சனி, 22 செப்டம்பர், 2012

"ஹஜ் யாத்திரை-தங்குமிடச் செலவை குறைக்க அமிக்கஸ் க்யூரி சிபாரிசு!



                                       புனித ஹஜ் யாத்திரைக்கான விமான பயணச்செலவு, சவூதி அரேபியாவில் தங்குமிடச்செலவு ஆகியவற்றை குறைப்பது தொடர்பாக அமிக்கஸ் க்யூரி (நீதிமன்றத்திற்கு உதவுபவர்) உச்சநீதிமன்றத்தில் சிபாரிசுகளை அளித்துள்ளார்.ஹஜ் தொடர்பாக உச்சநீதிமன்றம் நியமித்த அமிக்கஸ் க்யூரி ஹுஸேசா அஹ்மதி இந்த சிபாரிசுகளை அளித்துள்ளார்.

சவூதி அரேபியாவில் நீண்டகாலத்திற்கோ அல்லது குறைந்தது 10 ஆண்டுகளுக்கோ தங்குமிடத்தை வாடகைக்கு எடுத்து குறைந்த செலவில் புனித பயணிகளுக்கு அளிப்பது சாத்தியமா? என்பதுக் குறித்து மத்திய அரசு ஆராயவேண்டும் என்று அமிக்கஸ் க்யூரியின் அறிக்கையில் சிபாரிசுச் செய்யப்பட்டுள்ளது.இதனை அடுத்த வருடம் முதல் அமல்படுத்துவது தொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சகம் பிரமாணப்பத்திரத்தை சமர்ப்பிக்கவேண்டும்.ஏர் இந்தியா மூலமாகவோ தனியான் விமான நிறுவனங்கள் மூலமாகவோ குறைந்த கட்டணத்தில் புனிதப்பயணம் சாத்தியமாகும் வகையில் மத்திய விமானப்போக்குவரத்து அமைச்சகத்தின் பரிந்துரைகளை பிரமாணப்பத்திரமாக சமர்ப்பிக்கவேண்டும்.அமிக்க
ஸ் க்யூரியின் சிபாரிசுகளின் அடிப்படையில் இரு அமைச்சகங்களும் அடுத்த மாதம் 20-ஆம் தேதிக்குள் பிரமாணப்பத்திரத்தை சமர்ப்பிக்க நீதிபதிகளான அஃப்தாப் ஆலம் மற்றும் ரஞ்சனா பிரகாஷ் தேசாய் அடங்கிய பெஞ்ச் கோரிக்கை விடுத்துள்ளது.

அமிக்கஸ் க்யூரியின் அறிக்கையின் நகல்கள் விமானப்போக்குவரத்து துறை செயலாளருக்கும், வெளியுறவுத்துறை அமைச்சக செயலாளருக்கும் அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.மாநில ஹஜ் கமிட்டிகளின் பணிகளை மேம்படுத்துவது தொடர்பான கேள்விகளுக்கு ரெஜிஸ்ட்ரியில் இருந்து அனைத்து ஹஜ் கமிட்டிகளுக்கும் அளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.ஹஜ் காலக்கட்டத்தில் தாங்கள் அனுபவிக்கும் பிரச்சனைகளை சுட்டிக்காட்டி ஏர் இந்தியா பணியாளர்களின் அமைப்பும் இவ்வழக்கில் கட்சிதாரராக இணைந்திருந்தபோதும் அவர்களது வழக்கறிஞர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.கடந்த 18-ஆம் தேதி விமானப்பணியாளர்கள் டெல்லி ஏர்போர்டில் போராட்டம் நடத்தியதை நீதிமன்றத்திற்கு தெரிவிக்க மத்திய ஹஜ் கமிட்டிக்காக ஆஜரான காலித் அர்ஷித் முயன்றாலும் நீதிமன்றம் அதனை பரிசீலனைக்கு எடுக்கவில்லை.


அமிக்கஸ் க்யூரியின் சிபாரிசுகள் குறித்து உச்சநீதிமன்றம் மகிழ்ச்சி தெரிவித்தது.இவ்வழக்கின் விசாரணை நவம்பர் மாதம் எட்டாம் தேதி மீண்டும் விசாரணைக்கு வரும்.


thoothu


அரசு வேலைவாய்பு! - இணையம் வழியாக பதிவு செய்வது எப்படி?




                                             தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகங்களும் கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்டு ஆன்லைனில் இணைக்கப்பட்டுள்ளன. முதுகலை பட்டப்படிப்புகள், பொறியியல், மருத்துவம், உயர் தொழில்நுட்ப கல்வித்தகுதிகளை பதிவு செய்ய ஆன்லைன் பதிவு முறை 2001 ல் கொண்டுவரப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் பதிவு செய்துள்ள அனைத்து கல்வித்தகுதிகளையும் கொண்ட 64 லட்சம் பதிவ
ுதாரர்களை இணைக்கும் புதிய ஆன் லைன் சாப்ட்வேர் "சுசி லினக்ஸ்” என்ற பெயரைக்கொண்ட இப்புதிய சாப்ட்வேரை எல்காட் நிறுவனம் உருவாக்கி கொடுத்துள்ளது.
தமிழகத்தில் இதுவரை வேலைவாய்ப்பு அலுவலகங்களுக்கு நேரில் சென்றுதான் கல்வித் தகுதியைப் பதிவு செய்ய முடியும் என்ற நிலை இருந்து வந்தது. தற்போது வேலைவாய்ப்புக்காக பதிவு செய்தல், புதுப்பித்தல் போன்ற அனைத்துப் பணிகளையும் வீட்டிலிருந்தபடியே ஆன்லைனில் செய்து கொள்ள முடியும்.

இதற்காக வேலைவாய்ப்புத்துறை தனி இணையதளத்தை உருவாக்கியுள்ளது. ஏற்கெனவே வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்தவர்கள், இந்த இணைய தளத்தில் தங்களது பதிவு எண்ணை உள்ளிட்டு தங்களது கல்வி விவரங்களை சரிபார்த்துக் கொள்ள முடியும்.


புதிதாக பதிவு செய்து கொள்ள விரும்புவோர் தங்களது கல்வித் தகுதி, பிறப்பு, ஜாதிச் சான்றிதழ்களை ஸ்கேன் செய்து இந்த இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்



இணையதள முகவரி : 
http://www.tnvelaivaaippu.gov.in/

வேலைவாய்ப்பு அலுவலகத்தின் குறியிடு : PRD மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், பெரம்பலூர்


ஆன்லைனில் பதிவு செய்யும் முறை :


1. ஆன்லைனில் பதிவு செய்வது எப்படி ?


இணையதளத்திலுள்ள படிவத்தில் விவரங்களை நிரப்பி சான்றிதழ்களை ஸ்கேன் செய்து படிவத்தில் விண்ணப்பித்தவுடன் ஒரு தற்காலிக பயனாளி அடையாளம் மற்றும் ஏற்புச்சொல் வரும். தங்கள் விண்ணப்பத்தின் விவரங்கள் சரியானவை எனில் 7 நாட்களுக்குள் விண்ணப்பம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஏற்கப்படும். பதிவு அடையாள அட்டையே தாங்களே உருவாக்கி, தாங்களே அச்சிட்டு வெளியே எடுத்துக் கொள்ளலாம்.


2. கூடுதல் பதிவு செய்வது எப்படி ?


ஆன்லைன் கூடுதல் தகுதிகள் பகுதியை கிளிக் செய்ய வேண்டும். தங்கள் கோரிக்கையை வேலைவாய்ப்பு அலுவலகம் ஏற்றபின் புதிய அடையாள அட்டையை எடுக்கலாம்.


3. ஆன்லைனில் புதுப்பிக்க இயலுமா ?


ஆம். ஆன்லைனில் புதுப்பிக்கலாம். மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை பதிவான மாதத்திலும் தொடர்ந்து வரும் இரு மாதங்களுக்குள்ளும் புதுப்பிக்கலாம். வரையறுக்கப்பட்டுள்ள காலத்தே புதுப்பிக்காதவர்கள் 18 மாதச் சலுகையில் புதுப்பிக்க விண்ணப்பிக்கலாம்.


4. விண்ணப்பம் ஏற்கப்பட்டதா, மறுக்கப்பட்டதா ? என்பதை எப்படி அறிவது ?

தற்காலிகப் பதிவு எண்ணை "பயன்படுத்துவோர் அடையாளமாகவும்" (username), பிறந்த தேதியை, எற்புச் சொல்லாகவும் (password) பயன்படுத்தி, பதிவின் நிலையை அறியலாம்

5. ஆன்லைனில் முகவரி மாற்ற முடியுமா ?


ஆம். பதிவு செய்தவர்கள் தாங்களே முகவரியை மாற்றிக் கொள்ளலாம்


6. ஆன்லைனில் முன்னுரிமைச் சான்றினை (priority certificate) பதிய இயலுமா ?


முன்னுரிமைச் சான்றுகள், எடுத்துக்காட்டாக, நில எடுப்பு பாதிப்புச்சான்று (land acquisition) போன்றவற்றில் மெய்த்தன்மை உறுதி செய்யப்படவேண்டும். எனவே, எவ்வகை முன்னுரிமைச் சான்றுகளையும் ஆன்லைனில் பதிய இயலாது. சான்றின் நகல்களை விண்ணப்பத்துடன் அஞ்சலில்/நேரில் வேலைவாய்ப்பகத்திற்கு அனுப்ப வேண்டும்.


7. இத்தளத்தில் பதிவு செய்ய தகுதியானவர் யார் ?


இத்தளத்தில் தமிழ்நாட்டில் வசித்து வருபவர் பதியலாம்.


8. இத்தளம் மூலம் பணி நாடுவோர்களுக்கு உள்ள வசதிகள் யாவை ?


நேரில் பதிவு, நேரில் பதிவு புதுப்பித்தல், தகுதிகள் அதிகப்படுத்தல், அனுப்பப்பட்ட பதிவுக்கான பதிவட்டை எடுத்தல், வேலைவாய்ப்பு விவரங்கள், பல்வேறு தகுதிகளுக்கான பரிந்துரை வரம்புகள் அளித்தல் ஆகியவை உள்ளன.
 

சவுதி அரேபியாவில் (Jubail) சாலை விபத்து - 35 இந்தியர்கள் பலி



                                சவுதி அரேபியாவில் 17/09/2012 இரவில் ஏற்ப்பட்ட சாலை விபத்தில் இந்தியாவைச் சேர்ந்த 35 பேர் பலியாகியுள்ளனர் மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர்.

சவுதி அரேபியாவில்
17/09/2012 இரவு 7 மணியளவில் பணியாளர்களை ஏற்றிக் கொண்டு வந்த பேருந்து ஒன்று அவ்வழியே வந்த டேன்கர் லாரியில் மோதி வெடித்து சிதறியது.இந்த விபத்தில் 35 பேர் உயிரிழந்தாதகவும் 12 பேர்
படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.பேருந்துக்கு சொந்தமான நிறுவனம் நாசர் அல் ஹாசிர் என்றும் அது கேரளாவைச் சேர்ந்த ரவி பிள்ளை என்பவருக்கு சொந்தமானது எனவும் அறியப்படுகிறது.

இந்த பேருந்தில் பயணித்தவர்கள் தமிழ்நாடு,கேரளா,ஆந்திராவைச
் சேர்ந்தவர்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்த நிலையில் இறந்தவர்களின் உடல்கள் அடையாளம் காணப்பட முடியாத அளவிற்கு சிதைந்துள்ளதால் முழு விவரங்களை வெளியிடுவதில் தாமதம் ஏற்ப்பட்டுள்ளது.

Thanks to Newsalai.

மில்லத் நகர் நூருல் இஸ்லாம் இளைஞர் அணியினர் இந்த வருடமும் கூட்டுக் குர்பானி!




 


                        இந்த வருடமும் மில்லத் நகர் நூருல் இஸ்லாம் இளைஞர் அணியினர் கூட்டுக் குர்பானி கொடுக்க திட்டமிட்டுள்ளனர். ஒரு பங்கின் விலை ரூ 1500/- என்று நிர்னைதுள்ளர்கள். வரும் பக்ரீத் பெருநாளுக்கு கூட்டுக் குர்பானி கொடுக்க விருப்பம் உள்ளவர்கள் மில்லத் நகர் நூருல் இஸ்லாம் இளைஞர் அணியினரை தொடர்பு கொண்டு உங்கள் குர்பானியின் பங்கினை கொடுக்கவும்.
 
(பங்குதாரர்களுக்கு இறைச்சி வீட்டிற்க்கே டோர் டெலிவரி செய்யப்படும் )
 
தொடர்புக்கு ;
 
 M.மன்சூர் அஹமது    - 9843383336
 
A.ஜமால் தீன்                  - 9943406510        
 
 M.ஜாகிர்  ஹுசைன்    - 9787217179
 
M.அன்சர் அலி                - 9505358592
 
 A.முஹம்மது பாரூக் - 8122392008