் வெள்ளையர்களுக்கு அடிமைச் சேவகம் செய்தார்கள் என்றால், நாடு சுதந்திரம் அடைந்த பின்னரும் அவர்களை எஜமானர்களாக ஆக்கிக் கொண்டு, அவர்களிடம் கூலி வாங்கிக் கொண்டு ஆள்பிடிப்பதைக் கண்டு கொள்ளாமல் இருப்பது தேசிய அவமானமாகும்.

இதுபோன்ற தேசவிரோத சக்திகளுக்கு அந்நிய நாடுகளில் இருந்து வரும் நிதியாதாரங்களை அறவே தடை செய்ய வேண்டும். இதை இரும்புக் கரம் கொண்டு மத்திய மாநில அரசுகள் ஒடுக்க வேண்டும். பணம் கொடுத்து மதமாற்றம் செய்து மனித குலத்தை இழிவுபடுத்தும் இவர்கள் சிறுபான்மையினர் என்ற போர்வையில் ஒளிந்து கொண்டு தப்பிக்க இடமளிக்கக்கூடாது என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வலியுறுத்துகிறது.

அந்நிய சக்திகளின் ஏஜென்டுகளைக் கொண்டு இயங்கும் நிறுவனங்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாநிலம் முழுவதும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாபெரும் போராட்டங்களை நடத்தும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

நன்றி : தினமணி
உலகில் அதிகம் பரவும் மார்க்கம் இஸ்லாம், போப் ஆண்டவர் அறிவிப்பு................!!


உலகில் அதிகம் பரவும் மார்க்கம் இஸ்லாம் என போப் ஆண்டவர் விடுத்த அறிக்கையை மேற்கோள்காட்டி வாட்டிகன் இணையதளம் செய்திவெளியிட்டுள்ளது.

அதிகம் பரவிவரும் மார்க்கங்களில் இஸ்லாம் முன்னிலை வகிப்பதாகவும் கிரிஸ்தவ மதம நம்பிக்கையாளர்களைவிட மூன்று மில்லியன் அதிக எண்ணிக்கையுடையோராக முஸ்லிம்கள் உள்ளனர் என்றும் உலக சனத்தொகையில் நூற

்றில் 17.5 விகிதத்தினர் கிரிஸ்த வர்களென்றால் அதில் 19 வீதமானோர் முஸ்லிம்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

வருடாந்தம் 40 ஆயிரம்பேர் இஸ்லாத்தில் இணைவதாகவும் கிறிஸ்தவ, யூத மற்றும் பிற மதத்தினர் இவ்வாண்டின் இறுதிப் பகுதியாகும்போது அதிகமாக இஸ்லாத்தில் இணையும் வாய்ப்புள்ளது என்றும் கூறியுள்ளார்.

நன்றி: புதியதூது