புதன், 11 ஜூலை, 2012

நாளை வேலைவாய்ப்பு பயிற்சி முகாம் அனைவருக்கு வேலை உறுதி: கலெக்டர் தரேஷ்அஹமது


21 பேருக்கு பணி நியமன ஆணை

                   புதுவாழ்வு திட்டத்தின் மூலம் தமிழகத்தின் முன்னணி நிறுவனங்களில் நேரடி மற்றும் பயிற்சியோடு கூடிய வேலை வாய்ப்பு முகாம் பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் நாளை காலை 9 மணி முதல் நடக்கிறது.
 
இதில் கேபிடல் சி.என்.சி., கம்பெனியில் சி.என்.சி., ஆப்ரேட்டர் பயிற்சிக்கு எஸ்.எஸ்.எல்.ஸி., +2, ஐ.டி.ஐ., முடித்தவர்களுக்கு 45 நாட்கள் பயிற்சியளிக்கப்படுகிறது. இலவசமாக தங்குமிடம், உணவு, ரூ.4,000 ஊக்கத்தொகை வழங்கப்படும்.பயிற்சி மற்றும் நிரந்தர வேலைவாய்ப்பு பெற்று தரப்படும்.
 
எல் அன்ட் டி கம்பெனியில் சாரம் அமைத்தல் மற்றும் தச்சு பணி, கம்பி கட்டுதல், கொத்தனார், மின் பணியாளர் மற்றும் கம்பியாளர் பயிற்சிக்கு ஐந்தாம் வகுப்பு முதல் ஐ.டி.ஐ., வரை படித்தவர்களுக்கு மூன்று மாதம் பயிற்சி அளிக்கப்படுகிறது. இலவசமாக தங்குமிடம், உணவு, ரூ.2,000 ஊக்க தொகை வழங்கப்படும். அரசு சான்றிதழ் உடன் நிரந்தர வேலைவாய்ப்பு பெற்று தரப்படும்.குளோபல் பிசினஸ் ஏஜென்ஸிஸ் நிறுவனத்தின் மூலம் வெளிநாட்டிலும் வேலைவாய்ப்பு பெற்று தரப்படும்.
 
சென்னை டி.வி.எஸ்., கம்பெனியில் போர்க்லிப்ட் ஆப்ரேட்டர், ஜூனியர் எஸ்.எஸ்.எல்.ஸி., +2, ஐ.டி.ஐ., தேர்ச்சி அல்லது தோல்வியடைந்தவர்களுக்கு 30 நாள் பயிற்சியளிக்கப்படுகிறது. இலவசமாக தங்குமிடம் உணவு, பயிற்சிக்குப்பின் ரூ.5,435- ரூ.6,360 வரை ஊதியத்தில் வேலை பெற்றுத்தரப்படும். எம்.ஆர்.எப்., கம்பெனியில் அப்ரண்டிஸ் பயிற்சிக்கு எஸ்.எஸ்.எல்.ஸி., +2, ஐ.டி.ஐ., தேர்ச்சி அல்லது தோல்வியடைந்தவர்களுக்கு மூன்றாண்டு பயிற்சியளிக்கப்படுகிறது. முதல் வருடம் மாதம் ரூ.5,460 ஊக்கத்தொகையாக வழங்கப்படும். 

ஒவ்வொரு வருடமும் ஊக்கத்தொகை அதிகரிக்கப்படும். சென்னை இன்டிமேட் பேஷன் கம்பெனியில் ஆயத்த ஆடை தயாரிப்பு பயிற்சிக்கு எட்டாம் வகுப்பு முதல் +2 வரை படித்தவர்களுக்கு 30 நாள் பயிற்சியளிக்கப்படுகிறது. இலவசமாக தங்குமிடம், உணவு ரூ.3,500 வரை ஊக்கத்தொகையுடன் நேரடி வேலைவாய்ப்பு வழங்கப்படும்.
 
துவாக்குடி மாநில உணவு மேலாண்மை மையத்தில் உணவு மற்றும் பேக்கரி வகைகள் தயாரித்தல் பயிற்சிக்கு கல்வித்தகுதி எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு 45 நாள் பயிற்சியளிக்கப்படுகிறது. இலவசமாக தங்குமிடம், பயிற்சிக்குப்பின் ரூ.5000 ஊதியத்தில் வேலை பெற்றுத்தரப்படும். 

நிரஞ்சன் நர்சிங் ஹோம் நிறுவனத்தில் பெண்களுக்காக நர்சிங் பயிற்சிக்கு எஸ்.எஸ்.எல்.ஸி., படித்திருக்க வேண்டும்.  

 இப்பயிற்சிக்கு தகுதியுள்ள 18 வயது முதல் 35 வயது வரைவுள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் அனைத்து சான்றிதழ்களின் அசல் நகலுடன் வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்கலாம்.
 
விபரங்கள் அறிய புதுவாழ்வு திட்ட அலுவலகம் 04328-225133, 94880-44623 ஆகிய நம்பரில் தொடர்பு கொள்ளலாம். தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் வேலைவாய்ப்பு உறுதி என பெரம்பலூர் கலெக்டர் தரேஷ்அஹமது தெரிவித்துள்ளார். 

-dinamalar