திங்கள், 22 அக்டோபர், 2012

காற்றிலிருந்து பெட்ரோலை தயாரித்து சாதனைஉலகில் முக்கிய தேவையான பெட்ரோலை காற்றிலிருந்து தயாரித்து இங்கிலாந்தை சேர்ந்த நிறுவனம் சாதனை படைத்துள்ளது.
பூமியில் கச்சா எண்ணெயின் அளவு குறைந்து கொண்டே வருவதால், மாற்று எரிபொருளை கண்டுபிடிக்கும் முயற்சியில் நிபுணர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
 

இந்நிலையில் காற்றின் மூலம் மின்சாரம் தயாரித்துஇங்கிலாந்தை சேர்ந்த நிறுவனம் சாதனை படைத்துள்ளது.
காற்றில் உள்ள கார்பன் -டை ஆக்சைடுடன், ஹைட்ரஜன் கலந்து மெத்தனால் உருவாக்கப்படுகிறது.
 

அதில் இருந்து பெட்ரோல் தயாரிக்கப்படுகிறது. தற்போது இதுபோன்ற பெட்ரோலை 3 மாதத்தில் 5 லிட்டர் மட்டுமே தயாரிக்க முடிகிறது.
எனவே பெரிய அளவில் பிளாண்ட் அமைத்து அதன் மூலம் தினசரி டன் கணக்கில் பெட்ரோல் தயாரிக்க திட்டமிட்டுள்ளது. அதற்கு இன்னும் 2 ஆண்டுகள் ஆகும்.
 

இதைத் தொடர்ந்து 15 ஆண்டுகளில் மிகப்பெரிய அளவில் பெட்ரோல் தயாரிக்க முடியும் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
காற்று மூலம் பெட்ரோல் தயாரிக்கும் தொழில்நுட்பம் சமீபத்தில் லண்டனில் நடந்த பொறியியல் மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்டது. 
லப்பைகுடிக்காடு தமுமுக டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு பிரச்சாரம்....நமதூரில் டெங்கு காய்ச்சல் பரவாமல் இருக்க நமதூர் ஆரம்ப சுகாதார அரசு மருத்துவமனையும் மற்றும் தமுமுக இணைந்து இளைகர்கள் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தனர். இதில் தெருவிருக்கு தெரு சென்று மழையிலும் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக
விழிப்புணர்வு பிரசாரம் செய்தனர்.
நமது நிருபர்.

நன்றி - labbaikudikadunews


பெரம்பலூர் நகரில் பட்டப்பகலில் பெண்ணிடம் செயின் பறிப்பு

பட்டப்பகலில் டூவிலரில் வந்த மர்மநபர்கள், பெண்ணிடம் செயின் பறித்து சென்ற
சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெரம்பலூர் பாரதிதாசன் நகரைச்
சேர்ந்தவர் பாலசுப்ரமணியன் மனைவி ராஜாமணி, 40, இவர் நேற்று மதியம், 12.30 மணியளவில் மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள சங்குப்பேட்டை பகுதியில் நடந்து சென்றுக்கொண்டிருந்தார். அப்போது அவ்வழியே ஒரே டூவிலரில் வந்த, மூன்று மர்ம நபர்கள், திடீரென ராஜாமணியின் கழுத்திலிருந்து, மூன்று பவுன் செயினை
பறித்துக்கொண்டு டூவீலரில் தப்பிசென்றனர்.

இதுகுறித்து தகவலறிந்த பெரம்பலூர்
மாவட்ட போலீஸ் எஸ்.பி., ராஜசேகரன் உத்தரவின்பேரில், டி.எஸ்.பி., சுகாசினி
மேற்பார்வையில், போலீஸ் இன்ஸ்பெக்டர் சர்புதீன்தலைமையில், பெரம்பலூர்
நகர் முழுவதும் தனிப்படை அமைத்து வாகனங்கள் மற்றும் சந்தேகத்திடமான நபர்களிடம் சோதனை மற்றும் விசாரணை நடத்தினர்.

மாவட்ட தலைநகரில் பட்டப்பகலில் பெண்ணிடம் செயின் பறித்து சென்ற சம்பவம் பெரம்பலூர் நகரில்
பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


துபாய் சரவணபவன் ஊழியர் மர்மச் சாவுசரவணபவன் உணவகம் உலகம் முழுவதும் பல கிளைகளைக் கொண்டு இயங்கிவருகிறது, அதில்  துபாயில் இயங்கக்கூடிய சரவண பவன் உணவகத்தில் பணிபுரிந்த தெய்வமணி என்பவர் இரண்டு நாட்களுக்கு முன்னர் மர்மமான முறையில் இறந்துள்ளார்.

இன்று சென்னை கொண்டுவரப்பட்ட அவரது உடலை ஏற்க மறுத்த அவரது தாயார் மற்றும் உறவினர்கள், தெய்வமணி துபாயில் சரவணபவன் உணவகத்தில் வேலை செய்துகொண்டிருந்த போது பாவித்த அவரது பொருட்களை தங்களிடம் ஒப்படைக்க சரவணபவன் நிர்வாகம் மறுத்ததாகவும், இதனால் சென்னை காவல்துறை அதிகாரியிடம் முறையிட்டதாகவும், இவ்வாறு தாம் சரவணபவன் நிர்வாகத்திற்கு எதிராக அளித்த புகாரை திரும்ப பெறவேண்டும் என சரவணபவன் நிர்வாகம் தம்மை மிரட்டுவதாகவும் இதன் காரணத்தினாலேயே அவரது உடலை தாம் ஏற்க மறுத்ததாகவும் தெரிவித்தனர்.

நன்றி-newsalai.com

சமூக உதவி பெரும் கருவியாக ஆதார் அட்டையை மாற்றும் திட்டம் துவங்கியது


அரசின் பல்வேறு சமூகத்  திட்டங்களுக்கான  பயன்களைப் பெறும் ஒரு கருவியாக பல்முனை பயனளிப்பு அட்டையாகக் கருதப்படும் ஆதார் அடையாள அட்டையை பயன்படுத்திக் கொள்ளும் ஒரு திட்டத்தை பிரதமர் மன்மோகன் சிங்கும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவர் சோனியா காந்தியும் சனிக்கிழமை துவக்கி வைத்தார்கள்.

ராஜஸ்தான் மாநிலத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெற்ற அதேநேரத்தில், நாடு முழுதும் 51 மாவட்டங்களில் இத்திட்டம் துவக்கப்பட்டுள்ளது.
ஆதார் அடையாள அட்டைத் திட்டம் துவக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் ஆகும் நிலையில், இதுவரை 24 கோடி மக்கள் அதற்காகப் பதிவு செய்திருக்கிறார்கள்.
2014-ம் ஆண்டில் 60 கோடி மக்களுக்கு அந்த அட்டையை வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தேசிய ஊரக வேலை உத்தரவாதத் திட்டம், ஓய்வூதியத் திட்டம் போன்ற பல்வேறு சமூகத் திட்டங்களை இத்துடன் இணைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

பல்வேறு சமூகத் திட்டங்களை செயல்படுத்துவதில் வெளிப்படைத் தன்மையைக் கொண்டுவர ஆதார் அட்டை பெரும் பயனுள்ளதாக அமையும் என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.

அரசு வழங்கும் பல்வேறு மானியங்கள், உரிய மக்களைச் சென்றடைவதை உறுதி செய்வதற்கு ஆதார் அட்டை பேருதவியாக இருக்கும் என்று சோனியா காந்தி குறிப்பிட்டுள்ளார்.

மாணவர்கள் கல்வி உதவித் தொகை பெறுவதற்கும், வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளவர்கள் அரசின் திட்டங்களால் பலன் பெறுவதற்கும் ஆதார் உதவிகரமாக இருக்கும் என நிதியமைச்சர் சிதம்பரம் கூறியுள்ளார்.


ஆதார் அட்டை விண்ணப்பப் படிவம் மற்றும் விதிமுறைகள்:ஆதார் கார்ட் நாட்டின் பல பாகங்களிலும் விநியோகம் செய்யப்படுகின்ற இந்நேரத்தில் ஆதார் அட்டை பற்றி நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டியது மிகவும் முக்கியம். மக்கள் மனங்களில் எழும்பும் ஆதார் பற்றின கேள்விகளுக்கு இதோ பதில்கள்
ஆதார் என்றால் என்ன?
ஆதார் என்பது 12 எண்களைக் இலக்கங்களைக் கொண்ட ஒரு எண். இதை யுனிக் ஐடென்டிஃபிகேஷன் அதாரிடி ஆஃப் இந்தியா தனது எல்லா குடிமக்களுக்கும் வழங்குகிறது. இந்த எண்ணில் புகைப்படம் உள்ளிட்ட ஒருவரைப் பற்றின மிக முக்கிய தகவல்கள் ஒரு சென்ட்ரல் டேட்டா பேஸில் பதிய வைக்கப்பட்டிருக்கும். ஆதார் ஒப்புநோக்க எளிதானது மேலும் தனிதன்மையுடையது என்பதால் கள்ள எண்களையும் தவறான தகவல்களையும் தவிர்க்க ஏற்றது. ஜாதி மத பேதங்கள் இல்லாமல் அனைவருக்கும் ஒன்றானது.
1. இது ஒரு 12 இலக்க எண்அட்டை மட்டுமல்ல
 
2. அனைவருக்கும் ஆனது. கைக்குழந்தைகளுக்குக் கூட. அதாவது ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒரு பிரத்யேக ஆதார் யு.ஐ.டி எண் கொடுக்கப்படும்.
 
3. அது இங்கு வசிப்பவர்களுக்கு ஒரு அடையாளம் தருகிறது. குடியுரிமை பற்றினது அல்ல. இந்தியர்களுக்கு மட்டுமானதும் அல்ல.
 
4. ஆதார் கார்ட் பெற்றுக் கொள்வது விருப்பத்தின் பேரிலானது, கட்டாயம் அல்ல.
 
5. நம் நாட்டில் வசிக்கும் ஒவ்வொருவரும் பெற்றுக் கொள்ளலாம். அதாவது அடையாள அட்டை ஏதும் இல்லாதவர்களும் பெற்றுக்கொள்ளலாம்.
 
6. ஒவ்வொருவருக்கும் ஒரு தனிபட்ட ஆதார் அடையாள எண் வழங்கப்படும். ஒருவருக்கு ஒரு எண்ணுக்கு மேல் கிடைக்காது.
 
7. யு.ஐ.டி ஒரு தனி நபர் பற்றின அரசாங்க மற்றும் தனிப்பட்ட நிறுவனங்களுக்கு ஆம் அல்லது இல்லை என்று மட்டுமே பதில் அளிக்கும். மேலும் விபரங்கள் ஏதும் யு.ஐ.டி கொடுக்காது.
 
8.ஆதார் யு.ஐ.டி எண் விபரங்கள் ரேஷன் அட்டை, பாஸ்போர்ட் போன்றவற்றுக்கு பயன்படும்..ஆனால் அவற்றுக்கு மாற்றாகாது.
 
எதற்காக ஆதார் அட்டை பெற வேண்டும்?
 
1. கிராமப்புரங்களில் வசிக்கும் ஏழைகளுக்கு மிகப் பயன் தரத்தக்கது
 
2. தெளிவான அடையாளம் தரும் ஒரு நபருக்கு
 
3. வங்கிகளில் ஏழைகளும் எளிதில் கணக்கு வைத்துக் கொள்ள ஏது செய்யும்
 
4. அரசாங்க மற்றும் தனி நபர் நிறுவனங்களின் சேவைகளை ஏழைகளும் எளிதில் பயன்படுத்திக் கொள்ளலாம்
 
5. பிரயாணிகளுக்கு அடையாளப் பிரச்சினைகளில் இருந்து விடுதலை
 
6. அரசாங்கத்தின் நலம் தரும் திட்டங்கள் மக்களுக்குப் பயன் தரவும் போய்ச் சேரவும் எளிதாக இருக்கும்
 
யாரெல்லாம் ஆதார் அட்டை பெற்றுக்கொள்ளலாம்?
 
இந்தியாவில் வசிக்கும் மற்றும் யு.ஐ. டி.ஏ.ஐ யின் வெரிஃபிகேஷனை திருப்தி செய்யும் எவரும் ஆதார் பெறலாம்.
 
எப்படி பெறுவது?
 
உள்ளூர் ஊடகங்களில் ஆதார் பற்றின பிரச்சாரங்கள் செய்வார்கள். ஊடகங்களில் தெரிவிக்கப்படும் (ஆதாரங்களை)  certain documents எடுத்துப் போக வேண்டியிருக்கும்.
என்னென்ன ஆதாரங்கள் தேவைப்படும்?
பதிவு செய்யும் நேரம் தேவைப்படும்ஆவணங்கள்
1. (ஆதார் விண்ணப்பப் படிவம்) Aadhaar application form
 
2. வசிப்பிடம் பற்றின தகவல்
 
3. அடையாள அட்டை புகைப்படத்துடன்
 ஒவ்வொரு ஊருக்கும் இவை மாறுபடலாம்
 
தேவைப்படும் தகவல்கள்
1. பெயர்
2. பிறந்த தேதி
3. பால்
4. முகவரி
5. பெற்றோர் மற்றும் காப்பாளர் பற்றின தகவல்
6. தொடர்பு கொள்ள தொலைபேசி மற்றும் ஈ மெய்ல் முகவரி
 
மேலும்
1. புகைப்படம்
2. 10 விரல் அடையாளங்கள்
3. விழிப்படல அடையாளம்
 
எங்கு பதியலாம்?
 
இங்கு சொடுக்குங்கள் Enrollment camps
விண்ணப்படிவம் எங்கு கிடைக்கும்?
இங்குசொடுக்கவும் Aadhaar application form
பதிவு செய்து கொள்ளும் முகாம்களில் படிவங்கள் கிடைக்கும் அல்லது இங்கு பிரிண்ட் செய்து கொள்ளலாம் சொடுக்கவும்  here. 
 
ஆதார் ஹெல்ப் லைன் தொலை பேசி எண்: டோல் ஃப்ரீ எண் : 1800-180-1947
 
ஆதார் படிவத்தில் அச்சு மற்றும் எழுத்துப் பிழைகள் இருந்தால் என்ன செய்வது?
 பதிவு செய்து கொள்ளும் போதே தவறுகளை நேரில் பார்த்து சரி செய்து கொள்ள வசதி உண்டு. அப்படியும் பிழைகள் நேர்ந்தால்.. 48 மணி நேரத்துக்குள் தேவையான ஆவணங்களை எடுத்து சென்று சரி செய்து கொள்ளலாம்.
 
ஆதார் கார்ட் விண்ணப்பித்து எத்தனை நாளில் கிடைக்கும்?
பல சோதனைகளைத் தாண்டி வர வேண்டியிருப்பதால் 60 லிருந்து 90 நாட்கள் ஆகலாம்.
 
விண்ணப்பம் மறுக்கப்படுமா?

1. தவறுகள் நேர்ந்தால் மறுக்கப்படலாம்
2. மேலும் உங்களைப் பற்றின உடற்கூறு ரீதி ஆதாரம் மற்றும் ஒருவரின் ஆதாரமும் ஒன்று போல் இருந்ததால்.
சரி பார்க்கப்பட்ட பின் ஆதார் கார்ட் வழங்கப்படும்.

இதுகுறித்துஇ மேலும் விவரங்களை அறிய 044-28582798, 0431-241245, 0452-2526398, 0422-2558204 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என தமிழக வட்ட தலைமை தபால் துறை தலைவர் அலுவலகம் தெரிவித்துள்ளது.


Tamil

பூர்த்தி Aadhaar சேர்க்கை படிவத்தை சேர்த்து, பின்வரும் ஆவணங்களை நோட்டரி / அரசிதழ் பதிவு பெற்ற அலுவலர் அசல் அல்லது மந்தை பிரதிகளை உற்பத்தி இருக்க வேண்டும். 

அடையாள * சான்று (PoI) 
முகவரி    * சான்று (PoA)
பிறந்த     * தேதி (DoB)

Uid வலைத்தளம் படி, பின்வரும் சான்றாக ஏற்று எந்த ஆவணங்கள் உள்ளன. நீங்கள் பட்டியலிடப்பட்ட ஆவணங்கள் சில அல்லது எந்த இல்லை என்றால், தொடர்ந்து இருக்கும் வழிமுறைகள் 'சான்று ஆவணங்களை இல்லை எனில் ஒரு' கீழே பிரிவில் பார்க்க.

அடையாள சான்று (PoI), (பெயர் மற்றும் புகைப்படம் கொண்ட) 
1.பாஸ்போர்ட்  
2.நிரந்தர கணக்கு எண் அட்டை
3.ரேஷன் / PDS புகைப்பட அட்டை
4.வாக்காளர் அடையாள அட்டை
5.ஒட்டு உரிமம்.
6. அரசு புகைப்பட அடையாள அட்டைகள்
7. NREGS வேலை அட்டை
8. அறியப்பட்டதா கல்வி நிறுவனம் வழங்கப்பட்ட புகைப்பட அடையாள அட்டை
9. படைக்கல உரிமம்
10. Photo வங்கி ஏடிஎம் கார்டு
11. Photo கடன் அட்டை
12. ஓய்வு கால ஊதியம் பெறுபவர் புகைப்பட அட்டை
13. சுதந்திர போராட்ட வீரர் புகைப்பட அட்டை
14. ஜாம் புகைப்பட கைச்சாத்து புத்தகம்
15. CGHS / ECHS புகைப்பட அட்டை
16. முகவரி அட்டை பெயர் மற்றும் தபால் திணைக்களம் வெளியிட்ட புகைப்பட கொண்ட
17. லெட்டர் ஹெட் குழு ஒரு அரசிதழ் பதிவு பெற்ற அதிகாரி வெளியிட்ட கண்டறிந்து கொண்ட நிகழ்வு சான்றிதழ்

புகைப்படங்கள் இல்லாமல் ஆவணங்கள் ஏற்று முடியாது. பழைய புகைப்படங்கள் ஏற்றுக்கொள்ள உள்ளன.
முகவரி சான்று (PoA) (பெயர் மற்றும் முகவரி அடங்கிய)

1. பாஸ்போர்ட் 
2. வங்கி அறிக்கை / கைச்சாத்து புத்தகம்
3. தபால் கணக்கு அறிக்கை / கைச்சாத்து புத்தகம்
4. ரேஷன் அட்டை
5. வாக்காளர் அடையாள அட்டை
6. ஒட்டு உரிமம்7. அரசு புகைப்பட அடையாள அட்டைகள்
8. மின்சார பில் (3 மாதங்களுக்கு விட பழைய இல்லை)
9. தண்ணீர் பில் (3 மாதங்களுக்கு விட பழைய இல்லை) 
10. தொலைபேசி தொலைபேசி பில் (3 மாதங்களுக்கு விட பழைய இல்லை)
11. சொத்து வரி ரிசிப்ட் (இல்லை பழைய விட 3 மாதங்கள்)
12. கடன் அட்டை அறிக்கை (இல்லை பழைய விட 3 மாதங்கள்)
13. காப்பீட்டு ஆவணம்
14. லெட்டர் ஹெட் வங்கி புகைப்பட கொண்ட கையெழுத்திட்ட கடிதம் 
15. லெட்டர் ஹெட் பதிவு நிறுவனம் வெளியிட்ட கையெழுத்திட்ட கடிதம் கொண்ட புகைப்பட
16. லெட்டர் ஹெட் அறியப்பட்டதா கல்வி பயிற்சிகள் வழங்கப்பட்ட கையெழுத்திட்ட கடிதம் கொண்ட புகைப்பட 
17. NREGS வேலை அட்டை
18. படைக்கல உரிமம்  
19. ஓய்வு கால ஊதியம் பெறுபவர் அட்டை
20. சுதந்திர போராட்ட வீரர் அட்டை
21. ஜாம் கைச்சாத்து புத்தகம்
22. CGHS / ECHS அட்டை
23. லெட்டர் ஹெட் எம்.பி. அல்லது எம்.எல்.ஏ. அல்லது குழு மூலம் ஒரு அரசிதழ் பதிவு பெற்ற அதிகாரி வெளியிட்ட முகவரி கொண்ட நிகழ்வு சான்றிதழ்
24. கிராம பஞ்சாயத்து தலைவர் வழங்கப்பட்ட முகவரி அல்லது அதன் சமமான அதிகாரம் சான்றிதழ் (கிராமப்புறங்களில்)
25. வருமான வரி மதிப்பீட்டு ஆணை
26. வாகன பதிவு சான்றிதழ் 
27. பதிவு விற்பனை / லீஸ் / வாடகை ஒப்பந்தம்
28. தபால் திணைக்களம் வெளியிட்ட புகைப்பட கொண்ட முகவரி அட்டை
29. ஜாதி மற்றும் இருப்பிட சான்றிதழ் மாநில அரசு வெளியிட்ட புகைப்படம் கொண்டிருக்கும்.

பிறந்த தேதி (DoB) ஆதாரம் (பெயர் மற்றும் DoB கொண்டு)

1. பிறப்பு சான்றிதழ்
2. SSLC புத்தக / சான்றிதழ்
3. பாஸ்போர்ட்
4. லெட்டர் ஹெட் குழு ஒரு அரசிதழ் பதிவு பெற்ற அதிகாரி வெளியிட்ட பிறந்த தேதி சான்றிதழ்
Introducer கணினி - ஒரு சான்று ஆவணங்களை வேண்டும் எனில் ஆதாரம் ஆவணங்களை இல்லை மக்கள் வழக்கில், ஒரு introducer அமைப்பு அங்கே உள்ளது. சேரல் இன்னும் பதிவாளர் ஒரு நபர் தகவல் செல்லுபடியாகும் தன்மையை உறுதி கூறுவேன் நபர்கள் உருவாக்க முடியும். Introducers அரசாங்க முகவர், வங்கிகள், ஆசிரியர்கள், கிராம postmen, தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் இருக்க முடியும். Introducers முதல் கொடுக்கப்பட்ட பயிற்சி சேர்ந்தார் வேண்டும். அவர்களின் uid சேர்ந்தார் யார் நபரின் விவரங்கள் மத்தியில் சொல்லப்படும்.


பக்ரீத் பண்டிகை :ஆர்.எஸ்.எஸ். மற்றும் போலீசாரால் சித்திரவதைக்கு உள்ளாக்கப்படும் முஸ்லிம் சமூகம்!


                                    வருடத்தில் 2 நாட்கள் மட்டுமே முஸ்லிம் பண்டிகைகள். அதில் ஒன்று பக்ரீத். இதில், குர்பானி கொடுப்பது முஸ்லிம்கள் மீது கடமையாகும்.

முஸ்லிம்களுக்கு தொல்லை கொடுப்பதை அடிப்படை கொள்கையாக கொண்டுள்ள ஆர்.எஸ்.எஸ். மற்றும் ஹிந்துத்துவா தீவிரவாதிகள், ஆடு மாடுகள் விற்கப்படும் சந்தைகளுக்கு அருகே ஒன்றாக சேர்ந்து கொண்டு, கொள்முதல் செய்யப்பட்டு கொண்டு செல்லப்படும் பிராணிகளின் வாகனங்களை வழி மறித்து "ரகளை" செய்து வருகின்றனர்.

"பசு"மாடு உள்ளதா? எனத்துவங்கி, இடவசதி சரியாக உள்ளதா? ஆரோக்கியம் குறித்த சான்று இருக்கிறதா? ஓவர் லோடா? போன்ற விஷயங்கள் குறித்து, ஆர்.எஸ்.எஸ். அரக்கர்களுக்கு பதில் சொல்லவேண்டிய "அவல நிலை "உள்ளது.

சட்டத்தை கையில் எடுத்துக்கொள்ளும் இந்த "காவிகளுக்கு காக்கி சட்டைகளும் துணை" புரிந்து வருவது தான் வேதனை.
காரணம், இதில் "மாமூல்" என்பதையும் தாண்டி "பறிமுதல்" என "மிரட்டல்" விடுத்து "பகல்கொள்ளை" அடிக்கும் வளம் கொழிக்கும் தொழிலாக பார்க்கிறது,போலீஸ்.

எனவே, நாடு முழுவதும் காவிகளும் காக்கிகளும் "கூட்டணி" அமைத்து, முஸ்லிம்கள் கொண்டு செல்லும் பிராணிகள் குறித்து "கேள்வி மேல் கேள்வி" கேட்டு, சொல்லொண்ணா  துயரத்துக்கு ஆளாக்குகிறார்கள்.

மேலும், பிராணிகள் சுமந்து செல்லும் வாகனங்களை, "மணல் கடத்தல் லாரி"களை துரத்தி செல்வது போல் துரத்தி செல்கிறார்கள்.
அப்படி துரத்தி செல்லப்பட்ட ஒரு டிராக்டர் (உ. பி."ஆசம்கர்" மலிக்) ஏரியில் கவிழ்ந்து, அதில் இருந்த 30 குர்பானி ஆடுகள் இறந்துவிட்டன.
மேலும், டிரைவர் உள்ளிட்ட மூன்று முஸ்லிம்கள் படுகாயமடைந்துள்ளனர்.
இதுபோன்ற சம்பவங்கள், தமிழகம் ஆந்திரம்  கேரளம் கர்நாடகம் மகாராஷ்டிரம் உத்திர பிரதேசம், என நாட்டின் எல்லா பாகங்களிலும் நடந்தேறி வருகிறது.


- maruppu.inஞாயிறு, 21 அக்டோபர், 2012

அமீரகத்தில் வாழும் வி.களத்தூர் பகுதி மக்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு


                                       வி.களத்தூர் பகுதியைச்சார்ந்த (வி.களத்தூர், மில்லத் நகர், மில்லத் நகர் மேற்கு, ரஹ்மத் நகர் மற்றும் வண்ணாரம்பூண்டி) மக்களுக்கு யூஏஈ வாழ் வி.களத்தூர் நலச்சங்கத்தின் சார்பாக ஈத் பெருநாள் வாழ்த்துக்களை தெறிவித்துக்கொள்கிறோம்.

நமது சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் துபையிலுள்ள பிஸ்மில்லா ரூம் மாடியில் வருகிற வெள்ளிக்கிழமை 26.10.12, ஈத் பெருநாள் அன்று மாலை மஹ்ரிப் தொழுகைக்கு பிறகு சுமார் 6.30 மணி அளவில் நடைபெறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். 


தற்பொழுது பதவியிலுள்ள பொருப்பாளர்களின் பதவிக்காலம் நிறைவடைகிறது, புதிய பொருப்பாளர்கள் தேர்வு செய்யப்பட இருப்பதால் உறுப்பிணர்கள் அனைவரும் தவறாமல் கலந்துக்கொண்டு பொதுக்குழுவை சிறப்பித்து தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
 
இப்படிக்கு
யூஏஈ வாழ் வி.களத்தூர் நலச்சங்கம்
துபை.நன்றி - vkalathur.net