சனி, 16 ஜூன், 2012

பர்மாவை கண்டும் காணாத ஐ நா வை கண்டித்து!?

 
பர்மாவில் நடைபெற்று வரும் இன கலவரத்தில் இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டும் சொந்த மண்ணிலேயே அநாதையாக்கப்பட்டு உள்ளனர்.

இதனை ஐக்கிய நாடுகள் சபை கண்டும் காணாமல் கண்மூடி மௌனம் சாதிப்பதை கண்டித்து வரும் 19.06.2012 அன்று இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் ஒருங்கிணைந்த சென்னை மாவட்டங்களின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் பெசன்ட் நகர் பீச் அருகில் உள்ள ஐ,நா,அகதிகள் மறுவாழ்வு துறை அலுவலகம் முன்பு மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது .



*இந்த போராட்டத்தில் அநீதிக்கு எதிராக குரல் கொடுக்க அணியணியாய் கலந்து கொள்ள கேட்டுகொல்கிறது இந்திய தவ்ஹீத் ஜமாஅத்.

-sinthikkavum.net 

18 ஏக்கர் வக்ஃபு இடத்தை வளைத்துப் போட முயற்சி... தடுக்க தமுமுகவினர் தீவிரம்



 
வரலாற்றுச் சிறப்புமிக்க, ஆற்காடு நவாப் ஆட்சி புரிந்த நகரத்தில் பல கோடி ரூபாய் கோடி மதிப்புள்ள வக்ஃபு சொத்துக்கள் சூறையாடப்பட்டுள்ளன.

வக்ஃபு சொத்துகள் எண்ணும் ஒரு பெரும் புதையல் அரசின் அலட்சியத்தாலும், முஸ்லிம் சமுதாயத்தைச் சேர்ந்த சில சுயநலமிகளாலும் இன்னும் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த அரசியல்வாதிகளாலும் பணமுதலைகளாலும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு கொள்ளை அடிக்கப் பட்டுள்ளது. இதைக் கேட்க நாதியற்ற நிலையில் இந்த சமுதாயம் இருந்தது. இந்நிலையில் தமிழகத்தில், தமுமுக என்ற இயக்கம் வக்ஃபு சொத்துக்களை மீட்க அயராது உழைத்துக் கொண்டிருக்கிறது. 

கடந்த மாதம் ஆற்காடு பகுதியில் 250 ஆண்டு கால அடக்கஸ்தலம் ஆக்கிரமிக்கப்பட்டு பிளாட் போட வசதியாக சமன்படுத்தப்பட்டிருந்தது. தமுமுகவினர் தலையிட்டு அதிகாரிகளின் துணையுடன் அந்த இடத்தை மீட்டனர். தற்போது மேலும் ஒரு வக்ஃபு இடத்தை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அதுகுறித்து இப்போது பார்ப்போம். ஆற்காடு சையத் ஷாபித் அலி ஷா தர்கா பள்ளிவாசல் வக்ஃபுக்குச் சொந்தமாக தேசிய நெடுஞ்சாலையின் புறவழிச்சாலையில் 18 ஏக்கர் 36 சென்ட் நிலம் உள்ளது. இதன் குறைந்தபட்ச அரசாங்க மதிப்பு சுமார் 20 கோடியாகும். இராணிப்பேட்டை EID Parry கம்பெனி அருகில் அமைந்துள்ளது மொய்யா பீ தர்கா. இந்த இடத்தில் முஸ்லிம் மக்கள் பல ஆண்டுகாலமாக வசித்து வருகிறார்கள். தற்பொழுது இந்த இடத்தில் இரயில்வே மேம்பாலம் அமைய உள்ளதால், அனைத்துவீடுகளையும் காலி செய்யும்படி இரயில்வே நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்நிலையில் தமுமுக நிர்வாகிகள், இரயில்வே நிர்வாகத்திடம், இதுவரை வசித்துவந்த ஏழை மக்களுக்கு மாற்று இடம் வழங்க ஏற்பாடு செய்யுமாறு முறையிட்டனர். இதற்கு எந்தவித பதிலையும் இரயில்வே நிர்வாகம் அளிக்காத நிலையில், வேலூர் கிழக்கு மாவட்ட தமுமுக-மமக தலைவர் ஏஜாஸ் அஹமது, மாவட்ட துணைத் தலைவர் ஏ.ஓ.இம்ரான் ஆகியோர் முன்னிலையில் ஆற்காடு நகர தேசிய நெடுஞ்சாலையில் புறவழிச் சாலையில் அமைந்துள்ள சையத் ஷாபித் அலி ஷா தர்கா பள்ளிவாசல் வக்ஃபுக்குச் சொந்தமான இடத்தில் 18.05.2012 அன்று ஜே.சி.பி. இயந்திரம் மூலம் தமுமுகவினர் சுத்தம் செய்து குடிசைகள் அமைத்துத்தர ஏற்பாடு செய்தனர்.

தமுமுகவினர் இப்பணிகளை மேற்கொண்டிருந்த சமயம் காலித் என்பவர், இந்த இடத்திற்கு நான்தான் முத்தவல்லி என்று சொந்தம் கொண்டாடி தகராறு செய்துள்ளார். இதனிடையே சம்பவ இடத்திற்கு ஆற்காடு நகர காவல்துறை கண்காணிப்பாளர் (எஸ்.பி.) மற்றும் துணை கண்காணிப்பாளர் (டி.எஸ்.பி.), தாசில்தார், வக்ஃபு ஆய்வாளர் ஆகியோர் வருகை தந்தனர். வக்ஃபு ஆய்வாளர், இது வக்ஃபு இடம் என உறுதி செய்ததுடன், காலித் முத்தவல்லி என்று ஆவணங்களுடன் எடுத்துரைத்தார்.

இதற்கிடையே வீடின்றி தவித்த ஏழை மக்கள் 40 பேருக்கு குடிசைகள் அமைத்துக் கொடுக்கப்பட்டன. இதற்கிடையில் கடந்த 22.05.2012 அன்று வேலூரைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் தாமோதரன், இந்த இடம் தனக்குச் சொந்தமான பட்டா நிலம் என்றும், இதில் யாரும் தனது அனுமதியில்லாமல் உள்ளே வரக்கூடாது என்று பத்திரிகையாளர்களிடம் கூறியதுடன், வக்ஃபு இடத்தில் இருந்த தமுமுகவினரையும் மிரட்டிச் சென்றுள்ளார். இந்த 18 ஏக்கர் நிலத்தை தாமோதரனுக்கு எழுதிக் கொடுக்கப்பட்டுள்ளதாக தாமோதரன் வைத்துள்ள போலி ஆவணம் கூறுகிறது. வக்ஃபிற்குச் சொந்தமான இடம் எக்காரணம் கொண்டும் முஸ்லிம்களிடமிருந்து கைவிட்டுச் சென்றுவிடக் கூடாது என்ற உறுதி காரணமாக ஆற்காடு, இராணிப்பேட்டை, கலவை, கல்மேல்குப்பம், வாலாஜா பகுதியைச் சேர்ந்த தமுமுகவினர் கடந்த 20 நாட்களாக குறிப்பிட்ட இடத்தில், இரவில் எவ்வித வெளிச்சமும் இல்லாத நிலையிலும், பாம்பு, தேள் போன்ற விஷ ஜந்துக்கள் உள்ள பகுதியை பசி பட்டினியோடும் தினமும் உறங்கி காவல் காத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

--எச்.ஆசாத்
-tmmk.info

முஸ்லிம்களை திருப்திப்படுத்திய உ.பி. பட்ஜெட் மாயாவதி ஆட்சியை விட 81 சதவீதம் கூடுதல் நிதி ஒதுக்கீடு

அகிலேஷ் யாதவ்
அகிலேஷ் யாதவ்

                                       முஸ்லிம்களின் அமோக ஆதரவில் ஆட்சியைப் பிடித்த முலாயம்சிங்கின் சமாஜ்வாடி கட்சி பொறுப்பேற்றதில் இருந்து தொடர்ந்து தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் தீவிர முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.
சிறையில் வாடும் சிறுபான்மை சமூக நிரபராதிகளை விடுவிக்க சட்டப்பூர்வ நடவடிக்கைகளைத் தொடங்கி அனைத்து மக்களின் பாராட்டுக்களையும் பெற்ற முதல்வர் அகிலேஷ் யாதவ், தொடர்ந்து தனது நற்பெயரைத் தக்கவைக்க அரும்பாடுபட்டு வருகிறார். இதன் தொடர்ச்சியாக தனது ஆட்சியின் முதல் பட்ஜெட்டில் ஆக்கப்பூர்வ செயல்திட்டங்களைத் தொடங்கியுள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலம் 2012-2013ஆம் ஆண்டில் வரவு-செலவு திட்டத்தில் சிறுபான்மையினருக்கான நிதி ஒதுக்கீடாக ரூபாய் 2 ஆயிரம் கோடியே 74 லட்சத்து 11 ஆயிரம் ஒதுக்கீடு செய்து அனைத்து மாநில முதல்வர்களுக்கும் ஒரு முன்னுதாரணமாகத் திகழ்கிறார்.
ஜூன் 1ஆம் தேதி வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் சிறுபான்மையினருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியானது கடந்த மாயாவதி ஆட்சியில் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியை விட 81 சதவீதம் அதிகமாகும். கடந்த ஆட்சியில் மதரஸாக்கள் பராமரிப்பு நிதியாக ஒதுக்கப்பட்ட நிதி ரூ.50 கோடியாகும்.
தற்போது 100 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டது. 10ஆம் வகுப்பு வரை வழங்கப்படும் கல்வி உதவித் தொகையை 342 கோடியே 94 லட்சமாக உயர்த்தியதோடு, தற்போது அதனுடன் 10ஆம் வகுப்புக்கும் மேலாக +1 மற்றும் +2 படிக்கும் மாணவர்களுக்கும் கல்வி உதவித்தொகையை நீட்டித்து கூடுதலாக 130 கோடியே 53 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சிறுபான்மை சமூக மக்கள் வாழும் மாவட்டங்களில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள 480 கோடியே 44 லட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முஸ்லிம்களின் அடக்கத்தலங்களைப் பாதுகாக்க எல்லைகள் அமைக்க 200 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே முஸ்லிம்கள் அதிகம் வாழும் மாநிலம் உ.பி.என்பது குறிப்பிடத்தக்கது. மாநில மக்கள் தொகையில் 20 சதவீதத்திற்கு மேல் உள்ள முஸ்லிம்களின் ஆயிரக்கணக்கான கபரஸ்தான்களைப் பாதுகாக்க 200 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்த உ.பி. அரசை சமூகநல ஆர்வலர்கள் பாராட்டுகின்றனர். வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழும் ஒவ்வொரு முஸ்லிம் மாணவிக்கும் அவர் 10ஆம் வகுப்பு படித்த பின் மேல்படிப்பு படிக்காவிட்டாலும் அதுவரை உ.பி. அரசின் நிதி உதவி வழங்கப்படும். இந்த வகையில் 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
முஸ்லிம் நெசவாளர்களின் மின்கட்டணத் தொகை பாக்கியை அரசே ஏற்கிறது 127 கோடியே 60 லட்சம் ரூபாய் நிதியை ஒதுக்கீடு செய்து நெசவாளர்களின் மின்கட்டணப் பாக்கியை ரத்து செய்கிறது. ஏழை நெசவாளர்களுக்கு கடன் உதவி வழங்குவதற்காக 50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன்படி 17 ஆயிரம் நெசவாளர்கள் பயனடைவார்கள்.

நகர்ப்புறங்களில் முஸ்லிம்கள் வாழும் பகுதிகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளன. இந்தியா முழுவதும் இந்நிலையே நீடிக்கிறது. இந்நிலையில் நகர்ப்புறங்களில் முஸ்லிம்கள் வாழும் பகுதிகளின் சுகாதாரம், சாலைகள், சாக்கடைத் திட்டம் போன்றவற்றை சீரமைக்க 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மூத்த அமைச்சர் ஆஸம்கான், ராம்பூரில் தொடங்கிய ஜவஹர் பல்கலைக்கழகத்தின் மேம்பாட்டுக்கு 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது உ.பி. மாநில அரசு.

காலகாலமாக அழுத்தப்பட்ட சிறுபான்மை சமூக மக்களுக்கு ஓரளவு நிதி ஒதுக்கீடு செய்து இந்தியத் திருநாட்டின் அனைத்து மாநில முதல்வர்களுக்கும் முன் உதாரணமாக திகழ்கிறார் முலாயமின் மகன் அகிலேஷ். அவரை மக்கள் உரிமையின் சார்பில் நாம் வாழ்த்துவோம். மதரஸா பராமரிப்பு 100 10ஆம் வகுப்புவரை படிக்கும் மாணவ மாணவியருக்கு கல்வி உதவித் தொகை 342.94 10ஆம் வகுப்பிற்கு மேல் +1, +2 கல்வி உதவி 130.53 சிறுபான்மையினர் அதிகம் வாழும் மாவட்டங்களின் வளர்ச்சித் திட்டங்கள் 480.44 முஸ்லிம்களின் அடக்கத்தலங்களைப் பராமரிக்கும் எல்லைகளை அமைக்க 200 10ம் வகுப்பு படித்த பின்பு ஏழை முஸ்லிம் மாணவிகளுக்கு மேற்படிப்புக்கும் மற்றும் அவரது திருமணம் வரையும் நிதி உதவி 100 சிறுபான்மை நெசவாளர்களின் மின்கட்டண நிலுவைத் தொகைக்காக 127.60 நெசவாளர்களுக்கான கடன் திட்டம் 50 நகர்ப்புறங்களில் வாழும் முஸ்லிம்களின் அடிப்படைக் கட்டமைப்புகளை மேம்படுத்த 100 ராம்பூர் ஜவஹர் பல்கலைக்கழகத்தின் மேம்பாட்டுக்காக 10 இதர சிறு குறு திட்டங்கள் 70 சிறுபான்மையினர் நலத்திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு

----ஹபீபா பாலன்
-tmmk.info

புதன், 13 ஜூன், 2012

துபை ஈமான் அமைப்பின் உயர் கல்வி உதவித் திட்டம்..!

                        http://www.vkalathur.com/wp-content/uploads/2012/06/iman.jpg



துபை இந்தியன் முஸ்லிம் அசோஷியேஷன் (ஈமான் –www.imandubai.com) இன்ஷா அல்லாஹ் வழக்கம் போல் இவ்வாண்டும் உயர்கல்விக்கு உதவித்தொகை வழங்க உள்ளது. 2012 ஆம் ஆண்டு S.S.L.C. மற்றும் +2 தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைந்து, மேற்படிப்பைத் தொடர வசதியற்ற, திறமையும் ஆர்வமும் மார்க்கப் பற்றுள்ள மாணவ – மாணவியர்கள் கலை/அறிவியல், மருத்துவம், பொறியியல், தொழில்நுட்ப பட்டயம் / பட்டப்படிப்புத் திட்டத்திற்கு வரவேற்கப்படுகின்றனர்.
JOURNALISM (இதழியல்), I.A.S., (இந்திய ஆட்சிப் பணி), I.P.S., போன்ற படிப்பில் சேர்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். தேர்வு செய்யப்படும் ஈமான் கல்விக்குழுவின் பரிந்துரைப்படி உதவித்தொகை (SCHOLARSHIP) வழங்கப்படும். தேர்வு முடிவுகள் வெளியான பின்னர்,
i  மதிப்பெண் சான்றிதழ் நகல்
ii மாணவ / மாணவியர் பெயர்
iii.பாஸ்போர்ட் அளவு புகைப்படம்
iv.பிறந்த தேதி
v.முழு முகவரி தொலைபேசியுடன்
vi.பெற்றோர் பெயர்
vii.தொழில் மற்றும் மாத வருமானம்
viii.குடும்பம் பற்றிய தெளிவான சிறு குறிப்பு i
x.ஜமாஅத் பரிந்துரை கடிதம்
உள்ளிட்ட தகவல்கள் அடங்கிய விண்ணப்பித்தை IMAN EDUCATIONAL SCHOLARSHIP COUNCIL என்று தலைப்பிட்டு கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பவும். விண்ணப்பத்தை www.imandubai.com எனும் இணையத்தளத்தில் இருந்து பதிவிறக்கம் (Download) செய்து கொள்ளலாம். I
NDIAN MUSLIM ASSOCIATION ( IMAN )
P O BOX NO. 13302
DUBAI – U.A.E.
info@imandubai.com
www.imandubai.com
கடைசி தேதி: 30 ஜுன் 2012
குறிப்பு : விண்ணப்பத்தை அஞ்சலில் மட்டுமே அனுப்பவும் விண்ணப்பத்தை பதிவு அஞ்சல் ( Registered Post ) மற்றும் மின்னஞ்சல் ( E-mail ) அனுப்ப வேண்டாம்.
 
 
-vkalathur.com

புஷ்ராவின் கேள்வி பதில் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கும் விழா நடைபெற்றது!

வி.களத்தூரில் கடந்த மார்ச் மாதம் 24 ந்  தேதி  புஷ்ரா நல அறக்கட்டளையின் 15ம் ஆண்டு துவக்க விழா மற்றும் மலர் வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெற்றது .மலர் வெளியீட்டு விழாவில் மலரின் கேட்கப்பப் பட்டிருக்கும் கேள்வி பதிலில் சரியான விடையை எழுதி அனுப்புபவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது .
எனவே பொதுமக்களும் ஆர்வத்துடன் விடைகளை அனுப்பினர் .இதில் சரியான விடையை எழுதியவர்களை குலுக்கல் முறையில்  முதல் முன்று நபர்களுக்கு குக்கரும் ,மற்றும்  .ஆறுதல் பரிசாக  15 நபர்களுக்கு பேஷனும் வழங்கப்பட்டது  .
தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு கடந்த மே மாதம் 18 ந் தேதி வெள்ளிகிழமை  ஜிம்மா தொழுகைக்கு பிறகு  மில்லத் நகர் பள்ளிவாசல் அருகில் பரிசுகள் வழங்கும் விழா நடைபெற்றது .
புஷ்ரா அமைப்பாளர்கள் ,மற்றும் ஜமாத்தார்கள் முன்னிலையில் பரிசுகள் வழங்கப்பட்டது .







.

 

-vkalathur.com

முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி : வீரர், வீராங்கனைக்கு கலெக்டர் அழைப்பு




பெரம்பலூர்: "தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் முதல்வர் கோப்பைக்கான மாநிலப்போட்டியில் கலந்துகொள்வதற்கான தேர்வு விளையாட்டு போட்டியில் கலந்துகொள்ளலாம்' என கலெக்டர் தரேஷ்அஹமது தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கை:
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலமாக இம்மாத இறுதியில் நடத்தப்படவுள்ள முதல்வர் கோப்பைக்கான மாநில போட்டிக்கு தகுதியான விளையாட்டு வீரர், வீராங்கனை தேர்வு செய்வதற்கான மாவட்ட அளவிலான தடகளம் மற்றும் குழுவிளையாட்டு போட்டிகள் பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் 18ம் தேதி மற்றும் 19ம் தேதிகளில் நடக்கிறது.

வரும் 18ம் தேதி காலை 8 மணிக்கு வளைகோல்பந்து, கால்பந்து ஆகிய போட்டிகள் இருபாலருக்கும், கபாடி பெண்களுக்கும் மட்டும் போட்டிகளில் நடக்கிறது. 19ம் தேதி காலை 8 மணிக்கு கையுந்து பந்து, கூடைப்பந்து மற்றும் தடகளம் ஆகியவற்றுக்கு ஆண், பெண் இருபாலாருக்கும் நடக்கிறது.
கபடி போட்டி ஆண்களுக்கு மட்டும் நடைபெறும். இதில் தடகள போட்டியில் ஆண்களுக்கு 100 மீட்டர், 110 மீட்டர் தடை தாண்டுதல், 800 மீட்டர், 5,000 மீட்டர், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், மும்முறை தாண்டுதல், குண்டு எறிதல், ஈட்டி எறிதல், வட்டு எறிதல் ஆகியவை நடைபெறும்.
தடகளம் பெண்களுக்கு 100 மீட்டர், 400மீ, 110 மீட்டர் தடை தாண்டுதல், 3,000 மீட்டர், நீளம் தாண்டுதல்,உயரம் தாண்டுதல், மும்முறை தாண்டுதல், குண்டு எறிதல், ஈட்டி எறிதல், வட்டு எறிதல் ஆகியவை நடைபெறும்.

இப்போட்டியில் கலந்துகொள்ள வயது வரம்பு கிடையாது. தடகள போட்டியில் ஒரு நபர் ஒரு போட்டியில் மட்டுமே கலந்து கொள்ளலாம்.
தடகளபோட்டியில் கலந்து கொள்பவர்கள் தமிழ்நாட்டில் குறைந்தது ஐந்தாண்டுகள் வசித்து வருவதற்கான சான்றும், இப்போட்டிகளில் தேர்வு பெறும் விளையாட்டு வீரர், வீராங்கனைகள் அவசியம் ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, டிரைவிங் லைசென்ஸ், மாற்று சான்றிதழ், மார்க் சீட் ஆகியவற்றின் ஜெராக்ஸ் இவற்றில் ஏதாவது ஒன்றினை போட்டியில் பங்கு கொள்வதற்கு முன்னர் மாவட்ட விளையாட்டு அலுவலரிடம் சமர்பிக்க வேண்டும். போட்டியில் வெற்றிப்பெறுவோருக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்படும்.
மாவட்ட அளவிலான போட்டியில் தேர்வு செய்யப்படும் வீரர், வீராங்கனைகளுக்கு மாநில அளவிலான போட்டியில் கலந்து கொள்ளும் பொருட்டு சீருடைகள் மற்றும் மாநில போட்டிகள் நடைபெறும் இடத்தில் பயணப்படி, தினப்படி வழங்கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியா "ஏ' அணி ஏமாற்றம்



கிங்ஸ்டவுன்: வெஸ்ட் இண்டீஸ் "ஏ' அணியின் துல்லிய பந்துவீச்சில் சிதறிய இந்தியா "ஏ' அணி முதல் இன்னிங்சில் 202 ரன்களுக்கு சுருண்டது.
இந்தியா "ஏ' மற்றும் வெஸ்ட் இண்டீஸ் "ஏ' அணிகளுக்கு இடையிலான இரண்டாவது நான்கு நாள் போட்டி கிங்ஸ்டவுனில் நடக்கிறது. முதல் நாள் ஆட்டநேர முடிவில், முதல் இன்னிங்சில் வெஸ்ட் இண்டீஸ் "ஏ' அணி 8 விக்கெட்டுக்கு 212 ரன்கள் எடுத்திருந்தது.
ஷாமி அபாரம்:
இரண்டாம் நாள் ஆட்டத்தில் முதல் இன்னிங்சை தொடர்ந்த வெஸ்ட் இண்டீஸ் அணியின் பிராத்வைட் (66), தேவேந்திர பிஷூ (2) நிலைக்கவில்லை. முதல் இன்னிங்சில் வெஸ்ட் இண்டீஸ் அணி 217 ரன்கள் எடுத்தது. ஜான்சன் (3) அவுட்டாகாமல் இருந்தார். இந்தியா சார்பில் ஷாமி அகமது 4, அசோக் டிண்டா, ரோகித் சர்மா தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.
புஜாரா ஆறுதல்:
பின், முதல் இன்னிங்சை துவக்கிய இந்திய அணிக்கு அபிமன்யு முகுந்த் (8), ஷிகர் தவான் (0) ஜோடி மோசமான துவக்கம் கொடுத்தது. அடுத்து வந்த அஜின்கியா ரகானே (18), ரோகித் சர்மா (1) ஏமாற்றினர். விக்கெட் ஒருபுறம் சரிந்தாலும் மறுமுனையில் பொறுப்பாக ஆடிய கேப்டன் புஜாரா, அரைசதம் அடித்தார். இவர், 67 ரன்களுக்கு அவுட்டானார்.
பெர்மால் அசத்தல்:
"மிடில்-ஆர்டரில்' களமிறங்கிய மனோஜ் திவாரி (23), விரிதிமன் சகா (20), ராகுல் சர்மா (30), ஷாமி அகமது (20) ஓரளவு கைகொடுத்தனர். டிண்டா (1) ஏமாற்ற, இந்தியா "ஏ' அணி முதல் இன்னிங்சில் 202 ரன்களுக்கு சுருண்டது. வெஸ்ட் இண்டீஸ் சார்பில் கேப்டன் வீராசாமி பெர்மால் 5, ஜான்சன் 2 விக்கெட் வீழ்த்தினர்.
பின், இரண்டாவது இன்னிங்சை துவக்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி, இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 6 ரன்கள் எடுத்து, 21 ரன்கள் முன்னிலை வகித்திருந்தது. பிராத்வைட் (4), குய்லன் (1) அவுட்டாகாமல் இருந்தனர்.
 
 

லண்டன் ஒலிம்பிக்: இதுவரை 76 இந்தியர்கள்தான் தகுதி





 
புதுடில்லி: சுமார் 122 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் இருந்து, லண்டன் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க வெறும் 76 பேர் தான் தகுதி பெற்றுள்ளனர்.
 
கடந்த 2008ல் இந்தியாவின் மக்கள் தொகை சுமார் 115 கோடியாக இருந்த போது, பீஜிங் ஒலிம்பிக் போட்டியில் (2008), 56 பேர் பங்கேற்றனர். இப்போதைய மக்கள் தொகை 122 கோடியாக உள்ள நிலையில், லண்டன் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க 76 பேர் (56 ஆண்கள், 20 பெண்கள்) தேர்வு பெற்றுள்ளனர். இதன் எண்ணிக்கை 85 ஆக அதிகரிக்க வாய்ப்புள்ளது. தவிர, இம்முறை ஹாக்கி அணி (16 பேர்) தேர்வு பெற்றிருப்பதால் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.
 
தேர்வு செய்யப்பட்ட இந்திய வீரர்கள், லண்டன் ஒலிம்பிக்கில் 13 போட்டிகளில் பங்கேற்கின்றனர். இவர்கள் பயிற்சிக்காக மத்திய அரசு ரூ. 238 கோடி செலவிட்டது. தவிர, வெளிநாட்டு பயிற்சியாளர்களுக்கு தனியாக ரூ. 20 கோடி ஒதுக்கப்பட்டது.
 
இம்முறை, பீஜிங் ஒலிம்பிக்கில் துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்ற அபினவ் பிந்த்ரா, ககன் நரங் உள்ளிட்ட 11 துப்பாக்கி சுடுதல் வீரர்கள் மீது எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. சுஷில் குமார், யோகேஷ்வர் தத் உள்ளிட்ட 5 மல்யுத்த வீரர்கள் மற்றும் குத்துச்சண்டையில், ஐந்து முறை <உலக சாம்பியன் பட்டம் வென்ற மேரி கோம் உட்பட 8 பேர் மீதும் பதக்க நம்பிக்கை உள்ளது.
 
 

மாதம் ரூ.90,000 சம்பாதித்தாலும் ஏழைதான்: பார்சி சமுதாயம் அதிரடி தகவல்



 

மும்பை: "பார்சி சமுதாயத்தில், மாதம் ஒன்றுக்கு 90 ஆயிரம் ரூபாய்க்குள் சம்பாதித்தால் அவர் ஏழையாகக் கருதப்படுவார்' என, அந்த சமுதாயத்தின் தலைவர் மும்பை ஐகோர்ட்டில் தெரிவித்துள்ளார்.

மும்பையில், செல்வச் செழிப்பான சமுதாயமாகத் திகழ்வது பார்சி இனத்தவர் தான். தங்கள் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கு மானிய விலையில் வீடுகள் கட்டிக் கொடுக்கும் திட்டத்தை, மும்பை பார்சி பஞ்சாயத்து என்ற ஜாதிச் சங்கம் செயல்படுத்தி வருகிறது.

கோர்ட்டில் வழக்கு: துவக்கத்தில், மாதம் 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் வருவாய் உடையவர்கள் பார்சி இனத்தில் ஏழைகள் அல்ல எனவும், அவர்களுக்கு வீடுகள் ஒதுக்கீடு செய்ய முடியாது என்றும் இந்த சங்கம் தெரிவித்தது. இதன் அடிப்படையில், 50 ஆயிரம் ரூபாய் மாத வருவாய் கொண்ட தனக்கு வீடு ஒதுக்க மறுத்து, அதிக வருமானம் பெறுபவர்களுக்கு வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகக் கூறி, தாராபோர்வாலா என்பவர், மும்பை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

யார் ஏழை: இந்த வழக்கு தொடர்பாக, பார்சி பஞ்சாயத்து தாக்கல் செய்த பதில் மனுவில், "மாதம், 90 ஆயிரம் ரூபாய் வரை வருமானம் பெறுபவர்கள், பார்சி இனத்தில் ஏழைகள் என தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த, 90 ஆயிரம் ரூபாய்க்கும் மேல் வருமானம் பெறுபவர்கள், 25 லட்சம் ரூபாய் மதிப்புக்கு அதிகமாக சொத்துக்கள் வைத்திருப்பவர்கள் ஆகியோருக்கு வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட மாட்டாது. மனுதாரருக்கு, அந்தேரியில் உள்ள தஹனு என்னுமிடத்தில், 17 ஏக்கர் பரப்பில், 2 ஆயிரம் சதுர அடியில் இரண்டு மாடிகள் கொண்ட பண்ணை வீடு உள்ளது. அவருக்கு, 1.5 முதல் 3 கோடி ரூபாய் வரை சொத்துக்கள் உள்ளன. அவரது வருவாயும், 90 ஆயிரம் ரூபாய்க்கு அதிகமாக உள்ளது' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு நாளைக்கு, 32 ரூபாய்க்கு மேல் சம்பாதிப்பவர்கள், ஏழைகள் அல்ல என, திட்டக் கமிஷன் தெரிவித்துள்ள நிலையில், பார்சி சமுதாயத்தினர் இவ்வாறு கோர்ட்டில் தெரிவித்துள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.


அரசு மருத்துவ காப்பீடு திட்டத்தில் பொதுமக்கள பயன்பெறலாம்: பெரம்பலூர் கலெக்டர் அறிவிப்பு


                
 
அரசு மருத்துவ காப்பீடு திட்டத்தில் பொதுமக்கள பயன்பெறலாம்:  பெரம்பலூர் கலெக்டர் அறிவிப்பு            பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் பொதுமக்கள் முதியோர் உதவித்தொகை மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை பட்டா மாற்றம் தொழில் தொடங்க கடனுதவி வேலைவாய்ப்பு வீட்டுமனைப்பட்டா உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 361 பேர் மனுக்களை மாவட்ட கலெக்டர் தரேஸ் அமகதுவிடம் அளித்தனர்.
 
அம்மனுக்களை சம்மந்தப்பட்ட அலுவலர்களிடம் அளித்து குறித்த காலத்திற்குள் மனுக்களின் மீது தக்க நடவடிக்கை மேற்கொண்டு மனுதாரருக்கு உரிய பதிலை அளிக்குமாறு கலெக்டர் அறிவுறுத்தினார். மேலும் தகுதியான அனைவருக்கும் அரசின் நலத்திட்டங்கள் விரைவாக சென்றடையுமாறு பணியாற்றிட வேண்டும் என்று அரசுத்துறை அலுவலர் களுக்கு மாவட்ட கலெக்டர் அறிவுரை வழங்கினார்.
 
கூட்டத்தில் தமிழக முதல் வரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் இருதய அறுவை சிகிச்சை பெற்று குணமடைந்த பெரம்பலூர் தாலுகா ஈச்சம் பட்டியைச் சார்ந்த மாணவன் சண்முகநாதன் மற்றும் அவரது தாயார் சாந்தி ஆகியோர் தங்களது நன்றியை மாவட்ட கலெக்டரிடம் தெரிவித்தனர்.
 
அப்போது சிகிச்சை குறித்து மாணவனின் தாய் சாந்தி கூறுகையில் எனது கணவர் இறந்து 8 வருடங்கள் ஆகின்றது. நான் கூலி வேலை செய்துதான் என் மகனை படிக்க வைத்துக் கொண்டுள்ளேன். நெஞ்சு வலிப்பதாக கூறியதால் ஒரு ஆண்டிற்கு முன்பு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தோம். இருதய வால்வினை மாற்ற வேண்டும் என்றும் அதற்கு லட்சக்கணக்கில் பணம் செலவாகும் என்று தெரி வித்தனர். அவ்வளவு செலவு செய்ய வசதி இல்லாததால் சிகிச்சை பெறாமல் மருந்து மாத்திரைகளை மட்டும் வாங்கி கொடுத்தேன்.
 
முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் இலவச அறுவை சிகிச்சை செய்து கொள்ள மருத்துவ முகாமில் அரசு அலுவலர்கள் தெரிவித்ததால் இப்போது சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிறந்த சிகிச்சையை இலவசமாக பெற்று இன்று என் மகன் நன்றாக உள்ளார். அதற்காக விரிவான மருத்துவ காப் பீட்டுத்திட்டத்தை கொண்டு வந்த முதல்வர் ஜெயலலிதா விற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

-maalaimalar.com

பெரம்பலூரில் பெண்குழந்தைகள் பிறப்பு விகிதம் அதிகரிப்பு: கலெக்டர்

பெரம்பலூரில் பெண்குழந்தைகள் பிறப்பு விகிதம் அதிகரிப்பு: கலெக்டர்

பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் கிராம சுகாதார செவிலியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், அரசு ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர்கள் மற்றும் மருத்துவ அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது.

கூட்டத்தில் 2012ம் ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் பெரம்பலூர் மாவட்டம் முழுவதும் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் வாரியாக பிறந்த ஆண், பெண் குழந்தைகளின் விவரங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

கலெக்டர் தரேஷ் அஹமது தலைமை வகித்து பேசியதாவது:

கணக்கெடுப்பின்படி பெரம்பலூர் மாவட்டத்தில் மகப்பேறு இறப்பு விகிதம் 2008-2009ம் ஆண்டில் ஒரு லட்சம் பிரசவங்களுக்கு 260 ஆகவும், 2009-2010ம் ஆண்டில் 120 ஆகவும், 2010-2011ம் ஆண்டில் 90 ஆகவும் குறைந்துள்ளது.

ஆனால் கடந்த ஆண்டில் 2011-2012 இந்த மகப்பேறு இறப்பு விகிதம் 137 ஆக உயர்ந்துள்ளது. இது குறித்து ஆய்வு செய்தபோது பிரசவத்திற்கு பின் ஏற்படும் அதிக இரத்த போக்கு, கர்ப்பம் காரணமாக வரக்கூடிய அதிக இரத்த அழுத்தம், ஆகிய காரணங்களால் தாயமார்கள் இறந்துள்ளனர் என்பது தெரியவந்தது.
 
மேலும் ஆண், பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் 2008-09ம் ஆண்டில் 1,000-த்திற்கு 915 ஆகவும், 2009 -10 ஆம் ஆண்டில் 877 ஆகவும், 2010-11ம் ஆண்டில் 871 ஆகவும், 2011-12ம் ஆண்டில் 823 ஆகவும் பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைந்து வந்துள்ளது.
இதற்கான காரணங்கள் குறித்து ஆய்வு செய்தபோது சிசு மரணதத்தில் பிறந்தவுடன் ஏற்படும் மூச்சு திணறல், வயிற்று போக்கு, குறைவான எடை, தாய்ப்பால் ஊட்டும்போது ஏற்படும் மூச்சுத்திணறல் ஆகியவை காரணங்களாக இருந்துள்ளன.
 
இதனை குறைக்க கடந்த ஓராண்டு காலமாக அங்கன்வாடி பணியாளர்கள், கிராம சுகாதார செவிலியர்கள், ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர்களாகிய உங்கள் அனைவருக்கும் இணைந்து செயலாற்றவும், கர்ப்பிணி தாய்மார்கள் குறித்த விவரங்களை பதிவு செய்யவும், பதிவு செய்த நாளிலிருந்தே அவர்களுக்கு உயரத்திற்கு ஏற்ற எடை, சத்தான உணவு வகைகள், பரிசோதனைகள், சிகிச்øகான ஆலோசனைகளை வழங்க அறிவுறுத்தப்பட்டது.
 
பிரசவத்திற்கு கர்ப்பிணி தாய்மார்களை அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு அழைத்துச் செல்லவும் அறிவுறுத்தப்பட்டது.
 
2012 ஏப்ரல் மாதத்தில் மாவட்டத்தில் பிறந்த 341 ஆண் குழந்தைகளுக்கு 305 பெண்குழந்தைகள் பிறந்துள்ளனர். அதாவது ஏப்ரல் மாதத்தில் 1,000 ஆண் குழந்தைகளுக்கு 894 பெண் குழந்தைகள் பிறந்துள்ளனர். 2012 மே மாதத்தில் மாவட்டத்தில் பிறந்த 325 ஆண் குழந்தைகளுக்கு 378 பெண் குழந்தைகள் பிறந்துள்ளனர்.
 
அதாவது 1,000 ஆண் குழந்தைகளுக்கு 1,163 பெண் குழந்தைகள் பிறந்துள்ளனர். மேலும் 2012 ஏப்ரல், மே மாதங்களில் ஒரே ஒரு கர்ப்பிணித்தாய் மட்டும் கர்ப்பகாலத்தில் இறந்துள்ளார்.மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் சீராக இருக்கும் வகையில் அனைவரும் பணியாற்றிட வேண்டும்.
 
கர்ப்பிணி தாய்மார்களின் உடல் நிலையை சோதித்து அவர்களின் உடல் நிலைக்கேற்ப ஊட்டச்சத்து உருண்டை, சத்து மாத்திரைகள் உங்கள் கண்முன்னே சாப்பிட செய்ய வேண்டும். அதிக சிரத்தையுடன் கர்ப்பிணி தாய்மார்களை கண்காணித்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு அழைத்து சென்று பரிசோதனை செய்யவும், ஆரம்ப சுகாதார நிலையம், மருத்துவமனையில் தான் பிரசவம் நடைபெறும் விதத்தில் பணியாற்றவேண்டும்.
 
இவ்வாறு அவர் பேசினார்.
-maalaimalar.com

செவ்வாய், 12 ஜூன், 2012

உலக குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு தினம்...

 

 

இன்றைய நாள் உலக குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு நாளாக மேற்கொள்ளப்படுகிறது. "குழந்தை தொழிலாளர் முறையை" முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்கிற நல்லெண்ணத்தில் ஜூன் பனிரெண்டாம் தேதி குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. குழந்தை தொழிலாளியாக தம் வாழ்க்கையை துவங்குகிற குழந்தைக்கும், பள்ளி செல்லும் குழந்தைக்கும் தான் எவ்வளவு வேற்றுமை.

ஒரு குழந்தை புத்தக பையை சுமக்கிறது என்றால் மற்றொரு குழந்தை - ஏதோ ஒரு தொழிலுக்கான உபகரணத்தை தூக்குகிறது. குழந்தை பருவம், குழந்தை பருவமாக இருப்பதில்லை குழந்தை தொழிலாளர்களுக்கு என்பதே உண்மை.உலகில் இருபத்தியொரு கோடி சிறார்கள், குழந்தை தொழிலாளர்களாக உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. இந்தியா போன்ற வல்லரசு கனவு காணும் தேசத்திலும் குழந்தை தொழிலாளர்கள் இருப்பது தேசிய அவமானம் என்றால் மிகையில்லை.

 உலக குழந்தை தொழிலாளர்களின் எண்ணிக்கையில் பனிரெண்டு சதவீதம் பேர் இந்தியாவில் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இது இந்தியாவில் குழந்தை தொழிலாளர் பிரச்னை, எவ்வளவு மோசமாக உள்ளது என்பதை காட்டுகிறது. விவசாயம், தீப்பெட்டி. செங்கல் சூளை, டெக்ஸ்டைல் உள்ளிட்ட தொழிற்சாலைகள், கட்டுமானப் பணிகள் ஆகியவற்றில் வேலையில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இவர்கள், குறைந்த ஊதியத்தில், விடுமுறை இன்றி ஒரு நாளைக்கு 12 மணி நேரத்துக்கும் மேல் வேலை பார்க்கின்றனர்.

பெரும்பாலான குழந்தைகள் குடும்ப சூழ்நிலை காரணமாகவும், சிலர் வற்புறுத்தல் காரணமாகவும் இந்த வேலைகளில் ஈடுபட்டுள்ளனர்.

உலகெங்கும் பதினொரு கோடி பேர் பாதுகாப்பற்ற கஷ்டமான வேலைகளில் ஈடுபட்டுள்ளனர் என சர்வதேச தொழிலாளர் அமைப்பின் அறிக்கை தெரிவிக்கிறது. 2016ம் ஆண்டுக்குள் இதை அறவே ஒழிக்க வேண்டும் என்றும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த பத்தாண்டில் தமிழகத்தில் பெருமளவு குழந்தை தொழிலாளர்களை ஒழிக்க முடிந்திருப்பதை கண்கூடாக பார்க்க முடிகிறது. ஒரளவுக்கு பெற்றோர்களுக்கு - தம் பிள்ளைகள் நல்ல வேலைக்கு போக வேண்டும், "படிக்காமல் தம்மை போல கஷ்டப்படக்கூடாது" என்கிற விழிப்புணர்வை பெற்றிருக்கின்றனர். மேலும், பெருமளவு அதில் அரசின் பங்குள்ளது. குழந்தை தொழிலாளரை வைத்திருக்கும் நிறுவனத்துக்கு பெருமளவு அபராதம், தண்டனையும் விதிக்கப்படும் என்கிற சட்டமே குழந்தை தொழிலாளர்கள் உருவாவதை ஒரளவு கட்டுக்குள் வைத்துள்ளது.

முழுமையாக ஒழிக்கப்பட பெற்றோர்களுக்கு இன்னும், இன்னும் நிறைய விழிப்புணர்வை கற்று தர வேண்டி உள்ளது. மேலும் நம் சமூகம் பரம்பரை தொழில் முறையை கொண்டிருந்ததால் - வீட்டில் வைத்தே செய்யும் பல்வேறு தொழில்களில், தம் பிள்ளைகளை குழந்தை தொழிலாளர்களாக ஆக்குகிறோம், அவர்களின் கல்வியை பறிக்கிறோம் என்கிற சிந்தனையே இல்லாமல், "வருமானம் ஒன்றே குறிக்கோளாக" பல பெற்றோர்கள் செயல் பட்டிருக்கின்றனர்.


இப்போது நிலைமை தமிழர்களிடம் மேம்பட்டிருந்தாலும் - பிழைப்பு தேடி தமிழகத்திற்கு வரும் பிற மாநிலத்தவர் பிள்ளைகள் குழந்தை தொழிலாளர்களாக மாற்றப்படும் அபாயம் உள்ளது. பத்து வயதில் குழந்தை தொழிலாளராய் தம் வாழ்க்கையை துவங்கும் குழந்தை - முப்பத்தி ஐந்து வயதாகும் போது, சகலராலும் கசக்கி சக்கையாக பிழியப்பட்டு - வேலை பார்க்கவே விருப்பமில்லாமல் போய்விடுகிறது. கூடவே மது போன்ற கெட்டப்பழக்கங்கள் சோம்பேறியாக்க - விளைவு... தம் பிள்ளைகளை குழந்தை தொழிலாளர்களாக்க முனையும் அவலம்.

தாம் குழந்தை தொழிலாளர்களாய் இருந்து கஷ்டப்பட்டதை - அந்த தந்தை உள்ளம் மறந்து, தம் குழந்தையை தாம் விழுந்த அதே படுகுழியில் தள்ளுவது தான் கொடுமை. படிக்கின்ற குழந்தை தம் இருபத்தி இரண்டாவது வயதில் தான் வேலைக்கே செல்லும். ஆனால் குழந்தை தொழிலாள குழந்தை இருபத்தி இரண்டு வயசில் வேலை மீதான ஆர்வத்தையே இழக்கும். குழந்தைகளினால் கிடைக்கும் வருமானம் பெற்றோர்களுக்கு அவமானம் என்பதை பெற்றோர் உணர வேண்டும்.

சம்பாதிக்கின்ற குழந்தை மிக சுலபமாக கெட்டு போக வாய்ப்புள்ளது. பிள்ளைகளின் வருமானம் தடைப்பட்டுவிடுமோ என்கிற அச்சத்தில் - தங்களின் பிள்ளைகளின் தவறை கண்டும் காணாமல் இருப்பதனால் - அது மென்மேலும் சிக்கலை தரக்கூடியவையாக உள்ளது.

"எது செய்தால் குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்க முடியும்" என்பதே மிக முக்கியமான கேள்வி... அனைத்து குழந்தைகளும் கல்வியறிவு பெறுவதை ஒவ்வொரு அரசும் உறுதி செய்ய வேண்டும். அரசால் கிடைக்க பெறும் வசதியினை மக்கள் பயன் படுத்தி கொள்ள வேண்டும். சில குழந்தைகள் குடும்ப வறுமை காரணமாக வேலைக்குச் செல்கின்றனர். முதலில் இக்குழந்தைகளின் பெற்றோர்களின் வருமானத்துக்கு அரசு சிறப்பு திட்டங்களை வகுக்க வேண்டும்.

குடி போன்ற தீங்கை அரசே கடைப்பரப்பினால் - எந்த மக்கள் நலத்திட்டமும் மக்களை உருப்படியாக சென்றடையாது. உண்மையிலேயே குழந்தை தொழிலாளர் முறையை முற்றிலும் ஒழிக்க அரசு விரும்பினால் - வேறு சில வற்றையும் அரசு ஒழித்தாக வேண்டும். இன்னும் முழுவீச்சில் குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்க நம் அரசு உறுதி எடுக்க வேண்டும். காரணம், "குழந்தை தொழிலாளர் முறை இருப்பது தேசிய அவமானம்"


-http://oosssai.blogspot.com/

 

ஜே அரசின் பச்சை துரோகம்: 1349 அரசு மருத்துவர்களில் ஒரு முஸ்லிம் கூட தேர்ந்தெடுக்கப்படவில்லை!, டிஎன்பிஎஸ்ஸி அலுவலகம் முற்றுகை!

 

முஸ்லிம்களுக்கு தமிழக அரசின் பச்சைத் துரோகம்!
முஸ்லிம்கள் கொந்தளிப்பு! – முற்றுகைப் போராட்டம் அறிவித்தது டிஎன்டிஜே!!

தமிழக அரசு ஒப்பந்தப் பயிற்சி மருத்துவர் பணி நியமனத்தில் மிகப்பெரிய பச்சைத் துரோகத்தை முஸ்லிம்களுக்கு இழைத்துள்ளது. முன்பெல்லாம் முஸ்லிம் சமுதாயத்திற்கு வழங்கப்பட்ட 3.5சதவீத இடஒதுக்கீட்டை 2 சதவீதம், அல்லது 2.5சதவீத வீதம் என இட ஒதுக்கீட்டைக் குறைத்து வழங்கி துரோகமிழைத்து வந்த தமிழகஅரசு தற்போது ஒரு இடம் கூட வழங்காமல் கோழி முட்டையை முஸ்லிம்களுக்கு வழங்கி தன்னுடைய முஸ்லிம் விரோதப் போக்கை வெளிப்படுத்தியுள்ளது.
நான் ஆட்சிக்கு வந்தால் முஸ்லிம்களின் இட ஒதுக்கீட்டை உயர்த்தித் தருவேன் என வாக்களித்து முஸ்லிம்களின் வாக்குகளைப் பெற்ற ஜெயலலிதா, ஆட்சிக்கு வந்து ஓராண்டு நிறைவடைந்த பின்னரும் அந்த வாக்குறுதி பற்றி வாய் திறக்கவில்லை. அடிக்கடி தேவையில்லாத விஷயங்களுக்கு எல்லாம் சட்டசபையில் அறிக்கை வாசிக்கும் ஜெயலலிதா முஸ்லிம்களின் இட ஒதுக்கீடு குறித்து வாய் திறந்ததில்லை.
இந்த நிலையில் ஜெயலலிதா முஸ்லிம்களின் இட ஒதுக்கீட்டை உயர்த்தித் தருவதற்குப் பதிலாக அவர் பாஷையில் பட்டை நாமம் போட்டுள்ளார்.
கடந்த மார்ச் மாதம் தமிழகத்தில் 1349 மருத்துவர்கள் அரசு மருத்துவப் பணிக்காகப் பணியமர்த்தப்பட்டுள்ளனர். முஸ்லிம்களுக்கான 3.5சதவீத இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் 47 மருத்துவர்கள் நியமிக்கப்பட்டிருக்க வேண்டும். இட ஒதுக்கீடு அடிப்படையில் மட்டும் இல்லாமல் பொதுப்பிரிவில் தகுதியான முஸ்லிம்கள் தேர்வு செய்யப்பட முடியும். அந்த வகையில் 20 நபர்களாவது தேர்வு செய்யப்பட்டிருக்க வேண்டும். இட ஒதுக்கீட்டின் அடிப்படையிலோ, பொதுத்தேர்வு அடிப்படையிலோ எந்த முஸ்லிமும் தேர்வு செய்யப்படவில்லை. ஒரே ஒரு முஸ்லிமைக் கூட இந்த அரசு நியமிக்கவில்லை.
மேலும் 34 ஆசிரியர்களில் ஒருவர் கூட முஸ்லீம் இல்லை
இதோ தேர்வு செய்யப்பட்டவர்களின் பெயர் பட்டியல்:
அரசால் தேர்வு செய்யப்பட்ட மருத்தவர்களின் முழு பட்டியலை காண இங்கே கிளிக் செய்யவும்.
ஆசிரியர்கள் பற்றிய விபரம் அறிய இங்கே கிளிக் செய்யவும்

கடந்த முறை இதே போன்று மருத்துவ பணி நியமனத்திற்காக அழைக்கப்பட்ட 2438 மருத்துவர்களில் 88 முஸ்லிம்கள் உள்ளனர். சரியாக 3.5 % வழங்கப்பட்டுள்ளது. பொதுப்பிரிவில் முஸ்லிம்கள் தேர்வு செய்யப்படாததால் இதுவே முஸ்லிம்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது.
ஆனால் இப்போது செய்யப்பட்டுள்ள பச்சைத் துரோகம் இந்திய அரசியல் வரலாற்றில் பீஜேபி கூட செய்யத் துணியாத பச்சைத் துரோகமாகும். ஒரு முஸ்லிம் கூட நியமிக்கப்படக் கூடாது என்ற அளவுக்கு இவர்கள் வெறிபிடித்து அலைவதற்குக் காரணம் என்ன? 3.5 சதவிகிதம் இட ஒதுக்கீடு அளிக்க சட்டம் இருந்தும் அதைக் கூட காலில் போட்டு மிதிக்கும் அளவுக்கு இவர்களுக்குத் துணிவு வரக் காரணம் என்ன?
இந்த அநீதி சரி செய்யப்பட்ட வேண்டும். முஸ்லிம்கள் பொதுப்பிரிவிலும் சேர்த்து 70 பேர் உடனடியாக நியமிக்க வேண்டும். இதற்குக் காரணமான அதிகாரிகள் மீதும், அமைச்சர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தனது அறிக்கையில் கூறியுள்ளதோடு சென்னை கிரீன்ஸ் ரோட்டிலுள்ள டிஎன்பிஎஸ்ஸி அலுவலகத்தை முற்றுகையிட்டு முஸ்லிம்களின் எதிர்ப்பைத் தெரிவிக்க, மாபெரும் முற்றுகைப் போராட்டத்தை 14.06.12 வியாழன் அன்று காலை 11மணிக்கு நடத்துவது என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சென்னை மாவட்டம் அறிவித்துள்ளது.
பயிற்சி ஒப்பந்த மருத்துவர்கள் பணிநியமனத்தில் மட்டுமல்லாது, நூலகர்களை பணியமர்த்திய விஷயத்திலும் இந்த துரோகம் தொடர்கின்றது.
தமிழ்நாட்டில் மொத்தம் 32 மாவட்டங்கள் உள்ளன. விழுப்புரம் மாவட்டத்தில் 41 நூலகர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதிலும் ஒரு முஸ்லிமுக்குக் கூட இடம் வழங்கப்படவில்லை. இது போன்று தமிழகத்திலுள்ள 32 மாவட்டங்களிலும் நூலகர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அந்த 32 மாவட்டங்களிலும் இதுதான் நிலை என்று சொல்லப்படுகிறது. இதன் மூலம் தமிழக அரசு முஸ்லிம்களுக்கு மிகப்பெரும் துரோகம் செய்துள்ளது அம்பலமாகியுள்ளது. வேண்டுமென்றே திட்டமிட்டு முஸ்லிம்களை அனைத்து அரசுப்பணிகளிலும் அப்புறப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழக அரசு இவ்வாறு செயல்பட்டு வருவது இதன் மூலம் உறுதியாகின்றது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், சீருடைப் பணியாளர் தேர்வாணையம், ஆசிரியர் தேர்வாணையம் ஆகியவை மூலம் போட்டித் தேர்வு நடத்தி, தமிழக அரசு பணியாளர்களை நியமித்து வருகிறது. இதுபோல் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தின் மூலம் பதிவு மூப்பு அடிப்படையிலும் ஏராளமானோரை தமிழக அரசு பணிக்கு நியமித்து வருகிறது.
இது போக சத்துணவு அமைப்பாளர், சமையலர், உதவியாளர் என பல்லாயிரம் பேரை மாவட்ட ஆட்சியர் மூலம் தேர்ந்தெடுக்கிறது. நகராட்சி மூலம் பேட்ஜ் டிரைவர் போன்றவர்களும் பணியமர்த்தப்படுகிறார்கள். இந்த அரசு வேலை வாய்ப்புகள் அனைத்திலும் முஸ்லிம்கள் 3.5 சதவீத அடிப்படையில் நியமிக்கப்படவில்லை. மாறாக வஞ்சக எண்ணத்துடன் இவர்கள் ரகசியமாக புறக்கணிக்கப்பட்டுள்ளனர் என்று முஸ்லிம்கள் குமுறுகின்றனர்.
முஸ்லிம்களின் இட ஒதுக்கீட்டை அதிகரிப்போம் என்று வெற்று வாக்குறுதி அளித்து முஸ்லிம்களை ஒரு புறம் ஏமாற்றிக் கொண்டு, மற்றொரு புறத்தில் அவர்களுக்கு ஏற்கனவே இருக்கும் 3.5 சதவீத இட ஒதுக்கீடையும் பறிக்கும் அ.தி.மு.க. வின் செயல் மிகவும் கண்டனத்திற்குரியது. எனவே தமிழக அரசு உடனே வெள்ளையறிக்கை வெளியிட்டு, முஸ்லிம்களுக்கு 3.5 சதவீத இட ஒதுக்கீடு அமுல்படுத்தப்பட்ட நாள் முதல் இன்று வரை தமிழக அரசின் எத்தனை பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. அதில் முஸ்லிம்களுக்கான 3.5சதவீத அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளனவா? என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.
இட ஒதுக்கீடு அடிப்படையில் முஸ்லிம்களுக்கு வாய்ப்பு தந்திருந்தால் அதை தெளிவுபடுத்த வேண்டும். வாய்ப்புத் தராமல் முஸ்லிம்களை புறக்கணித்திருந்தால் அவர்களுக்கான வாய்ப்புகளை வழங்க போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும்.


-http://www.tntj.net/90674.html

முஸ்லிம் போலீஸ் அதிகாரியை கட்டாயம் நியமிக்க வேண்டும், மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவு!


images

முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் உள்ள காவல் நிலையங்களில், ஒரு முஸ்லிம் போலீஸ் அதிகாரியை கட்டாயம் நியமிக்க வேண்டும் என்று அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. முஸ்லிம்களின் கல்வி, சமூக, பொருளாதார நிலைகள் குறித்து ஆராய நீதிபதி ராஜிந்தர் சச்சார் தலைமையிலான குழுவை கடந்த 2005ம் ஆண்டு மத்திய அரசு நியமித்தது. அக்குழு முஸ்லிம்களின் முன்னேற்றத்துக்கு பல்வேறு யோசனைகளை தெரிவித்து 2006ம் ஆண்டு நவம்பரில் மத்திய அரசிடம் அறிக்கை அளித்தது.
 
அதில், முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் உள்ள காவல் நிலையங்களில் முஸ்லிம் போலீஸ் அதிகாரிகளை நியமிக்க வேண்டும். குறைந்தது ஒரு இன்ஸ்பெக்டர், அல்லது சப் , இன்ஸ்பெக்டரையாவது நியமிக்கும்படி பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், பாரபட்சம் தவிர்க்கப்படுவதோடு, முஸ்லிம் மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்த முடியும் என்றும் கூறியது.

இதன் அடிப்படையில், முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் உள்ள காவல் நிலையங்களில் முஸ்லிம் போலீஸ் அதிகாரிகளை நியமிக்க மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக, அனைத்து மாநிலங்களின் தலைமை செயலாளர்களுக்கும் மத்திய உள்துறை செயலாளர் ஆர்.கே.சிங் கடிதம் அனுப்பியுள்ளார். இது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை தெரிவிக்கும்படியும் கடிதத்தில் உத்தரவிடப்பட்டு உள்ளது.


-http://www.tntj.net/90481.html




மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் படித்தேன் சி.பி.எஸ்.சி. தேர்வில் முதலிடம் பிடித்த மாணவன் முஹம்மது இஸ்மத்




                           முஹம்மது இஸ்மத், மணிப்பூரைச் சேர்ந்த மாணவர். அகில இந்திய பள்ளி கல்வித் தேர்வான சி.பி.எஸ்.இன் 12ஆம் வகுப்பு தேர்வில் இந்தியாவிலேயே முதலிடம் பெற்றுள்ளார். இவர், எதிர்காலத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரியாகப் பணியாற்றி நாட்டுக்கும்; மக்களுக்கும் சேவை செய்வதே தனது எதிர்கால லட்சியம் என தெரிவித்துள்ளார். மணிப்பூர் தலைநகர் இம்பாலில் இருந்து 15 கிலோ மீட்டர் தூரம் உள்ள தவ்பல் மாவட்டத்தில் லைலாங் ஹையோரபி என்ற குக்கிராமத்தில் ஏழைக் குடும்பத்தில் பிறந்த முஹம்மது இஸ்மத்தின் வீட்டில் மின்சார வசதி கிடையாது. 

ஐ.ஏ.எஸ். தேர்விலும் இந்தியாவிலேயே முதலாவதாக தேர்வாவது தனது லட்சியம் என்று கூறிய இஸ்மத், அந்தப் பதவியின் மூலம் நாட்டு மக்களின் அமைதி மற்றும் சமாதானத்திற்காகப் பாடுபடுவேன் என்கிறார். புதுடெல்லியின் செயின்ட் ஸ்டீபன் கல்லூரியில் இளங்கலை அறிவியலில் (இயற்பியல்) சேர உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இஸ்மத் 18 மாத குழந்தையாக இருக்கும் போதே அவரது தாயார் இறந்துவிட்டார்.


இஸ்மத்தின் தந்தையார் மவ்லவி பசியுர் ரஹ்மான் ஆரம்ப பள்ளிக்கூட ஆசிரியராகவே பணியாற்றி தனது ஏழு குழந்தைகளையும் வளர்த்து வந்தார். ஆறு பெண் குழந்தைகளுக்குப் பின்னர் கடைக்குட்டி ஆண் குழந்தையாய் பிறந்தார் முகமது இஸ்மத். வறுமையிலும் செம்மை பேரணி ஆறு பெண்களை பட்டதாரிகளாக்கினார் மவ்லவி பசியுர் ரஹ்மான். வீட்டில் மின்சாரம் இல்லாத நிலையில் மெழுகுவார்த்தி வெளிச்சத்தில் படித்த முஹமது இஸ்மத், சி.பி.எஸ்.இ. 12ஆம் வகுப்பில் 500க்கு 495 மதிப்பெண்கள் பெற்று இந்திய அளவில் முதலிடம் பெற்றார். கணிதம், வேதியியல், ஃபைன் ஆர்ட்ஸ் மற்றும் ஹோம்சயின்ஸ் பாடங்களில் 100க்கு 100 மதிப்பெண்களும், ஆங்கிலத்தில் 98 மதிப்பெண்μம், இயற்பியலில் 97 மதிப்பெண்களும் பெற்றுள்ளார். மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் தினமும் எட்டு மணி நேரத்தில் இருந்து 10 மணி நேரம் வரை படித்து தேசிய அளவில் முதலிடம் பிடித்த முஹமது இஸ்மத் மேலும் பல வெற்றிகளைப் பெற வாழ்த்துவோம்.

 
--அபுசாலிஹ்
 -http://www.tmmk.info



குடிபோதையில் கார் ஓட்டினால் 7 ஆண்டு சிறை?- சென்னைக் குடிமகன்களே உஷார்!

 

http://tamil.oneindia.in/img/2012/04/05-tasmac300.jpg குடிபோதையில் கார் ஓட்டினால் 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கும் சட்டத்தை சென்னையில் முதலில் நடைமுறைப்படுத்த சென்னை போக்குவரத்துப் போலீசார் பரிசீலனை செய்து வருகின்றனர்.

மது அருந்திவிட்டு கார் போன்ற வாகனங்களை ஓட்டுபவர்களால் சாலை விபத்துகள் அதிகரிப்பதாக ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளதையடுத்து போக்குவரத்து போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க தயாராகி வருகின்றனர்.

வாராந்திர மட்டத்தில் 200 முதல் 300 வழக்குகள் இந்த போதை வாகன ஓட்டிகள் வழக்கு பதிவு செய்யப்பட்டு வருவதாக போக்குவரத்து போலீசார் தெரிவித்தனர்.

போக்குவரத்துக் குற்றவியல் சட்டம் பிரிவு எண் 185-இன் படி மேற்கண்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அதிகபட்சமாக ரூ.2,000 அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது.

மேலும் கவனமில்லாமல் வாகனம் ஓட்டியதாக பிரிவு எண் 279-இன் கீழ் வழக்குத் தொடரப்பட்டு ரூ.1,000 அபராதத் தொகை வசூலிக்கப்பட்டு வருகிறது.

ஆனால் இவற்றாலெல்லாம் பயன் ஏற்படவில்லை என்று கருதுகிறது சென்னை போக்குவரத்து காவல்துறை.

இதனால் தண்டனையைக் கடுமையாக்க பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இதன் படி குடித்து விட்டு வாகனம் ஓட்டி விபத்து ஏற்படவில்லை என்றாலும் கூட சட்டப்பிரிவு 506(1) இன் கீழ் ஜாமீனில் வெளிவரமுடியாத படி வழக்கு தொடரப்பட்டு 7 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கும் சட்டத்தை அமல் செய்ய மாநகர போலீஸ் துறை முடிவெடுத்துள்ளது.

ஆகவே குடிபோதையில் கார் ஓட்டும் குடிமகன்களே உஷார்!      

திங்கள், 11 ஜூன், 2012

லஞ்சத்தில் கொழிக்கும் திருச்சி ஏர்போர்ட் அதிகாரிகள்...! ஒரு அனுபவப் பகிர்வு!




திருவிளையாடலில் ஒரு வசனம் வரும் " பிரிக்க முடியாதது எதுவோ?" என்று, அந்த சிவாஜி மட்டும் இன்று உயிரோடு இருந்திருந்தால், கண்டிப்பாக " இந்தியாவும் லஞ்சமும் என்றுதான் பதில் சொல்லியிருப்பார்! இரண்டு சாரைப்பாம்புகள் ஒன்றோடொன்று பிண்ணிப் பிணைவது போல் பிண்ணிப் பிணைந்து கிடக்கிறது லஞ்சமும் இந்தியர்களின் ரத்தமும்! நியாயமான அரசாங்க சேவைகளைப்  பெறுவதற்குக்  கூட இன்று லஞ்சம் கொடுக்காமல் எதையும் நாம் சாதித்துவிட முடியாது என்ற சூழ்நிலையில்தான் நாம் வாழ்ந்துகொண்டு இருக்கிறோம். கொடுக்கப்பட்டது எவ்வளவு லஞ்சம் என்ற வகையில்தான் நாம் அடுத்தவர்களோடு நம்மை  ஒப்பிட்டுப்  பார்த்து ஆறுதல் அடைய வேண்டியிருக்கிறது. படங்களில் ஊழல் செய்பவனை கதாநாயகன் தண்டிக்கும்போது முதல் ஆளாக கைதட்டும்  நாம்தான், நமக்கும் லஞ்சம் வாங்கும் சந்தர்பம் வரும்போது  கை தட்ட நீட்டிய கையை உள்ளே இழுப்பதில்லை என்பதே உண்மை!

லஞ்சம் வாங்கி வாழ்பவனே பிழைக்கத் தெரிந்தவன் என்ற இந்திய மனப்பான்மைக்கு நாம் ஒவ்வொருவரும் நம்மை அறியாமலே மாறிக்கொண்டு இருக்கிறோம்! என் வேலை எனக்கு சீக்கிரம் முடிய வேண்டும்! அதற்கு நான் என்ன வேண்டுமானாலும் செய்வேன் எவ்வளவு லஞ்சம் வேண்டுமானாலும் கொடுப்பேன் என்றுதான் ஒவ்வொருவரும் இந்திய நேர்மையில் இருந்து ஒவ்வொரு செங்கலாக உருவிக் கொண்டிருக்கிறோம்! என்றாவது ஒட்டுமொத்தமாக தலையில் விழும்போது காப்பாற்ற யாருமே இருக்கப்போவதில்லை என்பது மட்டும் நிதர்சனம்! சரி.. இந்த கதையெல்லாம் வேணாம் தலைப்புக்கு வாங்கன்னு சொல்றீங்களா? அதுவும் சரிதான்... சமீபத்தில் சிங்கையில் இருந்து இந்தியா சென்றிருந்தேன், என்னைப்போல தென் மாவட்டங்களில் உள்ளவர்களுக்கெல்லாம் திருச்சி விமான நிலையம்தான் முதல் தேர்வு!

அவ்வாறே நானும் திருச்சிக்கு சென்றேன். விமான நிலையம் புது கட்டிடத்துக்கு மாறி வெகு நாட்கள் ஆகிவிட்டது, ஆனால் அங்கு வேலை பார்க்கும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் மன அழுக்கு மட்டும் இன்னும் அப்படியே உள்ளது. விமானத்தை விட்டு இறங்கி குடிநுழைவுச் சோதனைக்கு சென்றதில் இருந்தே நமக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி காத்துக்கொண்டு இருக்கிறது. அவைகளை மொத்தமாகச் சொல்லாமல் ஒவ்வொரு சம்பவமாகத் தொகுத்துச் சொல்கிறேன், நீளம் கொஞ்சம் அதிகமாக இருக்கும், ஆனாலும் கண்டிப்பாக சொல்லியே ஆகவேண்டிய சூழ்நிலைதான் இப்போது அங்கே நிலவுகிறது! ஏற்கனவே ஒருமுறை ABT ட்ராவல்ஸின் அராஜகம்! என்ற பதிவிற்கு கிடைத்த உங்கள்  ஆதரவின் உந்துதலால் இதையும் எழுதுகிறேன். தீர்வு கிடைக்கிறதோ இல்லையோ இனி அங்கு செல்பவர்களுக்கு இது  ஒரு எச்சரிக்கையாகவாது இருக்கட்டும்!


சம்பவம் ஒன்று.
விமானத்தை விட்டு  இறங்கி ஒரு பேருந்தில் கொண்டு போய்  குடிநுழைவு வாசலில் ( Immigration Check point ) இறக்கிவிட்டனர். என்னதான் அடிக்கடி வந்துபோனாலும் விமானத்தில் ஏறியதுமுதல் சொந்த பந்தங்களை காணும் ஆவல்தான் வீடு போய் அவர்களை பார்க்கும்வரை இருக்கும்! ஒவ்வொருவருமே அந்த ஆசைகளை சுமந்துதான் நீண்ட வரிசையில் நிற்கிறார்கள். ஒரு விமானம் முழுவதும் வந்த பயணிகளுக்கு மூன்றே மூன்று அதிகாரிகள்தான்! அதுகூட மிட்நைட் என்பதால் அதிகாரிகள் குறைவு என்று எடுத்துக்கொள்ளலாம்! ஆனால் அதன்பிறகு நடந்ததுதான் கொடுமை!

நாங்கள் வரிசையில் நிற்கும்போதே ஒருவர் உள்ளே இருந்து வந்து ஒரு பெயரை சொல்லி அழைத்துக்கொண்டே வந்தார், உடனே அவர் பெயர் சொல்லி அழைத்த நபர் தன் மனைவியோடு வரிசையின் கடைசியில் இருந்து வந்து எந்தவித கூச்சமும் இல்லாமல் வாயெல்லாம் பல்லாக வரிசையில் நி
ற்பவர்களை கடந்து அந்த ஊழியரை பின்தொடந்து சென்றார்! அதிகாரிகளும் அவர்களுக்கு முதலில் செக் செய்து அனுப்புகின்றனர்! அந்த ஒருவர் மட்டும் அல்ல அதன் பிறகும் இதேபோல இன்னும் இரண்டுபேரை அந்த ஊழியர் அழைத்துக்கொண்டு சென்றார்! எந்த நாட்டு இன்டர் நேசனல் ஏர்போர்ட்டிலும் காணக்கிடைக்காத காட்சி அது! அருகில் நின்று கொண்டிருந்தவர் சொன்னார், அவர்கள் அந்த விமான நிலையத்தில் வேலை பார்க்கும் ஏதாவது ஒரு அதிகாரிக்கு உறவாக இருக்கும் என்று! அப்படியே உறவு இல்லையென்றாலும் இதேபோல் செல்ல வாய்ப்புள்ளது என்று அவர் சொன்னதுதான் அதிர்ச்சியின் உச்சம்!

அதாவது, நம்மை வரவேற்க வந்தவர்கள் இதற்கென சி
லரை பிடித்து தள்ளுவதை தள்ளி நாம் பெயரை அவர்களிடம் கொடுத்துவிட்டால் போதும், அவர்களும் கடமை தவறாமல் நம்மை வரிசையில் நிற்கவிடாமல் உறவு என்று சொல்லி அழைத்துவிடுவார்கள்! இந்த நேரத்தில் இன்னொன்றையும் இங்கே சொல்ல வேண்டும், சிங்கபூர் நான் பிழைக்க வந்த நாடுதான், ஆனால் நிரந்தரவாசியாக இருந்தால்கூட போதும் எந்த நாட்டிற்கு போனாலும் எந்த நாட்டில் இருந்து வந்தாலும் குடிநுழைவுக்கு எந்த வரிசையிலும் நிற்க வேண்டாம், எனது இந்தியன் பாஸ்போர்ட்டை வைத்து ஆட்டோ ஸ்கேனிங்கில் வந்து விடலாம். ஆனால் சொந்த நாட்டில் சொந்த நாட்டு பாஸ்போர்ட்டை வைத்துகொண்டு இந்த அவலங்களை எல்லாம் சகித்துக்கொள்ள வேண்டியிருக்கிறது! 

சம்பவம் இரண்டு.

ஒருவழியாக இமிக்ரேசன் முடிந்து வந்தால் அடுத்து லக்கேஜ் கலெக்சன். இந்த முறை எனக்கு ஒரே ஒரு செக் இன் லக்கேஜ் மட்டுமே, இங்கு ஐ.டி. ஷோவில் வாங்கிய ஒரு LED T.V . இங்கு அதை செக் இன் செய்து கன்வேயரில் அனுப்புவதில் எந்தப்
 பிரச்னையும் இல்லை. ஏனென்றால், இதுபோல எலக்ட்ரிகல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் ஐட்டங்களுக்கு தனி  கன்வேயர்! ஆனால் திருச்சி கன்வேயர் பற்றி சொல்லவே வேணாம், புது விமான நிலையத்தில் இப்படி ஒரு டிசைனிங்?! அந்த கன்வேயரில் வரும் உங்கள் லக்கேஜ் சேதப்படாமல் வந்தால் நீங்கள் அதிர்ஷ்டசாலிதான்! சரி.. அதைப்பற்றி தனியாகவே எழுதலாம் அவ்வளவு இருக்கு! பார்த்தவர்களுக்கு தெரிந்திருக்கும்.

இந்த காரணங்களால் டிவி போன்ற ஹேண்டில் கேர் ஐட்டங்களை கன்வேயரில் அனுப்பாமல் தனியாக சைடில் உள்ள வாசல் வழியாக எடுத்து வைப்பார்கள், எனது டிவி யையும் எடுத்து வைப்பார்கள் என்று காத்துகொன்டிருந்தேன், ஆனால் எடுத்துவைத்தபாட்டைக் காணும்! ஆனால் மற்றவர்கள் ஒவ்வொருவராக எடுத்துகொண்டு சென்றார்கள். சரி.. அருகில் சென்று கேட்கலாம் என்று அங்கு சென்றேன், நான் போனதுமே அங்கு உள்ள ஒரு ஊழியர் வந்து " உங்களது என்ன பொருள் சார்?" என்றார், நானும் டிவி என்று மாடலையும் சொன்னேன், கேட்டுக்கொண்டு வேகமா
க உள்ளே சென்றார், நானும் பரவாயில்லை நல்ல சர்வீஸ் என்று நினைத்தேன்! ஆனால் கொஞ்ச நேரத்திலே என் நினைப்பில் அவர் மண் அள்ளிப்போட்டார்! வேகமாக வெளியில் வந்து " இருக்கு சார், கொஞ்சம் கவனிங்க எடுத்துட்டு வர்றேன்" என்றார்!

எனக்கு முதலில் புரியவில்லை, பின்னர்தான் கவனித்தேன் அருகில் இருப்பவர்கள் நூறு ரூபாயை அவர் கைகளில் திணித்துவிட்டு தங்கள் 
பொருட்களை எடுத்துக்கொண்டனர்! நான் அவரிடம் கேட்டேன் " ஏன் சார்..பணம் கொடுக்கலைனா நம்ம திங்க்ஸ எடுக்க முடியாதா? எடுத்து வைக்கிறதுதானே அவங்க வேலை? என்றேன், அவரும் " சார்.. நாம சண்டை போடலாம்.. முதலில் நமக்கு நேரம் இல்லை. இரண்டாவது உங்க டிவி 40,000 ரூபாய்னு வைங்க, இந்த நூறு ரூபாய்க்கு பார்த்தா, உள்ளேயே   வச்சு  சம்திங் டேமேஜ் பண்ணிட்டு கன்வேயர்ல டேமேஜ்  ஆயிருச்சுன்னு சொல்வாங்க" என்றார்! அதிர்சியுடனே அந்த நாய்களுக்கு எலும்புத்துண்டை வீசிவிட்டு டிவியை எடுத்துகொண்டு வந்தேன்! இதையும் மீறி நகரும்போது அங்கு பாதுகாப்புக்கு இருந்த கான்ஸ்டபிள் " தம்பி.. கொடுக்கவேண்டியதை கொடுத்திட்டிங்களா? என்றார்! இத்தனையும் கன்வேயர் ரூமுக்குள் இருந்த ஒரு கஸ்டம் ஆபிசர் நன்றாக கண்காணித்துக் கொண்டிருந்தார்! யார் எவ்வளவு கொடுக்கிறார்கள் என்று! கூட்டுக்கொள்ளை! 

சம்பவம் மூன்று.

டிவியை எடுத்துகொண்டு அடுத்து சுங்கச் சோதனை! கண்டிப்பாக டிவி போன்ற சாதனங்களுக்கு சுங்கவரி ( TAX ) உண்டு  என்று தெரியும். ஏற்கனவே ஒருமுறை கட்டி இருப்பதால் அதற்கு தயாராகவே வந்தேன். தனியாக இதற்கென இரண்டு அதிகாரிகள் இருந்தனர். அவர்களிடம் சென்று எனது டிவி மாடல் மற்றும் விலைகளை சரி பார்த்து 3750 ரூபாய் கட்ட சொன்னார்கள்! எனக்கும் சந்தோசமே, ஏனென்றால் இதற்குப்  பில் கொடுத்துவிடுவார்கள்! ஒரு பைசா கூட அந்த அதிகாரிகள் எடுக்க முடியாது! சரி என்று கட்டப் போகும்போது அதில் இருந்த ஒரு அதிகாரி எனக்கு பின்னால்  வந்து மெதுவாக " தம்பி, கொஞ்சம் வெயிட் பண்ணுங்க, அந்தப்பக்கம் சைட்ல சோபால உட்காந்திருக்கதுதான் எங்க சீனியர் ஆபிசர்! அவர் இப்ப போயிருவார், அவர் போனதும் 2000 மட்டும் கொடுத்திட்டு உங்க டிவிய எடுத்துக்கிட்டு போய்கிட்டே இருங்க" என்றார்! 

மேலும் " நேரம் காலம் தெரியாம இங்க வந்து உக்காந்துகிட்டு எங்க பொழப்புல மண்ண போடறான்" என்று அந்த சீனியர் ஆபிசரையும் திட்டிக்கொண்டே சென்றார்! இந்தியன் படத்துல நிழல்கள் ரவிய கமல் கொல்லப்போகும் போது அவருக்கே லஞ்சம் கொடுக்கிறேன்னு நிழல்கள் ரவி  சொல்லும்போது கமல் ஆயாசமா கன்னத்துல கைய வச்சிக்கிட்டு சொல்லுவாரே " உன்னை கொல்றதுல தப்பே இல்லடான்னு" அதுதாங்க அப்ப மனசுல வந்துச்சு! சரி நீ ஆணியே புடுங்க வேண்டாம்னு முழு தொகையும் கட்டிட்டு டிவியை எடுத்துக்கிட்டு வெளில வந்துட்டேன்!

சம்பவம் நான்கு.

எல்லாத்  தொல்லைகளும் முடிந்து அப்பாடான்னு வெளில வந்து  லக்கேஜ் எல்லாவற்
றையும் காரில் ஏற்றிவிட்டு திரும்பினா, நான் கொண்டுவந்த ட்ராலிய வாங்குறதுக்காக ஒரு ஊழியர் தயாராக நின்றார்! பரவாயில்ல... இந்த சர்விசாவது நல்லா இருக்கு என்று நினைப்பதற்குள் அதற்கும் ஒரு சம்மட்டி அடி! ட்ராலியை எடுத்துகொண்டு தலைய சொரிந்தார் அந்த ஊழியர், " என்னப்பா என்ன வேணும்?" என்றேன், "பார்த்து கவனிங்க சார், ட்ராலிய தள்ளிட்டு உள்ள போகணும்" என்றார்! நானும் விடாமல் " போங்க.. அதுக்குதானே உங்களுக்கு சம்பளம் கொடுத்து வச்சிருக்காங்க?" என்றேன், 

" என்ன சார் நீங்க? ஒவ்வொருத்த ரெண்டு வெள்ளி, பத்து வெள்ளின்னு கொடுத்துட்டுப்  போறாங்க, இதுக்குப் போய் கணக்கு பார்க்குறீங்க?" என்றார் சாதரணமாக! எனக்கு வந்த கோபத்தைக் கட்டுப்
படுத்திக் கொண்டு அவரிடம் சொன்னேன் " அண்ணே. இன்னும் சிங்கபூர்ல தினக்கூலிக்கு  வர்ற நம்ம ஆளுங்களுக்கு ஒரு நாள் சம்பளமே 18 வெள்ளிதான்! இங்க ட்ராலி தள்ளியே அவ்வளவு சம்பாதிக்க முடியும்னா எனக்கும்  ஒரு வேலை இங்க வாங்கித் தாங்க, நானும் வந்து ட்ராலி தள்ளுகிறேன்" என்றேன்! அந்த முனகியபடியே திரும்பிச் சென்றார்! கண்டிப்பாக கெட்ட வார்த்தையில் திட்டியபடியே சென்றிருப்பார்! 

சம்பவம் ஐந்து.

எல்லாவற்றையும் கடந்து வீட்டுக்குச் செல்லும் ஆர்வத்தோடு விமான நிலையத்தை விட்டு  வெளியில் வந்தால், கொஞ்ச  தூரத்தில் போலிஸ் செக் போஸ்ட்! அதை தொடும் முன்னரே ஒரு போலிஸ் வந்து நிறுத்தச் சொல்லி கை காட்டினார், நிறுத்தியவுடன் டிரைவர் சீட் 
பக்கம் குனிந்தார் அவர், என்னவோ என்று கண்ணாடியை இறக்கினால் குப்பென்று அடித்தது சரக்கு வாடை! டிரைவர் சீட்டில் இருந்த என் மாமாவிடம் " என்ன புதுசா? கவனிச்சிகிட்டு போய்க்கிட்டே இருங்க, ஐயா உள்ளதான் இருக்காரு" என்றார்! 

உடனே என் மாமாவும் ஒரு ஐம்பது ரூபாயை எடுத்து நீட்டவும் " ஓக்கே ரைட்..போய்க்கிட்டே இருங்க" என்று கை காட்டி அனுப்பி வைத்தார்! நான் கொஞ்சம் எட்டிப்பார்த்தேன், அவர் சொன்ன ஐயா, நன்றாக தூங்கியபடி டியூட்டி பா
ர்த்துக் கொண்டிருந்தார்! மாமாவிடம் கேட்டேன் " நாம பணம் கொடுக்கலைனா என்ன பண்ணுவாங்க?" என்று, "என்ன பண்ணுவாங்க? சந்தேகமா இருக்கு செக் பண்ணனும்னு லேட் பண்ணுவாங்க, இன்னும் கொஞ்சம் மோசமான ஆளுங்களா இருந்தா, கஞ்சா பாக்கெட்ட அவங்களே போட்டு நம்ம கார்ல இருந்துதான் எடுத்ததா வழக்கு போடுவாங்க" என்றார்!  அரசாங்க அதிகாரிகளைப் பற்றிய மக்களின் இந்தப் பயம்தான் அவர்களை மேலும் லஞ்சமயமாக வாழவைத்து  கொண்டிருக்கிறது! 

சம்பவம் ஆறு.

விடுமுறையை சந்தோசமாக கழித்துவிட்டு திரும்ப சிங்கை வர அதே திருச்சி விமான நிலையம்! சரி.. எந்தப் பிரச்னையும் இருக்காது, ஏனென்றால் என்னிடம் செக் இன் லக்கேஜ் இல்லை! ஒரு ஹேன்ட் லக்கேஜ் மற்றும் லேப் டாப் மட்டுமே என்று நினைத்துதான் வந்தேன். ஆனால் அப்போதும் லஞ்சம் தன் கோரப் பற்களை காட்டியபடி என்னை வரவேற்றது! இந்தமுறையும் இமிக்ரேசனில் நீண்ட வரிசை! இன்னும் கொடுமை என்னவென்றால், மூன்று விமானங்கள் குறைந்த நேர இடைவெளியில் கிளம்பும், மூன்று விமான பயணிகளையும் கையாள அதே மூன்று அதிகாரிகள் மட்டுமே! நான் சிங்கைக்கு வரும் பயண நேரத்தைவிட விமான நிலையத்தில் செலவழிக்கும் நேரம் அதிகம்! ஒருவழியாக இமிக்ரேசன் முடிந்து உள்ளே போகும் முன் ஒரு கஸ்டம் ஆபிசரும் அவருக்கு துணையாக ஒரு போலிசும் இருந்து பாஸ்போர்ட்டை செக் செய்து அனுப்புவார்கள்.

என் பாஸ்போர்ட்டை வாங்கி புரட்டிப் பார்த்த அந்த போலிஸ் " என்ன தம்பி.அடிக்கடி வந்து போவீங்க போல? உங்களுக்கெல்லாம் நான் சொல்ல வேண்டியதே இல்லை, கவனிச்சிக்கிட்டு போய்கிட்டே இருங்க" என்றார்! அந்த நேரம் பார்த்து டைகர் ஏர்வேசின் செக்கிங் எஜன்ட் வர, நான் நழுவி எஸ்கலேட்டரில்  ஏற ஆரம்பித்தேன், அவரும் விட வில்லை என் பின்னாடியே வந்துவிட்டார்! " தம்பி..கவனிச்சிட்டு போங்க" என்று! திரும்பவும் மேலே ஒரு பெண் என் போர்டிங் பாஸை செக் செய்து ஓக்கே சொல்லவும் உடனே உள்ளே போய் விட்டேன்! உள்ளே போய் எல்லா ஃபார்மாலிடீஸ் முடிந்தபின் திரு
ம்பிப் பார்த்தேன், அப்பவும் அவர் இடுப்பில் கை வைத்து என்னை முறைத்தபடியே நின்றார்! என்னைப்போல அடிக்கடி வந்து செல்பவர்களையே இவர்கள் இந்தப் பாடு படுத்தினால், அதிகம் படிக்காமல் முதல் முறை வெளிநாடு செல்பவர்களை இவர்கள் என்ன பாடு படுத்துவார்கள்? பணம் கொடுத்தால்தான் பயணமே சாத்தியம் என்று சொன்னாலும் சொல்வார்கள்! இவர்களுக்கு ஏன் இந்தப் பிழைப்பு?


இந்த நீண்ட கட்டுரையை படித்து முடிக்கும் உங்களுக்கே இவ்வளவு ஆயாசமாக இருக்கும்போது, இதை ஒவ்வொரு பயணத்திலும் அனுபவிக்கும் பயணிகளின் நிலையை நினைத்துப்பாருங்கள்! பல வெளிநாட்டினர் வந்துபோகும் இது போன்ற இடங்களில் நம் மானத்தை நேரடியாக விமானத்தில் ஏற்றிக் கொண்டிருக்கின்றனர் இந்த ஊழல் அதிகாரிகள்! இந்தியனாக பிறந்த ஒவ்வொருவரும் லஞ்சத்தை தவிர்த்து வாழவே முடியாத சூழ்நிலையில் கொண்டுவந்து தள்ளிவிட்டது இந்த அதிகார வர்க்கம்! லஞ்சம் என்றால் என்னவென்றே தெரியக்கூடாத குழந்தைகளை லஞ்சம் கொடுத்துதான் பள்ளியில் சேர்க்கிறோம்! லஞ்சம் வாங்குவதும் கொடுப்பதும் தவறு என்று போதிக்க வேண்டிய ஆசிரியரே லஞ்சம் கொடுத்துதான் அந்த வேலைக்கு வருகிறார்! லஞ்சம் வாங்குவதை கண்காணித்து கண்டிக்க வேண்டிய காவல்துறை லஞ்சத்தில் திளைத்து கொண்டிருக்கிறது! சட்டங்களை கடுமையாக்க வேண்டிய மந்திரிகள் லஞ்சத்தை கமிஷன் என்று பெயர் மாற்றி வைத்து வாங்குகின்றனர்! ஆக மொத்தம் இந்தியாவிற்கு தேசிய வியாதி என்று ஒன்றை தேர்வு செய்தால் அதற்கு சரியான தேர்வு இந்த லஞ்சம்!


-கழுகு 
 

இனி வயசுக்கு வந்தா என்ன? வரலேன்னா என்ன?


          போன ஜென்மத்தில அதாவது கடந்த 2009ம் ஆண்டிலே நடந்த இந்திய பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் சிதம்பரம் (சிதம்பரம் கோஷ்டி தலைவர்) சிவகங்கை தொகுதிக்கு போட்டியிட்டார். இவரை எதிர்த்து, அ.தி.மு.க. சார்பில் ராஜகண்ணப்பன் போட்டியிட்டார்.

  முதலில் ராஜகண்ணப்பன் வெற்றிபெற்றதா அறிவிச்சிட்டாங்க! சந்தோசத்துல பட்டாசெல்லாம் வெடிச்சு முடிஞ்ச உடனே பார்த்தா, “3354 வாக்குகள் வித்தியாசத்தில் சிதம்பரம் வெற்றி பெற்றார்” அப்படின்னு திரும்ப ஒரு அறிவிப்பு. (அதாகப்பட்டது இந்த அறிவிப்பு, காங்கிரஸ் மத்தியில் பெரும்பான்மையாக வெற்றி பெற்றது என்ற செய்தி கிடைத்தவுடனே வெளியிட்டுட்டாங்க)
  ராஜகண்ணப்பனுக்கு முகமே இல்லை. ஓட்டு எண்ணிக்கையில் முறைகேடு நடந்ததாக மதுரை ஐகோர்ட் கிளையி்ல் ராஜகண்ணப்பன் வழக்கு தொடர்ந்தார். இதெல்லாம் நடந்தது எப்பன்னா 2009ல (அக்பர் காலம்னு வச்சுக்குங்களேன்)

  இதுல உத்தமைரயெல்லாம் விசாரிக்க கூடாதுனு சிதம்பரம் மனுத்தாக்கல் செஞ்சாரு. (செகப்பா இருக்கிறவங்கள கோர்ட்ல விசாரிக்க கூடாது). மனுவை நீதிபதி வெங்கட்ராமன் நிராகரித்துவிட்டார். இது எப்பன்னா 2012ம் ஆண்டு ஜுன் மாதம்.

  ஒரு வழக்கை விசாரிக்கலாமாஆஆஆ? வேண்டாமாஆஆஆ? அப்படின்னு முடிவு பண்ணுறதுக்கே 3 வருஷம்னா, இவிங்க விசாரிச்சு அதை தீர்ர்ப்பா எழுதி சொல்லுவதற்கு எத்தன வருஷம் ஆகும்?
ஏற்கனவே காங்கிரஸ் ஆட்சி அமைத்து மூன்று வருடம் முடிந்துவிட்டது. இவிங்க தீர்ப்பு சொல்லும்போது அடுத்த ஆட்சி நடந்துகொண்டிருக்கும்.

  அதன்பிறகு நீ வயசுக்கு வந்தா என்ன? வரலேன்னா என்ன?

  தீர்ப்பில் யாரை ராஜினாமா செய்யச்சொல்வர்களோ? இல்லாத பதவில ராஜினாமா செய்யசொல்வாங்களோ?


நீதி : காலம் கடந்து கொடுக்கப்படும் எந்த ஒரு சரியான தீர்ப்பும் தவறானதே!


டிஸ்கி : இப்பிடித்தான் இந்தியாவில தீர்ப்பு சொல்லும்போது வழக்கு போட்டவன் உயிரோடு இருப்பதில்லை அல்லது குற்றவாளி உயிரோடு இருப்பதில்லை.





 Tn Tourists Get Attacked At Kumbaru

செங்கோட்டை: செங்கோட்டையை அடுத்த ஆரியங்காவு பாலருவி, அச்சன்கோவில் கும்பாருட்டி அருவிகளில் தமிழக சுற்றுலாப் பயணிகள் தொடர்ந்து தாக்கப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தென்மேற்கு பருவமழை துவங்கியதை அடுத்து தமிழக, கேரள எல்லைப் பகுதிகளில் சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் குற்றால அருவிகளில் தண்ணீர் விழத் தொடங்கியுள்ளது. இதே போல செங்கோட்டையை அடுத்த கேரள பகுதிகளான ஆரியங்காவு பாலருவியிலும், அச்சன்கோவில் கும்பாருட்டி அருவியிலும் தண்ணீர் கொட்டத் தொடங்கியுள்ளது. இந்த இரண்டு அருவிகளும் இயற்கை எழில் கொஞ்சும் பகுதியில் அமைந்துள்ளதால் ஏராளமான தமிழக சுற்றுலாப் பயணிகள் இந்த 2 அருவிகளுக்கும் குளிக்கச் செல்கின்றனர்.

இந்நிலையில் தமிழகத்தில் இருந்து இவ்விரண்டு அருவிகளிலும் குளிக்கச் செல்லும் சுற்றுலாப் பயணிகளை கேரள சமூக விரோதிகள் தொடர்ந்து தாக்கி வருவதாக புகார் எழுந்துள்ளது. முல்லைப் பெரியாறு பிரச்சனையை காரணம் காட்டி இப்பகுதி சமூக விரோதிகள் தமிழக சுற்றுலாப் பயணிகளை தாக்குவதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர். கடந்த 8ம் தேதி விருதுநகர் மற்றும் தூத்துக்குடியைச் சேர்ந்த 3 குடும்பத்தைச் சேர்ந்த சுமார் 30 பேர் பாலருவியில் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது கேரள பகுதியைச் சேர்ந்த பலர் தமிழக பெண்களை கேலி செய்ததோடு ஆபாசமான முறையில் அநாகரிகமாக நடந்துள்ளனர். இதனை தட்டிக்கேட்ட தமிழக சுற்றுலாப் பயணிகளை தாக்கவும் செய்துள்ளனர்.

இதனால் இருதரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பு ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டது. இது குறித்து தமிழக சுற்றுலாப் பயணிகள் அங்கிருந்த போலீசார் மற்றும் வனத்துறையினரிடம் புகார் தெரிவித்தும் அவர்கள் இதைபற்றி கண்டுகொள்ளாமல் குடும்பத்தோடு குளித்துக கொண்டிருந்த சுற்றுலாப் பயணிகளை விரட்டுவதிலேயே குறியாக இருந்துள்ளனர். கடந்த ஆண்டு அச்சன்கோவில் பகுதியில் உள்ள கும்பாருட்டி பகுதியில் தமிழகத்தில் குடும்பத்துடன் சென்ற ஒரு பெண் அவரது கணவர் கண் முன்னே மானபங்கப்படுத்தி அந்த காட்சி இணையதளத்தில் வெளியானது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில் பாலருவியில் தமிழக சுற்றுலாப் பயணிகள் தாக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குற்றாலம், பாபநாசம், செங்கோட்டை பகுதியில் இயற்கை எழில்சார்ந்த மனதை மயக்கும் ஏராளமான சுற்றுலா ஸ்தலங்கள் இருந்த போதிலும் பாதுகாப்பு இல்லாத கும்பாருட்டி அருவி, பாலருவி போன்ற பகுதிகளுக்கு பெண்கள் செல்வதை தவிர்க்க வேண்டும் என செங்கோட்டை பகுதியைச் சேர்ந்த தமிழ் உணர்வாளர்கள் கடந்த ஆண்டே எச்சரித்த போதிலும் தமிழக சுற்றுலாப் பயணிகள் பாலருவி, கும்பாருட்டி பகுதிக்கு சென்று அவமானப்படுவது தொடர்கிறது என தமிழ் ஆர்வலர்கள் வருத்தத்துடன் தெரிவித்தனர்.

Posted by:
http://tamil.oneindia.in