சனி, 1 செப்டம்பர், 2012
பாபு பஜ்ரங்கி – இந்தியா கண்ட மிகக் கொடிய பயங்கரவாதி!
“அவர்களை(முஸ்லிம்களை) நாங்கள் விரட்டிச் சென்று ஒரு குழியில் தள்ளினோம். அவர்கள்அஞ்சி நடுங்கி ஒருவரையொருவர் கட்டிப்பிடித்துக் கொண்டனர். முந்தையதினம் சேகரித்த பெட்ரோலையும், டீசலையும் அவர்கள் மீது ஊற்றினோம். பின்னர் டயர்களை தீவைத்து அவர்கள் மீது வீசினோம்”- இரத்தத்தை உறைய வைக்கும் இந்த வார்த்தைகளுக்கு சொந்தக்காரன் தாம் பாபு பஜ்ரங்கி என்ற இந்தியா கண்ட மிகக்கொடிய ஹிந்து பயங்கரவாதி.
நரோடா பாட்டியா கூட்டுப் படுகொலை வழக்கில் சங்க்பரிவார பஜ்ரங் தள தலைவனான இக்கொடியவனுக்கு நீதிமன்றம் மரணிக்கும் வரையிலான ஆயுள் தண்டனையை தீர்ப்பாக அளித்துள்ளது.
ஐந்து அடி மூன்று இஞ்ச் உயரம் கொண்ட பாபு பஜ்ரங்கி, பட்டேல் சமுதாயத்தைச் சார்ந்த கீரிடம் சூட்டாத ராஜாவாக திகழ்ந்தான். 22 ஆண்டுகள் விசுவ ஹிந்து பரிஷத்தின் இளைஞர் பிரிவில் பணியாற்றினான். பின்னர் பஜ்ரங்தளம் மற்றும் சிவசேனாவில் இணைந்து பணியாற்றினான்.
நரோடா பாட்டியாவில் ஒரு தெருவில் அலுவலகத்தை அமைத்திருந்த பாபு பஜ்ரங்கியின் முக்கிய பொழுதுபோக்கே முஸ்லிம்களையும், கிறிஸ்தவர்களையும் துன்புறுத்துவதாகும்.
“அவர்களை(முஸ்லிம்களை) நான் வெறுக்கிறேன்”- டெஹல்காவிடம் பாபு பஜ்ரங்கி கூறினான்.
“முஸ்லிம் இளைஞர்களுடன் ஓடிய இளம்பெண்களின் பெற்றோர்கள் என்னை சந்திக்க வருவார்கள். போலீசாரிடம் புகார் அளிக்க சென்ற அவர்களை, போலீசாரே என்னிடம் தீர்வுக்காக என்னிடம் அனுப்பி வைப்பார்கள். இவ்வாறு 957 ஹிந்து இளம்பெண்களை நான் காப்பாற்றியுள்ளேன். ஹிந்து இளம் பெண்ணொருத்தி முஸ்லிம் இளைஞனை திருமணம் முடித்தால், குறைந்தது 5 குழந்தைகளை பிரசவிப்பாள். அவ்வாறெனில், இவ்வளவு பெண்களை காப்பாற்றியதன் மூலம் 5 ஆயிரம் முஸ்லிம்கள் பிறப்பதற்கு முன்பே தடுத்துவிட்டேன்” – பஜ்ரங்கி புள்ளிவிபரத்தோடு கூறுகிறான்.
“முஸ்லிம்” பிரச்சனையை தீர்க்க வேறு சில வழிகளையும்கூறுகிறான்: “(முஸ்லிம்களை) கொலைச் செய்ய டெல்லியே(மத்திய அரசு) உத்தரவிட வேண்டும். உயர்ஜாதியினரும், பணக்காரர்களும் கொலைச் செய்ய களமிறங்கமாட்டார்கள். சேரிவாழ் மக்களும், வறியவர்களும் களமிறங்குவார்கள். முஸ்லிம்களை கொலைச்செய்து அவர்களின் சொத்துக்களை சொந்தமாக்கலாம் என கூறினால் போதும், 3 தினங்களிலேயே இந்தியாவில் முஸ்லிம்கள் துடைத்தெறியப்படுவார்கள்.”
முஸ்லிம்களின் மக்கள் தொகையை குறைக்க பஜ்ரங்கி சொல்லும் ஆலோசனை: “முஸ்லிம்களுக்கு ஒரு திருமணமும், ஒரு குழந்தையும் என்ற சட்டத்தை நிறைவேற்ற வேண்டும்”
2007-ஆம் ஆண்டு டெஹல்கா மாத இதழின் பத்திரிகையாளர் ஆஷிஷ் கேதானின் துணிச்சலுடன் நடத்திய ஸ்டிங் கேமரா ஆபரேசன் மூலம் பாபு பஜ்ரங்கி என்ற கொடிய ஹிந்துத்துவா பயங்கரவாதியின் முகம் உலக சமூகத்தின் முன்னால் பகிரங்கப்படுத்தப்பட்டது. நரோடா பாட்டியாவில் 97 முஸ்லிம்களை கூட்டுப் படுகொலைச் செய்த சம்பவத்திற்கு தலைமை தாங்கியதாகவும், முதல்வர் நரேந்திர மோடி உள்ளிட்டவர்களிடமிருந்து ஆதரவு கிடைத்ததாகவும் பஜ்ரங்கி விவரிக்கிறான்.
“கர்ப்பிணியான கவுஸர் பானுவின் வயிற்றை சூலாயுதத்தால் கிழித்து சிசுவை வெளியே எடுத்து தீயில் போட்டு பொசுக்கியது நான் தான்” என பகிரங்கமாக தெரிவித்த பஜ்ரங்கி, இனியும் வாய்ப்புக் கிடைத்தால் கொலைச் செய்வேன் என வெறியுடன் தெரிவித்தான்.
2002 பிப்ரவரி 27-ஆம் தேதி கோத்ரா ரெயில் பெட்டியில் தீப்பற்றிய தினத்தன்று அங்கு வந்த பஜ்ரங்கி, தீயில் கருகிக் கிடந்த உடல்களை பார்த்து, அங்கே வைத்து உறுதிமொழியொன்றை எடுத்ததாக டெஹல்காவிடம் தெரிவித்தான்.” கோத்ராவுக்காக பழிவாங்குவதை அடுத்த தினமே நடைமுறைப்படுத்துவேன். கோத்ராவில் மரணித்தவர்களைவிட நான்கு மடங்கு நரோடா பாட்டியாவில் மரணிக்கவேண்டும். நரோடா பாட்டியாவுக்கு சென்றுவிட்டு அஹ்மதாபாத்திற்கு வந்து கூட்டுப் படுகொலைகளுக்கான ஏற்பாடுகளைச் செய்தேன்”- என்று பஜ்ரங்கி கூறினான்.
பிளைட் ஏறி வந்து பிச்சை எடுத்த இந்தியர்கள் துபாயில் கைது! ஒரே மாதத்தில் கோடீஸ்வரன் ஆகலாமாம்!
இதேபோல் ஷார்ஜாவில் வீட்டில் பிச்சை கேட்ட 40 வயதான ஒரு பாகிஸ்தானியரை கைது செய்து அவரின் பையில் சோதனை செய்தபோது பையில் இருந்தது எவ்வளவு தெரியுமா? Dhs 30,000 (இந்திய மதிப்பில் 4.5 லட்சம்!)
இந்த பிச்சைக்காரர்கள் ரமலான் மாதத்தை ஒரு வியாபாரமாகவே கருதுகின்றனர். ரமலான் மாதத் தொடக்கத்தில் Visit Visa வாங்கி விமானம் ஏறி துபாய், கத்தார், பஹ்ரைன், குவைத் ஆகிய நாடுகளுக்குச் சென்று தொழிலை ஆரம்பித்துவிடுவர். இதற்கு மொத்தமாய் ஆகும் செலவு 50,000 ரூபாய். ஒரு மாதம் ரமலான் நோன்பு முடிந்ததும் தங்கள் தொழிலை முடித்துவிட்டு சொந்த நாட்டிற்கு திரும்பிவிடுவர். இது எப்படி இருக்கு?
துபாயில் ஊடக செய்தி நிறுவன இளைஞர் ஒருவர் சில நாட்கள் முன்பு ரோட்டில் நின்று உதவி/பிச்சை கேட்டதில் பத்தே நிமிடத்தில் கிடைத்தது எவ்வளவு தெரியுமா? 1,200 Dhs (ரூ.18,000) இதை பெருமையாக? அவரே கூறியுள்ளார்.
சரி இவர்களைப் போட்டுக்கொடுத்தது யாராக இருக்கும்? நிச்சயம் இன்னொரு இந்தியராககூட இருக்கலாம்! என்னைவிட அதிகம் சம்பாரிக்கிறான் என்ற பொறாமையால் துபாயில் பணி புரிந்துகொண்டிருக்கும் இன்னொரு இந்தியரேகூட போட்டுக்கொடுத்திருக்கலாம்
கைது செய்யப்பட்டுள்ளவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படுவார்கள், இவர்களுக்கு 3 மாதம்வரை சிறை தண்டனை கிடைக்கலாம்!
11500 வருடங்களுக்கு முன்பே இருந்த தமிழ் கடற்கரை நகரம் - கண்டுகொள்ளாத அரசு
பூம்புகார் - காவேரிப் பூம்பட்டினம். பண்டைக்கால சோழர்களின் தலைநகரம். இந்த நகரம் பற்றி தமிழ் பாடம் படிக்கும்போது கடலால் அழிந்துபோன நகரம் என்று மட்டும்சொல்லி முடித்துவிடுவார்கள். இந்த நகரம் எப்படி இருந்தது, ஏன் அழிந்தது, மக்கள் வாழ்க்கை முறை எப்படியிருந்தது என்ற உண்மைகளை அறிந்தால் உலக நாகரீங்களுக்கெல்லாம், ஏன் உலக மொழிகளுக்கெல்லாம் முன்னோடி நாம்தான் என்ற உண்மை வெளிப்படும்.
சோழர்களின் தலைநகமான பூம்புகார் தமிழகத்தின் தற்போதைய நாகை அருகே 11500 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இருந்தே இந்நகரம் இருந்ததாக ஆய்வில் தெரியவருகிறது. மிகப்பெரிய துறைமுகமாகவும், உலக வர்த்தகத்திற்கான சந்தையாகவும் இருந்திருகிறது. சிலப்பதிகாரம், பட்டினப்பாலை, மணிமேகலை உள்ளிட்ட நூல்களில் இந்நகரம் பற்றி போற்றுகின்றன. 2000 ஆண்டுகளுக்கு முன் கடல்கோளால் (சுனாமி) இந்நகரம் அழிந்துபோனது.
இந்திய ஆழ்கடல் ஆராய்ச்சி நிலையம் பணப்பற்றாக்குறையால் இந்நகரம் பற்றி ஆராய்வதை நிறுத்திவிட்டது. திட்டமிட்டு நிறுத்தப்பட்டதா என்பது தெரியவில்லை. :-)
ம்புகார் நகரத்தையும், குஜராத்தின் கடற்கரையில் (மும்பைக்கு மேற்கே) இருந்த துவாரக நகரத்தையும் தனிப்பட்ட முறையில் ஆய்வு செய்த இங்கிலாந்துக்காரர் கிரகாம் ஹன்காக் (Graham Hancock) ஒரு வீடியோவை (Underworld: Flooded Kingdoms Of The Ice Age) வெளியிட்டார். அதில் கடலுக்கடியில் இந்நகரம் இருந்த இடத்தில் இன்னும் கற்களாலான கருவிகள், மனித எலும்புகள், வீட்டுச்சுவர், பாத்திரங்கள், குதிரைவடிவ பொம்மைகள், காணப்படுகின்றன. இந்த ஆராய்ச்சி முடிவுகளெல்லாம் வெளியானது 2002ல். இன்றுவரை அதுபற்றியெல்லாம் யாரும் கவலைப்படவில்லை.
தமிழர்கள் நாம் நம்மைப்பற்றி என்ன ஆராய்ச்சி செய்துள்ளோம்? இனியாவது தமிழக அரசு இந்த ஆராய்ச்சியை முன்னெடுக்குமா?
இந்த வீடியோவில் 32-வது நிமிடத்திலிருந்து பூம்புகார் பற்றிய குறிப்புகள் மற்றும் ஆய்வுகள்.
நீர் மின்சக்தி திட்ட ஒதுக்கீட்டிலும் முறைகேடு அம்பலம்!
புதுடெல்லி: நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டை தொடர்ந்து, நீர் மின்சக்தி திட்டங்களை ஒதுக்கீடு செய்ததிலும் முறைகேடு நடைபெற்றிருப்பது, தலைமை கணக்கு தணிக்கையாளர் (சி.ஏ.ஜி.)அறிக்கையில் அம்பலப்படுத்தப்பட்டுள்ளது.
நிலக்கரி சுரங்கங்களை ஏலம்விடாமல், நியமன முறையில் ஒதுக்கீடு செய்ததால் அரசுக்கு ரூ.1.86 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டதாக ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட தலைமை கணக்கு தணிக்கையாளரின் அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.
இந்த விவகாரத்தினால் ஏற்பட்ட அமளி ஓய்வதற்குள் மற்றொரு முறைகேட்டையும் சி.ஏ.ஜி. அறிக்கை அம்பலப்படுத்தி உள்ளது.
மத்திய அரசுக்கு சொந்தமான பொதுத்துறை நிறுவனங்களில் நீர் மின்சக்தி ஆற்றல் விரிவாக்கம் செய்வது தொடர்பான தலைமை கணக்கு தணிக்கையாளரின் அறிக்கை, நாடாளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது.
இந்த அறிக்கையில்,"மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்கள் 2007-12 காலக்கட்டத்தில் 11 ஆயிரத்து 813 மெகாவாட் மின்சாரத்துக்கு அதிகமாக கூடுதல் மின்உற்பத்தி செய்ய வேண்டும் என்று முதலில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
ஆனால் நீர் மின் திட்டங்களை நிறைவேற்றுவதில் ஏற்பட்ட தவறான கணக்கீடு மற்றும் தவறான திட்டமிடல் காரணமாக இலக்கினை அடைய முடியாமல் போய் விட்டது.
மாநில அரசுகளுடன் கலந்தாலோசனை செய்யாமல், பொதுத்துறை நிறுவனங்கள் தங்கள் திட்டங்களை தீட்டி உள்ளனர். அதனால் திட்டமிட்டபடி உரிய பலனை அடைய முடியவில்லை. இதனால் 11 ஆயிரத்து 813 மெகாவாட் நீர் மின்சக்தி உற்பத்தி செய்ய வேண்டும் என்ற இலக்குக்கு பதிலாக 6 ஆயிரத்து 794 மெகாவாட் மின்சார உற்பத்தி என்கிற அளவுக்கு இலக்கு குறைக்கப்பட்டுள்ளது.
முதலில் நிர்ணயித்ததைவிட 42 சதவீதம் குறைத்து, மாற்றியமைக்கப்பட்ட இலக்கையாவது அடைய முடிந்ததால் என்றால் அதையும் சாதிக்க முடியவில்லை.
நீர் மின்சக்தி உற்பத்தி விரிவாக்கத்துக்கான சுற்றுச்சூழல் ஒப்புதலை அளிக்க, ஆய்வு நடத்துவதற்கு தேசிய நீர்மின் கழகம் 49 மாதங்கள் எடுத்துக்கொண்டுள்ளது. இது மட்டுமல்ல, ஆய்வு அறிக்கையை சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு அனுப்பி வைப்பதில் மேலும் 11 மாதங்கள் தாமதம் ஏற்பட்டுள்ளது.
பிரதமர் அலுவலகத்தில் இருந்து குறித்த அறிவுரைகள் வந்த பின்னரும், அருணாச்சல பிரதேசத்தில்,பிரம்மபுத்ரா படுகையில்,சியாங்க்,சுபான்சிரி பன்னோக்கு திட்டங்களை சர்வே செய்து,ஆராய்ந்து அறிந்து,செயல்படுத்துவதற்கான சிறப்பு நோக்க அமைப்பினை மத்திய மின்துறை அமைக்கவே இல்லை.
தேசிய நீர்மின் கழகம் முதலில் 6 திட்டங்களை செயல்படுத்த மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.அவற்றில் 2 திட்டங்களை குறைந்த எண்ணிக்கையிலான டெண்டர்களைப் பெற்று,அருணாச்சல பிரதேசத்தில் தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இரண்டு திட்டங்களை தேசிய நீர்மின் கழகம் தனது சொந்த கூட்டு நிறுவனத்துக்கு எடுத்துக்கொண்டுள்ளது.ஒரு திட்டம் தேசிய அனல்மின் கழகத்துக்கு தரப்பட்டுள்ளது.
அந்த வகையில், நீர் மின்சக்தி திட்டங்களை ஒதுக்கீடு செய்வதில்,ஒளிவுமறைவற்ற தன்மை பின்பற்றப்பட வேண்டும்,போட்டியை ஏற்படுத்த வேண்டும் என்ற இந்திய அரசின் நீர்மின் கொள்கைகள் கடைப்பிடிக்கப்படவில்லை.
மத்திய மின்துறையின் சிறப்பு நோக்க அமைப்பிடமிருந்து தேசிய நீர்மின் கழகத்துக்கும், தனியார் நிறுவனங்களுக்கும்,கூட்டு நிறுவனங்களுக்கும்,தேசிய அனல்மின் கழகத்துக்கும் ஜனவரி 1999-ம் ஆண்டு 5 நீர்மின் திட்டங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.12 வருடங்கள் கடந்த நிலையிலும்,அவை மின்உற்பத்தியைத் தொடங்கவில்லை.
சத்யம் ராமலிங்க ராஜுவின் மாய்டாஸ் நடத்துகிற எச்ஐவி நிறுவனத்துக்கு, ஏல ஆவண விற்பனையை முடிவுக்கு கொண்டுவந்த பின்னரும் சலுகை காட்டப்பட்டுள்ளது.
நீர்மின் திட்டங்களை நிறைவேற்றுவதில் ஏற்பட்ட தாமதம்,திட்டச்செலவு அதிகரிக்க காரணமாகி உள்ளது.
4 பொதுத்துறை நிறுவனங்களின் 16 நீர்மின் திட்டங்களை அமல்படுத்துவதற்கு அனுமதிக்கப்பட்ட ரூ.30 ஆயிரத்து 5 கோடி என்ற அளவிலான திட்டச்செலவினம் ரூ.44 ஆயிரத்து 712 கோடியாக அதிகரித்துள்ளது. முடிவு அடைந்துள்ள 7 திட்டங்களில்,திட்டச்செலவினம் 53 சதவீதத்தில் இருந்து 148 சதவீதம் வரை அதிகரித்துள்ளது” என்று கூறப்பட்டுள்ளது.
-vikatan
'சாத்தம் ஆலை’ அந்தமான் தீவில் ஓர் ஆசிய ஆச்சரியம்!
சிறப்பு வாய்ந்த இந்த மர அறுவை ஆலையைப் பற்றி தெரிந்து கொள்வதற்காக அதன் பொறுப்பாளர், துணைநிலை வனப்பாதுகாவலர் ராஜ்குமாரைச் சந்தித்தேன். நூற்றாண்டு பெருமைவாய்ந்த அந்த ஆலை பற்றி பேசியவர், ''ஒரு காலத்தில் ஆண்டுக்கு 20 ஆயிரம் கனமீட்டர் மர அறுவை செய்து வந்த இந்த ஆலை, தற்போது 5,000 கனமீட்டர்தான் அறுவை செய்கிறது. இப்போது இந்த ஆலையை மேலும் நவீனமாக்க, 'இந்திய பிளைவுட் தொழில் ஆய்வு மையம்’ எனும் நிறுவனத்திடம் இதை கையளிக்க இருக்கிறோம். இரண்டு ஆண்டுகளில் இதை நவீனப்படுத்திக் கொடுப்பார்கள். அதன் பிறகு, பழைய திறனுக்கு இந்த ஆலை இயங்கக் கூடும்.
'இப்படி மரங்களாக வெட்டிக் கொண்டிருக்கிறார்களே' என்று நினைக்க வேண்டாம். நாங்கள் தாறுமாறாக மரங்களை வெட்டுவதில்லை. ஆங்கிலேயர்கள் வணிக நோக்கில் படாக் மரங்களை வெட்டிவிட்டு, அவற்றின் இடங்களில் வேகமாக வளரும் மென்மரங்களை நட்டு வைத்தனர். அதனால், 'படாக்’ மரங்கள் குறைந்த அளவிலேயே தற்போது உள்ளன. ஆனால், நாங்கள் வனச்சூழல் சரியாக பரமாரிக்கப்பட வேண்டும் என்கிற கொள்கையுடன் மரங்களை வெட்டுகிறோம். வெட்டப்படும் மரங்களைப் போல, இரண்டு மடங்கு மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வருகிறோம். சில இடங்களில் ஆறு மடங்கு கன்றுகளைக்கூட நடுகிறோம். வருங்காலத்தில் பயன்படக்கூடிய வகையில் உற்பத்தியும் வளர்ச்சியும் இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம். குறிப்பாக, படாக் மரங்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தும் நோக்கிலும் கன்றுகளை நடவு செய்கிறோம். மக்களின் தேவைகளுக்காக இஷ்டம்போல வெட்டிக் குவிப்பதில்லை. வெட்டப்பட்ட மரங்களை, மக்களின் தேவைகளுக்குப் பகிர்ந்தளிக்கிறோம்.
வனத்துறையின் மேற்பார்வையில்தான் மரங்கள் வெட்டப்படுகின்றன. அப்படி வெட்டப்படும் மரங்களை ஒன்று சேர்த்துக் கட்டி, நீர்ப்பரப்பில் இழுத்து வந்து, கரை சேர்த்து, கனரக வாகனங்களில் அடுக்கி ஆலைக்கு கொண்டு வருகிறோம். இங்கு அறுக்கப்படும் 23 வகை மரங்களில் 'அந்தமான் படாக்’ ரகத்தைதான் அதிகம் விரும்பி வாங்கிச் செல்கிறார்கள். வீட்டுப் பயன்பாட்டுக்காக கதவு, ஜன்னல், மேசை, நாற்காலி, கட்டில் போன்றவற்றுக்கு இது, பெருமளவு பயன்படுத்தப்படுகிறது. இந்த ஆலையில் ஒரு கன மீட்டர் 'படாக்’ சுமார் 55 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்படுகிறது. மெயின் லாண்டில் (இந்தியாவை அப்படித்தான் இங்கு குறிப்பிடுகின்றனர்) இங்கு விற்பதைப் போல மூன்று மடங்கு விலை அதிகம்'' என்று அழகாக விவரங்களை அடுக்கினார்.
நாம் ஆலைக்குள் நுழைந்தபோது... அறுக்கப்பட்டு, பதப்படுத்தப்பட்டு, வகைவகையாக பிரிக்கப்பட்டு... என ஆங்கங்கே மலைக்குன்றுகள் போல குவிந்திருந்த மரங்களைப் பார்த்தபோது... 'என்ன இது, இப்படி மரங்களை வெட்டிக் குவிக்கிறார்களே...' என்பது உட்பட பலகேள்விகள் என்னுள் எழுந்தன. ஆனால், ராஜ்குமாரிடம் பேசியபிறகு அத்தனை¬யும் விடைபெற்றன!
'இப்படி மரங்களாக வெட்டிக் கொண்டிருக்கிறார்களே' என்று நினைக்க வேண்டாம். நாங்கள் தாறுமாறாக மரங்களை வெட்டுவதில்லை. ஆங்கிலேயர்கள் வணிக நோக்கில் படாக் மரங்களை வெட்டிவிட்டு, அவற்றின் இடங்களில் வேகமாக வளரும் மென்மரங்களை நட்டு வைத்தனர். அதனால், 'படாக்’ மரங்கள் குறைந்த அளவிலேயே தற்போது உள்ளன. ஆனால், நாங்கள் வனச்சூழல் சரியாக பரமாரிக்கப்பட வேண்டும் என்கிற கொள்கையுடன் மரங்களை வெட்டுகிறோம். வெட்டப்படும் மரங்களைப் போல, இரண்டு மடங்கு மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வருகிறோம். சில இடங்களில் ஆறு மடங்கு கன்றுகளைக்கூட நடுகிறோம். வருங்காலத்தில் பயன்படக்கூடிய வகையில் உற்பத்தியும் வளர்ச்சியும் இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம். குறிப்பாக, படாக் மரங்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தும் நோக்கிலும் கன்றுகளை நடவு செய்கிறோம். மக்களின் தேவைகளுக்காக இஷ்டம்போல வெட்டிக் குவிப்பதில்லை. வெட்டப்பட்ட மரங்களை, மக்களின் தேவைகளுக்குப் பகிர்ந்தளிக்கிறோம்.
வனத்துறையின் மேற்பார்வையில்தான் மரங்கள் வெட்டப்படுகின்றன. அப்படி வெட்டப்படும் மரங்களை ஒன்று சேர்த்துக் கட்டி, நீர்ப்பரப்பில் இழுத்து வந்து, கரை சேர்த்து, கனரக வாகனங்களில் அடுக்கி ஆலைக்கு கொண்டு வருகிறோம். இங்கு அறுக்கப்படும் 23 வகை மரங்களில் 'அந்தமான் படாக்’ ரகத்தைதான் அதிகம் விரும்பி வாங்கிச் செல்கிறார்கள். வீட்டுப் பயன்பாட்டுக்காக கதவு, ஜன்னல், மேசை, நாற்காலி, கட்டில் போன்றவற்றுக்கு இது, பெருமளவு பயன்படுத்தப்படுகிறது. இந்த ஆலையில் ஒரு கன மீட்டர் 'படாக்’ சுமார் 55 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்படுகிறது. மெயின் லாண்டில் (இந்தியாவை அப்படித்தான் இங்கு குறிப்பிடுகின்றனர்) இங்கு விற்பதைப் போல மூன்று மடங்கு விலை அதிகம்'' என்று அழகாக விவரங்களை அடுக்கினார்.
நாம் ஆலைக்குள் நுழைந்தபோது... அறுக்கப்பட்டு, பதப்படுத்தப்பட்டு, வகைவகையாக பிரிக்கப்பட்டு... என ஆங்கங்கே மலைக்குன்றுகள் போல குவிந்திருந்த மரங்களைப் பார்த்தபோது... 'என்ன இது, இப்படி மரங்களை வெட்டிக் குவிக்கிறார்களே...' என்பது உட்பட பலகேள்விகள் என்னுள் எழுந்தன. ஆனால், ராஜ்குமாரிடம் பேசியபிறகு அத்தனை¬யும் விடைபெற்றன!
நாடுகளை பிடிப்பதையே தொழிலாகக் கொண்டிருந்த ஆங்கிலேயர்கள்... அந்தமான் தீவுகளில் காலடி வைத்ததும், அங்கே குடியேறுவதற்காக காடுகளை அழிக்கத் தொடங்கினார்கள். அப்போது அவர்களால் வெட்டுப்பட்ட மரங்கள் ஒவ்வொன்றையும் பார்த்து பிரமித்துப் போனவர்கள்... அவற்றை தங்கள் நாட்டுக் கொண்டு சென்று பலவிதமான கட்டடப் பணிகளுக்கு பயன்படுத்தினர். மரங்களை மொத்தமாக இங்கிலாந்து கொண்டு செல்வது சிரமமாக இருக்கவே... அவற்றை அறுத்து, பலகைகளாகக் கொண்டு செல்ல நினைத்தனர். அதற்காக 1888|ம் ஆண்டில் உருவாக்கியதுதான் 'சாத்தம் மர அறுவை ஆலை'! அப்போது... இங்கிலாந்தில் இருந்து தருவிக்கப்பட்ட பழைய இயந்திரங்களுடன் துவங்கப்பட்ட ஆலை... இன்றைக்கு அதிநவீன இயந்திரங்களுடன் சுமார் 750 தொழிலாளர்களுடன் இயங்கி வருகிறது!
ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில் இந்த மர அறுவை ஆலையில் மரங்கள் அறுக்கப்பட்டு... மேற்கத்திய நாடுகளுக்கு வணிக நோக்கில் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இங்கிலாந்தின் பக்கிங்ஹாம் அரண்மனையின் மரச்சுவர்கள் யாவும் அந்தமான் படாக் எனும் உயர்ரக மரத்தினால் அமைக்கப்பட்டவையே!
அந்தமான் யானைகள்!
முடக்கிய ஜப்பான் குண்டு!
இரண்டாம் உலகப் போரின்போது, அதாவது, 1942-ம் ஆண்டு மார்ச் மாதம் 10-ம் தேதி இந்த மர அறுவை ஆலையின் மீது ஜப்பானியர்கள் சரமாரி குண்டு மழை பொழிந்தனர். ஆலையில் பணியாற்றிய தொழிலாளர்கள் பலர் கருகி இறந்ததோடு... கடல் கொந்தளித்து வெளிக்கிளம்பி, பாறைகளும் வெடித்துச் சிதறியிருக்கின்றன. இதனால் முற்றிலும் முடங்கிப்போன ஆலை, ஜப்பானியர்களிடம் இருந்து அந்தமான் மீட்கப்பட்ட 1946-ம் ஆண்டில் புதுப்பிக்கப்பட்டு... இன்று வரை தன் பணியைத் தொடர்கிறது.
அந்தமான் படாக்!
'டெரோகார்பஸ் டல்பர்ஜியோட்ஸ்' (pterocarpus dalbergiodes) எனும் தாவரவியல் பெயர் கொண்ட அந்தமான் படாக் மரத்துக்கு... அந்தமான் செம்மரம், கிழக்கிந்திய மகோகனி, செஞ்சிவப்பு மரம் என பல பெயர்கள் உண்டு. மென்மையான பிரௌன், பொன்னிறம், அடர் சிவப்பு பிரௌன், செறிவான சிவப்பு மற்றும் தீக்கொழுந்து சிவப்பு போன்ற நிறங்களில் இம்மரங்கள் உள்ளன. நாளடைவில் தண்ணீர்பட்டு பொலிவிழந்து போனாலும், லேசாக மெருகேற்றம் செய்தாலே பழைய பொலிவுக்கு வந்துவிடும் என்பதுதான் இம்மரத்தை மக்கள் பெரிதும் விரும்பக் காரணம்.
-vikatan
செல்போன் நிறுவனங்களுக்கு புதுவிதி அமல்
செல் போன் கோபுரங்களால் அதிகளவு கதிர்வீச்சுகள் ஏற்படுவதாக புகார் எழுந்ததை அடுத்து செல்போன் நிறுவனங்களுக்கு புதிய விதிகள் அமல் படுத்தப்பட்டுள்ளன. பின்பற்றாத நிறுவனங்களுக்கு குறைந்தபட்சம் ரூ.5 லட்சம் வரை அபராதம்
இது தொடர்பாக மத்திய அரசு அறிவித்துள்ள விதிமுறைகள்:
செல்போன் கோபுரங்கள் வைத்துள்ளவர்கள் தற்போது உள்ள கதிர்வீச்சு அளவை 10
-ல் ஒரு பங்காக குறைத்திட வேண்டும். இரு செல்போன் கோபுரங்கள்
வைத்துள்ளவர்கள் குடியிருப்பு பகுதிகளில் இருந்து குறைந்த பட்சம் 35 மீ
தொலைவில் இருக்க வேண்டும்.
மேலும் செல்போன் ஹேண்ட்செட் தயாரிப்பு நிறுவனங்கள் தங்களது தயாரிப்பு அட்டை பெட்டிகளில் , செல்போன்களின் கதிர்வீச்சு அளவினை கட்டாயம் குறிப்பிட வேண்டும். மேலும் இறக்குமதி செய்யப்படும் வெளிநாட்டு செல்போன்களின் கதிர்வீச்சு அளவும் குறைக்க வேண்டும். இந்த விதிமுறைகள் இன்று முதல் (செப்டம்பர் -1) அமலுக்கு வருகிறது. இப்புதிய விதிமுறைகளை பின்பற்றாத நிறுவனங்களுக்கு குறைந்தபட்சம் ரூ . 5 லட்சம வரை அபராதம் விதிக்கப்படும்.
மேலும் செல்போன் ஹேண்ட்செட் தயாரிப்பு நிறுவனங்கள் தங்களது தயாரிப்பு அட்டை பெட்டிகளில் , செல்போன்களின் கதிர்வீச்சு அளவினை கட்டாயம் குறிப்பிட வேண்டும். மேலும் இறக்குமதி செய்யப்படும் வெளிநாட்டு செல்போன்களின் கதிர்வீச்சு அளவும் குறைக்க வேண்டும். இந்த விதிமுறைகள் இன்று முதல் (செப்டம்பர் -1) அமலுக்கு வருகிறது. இப்புதிய விதிமுறைகளை பின்பற்றாத நிறுவனங்களுக்கு குறைந்தபட்சம் ரூ . 5 லட்சம வரை அபராதம் விதிக்கப்படும்.
வியாழன், 30 ஆகஸ்ட், 2012
அஸ்ஸாம் மற்றும் மியான்மரில் நடைபெறும் முஸ்லிம்களுக்கு எதிரான இனப்படுகொலையை கண்டித்து காரைக்காலில் பேரணி மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம்
அஸ்ஸாம் மற்றும் மியான்மரில் (பர்மா) தொடர்ந்து நடைபெறும் முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்களில் இதுவரை மியான்மரில் 7000 முஸ்லிம்களும், அசாமில் 75 முஸ்லிம்களும் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து நடைபெற்றுவரும் அஸ்ஸாம் இனபடுகொலையை தடுக்காமல் மத்திய அரசு வேடிக்கை பார்த்து வருகிறது.
அஸ்ஸாம் மற்றும் மியான்மரில் நடைபெறும் முஸ்லிம்களுக்கு எதிரான இனபடுகொலையை கண்டித்தும், அஸ்ஸாம் இனபடுகொலையை தடுக்க தவறிய மத்திய அரசை கண்டித்தும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் சார்பாக காரைக்கால் பெரிய பள்ளி வாசலில் இருந்து பேரணி புறப்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது
.
பேரணி மற்றும் ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் முஹமது நஜிமுதீன் தலைமை வகித்தார், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் நெய்னா முஹமது, மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் ஷேக் அலாவுதீன், மாவட்ட துணை தலைவர் நஜிமுதீன், மாவட்ட பொருளாளர் யூசுப்கான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட தலைவர் அப்துல் ரஹீம், கழக பேச்சாளர் அபூ அஸ்லம் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர்.
இந்த பேரணி மற்றும் ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட துணை செயலாளர்கள் அப்துல் காசிம், முஹமது மெய்தீன், ம.ம.க மாவட்ட துணை செயலாளர்கள் அப்துல் நாசர், சாதிக் அலி, மாவட்ட அணி செயலாளர்கள் ராஜா முஹமது, முஹமது ஹசனுதீன், முஹமது ஜியாவுதீன், முஹமது இக்பால், முஹமது கபீர், முஹமது ஹுசைன் சாதிக், முஹமது ஜியாவுதீன், முஹமது இபுராஹீம், நகர பொருளாளர் சபுருதீன், நகரம் மற்றும் கிளை கழக நிர்வாகிகள் திருபட்டினம் ஹாஜா ஷேக் அலாவுதீன், முகமது ஆசிக், நிரவி யூனுஸ், ஹமீது சுல்தான், கருக்கங்குடி முஹமது அன்சாரி, திருநள்ளார் முகமது கனி, உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். முடிவில் நகர செயலாளர் முஹமது சிக்கந்தர் நன்றி கூறினார்.
பெரம்பலூர் அருகே பயங்கர விபத்து 5 பேர் சாவு
பெரம்பலூர் அருகே செவ்வாய்க்கிழமை அதிகாலை பழுதாகி நின்ற பேருந்து மீது,
மற்றொரு தனியார் பேருந்து மோதியதில் திருச்சி அதிமுக பெண் கவுன்சிலர் உள்பட
5 பேர் இறந்தனர்.
சென்னையிலிருந்து திருச்சி நோக்கிச் சென்ற தனியார் பேருந்தை, திருச்சி ஏர்போர்ட் பகுதியை சேர்ந்த சு. தனகோபால் (29) ஓட்டினார்.
திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலை, பெரம்பலூர் அருகேயுள்ள நாரணமங்கலம்
தனியார் பெட்ரோல் பங்க் அருகே செவ்வாய்க்கிழமை அதிகாலை வந்தபோது பேருந்தின்
டயர் பழுதானது. இதனால், சாலையோரத்தில் பேருந்தை நிறுத்தி பழுது நீக்கும்
பணியில் ஓட்டுநர் ஈடுபட்டிருந்தார்.
அந்தப் பேருந்தில் வந்த திருச்சி மாநகராட்சியின் 15-வது வார்டு அதிமுக
உறுப்பினர் அமுதா (52), அவரது மகன் ஆனந்த் (29) உள்ளிட்ட பயணிகள் கீழே
இறங்கி, அருகிலிருந்த பாலத்தின் தடுப்புச் சுவற்றில் அமர்ந்திருந்தனராம்.
அப்போது சென்னையிலிருந்து திருச்சி நோக்கி வந்த மற்றொரு தனியார் பேருந்து,
நின்று கொண்டிருந்த பேருந்து மீது மோதியது. இதில், அந்தப் பேருந்து வேகமாக
நகர்ந்து சென்று பாலத்தின் தடுப்புச் சுவரில் மோதியது.
இதில் வார்டு உறுப்பினர் அமுதா, அவரது மகன் ஆனந்த், சென்னை சானிடோரியம்
பகுதியைச் சேர்ந்த பெருமாள் (55), மனைவி அமராவதி (45) ஆகியோர் சம்பவ
இடத்திலேயே உயிரிழந்தனர்.
மேலும், பலத்த காயமடைந்த திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே மதனபுரம்
பகுதியைச் சேர்ந்த முத்தையா மகள் வாசுகி (23), பெரம்பலூர் அரசு
மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட சிறிது நேரத்தில் இறந்தார்.
காயமடைந்த தாம்பரத்தைச் சேர்ந்த மணிமேகலை (34), தஞ்சாவூர் செந்தில்குமார்
(31), திருச்சி ஹரிஹரன் (23), செந்தில்குமார் (25), மதனபுரத்தைச் சேர்ந்த
நாகேஸ்வரி (47), குன்னாலம்பட்டி கருப்பையா (26), மயிலப்பட்டி ராஜ்குமார்
(18), தாம்பரம் முருகன் (33), புதுக்கோட்டை பழனியப்பன் (55), திருவாரூர்
தாராசிங் (35) உள்பட 12 பேர் பெரம்பலூர், திருச்சி அரசு மருத்துவமனைகளில்
சேர்க்கப்பட்டனர்.
விபத்து குறித்து பேருந்து ஓட்டுநர் தனகோபால் அளித்த புகாரின்பேரில்
பாடாலூர் காவல் நிலைய ஆய்வாளர் சோலைமுத்து வழக்குப் பதிந்து, மற்றொரு
தனியார் பேருந்து ஓட்டுநர், திருச்சி எடமலைப்பட்டி புதூர் பகுதியைச்
சேர்ந்த சந்தியமூர்த்தியைக் (31) கைது செய்து விசாரிக்கிறார்.
பெற்றோரை பராமரிக்க தவறும் பிள்ளைகள் - கலெக்டர் நடவடிக்கை
பெரம்பலூர்
மாவட்டத்தில் பெற்றோரை பாதுகாப்புடன் பராமரிக்காத பிள்ளைகளை மீது
நடவடிக்கை எடுக்கப்படுமென கலெக்டர் தரேஸ் அஹமது தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு மூத்த குடிமக்கள் பராமரிப்பு மற்றும் பெற்றோர் நல்வாழ்வு
விதிகளின்கீழ் பராமரிப்பு கோரியும், தனக்கு சொந்தமான சொத்துக்களை மகன்
சந்திரசேகரனிடமிருந்து மீட்டுத்தர கோரியும் வேப்பந்தட்டை அடுத்த
கை.களத்தூர் மஜிரா பாதாங்கியை சேர்ந்த பெரியசாமி மனு அளித்துள்ளார்.
மனுவை விசாரித்து பெரியசாமிக்கு பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள்
சட்டத்தின்கீழ் உரிய தீர்வு வழங்க மாவட்ட சமூகநல அலுவலர் பேச்சியம்மாளுக்கு
உத்தரவிடப்பட்டுள்ளது.
விசாரணைக்கு சந்திரசேகரன் ஆஜராகாததால் மேல்முறையீடு அலுவலரான ஆர்டிஓ
ரேவதிக்கு அனுப்பி விசாரணை நடத்தப்பட்டது. விசாரணை முடிவில் பெரியசாமிக்கு
அவரது மகன் சந்திரசேகரன், உணவு, உடை, உறைவிடம் வழங்கி பராமரிப்பு தொகையாக
மாதந்தோறும் ரூ.1500 வழங்க வேண்டும். மேலும் வைப்புத்தொகை ரூ.50,000
மற்றும் 6 பவுன் நகையை ஒரு மாதத்திற்குள் வழங்க உத்தரவு
பிறப்பிக்கப்பட்டது.
60 வயதிற்கு மேற்பட்ட முதியோர் தங்களுக்கு ஏதேனும் உணவு, உடை பராமரிப்பு
பிரச்னை இருப்பின் புகார் கொடுக்கலாம். புகாரின்பேரில் தமிழ்நாடு பெற்றோர்
மற்றம் மூத்த குடிமக்கள் பாதுகாப்பு பராமரிப்பு சட்டப்படி உணவு, உடை,
பாதுகாப்பு மற்றும் பராமரிப்பிற்கு உரிய நிவாரணம் பெற்று தரப்படும்.
பெற்றோரை பாதுகாப்புடன் பராமரிக்க தவறும் பிள்ளைகள் மீது நடவடிக்கை
எடுக்கப்படும். இதுகுறித்து ஆர்டிஓ ரேவதி அல்லது மாவட்ட சமூகநல அலுவலர்
பேச்சியம்மாளிடம் மூத்த குடிமக்கள் புகார் தெரிவிக்கலாம்.
யார்? பயங்கரவாதத்தின் ஆணி வேர்!
ஊட்டி ராணுவ பயிற்சி முகாமில் பயிற்சி பெற்று வரும் இலங்கை ராணுவ அதிகாரிகள் விரைவில் திருப்பி அனுப்பப் படுவார்கள் என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே. அந்தோணி தன்னிடம் உறுதி அளித்துள்ளதாக மத்திய அமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார்.
இங்கே பயிற்சி கொடுக்காமல் இருந்தால் என்ன இலங்கைக்கு போயி பயற்சி கொடுத்து வருவார்கள். இந்திய அரசு தமிழர்களை அழித்து ஒழிப்பதையே கொள்கையாக கொண்டுள்ளது. இலங்கை விவகாரத்தில் இந்தியா அங்குள்ள தமிழர்களின் விடியலுக்கு உதவ வேண்டும்.
ஆனால் அதை விட்டு இந்தியா வெறும் கபட நாடகம் ஆடிவருகிறது. இந்தியாவில் தமிழர்கள் என்று ஒரு இனம் வசிக்கிறது என்கிற உணர்வே இந்திய அரசுக்கு கிடையாது. இந்தியாவின் மதிப்பற்ற ஒரு மாநிலம்தான் தமிழ்நாடும் அங்கு வசிக்கும் தமிழர்களும். வட ஹிந்தியனை தவிர்த்து ஒரு தமிழனால் இந்தியாவின் பிரதமராக முடியுமா?
தமிழக உணர்வற்ற அரசியல் கோமாளிகள் போர் நடக்கும் போதும், சகல உதவிகள் செய்யும் போதும் வாய் பொத்தி மவுனமாக இருந்து விட்டு இப்ப ஆளுக்கு ஆள் நாடகம் ஆடுகிறார்கள். இனி பயிற்சி கொடுத்தல் என்ன பயிற்சி பெற்றால் என்ன? இவ்வளவும் நடந்த பின்னும் தமிழர்களில் ஒரு தேசபக்த கூட்டம் இதையெல்லாம் சரியென்று தலையாட்டி திரிகிறது.
உலகத்துக்கே பட்டவர்த்தனமாக தெரிந்த ஈழப்படு கொலையை நடத்தவும், மறைக்கவும் உதவியவர்கள்தானே இந்த மகாத்மா பிறந்த மண்ணின் அகிம்சைவாதிகள். அரசு என்கிற இயந்திரத்தை வைத்து கொண்டு வல்லரசு என்கிற குடிபோதையில் இவர்கள் செய்தால் அது தீவிரவாதம் இல்லை! அதையே பாதிக்கப்பட்ட மக்கள் செய்தால் அது தீவிரவாதம். இந்திய அரசு பயங்கரவாதத்தின் கோர முகத்துக்கு பலியானவர்கள் எத்தனை இலட்சம் பேர்கள். பயங்கரவாதத்தின் ஆணிவேர் யார்? மக்களா அரசா?
*மலர்விழி*
"திருக்குர்ஆன் பிரதி எரிப்பு, இறந்த உடல்களுக்கு அவமதிப்பு வழக்குகளில் அமெரிக்க ராணுவ வீரர்களுக்கு சிறைத் தண்டனை இல்லை!
வாஷிங்டன்:உலகில் ஜனநாயகத்தின் பாதுகாவலன் என வேடம் போடும் அமெரிக்காவில் நீதி எவ்வளவு கேலிக் கூத்தாக்கப்படுகிறது என்பது அவ்வப்போது வெட்ட வெளிச்சமாகி வருகிறது.
முஸ்லிம்களின் இறுதி வேதமும், உலக மனித சமூகத்திற்கு நல்லுபதேசமுமான புனித திருக்குர்ஆனின் பிரதிகளை எரித்த சம்பவம் மற்றும் கொலைச் செய்யப்பட்ட தாலிபான் போராளிகளின் உடல்களை அவமதிக்கும் விதமாக அவர்களின் உடல்கள் மீது சிறுநீர் கழித்த சம்பவத்தில் அமெரிக்க ராணுவ வீரர்களுக்கு சிறைத் தண்டனை எதுவும் வழங்கப்படவில்லை.
திருக்குர்ஆன் பிரதிகள் மற்றும் இதர இஸ்லாமிய நூல்களை எரித்த சம்பவத்தில் 6 அமெரிக்க ராணுவ வீரர்களும், தாலிபான் போராளிகளின் இறந்த உடல்களில் சிறுநீர் கழித்து அவமதித்த சம்பவத்தில் 3 ராணுவ வீரர்களுக்கும் தண்டனை வழங்கப்படுவதாக ராணுவம் அறிவித்த போதிலும் அத்தண்டனை நிர்வாக ரீதியான(administrative punishment) தண்டனை மட்டுமே ஆகும்.
நிர்வாகரீதியான தண்டனையின் படி பதவிக் குறைப்பு, அபராதம் விதித்தல் போன்ற நடவடிக்கைகள் மட்டுமே மேற்கொள்ளப்படும்.
ஆஃப்கானின் வடக்கு காபூலில் உள்ள அமெரிக்க ராணுவ மையத்தில் வைத்து அமெரிக்க ஆக்கிரமிப்பு ராணுவத்தினர் 53 திருக்குர்ஆன் பிரதிகள், 162 இதர நூல்கள் ஆகியவற்றை வெறிப்பிடித்து தீக்கிரயாக்கினர். இச்சம்பவம் உலகம் முழுவதும் முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. மேலும் இச்சம்பவம், ஆஃப்கானிஸ்தான், பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் பெரும் மக்கள் திரள் போராட்டங்களுக்கு காரணமானது. இதில் 30 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இச்சம்பவத்தால் கோபமடைந்த ஆஃப்கன் அதிபர் ஹாமித் கர்ஸாயி, குற்றவாளிகளை பகிரங்கமாக விசாரணைச் செய்யவேண்டும் என்று அமெரிக்காவிடம் வலியுறுத்தினார்.
அமெரிக்க ஆக்கிரமிப்பு ராணுவ வீரர்கள் தாலிபான் போராளிகளின் இறந்த உடல்கள் மீது சிறுநீர் கழித்த காட்சிகள் யூ ட்யூப் உள்ளிட்ட இணையதளங்களில் வெளியானது அமெரிக்க ராணுவத்திற்கு சிக்கலை ஏற்படுத்தியது. தொடர்ந்து அமெரிக்க அதிகாரிகள் நடத்திய விசாரணையில், இச்சம்பவம் உண்மையானது என்றும், தொடர்புடைய அமெரிக்க ராணுவ வீரர்கள் அடையாளம் காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. 3 தாலிபான் வீரர்களின் இறந்த உடல்கள் மீது நான்கு அமெரிக்க ஆக்கிரமிப்பு ராணுவத்தினர் சிறு நீர் கழிப்பதும், தரக்குறைவான வார்த்தைகளால் கிண்டலடிப்பதும் வீடியோவில் இடம்பெற்றுள்ளன. அதேவேளையில் இஸ்லாத்தை அவமதிக்கவேண்டும் என்ற எண்ணமோ, திருக்குர்ஆனுக்கு அவமரியாதைச் செய்யும் நோக்கமோ இல்லை என்று விசாரணை அதிகாரி பிரிகேடியர் ஜெனரல் ப்ரியான் வாட்சன் கூறியுள்ளார்.
2011 மார்ச் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை ஆஃப்கானிஸ்தானில் நேட்டோ ராணுவத்தின் பணியாற்றிய 3-ஆம் பட்டாலியனைச் சார்ந்தவர்கள் தாம் நிர்வாக ரீதியான தண்டனையைப் பெற்றுள்ள ராணுவ வீரர்கள் ஆவர். குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை கிடைக்கும் என கருதிய வேளையில், நிர்வாகரீதியான தண்டனை மட்டும் வழங்கப்பட்டது வரும் நாட்களில் அமெரிக்காவுக்கு எதிராக போராட்டம் வலுப்பெறும் என்பதை உணர்த்துகிறது.
தண்டனை நடவடிக்கைக் குறித்து ஆராய்ந்த பிறகு பதில் அளிக்கப்படும் என்று ஹாமித் கர்ஸாயியின் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.
thoothu
குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் விரும்பி உண்ணும் ஜெல்லி, சாக்லேட்கள், ஐஸ்கிரீம் தயாரிப்பின் பின் மறைந்துள்ள 'பகீர்' தகவல்கள்
யானை இருந்தாலும் ஆயிரம் பொன்; இறந்தாலும் ஆயிரம் பொன்' என்று பழமொழி உண்டு. அதே பழமொழி, இப்போது மாடு மற்றும் பன்றிக்கும் பொருந்துகிறது.
இதுவரை பால், இறைச்சி, தோல், சாணம் ஆகியவற்றுக்கு மாடுகள் பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில், தற்போது புதிதாக அதன் எலும்பு பவுடர்கள், குழந்தைகள் விரும்பி சாப்பிடும் ஜெல்லி, சாக்லேட்கள், ஐஸ்கிரீம் போன்ற பொருட்களில் கணிசமாக சேர்க்கப்படுகிறது.
படித்ததும், "உவ்வே' என்கிறீர்களா? பல கோடிகள் புரளும் இந்த வர்த்தகத்திற்கு பின் மறைந்துள்ள "பகீர்' தகவல்கள் வருமாறு:
மாட்டின் உடலில் 220 எலும்புகள் உள்ளன. மாட்டிறைச்சி கூடங்களில் மாடுகள் அறுக்கும்போது, சிறிய அளவில் உள்ள எலும்புகள் இறைச்சியுடன் சேர்த்து விற்கப்படுகிறது. கடிக்க மற்றும் துண்டிக்க முடியாத எலும்புகளை, இறைச்சி வியாபாரிகள் சேகரிக்கின்றனர்.
அவற்றை, எலும்பு பவுடர் தயாரிப்பாளர்கள் நேரடியாக கொள்முதல் செய்கின்றனர். ஒரு கிலோ எலும்பு, எட்டு ரூபாய் முதல் ஒன்பது ரூபாய் (இந்திய ரூபாய்) வரை விற்கப்படுகிறது. எலும்பு பொருட்களை காய வைத்து, பதப்படுத்தி அரைத்து விற்பனை செய்யும் தனியார் நிறுவனங்கள் தமிழகத்தின் சென்னை, விழுப்புரம், தென்காசி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட இடங்களில் சப்தம் இன்றி இயங்கி வருகின்றன. மதுரை, நெல்லை, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து, ஒரு மாதத்திற்கு 100 டன் வரை எலும்புகள் கிடைக்கிறது.
மூட்டைகளில் வரும் எலும்புகளில் இருந்து, ஜவ்வு, கொம்பு, கால் குளம்பு ஆகியவற்றை தனித்தனியே பிரிக்கின்றனர். பின், ஈரப்பசை கொண்ட அவற்றை நன்றாக காய வைத்து அரைத்து பவுடர் ஆக்கி மூட் டைகளில் அடைக்கின்றனர். ஒரு கிலோ 13 முதல் 15 ரூபாய் வரை விற்கின்றனர்.
அதை தமிழகம், கேரளா, ஆந்திராவில் உள்ள தனியார் நிறுவனத்தினர் மொத்த விலையில் வாங்கிச் செல் கின்றனர். எலும்பு பவுடரை, பல்வேறு வேதியியல் முறைகளுக்கு உட்படுத்தி, சாப்பிடும் ஜெலட்டின், பார்மா ஜெலட்டின், போட்டோ ஜெலட்டின் ஆகியவற்றை தயாரிக்கின்றனர். அவை உள்நாட்டு பயன்பாட்டிற்கு மட்டுமின்றி, அமெரிக்கா, ஜெர்மனி, ஜப்பான், இத்தாலி உள்ளிட்ட பல் வேறு வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
சாப்பிடும் ஜெலட்டின்:
இதில் புரோட்டின் மற்றும்
கால்சியம் சத்துக்கள் 50 முதல் 60 சதவீத அளவிற்கும் அதிகமாக உள்ளதாக
கூறப்படுகிறது. இவை குழந்தைகள் மட்டுமின்றி, பெரியவர்களும் விரும்பி
சாப்பிடும் ஜெல்லி உணவுகள், சாக்லேட்கள், ஐஸ்கிரீம், கேக் கிரீம் ஆகியவை
தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது. மேலும், புரோட்டின் மற்றும் கால்சியம்
சத்துக்கள் உள்ள குளிர்பானங்கள், புத்துணர்ச்சி தரும் பான பவுடர்களில் அவை
சேர்க்கப்படுகிறது.
பார்மா மற்றும் போட்டோ ஜெலட்டின்: டியூப் மாத்திரைகளின் மூடி தயாரிப்பதற்கு
இவை அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இது மட்டுமின்றி, புரோட்டின் மற்றும்
கால்சியம் சத்துக்களுக்காக, மாத்திரைகள் மற்றும் "சிரப்'களிலும்
சேர்க்கப்பட்டு வருகிறது. போட்டோ ஜெலட்டின்கள், பட பிலிம்கள், எக்ஸ்ரே
பிலிம்கள் தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படுகிறது.
எலும்பு பவுடர் உரம்:
வெளிநாடுகளில், எலும்பு பவுடர்
விவசாய நிலங்களில் உரமாக பயன்படுத்தப்படுகிறது. இதற்காக, டன் கணக்கில்
எலும்பு பவுடர் ஏற்றுமதி செய்யப்படுகிறது. எலும்பு பவுடர்கள் மிகச்சிறந்த
உரமாக இருப்பதால், அதிகளவில் மகசூல் கிடைப்பதை அனுபவ பூர்வமாக அந்நாடுகளின்
விவசாயிகள் உணர்ந்துள்ளனர்.
மாட்டு கொம்பு மற்றும் கால் குளம்பு பவுடர்கள், ஜெர்மனிக்கு அதிகளவில்
உரத்திற்காக அனுப்பப்படுகிறது. தற்போது கேரளா மற்றும் கர்நாடகாவில், மாட்டு
எலும்பு பவுடர்களை உரமாக பயன்படுத்துவது அதிகரித்துள்ளது. மாட்டு ஜவ்வு
பவுடர்கள், கோழி தீவனமாக பயன்படுத்தப்படுகிறது.
கோழிக் குஞ்சுகள் அவற்றை சாப்பிடுவதால் அதிக ஊட்டச்சத்துகள் பெற்று, மூன்று
மாதங்களில் அவை இறைச்சிக்கு தயாராகி விடுகின்றன. இப்படி, மாட்டு
எலும்புகள், உணவு, மருத்துவம், உரம் ஆகியவற்றில் மறைமுகமாக
பயன்படுத்தப்பட்டு வருகிறது. அவற்றை பல்வேறு பொருட்களில் பயன்படுத்துவது
வெளிப்படையாக தெரிந்தால், விற்பனை பாதிக்கும் என்பதால், அவற்றை
தயாரிப்பாளர்கள் மறைக்கின்றனர்.
"நரோடா பாட்டியா கூட்டுப் படுகொலை: முன்னாள் அமைச்சர் உள்பட 32 பேர் குற்றவாளிகள்! – சிறப்பு நீதிமன்றம்!
அஹ்மதாபாத்:குஜராத் முஸ்லிம் இனப் படுகொலையின் போது ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் நரோடா பாட்டியாவில் நடத்திய கோரத்தாண்டவமான கூட்டுப் படுகொலை வழக்கில் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
முன்னாள் விஸ்வ இந்து பரிஷத் தலைவர் பாபு பஜ்ரங்கி மற்றும் நரேந்திர மோடி அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த முன்னாள் அமைச்சர் மாயா கோட்னானி உள்ளிட்ட 32 பேர் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 29 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
கோத்ராவில் நடந்த ரயில் எரிப்பு சம்பவத்தின் பழியை முஸ்லிம்கள் மீது சுமத்தி குஜராத் மாநிலத்தில் ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் இந்திய வரலாறு காணாதா மாபெரும் இனப் படுகொலையில் ஈடுபட்டனர். ஊர் ஊராக முஸ்லீம்களைக் குறி வைத்து கொலை வெறித் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இந்த கொடும் தாக்குதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் படுகொலை செய்யப்பட்டனர். பலரை உயிருடன் தீயில் போட்டுக் கொடூரமாகக் கொன்றனர் ஹிந்துத்துவா பயங்கரவாதிகள்.
கோத்ரா ரெயில் எரிப்பு சம்பவம் நடந்த மறுநாள் அதாவது 2002 பிப்ரவரி 29-ஆம்தேதி குஜராத் மாநிலத்தின் நரோடா பாடியா என்ற இடத்தில் நடந்த மிகப் கூட்டுப் படுகொலையில் 97 முஸ்லிம்கள் கொடூரமாக கொலைச் செய்யப்பட்டனர்.
28ம் தேதி பந்த் நடத்த விஸ்வ இந்து பரிஷத் என்ற ஹிந்துத்துவா பயங்கரவாத அமைப்பு அழைப்பு விடுத்திருந்தது. அன்றைய தினம், முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் நரோடா பாடியா என்ற இடத்தில் பெரும் திரளான விஎச்பி ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் கூடினர். அவர்கள் பயங்கர வன்முறை வெறியாட்டத்தில் குதித்தனர். கண்ணில் பட்ட முஸ்லீம்களையெல்லாம் வேட்டையாடினர். இதில் 97 பேர் கொடூரமாகக் கொல்லப்பட்டனர் 33 பேர் படுகாயமடைந்தனர்.
இதுத்தொடர்பான வழக்கு அஹ்மதாபாத்தில் அமைக்கப்பட்டசிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அதை விசாரித்த கூடுதல் முதன்மை மாவட்ட நீதிபதி ஜோத்சனா யாக்னிக் தீர்ப்பை ஜூன் 30-ம் தேதிக்கு ஒத்திவைத்திருந்தார்.
இந்த நிலையில் அவ்வழக்கின் மீது இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதில், முன்னாள் விஎச்பி அமைப்பைச் சார்ந்த ஹிந்துத்துவா பயங்கரவாதி பாபு பஜ்ரங்கி, நரேந்திர மோடி அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த மாயா கோட்னானி உள்ளிட்ட 32 பேர் குற்றவாளிகள் என நீதிபதி தீர்ப்பளித்தார். அதேசமயம், 29 பேரை விடுவித்து அவர் உத்தரவிட்டார்.
மாயா கோட்னானி தற்போதும் பாஜக எம்.எல்.ஏவாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வழக்கில் 2009ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் விசாரணை தொடங்கியது. மொத்தம் 70 பேர் மீது குற்றம சாட்டப்பட்டது. அதில் விஜய் ஷெட்டி உள்ளிட்ட 7 பேர் விசாரணைக் காலத்திலேயே இறந்து விட்டனர். மொத்தம் 327 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். அதில் முக்கியமானவர் பத்திரிக்கையாளர் ஆசிஷ் கேதான் ஆவார். முதலில் 46 பேர் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டனர். பின்னர் மேலும் 24 பேரை எஸ்ஐடி சிறப்புப் படையினர் கைது செய்தனர். இவர்களில் ஜாமீனில் வெளிவந்த மோகன் நேபாளி மற்றும் தேஜாஸ் பதக் ஆகிய இருவரும் தப்பி விட்டனர். இன்னும் இவர்கள் இருவரும் தலைமறைவாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
thoothu
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)