புதன், 19 டிசம்பர், 2012

பில்கிஸ் கற்பழிப்பு வழக்கு: 11 பேருக்கு ஆயுள்



குஜராத்தைச் சேர்ந்த பில்கிஸ் பானு என்ற கர்ப்பிணிப் பெண்ணைக் கொடூரமாக கற்பழித்து, அவரது குடும்பத்தைச் சேர்ந்த 14 பேரை படுகொலை செய்த பரபரப்பு வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட 11 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2002ம் ஆண்டு நடந்த கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து குஜராத்தில் பெரும் வன்முறை வெடித்தது.

முஸ்லீம்கள் குறி வைத்து கொன்று குவிக்கப்பட்டனர். அதில் ஒரு கொடூர சம்பவமாக, தஹோத் மாவட்டத்தைச் சேர்ந்த பில்கிஸ் பானு என்ற 6 மாத கர்ப்பிணிப் பெண்ணை பெரும் கும்பல் சேர்ந்து கொடூரமாக கற்பழித்தது. பானுவின் குடும்பத்தைச் சேர்ந்த 14 பேர் மிகக் கொடூரமாக கொல்லப்பட்டனர். இதுதவிர பானுவின் குடும்பத்தைச் சேர்ந்த பல பெண்களும் வெறிக் கும்பலின் கொடூர கற்பழிப்புக்கு ஆளானார்கள்.

இத்தகையக் கொடூரக் குற்றவாளிகளுக்கு வெறும் ஆயுள் தண்டனை தான் தீர்ப்பாம்.அதிலும் திட்டமிட்டு படுகொலைகளை நடத்திய காவி பயங்கரவாதி மோடிக்கு பிறந்த நாளோ செத்த நாளோ வந்தால் விடுதலையும் செய்யப்படுவார்கள்.

கொலைக்குக் கொலைதான் தண்டனை என்பது தூக்குத் தண்டணை;அதனை பொதுமக்கள் மத்தியில் பொது இடத்தில் பயங்கரவாதிகளின் குற்றங்கள் வாசிக்கப்பட்டு அனைவரும் பார்க்கும்படி தணடனையை நிறைவேற்றினால் அரசு மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும். மேலும் இது போன்ற குற்றவாளிகள் குறையவும் வாய்ப்புக்கள் உண்டு.

கசாபை ரகசியமாக தண்டனை என்ற பெயரில் தூக்கிலிட்டு நாட்டை உலுக்கி வரும் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக பகிங்கர ஆதரவு
கொடுத்து மாபெரும் உண்மைகளை மறைத்து மக்களை இனியும் ஏமாற்ற வேண்டாம் என்று நற்சிந்தனையாளர்கள் அரசைக் கேட்டுக் கொள்கின்றனர்