சனி, 18 ஆகஸ்ட், 2012

EID MUBARAK TO ALL



கலவரத்தை கண்டித்து நடந்த போராட்டம், கலவரத்தில் முடிந்திருக்கிறது.

 


கலவரத்தை கண்டித்து நடந்த போராட்டம், கலவரத்தில் முடிந்திருக்கிறது. மும்பையில் நேற்று அசாம் கலவரத்தை கண்டித்து நடந்த போராட்டம் ஒன்றில் வன்முறை வெடித்ததால், காவல்துறையினர் துப்பாக்கி சூடு நடத்தினர்.
கலவரத்தாலும், துப்பாக்கிச் சூட்டாலும், 2 பேர் உயிரிழந்தனர். 55 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். வாகனங்கள் கொளுத்தப்பட்டன. போலீஸ் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட பின்னரே கலவரம்
ஓய்த்திருக்கிறது.
அசாமில் நடைபெற்ற கலவரத்தை கண்டித்து, ரசா அகாடமி என்ற அமைப்பினரால் ஏற்பாடு செய்யப்பட்டு, மும்பை ஆசாத் மைதானத்தில் நேற்று பிற்பகல் போராட்டம் நடைபெற்றது. இவர்களது போராட்டம், அசாம் கலவரத்தில் தொடர்புடைய இரு தரப்பினரில், ஒரு தரப்பினருக்கு ஆதரவாக நடத்தப்பட்டது.
அதாவது, மியான்மர் அகதிகளாக வந்து அசாமில் குடியேறிய மக்களுக்கு ஆதரவாக இந்த போராட்டத்தை நடத்தினர், ரசா அகடமி அமைப்பினர்.
அமைதியான முறையில் நடைபெற்ற போராட்டத்தில் திடீரென வன்முறை வெடித்தது. அப்போது போராட்டக்காரர்களில் சிலர் பாதுகாப்பிற்கு வந்திருந்த காவல்துறையினர் மீது கற்களை வீசி தாக்கியதோடு, அங்கிருந்த வாகனங்களைத் தீயிட்டும் கொளுத்தினர். அதிலிருந்து துவங்கியது கலவரம்.
அரசு பஸ்கள், வாகனங்கள் மீது சரமாரியாக கல்வீச்சு நடைபெற்றது. தனியார் செய்தி தொலைக்காட்சிகளின் 3 ஒளிபரப்பு வாகனங்கள் கொளுத்தப்பட்டன. அதை தடுக்க முயன்ற செய்தியாளர்கள் தாக்கப்பட்டனர். ரிசர்வ் போலீஸ் படை வேனும் எரிக்கப்பட்டது. உதவி போலீஸ் கமிஷனர் கார் அடித்து நொறுக்கப்பட்டது.
சிறிது நேரத்தில் அந்த பகுதி முழுவதும் போர்க்களமாக காட்சியளித்தது.
நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர தடியடி நடத்திய காவல்துறையினர், பின்னர் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு எச்சரித்தனர். கலவரக்காரர்கள் அப்போதும் கலைந்து செல்லாததால் காவல்துறையினர் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 2 இளைஞர்கள் உயிரிழந்தனர். எண்ணிக்கை சொல்லப்படாத அளவில் பலர் காயம் அடைந்தனர்.
கலவரத்தின் போது போலீசாரின் துப்பாக்கிகளை வன்முறையாளர்கள் பறித்து சென்றதாக கூறப்படுகிறது. அது பற்றி விசாரணை நடக்கிறது.
கலவரத்துக்கு காரணமானவர்கள், வாகனங்களுக்கு தீ வைத்த விஷமிகள் சிலரின் அடையாளம் தெரிந்திருப்பதாகவும், அவர்கள் விரைவில் பிடிபடுவார்கள் என்றும் போலீசார் கூறியுள்ளனர்.
காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து மகாராஷ்ட்ர முதல்வர் ப்ரித்விராஜ் சவான் ஆறுதல் கூறினார். அவர், “போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஏன் வன்முறையில் இறங்கினர் என்பது குறித்து விசாரணை நடத்தப்படும். மும்பை குற்றப்பிரிவு காவல்துறையிடம் இது குறித்த விசாரணை ஒப்படைக்கப்பட்டு அவர்கள் விசாரணையை தொடங்கி உள்ளனர்” என்றார்.
போராட்டத்தை ஏற்பாடு செய்த இஸ்லாமிய அமைப்பான ரசா அகாடமியின் பொதுச்செயலாளர் முகமது சயீத், இந்த வன்முறைக்கும் தங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கூறினார். போராட்டம் நடைபெற்றபோது யாரோ சிலர் திடீரென உள்ளே புகுந்து வன்முறையில் ஈடுபட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அங்கிருந்து கிடைக்கும் தகவல்களும், இது நிச்சயமாக ‘வெளி வேலை’ என்பதாகவே உள்ளது. ரசா அகாடமி அமைப்பு வன்முறையில் இறங்கி, துப்பாக்கிகளை பறித்துச் செல்லும் ரகத்திலான அமைப்பு அல்ல.


வியாழன், 16 ஆகஸ்ட், 2012

பெங்களூருவை தாக்கிய திடீர் வதந்தி. பெட்டி படுக்கைகளுடன் பெங்களூருவை விட்டு வெளியேறும் ஆயிரக்கணக்கான மக்கள். (படங்கள் இணைப்பு)


 பெங்களூருவை திடீரென ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும் வதந்தி காரணமாக, ஆயிரக்கணக்கான மக்கள் தமது பெட்டி படுக்கைகளுடன் பெங்களூருவை விட்டு வெளியேறியபடி உள்ளனர். “அசாம் பாணியிலான கலவரம் பெங்களூருவில் துவங்கப் போகின்றது” என்பதே, வதந்தி
.
“அசாம் பாணியிலான கலவரம்” என்று கூறப்பட்டுள்ளதால், வட கிழக்கு மாநில மக்களை குறிவைத்த கலவரம் என்பதே வதந்தியின் அர்த்தம். நகரை விட்டு இரவோடு இரவாக வெளியேறிக் கொண்டுள்ளவர்களும், வட கிழக்கு மாநிலங்களை சேர்ந்தவர்களே. இதில், பெங்களூருவில் படிக்கும் வட கிழக்கு மாநில மாணவர்கள், ஐ.டி. நிறுவனங்களில் பணிபுரிபவர்களும் அடக்கம்.

நேற்றிரவு பரவத் துவங்கியது இந்த வதந்தி. “கர்நாடக மாநிலத்தில் வாழும் வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்தோர் மீது ஆகஸ்ட் 20-ந் தேதி ரம்ஜான் நோன்புக்குப் பிறகு அசாமில் நடத்தப்பட்டது போன்று மிகப் பெரும் தாக்குதல் நடத்தப்படும்” என்றபதை தவிர வேறு விபரம் ஏதும் கிடையாது. செல்போன் எஸ்.எம்.எஸ், ஃபேஸ்புக், டிவிட்டர் மூலமாக இந்த வதந்தி காட்டுத் தீயாகப் பரவியது.

நேற்று இரவே, பெங்களூரு ரெயில் நிலையத்தில் திடீரென ஏராளமானவர்கள் பெட்டி படுக்கைகளுடன் வந்து இறங்கினார்கள். கிடைக்கும் ரயிலை பிடித்து, எப்படியாவது கர்நாடகாவை விட்டு வெளியேறினால் போதும் என்ற மன நிலையிலேயே அநேகர் இருந்தனர். இதனால், நேற்றிரவில் இருந்து பெங்களூருவில் இருந்து வடக்கே செல்லும் அனைத்து தொலைதூர ரயில்களும் நிரம்பி வழிகின்றன.

கர்நாடகா அரசு, அனைவரது பாதுகாப்புக்கும் உத்தரவாதம் கொடுப்பதாக அறிவித்துள்ள நிலையிலும், நகரை விட்டு வெளியேறுபவர்கள், தொடர்ந்து வெளியேறிக் கொண்டுதான் உள்ளார்கள்.

இதற்கு மற்றொரு காரணம், மைசூரில் நடைபெற்ற சம்பவம் ஒன்று பரவி, பீதியை கிளப்பி விட்டிருப்பதுதான்.
மைசூரில், கல்லூரி மாணவர் ஒருவர் தாக்கப்பட்டு, ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளார். இவர் உண்மையில் இந்தியரே கிடையாது. திபெத்தை சேர்ந்தவர். ஆனாலும் இவரது முக அடையாளத்தை வைத்து, வட கிழக்கு மாநிலத்தவர் என்று கருதி தாக்குதல் நடத்தப்பட்டது என்று பரவலாக நம்பப்படுகிறது.
இவரைத் தாக்கிவிட்டு ஓடியதாக கூறப்படும் இருவரை மைசூர் போலீஸ் தேடிவருகின்றனர்.

அசாம் கலவரத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சில தினங்களுக்கு முன், மும்பையில் நடத்தப்பட்ட போராட்டத்தில் கலவரம் ஏற்பட்டது. அதனால், இந்த வதந்தியை வட கிழக்கு மாநில மக்கள் லேசாக ஓதுக்கிவிட தயாரில்லை என்கிறார்கள்.
தற்போதுள்ள நிலைமையைப் பார்த்தால், பெங்களூருவில் ஏற்பட்டுள்ள பதட்டம், உடனடியாக தணிந்து விடாது போல தோன்றுகிறது. கர்நாடகாவின் மற்றைய பகுதிகளுக்கும் பரவினால், நிலைமை மோசமடையும்.

செவ்வாய், 14 ஆகஸ்ட், 2012

அஸ்ஸாம் மக்களுக்கு நிவாரணம்! ரிஹாப் சாதனை!




                                    அஸ்ஸாமில் போடோக்கள் மற்றும் முஸ்லிம்கள் இடையே நிகழ்ந்த கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்கள் தங்க வைக்கப்பட்டிருக்கும் 149 அகதிகள் முகாம்களிலும் ரிஹாப் தன்னார்வ சேவைத் தொண்டர்களின் துயர் துடைப்பு பணிகள் தொடர்கின்றன.

ரிஹாப் இந்தியா பவுண்டேசன் பொதுச் செயலாளரும், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய செயற்குழு உறுப்பினருமான ஒ.எம்.அப்துல் ஸலாம் முகாம்களில் நடைபெறும் துயர் துடைப்பு பணிகளுக்கு தலைமை தாங்கி வழி நடத்தி வருகிறார். 

 
தினமும் 150 ரிஹாப் தொண்டர்கள் சேவை களத்தில் பணியாற்றி வருகின்றனர். முதல் கட்டமாக உணவு, துணிகள், மருந்து ஆகியவற்றை முகாம்களுக்கு கொண்டு சேர்ப்பதே தங்களுடைய பணி என்று ஒ.எம்.அப்துல் ஸலாம் கூறுகிறார். அத்துடன் அகதி முகாம்களில் தங்கியிருப்போர் தங்களுடைய கிராமங்களுக்கு திரும்பிச் செல்லவும், அவர்களுடைய மறுவாழ்வுக்கு சாத்தியமான அனைத்து உதவிகளையும் செய்வோம் என அவர் தெரிவித்தார்.

சேதமடைந்த வீடுகளை புனரமைப்பது, தற்காலிக ஷெல்டர்களை அமைப்பது ஆகிய பணிகளை ரிஹாப் தன்னார்வ சேவைத் தொண்டர்கள் செய்து வருகின்றனர். காணாமல் போனவர்கள், மரணம், வன்முறை, வீடு சேதம், இதர அத்துமீறல்கள் ஆகியவற்றில் சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வழக்கறிஞர்கள் அடங்கிய சட்ட உதவிக்குழு, மருத்துவ சேவைக்கு டாக்டர்கள், பார்மஸிஸ்டுகள், லேப் டெக்னீசியன்கள் ஆகியோரின் சேவையையும் ரிஹாப் அளித்து வருகிறது.

ரிஹாப் இந்தியா பவுண்டேசனுக்கு உங்கள் உதவிகளை செய்திட நினைக்கும் நல்ல உள்ளங்கள் அதை எப்படி அனுப்புவது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் puthiyathenral@gmail.com க்கு தொடர்பு கொள்ளவும்.

பர்மா விசயத்தில் வாய் திறக்காத அரசியல் கட்சிகள்...............!!


             நம் சொந்தங்களுக்காக நாமும் நமது பங்களிப்பை செலுத்தலாமே.....

அன்பு சகோதரர்களே.....

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).....

பர்மாவில் நம் சொந்தங்கள் கொடூரமான முறையில் தாக்கப்பட்டு 30 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டும், 1 லட்சத்திற்கும் அதிகமானோர் அகதிகளாக்கப்பட்டும் இந்திய, தமிழக அரசியல் கட்சிகள் வாய் திறக்காமல் இருந்துவருகிறார்கள்,


நம் சொந்தங்கள் கொத்து கொத்தாக கொல்லப்பட்டும் கொஞ்சம் கூட மனிதநேயமின்றி, ஈவு இரக்கமின்றி நமது அரசியல் கட்சிகள் நடந்து வருவது நமக்கு பிரமிப்பை ஏற்படுத்துகிறது, தொப்பியை அணிந்து கொண்டு நோன்பு கஞ்சி குடிக்க வருகை தரும் அரசியல் கட்சிகள் பர்மாவில் முஸ்லிம்கள் கொடூரமான முறையில் தாக்கப்படும் போது வாய் திறக்காமல் இருப்பதன் காரணமென்ன........???


உலகமே திரும்பி பார்க்கும் அளவில் இன சுத்திகரிப்பை நடத்தி கொண்டிருக்கும் பயங்கரவாத பர்மா அரசுக்கு எதிராக உலகம் முழுவதும் கண்டனங்களும், எதிர்ப்புகளும் அலை அலையாக ஆர்ப்பரித்து கொண்டிருக்கிறது,


இந்நிலையில் துருக்கி அதிபரின் மனைவி நேரடியாகவே பாதிக்கப்பட்ட தமது குடும்பத்தினரை ஆரத்தழுவி, கட்டிபிடித்து ஆறுதல் கூறி தான் கொண்டு சென்ற கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள நிவாரண பொருட்களையும் வழங்கி விட்டு வந்திருந்தார்,


அதேபோல் சவூதி அரேபியாவும் 250 கோடி ரூபாயினை பாதிக்கப்பட்ட தமது குடும்பத்தினருக்கு வழங்கியுள்ளது,


அத்துடன் உலகளாவிய முஸ்லிம் நாடுகளின் தலைவர்கள் ஒருங்கிணைந்து குரல் கொடுப்பதால் ஆட்டம் கண்டு போன பர்மா விழிபிதுங்கி நிற்பதையும் கண்டு வருகிறோம்,


அங்கு 1 லட்சத்திற்கும் மேற்பட்ட நமது சொந்தங்கள் அகதிகலாக்கப்பட்டுள்ளதால் அவர்களுக்கான நிவாரணம் முஸ்லிம் உலகத்தினர் செய்து வந்தாலும், நாமும் நமது பங்களிப்பாக நமது குடும்பத்தினருக்கு கட்டாயம் செய்ய வேண்டும்,


ஒவ்வொரு இயக்கத்தினரும் அவரவர் சார்ந்த இயக்கத்தின் தலைமையை வலியுறுத்தியும், ஒவ்வொரு ஜமாஅத்தினரும் அந்தந்த ஊர் ஜமாஅத் நிர்வாகிகளையும் வலியுறுத்தி பர்மாவிலுள்ள நமது சொந்தங்களுக்காக வசூல் செய்ய சொல்லி நாமும் நமது பங்களிப்பை செலுத்தலாமே.....


நாம் பெரிய அளவில் செய்யவில்லை என்றாலும் தமிழக முஸ்லிம்களின் சார்பில் நாம் சுமாராக 10 கோடி ரூபாயாவது கொடுக்க வேண்டும்,


நாம் எந்த அரசியல் கட்சியையும் கெஞ்ச வேண்டிய அவசியம் இல்லை, எந்த அரசியல்வாதியையும் கெஞ்ச வேண்டிய அவசியம் இல்லை...... யாரும் நம் சொந்தங்களுக்காக குரல் கொடுக்க முன்வரவில்லை என்றாலும் நம்மோடு நம்மை படைத்த அல்லாஹ் இருக்கிறான்,


தமிழகத்திலுள்ள ஒவ்வொரு முஸ்லிமும் வெறும் 10 ரூபாய் கொடுத்தாலே போதும் 1 கோடி முஸ்லிம்களுக்கு 10 கோடி ரூபாய் சேர்ந்துவிடும்.....


இந்த தருணத்தில் நாமும் நமது அரசியல் கட்சியை இனங்கண்டு கொள்ள வாய்ப்பாகவும் அல்லாஹ் ஆக்கியுள்ளான்,


இப்படி செய்யலாமா......? உங்களுடைய கருத்துக்களை சொல்லவும்

 
அன்புடன் உங்கள் சகோதரன் 
 

நேர்மை அரசியல்வாதி விருது பெற்றார் டாக்டர் பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் எம்.எல்.ஏ



நம் நாட்டில் மிகவும் பற்றாக்குறையும் தட்டுப்பாடும் மிக்கதாக இருப்பது நேர்மை. இன்னவர் நேர்மையானவர் என்று யாருக்கும் சான்றளிக்க இயலவில்லை. யாரையும் நேர்மையாளர் என்று யாரும் நம்பத் தயாரில்லை என்பதாக சூழ்நிலை இருக்கிறது. இந்த நேர்மைப் பஞ்சத்தைப் போக்குவதற்காக வேண்டி சமூகதளத்தில் பலர் போராடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் அமைப்புகளாகவும் உருவாகி இருக்கிறார்கள். ஆன்மீக, சித்தாந்த வாழ்க்கையில் இருந்து விடுபட்ட காரணத்தால் மக்கள் பேராசைப் பிடித்து லஞ்சம் பெறவும், ஊழல் செய்யவும் துணிந்துவிட்டனர். ஆனால் மக்கள் மத்தியில் ஆன்மீகம் பெருக்கெடுத்து ஓடுவதுபோல் தோன்றுகிறது. இது, வெறும் வழிபாட்டு ஆன்மீகம். அதாவது, பத்து பைசாவுக்கு செலவில்லாத அல்லது அதிகபட்சம் பத்து ரூபாய்க்குள் செலவு கொண்ட ஆன்மீகம். ஆனால் மக்கள் வாழ்வியலில் ஆன்மீகம் வறண்டுவிட்டது. அதனால் நேர்மை நழுவிவிட்டது.

இந்த நழுவிய நேர்மையை மீட்டெடுக்கும் முயற்சியாக 1) ஊழல் ஒழிப்பு இயக்கம் 2) ஐந்தாவது தூண் 3) லஞ்சம் கொடாதோர் இயக்கம் 4) தமிழ்நாடு ஊழல் எதிர்ப்பு இயக்கம் 5) உந்துனர் அறக்கட்டளை 6) மக்கள் சக்தி இயக்கம் ஆகிய ஊழல் எதிர்ப்பு இயக்கங்கள் அமைப்புகள் ஒன்றிணைந்து ஒரு கூட்டமைப்பை உருவாக்கி, நேர்மையாக நடப்பவர்களைப் பாராட்டி கௌரவிப்பது என்று முடிவெடுத்தன. அரசியல்வாதிகளில் யாராவது நேர்மையாக இருப்பதாகச் சொன்னால் அது நம்பவே முடியாத செய்தி. அதனால்தான் அரசியலில் நேர்மையாக இருப்பவர்களை முதலில் கௌரவிப்பது என்று முடிவெடுத்தன.

அதன்படி, 234 சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் சில கேள்விகள் உள்ளடங்கிய படிவத்தை அனுப்பிவைத்து, அதனை நிரப்பி அனுப்ப வேண்டி கேட்டுக்கொண்டனர். அதில் 24 கேள்விகள் இடம்பெற்றன. அவ்வாறு அனுப்பப்பட்ட படிவத்தை மொத்தமே நான்கு பேர்தான் நிரப்பி அனுப்பி இருந்தனர். அவர்கள்:
1) பேராசிரியர் டாக்டர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் (இராமநாதபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர்)
2) இரா. அண்ணாதுரை (மதுரை மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர்)
3) ஜெ. புஷ்பலீலா ஆல்பன் (பத்மநாபபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர்)
4) க. பாண்டியராஜன் (விருதுநகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர்)

இந்த நான்கு சட்டமன்ற உறுப்பினர்களையும் அழைத்து ‘திருவள்ளுவர் நேர்மை அரசியல் விருது’ என்ற பெயரில் விருதுகள் வழங்கி கௌரவித்தனர். இதற்கான நிகழ்ச்சி 11.08.2012 அன்று சென்னை, எத்திராஜ் மகளிர் கல்லூரி கேரளங்கத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு திருப்பூர் ஊராட்சி ஒன்றிய முன்னாள் தலைவர் வெ. பொன்னுலிங்கம் (வயது 90) தலைமை தாங்கினார். அவர் தனது உரையில், ‘பாராளுமன்ற ஜனநாயக முறையே ஊழலுக்கு காரணம். பிரதமர் மற்றும் முதல்வர்களை மக்களே நேரடியாகத் தேர்ந்தெடுக்கும் முறை வரவேண்டும், என்றார்.

வாழ்த்துரை வழங்க இலக்கிய செல்வர் குமரி அனந்தன், பி.எஸ்.ராகவன் ஐ.ஏ.எஸ். (ஓய்வு) வழக்கறிஞர் சுதா ராமலிங்கம் மற்றும் மாலன் ஆகியோர் வந்திருந்தனர். நிகழ்ச்சிக்கு இடையே நோன்பு துறப்பதற்கான நேரம் வந்ததையடுத்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், வந்திருந்த முஸ்லிம்களுக்கு நோன்பு துறக்க வசதி ஏற்படுத்திக் கொடுத்திருந்தனர். பின்னர் கல்லூரி வளாகத்தில் மஃரிப் தொழுகையை பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் தலைமையேற்று நடத்தினார்.

குமரி அனந்தன் தனது உரையில், காமராஜர் முதல் அமைச்சராக இருந்தபோது அவர் நேர்மையாக நடந்துகொண்ட சம்பவங்களைச் சொல்லி, விருது பெற்றவர்களைப் பாராட்டினார்.

மாலன் பேசுகையில், சுதந்திரம் அடைந்து 60 ஆண்டுகள் ஆகிவிட்டது. இந்த 60 ஆண்டுகளில் நேர்மையாளன் என்று சொல்லிக் கொள்வதில் நமக்குத் தயக்கம் ஏற்பட்டிருப்பதுதான் சுதந்திரம் நமக்குத் தந்த அனுபவம். லஞ்சம் வாங்குவது சட்டப்பூர்வமாகி இருக்கிறது. மக்களும் இதனை சட்டவிரோதமாகப் பார்ப்பதில்லை. தேசத்தை விற்று தங்களைக் காப்பாற்றத் துணிந்திருக்கிறார்கள்.

நேர்மையாக நடக்க விரும்பாதவர்கள் மத்தியில் நேர்மையாக நடக்க விரும்புபவர்களைப் பாராட்டியாக வேண்டும். இல்லையென்றால் நேர்மையாக நடப்பவர்களுக்கே சலிப்பு வந்துவிடும். அதனால்தான் நேர்மையாக நடந்து கொள்பவர்களை அழைத்துப் பாராட்ட வேண்டும் என்று முடிவு செய்தோம். முதலில் அரசியலில் இருப்பவர்களைப் பாராட்ட வேண்டும் என்று முடிவு செய்தோம். இப்படிப்பட்ட முயற்சி எடுத்த எஸ்.எம்.அரசு (ஊழல் எதிர்ப்பு இயக்கம் அமைப்பின் பொதுச் செயலாளர்), அவர்களைப் பாராட்டுவதாகக் கூறினார்.

பி.எஸ்.ராகவன், ஐ.ஏ.எஸ்., (ஓய்வு); சுவாரஸ்யமான தகவல்கள் பல கூறினார். தனது வாழ்நாளில் 10 ஆயிரத்துக்கும் அதிகமானநிகழ்ச்சிகளில் கலந்துகொண்டதாகவும் ஆனால் இந்த நிகழ்ச்சிதான் தன்னை அதிகம் ஆர்வப்படுத்தியதாகவும் கூறினார். அந்தக் காலத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மக்களுக்காக வேலை செய்வதைத் தொண்டாக கருதினார்கள். ஆங்கிலேயர் இந்தியாவை ஆண்ட சமயத்தில், ஆட்சித் தலைவரான வைஸ்ராயை யாரும் பார்த்துவிட முடியாது. ஆனால் அவருக்கு சாதாரண ஒரு குடிமகன் கடிதம் எழுதினாலும் அதற்கு பதில் கடிதம் ஏழு நாட்களில் வரும். அந்த பதில் கடிதத்தில், வைஸ்ராய்கள், I am Viceroy. Sir! your most obedient and servent என்று எழுதினார்கள். சுதந்தித்திற்குப் பிறகு, நேரு அமைச்சரவையில்தான் The Most obedient and Servent என்பதை எடுத்துவிட்டார்கள். மக்களுக்கு பதில் சொல்லக் கடமை அற்றவர்களாக கருதிக் கொண்டார்கள். நம்மை அடிமைப்படுத்தியதாகக் கூறப்படும் ஆங்கிலேயர்கள்கூட ஒவ்வொரு குடிமகனையும் மதித்தார்கள் என்று கூறினார்.

சுதா ராமலிங்கம் சென்னை உயர்நீதிமன்றத் தின் வழக்குரைஞர் மற்றும் மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் (பி.யு.சி.எல்) தேசியத் துணைத் தலைவர் இங்கே விருது பெறக்கூடிய நான்கு சட்டமன்ற உறுப்பினர்களில் பேராசிரியர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ்வை எனக்கு 20 ஆண்டுகளுக்கு மேலாக, தமுமுக தொடங்குவதற்கு முன்னதாகவே தெரியும். தமுமுக என்ற ஜனநாயக அமைப்பு உருவாவதற்கு நாங்களும் ஒருவகையில் காரணமாக இருந்திருக்கிறோம். கல்லூரிப் பேராசிரியராக இருந்தவர் சட்டமன்ற உறுப்பினராகி இன்று இந்த விருதைப் பெறுவது எனக்கு மகிழ்ச்சி. நாம் ஏற்கெனவே மாற்றப்பட்டவர்களோடுதான் பேசிக் கொண்டிருக்கிறோம் என்றார். இங்கு இளைஞர்கள் யாரும் வரவில்லை என்று ஆதங்கப்பட்டார். தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு முன்னாள் நாடா-ளுமன்ற உறுப்பினர் இல்லத் திருமணம் ஒரு கோடி ரூபாய்க்கும் மேலான செலவில் நடந்ததைச் சுட்டிக்காட்டி, நேர்மை விருதுபெற்ற சட்டமன்ற உறுப்பினர்களைப் பாராட்டினார்.

விருது பெற்றவர்கள் ஏற்புரை இரா. அண்ணாதுரை எம்.எல்.ஏ
தனது சகோதரி வீட்டுக்கு குடிநீர் இணைப்பு கொடுத்ததற்காக அன்றைய பொதுப்பணித் துறை அமைச்சர் (நெல்லை மஜீத்) அவர்களை காமராஜர் கடிந்துகொண்டதையும், அந்தக் குழாய் இணைப்பைத் துண்டிக்கச் செய்ததையும் சுட்டிக் காட்டினார்.

திரிபுரா முதலமைச்சர் நிருபன் சக்ரவர்த்தி, பதவியைவிட்டுப் போகும்போது ஒரு பெட்டியில் தனது துணிகளையும், மறு பெட்டியில் புத்தகங்களையும் கொண்ட இரண்டு பெட்டிகளோடு மட்டும் வீட்டுக்குப் போனதையும் நினைவுகூர்ந்தார்.

பேராசிரியர் டாக்டர் எம்.ஹெச். ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ
ஊழல், மக்களின் மனசாட்சியாகிவிட்டது. இங்கு பாராட்டுகளைப் பெறுவதற்காக நான் வரவில்லை. ஆனால் அதைவிட முக்கியம் ஊழலை எதிர்க்கக் கூடியவர்களுடன் என்னை அடையாளப்படுத்தி அந்த சிந்தனையை வலுப்படுத்துவதற்காகவே நான் இந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறேன்.


1995ல் தமுமுக, சிறுபான்மை மக்களின் மனித உரிமைகளை நிலைநாட்டுவதற்காகவே தொடங்கப்பட்டது. ஆனால் காலப்போக்கில் அனைத்து மக்களுக்கும் சாதி, சமயம் பார்க்காமல் பல்வேறு வகையான மக்கள் சேவையில் நாங்கள் ஈடுபட்டோம். முதலில் தேர்தலில் போட்டியிடுவதில்லை என்ற நிலைப்பாட்டில்தான் இருந்தோம். ஆனால் தேர்தல் வரும்போது அரசியல் ரீதியாக குறிப்பிட்ட கூட்டணிக்கு ஆதரவு என்ற நிலைப்பாடு எடுத்தோம். தேர்தல் அரசியலிலும் பங்கேற்க வேண்டும் என்று பலர் வற்புறுத்திக் கூறிய பின்னர்தான் அரசியலில் பங்கெடுப்பது என்று முடிவு செய்யப்பட்டது. அப்போதும் சிலர், அரசியல் ஒரு சாக்கடை என்று எச்சரிக்கை செய்தார்கள்.

இன்று, அரசியல் ஒரு தொழிலாகிவிட்டது. ஆனால் அது சேவையாக இருக்கவேண்டும். அதற்காகவே, மாற்று அரசியலுக்கான களம் என்று மனிதநேய மக்கள் கட்சியை உருவாக்கினோம். எங்கள் கட்சியில் வேட்பாளர் செலவு செய்யக்கூடாது; கட்சிதான் செலவு செய்யவேண்டும் என்பதை அடிப்படைக் கோட்பாடாக வைத்தோம்.

கடந்த சட்டமன்றத் தேர்தலிலே மூன்று தொகுதிகளிலே போட்டியிட்டு இரண்டில் வெற்றியும் பெற்றோம். மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர்கள், வாக்காளர்களுக்கு ஒரு பைசா கூட லஞ்சம் கொடுக்கவில்லை. அப்படிக் காசு கொடுத்து வாங்கும் வாக்குகள் தேவை இல்லை என்று சொல்லிவிட்டேன். நானும் ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் அஸ்லம் பாஷாவும் இதுவரை ஒரு பைசா கூட லஞ்சம் வாங்கவில்லை. இனியும¢வாங்கப் போவதில்லை.
 பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர், திட்டங்களுக்கான அரசு நிதி ஒதுக்கீட்டில் இருந்து எனக்கு பங்கு தருவதாகக் கூறினார். நான் மறுத்துவிட்டேன். மேலும் எனது தொகுதிக்கு உட்பட்ட பணிகளில் தரம் குறைவாக இருந்தால் சும்மா விடமாட்டேன் என்றும் கூறினேன். எனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து தனது ஊருக்கு சாலைப் போட்டுத் தரவேண்டும் என்று ஒரு உள்ளூர் அரசியல்வாதி என்னிடம் கேட்டுக் கொண்டார். அவரது கோரிக்கையைப் பரிசீலித்து ஆவண செய்வதாக நான் கூறினேன். இப்படி நான் சொன்ன பிறகு தனியாக என்னிடம் பேசவேண்டும் என்று சொல்லி, இந்த நிதியை ஒதுக்கிவிட்டால் முறைப்படி செய்ய வேண்டியதையெல்லாம் செய்வதாக என்னிடம் சொன்னார். நான், எந்த முறையும் எனக்கு செய்யத் தேவையில்லை; தொகுதி மேம்பாட்டு நிதியை அளிப்பதற்காக எந்தக் கமிஷன் தொகையையும் பெறுவதில்லை என கூறிவிட்டேன். இப்படி நான் சொன்னதும், அதிசயப் பிறவிபோல என்னை அவர் பார்த்தார். இன்னொரு பிரபல அரசியல் பிரமுகர், முதல்முறையாக நீங்கள் தேர்தலில் போட்டியிட்டதனால் உங்களுக்கு பலரும் தேர்தல் செலவுக்காக நன்கொடை கொடுத்திருப்பார்கள். ஆனால் அடுத்த முறை அப்படி செலவு செய்ய முன்வர மாட்டார்கள். எனவே இப்போதே இந்தக் கமிஷன்களைப் பெறுவதுதான் அறிவுடையதானது என்று குறிப்பிட்டார். இவற்றையெல்லாம் என்னிடம் சொல்லத் தேவையில்லை; நான் அரசியலை தொழிலாக நினைத்து வரவில்லை; சேவைதான் எங்கள் நோக்கம் என்று கூறிவிட்டேன்.

அதேபோல் மாவட்ட ஆட்சியரையும் சந்தித்து, ‘என் பெயர் சொல்லி யாராவது லஞ்சம் கேட்டால் நான் பொறுப்பல்ல; எனது சார்பாக நான் யாரையும் நியமிக்கவில்லை என்றும் கூறிவிட்டேன்’’ என்றார். மேலும் அவர், ‘‘சுதந்திர இந்தியாவில் யாருடைய ஆட்சி மாதிரி அரசு அமையவேண்டும் என காந்தியடிகளிடம் கேட்டபோது அவர், ‘கலீஃபா உமரின் ஆட்சியைப் போன்று அந்த அரசு அமையவேண்டும்’ என்றார். கலீஃபா உமர் (ரலி) அவர்கள் ஒருமுறை இங்கும் அங்குமாக பரபரத்துக் கொண்டிருக்கிறார்கள். அப்போது அலீ(ரலி) அவர்கள், உமர்(ரலி) அவர்களிடம், ‘ஏன் இங்கும் அங்குமாக அலைகிறீர்கள்?’ என்று கேட்டார்கள். அதற்கு உமர்(ரலி) அவர்கள், ‘‘அரசுக்கு ஜகாத்தாக வந்த ஒட்டகங்களில் ஒன்றைக் காணவில்லை. அதற்கு நான்தான் பொறுப்பு. அந்த ஒட்டகம் இறுதிவரை கிடைக்காமல் போனால் நாளை இறைவனின் சந்நிதானத்தில் அதற்கான பதிலை நான்தானே கூறவேண்டும்’ என்றார்கள். அப்படிப்பட்ட நேர்மை அவசியமாகும்.எனவே, நானும் லஞ்சம் வாங்கமாட்டேன், அடுத்தவர்களையும் லஞ்சம் வாங்க விடமாட்டேன். லஞ்சத்தை ஒழிக்கப் பாடுபடுவேன்’’ என்று கூறி முடித்தார்.

கா. பாண்டியராஜன் (தேமுதிக), எம்.எல்.ஏ
‘‘என் தொகுதி மக்கள், இவன் நம்ம ஆளு என்று சொல்ல வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் ஊழல் ஆழமாக வேரூன்றிய மாநிலம். சராசரியாக ஒரு துறைக்கு 350 கோடி ரூபாய் செலவு ஆகிறது. அதில் 10, 15 சதவீதம் லஞ் சமாகப் போய்விடுகிறது. ஆனால் இந்த ஆட்சியில் மாற்றம் தெரியும். கட்சிக்காரங்க பலர் பங்கு கிடைக்கலனு சொல்றாங்க. சில கட்சிகள் நீங்கலாக, இந்த சட்டசபையில் பல உறுப்பினர்கள் இந்தப் பிரச்சினையை எதிர்கொள்கின்றனர்.
 
அடுத்த நாள் யாரைக் கொண்டு ஜெயிக்கப் போகிறேன் என்ற சந்தேகம் அரசியல்வாதிகள் மனதில் இருக்கிறது. சித்தாந்த கட்சிகள்ல அந்த சிக்கல் இல்லை. ஆனால் பெரிய கட்சிகளில் இருப்பவர்களுக்கு அந்த சிக்கல் இருக்கு. பெரிய கட்சிகள் இரண்டும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்காங்க. தமிழகத்தில் மாற்று அரசியல் தேவை இருக்கு. இது ஒரு நல்ல முயற்சி. இங்கு வந்திருந்த நான்கு பேர் தவிர மற்றவர்கள் தவறு செய்பவர்கள் என்று எண்ண வேண்டாம். பலர் நல்லது செய்து கொண்டிருக்கிறார்கள்’’ என்றார். விருது அறிவிக்கப்பட்டவர்களில் ஒருவரான ஜெ.புஷ்பலீலா ஆல்பன் (திமுக), டெசோ மாநாட்டுப் பணிகள் காரணமாக வரவில்லை என்று கூறப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மூத்த தலைவர் செ. ஹைதர் அலி, மனிதநேய மக்கள் கட்சியின் தலைமை நிலையச் செயலாளர் வழக்கறிஞர் பி.எம்.ஆர்.சம்சுதீன், வடசென்னை மற்றும் தென்சென்னை மாவட்ட நிர்வாகிகள், இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் துணைத் தலைவர் முனீர்சேட், சமுதாய சேவகர் ஹனீபா, ஓய்வுபெற்ற அரசு அதிகாரிகள், சமூக சேவகர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

-- ஜி.அத்தேஷ்
படங்கள்: முத்துப்பேட்டை மாலிக்



-.tmmk.info


ஞாயிறு, 12 ஆகஸ்ட், 2012

மியான்மர் மற்றும் அஸ்ஸாமில் முஸ்லிம்கள் படுகொலை - சென்னையில் முஸ்லிம்கள் மாபெரும் ஆர்ப்பாட்டம்



மேற்கு பர்மாவில் முஸ்லிம்கள் திரளாக வசித்துவரும் ராகின் மாநிலத்தில் பௌத்த வெறிக்கும்பல் அரசாங்கத்தின் ஆதரவோடு முஸ்லிம்களை ஈவிரக்கம் இல்லாமல் இனப்படுகொலை செய்து வருகிறது. கடந்த ஒரு மாதத்தில் இந்த வெறியாட்டம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள் வெட்டியும் எரித்தும் கொல்லப்பட்டுள்ளனர். புத்த பிக்குகள் கொலைப்படையை வழிநடத்துவதும், துப்பாக்கிகளோடு திரிவதும் இணையதங்களில் அம்பலப்படுத்தப்பட்டுள்ளன.

ராகின் தேசியவாதிகள் எனப்படும் பௌத்த பயங்கரவாதிகளால் ஆயிரக்கணக்கான முஸ்லிம்களைப் படுகொலை செய்வது 1942ஆம் ஆண்டிலிருந்தே தொடர்ந்து வருகிறது. 18.03.1942 அன்று 5 ஆயிரம் ராகின் முஸ்லிம்கள் பௌத்த பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டுள்ளனர். இன்றுவரை அந்த வெறியாட்டம் பௌத்த பேரினவாதப் பின்னணியோடும் அரசு ஆதரவோடும் தொடர்ந்து வருகிறது.



குடியுரிமை மறுக்கப்பட்டு கல்வி வேலைவாய்ப்புகளில் ஒடுக்கப்பட்டு கொடுமைகள் இழைக்கப்பட்டு மரணத்தின் விளிம்பில் பீதியோடு நிறுத்தப்பட்டுள்ள வறுமை முஸ்லிம்களுக்கு தமுமுக தனது தார்மீக ஆதரவைத் தெரிவிப்பதோடு, மத்திய அரசு மியான்மர் அரசுக்கு கண்டனத்தை தெரிவிக்க வேண்டுமென்றும், மியான்மர் தூதரை நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டுமென்றும் தமுமுக வலியுறுத்துகிறது.

இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அஸ்ஸாமில் முஸ்லிம்கள் போடோ பயங்கரவாதி களால் சொல்லொணா துயருக்கு ஆளாகியுள்ளனர். உண்மை அறியும் குழுக்களின் அறிக்கையின்படி இதுவரை மூன்று லட்சம் மக்கள் 300 அகதி முகாம்களில் அடைக்கப்பட்டிருப்பதும், 73 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டிருப்பதும் தெரியவருகிறது. அகதி முகாம்களிலும் முஸ்லிம்கள் மிகப்பெரிய கொடுமைகளை சந்தித்து வருகின்றனர்.

சங்பரிவாரத்தால் இயக்கப்படும் போடோ பயங்கரவாதிகள் மண்ணின் மைந்தர்களான அஸ்ஸாமிய முஸ்லிம்களை "ஊடுருவல்காரர்கள்' என்று கொச்சைப்படுத்தி பச்சைப்படுகொலை செய்து வருகின்றனர்.

1983ஆம் ஆண்டு சங்பரிவார் மாணவர் அமைப்பான ஆஆநம (AASU (All Assam Students Union)ஐ பயன்படுத்தி வன்முறையை உருவாக்கி ஒரே நாளில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம்களைப் படுகொலை செய்தனர்.

நெல்லிப் படுகொலைகள் எனப்படும் இந்த முஸ்லிம் இனப்படுகொலை குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட பூபன்தாஸ் திவாரி ஆணையத்தை முடக்கி, அதன் அறிக்கைகளை குப்பையில் வீசி, பயங்கரவாதிகளைத் தப்பிக்கவைத்தது சங்பரிவார ஆதரவுடன் ஆட்சிக்கு வந்த அஸ்ஸாம் கன பரிஷத்.

இப்போது மீண்டும் போடோக்கள், பயங்கர ஆயுதங்களுடன் கோக்ரஜா, பஸ்கா, சிராங், உதல்கிரி ஆகிய பகுதிகளில் முஸ்லிம்களை இனப்படுகொலை செய்தும், வீடுகளை இடித்தும் சீரழித்து வருகின்றனர். மத்திய, மாநில அரசுகள் இந்த வன்முறைகளை வளரவிட்டு வேடிக்கைப் பார்க்கின்றன.

அவலங்களால் சூழப்பட்டு, அபலைகளாய் நிற்கும் அஸ்ஸாமிய முஸ்லிம்களுக்கும் தமுமுக தனது தார்மீக ஆதரவைத் தெரிவிக்கிறது.

கொடுமைக்குள்ளான முஸ்லிம்களுக்கு மத்திய, மாநில அரசுகள் உடனடியாக உரிய இழப்பீடு தருவதோடு, அவர்களின் பாதுகாப்பான வாழ்வுக்கு உரிய ஏற்பாடுகளை செய்துதர வேண்டுமென தமுமுக கோருகிறது.

ஆயுதங்களை முழுமையாக ஒப்படைக்காமல் சீனா உள்ளிட்ட வெளிநாட்டு சக்திகளின் ஆதரவோடு வெறியாட்டம் நடத்திவரும் போடோ பயங்கரவாதிகளை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டுமென தமுமுக வலியுறுத்துகிறது.

மேற்கண்ட முஸ்லிம் இனப்படுகொலைகளைக் கண்டித்தும், அதற்காக தீர்வு காண வலியுறுத்தியும் தமுமுக சார்பில் 10.08.2012 (வெள்ளிக்கிழமை) அன்று சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் முஸ்லிம்கள் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமுமுக மூத்த தலைவரும், மனிதநேய மக்கள் கட்சியின் சட்டமன்றக்குழு தலைவருமான பேராசிரியர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் அவர்கள் தலைமை தாங்கினார். மூத்த தலைவர் செ. ஹைதர் அலி, துணைத் தலைவர் குணங்குடி ஆர்.எம். அனிபா, மாநிலச் செயலாளர்கள் பேராசிரியர் ஜெ. ஹாஜாகனி, பி.எஸ். ஹமீது, மீரான் மொய்தீன், மமக இணை பொதுச் செயலாளர் எஸ்.எஸ். ஹாரூண் ரஷீத் உள்ளிட்ட மாநில நிர்வாகிகளும், வடசென்னை, தென்சென்னை, காஞ்சி, திருவள்ளூர் மாவட்ட நிர்வாகிகளும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தினர்.