சனி, 14 ஜூலை, 2012

ஆட்சியரின் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையை கண்டித்து பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மாபெரும் கண்டன ஆர்பாட்டம்


ஆட்சியரின் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையை கண்டித்து பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மாபெரும் கண்டன ஆர்பாட்டம்

தீவிரவாத போர்வையில் வேட்டை ஆடப்படும் சிறுபான்மையினர்
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiCrdCIfqSw1mHUGs5AZGDThXQUuJL82ysNvoSe0QxwZVi2zIAALKpy-0BX_ccQQO3fle8Oq-KeH1-IRHHtBU3GyWS2q1jaRQZWNfLYR8_0NhNxIrvrMLNlQQU8hB0vI-f01gH38IV57rs8/s1600/images+%25281%2529.jpg
                     புதுடெல்லி. july13: மலேகான், சம்ஜோதா எக்ஸ்பிரஸ்,மக்கா மஸ்ஜித், காட்கோபர் குண்டுவெடிப்புகள், பாட்லா ஹவுஸ் போலி என்கவுண்டர், கத்தீல் சித்திக்கியின் படுகொலை, ஃபஸீஹ் மஹ்மூதின் மர்மமான கைது… தீவிரவாதத்திற்கு எதிரான போராட்டம் என்ற பெயரால் முஸ்லிம் இளைஞர்களை பாதுகாப்பு ஏஜன்சிகள் குறி வைத்து வேட்டையாடிய அனுபவங்களை பகிர்ந்துகொள்ள ஏற்பாடுச்செய்த பொதுக்கூட்டத்தில் கண்ணீர் கதைகளை கேட்டு அரசு மீது கோபக்கனல் வீசியது.
உள்ளத்தில் அடக்கி வைத்த எதிர்ப்புகளையும், கவலைகளையும் கான்ஸ்ட்யூஸன் அஸெம்ப்ளி க்ளப்பில் டெபுட்டி ஸ்பீக்கர் ஹாலில் திரண்டிருந்த மக்களிடம் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் பகிர்ந்துகொண்டனர்.

பல்வேறு பத்திரிகையாளர்களும், மனித உரிமை ஆர்வலர்களும் இணைந்து ஏற்பாடுச் செய்த “பாலிடிக்ஸ் ஆஃப் டெரர்: டார்கெட்டிங் முஸ்லிம் யூத்” பொதுக்கூட்டத்தில் மக்களின் பங்களிப்பும், நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களும் அனைவரது கவனத்தையும் ஈர்த்தன.

தனது மகனின் விடுதலைக்காக கடைசி வரை போராடுவேன் என சவூதியில் வைத்து கைது செய்யப்பட்ட பீகாரைச் சார்ந்த இளம் பொறியாளர் ஃபஸீஹ் மஹ்மூதின் தாயார் அரசு பள்ளிக்கூட தலைமையாசிரியை அம்ர் ஜமாலின் உறுதிப்பூண்ட உரையுடன் நிகழ்ச்சி துவங்கியது.
 
“உச்சநீதிமன்றத்தில் கூட காரணங்களை மூடி மறைக்கும் அரசு, நீதியை கையில் கொண்டு தராது. நீதிக்காக போராடாமல் எனது மகனின் விடுதலை சாத்தியமில்லை” என அம்ரா ஜமால் கூறினார். அவர் தனது மகனின் அனுபவத்தை விவரித்த அம்ரா ஜமால் பல தடவை மைக் முன்னால் அழுதார்.
 
தனது தந்தையை கைது செய்து 5 மாதங்கள் கழிந்த பிறகும் புலனாய்வு குழுவினரால் எவ்வித ஆதாரங்களையும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க இயலவில்லை என்று இஸ்ரேல் தூதரக கார் குண்டுவெடிப்பில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள மூத்த பத்திரிகையாளர்  செய்யத் அஹ்மத் காஸ்மியின் மகன் ஷவ்கத் காஸ்மி கூறினார்.
 
2003-ஆம் ஆண்டு மும்பை காட்கோபர் குண்டுவெடிப்பு வழக்கில் அநியாயமாக குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள அத்னான் பிலால் முல்லாவின் தந்தை நாஸிர் ஹெச்.முல்லா தனது உரையில்; “வெறுமனே அழுதுக்கொண்டோ, மனுக்கொடுத்துக் கொண்டோ இருந்து எந்த வித பலனும் இல்லை என்பது இவ்வளவு நாட்கள் அனுபவம் என்னை பாடம் கற்று தந்துள்ளது” என்று நாஸிர் கூறினார்.

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhxE3C8NRmY2bb0roOWD6bB0Gu52vJbec853dO5xBBX98jzOnqGw_XqnwG6-1NwpkietAFRzyQ3J0DDA1BpajWe7Wgw7cCEAO5yHoeAgN2QyXXYmMkYJZzS8CaHusT1OmgkMLZTtal_XcRP/s1600/politics-of-terror-targeting-muslim-youths-270x170.jpg

ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் நிகழ்த்திய குண்டுவெடிப்பின் பெயரால் முஸ்லிம் இளைஞர்கள் தற்போதும் வேட்டையாடப்படுவதாக மலேகானில் இருந்து வந்த அப்துற்றஹீம் விவரித்தார்.
 
முஸ்லிம்கள் வேட்டையாடப்படுவதை முஸ்லிம்களின் மட்டும் பிரச்சனையாக கருதக்கூடாது என்றும், அனைத்து பிரிவினரும் இப்போராட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும் என்றும் பிரபல பத்திரிகையாளர் குல்தீஃப் நய்யார் வலியுறுத்தினார்.
 
ப.சிதம்பரம் உள்துறை அமைச்சராக தொடரும் வரை முஸ்லிம்களுக்கு நீதிக் கிடைக்கும் என்பதை எதிர்பார்க்க முடியாது என்று சமூக ஆர்வலர் சுவாமி அக்னிவேஷ் தனது உரையில் சுட்டிக்காட்டினார்.
 
பிஜாப்பூரில் குழந்தைகளை கூட்டுப் படுகொலைச் செய்த சம்பவத்தை நக்ஸல் எதிர்ப்பு போராட்டத்தின் வெற்றி என்று கூறியவர் ப.சிதம்பரம். அரச பயங்கரவாதத்திற்கு எதிராக பழங்குடியினரும், முஸ்லிம்களும் ஒன்றிணைய வேண்டும் என்று அக்னிவேஷ் கூறினார்.
 
எங்கே குண்டுவெடிப்பு நிகழ்ந்தாலும் முஸ்லிம் இளைஞர்களை கைது 
செய்யும் போக்கில் மாற்றம் ஏற்பட வேண்டும். 20 ஆண்டுகள் சிறையில் அடைத்த பிறகு நிரபராதி என்று விடுதலைச் செய்வதில் எவ்வித பலனும் இல்லை என்று காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த ஹனுமந்த ராவ் தனது உரையில் கூறினார்.
 
கைது செய்யும் பொழுது கடைப்பிடிக்க வேண்டிய உச்சநீதிமன்றம் கட்டளையிட்டுள்ள நிபந்தனைகளை முஸ்லிம் இளைஞர்கள் விஷயத்தில் போலீஸ் கடைப்பிடிப்பதில்லை என்று லோக் ஜனசக்தி கட்சியின் தலைவர் ராம்விலாஸ் பஸ்வான் தனது உரையில் குறிப்பிட்டார்.
 
20 கோடி மக்கள் தொகையைக் கொண்ட முஸ்லிம் சமூகம் பீதியில் வாழும் நாட்டில் ஜனநாயகம் பூரணமாகாது என்று சி.பி.ஐ தலைவர் ஏ.பி.பரதன் தனது உரையில் குறிப்பிட்டார்.
 
முஸ்லிம் வேட்டையின் பெயரால் ஆவேசமான உரைகள் அல்ல, சரியான விபரங்களை சேகரித்து அதிகாரிகளை அணுகவேண்டும் என்று டி.ராஜா கூறினார்.
 
இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் வாலைப் பிடித்துக்கொண்டு நடக்கும் அரசு அவர்களின் முஸ்லிம் எதிர்ப்புக் கொள்கையையும் இங்கே இறக்கமதிச் செய்யக் கூடாது என்று மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியைச் சார்ந்த டேனிஷ் அலி கூறினார்.
 
பொதுக்கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்படாவிட்டாலும், மத்திய அமைச்சர் ஃபரூக் அப்துல்லாஹ் நிகழ்ச்சியில் தாமாகவே முன்வந்து கலந்துகொண்டார்.
முஸ்லிம்களுக்கு எதிராக நடக்கும் நீதி மறுப்பைக் குறித்து தனது பேச்சில் விளாசிய ஃபரூக் அப்துல்லாஹ்வை நோக்கி, அவையில் இருந்தோர் கேள்விகளை எழுப்பினர். முஸ்லிம்களுக்கு பிரச்சனைகள் இருப்பதை உங்களுக்கு தெரிவிப்பதற்கு அல்ல, அரசு சார்பாக நீங்கள் பரிந்துரைச் செய்ய விரும்புகின்றீர்கள் என கேள்வி எழுப்பி அவையில் அமளி கிளம்பியது.
நீதி மறுக்கப்பட்ட மக்களின் கோபத்திற்கு பதிலளிக்க ஃபரூக் அப்துல்லாஹ்வால் இயலவில்லை.
 
முஸ்லிம்களுக்கு எதிராக போலீசும், பல்வேறு பாதுகாப்பு ஏஜன்சிகளும் நடத்தும் வேட்டையை நிறுத்த ஐ.மு அரசும், ப.சிதம்பரமும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
 
பொய் வழக்குகளில் சிக்கவைத்து விசாரணை கூட நடத்தாமல் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் நபர்களின் வழக்குகளில் தீர்ப்பினை விரைந்து வழங்க மத்திய அரசும், தொடர்புடைய மாநில அரசுகளும் விரைவு நீதிமன்றங்களை நிறுவ வேண்டும். இத்தகைய வழக்குகளில் நீதிமன்றங்கள் குற்றமற்றவர்கள் என விடுவித்தவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கவேண்டும்.
 
தீவிரவாதத்தின் பெயரால் மத்திய-மாநில புலனாய்வு ஏஜன்சிகள் முஸ்லிம் இளைஞர்களை குற்றவாளிகளாக்குவது குறித்து விசாரணை நடத்த பிரபல நபர்கள் அடங்கிய ஒரு உண்மை கண்டறியும் குழுவை நியமிக்கவேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் பொதுக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
 
இந்நிகழ்ச்சியில் ஆனி ராஜா, சீமா முஸ்தஃபா, முஹம்மது அதீப் எம்.பி, அஜித் ஸாஹி, ஜே.என்.யு.பேராசிரியர் அனுராதா ஸெனோய், இஃப்திகார் ஜீலானி, அமீக் ஜாமி ஆகியோர் கலந்துகொண்டனர்.

- சிந்திக்கவும்

ஆட்சியரின் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையை கண்டித்து பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மாபெரும் கண்டன ஆர்பாட்டம்


                                       பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரின் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையை கண்டித்து அணைத்து இஸ்லாமிய அமைப்புகளும் ஒன்று திரண்டு தமிழ்மாநில ஜமாஅத்துல் உலமா சபையின் தலைவர் மவ்லானா A.E.M அப்துர் ரஹ்மான் ஹஜ்ரத் அவர்கள் தலைமையில்,எதிர்வரும் 17/07/2012 செவ்வாய்க்கிழமை மாலை 3 மணிக்கு பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மாபெரும் கண்டன ஆர்பாட்டம் நடத்துகிறார்கள்.வியாழன், 12 ஜூலை, 2012

பர்மா முஸ்லீம்களுக்கு இழைக்கப்பட்டு வரும் அநீதிகள்


அன்புள்ள உள்ளங்களுக்கு

கடந்த சில வாரங்களாக பர்மா  முஸ்லீம்களுக்கு  இழைக்கப்பட்டு    வரும்  அநீதிகளை பார்த்துக்கொண்டு  கண்ணீர்  வடித்துக்கொண்டு  சும்மா இருக்க முடியவில்லை .இதே ஸ்தானத்தில்  இருபது   வருடங்களுக்கு முன் நாம் இருந்தோம் .சொந்த நாட்டில் சொகுசு வாழ்க்கையில் மூழ்கிக்கிடந்த  நம் முஸ்லீம் அமைச்சர்களே நம்மை திரும்பி பார்க்கவில்லை . நமது பிரச்சினையை சரியான  நேரத்தில் சர்வேதேசப்படுத்தவில்லை .வடக்கில் அகதிகள் அழுத குரலும் கிழக்கே முஸ்லீம்கள் வைத்த ஒப்பாறியும் நமது நாட்டுக்குள்ளேயே  தெற்கிலேயே கேட்டிருக்கவில்லை . அதே அநீதிதான் இன்று  பர்மாவில் நடக்கிறது . கேட்பதற்கு  ஆளில்லை என்ற  துணிவில் ,ஜனநாயகம் போர்த்திவிட்ட பெருமையில்  அப்பாவி முஸ்லீம்கள் புத்த வெறியர்களாலும் ,பொலிசாராலும் ,இராணுவத்தினராலும்  தினம் தினம் படுகொலை செய்யப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள் .


 
இதை எந்த முஸ்லீம் நாடுகளும் அமைப்புகளும்  ,ஏன் நமது நாட்டு முஸ்லீம் அமைச்சர்களும்  கண்டு கொண்டதாக  தெரியவில்லை

பொறுத்தது போதும் . இனியும் பொறுக்க முடியாது

 


இதோ பர்மா முஸ்லீம்களை பாதுகாக்கும் படி ஐ நா செயலாளரை உடனடியாக  கேட்கும் மனு ஒன்றை ஆங்கில மொழியில் எமது இணையம் மூலமாக avaaz .org என்ற சர்வேதேச நிறுவனத்தின் அனுசரணையுடன் உருவாக்கியுள்ளோம் .அந்த மனுவில் பர்மா முஸ்லீம்கள் படும் அவஸ்தைகளையும் ,அல்லல்களையும் ,அநீதிளையும் சுருக்கமாக விவரித்துள்ளோம் . அந்த மனுவில் பர்மா முஸ்லீம்களை பாதுகாக்க ஐ நா உடனியாக தீர்மானம் ஒன்றை உருவாக்க வேண்டும் என்றும் உடனடியாக ஐ நா சமாதனப்படையை கண்காணிப்பில் ஈடுபடுத்த அனுப்ப வேண்டும் என்றும் கேட்டுள்ளோம் .


எனவே தயவு செய்து எமது இந்த முயற்சியை , பர்மா முஸ்லீம்களை பாதுகாக்க எடுக்கப்படும் இந்த முயற்சியை வெற்றி பெற வைப்பது முதலில் அல்லாஹ்வின் புறத்திலும் அடுத்ததாக உங்களின் கைகளிலும் உள்ளது

எனவே இந்த கீழுள்ள லிங்கை அழுத்தி உங்களது பெயரை பதிந்து உங்களது ஆதரவை வெளிப்படுத்துங்கள் இந்த முயற்சிக்கு சுமார் ஆயிரம் கையொப்பங்களை  திரட்டவும் அதன் பின் ஒரு இலட்சத்துக்கு அதை கொண்டு செல்லவும் முடிவு செய்துள்ளோம் . இந்த முயற்சிக்கு உங்கள் பங்களிப்பை வழங்குவதோடு இதுபற்றி உங்கள் நண்பர்கள் உறவினர்கள்  ,தெரிந்தொர்களுக்கு தெரியப்படுத்துங்கள் .

http://www.avaaz.org/en/petition/Protection_of_Muslims_in_Myanmarஎல்லாம் வல்ல அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக

ரஹீம்ராஜி

-srilankamuslimsworld.com

ஆஸ்ரா கர்க் அதிரடி ஆரம்பம்!

இவரை போல மாவட்டத்துக்கு ஒரு அதிகாரி இருந்தா அருமையா இருக்கும்

திருப்பூர் திகுதிகு

ஜூனியர் விகடனில் இருந்து...

மதுரையில் பல மாற்றங்களை உண்டாக்கிய எஸ்.பி. ஆஸ்ரா கர்க் இப்போது திருப்பூரில். 'எந்த ஊராக இருந்தால் என்ன.. எல்லாம் எனக்கு ஒன்றுதான்!’ என்று வந்த வேகத் திலேயே திருப்பூரிலும் சாட்டையைச் சுழற்ற ஆரம்பித்துவிட்டார்.

அதிரடி 1:

பொறுப்பை ஏற்றுக்கொண்டதும் போலீஸாரை அழைத்து மீட்டிங் போட்டார் ஆஸ்ரா கர்க்.

''திருப்பூர்ல நிறையக் குழந்தைத் தொழிலாளர்கள் இருக்காங்கன்னு எனக்கும் தெரியும்; உங்களுக்கும் தெரியும். ஏதோ சில காரணங்களுக்காக நீங்க இந்த விஷயத்தில் அக்கறை காட்டாம இருக்கீங்க. ஆனா, என்னோட முதல் டார்கெட்டே குழந்தைத் தொழிலாளர்களை மீட்பதுதான். இன்னும் உங்களுக்கு ஒரு மாசம் டைம். அதுக்குள்ள உங்க லிமிட்ல குழந்தைத் தொழிலாளர்கள் இல்லாமப் பார்த்துக்கோங்க...'' என்றாராம். மீட்டிங் முடிந்ததும் ஒரு லிஸ்ட்டைக் கையில் வைத்துக்கொண்டு கிளம்பினார். அந்த லிஸ்ட்டில் இருந்த பேக்கரி, டீக்கடை, வசதியானவர்களின் வீடுகளுக்குப் போனவர், அங்கே வேலைக்கு அமர்த்தப்பட்டிருந்த 30 குழந்தைத் தொழிலாளர்களை உடனே மீட்டு, முதல் அதிரடிக் கணக்கைத் தொடங்கினார்.

அதிரடி 2:

கடந்த வாரம் போக்குவரத்து ஆய்வாளர் திருநாவுக்கரசு, மணல் ஏற்றி வந்த ஒரு லாரி ஓட்டுநரிடம் 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். பணத்தைப் பக்கத்தில் உள்ள ஒரு கடையில் தரச் சொல்லி இருக்கிறார். லாரி ஓட்டுநர் உடனடியாக எஸ்.பி-க்குத் தகவல் சொல்ல, அடுத்த அரை மணி நேரத்தில் ஸ்பாட்டுக்கு வந்த எஸ்.பி., மளிகைக் கடைக்காரரிடம் விசாரணை செய்தார். மளிகைக் கடைக்காரர் பயத்தில் உண்மையைச் சொல்லிவிட்டார். ஆய்வாளர் திருநாவுக்கரசுவை அங்கேயே சஸ்பெண்ட் செய்துவிட்டுக் கிளம்பினார். 'உங்க லிமிட்ல இருக்கும் கான்ஸ்டபிள் தொடங்கி இன்ஸ் பெக்டர் வரைக்கும் யாரும் லஞ்சம் வாங்காமப் பார்த்துக்கவேண்டியது உங்க பொறுப்பு. உங்களை நான் பார்த்துக்குவேன்...’ என்று டி.எஸ்.பி-களுக்கு புதிய உத்தரவு போட்டிருக்கிறாராம் ஆஸ்ரா கர்க்.

அதிரடி 3:

உடுமலைப்பேட்டையைச் சேர்ந்தவர் அங்கயற் கண்ணி. இவரது கணவர் மணிவண்ணனுக்கு சுமதி என்ற பெண்ணோடு கள்ளத் தொடர்பு இருந்திருக்கிறது. சுமதியுடன் சேர்ந்துகொண்டு தன்னைக் கணவர் கொடுமைப்படுத்துவதாக உடுமலை காவல் நிலையத்தில் புகார் செய்தார் அங்கயற்கண்ணி. உடனே மணிவண்ணன் மற்றும் சுமதி மீது எஃப்.ஐ.ஆர். பதிவு செய்தனர் போலீஸார். முன் ஜாமீன் கேட்டு உயர் நீதிமன்றத்தில் மனு போட்டுள்ளார் மணிவண்ணன்.

அதே நேரம் தன்னைக் கைது செய்யாமல் இருக்கவும் சுமதியை இந்த வழக்கில் இருந்து விடுவிக்கவும் போலீஸை நாடி இருக்கிறார். இதற்காக பணம் கேட்டதாகவும் தகவல் பரவியது. ''உதவி ஆய்வாளர் பூர்ணிமாவிடம் பேரம் பேசி, இரண்டு லட்ச ரூபாய் வரை மணிவண்ணன் கொடுத்திருக்கிறார். அதன் பிறகும் பூர்ணிமா மேலும் பணம் கேட்டு நச்சரித்திருக்கிறார். இதனால் கடுப்பான மணிவண்ணன் நேராக எஸ்.பி-யிடமே முறையிட்டார். பணத்தோடு மணிவண்ணனை அந்த ஸ்டேஷனுக்கு அனுப்பிவிட்டு, பின்தொடர்ந்து காத்திருந்தார் கர்க்.'' என்றும் சொல்லப்படுகிறது.

மணிவண்ணன் ஸ்டேஷனுக்குள் போய் எஸ்.ஐ. பூர்ணிமாவுக்குப் பணத்தைக் கொடுத்தார். ஸ்டேஷனுக்கு வெளியே ஜீன்ஸ், டி-ஷர்ட்டில் காத்திருந்த எஸ்.பி-யை யாருக்கும் அடையாளம் தெரியவில்லை. பணத்தைக் கொடுத்து விட்டு மணிவண்ணன் வெளியே வந்ததும், ஸ்டேஷனுக்குள் நுழைந்த எஸ்.பி., ''உன்கிட்ட மணிவண்ணன் கொடுத்த பணத்தை எடு...'' என்று கேட்டிருக்கிறார். உடனே, ''நீ யாரு..?'' என்று எகிறி இருக்கிறார் பூர்ணிமா.

''நான்தான் உங்க மாவட்ட எஸ்.பி., இப்போ எடும்மா'' எனக் கேட்க, பூர்ணிமாவுக்கு மயக்கம் வராத குறை. பணத்தைப் பறிமுதல் செய்து, பூர்ணிமாவை உடனடியாக சஸ்பெண்ட் செய்தார்.

ஆஸ்ரா கர்க்கிடம் பேசினோம். ''தப்பு செஞ்சா யாரா இருந்தாலும் தண்டனை அனுபவிச்சுத்தான் ஆகணும். போலீஸா இருந்தாலும் விட மாட்டேன். பொதுமக்கள் எந்த நேரத்திலும் என்னைத் தொடர்புகொள்ளலாம். ரவுடிகளோ, காவல் துறை யினரோ அடாவடி செய்தால் அவர்கள் மீது கடுமையான நடவ டிக்கை எடுக்கப்படும். சர்வீஸ் பண்ணத்தானே இந்த வேலைக்கு வந்திருக்கோம்...'' என்று கேட்கிறார் கர்க்.

அசத்துங்க!

- ம.சபரி

உலகை ஏமாற்றிய அமெரிக்காவாஷிங்டன்,செப்.12:உலக வர்த்தகமையம் நிலைக்கொண்டிருந்த அமெரிக்காவின் நியூயார்க் நகர இரட்டைக் கோபுரம் தகர்க்கப்பட்டது விமானத் தாக்குதலில் அல்ல என ஆய்வறிக்கை ஒன்று கூறுகிறது.

வாஷிங்டனில் உலகவர்த்தக மையம் தகர்க்கப்பட்ட ஒன்பதாவது நினைவுத் தினம் அனுஷ்டிக்கும் வேளையில் ஆர்கிடெக்ட்ஸ் அண்ட் என்ஜினீயர்ஸ் ஃபார் 9/11 ட்ரூத் என்ற அமைப்பு உலக வர்த்தகமையம் தகர்க்கப்பட்டது குண்டுவெடிப்பின் மூலம்தான் என்ற ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது.

2001 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 ஆம் தேதி அன்று நடந்த தாக்குதலில் 3 ஆயிரம் பேர் கொல்லப்பட்டிருந்தனர். இச்சம்பவம் தொடர்பாக வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ விளக்கம் தவறு என்பதற்கான உறுதியான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக அவ்வமைப்பின் தலைவர் ரிச்சார்ட் காஜ் தெரிவித்துள்ளார்.


கட்டிடங்களின் மீது விமானங்கள் மோதவில்லை எனவும், அக்கட்டிடங்களில் நடந்த குண்டுவெடிப்பினால்தான் உலக வர்த்தக மையம் தகர்ந்தது என காஜ் கூறுகிறார்.


உலக வர்த்தக மையம் ஸ்தாபிக்கப்பட்டிருந்த இடத்திலிருந்து உருகியநிலையிலான உலோகச் சிதறல்கள் கிடைத்துள்ளன. விமான எரிபொருள் இரும்பையோ அல்லது ஸ்டீலையோ உருக்குவதில்லை. ஆதலால் கட்டிடத்தின் உள்பகுதியிலிருந்து ஏதேனும் பொருள்தான் கட்டிடம் தகர்வதற்கு காரணமாகயிருக்கும்-அறிக்கை கூறுகிறது.

விமானம் மோதாமலேயே 6.5 வினாடிகளில் கட்டிடங்கள் தகர்ந்தது எப்படி? என்பதுக் குறித்து முறையான விசாரணை நடத்தவேண்டும் என 600 ஆர்கிடெக்டுகள் மற்றும் என்ஜினீயர்கள் அடங்கும் அவ்வமைப்பு கோரியுள்ளது.


உலக வர்த்தகமையம் தகர்க்கப்பட்ட இடத்திலிருந்து கிடைத்த உலோக சிதறல்களில் நானோ தெர்மிட்டிக் ஒருங்கிணைப்பின் சிதறல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது கட்டிடத்தில் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளதற்கு ஆதாரம் எனவும் அவ்வமைப்பு கூறுகிறது.


செய்தி:
தேஜஸ் மலையாள நாளிதழ்

எல்லோரும் மீன் சாப்பிட வேண்டும்
          நாம் சத்துள்ள உணவுகளை சாப்பிட வேண்டும் . அப்போதுதான் திடகாத்திரமாக நோய் நொடியின்றி உயிர் வாழலாம் . காய்கறிகள் , பழங்கள், மீன் உணவுகள் சத்துள்ள உணவுகள் . அவற்றை நாம் நமது உணவில் சேர்த்து கொள்ள வேண்டியது அவசியம் . சிறு பிள்ளைகள் முதல் பெரியோர்கள் எல்லோரும் மீன் சாப்பிடலாம் .

மீன் நல்ல உணவாவதோடு, நோய்களுக்குக், குறிப்பாக இதய நோய்களுக்கு ஏற்ற மருந்தாகவும் செயல்படுகின்றது. வாரத்திற்கு இருமுறை மீன் உணவுகளுடன் கூடிய உணவு முறைகளைக் கடைப்பிடிப்போருக்கு, இதயத்தாக்கு வருவதற்கான வாய்ப்பு
பாதியாகக் குறைக்கப்படுகிறது. எனவே மீன் உணவுகளை தவிர்க்காதீர்கள் .

ஒட்டி மீன் , சீலா மீன் , விள மீன் , நெத்தலி , சூவாப்பாரை , பாரை, இப்படி பல மீன் இனங்கள் இருக்கின்றன . மீன் சாப்பிடுவது இதய நோயாளிகளுக்கு நல்லது. பனிப்பிரதேசத்தில் வாழும் எக்ஸிமோ மக்கள் கொழுப்பு சேர்ந்த உணவுப் பொருட்களைக் கணக்கு வழக்கில்லாமல் சாப்பிடுவார்களாம். எனவே, கொலஸ்ட்ராலுக்குப் பஞ்சம் இல்லை. நார்ச்சத்துள்ள உணவைக் குறைவாகவே உண்கிறார்கள். அப்படியும் அவர்களுக்கு அவ்வளவாக இதயநோய்கள் வருவதில்லையாம். எக்ஸிமோக்கள் சாப்பிடும் மீன்கள்தான் அவர்களை இதய நோயாளிகளாக்காமல் காப்பாற்றி வருகிறதாம் என்றால் பாருங்களேன் .

வளர்ந்த நாடுகளில் மட்டுமல்லாது, வளர்முக நாடுகளிலும் நிகழ்கின்ற மரணங்களுக்கு இதயத்தாக்கும், மூளைத்தாக்குமே பெரும்பாலும் காரணமாக இருப்பது தெரியவந்துள்ளது. மூளைத் தாக்கினால் இறப்பவர்களை விட இதயத் தாக்கினால் இறப்பவர்களின் எண்ணிக்கையே மிகுதியாக உள்ளது. மீன் மற்றும் மீன் பொருள்களை உணவில் கணிசமாகச் சேர்த்துக் கொள்வதன் மூலம் இவ்வகை இதயத் தாக்குகளைத் தவிர்க்கலாம் என்பதும் அண்மைக்கால ஆய்வுகளின் மூலம் தெரியவருகிறது.

மீன் உணவுகள் எமக்கு விட்டமின் சத்துக்கள் நிறைந்தவை . பாலூட்டும் தாய்மார்கள் கட்டாயம் மீன் சாப்பிட வேண்டும் . 100 - 200 கிராம் அளவு மீனை வாரம் இரண்டு அல்லது மூன்று முறை உணவில் சேர்த்துக் கொண்டால் அது இதய நோய்களைத் தவிர்க்க உதவும். மீன் சாப்பிடப் பிடிக்காதவர்கள், மீன் எண்ணெய் மாத்திரைகளை தக்க மருத்துவரின் ஆலோசனைப்படி எடுத்துக் கொள்ளலாம்.

மீன்களில் காணப்படும் துத்தநாகம், செலினியம், பாஸ்பரஸ் போன்ற மணிச்சத்துக்கள் மூளை வளர்ச்சிக்கும், பொட்டாஷியம் இரத்த அழுத்தத்தை ஒரே சீராக வைத்திருப்பதற்கும் கல்சியம் வலுவான எலும்பு வளர்ச்சிக்கும், அயோடின், உடலின் வளர்சிதை மாற்றத்தைக் கட்டுப்படுத்தவும் துணை நிற்கின்றன. இவை தவிர, சருமப் பாதுகாப்பளித்து, இரத்தவோட்டைத்தைத் தூண்டி செயல்படும் விட்டமின் E மீன்களில் தேவையான அளவு அடங்கியுள்ளது.

இதயநோய் காரணமாக உடற் பருமனைக் குறைக்க விரும்புவோருக்கு ஏற்ற வகையில் குறைந்த கலோரித் திறனையே மீன் தருகிறது. 100 கிராம் எடையுள்ள மீன் உணவை உண்கிற போது, கிடைக்கின்ற கலோரிகள் 100 -க்கும் குறைவானதுவே. மேலும் 100 கிராம் மீன் உண்ணும்போது கிடைக்கக்கூடிய கொழுப்பு 0.1 இருந்து 0.2 வரை மட்டுமே. நாம் ஏன் மீன்களை சாப்பிட வேண்டும் என்று விளங்குகிறது தானே . கல்சியம் குறைபாடு உள்ளவர்களுக்கு கூட மீன்கள் மிகவும் பயன் அளிக்கின்றன . எலும்பு வளர்ச்சிக்கும் பயன்படுகிறது .

நாம் மீன் சாப்பிடுவதால் பல பயன்களை அடைகிறோம் . உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது. சருமநோய் வராமல் தடுக்கிறது. முடக்குவாதம், மூட்டுப்பிடிப்பு போன்ற எலும்பு தொடர்புடைய கோளாறுகளை நிவர்த்தி செய்கிறது. மூளை வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. அனைத்திற்கும் மேலாக, இதயத்தாக்கு வராமல் காக்கிறது. பார்த்தீர்களா மீன் உண்பதால் நாம் பெறும் நன்மை என்னவென்று.


ஒவ்வொருவரும் தங்கள் உணவில் சரியான விகிதத்தில் மீன் பொருட்கள் சேருமாறு கவனமுடன் திட்டமிடுவது அவசியம். இதன்மூலம் இதய நோய்கள் வராமல் காத்துக்கொள்ள முடியும். மேலும் மீன் இதயத்திற்கேற்ற அரிய உணவாக உலகெங்கிலும் உள்ள விஞ்ஞானிகளாலும், மருத்துவர்களாலும் ஒப்புக்கொள்ளப்பட்டிருக்கிறது.மீன் எண்ணெயில் உள்ள ‘ஒமேகா_3’ என்ற பொருள் கொலஸ்ட்ராலைக் குறைப்பதோடு ரத்தம் உறையாமலும் பார்த்துக் கொள்கிறது. ரத்தம் சீராகப் பாயவும் உதவி செய்கிறது. ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது.

தாவர எண்ணெய்யையும், மீன் எண்ணெய்யையும் ஒப்பீட்டு நடத்தப்பட்ட ஒரு ஆய்வின் மூலம், நான்கு வாரங்கள் மீன் எண்ணெய் உட்கொண்டவர்களின் கொலஸ்ட்ரால் அளவு அதே நான்கு வாரங்கள் தாவர எண்ணெய் எடுத்துக் கொண்டவர்களுடைய கொலஸ்ட்ரால் அளவை விட 5 மடங்கு குறைவாக இருந்தது கண்டறியப்பட்டுள்ளது. மீன்களின் ஒமேகா 3 எனப்படும் உயர்அடர்த்தி லிப்போ புரோட்டீன் மிகுந்தும் தாழ் அடர்த்தி புரோட்டீன் குறைந்தும் இருப்பதே இதற்குக் காரணம் எனவும் தெரியவந்துள்ளது.

இதய நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, மீன் எண்ணெய் அடங்கிய பொருள்கள் பெரும்பாலும் பரிந்துரைக்கப்படுகின்றன. என்றாலும் மீன்களின் கல்லீரலில் இருந்து எடுக்கப்படும் காட்லிவர் ஆயில் மற்றும் ஷார்க் லிவர் ஆயில் போன்றவைகளில் உடலுக்கு நன்மை அளிக்கும் செறிவுறா கொழுப்பு அமிலங்களுடன் விட்டமின்களும் அடங்கியுள்ளன. மீன்களின் தசைகளிலிருந்து பெறப்படும் எண்ணெயில் இவ்விட்டமின்கள் மிகுதியாக இருப்பதில்லை. எனவே இதய நோயுற்றவர்கள்
இவ்வகை மீன் எண்ணெயை உட்கொள்வது நல்லது.

எனவே மீன்கள் எல்லோருக்கும் நல்லது . சத்துக்கள் நிறைந்தது . நோய்கள் வராமல் தடுக்க கூடியது . சத்துள்ள மீன் வகைகளை உண்டு வாழுங்கள் . எல்லோரும் மீன் உண்பதை தவிர்க்காமல் மீன் உணவுகளை உண்ணுங்கள் .

Thanks to
இது பவியின் தளம் .............துளிகள்
http://pavithulikal.blogspot.com/
Posted by மு.ஜபருல்லாஹ்

புதன், 11 ஜூலை, 2012

டாஸ்மாக் அகற்றணும்

https://encrypted-tbn2.google.com/images?q=tbn:ANd9GcTJCJfr1l1Uzo5mpSToMiBCaoBrk3hi2EGB24Hh92lKyu-N7jc0                         சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா சார்பில் மாவட்ட செயலாளர் சித்திக்பாஷா, பெரம்பலூர் கலெக்டரிடம் கொடுத்த மனுவில் தெரிவித்துள்ளதாவது.

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா வண்ணாரம்பூண்டி கிராமத்தில் டாஸ்மாக் மதுபான கடை இயங்கி வருகிறது. இதற்கு அருகில் பள்ளிக்கூடம், மருத்துவமனை, போலீஸ் ஸ்டேசன், பஸ் ஸ்டாண்ட், கூட்டுறவு வங்கி, புத்தக கடை ஆகியவை உள்ளதால் பொதுமக்கள் வந்து செல்வதற்கு மிகவும் சிரமமாக உள்ளது. எனவே, இந்த கடையை அகற்ற வேண்டும்.

யாசர் அரபாத் மரணத்தில் மர்மம்: உடலை தோண்டு எடுத்து பரிசோதனை செய்ய அனுமதி


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjNfX9F0KnyLp3Xhacsi_QCmqHT0dDtCCnw-GIUa97lgdTRnzIRl3-Qn7TAgctgCX8PcZn7UKLqNEl43R2HRLU_0FPNzrPjVPtolHYHEmwlTNA9XKKPlwZjv_uPcuI2Iy0YccuJJU-doADI/s1600/Yasser-Arafat.jpg2.jpg


                            பாலஸ்தீன தலைவர் யாசர் அரபாத் விஷம் வைத்து கொலை செய்யப்பட்டார் என்ற தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

உடல் நலக்குறைவால் அவதிப்பட்ட யாசர் அரபாத், பாரீசில் உள்ள இராணுவ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

இச்சம்பவம் சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது. தற்போது இவரது சாவில் மர்மம் இருப்பதாக அவரது மனைவி சுஹா அராபத் புகார் தெரிவித்தார். எனவே அவரது உடல் மாதிரிகள் பரிசோதனைக்காக சுவிட்சர்லாந்து நிறுவனத்திடம் வழங்கப்பட்டது.

அந்த நிறுவனம் சமீபத்தில் வழங்கிய தனது அறிக்கையில், அவரது சாவில் மர்மம் இருப்பதாக தெரிவித்தது. அதாவது அவரது உடலில் கதிர்வீச்சு விஷமான பொலேனியம் பரவி இருப்பதாக அறிவித்தது.

எனவே, இவர் விஷம் கொடுத்து கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற சர்ச்சை எழுந்துள்ளது. அது பாலஸ்தீன மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எனவே அவரது சாவின் உண்மை நிலையை அறிய வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். எனவே யாசர் அராபத்தின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு மீண்டும் பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது. அதற்கான அனுமதியை பாலஸ்தீன ஜனாதிபதி மக்மூத் அப்பாஸ் வழங்கியுள்ளார்
.

பெரம்பலூர் கோ- ஆப்டெக்ஸில் பழசுக்கு புதுசு திட்டம் அறிமுகம்

                   பெரம்பலூர் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் பட்டுச்சோலை பழசுக்கு புதுசு திட்டத்தை பெரம்பலூர் கலெக்டர் தரேஷ்அஹமது குத்து விளக்கேற்றி வைத்து முதல் விற்பனையை தொடங்கி வைத்து பேசியதாவது:பெரம்பலூர் மாவட்டத்தில் ஆடி புதுமையை யொட்டி பட்டுச்சோலை பழசுக்கு புதுசு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டம் வரும் 28ம் தேதி வரை அமுலில் இருக்கும். இத்திட்டத்தின் கீழ் நான்கு லட்சம் ரூபாய் விற்பனை செய்திட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

எனவே, வாடிக்கையாளர்கள் தங்களது பழைய பட்டு சேலைகளை கொடுத்துவிட்டு புதிய பட்டு சேலைகளை பெற்றுச்செல்லாம்.இவ்வாறு கலெக்டர் பேசினார்.நிகழ்ச்சியில், கோ-ஆப்டெக்ஸ் மண்டல மேலாளர் (பொறுப்பு) சங்கரநாராயணன், மேலாளர் கனகசபாபதி மற்றும் பலர் பங்கேற்றனர்         
      

நாளை வேலைவாய்ப்பு பயிற்சி முகாம் அனைவருக்கு வேலை உறுதி: கலெக்டர் தரேஷ்அஹமது


21 பேருக்கு பணி நியமன ஆணை

                   புதுவாழ்வு திட்டத்தின் மூலம் தமிழகத்தின் முன்னணி நிறுவனங்களில் நேரடி மற்றும் பயிற்சியோடு கூடிய வேலை வாய்ப்பு முகாம் பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் நாளை காலை 9 மணி முதல் நடக்கிறது.
 
இதில் கேபிடல் சி.என்.சி., கம்பெனியில் சி.என்.சி., ஆப்ரேட்டர் பயிற்சிக்கு எஸ்.எஸ்.எல்.ஸி., +2, ஐ.டி.ஐ., முடித்தவர்களுக்கு 45 நாட்கள் பயிற்சியளிக்கப்படுகிறது. இலவசமாக தங்குமிடம், உணவு, ரூ.4,000 ஊக்கத்தொகை வழங்கப்படும்.பயிற்சி மற்றும் நிரந்தர வேலைவாய்ப்பு பெற்று தரப்படும்.
 
எல் அன்ட் டி கம்பெனியில் சாரம் அமைத்தல் மற்றும் தச்சு பணி, கம்பி கட்டுதல், கொத்தனார், மின் பணியாளர் மற்றும் கம்பியாளர் பயிற்சிக்கு ஐந்தாம் வகுப்பு முதல் ஐ.டி.ஐ., வரை படித்தவர்களுக்கு மூன்று மாதம் பயிற்சி அளிக்கப்படுகிறது. இலவசமாக தங்குமிடம், உணவு, ரூ.2,000 ஊக்க தொகை வழங்கப்படும். அரசு சான்றிதழ் உடன் நிரந்தர வேலைவாய்ப்பு பெற்று தரப்படும்.குளோபல் பிசினஸ் ஏஜென்ஸிஸ் நிறுவனத்தின் மூலம் வெளிநாட்டிலும் வேலைவாய்ப்பு பெற்று தரப்படும்.
 
சென்னை டி.வி.எஸ்., கம்பெனியில் போர்க்லிப்ட் ஆப்ரேட்டர், ஜூனியர் எஸ்.எஸ்.எல்.ஸி., +2, ஐ.டி.ஐ., தேர்ச்சி அல்லது தோல்வியடைந்தவர்களுக்கு 30 நாள் பயிற்சியளிக்கப்படுகிறது. இலவசமாக தங்குமிடம் உணவு, பயிற்சிக்குப்பின் ரூ.5,435- ரூ.6,360 வரை ஊதியத்தில் வேலை பெற்றுத்தரப்படும். எம்.ஆர்.எப்., கம்பெனியில் அப்ரண்டிஸ் பயிற்சிக்கு எஸ்.எஸ்.எல்.ஸி., +2, ஐ.டி.ஐ., தேர்ச்சி அல்லது தோல்வியடைந்தவர்களுக்கு மூன்றாண்டு பயிற்சியளிக்கப்படுகிறது. முதல் வருடம் மாதம் ரூ.5,460 ஊக்கத்தொகையாக வழங்கப்படும். 

ஒவ்வொரு வருடமும் ஊக்கத்தொகை அதிகரிக்கப்படும். சென்னை இன்டிமேட் பேஷன் கம்பெனியில் ஆயத்த ஆடை தயாரிப்பு பயிற்சிக்கு எட்டாம் வகுப்பு முதல் +2 வரை படித்தவர்களுக்கு 30 நாள் பயிற்சியளிக்கப்படுகிறது. இலவசமாக தங்குமிடம், உணவு ரூ.3,500 வரை ஊக்கத்தொகையுடன் நேரடி வேலைவாய்ப்பு வழங்கப்படும்.
 
துவாக்குடி மாநில உணவு மேலாண்மை மையத்தில் உணவு மற்றும் பேக்கரி வகைகள் தயாரித்தல் பயிற்சிக்கு கல்வித்தகுதி எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு 45 நாள் பயிற்சியளிக்கப்படுகிறது. இலவசமாக தங்குமிடம், பயிற்சிக்குப்பின் ரூ.5000 ஊதியத்தில் வேலை பெற்றுத்தரப்படும். 

நிரஞ்சன் நர்சிங் ஹோம் நிறுவனத்தில் பெண்களுக்காக நர்சிங் பயிற்சிக்கு எஸ்.எஸ்.எல்.ஸி., படித்திருக்க வேண்டும்.  

 இப்பயிற்சிக்கு தகுதியுள்ள 18 வயது முதல் 35 வயது வரைவுள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் அனைத்து சான்றிதழ்களின் அசல் நகலுடன் வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்கலாம்.
 
விபரங்கள் அறிய புதுவாழ்வு திட்ட அலுவலகம் 04328-225133, 94880-44623 ஆகிய நம்பரில் தொடர்பு கொள்ளலாம். தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் வேலைவாய்ப்பு உறுதி என பெரம்பலூர் கலெக்டர் தரேஷ்அஹமது தெரிவித்துள்ளார். 

-dinamalar


அரிசி விலையை ஒரு ரூபாய் ஏற்றினால் கூச்சலிடுவதா? நடுத்தர மக்களை கிண்டலடிக்கிறார் சிதம்பரம்                  ""பாட்டில் குடிநீருக்கு, 15 ரூபாய் செலவழிக்க தயாராக இருக்கும் மத்திய தர வகுப்பினர், அரிசிக்கு ஒரு ரூபாய் விலை ஏற்றினால் கூச்சல் போடுகின்றனர்,'' என, மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் விமர்சித்துள்ளார்.

பெங்களூரில் நிருபர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:கொள்முதல் விலையை அதிகரித்ததால், லட்சக்கணக்கான விவசாயிகள் பலன் அடைந்துள்ளனர். அதே நேரத்தில், உணவு பணவீக்கம் அதிகரித்துள்ளது. நாம் ஒவ்வொரு விஷயத்தையும், மத்திய தர வகுப்பினரை கருத்தில் கொண்டே பார்க்க முடியாது. பாட்டில் குடிநீருக்கு, 15 ரூபாய் அல்லது ஐஸ் கிரீமிற்கு 20 ரூபாய் செலவழிக்கத் தயாராக இருக்கும், நம் நாட்டில் உள்ள மத்திய தர வகுப்பினர், அரிசிக்கோ அல்லது கோதுமைக்கோ, கிலோவுக்கு ஒரு ரூபாய் விலை ஏற்றினால், கூச்சல் போடுகின்றனர்.

ஆசிரியர்கள் நியமனம்:
நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில், 500 வகுப்பறைகள் கட்டியது, புதிதாக 6.8 லட்சம் ஆசிரியர்களை நியமித்தது, ஒவ்வொரு நாளும் 11 கோடி குழந்தைகள் பலன் அடையும் வகையில், மதிய உணவு திட்டத்தை அமல்படுத்தியது போன்றவை எல்லாம், மன்மோகன் சிங் அரசின் சாதனைகள். இலவச கட்டாய கல்வியை அமல்படுத்தியது, தேசிய தொழில்நுட்ப நிறுவனம் அமைத்தது போன்றவையும், கல்வித் துறையில் மத்திய அரசு படைத்த சாதனைகள்.
மின் துறையில் கூடுதலாக, 22 ஆயிரம் மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய, மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. புதிதாக எட்டாயிரம் கிராமங்கள் மின்சார வசதி பெற்றுள்ளன. உலகில் தொலை தொடர்பு சந்தையில் இரண்டாவது இடத்தை இந்தியா பிடித்துள்ளது.

நெருக்கடியால் பாதிப்பு:
ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின், முதல் இரண்டு ஆண்டுகளில், பொருளாதார வளர்ச்சி குறிப்பிடத்தக்க அளவில் இருந்தது. ஆனால், கடந்த ஆண்டில், எதிர்பார்த்த வளர்ச்சியை அடைவதில் சிரமம் ஏற்பட்டது. 2008ல் ஏற்பட்ட நிதி நெருக்கடியில் இருந்து இந்தியா தப்பித்து விட்டாலும், ஐரோப்பிய நாடுகளின் பொருளாதார நெருக்கடியால், தற்போது நமக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 2008ல் ஏற்பட்ட நெருக்கடியை விட, ஐரோப்பிய மண்டல நெருக்கடி மிக மோசமானதாக உள்ளது. சீனா மற்றும் சில நாடுகளைப் போல, மிக வேகமாக வளர்ந்து வரும் நாடுகள் பட்டியலில் இந்தியாவும் உள்ளது. விரைவில் மிக உயர்வான வளர்ச்சிப் பாதையை நோக்கி நம் நாடு செல்லும். பிரச்னைகளில் இருந்து மீளும்.

பிரதமர் நடவடிக்கை:
நிதிப் பற்றாக்குறையை கட்டுப்படுத்த, வருவாயை அதிகரிக்கவும், தேவையற்ற செலவு களைக் கட்டுப்படுத்தவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்றார்.

-dinamalar

21 பேருக்கு பணி நியமன ஆணை


21 பேருக்கு பணி நியமன ஆணை


                            மாவட்ட கலெக்டர் கூட்ட அரங்கில், மாவட்ட கலெக்டர் டாக்டர் தரேஸ் அஹமது, தலைமையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.

மகளிர் திட்டத்துறையின் மூலம் இளைஞர் திறன் வளர்த்தல் பயிற்சியின் கீழ் 30 நபர்களுக்கு ஆடை வடிவமைத்தல் பயிற்சி பெரம்பலூர் ஏ.டி.டீ.சி பயிற்சி நிறுவனம் மூலம் வழங்கப்பட்டது. இவர்களில் 21 நபர்களுக்கு மாதம் ரூ.4,000 ஊதியத்தில் பெரம்பலூரில் செயல்பட்டு வரும் ஆயத்த ஆடை தயாரிப்பு முன்னணி நிறுவனங்களான வி.ஆர்.பி கார்மெண்ட்ஸ், ஸ்ரீரெங்கா கார்மெண்ட்ஸ் ஆகிய நிறுவனங்களில் வேலைக்கான உத்தரவுகளை மாவட்ட கலெக்டர் வழங்கினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சுப்பிரமணியன், மாவட்ட வழங்கல் அலுவலர் மீனாட்சி சுந்தரம், மகளிர் திட்ட அலுவலர் கன்னியாகுமரி, மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
பொது இடங்களில் அநாகரீகமாக நடந்து கொள்ளும் ஜோடிகளை கைது செய்ய முடிவு: சென்னை போலீஸ் நடவடிக்கை

பொது இடங்களில் அநாகரீகமாக நடந்து கொள்ளும் ஜோடிகளை கைது செய்ய முடிவு: சென்னை போலீஸ் நடவடிக்கை


                         பூங்கா, கடற்கரை மற்றும் பொழுதுபோக்கு இடங்களுக்கு வரும் காதலர்கள், இளம் ஜோடிகள், கள்ளக்காதல் ஜோடிகள் மற்றவர்களைப் பற்றி கவலைப்படாமல், அநாகரீகமாக நடந்து கொண்டு, சங்கடங்களை ஏற்படுத்துகின்றனர்.

இந்த இடங்கள் தவிர, பஸ்நிலையம், ரெயில் நிலையம், சினிமா தியேட்டர்கள் போன்ற இடங்களிலும் அத்துமீறல்கள் நடக்கின்றன. பொது இடங்களில் அநாகரீகமாக நடந்து கொள்பவர்களை எச்சரிக்கவும், தேவை ஏற்பட்டால் கைது செய்யவும் போலீசார் முடிவு செய்து, நடவடிக்கையிலும் இறங்கியுள்ளனர்.

இதற்காக 6 அதிகாரிகளை கொண்ட போலீஸ் குழு அமைக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் பொது இடங்களில் அநாகரீகமாக அன்பை வெளிப்படுத்திய 500 ஜோடிகளை போலீசார் பிடித்தனர். அவர்களில் சிலர் மீது, பொதுமக்களுக்கு இடையூறாக நடந்து கொண்டதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மற்றவர்கள் எச்சரித்து அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதுபோன்ற செயல்களை வளரவிடாமல் தடுக்க, தங்களது நடவடிக்கையை இறுக்க போலீசார் தீர்மானித்துள்ளனர்.


பெரம்பலூர் மாவட்டத்தில் எஸ்.பி, டிஎஸ்பி நியமிக்கப்படுவார்களா மக்கள் எதிர்பார்ப்பு

                   பெரம்பலூர் மாவட்டத்தில் எஸ்பி, டிஎஸ்பி, 3 இன்ஸ்பெக்டர் பணியிடம் காலியாக உள்ள நிலையில் மேலும் 2 இன்ஸ்பெக்டர்கள் பதவி உயர்வு பெற்று சென்றுள்ளனர். இதனால்  குற்றச்செயல்கள் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதாக பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர், குன்னம், மங்களமேடு, பாடாலூர், அரும்பாவூர், மருவத்தூர், டி.களத்தூர், கை.களத்தூர் என 9 போலீஸ் ஸ்டேஷன்கள் உள்ளன. இதுதவிர ஒரு அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷன், மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸ் ஸ்டேஷன்கள் உள்ளன. இந்த 9 போலீஸ் ஸ்டேஷன்களும் பெரம்பலூர் டிஎஸ்பி சரகத்தில் வருகின்றன. இதில் பெரம்பலூர், குன்னம், பாடாலூர், அரும்பாவூர், மங்களமேடு ஆகியவை இன்ஸ்பெக்டர் தலைமையிலும், மற்ற 3 போலீஸ் ஸ்டேஷன்களும் சப்இன்ஸ்பெக்டர் தலைமையிலும் இயங்குகின்றன.

பெரம்பலூர் எஸ்பியாக இருந்த ரூபேஸ்குமார் மீனா கடந்த 2 மாதத்துக்கு முன் திருவள்ளூர் மாவட்டத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இங்கு வேறு யாரும் எஸ்பியாக நியமிக்கப்படாத நிலையில் திருச்சி எஸ்பி லலிதா லட்சுமிக்கு பெரம்பலூர் எஸ்பி பொறுப்பு கூடுதலாக வழங்கப்பட்டது. அவர் அடிக்கடி பெரம்பலூர் வந்து செல்ல முடியாது என்பதால் டிஎஸ்பியாக உள்ள சிவக்குமார் தான் பொறுப்புகளை கவனித்து வந்தார். அவரும் கடந்த 30ம் தேதியுடன் ஓய்வு பெற்றுவிட்டார். இதனால் திருச்சி குற்றப்பதிவேடுகள் பிரிவு டிஎஸ்பி பாலசுப்பிரமணியன் பெரம்பலூர் டிஎஸ்பி பொறுப்பை கூடுதலாக கவனித்து வருகிறார்.

இந்நிலையில் பெரம்பலூர் சிறப்பு பிரிவு இன்ஸ்பெக்டராக இருந்த விவேகானந்தன் டிஎஸ்பியாக பதவி உயர்வு பெற்று தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டுக்கும், மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் டிஎஸ்பியாக பதவி உயர்வு பெற்று திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டைக்கும் சென்றுவிட்டனர்.

மேலும் பெரம்பலூர் இன்ஸ்பெக்டர் மயில்சாமி திருச்சிக்கு பணியிட மாறுதல் செய்யப்பட்டும், இங்கு நியமிக்கப்பட்ட இன்ஸ்பெக்டர் சர்புதீன் இன்னும் பொறுப்பேற்கவில்லை.

இதனால் மயில்சாமி பெரம்பலூரிலேயே தொடர்ந்து பணியாற்றி வருகிறார். அத்துடன் குன்னத்தில் பெண் தற்கொலை வழக்கில் இன்ஸ்பெக்டர் சுப்பையன் காத்திருப்போர் பட்டியலில் உள்ளதால், அந்த பொறுப்பையும் மயில்சாமியே கவனித்து வருகிறார். மேலும் மங்களமேடு இன்ஸ்பெக்டர் செல்வம், திருவண்ணாமலை மாவட்டத்துக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இதனால் பெரம்பலூர் மாவட்டத்தில் மொத்தமுள்ள 5 இன்ஸ்பெக்டர் பணியிடங்களில் பாடாலூர் சோலைமுத்து, அரும்பாவூர் தங்கராசு ஆகியோர் மட்டுமே தற்போது பணியில் உள்ளனர். மாவட்டத்தில் எஸ்பி முதல் இன்ஸ்பெக்டர் வரை முக்கிய பணியிடங்கள் அனைத்துக்கும் பொறுப்பு அதிகாரிகளே நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதனால் இந்த பகுதியில் திருட்டு, வழிப்பறி போன்ற சம்பவங்கள் மேலும் அதிகரித்துவிடும் என்று பொதுமக்கள் அஞ்சுகின்றனர். எனவே பெரம்பலூருக்கு எஸ்பி, டிஎஸ்பிக்களை நியமித்து அரசு உத்தரவிட வேண்டுமென இப்பகுதி மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

-dinakaran

சுவிஸ் வங்கிகளில் இந்தியர்கள் பதுக்கிய கருப்பு பணம் ரூ.12,700 கோடி

                       சுவிஸ் வங்கிகளில் இந்தியர்கள் பதுக்கியுள்ள கருப்பு பணத்தின் மதிப்பு ரூ.12,700 கோடி என தகவல் வெளியாகி உள்ளது. இந்தியர்களின் கருப்பு பணம் சுவிஸ் வங்கிகளில் பதுக்கப்பட்டுள்ளதாகவும் அதை இந்தியா கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பா.ஜ. உட்பட பல கட்சிகள் மற்றும் அமைப்புகள் கோரி வருகின்றன. இதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசும் உறுதி அளித்துள்ளது. இந்நிலையில், சுவிஸ் வங்கிகளில் உள்ள இந்தியர்களின் பணம் ரூ.12,700 கோடி என்று சுவிஸ் வங்கிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இது சுவிஸ் வங்கிகளில் வெளிநாட் டினரின் மொத்த முதலீட்டில் 0.14% ஆகும். 

இதனிடையே, உலகம் முழுவதும் பல நாடுகளிலும் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதால் கடந்த 4 ஆண்டுகளில் சுவிஸ் வங்கிகளில் வெளிநாட்டினரின் முதலீடு  ரூ.20 லட்சம் கோடி குறைந்துள்ளது. கடந்த 2011ம் ஆண்டு இறுதியில் வெளிநாட்டினரின் மொத்த முதலீட்டில் 51 சதவீதம் குறைந்துள்ளது. கடந்த 4 ஆண்டுகளில் இது மிகவும் குறைவு. சுவிஸ் வங்கிகள் சங்கம் தெரிவித்துள்ள தகவல்படி, 2011ம் ஆண்டு இறுதியில் வங்கிகளில் உள்ள மொத்த சொத்து மதிப்பு ரூ.302 லட்சம் கோடி. இதில் 51% வெளிநாட்டு முதலீட்டாளர்களின் பணம்.

- dinakaran.com

திங்கள், 9 ஜூலை, 2012

சீக்கிய சாம்ராஜ்யத்தை இந்தியாவில் அமைக்க வேண்டும் என்பதுதான் காலிஸ்தான் தீவிரவாத இயக்கத்தின் முக்கிய நோக்கம்!!                                  இந்தியாவிற்கு எதிராக இந்தியாவிற்கு உள்ளும் இந்தியாவிற்கு வெளியேயும் செயல் படும் சீக்கிய தீவிரவாத அமைப்புகள் .அதில் முக்கியமானது பப்பர் கல்சா .பயங்கரமான தாக்குதல் திட்டங்களை நிறைவேற்றும் தீவிரவாத எண்ணம் கொண்ட இந்த அமைப்புகளின் செயல் பாடுகள் வெளி நாட்டு தீவிரவாத இயங்கங்களோடு சேர்ந்து இந்தியார்விற்கு எதிராக கைகோர்த்து இருக்கிறார்கள் என்று வெளிநாட்டு உளவு அமைப்புகள் இந்தியாவை எச்சரித்து உள்ளனர் .

இந்தியர்களான சீக்கியர்கள் தம் நாட்டு சொந்த கொடியை எரிக்கும் அளவிற்கு அவர்களுக்கு இன வெறியை ஏற்றி இந்த தீவிரவாத அமைப்புகள் மூளை சலவை செய்து வருகின்றன .இந்தியாவில் பாகிஸ்தான் கொடியை எரித்தும் பாகிஸ்தானில் இந்தியா கொடியை எரித்தும் நாம் மீடியாக்களில் பார்த்து இருப்போம் சொந்த நாட்டில் சொந்த கொடியை எரிக்கும் இவர்களை பற்றி என்றாவது அக்கறையோடு செய்திகள் வெளியிட்டதுண்டா? இந்த செய்திகளை நம் செய்தி நிறுவனங்கள் அரசியல் காரணங்களுக்காக இருட்டடிப்பு செய்கின்றனர்.

இந்தியப் பிரிவினை நடந்தபோது, மத அடிப்படையில் ஒருங்கிணைந்த பஞ்சாப் இரண்டாகப் பிரிக்கப்பட்டு ஒரு பகுதி இந்தியாவுக்கும், இன்னொரு பகுதி பாகிஸ்தானுக்கும் போனது.

ஒருங்கிணைந்த பஞ்சாப் மாநிலத்தில், சீக்கியர்கள் அப்போது பெரும்பான்மை வகுப்பினராக இல்லை. இந்துக்கள்தான் பெரும்பான்மையினராக இருந்தனர்.

பஞ்சாப் பிரதேசத்தில் இருந்த முக்கிய மூன்று மதத்தினரான இஸ்லாமியர்கள், இந்துக்கள், சீக்கியர்களில் லூதியானா மாவட்டத்தில் மட்டும்தான் சீக்கியர்கள் பெரும்பான்மையினராக இருந்தனர்.

இந்த நிலையில் பிரிவினைக்காக இந்துக்களையும், சீக்கியர்களையும் ஒரே குழுவாக அறிவித்தது வெள்ளையர் அரசு.1909ம் ஆண்டு மின்டோ - மார்லி சீர்திருத்த குழுவிடம் இஸ்லாமியர்களும், சீக்கியர்களும் பல்வேறு கோரிக்கைளை அளித்தனர். அப்போது முஸ்லீம்கள் பாகிஸ்தான் தனி நாடு கோரிக்கையை வலியுறுத்தினர்.

அப்போதுதான் முதல் முறையாக பாகிஸ்தான் என்ற நாட்டை முஸ்லீம்களுக்காக உருவாக்கினால், அதே பாணியில் சீக்கியர்களுக்காக காலிஸ்தான் என்ற நாட்டை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கையை சீக்கியர்கள் மின்டோ - மார்லி கமிட்டியிடம் முன்வைத்தனர்.

இந்துக்கள், முஸ்லீம்கள், சீக்கியர்கள் ஆகிய மூன்று முக்கிய மதக் குழுக்களுடன் வெள்ளையர் அரசு நீண்ட பேச்சுவார்த்தையை மேற்கொண்டது.

இந்த நிலையில் சீக்கியர்களை சாந்தப்படுத்தும் வகையில், காங்கிரஸ் கட்சி தீர்மானம் கொண்டு வரவிருப்பதாக அறிவித்தார் மகாத்மா காந்தி.

1946ம் ஆண்டு நடந்த கல்கத்தா காங்கிரஸ் மாநாட்டின்போது, காந்தியின் உறுதிமொழியை முன்மொழிந்தார் நேரு. மேலும், சீக்கிய மக்கள் தங்களது பகுதியில் சுயாட்சி அதிகாரத்தைக் கொண்டிருப்பார்கள் என்றும் கூறினார் நேரு.

இந்த சமயத்தில் 1947ம் ஆண்டு, இந்தியா விடுதலை பெற்ற பின்னர் இந்திய அரசின் மூத்த அதிகாரியாக இருந்து வந்த கபூர் சிங் என்பவர் ஊழல் புகார் சாட்டப்பட்டு டிஸ்மிஸ் செய்யப்பட்டார்.

டிஸ்மிஸ் செய்யப்பட்டவுடன் அவர் துண்டுப் பிரசுரம் ஒன்றை அச்சடித்து பஞ்சாப் முழுவதும் விநியோகித்தார்.

அதில், அப்போதைய பஞ்சாப் ஆளுநர் சந்துலால் திரிவேதி மூலமாக, பிரதமர் நேருவும், துணைப் பிரதமர் சர்தார் வல்லபாய் படேலும், அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கும் ஒரு உத்தரவைப் பிறப்பித்துள்ளனர். அதில், சீக்கியர்களை குற்றப் பரம்பரையினராக கருதுமாறு கேட்டுக் கொண்டுள்ளனர் என்று கூறியிருந்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதேபோல ஜலந்தர் லயல்பூர் கல்சா கல்லூரி முன்னாள் முதல்வர் பிரீத்தம் சிங் கில் என்பவரும், சீக்கியர்களையும், பஞ்சாபி மொழியையும், கலாச்சாரத்தையும், இனத்தையும் அழிக்க இந்துக்கள் பெரும் சதித் திட்டம் தீட்டி நடந்து கொண்டனர் என்று பின்னாளில் குறிப்பிட்டிருந்தார்.

இப்படித்தான் காலிஸ்தான் கோரிக்கை ஆரம்பத்தில் எழுந்து, நடுவில் தளர்ந்து, பின்னர் மீண்டும் வீறு கொண்டெழத் தொடங்கியது.

பஞ்சாப், ஹரியானா, இமாச்சல் பிரதேசம், பஞ்சாபி பேசும் மக்கள் அதிகம் உள்ள குஜராத், ராஜஸ்தான் பகுதிளை உள்ளடக்கிய சீக்கிய சாம்ராஜ்யத்தை அமைக்க வேண்டும் என்பதுதான் காலிஸ்தான் இயக்கத்தின் முக்கிய நோக்கம்.

70களிலும், 80களிலும் இது மாபெரும் இயக்கமாக உருவெடுத்தது. பின்னாளில் அது தீவிரவாத இயக்கமாக மாறிப் போனது.1971ம் ஆண்டு காலிஸ்தான் தனி நாடு கோரிக்கையை தீவிரமாக முழங்கி வந்தவர்களில் முக்கியமானவரான ஜகஜித் சிங் செளஹான், அமெரிக்காவுக்குச் சென்றார். அங்கு நியூயார்க் டைம்ஸ் இதழில் காலிஸ்தான் நாடு உருவாக்கப்படவிருப்பதாக பெரிய விளம்பரம் கொடுத்தார். இதையடுத்து தனி காலிஸ்தான் நாடு போராட்டத்துக்காக நிதிகள் குவியத் தொடங்கின.

1980ம் ஆண்டு ஏப்ரல் 12ம் தேதி இந்திரா காந்தியை சந்தித்தார். அப்போது நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏதும் ஏற்படவில்லை. இதையடுத்து அனந்த்பூர் சாஹிப்பில், தேசிய காலிஸ்தான் கவுன்சிலை உருவாக்கியிருப்பதாக அறிவித்தார்.

அதன் தலைவராக தன்னையும், பொதுச் செயலாளராக பல்பீர் சிங் சந்துவையும் அறிவித்தார். 1980ம் ஆண்டு மே மாதம் செளஹான் லண்டன் சென்றார். அங்கு காலிஸ்தான் உதயமானதாக அறிவித்தார். அதேபோன்ற அறிவிப்பை அமிர்தசரஸில் வைத்து சந்து அறிவித்தார். அத்தோடு, காலிஸ்தான் நாட்டுக்கான தனி ரூபாய் நோட்டு, ஸ்டாம்புகள் ஆகியவற்றையும் வெளியிட்டார் சந்து.

இருப்பினும் செளகான், சந்து மீதோ, அவர்களது அமைப்பின் மீதோ அப்போதிருந்த காங்கிரஸ் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையடுத்து காங்கிரஸின் செயலற்ற போக்கை அகாலிதள தலைவர் லோங்கோவால் கண்டித்தார்.இந்த நிலையில்தான் காலிஸ்தான் போராட்டக்காரர்கள் 80களில் தீவிரவாத செயல்களில் இறங்கினர். இதனால் பஞ்சாபில் ராணுவம் நுழைந்தது. தினசரி குண்டுவெடிப்புகள், கலவரங்கள், வன்முறைச் சம்பவங்கள், ஊரடங்கு உத்தரவுகள் தொடர் கதையாகின.

இந்த நிலையில்தான் 1984ம் ஆண்டு ஆபரேஷன் ப்ளூ ஸ்டார் என்ற ராணுவ நடவடிக்கைக்கு உத்தரவிட்டார் இந்திரா காந்தி. அமிர்தசரஸில் உள்ள பொற்கோவிலில் பிந்தரன்வாலேயும், ஷாபேக் சிங்கும் பெருமளவில் வெடிகுண்டுகளையும், ஆயுதங்களையும் பதுக்கி வைத்திருந்த தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து உள்ளே புகுந்து தாக்குதல் நடத்தி பிந்தரன்வாலேயை சுட்டுக் கொல்ல உத்தரவிட்டார் இந்திரா காந்தி.

அதன்படி, லெப்டினென்ட் ஜெனரல் குல்தீப் சிங் பிரார் தலைமையிலான ராணுவப் படை உள்ளே புகுந்து சரமாரியாக தாக்குதல் நடத்தியது. இதில் பிந்தரன்வாலே சுட்டுக் கொல்லப்பட்டார். அது மட்டுமல்லாமல், கிட்டத்தட்ட 500க்கும் மேற்பட்டோரும் உயிரிழந்தனர். இவர்களில் பலர் அப்பாவி பொதுமக்கள்.

இந்த சம்பவம் இந்திரா காந்தி மீதும், காங்கிரஸ் கட்சியின் மீதும் சீக்கியர்கள் கடும் கோபம் கொள்ள வைத்தது.ராணுவ ரீதியாக பொற்கோவில் தாக்குதல் வெற்றிகரமாக முடிந்தாலும், அரசியல் ரீதியாக அது காங்கிரஸ் கட்சிக்கு பெரும் அடியைக் கொடுத்தது. சீக்கியர்களின் மிகப் புனிதமான இடம் பொற்கோவில். அந்த கோவிலுக்குள் ராணுவத்தை அனுப்பியதும், அதிலும் சீக்கியர்கள் தங்களது புனிதப் பண்டிகையை கொண்டாடிக் கொண்டிருந்த நேரத்தில் அனுப்பியதும், பல நூறு பேரின் ரத்தம் பொற்கோவிலில் சிந்தச் செய்ததும், பொற்கோவிலின் பல பகுதிகள் சேதமடைந்ததும் இந்திரா காந்தியின் மீது சீக்கியர்கள் கடும் கோபமடைய வைத்தது.

சீக்கியர்களின் மனதையும், அவர்களின் புனிதத் தலத்தையும் இந்திரா காந்தி களங்கப்படுத்தி விட்டதாக குமுறல்கள் வெடித்ன.இந்த நிலையில்தான் சீக்கியப் பாதுகாவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார் இந்திரா காந்தி.இதையடுத்து டெல்லியில் வரலாறு காணாத வன்முறை சீக்கியர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டது. அதில் ஆயிரக்கணக்கான சீக்கியர்கள் கொல்லப்பட்டனர்.

இப்படியாக போய்க் கொண்டிருந்த சீக்கிய தீவிரவாதம் 1993ம் ஆண்டு கிட்டத்தட்ட முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது. இருப்பினும் அந்த சமயத்தில், பாகிஸ்தானுக்குள் தப்பிச் சென்ற பப்பர் கல்சா உள்ளிட்ட பல்வேறு தீவிரவாத அமைப்புகள் இன்னும் கூட தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன. ஆனால் 93க்குப் பிறகு பெரிய அளவிலான தீவிரவாத செயல்களில் அவற்றால் ஈடுபட முடியாத நிலை ஏற்பட்டது.

இந்த நிலையில்தான் தற்போது மீண்டும் அங்கு தீவிரவாதம் தலை தூக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகி மத்திய அரசையும், பஞ்சாபையும் கவலை கொள்ளச் செய்துள்ளன.

சபை நாகரீகம் தெரியாத கோபிநாத்..


                             விஜய் டிவியில் திரைப்படத்துறை சார்ந்தவர்களுக்கு விஜய் டிவி சார்பில் விருதுகள் வழங்கு விழா நிகழ்ச்சியின் மறுஒளி பரப்பு நடைபெற்றது.. அதனை இன்று நான் காண நேரிட்டது.. அதில் தொகுப்பாளர்களாக கோபிநாத்தும், சிவகார்த்திகேயனும் பங்கு கொண்டு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர்..

நிகழ்ச்சியினூடே சிவகார்த்திகேயனை கோபிநாத், 'என்னடா சொல்ற, இருடா, வந்தான் போனான்' என்று அடிக்கடிசொல்லிக் கொண்டே இருந்தார்.. திரைப்பட நடிகர் மோகனையும் தேவையில்லாமல் கிண்டலடித்தார்..

எஸ்.பி.பாலசுப்ரமணியம் மற்றும் அவரது மகன் சரண் ஆகியோர் விருதினைப் பெற மேடைக்கு ஏறினர்.. எஸ்.பி.பி தன் மகனை 'அவர்' என்றே அழைத்தார். அதேபோன்று வைரமுத்துவும் அவரது மகனும் மேடைக்கு ஏறினர்.. வைரமுத்துவும் தன் மகனை 'அவர்' என்றே அழைத்தார்..

நண்பர்களாக இருந்தாலும், அப்பா, பிள்ளை உறவு என்றாலும் கூட சபை நாகரீகம் கருதி அப்பா மகனை 'அவர்' இவர் என்று தான் அழைக்கின்றனர் பெரும்பாலானோர்..வயதில் சிறியவர்களாக இருந்தாலும் இப்படி அழைப்பதின் காரணமாக அழைக்கப்படுபவரின் மதிப்பு கூடுகின்றது. இதுதான் நாகரீகம்..

எவ்வளவு தான் நண்பர்களாக இருந்தாலும், அண்ணன் தம்பிகளாக இருந்தாலும், ஆயிரக்கணக்கானோர் பங்கு பெறும் நிகழ்ச்சியில் மேடையில் பேசும் போது, சபை நாகரீகம் கருதி ஒருமையில் பேசுவதையும், 'அவன், இவன்,வாடா, போடா' என்று கூறுவதையும் கோபிநாத் தவிர்த்திருக்கலாம்..

சிவகார்த்திகேயன் தற்போது ஹீரோ ரேஞ்சில் உள்ளார்.. திருமணமும் ஆகிவிட்டது.. இந்நிலையில் மேடையில் அவரை கோபிநாத் அப்படி அழைத்தது நாகரீகமாக இல்லை..

இது தவிர ஆங்கில உச்சரிப்பும் தற்போது கோபிநாத்திடம் நிறையவே மாறி உள்ளது.. லண்டனில் படித்துவிட்டு அமெரிக்காவில் செட்டிலாகி, நேராக நிகழ்ச்சியை தொகுத்து வழங்க வந்தவர் போல அந்த அமெரிக்கன் ஸ்டைல் பேச்சு கொஞ்சம் மிகையாகவே இருந்தது..

ஏற்கெனவே பேசுபவர்களை தடுத்து நிறுத்திவிடுவதில் தான் மிகுந்த திறமைசாலி என்று பெயரும் இவருக்கு உண்டு.. ஏதோ முக்கியமான செய்தியை சொல்ல வந்தவர்கள் சொல்லாமலேயே முடங்கிப் போன சம்பவங் களும் கோபிநாத் நடத்தும் 'நீயா நானா' நிகழ்ச்சியில் பல முறை நடந்துள்ளது..

எவ்வளவுக்கெவ்வளவு உயருகின்றோமோ, அந்தளவிற்கு நாம் பேசும் வார்த்தைகளிலும், மற்றவர்களிடம் நாம் நடந்து கொள்ளும் விதத்திலும் நாகரீகமும், பண்பாடும், பணிவும் வேண்டும் என்பதை கோபிநாத் மறந்தது

சிறுபான்மையின மாணவியருக்கு கல்வி உதவித் தொகை:

                  11-ம் வகுப்பு பயிலும் சிறுபான்மையின மாணவியருக்கு மத்திய அரசின் மவ்லானா ஆசாத் கல்வி அமைப்பு மூலம் உதவித் தொகை வழங்கப்பட உள்ளது என மாவட்ட ஆட்சியர் ராஜேந்திர ரத்னூ தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

தமிழ்நாட்டில் வசிக்கும் இஸ்லாமியர், கிறிஸ்துவர், சீக்கியர், புத்தம், பார்சி மதங்களைச் சேர்ந்த 11-ம் வகுப்பு பயிலும் மாணவிகளுக்கு மத்திய அரசின் மவ்லானா ஆசாத் கல்வி அமைப்பு மூலம் ரூ.12 ஆயிரம் கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது.

இக்கல்வி உதவித் தொகை மூலம் கல்விக் கட்டணம், பாடப் புத்தகம், எழுதுபொருட்கள் மற்றும் உண்டு, உறைவிட கட்டணங்களுக்கு வழங்கப்படுகிறது.
 
தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் 767 சிறுபான்மையின மாணவியர்களுக்கு (இஸ்லாம்-366, கிறிஸ்தவர்-399, சீக்கியர்-1, புத்தம்-1) ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
 
உதவித் தொகை பெற தகுதிகள்: மாணவிகள் 10-ம் வகுப்பில் குறைந்தபட்சம் 55 சதவீதம் மதிப்பெண் பெற்று, நடப்பாண்டில் 2012-2013-ல் மத்திய, மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் படிக்க வேண்டும்.
குடும்ப ஆண்டு வருமானம் ரூ. ஒரு லட்சத்துக்கும் குறைவாக இருக்க வேண்டும்.
 
பூர்த்தி செய்த விண்ணப்பத்தை தேவையான ஆவணங்கள் இணைத்து பயிலும் கல்வி நிலையத்தில் 20.9.2012-க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
 
பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் தாளாளர்கள் மாணவிகளிடம் இருந்து பூர்த்தி செய்த விண்ணப்பத்தைப் பெற்று சரிபார்த்து, இணைக்கப்பட்டுள்ள பிற்சேர்க்கை 1-ல் குறிப்பிட்டுள்ள படிவத்தில் உரிய சான்றுரைகளுடன் கையொப்பம் செய்து புதுதில்லியில் உள்ள அலுவலகத்திற்கு 30.9.2012 மாலை 5 மணிக்குள் சேரும் வகையில் அனுப்ப வேண்டும்.
 
இதற்கான விவரங்களை http://maef.nic.in/ என்ற இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது.

சிறுபான்மையின மாணவியர்கள் உரிய காலத்தில் விண்ணப்பித்து பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.


ஞாயிறு, 8 ஜூலை, 2012

சென்னையில் அதிகரிக்கும் சிசேரியன் குழந்தைகள்

     சென்னையில், கர்ப்பிணிப் பெண்களில் இருவரில் ஒருவர் அறுவை சிகிச்சை மூலம் குழந்தைப் பெற்றுக் கொள்கின்றனராம். கடந்த ஆண்டு அரசு மருத்துவ மனைகள் மற்றும் மாநகராட்சி பேறுகால மையங்களில் குழந்தைப் பெற வரும் பெண்களில் சுகப்பிரசவம் பெறுபவர்களைவிட அறுவை சிகிச்சையில் குழந்தைப் பெறுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக மகக் பேறு மருத்துவர்கள் (obsterician) கூறுகிறார்கள்.

சென்னையில், முன்னணி மருத்துவமனைகளில் 50 சதவீத குழந்தைகள் பிறக்கின்றன. எழும்பூரில் உள்ள தாய்மை மற்றும் பெண்கள் நோய்க்கான பயிற்சியகத்தில் குழந்தைப் பேறுக்காகச் சேர்ந்தவர்களில் 50 சதவீதத்தினர் அறுவை சிகிச்சைப் பிரிவில் சேர்ந்திருந்தனர். மருத்துவக் காரணங்கள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தாய்மார்களுக்கு சுகப்பிரசவம் கடினமாகியுள்ளது என்கிறார் இந்தப் பயிற்சியகத்தின் இயக்குனர் கே.ஜெயஸ்ரீ.

கடினமான பிரசவங்களை நகரின் முக்கிய மருத்துவமனைகள் எடுத்துக்கொள்கின்றன. அதுவும் இதற்கொரு காரணம் என்கிறார். கர்ப்பிணிப் பெண்களிடம் உயர் அழுத்தம், கர்ப்பகால சர்க்கரை (gestational diabetes), கருவில் ரத்தக்கசிவு போன்ற குறைபாடுகள் காணப்படுகின்றன என்கிறார். ஏற்கெனவே அறுவை சிகிச்சையில் குழந்தைப் பெற்றவர்களையும், அதன்பின்னர் இரண்டாண்டு இடைவெளியின்றி கற்பமுற்ற பெண்களையும் இம்மருத்துவமனைகள் எடுத்துக்கொள்கின்றன. ஒரு அறுவை சிகிச்சைக்குப் பின் உள் புண் ஆற இரண்டு ஆண்டுகள் அவசியப்படும். அதற்கு முன்பாக கருவுற்றால், அது அறுவை சிகிச்சைக்கு வழிவகுக்கும். இரண்டு ஆண்டு இடைவெளிக்குள்ளாக கருவுறும் பெண்களையும் எடுத்துக் கொள்கிறோம். தினமும் 200 மகளிர் வெளிநோயாளிகளாக வருகின்றனர் என்கிறார் ஜெயஸ்ரீ.

தாயையும், சேயையும் ஒருங்கே காப்பாற்ற வேண்டுமென்ற அச்ச உணர்வுதான் பேறுகால அறுவை அதிகரிப்பதற்கு காரணம் என்கிறார் சென்னை கஸ்தூரிபாய் காந்தி மருத்துவமனையின் கண்காணிப்பாளர் பி.கோபினாத். கடந்த வருடம் இம்மருத்துவமனையில், 45 முதல் 50 சதவீதம் பெண்கள் அறுவை சிகிச்சைக்கு சென்றுள்ளனர். நாள் ஒன்றுக்கு 25 பெண்கள் இங்கு குழந்தைப் பெறுகின்றனர். சென்னை இராயபுரத்தில் உள்ள ராஜா சர் ராமசாமி முதலியார் (ஆர்.எஸ்.ஆர்.எம்) மகப்பேறு மருத்துவமனையில் அதிகபட்சமாக 51 சதவீதம் பெண்கள் அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ளனர்.

பெண்கள் கருவுறுகின்றனர். அறுவை சிகிச்சையைத் தேர்வு செய்ய தகுந்த காரணம் இருக்கிறது. நாங்கள் அதை ஆய்வு செய்கிறோம். இருந்தாலும் சில பெண்கள் இரத்த சோகையால் மரணிக்கின்றனர். இதுதான் இன்றுவரையுள்ள பிரச்சனை. இரத்த சோகையுடன் (anaemic) நலக்குறைவுடனும் தான் கருவுறுகின்றனர் என்கிறார் பி.கோபினாத்.