புதன், 11 ஜூலை, 2012

சுவிஸ் வங்கிகளில் இந்தியர்கள் பதுக்கிய கருப்பு பணம் ரூ.12,700 கோடி

                       சுவிஸ் வங்கிகளில் இந்தியர்கள் பதுக்கியுள்ள கருப்பு பணத்தின் மதிப்பு ரூ.12,700 கோடி என தகவல் வெளியாகி உள்ளது. இந்தியர்களின் கருப்பு பணம் சுவிஸ் வங்கிகளில் பதுக்கப்பட்டுள்ளதாகவும் அதை இந்தியா கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பா.ஜ. உட்பட பல கட்சிகள் மற்றும் அமைப்புகள் கோரி வருகின்றன. இதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசும் உறுதி அளித்துள்ளது. இந்நிலையில், சுவிஸ் வங்கிகளில் உள்ள இந்தியர்களின் பணம் ரூ.12,700 கோடி என்று சுவிஸ் வங்கிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இது சுவிஸ் வங்கிகளில் வெளிநாட் டினரின் மொத்த முதலீட்டில் 0.14% ஆகும். 

இதனிடையே, உலகம் முழுவதும் பல நாடுகளிலும் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதால் கடந்த 4 ஆண்டுகளில் சுவிஸ் வங்கிகளில் வெளிநாட்டினரின் முதலீடு  ரூ.20 லட்சம் கோடி குறைந்துள்ளது. கடந்த 2011ம் ஆண்டு இறுதியில் வெளிநாட்டினரின் மொத்த முதலீட்டில் 51 சதவீதம் குறைந்துள்ளது. கடந்த 4 ஆண்டுகளில் இது மிகவும் குறைவு. சுவிஸ் வங்கிகள் சங்கம் தெரிவித்துள்ள தகவல்படி, 2011ம் ஆண்டு இறுதியில் வங்கிகளில் உள்ள மொத்த சொத்து மதிப்பு ரூ.302 லட்சம் கோடி. இதில் 51% வெளிநாட்டு முதலீட்டாளர்களின் பணம்.

- dinakaran.com