சனி, 30 ஜூன், 2012

மது விலக்கா....? மது விளக்கா?

                        அரசுகளுக்கோ அது அட்சய பாத்திரம். பயன்படுத்துவோருக்கோ அது பிச்சா பாத்திரம். தமிழ்நாட்டில் மட்டும் ஆண்டு வருமானம் 15 ஆயிரம் கோடி. கடைகள் 6696. மேற்பார்வையாளர்கள் எண்ணிக்கை 8,200. விற்பனையாளர்கள் 16 ஆயிரம். உதவியாளர்கள் 6 ஆயிரம். இதை நம்பி வாழும் குடும்பங்கள் 1 லட்சம். நம்பிக் கெட்ட குடும்பங்களோ பல கோடி.

 என்ன அந்தக் காலத்து குடும்பக் கட்டுப்பாடு ரேடியோ விளம்பரம் போல் இருக்கிறதா?

 இதை நம்பி சிலர் அல்ல அரசே .... இல்லை இல்லை அரசின் இலவச திட்டங்களின் உயிரே உள்ளது. ரொம்ப பேரின் உயிரையும் வாங்குகிறது. அது மது. அதுவும் தமிழ்நாட்டில் உற்பத்தியாகும் வெளிநாட்டு மது. அதாவது தமிழ்நாட்டில் உற்பத்தியாகும் சீமைச் சாராயம்.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே கப்பல்களில் வந்த யவனர்களின் மதுக் குப்பிக்கு மயங்கி கிடந்த மன்னர்களின் கதையை சோழமண்டல கடற்கரை வரலாறு சொல்கிறது. பிரெஞ்சுக்காரர்கள், டச்சுக்காரர்கள், ஆங்கிலேயர் என மதுவைக் காட்டி மயக்காத படையயடுப்பாளர்கள் எவரும் இல்லை.

பண்டைய ஆரிய இலக்கியங்களே சோமபானம் - சுராபானம் என சுவையோடு மதுவை தரம் பிரித்தன. ஆனால் அகநானூறு தொடங்கி திருக்குறள் வரை போதை தரும் கள்ளை தொடாதே என்று சொன்ன தமிழ் இலக்கியங்கள் அதிகம்.

ஆங்கிலேயன் இந்தியாவை அரசாண்ட காலங்களில் மேல்தட்டு மக்களின் உற்சாக பானமாக இருந்த சீமைச் சாராயத்தை 1937ல் அன்றைய சென்னை மாகாணத்தின் பிரிமியர் அதாவது முதலமைச்சர் ராஜாஜி காங்கிரஸ் கட்சியின் கொள்கைக்கேற்ப தடை செய்தார். அதாவது மதுவிலக்கை கொண்டுவந்தார். அதற்கு காரணமும் இருந்தது. அன்றைய காலகட்டத்தில் இந்தியா முழுவதும் மதுக்கடை மறியலை காங்கிரஸ் நடத்தியது. சென்னை மாகாணத்தில் கள்ளுக்கடை மறியல். தந்தை பெரியாரின் துணைவியார் நாகம்மையாரும், தங்கை கண்ணம்மாவும் கள்ளுக்கடை மறியலில் முன் நின்றனர். தந்தை பெரியாரோ தனது தோப்பில் இருந்த நூற்றுக்கணக்கான தென்னை மரங்களை கள் இறக்க பயன்படுத்துகிறார்கள் எனச் சொல்லி வெட்டிச் சாய்த்தார். இதன் எதிரொலியாகவே இரட்டை ஆட்சி முறையில் ஆட்சிக்கு வந்த ராஜாஜி மது விலக்கை கொண்டுவந்தார். அதற்கும் முன்னர் இந்திய வரலாற்றில் தனது ஆட்சி பகுதி முழுவதும் மதுவை தடைசெய்த ஒரே மன்னன் மாவீரன் திப்புசுல்தான் மட்டுமே.

இலைமறை காய்மறையாய் அங்கொன்றும் இங்கொன்றுமாக மறைந்து வாழ்ந்த கள்ளச் சாராயம் 1974ல் அன்றைய முதல்வர் கலைஞர் புண்ணியத்தால் நல்ல சாராயமாக மாறியது. அரசே மக்கள் நலன் கருதி சாராயக் கடைகளை திறந்து ஏலம் விட்டது. அதுவே பின்னர் பரிணாம வளர்ச்சி பெற்று 1983ல் எம்.ஜி.ஆர் ஆட்சி காலத்தில் டாஸ்மாக் என்ற அரசின் விற்பனை மையமாக அது மாறிப் போனது. பின்னர் மலிவு விலைமது வந்தது.

2003ல் அ(இ)ன்றைய முதல்வர் ‘ஜெ’ மதுபானம் மூலம் கிடைக்கும் வருமானம் தனியாருக்கு போய்விடக் கூடாது என்கிற நல்ல எண்ணத்தில் இனிமேல் மதுவிற்பனையை அரசே முன்நின்று நடத்தும் என அரசாணை பிறப்பித்தார். அதுமுதல் கல்விக்கூடங்களை நடத்தி வந்த அரசு மதுக்கடைகளை நடத்த ஆரம்பித்தது. மதுக்கடைகளை நடத்திவந்த தனியார் கல்விக்கூடங்களை நடத்த ஆரம்பித்தனர்.

பள்ளி, கல்லூரிகள், வழிபாட்டு தலங்கள், மருத்துவமனைகள் இவற்றின் அருகாமையில் எல்லாம் அரசு மதுக்கைடகள் தாராளமாக திறக்கப்பட்டன. எந்த சட்டமும் அரசை கட்டுப்படுத்தவில்லை. எந்த நியாயமும் இங்கு செல்லுபடியாகவில்லை.

குடித்தால் சமூக மரியாதை இல்லை என்ற காலம் போய் குடித்தால்தான் சமூகத்தில் மரியாதை என்றாகிவிட்டது.

சமீபத்தில் வந்த பத்திரிக்கை செய்தி ஒன்றை பார்த்து யாரும் அதிர்ச்சியடைந்திருக்கமாட்டார்கள். திருப்பூர் அனுப்பர்பாளையத்தில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர் இருவர் குடிபோதையில் பள்ளிக்கூடம் வந்ததற்காக இடைநீக்கம் செய்யப்பட்டார்கள் என்ற செய்திதான் அது. நான் படித்த காலங்களில் கல்லூரி பேர்வெல் பார்ட்டிகளில் அதுவும் கல்லூரிக்கு வெளியே மது தலைகாட்டும். ஆனால் இன்று பள்ளிக்கூட பேர்வெல் பார்ட்டிகளில் கூட மது விளையாடுகிறது. நட்புக்கு தேநீர் வாங்கி கொடுத்தால் போதும் என்ற நிலை மாறி அது இன்று குவார்ட்டர் ஆக மாறியுள்ளது. அரசியல் கட்சிகளும் தாங்கள் நடத்தும் ஊர்வலங்கள், பொதுக்கூட்டங்கள், தேர்தல் கால கூத்துக்கள் எல்லாவற்றிலும் ஆறாக ஓடும் மதுவை கண்டுகொள்வதில்லை. உலகிலேயே மது விற்பனை அதிகம் ஆகும் இடம் இந்தியா. இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் அதிகமாக விற்பனையாகிறது. இது கொஞ்சம் கொஞ்சமாக குடிகாரர்களின் தேசமாக மாறி வருகிறது. உலகம் முழுவதும் மது உபயோகிப்பவர்கள் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது.தமிழ்நாட்டிலோ அதிகமாகிக் கொண்டே வருகிறது.

தமிழ்நாட்டில் 15லிருந்து 20 வயது வரை 10 சதவிகிதம்பேரும் 30- 30 வயது வரை 35 சதவிகிதம் பேரும் 30-35 வயது வரை 37 சதவிகிதம் பேரும் 35- 50 வயது வரை 18 சதவிகிதம் பேரும் மொடாக் குடியர்களாக மாறியிள்ளனர் என சமீபத்திய புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

இந்தியாவில் உள்ள மதுபான தொழிற்சாலைகளில் எவ்வித தரக்கட்டுப்பாடும் இல்லை. உலகில் 100 ஆண்டுகள் புளிக்க வைத்து தயாரிக்கப்படும் மதுபான வகைகள் இங்கு 24 மணி நேரத்தில் தயாராகின்றன. அத்தனையும் ரசாயனம்.

இரைப்பை நோய்கள், குடல் புற்று நோய்கள், மனநல பாதிப்புகள், சிறுநீரக செயலிழப்புகள், கணைய பாதிப்பு, பக்கவாதம், நரம்பு தளர்ச்சி, மரபணு பாதிப்பு, ஆண்மைக்குறைவு என தமிழ்நாட்டு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளில் சரிபாதிப்பேர் குடியினாலேயே இந்நிலைக்கு ஆளாகின்றனர் என்பது அதிர்ச்சியளிக்கும் உண்மை.

இதைவிடக் கொடுமை மதுவின் தாக்கத்தால் பெண்களில் பலர் மார்பக புற்று நோய் மற்றும் கர்ப்பபை நோய்களுக்கு ஆளாகியுள்ளனர் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. விளையாட்டாய் நட்புக்காக குடிக்க ஆரம்பித்து பின்னர் வருமானம் முழுவதையும் குடி விழுங்க ஆரம்பிக்கிறது. விளைவு வருமானம் இல்லாமல் பேய் குடும்பத்தில் குழப்பம் மிகுந்து கடைசியில் அது விவாகரத்தில் போய் முடிகிறது. பல வீடுகளில் ஆண்கள் மட்டுமே குடிபோதைக்கு அடிமையானாலும் கடைசியில் அது பெண்கள் தலையிலேயே விடிகிறது.

பெரும்பாலான நிறுவனங்களில் ஊழியர்கள் மதுவோடு சங்கமிப்பதால் வேலையின் கால அளவும், தரமும் குறைந்து போய்விட்டது.

இந்தியாவில் மதுவிலக்கு மூன்று வகையாக அமுல்படுத்தப்படுகிறது. முதலாவது முழுமையாக உள்நாட்டு - அயல்நாட்டு அனைத்து மது வகைகளையும் தடை செய்வது.இன்று மகாத்மா காந்தி பிறந்த குஜராத்தில் மட்டும் பூரண மதுவிலக்கு பெயரளவில் அமுலில் உள்ளது. கள்ளச் சாராயமோ அங்கு ஆறாக ஓடுகிறது.

இரண்டாவதாக சாராயம் தடைசெய்யப்பட்டு வெளிநாட்டு மது மட்டும் விற்பது. இது மிசோராம், மணிப்பூர் போன்ற வடகிழக்கு மாநிலங்களிலும், தமிழ்நாடு, ஆந்திரா போன்ற மாநிலங்களிலும் அமுலில் உள்ளது.

மூன்றாவதாக வருடத்தில் ஒரு நாளில் மட்டும் அதாவது காந்தி ஜெயந்தி, புத்த ஜெயந்தி போன்ற நாட்களில் மட்டும் விடுமுறை கொடுப்பது.(ஆனாலும் பிளாக்கில் விற்பனை உண்டு) இப்படி கேலிக்கூத்தான மதுவிலக்குகள் இங்கே அமுல்படுத்தப்படுகின்றன.

ஆந்திர மாநிலத்தில் வேளான் அமைச்சர் டி.கி.வெங்கடேஷ் மது குடித்துவிட்டு வந்து தொல்லை கொடுக்கும் கணவரை பொது இடத்திற்கு அழைத்து வந்து உதைக்கும் பெண்களுக்கு ரூபாய் பத்தாயிரம் பரிசு என அறிவித்திருக்கிறார். நல்லவேளை தமிழ்நாட்டில் அப்படியாரும் சொல்லவில்லை. சொல்லியிருந்தால் மக்கள் தொகையில் பாதிப்பேர் அடிவாங்கியிருப்பார்கள்.

இங்கேதான் அரசே மதுபாட்டில்களிலேயே மது நாட்டிற்கும் வீட்டிற்கும் கேடு. குடி குடியை கெடுக்கும் என்ற அதி அற்புத வாசகங்களை பொறித்து விட்டதே. அதுவே போதாதா?

இங்கே மதுவிலக்கு காவல்துறை என்று ஒன்று உள்ளது. அதற்கு காவலராக பணியாற்ற கடும் போட்டி. மதுவை ஒழிக்க அல்ல- வருமானத்திற்கு. காவல்துறை பிரிவுகளிலேயே வருமானம் கொழிக்கும் பிரிவாக அது விளங்குவதால்.

இந்தியாவில் காவல்துறை, நீதித்துறை, வருவாய்துறை என அரசுத் துறைகளில் பெரும்பான்மையானவற்றில் பெரும்பான்மையினர் குடிக்கு அடிமையாகியுள்ளனர். அரசாங்கம் நடக்காமல் தள்ளாடுவது இதனால்தான். தமிழ்நாட்டில் மக்களுக்கான மருத்துவம் -பாதுகாக்கப்பட்ட குடிநீர் -தரமான சாலைவசதி -தடையில்லா மின்சார வசதி - இலவச கல்வி என அடிப்படை வசதிகள் எதைப்பற்றியும் கவலைப்படாத அரசு தரமான மதுவகை வேண்டும் என்று மட்டும் கவலைப்படுகிறது. மேட்டுக்குடி மக்கள் சாதாரண மதுவகைகளை பயன்படுத்தி உடல் நலம் கெட்டுவிடக்கூடாது என்பதற்காக அக்கறையுடன் அரசு புதிதாக எலைட் ஷாப் எனப்படும் உயர்தர மதுபானக் கடைகளை திறந்துள்ளது.

  ஏற்கெனவே தமிழகத்தில் இனி புதிதாக எந்த ஒரு மதுக்கடைகளையும் திறப்பதில்லை என 2008ம் ஆண்டு தமிழக அரசு முடிவு செய்து அரசாணை வெளியிட்டது. தி.மு.க. ஆட்சி காலத்தில் இது வெளியிடப்பட்டதால் அதற்கு எதிராக தற்போதைய தமிழக அரசு அதை மாற்ற முடிவு செய்து புதிய கடைகளை திறந்துள்ளத. நாட்டு மக்களின் சுகாதாரத்தை காப்பாற்ற வேண்டிய அரசு மதுக்கடைகளை திறப்பதன் மூலம் அதை நாசப்படுத்துகிறது.

 குடிப்பழக்கத்தின் காரணமாக வழிப்பறி, கொள்ளை, பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறை, சாலை விபத்துக்கள் என குற்றச் செயல்கள்அதிகரித்துக் கொண்டே வருகிறது. அரசிற்கு அதைப்பற்றி எல்லாம் என்ன கவலை?

 அரசின் ஆண்டு வருமானத்தில் (59கோடி) நான்கில் ஒரு பங்கு (15 கோடி) மதுவின் மூலம் கிடைக்கும் போது மதுவை விலக்காமல் ஒளி விளக்காக அரசு கருதுகிறது. இரண்டு திராவிட இயக்கங்களும் எதிரெதிர் துருவமாக அரசியலில் இருந்தாலும் மது விசயத்தில் ஒரு கொடியில் பூத்த இருமலர்களாகவே இருக்கின்றன.

 உலகில் பெரும்பான்மை மதங்களும் - மார்க்கங்களும் மதுவிற்கு எதிராக இருக்கின்றன. இஸ்லாம் மதுவை விலக்கப்பட்ட ஒன்றாகவே அறிவிக்கிறது. பெருமானார் (ஸல்) ஆட்சியாராக மெக்காவிற்குள் நுழைந்தவுடன் செய்த முதல் வேலை கொடிய மதுபானங்களை தடை செய்ததுதான்.

இந்து மதமோ 5 மிகப் பெரிய தீமைகளில் ஒன்றாக மதுவை குறிப்பிடுகிறது. திருக்குறள் கள்ளுண்ணாமைக்காக ஒரு அதிகாரத்தையே கொடுத்திருக்கிறது. தீமைகளின் தாயகம் மது என்றார் காந்தி.

 இங்கோ மக்களுக்கு சுகாதாரத்தை கொடுக்க வேண்டிய அரசு மதுவை விற்றுக் கொண்டிருக்கிறது.

 படிக்க கற்றுக் கொடுக்க வேண்டிய அரசு- குடிக்க கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கிறது.

சீனாவில் அபின் சாப்பிட கற்றுக் கொண்ட மக்கள் அதற்காக போரே பின்னர் நடத்தினார்கள் என்று வரலாறு. அதே போல் எதிர்காலத்தில் அறிவு மழுங்கடிக்கப்பட்ட மக்களாக தமிழ்மக்கள் மாறி மதுவுக்காக போர் நடத்திக் கொள்ளட்டும் என அரசு விரும்புகிறதோ என்னவோ?

 தள்ளாடும் குடிமகன்கள் - அவர்களை தாங்கி பிடிக்கும் அரசு.

 வெட்கங்கெட்ட இந்த தேசத்தில் வாழ்வது விபரீதம் என அறிவார்ந்த மக்கள் முடிவு செய்யுமுன் விழித்துக் கொள்ளுமா அரசு?

(நன்றி - சமநிலை சமுதாயம் இதழ்)

லீப் செக்கன்ட் - இவ்வருடம் ஜூன் 30ம் தேதியில் 61 செக்கன்கள் அதிகரிப்பு


              பிரான்ஸ் நகரின் பாரிஸ் நகரில் கூடிய விஞ்ஞானிகள் (Horologists) சிலர் சனிக்கிழமை ஜூன் 30 திகதி நாள் கழிந்தவுடன் 61 செக்கன்கள்
அல்லது கிட்டத்தட்ட ஒரு நிமிடம் மேலதிகமாக சேர்க்ச்கப் பட வேண்டும் என மீடியாக்களுக்குத் தெரிவித்துள்ளனர். இதனை அவர்கள் லீப் செக்கன்ட் என அழைக்கின்றனர்.

சாதாரணமாக நமது பூமி ஒரு முறை சுற்ற (360 பாகையில்) 86 400 செக்கன்கள் எடுக்கிறது. எனினும் சாதாரண கடிகாரத்தை விட திருத்தமாக நேரத்தைக் கணிக்கக் கூடிய சூரிய கடிகாரம் நேரத்தைக் கணிக்கும் விதத்தில் பூமி தனது அச்சில் சுழலும் வேகம் முக்கியமானதாகும்.
இந்நிலையில் சூரியன் மற்றும் சந்திரனின் ஈர்ப்பு விசை வேறுபாட்டால் சற்று பாதிக்கப் படும் பூமியின் சுழற்சி மிகச் சிறியளவில் சில செக்கன்கள் தாமதமாகின்றது. இதைக் கருத்தில் கொண்டே சூரியக் கடிகாரம் அல்லது அதை விட துல்லியமாக நேரத்தைக் கணிக்கும் அணுக் கடிகாரம் என்பவற்றுக்கு இணையாக நேரத்தைக் கொண்டு வர UTC எனப்படும் பூகோள நேரம் ஒரு நாளைக்கு ஒரு செக்கன் கூடுதலாக மொத்தம் 86 401 இற்கு மாற்றப் படுகின்றது.

இத்திருத்தம் 1972 ஆம் ஆண்டு தொடங்கப் பட்டது. இதற்கு முன் அணுக் கடிகாரமோ சூரிய கடிகாரமோ பயன்படுத்தப் படாமல் பூமியின் சுழற்சியைக் கொண்டே கணிக்கப் பட்டு வந்தது. இவ்வருடம் ஜூன் 30 ஆம் திகதி மேலதிகமாக சேர்க்கப்பட உள்ள லீப் நிமிடம் UTC எனும் பூகோள நேரத்தில் 25 ஆவது தடவையாக கூட்டப்படுகின்றது.

இந்நடவடிக்கை மூலம் பூமியில் உள்ள எல்லோரும் மிகச் சரியான நேரத்தைக் கடைப் பிடிக்கக் கூடிய நிலை உண்டாவது நன்மையாகும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இன்று பூமியில் உள்ள மிகத் திருத்தமான நேரத்தைக் கணிக்கக் கூடிய அணுக்கடிகாரமானது 300 மில்லியன் வருடங்களுக்கு ஒரு செக்கனையே தவற விடக் கூடியது என்பதுடன் ஒரு செக்கனில் 10 பில்லியன் மடங்கு சிறிய அசைவைக் கூட துல்லியமாகக் கணிப்பிடக் கூடியது என்பது குறிப்பிடத்தக்கது.

வங்கதேசத்தில் மழை வெள்ளம்: 100க்கும் மேற்பட்டோர் பலி




                       வங்கதேசத்தின் தென்கிழக்கு பகுதியில் திடிர் என ஏற்பட்ட நிலச்சரிவுகளிலும் வெள்ளத்திலும் 1000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன
வங்தேசத்தின் தென்கிழக்கு பகுதிகளில் பல நாட்களாக அடைமழை பெய்துள்ளது, இதனையடுத்து அங்கே நிலச்சரிவுகளுடன் வெள்ளமும் ஏற்பட்டுள்ளது. இதில் பல வீடுகள் சேதமுற்றதுடன் வீடுகளிலிருந்தோரும் நிலச்சரிவுகளில் சிக்கி பலியாகியுள்ளனர்.
மேலும் சிட்டகொங் எனும் துறைமுக நகரில் ஏற்பட்ட வெள்ளத்தில் பலர் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர். மேலும் பலர் தங்களது வாழ்விடங்களை விட்டு வெளியேறவேண்டிய நிலைமையும் ஏற்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 100க்கும் மேற்றப்பட்டோர் வெள்ளத்திலும் நிலச்சரிவுகளிலும் சிக்கி பலியாகியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிட்டகொங் நகரின் விமான நிலைய போக்குவரத்தும் இடை நிறுத்தப்பட்டுள்ளதாகவும் மீட்பு பணிகளும் பாதிப்புற்றோருக்கான நிவாரணம் வழங்குவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருதாக செய்திகள் கூறுகின்றன.

லெமூரியா கண்டத்தின் தொன்மையான பகுதியே இன்றைய தமிழகம்


                  லெமூரியா கண்டத்தின் தொன்மையான பகுதியே இன்றைய தமிழகம் .டைனசோர் வாழ்ந்த மண்ணே நம் தமிழக மண்.

சில கோடி ஆண்டுகளுக்கு முன் பெய்த கடும் மழையில் மரங்கள் அடித்து செல்லப்பட்டு ,ஆழமிக்க ஏரிகளில் புதைந்து காலப் போக்கில் பூமியில் ஏற்படும் அதிகபடி யான அழுத்தங்களால் கல்லாக மாறின. இது போன்ற இயற்கையின் அறிய வகை செல்வங்கள் உலகில் தொன் மையான நிலப் பகுதிகளில் மட்டுமே கிடைக்கும். அதில் தமிழர் நாடும் ஒன்று .அவ்வாறு கிடைத்த அரிய வகை செல்வங்களை , விழுப்புரம் மாவட்டத்தில் வானூர் தாலுக்காவில் உள்ள திருவக்கரை என்னும் ஊரில் உள்ள அருங் காட்சியகத்தில் காட்சி படுத்தப்பட்டுள்ளது.

பெரும் மழையில் தாவரங்களும் ஆற்றில் அடித்து செல்லப்பட்டு ஆற்றோரம் உள்ள பாறைகளின் மீது படிந்து திடிரென்று ஏற்படும் நில நடுக்கம் போன்ற இயற்க்கை சீற்றங்களால் பூமியின் ஆழப்பகுதிகளில் புதைந்து விடுகிறது .நாளடைவில் அதே பகுதியில் பாறைகள் புதைந்து ஏற்படும் அதிக படியான அழுத்தத் தால் தாவரங்களில் இருக்கும் சிலிகான் என்று மூலப் பொருள் பாறைகளின் மீது படிந்து பாறையோடு பாறையாக மாறி விடுகிறது . இவ்வாறு மாறுவதற்கு இரண்டு லட்சம் கோடி ஆண்டுகள் தேவை படுகிறது . இது போன்ற கற்கள் ஆற்றோரங்களில் மட்டுமே கிடைக்கும் . திருச்சியில் இது போன்ற பாறை கற்கள் கிடைத்துள்ளன .

2009 ஆண்டு அக்டோபரில் சேலம் பெரியார் பழகலை கழக ஆய்வாளர்கள் 6 கோடி ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த டைனசோர் முட்டைகளின் படிவங்களை ஆயிரக்கணக்கில் தமிழர் நாட்டின் அரியலூர் மாவட்டத்தில் கண்டு பிடித்தனர் .

சில லட்சம் ஆண்டுகளுக்கு முன் கற்கால தமிழர்கள் பயன் படுத்திய கல் ஆயுதங்களையும் , .சென்னை அருகே அதிரம் பட்டினம் என்ற ஊரில் கற்கால தமிழர் கள் வாழ்ந்த குகையையும் ஆங்கிலேயர்கள் கண்டு பிடித்து ஆவணப் படுத்தியுள்ளனர் .என்றும் அவ்வூர் மக்கள் அக்குகையை இன்றும் காளி கோயிலாக வழி படுகின்றனர் . அக் குகையின் உட்புறம் சிறு உருண்டை வடிவிலான பாறை உருகிய நிலையில் ஆங்காங்கே காட்சி அளிக்கிறது .

அறிவியல் ஆய்வாளர்கள், எரிமலை வெடிப்பின் போது உருகி வரும் பாறை குழம்புகளால் இந்த குகை உருவாகி யிருக்கும் என்றும் அப்பொழுது பெய்த கடும் மழையால் உருகிய பாறை குழம்பு குளிர்ந்து பந்து வடிவில் அங்க ங்கே குகையின் உட்புறத்திலேயே பாறையாக உருமாறி இருக்கிறது .இந்த குகையில் சில லட்சம் ஆண்டுகளு க்கு முன் கற்கால தமிழர்கள் வாழ்ந்திருக்கிறார்கள் என்று இதை கண்டு பிடித்த ஆங்கிலேய ஆய்வாளர் 1850 ஆண்டுகளின் இடை பகுதியில் தான் எழுதிய புத்தகத் தில் குறிப்பிட்டுள்ளார் .

தமிழர் நாட்டில் கிடைத்த மேற்கண்ட சான்றுகளை சென்னை எழும்பூர் அருங்காட்சியகத்தில் நீங்கள் காணலாம் .

மேற்கண்ட சான்றுகள் நம் மண்ணின் தொன்மையை யும் , அப்போது வாழ்ந்து வந்த டைனசோர் போன்ற மிருகங்களின் அழிந்த எச்சங்கள் இங்கு கிடைப்பதை கொண்டும் , அதற்கு பிறகு மனிதன்(தமிழன்) தோன்றி, பல லட்சம் ஆண்டுகளாக இங்கு தொடர்ந்து வாழ்ந்து வந்த வரலாற்று சான்றுகளை கொண்டு , நம் இனத்தின் தொன்மையையும் அவர்கள் ஊடாடும் மொழியான தமிழின் தொன்மையையும் அறிந்து கொள்ளலாம் .

இதன் தொடர்ச்சியாக இன்றும் பல கோடி தமிழ் மக்கள் தமிழ் மொழி யுடன் வாழ்ந்து வருகிறோம். நம் மொழிக் கும் இனத்திற்கும் தொன்மை வரலாறு உண்டு சான்று கள் உண்டு .சில தொல் பொருள் ஆய்வுகள் மூலம் கிடைத்த வரலாறுகளே தமிழனின் பெருமையை, உலகையே வியக்க செய்கிறது .

இதில் திராவிடன் எங்கிருந்து வருகிறான். அவர்களுக் கென்று ஏதாவது தனி வரலாறு உண்டா என்று பார்த்தால் இல்லை என்பதே விடையாக இருக்கும் . கார்டுவெல் என்ற ஆங்கிலேய மொழியியல் அறிஞர், தமிழில் இருந்து பிறந்தவையே மலையாளம் கன்னடம் தெலுங்கு துளு என்று கூறுவதற்கு மாற்றாக, மேற் கண்ட மொழிகளில் மூத்த மொழி தமிழ் மொழி என்றும் இந்த மொழி கூட்டங்களுக்கு ஆரியர்களின் சமசுகிரு தங்களுக்கு மாற்றாக திராவிடம் என்று பெயர் சூட்டினார் .அவருக்கு பின் வந்த வரலாற்று ஆய்வாளர்கள் தமிழர்கள் என்று குறிப்பிடுவதற்கு மாற்றாக திராவிடர்கள் என்று குறிப்பிட தொடங்கினர்.

இன்று வரை தமிழருக்கும் ,தமிழ் மொழிக்கும் மட்டுமே வரலாறு உண்டு .திராவிடம் என்ற சொல்லின் ஆயுள் காலம் வெறும் 143 ஆண்டுகள் மட்டுமே .

இந்திய நாடு தமிழனின் தொன்மையான வரலாற்றையே , உலகின் பழம் பெரும் பாரதம் என்று பெருமை பட்டு அடையாளப் படுத்தி கொள்கிறது .உலகின் தொன்மை யான மொழி இந்திய நாட்டின் மொழி என்று கூறி தமிழ் மொழியின் பெருமையை இந்தியாவின் பெருமையாக காட்டிக் கொள்கிறது. தமிழரையும் , தமிழ் மொழியையும் தனிமை படுத்தி பார்த்தால் இந்தியாவிற்கு என்று தொன்மையான வரலாறு இல்லை .

.உலக மக்களுக்கு தொன்மையான் இனம் தமிழினம் என்பதையும் ,தொன்மையான மொழி தமிழ் மொழி என்பதையும் மறைக்கும் விதமாக, இந்தியாவின் ஆட்சி மொழி இந்தி என்று அறிவித்து , இந்தி மொழி தான் தொன்மையான மொழி போலவும் அதுவே இந்தியாவின் ஆட்சி மொழி என்று கூறி உலக மக்களை ஏமாற்றி வருகிறது .

தமிழர்களே விழிப்படைவீர் இந்தியம் என்பதும் பொய்மை ,திராவிடம் என்பதும் பொய்மை . தமிழன் என்பதே உண்மை .

திராவிடத்தை வீழ்த்தி தமிழனை ஆட்சி கட்டிலில் ஏற்றி தமிழ் மொழியை ஆட்சி மொழியாக மாற்றுவோம் .

-

வேலை வேலை என்று மூழ்கிப்போகிறவரா நீங்கள்!

                         எந்நேரமும் வேலை வேலை என்று அதிலேயே மூழ்கிப் போகிறவரா நீங்கள்? ஜாக்கிரதை, வேலை சார்ந்த வியாதிகள் தற்போது அதிகரித்து வருகின்றன என்கிறது ஓர் ஆய்வு. சுமார் 2 கோடி இந்தியர்கள் வேலையால் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டு அவதிக்குள்ளாகி இருக்கிறார்களாம்.

பணியிட பாதிப்பு என்றால், சுரங்கங்களில் வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கு நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்கள், ஆழ்கடலில் மூழ்கி ஆய்வு செய்வோருக்கு ஏற்படும் காயங்கள், கோழிப்பண்ணைத் தொழிலாளர்களுக்கு ஏற்படும் `பேரட் பீவர்' என்றில்லை. `ஒயிட்காலர் ஜாப்' எனப்படும் அலுவலகப் பணிபுரிபவர்களுக்கும் அனேக பாதிப்புகள் ஏற்படலாம்.

உங்களின் இருக்கை முறைப்படி வடிவமைக்கப்படாததாக இருந்தால், நீங்கள் 6 முதல் 8 மணி நேரம் கம்ப்யூட்டர் முன் அமர்ந்திருக்கிறீர்கள் என்றால் உங்களுக்கு முதுகுவலி, மணிக்கட்டு வலி உள்ளிட்ட பிரச்சினைகள் வரிசை கட்டி வரும். ஆனால் சம்பந்தப்பட்டவர்கள் அதை உணர்வது அரிதே. 1.9 கோடி இந்தியர்கள் பணியிட பாதிப்புக்கு உள்ளாகின்றனர்,

அவர்களில் 1.20 லட்சம் பேர் ஆயுளை இழக்கின்றனர் என்கிறது, `பணியிட வியாதிச் சிகிச்சை மற்றும் கட்டுப்பாட்டுக்கான தேசிய திட்டத்தின்' புள்ளிவிவரம். இது உலக அளவில் 17 சதவீதம். மரணத்தை ஏற்படுத்துவதில் பணியிடப் பாதிப்புகள் 10-வது பெரிய காரணமாக உள்ளன என்று உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது.

``இந்தியர்களில் 43 சதவீதம் பேர் பணிபுரிபவர்கள். எனவே அலுவலக பாதிப்புகளை நாம் சீரியசாக எடுத்துக்கொள்ள வேண்டும்'' என்கிறார், அகமதாபாத்தில் உள்ள நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆப் ஆக்குபேஷனல் ஹெல்த் இயக்குநர் பி.கே. நாக். நாள் முழுவதும் உட்கார்ந்து செய்யும் வேலை, புகைப் பழக்கத்துக்கு இணையாக மோசமானது என்கிறார்கள் மருத்துவர்கள்.

அது, `டைப் 2' சர்க்கரை நோய், இதய நோய், உடல் பருமன் போன்ற பாதிப்புகளுக்கு இட்டுச் செல்லலாம். ஒரு நாளைக்கு 6 மணி நேரத்துக்கு மேல் உட்கார்ந்து வேலை செய்பவர்களுக்கு, ஓடியாடி வேலை செய்யும் மற்றவர்களை விட அதிக எடை போடும் வாய்ப்பு இரண்டு மடங்காம். மணிக்கணக்கில் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்வதால் ஏற்படும் பாதிப்பை உடற்பயிற்சி கூட போக்காது என்கிறார்கள்.

மும்பையில் உள்ள புகழ்பெற்ற பிரீச் கேண்டி மருத்துவமனையின் மருத்துவர் சஞ்சய் போருடே, ``என்னிடம் வரும் நோயாளிகளில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் இருப்பவர்கள், நீண்ட நேரம் இருக்கையில் அமர்ந்திருக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ள இளம் அலுவலர்கள்'' என்கிறார்.

`இருக்கைப் பணி' புரிபவர்கள், ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை 10 நிமிட இடைவெளி எடுத்துக் கொள்ள வேண்டும், சோம்பல் முறிப்பது போன்ற எளிய பயிற்சிகள் கூட நன்மை பயக்கும் என்று ஆலோசனை கூறுகிறார்கள் மருத்துவர்கள்.


பெரம்பலூரில் டாக்டர்கள் தர்ணா

                            அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மாணவர்கள் பாதிக்கும் தகுதி தேர்வு முறையை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய மருத்துவ சங்கம் சார்பில் பெரம்பலூர் மாவட்ட அரசு மருத்துவமனை வளாகத்தில் தர்ணா போராட்டம் நடந்தது. அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மாணவர்கள் பாதிக்கும் தகுதி தேர்வு முறையை ரத்து செய்ய வேண்டும், கிராமப்புற மக்களை இரண்டாந்தர குடிமக்களாக மூன்றரை வருடம் மருத்துவ படிப்பை உருவாக்கும் முறையை ரத்து செய்ய வேண்டும்.சமூக நலனை சீரழிக்கும் போலி மருத்துவர்களை ஒழிக்க தனி மசோதா நிறைவேற்ற வேண்டும், மாநில அரசின் உரிமையை பறிக்கும் தேசிய சுகாதார மனித ஆணை மசோதாவை விலக்கி கொள்ள வேண்டும். கிராமப்புற மருத்துவமனைகளை ஒடுக்கி கார்பரேட் மருத்துவமனைகளை வளர்த்து மருத்துவ செலவினை அதிகரித்து சேவையை வியாபாரமாக்கும் மருத்துவமனை சட்டத்தை ரத்து செய்ய வேண்டும். மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த பணியாளர்களை இழிவுபடுத்தும் மத்திய சுகாதார துறை அமைச்சர் குலாம்நபிஆசாத்தை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய மருத்துவ சங்கம் சார்பில் அகில இந்திய அளவில் ஜூன் 25ம் தேதி அடையாள வேலை நிறுத்தம் செய்வது என அறிவிக்கப்பட்டது. இதன்படி, பெரம்பலூர் மா வட்ட அரசு மருத்துவமனை வ ளாகத்தில் இந்திய மருத்துவ சங் க பெரம்பலூர் கிளை சார்பில் தர்ணா போராட்டம் நடந்தது.போராட்டத்துக்கு சங்க தலைவர் டாக்டர் திருமால் தலைமை வகித்தார். செயலாளர் டாக்டர் ராஜாமுகமது, பொருளாளர் டாக்டர் தர்மலிங்கம் உட்பட பலர் பங்கேற்றனர்.

- dinamalar.com

வியாழன், 28 ஜூன், 2012

தமிழ் – மொபைலில் தமிழில் படிக்க, டைப் செய்ய! VIEW & TYPE IN TAMIL ON ANY MOBILE


உங்கள் மொபைலில் தமிழ் இணையதளங்கள் தமிழில் தெரியவில்லையா? OPERA Browser டவுன்லோட் செய்யவும்! எல்லா மொபைல்களுக்கும் தனித்தனி வெர்சன்களில் கிடைக்கிறது.

     Download Opera Mobile browser - http://www.opera.com/mobile/

OPERA MOBILE BROWSER - ஒபேரா மொபைல் உலாவியில் தமிழ்!
  ADDRES BAR-ல் config: என டைப் செய்து வரும் பக்கத்தின் இறுதியில் "Use bitmap fonts for complex scripts" என்பதன் அடையாளத்தை ஐ "YES" என்பதை டிக் செய்து சேமித்துக்கொள்ளவும்!
இனி தமிழ் இணையதளங்கள் தமிழில் தெரியும்!
குறிப்பு: இம்முறையில் தமிழ் எழுத்துக்கள் படங்களாக காட்டப்படும் – அவ்வளவுதான்!
IPHONE மற்றும் ANDROID மொபைல்களில் தமிழ்!
  ஐபோன் உபயோகிப்பவர்கள் செல்லினம் அல்லது TypeTamil  மென்பொருள் பயன்படுத்தலாம்.  TypeTamil  மென்பொருள் மூலம் FACEBOOK, TWITTER, GMAIL, SMS போன்றவற்றை அப்ளிகேசனிலிருந்து நேரடியாகவே செய்யமுடியும்!

    செல்லினம் - http://itunes.apple.com/my/app/sellinam/id337936766?mt=8
    TypeTamil       - http://itunes.apple.com/is/app/type-tamil/id453450583?mt=8

  அன்ட்ராய்ட் உபயோகிப்பவர்கள் TAMIL UNICODE KEYBOARD அல்லது PANINI பயன்படுத்தலாம்!

    TAMIL UNICODE KEYBOARD : https://play.google.com/store/apps/details?id=com.KM.TK&feature=search_result#?t=W251bGwsMSwxLDEsImNvbS5LTS5USyJd
    PANINI : https://market.android.com/details?id=com.paninikeypad.tamil

சாதாரண மொபைல்களில் தமிழில் டைப் செய்ய:
  எல்லா மொபைல்களிலும், உலாவிகளிலும், கணினிகளிலும் http://www.google.com/transliterate தளத்திற்கு சென்று தமிங்க்ளிஷ்-ல் டைப் செய்து அதை காப்பி, பேஸ்ட் செய்துகொள்ளலாம்!
 

ஐஐடி நுழைவுத் தேர்வு சர்ச்சை முடிவுக்கு வருகிறது




                           நாடு முழுவதும் தொழில் கல்வி மாணவர்களுக்கு ஒரே நுழைவுத் தேர்வு திட்டத்தை பற்றி கலந்து ஆலோசிக்க, அனைத்து மாநில நிர்வாக இயக்குனர்கள் கூட்டம் டெல்லியில் இன்று நடைப் பெற்றது. இத்தனை நாட்கள் தீர்வு எட்டப் படாமல் இருந்த இந்த சர்ச்சை  இன்றுடன் முடிவுக்கு வந்தது. இந்த சமரச திட்டத்துக்கு அனைத்து மாநில ஐஐடி நிர்வாகமும் ஒத்துக் கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

        நாடு முழுவதும் தொழிற்கல்விக்கு ஒரே நுழைவுத் தேர்வு எனும் திட்டத்தை வரும் கல்வியாண்டுக்கு மத்திய அரசு அறிவித்திருந்தது. இதில் ஐ ஐடி யும் அடங்கும். ஆனால், இதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று ஐஐடி நிர்வாக இயக்குனர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். கான்பூர், லக்னோ, ஐஐடி நிர்வாக இயக்குனர்கள், தாங்கள் தனித்தேர்வு முறையைக் கைவிட மாட்டோம் என்றுகூட அறிவித்திருந்தனர்.

        இந்நிலையில், அனைத்து மாநில ஐஐடி நிர்வாக இயக்குனர்கள் கூட்டம் டெல்லியில் இன்று மத்திய அமைச்சர் கபில்சிபல் தலைமையில் நடப்பதாக இருந்தது. சில தவிர்க்க முடியாத காரங்களால் மத்திய அமைச்சர் கபில்சிபல் கலந்து கொள்ள முடியவில்லை என்றாலும், கூட்டத்தில் சமரச முடிவு எட்டப் பட்டுவிட்டதாக அனைத்து மாநில ஐஐடி கவுன்சில் தலைவர் என்.எம்,சர்மா கூறியுள்ளார்.
      
அவர் மேலும் கூறியதாவது, +2 வில் குறிப்பிட்ட மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு மூலத் தேர்வு வைக்கப் படும்.அதிலிருந்து 1 லட்சத்து 50 ஆயரம் பேர் தேர்ந்தெடுக்கப் படுவர். பின்னர் தேர்ந்தெடுக்கப் பட்டவர்களுக்கு சிறப்புத் தேர்வு வைக்கப்படும். இந்த சிறப்புத் தேர்வில் அகில இநதிய அளவிலான தரவரிசைப் பட்டியல் நிர்ணயிக்கப் படும் அதன்படி மாணவ, மாணவிகள் தேர்ந்தெடுக்கப் படுவார்கள் என்றும் என் எம் சர்மா கூறியதாக தெரிகிறது. மொத்தத்தில் நாடு முழுவது ஒரே நுழிவு தேர்வு என்கிற இந்த திட்டம், 2013 கல்வியாண்டில் நடைமுறைக்கு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

-4tamilmedia.com

யூரோ 2012 : போர்த்துக்கலை வீழ்த்தி இறுதி போட்டிக்குள் நுழைந்தது ஸ்பெயின்




 
ஸ்பெயின் - போர்த்துக்கல் அணிகளுக்கு இடையில் நேற்று நடைபெற்ற யூரோ அரையிறுதி போட்டியில், ஸ்பெயின் அணி வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
சம பலம் வாய்ந்த அணிகளாக விளையாடியதால் போட்டியின் 90 நிமிடங்கள் வரை இரு அணிகளும் கோல் அடிக்க தவறின. போர்த்துக்கல் சார்பில் ரொனால்டோ எடுத்த பல முயற்சிகளுக்கு அதிஷ்டமில்லாது போனது. ஸ்பெயின் அணி சார்பில் இறுதி நேரத்தில் களமிறங்கிய பெட்ரோவின் ஆட்டம் திணறவைத்தது.
இரு அணிகளுக்கும் கொடுக்கப்பட்ட மேலதிக நேரத்திலும் இரு அணிகளாலும் கோல் ஏதும் அடிக்க முடியவில்லை.

இறுதியில் பெனால்டி சூட்டவுட்டுக்கு  விடப்பட்டது. முதலிரு பெனால்டி வாய்ப்புக்களை இரு அணிகளுமே தவறவிட்டன. எனினும் அடுத்த நான்கு வாய்ப்புக்களையும் ஸ்பெயின் அணி பயன்படுத்திக்கொண்டது. இனியெஸ்டா, பிகே, ராமோஸ் ஆகியோருடன் இறுதி வாய்ப்பை பப்ரிகாஸ் கோலாக மாற்றினார்.

எனினும் போர்த்துக்கல் அணி சார்பில் அல்வெஸ் அடித்த நான்காவது பெனால்டி கோல் கம்பத்தில் பட்டு வெளியேறியதால் 4-2 என ஸ்பெயின் வெற்றி பெற்றது. இதன் மூலம் ஞாயிற்றுக்கிழமை கியிவில் நடைபெறும் இறுதி போட்டியில் ஜேர்மனி அல்லது இத்தால் அணியுடன் மோதவிருக்கிறது.

-4tamilmedia.com

செல்போன் பேசியபடியே பஸ் ஓட்டினால் பார்த்த இடத்திலேயே 'சஸ்பெண்ட்'!

சென்னை: சென்னை மாநகரில் செல்போன் பேசியபடி டிரைவர்கள் யாரும் பஸ் ஓட்டக்கூடாது என்று கண்டிப்பான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதைக் கண்காணிக்க தனி குழு அமைக்கப்பட்டு அவர்கள் நகர் முழுவதும் வலம் வருகின்றனர். யாரேனும் செல்போனில் பேசியதாக சிக்கினால் சம்பவ இடத்திலேயே அவர்களை சஸ்பெண்ட் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

சென்னை அண்ணா மேம்பாலத்தில் நேற்று மாநகர போக்குவரத்துக் கழகத்தின் 17 எம் பஸ் திடீரென விபத்துக்குள்ளாகி தலைகுப்புற கீழே விழுந்தது. இதில் 38 பேர்காயமடைந்தனர். டிரைவர் பிரகாஷ் செல்போனில் பேசியதால்தான் இந்த விபத்து நடந்ததாக தற்போது தெரியவந்துள்ளது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் விபத்துக்கான காரணம் குறித்து இன்று 2வது நாளாகவும் விசாரணை தொடர்கிறது. மேலும், செல்போனில் பேசியபடி டிரைவர்கள் யாரும் பஸ் ஓட்டக் கூடாது என்று கண்டிப்பான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அப்படி யாராவது பேசி சிக்கினால் சம்பவ இடத்திலேயே அவர்களை சஸ்பெண்ட் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இதைக் கண்காணித்து செயல்பட குழு ஒன்றை அமைத்துள்ள மாநகரப் போக்குவரத்துக் கழகம், நகர் முழுவதும் அந்தக் குழுவை சுற்றி வர பணித்துள்ளது என்று சென்னை மாநகர போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குநர் ராஜேந்திரன் கூறியுள்ளார்.

தாஜ்மஹாலை விடப் பெரிய காதல் சின்னம் உருவாக்கியவர்

உள்ளத்திலும் உழைப்பிலும், சாஜகானை விடப் பெரியவர், மறக்கபட்டு வரும் நட்சத்திர உழைப்பாளி, 

திரு.தசரத் மான்ஜி என்கிறார் Aatika Ashreen தனது பேஸ்புக் தளத்தில். அவர் மேலும் குறிப்பிடுகையில்..
இது ஒருபேரரசன் தன் காதலுக்காக 20000 ஆட்களை அமர்த்தி 22 ஆண்டுகள் கட்டி எழுப்பி, இன்று ஆயிரக்கணக்கான உலக மக்கள் அதிசயிக்கும் தாஜ்மகால் அல்ல. ஒரு விவசாயக் கூலி தனியொரு மனிதனாய் 22 ஆண்டுகள் உழைத்து 60 கிராம மக்களின் வாழ்க்கையை எளிமையாக்க வடித்த காதல் சின்னம்.
பீகாரில் கயா மாவட்டத்தின் கெலார் என்ற கிராமத்தைச் சேர்ந்த திரு.தசரத் மான்ஜி ஒரு நிலமில்லாத விவசாய கூலி. அன்பு மனைவி பாகுனி தேவி வீட்டிற்கு அருகில் மலையின் மறுபுறம் குடிக்கத் தண்ணீர் கொண்டு வரும்போது விழுந்து அடிபட்டார். சிறிது நாட்களில் சுகவீனப்பட மலையைச் சுற்றிக் கொண்டு மருத்துவமனைக்குக் கூட்டிச் சேர்க்குமுன்பே மனைவி இறந்துபோனாள். இந்த மலையின் குறுக்கே ஒரு பாதை இருந்திருந்தால் தன் மனைவி இறந்துபோயிருக்கமாட்டாள் என்று உறுதியாக நம்பினார் திரு.தசரத் மான்ஜி.
கெலார் கிராமத்திலிருந்து வஜீரகஞ் என்ற ஊர் சுற்றுப் பாதையில் எண்பது கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது. அங்குதான் இவர்களுக்கான மருத்துவ மனை இருந்தது. வஜீரகஞ்க்கு 13 கி.மீ.தொலைவில் பாதை அமைக்க முடியும். ஆனால் யாரும் அதை செய்ய முன்வரவில்லை. விளைவு 30 அடி அகலம், 360 அடி நீளத்திற்கு ஒரு பாதையை உருவாக்கும் பணியை 1959 ஆண்டு மேற்கொண்டார். மக்கள் இவரை பைத்தியகாரனாக பார்த்தார்கள் சேர்ந்து உழைக்கவரவில்லை ஆனாலும் விடாமுயற்சியால் பாதையை 1981 ஆண்டு முடித்தார். 60 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் இன்று 13 கிலோமீட்டரில் நகரத்தை அடைகிறார்கள். அன்றாடம் 8 கி.மீ தூரம் பள்ளிக்கு நடந்த அக்கிராமத்தின் குழந்தைகள் 3 கிலோ மீட்டரில் இன்று பள்ளியை அடைகிறார்கள். வழக்கம் போல் வாழ்ந்த காலம் வரை அந்த மாமனிதனின் உழைப்புக்கு மதிப்பளிக்காத அரசாங்கம், 18 ஆகஸ்ட் 2007 அன்று இறந்த அவருடைய உடலை மட்டும் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்தது.
இன்றைய நவநாகரீக மனிதனை எடுத்துக் கொள்ளுங்கள் எல்லாவற்றையும் பணத்தால் கணக்கிட்டு எதை சேமிக்க வேண்டுமோ அதனை சேமிக்காமல் இயற்கையை சுரண்டி தானும் அழிந்து எல்லா ஜீவராசிகளையும் அழிக்கிறான். மக்களுக்காக உழைத்த பெரியவர் திரு.தசரத் மான்ஜி அவர்களின் உழைப்பை நினைவுகூர்வதில் இந்த பதிப்பு மகிழ்ச்சியடைகிறது.
          

முஸ்லிம்கள் கட்டாய மதமாற்றம் செய்கிறார்களாம்; சொல்கிறார் ராமகோபாலன்.

பாகிஸ்தானில் உள்ள இந்துக்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கும் அறிக்கையொன்றை இந்து முன்னணியின் நிறுவனர் ராம.கோபாலன் சமீபத்தில் விடுத்துள்ளார். அதில், ''பாகிஸ்தானில் 65 ஆண்டுகளாக நடைபெற்று வரும் மதமாற்றக் கொடூரம் நெஞ்சை பிழிவதாக இருந்து வருகிறது. சில கோடியில் இருந்த இந்துக்கள் எண்ணிக்கை இன்று பல லட்சம் என்ற அளவில் வந்துவிட்டது என்று கூறியுள்ளார். அவரது கூற்றே பாகிஸ்தானில் கட்டாய மதமாற்றம் நிகழவில்லை என்பதற்கு சான்றாக உள்ளது. பாகிஸ்தானில் இந்துக்கள் சிறுபான்மையினராக இருக்கிறார்கள். ராமகோபாலன் கூறுவது போன்று 65 ஆண்டுகளாக கட்டாய மதமாற்றம் அங்கு நடைபெற்று இருந்தால், இன்று அங்கே சில ஆயிரம் இந்துக்கள் கூட மிஞ்சியிருக்க மாட்டார்கள். ஆனால் அவரே பல லட்சம் இந்துக்கள் பாகிஸ்தானில் இருப்பதாக கூறுகிறார். இது முரண்பாடக அவருக்குத் தெரியவில்லையா?
அப்படியானால் பாகிஸ்தானில் கோடிகளாக இருந்த இந்துக்கள், இன்று லட்சங்களாக குறைந்தது ஏன் என்று ராமகோபாலன் கேட்கலாம். கோடிகளில் இருந்தார்கள் என்று பொதுவாக சொல்வதைவிட, அன்று இத்தனை கோடிப்பேர் இருந்தார்கள். இன்றோ இத்தனை லட்சம் பேர் தான் இருக்கிறார்கள் என்று புள்ளிவிவரத்தோடு அவர் சொல்லியிருந்தால் நன்றாக இருக்கும். மேலும் ஒரு மதத்தவரின் எண்ணிக்கை குறைவுக்கு மதமாற்றம் ஒரு காரணமாக இருந்தாலும் அது மட்டுமே காரணமாக இருப்பதில்லை.
ஒரு காலத்தில் இந்தியாவில் வாழ்ந்த இந்து சகோதரர்கள் பத்துக்கும் மேற்பட்ட பிள்ளைகளை சாதாரணமாக பெற்று வளர்த்தார்கள். இன்று அதே இந்து சகோதரர்களில் பெரும்பாலோர் ஒன்றுக்கு மேல் பெறுவதில்லை. இதே நிலை நீடித்தால் இந்துக்களின் எண்ணிக்கை வளர்ச்சியடையாது. இந்த அடிப்படையில் பாகிஸ்தானில் சிறுபான்மையினராக உள்ள இந்துக்கள், தங்களின் பிறப்பு விகிதத்தை அதிகப்படுத்தாத பட்சத்தில் அவர்கள் குறைவாகவே காணப்படுவார்கள். மேலும் ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு மதத்திலிருந்தும் குறிப்பிட்ட சதவிகித்தினர் விரும்பியே மதம் மாறுகிறார்கள். அந்த வகையில் ஏற்கனவே சிறுபான்மையாக இருக்கும் இந்துக்களில் ஒரு குறிப்பிட்ட சதவிகிதத்தினர் மதம் மாறினால், இன்னும் எண்ணிக்கையில் குறைவது இயற்கையே.
அதே நேரத்தில் முஸ்லிம்களில் பெரும்பாலோர் குழந்தை விசயத்தில் கணக்குப் பார்ப்பதில்லை. ஏனென்றால் தனக்கும், தான் பெற்றெடுக்கும் பிள்ளைக்கும் படியளிப்பவன் இறைவன் தான் என்ற அசைக்கமுடியாத நம்பிக்கை அவனுக்கு இருக்கிறது. இதே ரீதியில் முஸ்லிம்கள் தங்களின் பிறப்பு விகிதத்தை கொண்டு செல்லும்போது, அவர்களில் ஒரு சாரார் மதம் மாறினாலும், முஸ்லிம்களின் சதவிகிதத்தில் மைக்ரோ அளவில் கூட குறைய வாய்ப்பில்லை. இன்னும் தெளிவாக ராமகோபாலனுக்கு புரியும் வகையில் சொல்வதாக இருந்தால் கடலிலிருந்து 4 டி.எம்.சி.தண்ணீர் வெளியேறினால் கடலுக்கு பாதிப்பில்லை. ஆனால் கிணற்றிலிருந்து வெளியேறினால்..? இதுதான் பாகிஸ்தான் நிலை. அப்படியானால் கட்டாய மதமாற்றம் பாகிஸ்தானில் நிகழவே இல்லையா? என்று ஒரு கேள்வி எழலாம். எல்லாநாடுகளிலும் எல்லா மதத்திலும் சில கடும்போக்காளர்கள் இருப்பது போன்று பாகிஸ்தான் முஸ்லிம்களில் விரல்விட்டு எண்ணக்கூடிய சில கடும்போக்கு மதவாத சிந்தனை உள்ளவர்கள் அத்திப்பூத்தது போன்று சிலரை மதம் மாற்றியிருக்கலாம். அதற்காக ஒட்டுமொத்த பாகிஸ்தான் முஸ்லிம்களே கட்டாய மதமாற்றத்தில் ஈடுபதுவது போன்ற கருத்தை ராமகோபாலன் விதைக்க முற்படுவது ஆரோக்யமானதல்ல.
இன்னும் சொல்வதானால் பாகிஸ்தான் ஆட்சியாளர்கள் ராமகோபாலன் நினைப்பது போன்று தீவிர இஸ்லாமிய வெறியர்கள் அல்ல. இந்தியாவில் பாபர் மஸ்ஜித் இடிக்கப்பட்டபோது, பாகிஸ்தானில் சிலரால் சில கோயில்கள் இடிக்கப்பட்டன. அவைகள் அந்த ஆண்டே பாகிஸ்தான் அரசால் திரும்பிக் கட்டித்தரப்பட்டன. ராமகோபாலன் நினைப்பது போன்று அவர்கள் இஸ்லாமிய வெறியர்களாக இருந்திருந்தால், முதலில் பள்ளிவாசலை இடித்த இந்தியா கட்டித்தரட்டும் என்று இருந்திருப்பார்கள். ஆனால் அவர்கள் அவ்வாறு இருக்கவில்லை. இன்றும் அங்குள்ள இந்துக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்பட்டதாக ராமகோபாலன் பாராட்டும் எந்த பத்திரிக்கையும் சொல்லவில்லை. ஏன் ராமகோபலனே சொல்லவில்லை. பாகிஸ்தானில் மதவெறி ஆட்டம் போடுவதாக ராமகோபாலன் கருதுவதால் இங்கே இந்த தகவலை பதிய வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது.
அடுத்து ''இஸ்லாத்தில் வன்முறைக்கு இடமில்லை என்பார்கள். ஆனால் பயங்கரவாதச் செயலில் ஈடுபட்டு மனித உயிர்களைக் கொன்று குவிப்பவன் கையில் குரானைத் தான் தூக்கிபிடிக்கிறான். அதனை முஸ்லீம் அரசியல்வாதிகளோ, முஸ்லீம் மதகுருக்களோ கண்டிப்பதில்லை, அவனுக்கு எதிராக ஃபத்வா வழங்குவதில்லை. ஆனால் முஸ்லீம் அல்லாதவர்கள் தவறுதலாகச் செய்துவிட்டால் மதவெறியைத் தூண்டி கலவரத்தை உருவாக்கி வந்துள்ளார்கள். ஏன் இந்த இரட்டை வேடம்'' என்று கேட்கிறார் ராமகோபாலன்.
பயங்கரவாத செயலில் ஈடுபடுபவன் குர்ஆனை தூக்கிப் பிடித்து விட்டால், அவன் செயலை இஸ்லாம் அங்கீகரிக்கிறது என்று அர்த்தமா? சாமான்யர்களிடமிருந்து தங்களை வேறுபடுத்திக் காட்ட இந்துச் சாமியார்கள் அணியும் காவி உடையணிந்து பயங்கரவாதத்தில் ஈடுபட்ட பிரக்யா சிங் உள்ளிட்ட பலர் செய்த பயங்கரவாதங்களை இந்து மதம் அங்கீகாரம் பெற்ற செயலாக ஏற்றுக் கொள்வாரா ராமகோபாலன்? பயங்கரவாத செயலை செய்த ஒரு இந்துத்துவா, பகவத் கீதையை கையில் வைத்திருந்தால், அவனது பயங்கரவாதம், இந்து மதத்தில் உள்ளதுதான் என்று சொல்ல ராமகோபாலன் தயாரா? எந்த உயிரையும் அநியாயமாக கொல்லச் சொல்லும் ஒரு வசனத்தை குர்'ஆனிலிருந்து காட்டுவாரா ராமகோபாலன்? ''பயங்கரவாத செயலில் ஈடுபட்டவனை முஸ்லிம் மதகுருக்களும், முஸ்லிம் அரசியல் தலைவர்களும் கண்டிக்கவில்லையாம். கதைவிடுகிறார் ராமகோபாலன். எந்த பயங்கரவாதியை எந்த முஸ்லிம் மதகுரு தோளில் தட்டிக்கொடுத்து பாராட்டினார்கள்? இன்னும் சொல்லப்போனால் பாதிக்கப்பட்ட ஒரு முஸ்லிம் உணர்ச்சி வசப்பட்டு பழிவாங்க நினைத்தால் கூட அவனை பொறுமையை கொண்டு உபதேசம் செய்து பக்குவப்படுத்தும் வேலையைத் தான் முஸ்லிம் மதகுருக்கள் செய்கிறார்கள். இதற்கு உதாரணமாக பாபர் மஸ்ஜித் தகர்ப்பைக் கூறலாம். பாபர் மஸ்ஜிதை ராமகோபாலன் வகையறாக்கள் தகர்த்தபோது, முஸ்லிம்களை முஸ்லிம் மதகுருக்களும், தலைவர்களும் அமைதிப்படுத்தியிருக்காவிட்டால் அத்வானி வகையாறக்கள் செய்ததை அப்துல்லாக்களும் செய்திருப்பார்கள். எனவே எந்த முஸ்லிம் மதகுருவும், எந்த முஸ்லிம் தலைவரும் வன்முறையை விரும்புவதில்லை. அதை ஊக்கப்படுத்துவதுமில்லை. அவ்வாறு ஊக்கப்படுத்தினால் அவர் முஸ்லிம் மதகுருவாக இருக்கமாட்டார் என்பதை ராமகோபாலன் விளங்கிக் கொள்ளட்டும்.
அடுத்து, ''இஸ்லாத்தில் கட்டாய மதமாற்றத்திற்கு இடமில்லை என்று குரானிலிருந்து மேற்கொள்காட்டும் முஸ்லீம் அரசியல்கட்சித் தலைவர்கள், 30 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழகத்தில் தென்காசி, இராமநாதபுரம் பகுதிகளில் ஆசை வார்த்தை காட்டி, அச்சுறுத்தி ஒரு லட்சம் பேரை மதமாற்ற முயன்றபோது கண்டிக்கவில்லை. அதற்குத் தலைமை தாங்கியவர்களின் வாரிசுகள் தான் இன்றைய முஸ்லீம் அரசியல்வாதிகள். அந்தச் சூதாட்டத்தை இந்து முன்னணி ஆன்மீக, தேசிய பெரியோர்களின் ஒத்துழைப்பால் தடுத்து நிறுத்தியது. முஸ்லீம்களின் ஆசைக்கு பலியானவர்கள் இன்றும் துன்பத்தையே அனுபவித்து வருகின்றனர். இன்று இவர்கள் வடிப்பது முதலைக் கண்ணீர் என்பதை மக்கள் உணர்வார்கள்'' என்றும் கூறியுள்ளார் ராமகோபாலன்.
தமிழகத்தில் முஸ்லிம்கள், 30 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழகத்தில் தென்காசி, இராமநாதபுரம் பகுதிகளில் ஆசை வார்த்தை காட்டி, அச்சுறுத்தி ஒரு லட்சம் பேரை மதமாற்ற முயன்றதாக ஒரு முழுப்பொய்யை உதிர்க்கிறார் ராமகோபாலன். இவர் சுட்டிக்காட்டுவது போல் முஸ்லிம்கள் எதைச் சொல்லி ஆசை வார்த்தை காட்டினார்கள்? உங்கள் பிள்ளைகளை இலவசமாக படிக்க வைக்கிறோம் என்று ஆசை காட்டினார்கள் என்று சொல்லப் போகிறாரா? அப்படி சொன்னால அது பொய்யாகிவிடும். ஏனென்றால் முஸ்லிம்களே பத்து வரைக்கும் கூட படிக்க முடியாமல் பாஸ்போர்ட்டு எடுக்கையில், எப்படி மற்றவர்களுக்கு இந்த ஆசை காட்டமுடியும்? பணம் காசு தருகிறோம் என்றோ, வேலை வாய்ப்புகள் தருகிறோம் என்றோ ஆசை காட்டினார்கள் என்று ராமகோபாலன் சொன்னால் அதுவும் பொய்யாகிவிடும். ஏனென்றால் இந்தியாவில் தலித் சமுதாயத்தை விட பின்தங்கிய ஒரு சமூகமாக முஸ்லிம் சமுதாயம் உள்ளதாக நீதியரசர் ராஜேந்திர சச்சார் போன்றவர்களே சொல்லியிருக்கும்போது, முஸ்லிம்கள் எப்படி மற்றவர்களுக்கு ஆசை காட்டி மதமாற்றம் செய்யமுடியும்? மத மாற்றம் செய்வதற்காக முஸ்லிம்களுக்கு வேறு வெளிநாடுகள் பண உதவிகளை செய்கின்றன. அதைக் கொண்டு மதமாற்றம் செய்கிறார்கள் என்று ராமகோபாலன் சொல்லமுடியுமா? வெளிநாடுகளில் இருந்து ராமகோபாலன் வகையறாக்களுக்கு வரும் பொருளாதார உதவிகளையும், முஸ்லிம் நல அமைப்புகளுக்கு வரும் பொருளாதார உதவிகளையும் விசாரணைக்கு உட்படுத்த ராமகோபாலன் தயாரா? இதாவது பரவாயில்லை. முஸ்லிம்கள் அச்சுறுத்தி மதமாற்ற முயற்சித்தார்கள் என்று ராமகோபாலன் கூறி தானும் நகைச்சுவையில் வடிவேலுவை மிஞ்சமுடியும் என்று காட்டுகிறார். ராமகோபாலன் கூறும் அந்த காலகட்டத்தில் இந்தியாவில் எந்த முஸ்லிம் மன்னர் ஆட்சியில் இருந்தார்? மக்களாட்சி தானே நடந்தது. அதுவும் ராமகோபாலன் வகையறாக்களுக்கு ஆதரவு மனப்பான்மையுடைய ஒருவர் தானே தமிழக முதல்வராக இருந்தார்? அப்படியிருக்க முஸ்லிம்கள் எப்படி ஒரு லட்சம் பேரை அச்சுறுத்த முடியும்? ஆட்சியாளர்கள் எங்கே போனார்கள்? நாம் ராமகோபாலனுக்கு சவாலாகவே சொல்கிறோம். அவர் கூறும் அந்த காலகட்டத்தில் முஸ்லிம்கள் ஆசை வார்த்தை கட்டினார்களா? அல்லது தாமாக முன் வந்து மதம் மாறியவர்களை, மாற முயன்றவர்களை மீண்டும் தாய் மதத்திற்கு இழுக்க அரசாங்கம் ஆசை வார்த்தை காட்டியதா? முஸ்லிம்கள் அச்சுறுத்தினார்களா? அல்லது விரும்பி மதம் மாறியவர்களை அரசு அச்சுறுத்தியதா? கலந்துரையாட ராமகோபாலன் தயாரா?
மேலும், ''முஸ்லீம் மதத்தில் கட்டாய மதமாற்றத்தை ஏற்கவில்லை என்பவர்கள் முன்பு கட்டாய மதமாற்றத் தடைச் சட்டம் கொண்டு வந்தபோது ஏன் எதிர்த்தார்கள். இஸ்லாத்தில் இருப்பதை வரவேற்கத்தானே செய்யவேண்டும்'' என்று அறிவுப்பூர்வமாக[!] கேட்கிறார் ராமகோபாலன். இஸ்லாத்தில் கட்டாய மதமாற்றம் இல்லை என்பது எள்ளளவும் எள்ளின் முனையளவும் சந்தேகமில்லா உண்மை. முஸ்லிம்களில் எவருக்கும் எவரையும் கட்டாய மதமாற்றம் செய்வதில் விருப்பமில்லை என்பதும் உண்மை. அப்படியிருக்க, கட்டாய மதமாற்ற சட்டத்தை ஏன் எதிர்த்தார்கள் என்று பார்ப்பதற்கு முன்னால், இன்னொன்றையும் ராமகோபாலன் விளங்கிக் கொள்ளவேண்டும். அதாவது கட்டாய மதமாற்ற சட்டத்தை முஸ்லிம்கள் மட்டுமன்றி கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட சில மதத்தவரும் எதிர்த்தார்கள். முஸ்லிம்கள் எதிர்த்ததற்கு காரணம், இனிமேல் இஸ்லாத்திற்கு யாரும் வரமட்டார்களோ என்பதற்காக அல்ல. அந்த கருப்புச் சட்டத்தில் இடம்பெற்ற சில ஷரத்துகள், இந்திய அரசியல் சாசனம் வழங்கியுள்ள மத ரீதியான சில உரிமைகளை பறிக்கும் வகையில் இருந்தது. இதுதான் முஸ்லிம்கள் எதிர்ப்பிற்கு காரணம் என்பதை ராமகோபாலன் விளங்கிக் கொள்ளட்டும்.
இறுதியாக, காட்டாற்று வெள்ளத்தை கைகளால் தடுத்திட முடியாது; அதுபோன்று தான் இஸ்லாமிய வளர்ச்சியையும் எவரது புலம்பலும் தடுத்து நிறுத்தி விடாது. அமெரிக்காவின் இரட்டை கோபுரத்தை இஸ்லாமிய பயங்கரவாதிகள் தகர்த்து விட்டார்கள். இஸ்லாம் தீவிரவாத மார்க்கம் என்று அமெரிக்கா அதிபர்கள், அமெரிக்க மக்கள் மனதில் நஞ்சை விதைக்க நினைக்கையில், அதை உடைத்தெறிந்து இன்று இஸ்லாம் அமெரிக்காவில் மட்டுமல்ல, மேற்கத்திய நாடுகளில் வெகு வேகமாக பரவி வருகிறது. எனவே பாகிஸ்தானில் உள்ள முஸ்லிம்களோ, இந்தியாவில் உள்ள முஸ்லிம்களோ, வேறு எந்த நாட்டில் உள்ள முஸ்லிம்களோ கட்டாய மதமாற்றம் செய்யவேண்டிய அவசியமில்லை. ஏனென்றால் இஸ்லாம் மற்ற மதங்களை மட்டுமல்ல; மனிதனின் மனங்களையும் தாமாகவே வெல்லும் வலிமையுடையது என்று கூறிகொள்கிறோம்.

"மராத்வாடா பாகிஸ்தானாக மாறி வருகிறது: பால்தாக்கரே புலம்பல்!


http://archive.inneram.com/images/2011/leaders/india/bal_thackarey.jpg


மும்பை:வெறும் வாய்க்கு அவல் கிடைத்த மாதிரி சும்மா கிடந்த பால்தாக்கரேக்கு அபூஜிண்டாலின் கைது பெரிய பிரச்சார ஆயுதமாக மாறிவிட்டது. தனது சாம்னா இதழில் எழுதியுள்ள தலையங்கத்தில் “மகாராஷ்டிராவின் மராத்வாடா பிராந்தியம் ‘புதிய பாகிஸ்தான்’ ஆக மாறி வருகிறது” என்று புலம்பியுள்ளார்.

மும்பையில் 1993-ஆம் ஆண்டு நடந்த முஸ்லிம் இனப்படுகொலையில் முக்கிய குற்றவாளி என்று கிருஷ்ணா கமிஷனால் அடையாளம் காட்டப்பட்ட பால்தாக்கரே மீது அரசு எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளாததால் சுதந்திரமாக இருந்து வருகிறார்.

மஹாராஷ்ராவில் தமிழர்கள் உள்ளிட்ட பிற மாநிலத்தவர்களின் மீது வெறுப்பை உமிழ்ந்து ‘மராட்டியம் மராட்டியர்களுக்கே’ என்ற கொள்கையை உள்ளத்தில் சுமந்து வன்முறைகளை கட்டவிழ்த்து விட்ட பால்தாக்கரே, முஸ்லிம்கள் மீது தொடர்ந்து அவதூறுகளையும், வன்முறைகளையும் ஏவி வருபவர். மஹராஷ்ட்ராவை வன்முறை களமாக்குவதில் முதலிடம் வகிக்கும் பால்தாக்கரே தற்பொழுது ‘ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுத’ கதையாக மராத்வாடா குறித்து கவலைப்படுகிறார்.

மும்பை காட்கோபர் குண்டுவெடிப்பு, ஜெர்மன் பேக்கரி குண்டுவெடிப்பு, குஜராத் வெடிகுண்டு தாக்குதலில் சம்பந்தப்பட்ட எல்லா தீவிரவாதிகளும் மராத்வாடாவை சேர்ந்தவர்களாகவே இருக்கிறார்கள் என்றும் மராத்வாடா ஒரு புதிய பாகிஸ்தானாக மாறி வருவது மகாராஷ்டிராவுக்கு மட்டுமின்றி ஒட்டு மொத்த இந்திய நாட்டுக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் பால் தாக்கரே கவலைக்கொள்கிறார்.

பால்தாக்கரே கூறிய மேற்கண்ட அனைத்திலும் அப்பாவிகளே பலிகடாவாக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் இனப்படுகொலைகளையும், கலவரங்களையும், குண்டுவெடிப்புகளையும் தங்களது செயல்திட்டமாக கொண்டு இயங்கும் சங்க்பரிவார்களும், பால் தாக்கரே கும்பலும் முஸ்லிம்கள் மீது பழிபோடுவதும், தேசத்திற்காக முதலைக் கண்ணீர் வடிப்பதும் வழக்கமாகிவிட்டது.

thoothu


புதன், 27 ஜூன், 2012

அமெரிக்காவில் விபசாரத்திலிருந்து மீட்கப்பட்ட 79 சிறுமிகள்

https://encrypted-tbn3.google.com/images?q=tbn:ANd9GcQtWKRA2hUmgTDP8Sgw5fRhSN4xjaf3knho_n8VSZcUzAn4X4c8






                  அமெரிக்காவில் விபசார தொழிலில் ஈடுபட்டு வந்த 79 சிறுமிகளை பொலிசார் மீட்டுள்ளனர். இது தொடர்பாக 104 புரோக்கர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அமெரிக்காவில் 13 வயது முதல் 17 வயது வரையுள்ள, பெண்கள் விபசாரத்தில் ஈடுபடுவது தற்போது மிகவும் அதிகரித்து வருவதாக பொலிசார் தெருவித்துள்ளனர். 

ஒவ்வொரு ஆண்டும் இந்த வயதுள்ள ஒரு லட்சம் பெண்கள் விபசாரத்தில் தள்ளப்படுவதாக அந்நாட்டு ஊடகம் தகவல் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே எப்.பி.ஐ., அதிகாரிகள், பல்வேறு இடங்களில் அதிரடி சோதனை நடத்தி, 79 சிறுமிகளை விபசாரத்திலிருந்து மீட்டுள்ளனர். இவர்களை “செக்ஸ்” தொழிலில் ஈடுபடுத்தியது தொடர்பாக, 104 புரோக்கர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

மீட்கப்பட்ட ஒரு பெண் குறிப்பிடுகையில், தான் 11 வயது முதல் இந்த தொழிலில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்தள்ளார். வாடிக்கையாளர்களுக்காக தெருக்களில் காத்திருந்த 2,200 சிறுமிகளை பொலிசார் கைது செய்துள்ளனர். இது தொடர்பாக 1,017 வழக்குகள் அமெரிக்காவில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
















ஏனைய செய்தி சிறுவனை பாலியல் ரீதியாக துன்புறுத்தல்: தலை துண்டித்து மரண தண்டனை நிறைவேற்றம்



                       ஒரு சிறுவனைக் கடத்திச் சென்று, அடித்து துன்புறுத்தி பாலியல் வன்முறைக்கு உட்படுத்திய நபருக்கு சவுதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டது.

சவுதி அரேபியாவில் கற்பழிப்பு, மதமாற்றம், திருடுதல், போதைப்பொருள் கடத்துதல், கொலை போன்ற குற்றங்களுக்கு தலை துண்டித்து மரண தண்டனை வழங்கப்படுவது வழக்கம்.

இதன்படி முகம்மது பின் அஹமது அல் ஜுபேரி என்ற நபருக்கு சிறுவனை பாலியல் ரீதியாக துன்புறுத்திய குற்றத்திற்காக மரண தண்டனை விதிக்கப்பட்டது.

மேலும் போதை, மது போன்ற குற்றச்சாட்டுகளும் இவர் மீது சுமத்தப்பட்டது. பாதிப்புக்கு உள்ளான சிறுவனைப் பற்றிய தகவல்களை அரசு வெளியிடவில்லை. 

இந்த ஆண்டு மட்டும் சுமார் 46 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


தமிழனை ஏமாளியாக்கும் புதுதிட்டம்

http://a8.sphotos.ak.fbcdn.net/hphotos-ak-ash3/s480x480/575558_435816653118229_381823520_n.jpg


                நதிநீர், மின்சாரம், மீனவர் பாதுகாப்பு, அரசியல் பிரதிநிதித்துவம் என்று எல்லாவற்றிலும் இரண்டாம்தர குடிமக்களாய் நடத்தப்படும் தமிழகத்தின் ஏமாளிதனத்தின் இன்னொரு அடையாளம் கெயில் (GAIL) காஸ் லைன் பதிப்பு திட்டம்.

கேரளா-கொச்சியில் இருந்து கர்நாடக-பெங்கலூருவிற்கு தமிழ்நாடு வழியாக காஸ்லைன் செல்கிறது. இதனால் விவசாயிகள் பெரிய அளவில் பாதிப்படைகின்றனர். காஸ் விற்பதால் வரிப்பயன்&வேலை பெறுவது கேரளா, அதை வாங்கி பயன்படுத்துவது கர்நாடகா இருந்தும் நம் நிலங்களுக்குள் பைப்லைன் வர காரணம் அம்மாநில விவசாயி/அரசு எதிர்பா? இல்லை தமிழர் என்ற இளக்காரமா..??


ஏழு மாவட்ட(!) விவசாய நிலங்களுக்குள் இந்த பைப் செல்வதால் அந்த நிலத்தில் விவசாய கட்டுப்பாடு வரும். அதாவது தண்ணீர் பாய்ச்சகூடாது; மழை பெய்தால் அதைக்கொண்டு பயிர் செய்யலாம்; உழுதல் கூடாது; மரம்,வீடு,ரோடு கூடாது. அந்த பைப்லைனுக்கு பாதிப்பென்றால் அந்த விவசாயிதான் பொறுப்பு! எப்படி நியாயம்?? இதற்கு அவர்கள் தரும் இழப்பீடு ஏக்கருக்கு ஆயிரம் ரூபாய்!


ஒரு வயதான விவசாயி, நில உரிமையாளர், நிலத்தில் அத்துமீறி நுழைந்து குழி பறிப்பதும் நிலம் அளப்பதும் கண்டு கேள்வி கேட்டவரை "திஹார் ஜெயிலுக்கு போறியா?? XXX, ஓடீறு..!!". கூலிக்கு இருக்கும் ஒரு கடைநிலை ஊழியனுக்கே இவ்வளவு துணிச்சல் எனில் அந்த நிர்வாகத்துக்கு தமிழ்விவசாயி என்றால் எவ்வளவு அலட்சியம் கற்பிக்கபட்டிருக்கும்?


தமிழகம் வழியாக வரகூடாது என்ற கழுதை கோரிக்கை தேய்ந்து, ரயில் தட ஓரத்திலும், நெடுஞ்சாலை ஓரங்களிலும் கொண்டு செல்லுங்கள். விவாசயத்தை அழிக்காதீர்கள், விவசாயிகளுக்கான கட்டுபாடுகளை தளர்த்துங்கள் என்ற கட்டெறும்பு கோரிக்கை வைத்தாலும் ஏற்க மறுக்கிறார்கள். இவர்கள் சொல்லும் காரணம் தமிழகம் வழியாக வந்தால் 310கிமீ; கேரளா, மைசூரு வழியாக வந்தால் 470கிமீ. ஆனால் வரைபடத்தை பார்த்தால் எது குறைந்த தூரம் என்பது விளங்கும். அந்த பாதையைவிட தமிழக பாதையில் மலைகளும் வனப்பகுதியும் அதிகம்.


விவசாய நிலத்துக்குள்தான் ரோடு, ரயில், ரியல்எஸ்டேட், காஸ்லைன், தொழிற்சாலை அனைத்தும் வருமா? இதற்கான போராட்டம் வலுத்து வரும் நிலையில் அனைத்து தரப்பு மக்களும் ஆதரவளிக்க வேண்டும். எல்லா மாவட்ட விவசாயிகளும் வேறுபாடுகள் மறந்து ஓரணியில் நிற்க வேண்டும். இணைய தமிழர்களும் தங்கள் ஆதரவை காட்ட வேண்டும்.

-Source :- http://timesoftamilnadu.blogspot.in/2012/06/piravakam-gail.html 

மஹராஷ்ட்ரா சிறைச்சாலையின் அதிர்ச்சி தகவல்!! TISS!!

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhUASjDMB6mh-y5wrCQKbSsg3_PRdPw6rG_yl1cP9FtiuHFBppUf3FYxS2L4LCf39ce9xdx1CTd4uQg5BftKd_Fqp4u-kXiMnasGOpCCXrCmRuCesfgZVa4Dl3s9GAi2DJ5_tWttLEYLI0w/s1600/images+%25281%2529.jpg

புதுடெல்லி: மஹராஷ்ட்ரா சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள முஸ்லிம் கைதிகளின் சமூக சூழல்களை குறித்து ஆய்வு செய்த டாட்டா இன்ஸ்ட்யூட் ஆஃப் சோசியல் சயன்ஸஸ்(Tata Institute of Social Sciences (TISS)) வெளியிட்டுள்ள அறிக்கையில் அதிர்ச்சிகரமான உண்மைகள் அடங்கியுள்ளன. சிறையில் அடைக்கப்பட்டுள்ள 90 சதவீதத்திற்கும் அதிகமான முஸ்லிம்கள் நிரபராதிகள் என்றும், க்ரிமினல் கும்பல்களுடன் அவர்களுக்கு எவ்வித தொடர்பும் இல்லை என்றும் TISS அறிக்கை கூறுகிறது.

சில வழக்குகளில் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தைச் சார்ந்தவர்கள் மட்டுமே போலீஸ் கைது செய்கிறது என்று TISS அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

15 சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள 3 ஆயிரம் முஸ்லிம் கைதிகளில் 70 சதவீதம் பேர் விசாரணை கைதிகள் ஆவர். தடா, மோக்கா போன்ற தீவிரவாத தடுப்புச் சட்டங்களின் கீழும், அஃபிஸியல் சீக்ரெட் சட்டத்தின் கீழ் உளவாளிகள் என முத்திரைக் குத்தப்பட்டும் இவர்களில் பெரும்பாலோர் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். ஆனால், இவர்கள் கடுமையான குற்றங்கள் எதுவும் செய்யவில்லை என்று TISS ஆய்வறிக்கை கூறுகிறது.

25.4 சதவீதம் பேருக்கு வழக்குகளை வாதிட வழக்கறிஞர்கள் இல்லை.

TISS க்காக க்ரிமினாலஜி அண்ட் ஜஸ்டிஸ் ஸ்கூல் ஆஃப் சோசியல் வர்கில் டாக்டர்.விஜய் ராகவனும், ரோஷ்னி நாயரும் ‘மஹராஷ்ட்ரா சிறைகளில் முஸ்லிம் சமூகத்தின் சமூக பொருளாதார சூழல் மற்றும் மறுவாழ்வுக்கான தேவைகள்’ என்ற தலைப்பில் இந்த ஆய்வை நடத்தியுள்ளனர்.

-சிந்திக்கவும்

காஷ்மீர் விவகாரம்: மத்திய சிறப்பு சட்டங்கள் மறு ஆய்வு! மத்திய ஆய்வுக்குழு அறிக்கை


     
                   காஷ்மீரின் சமூக அரசியல் சூழல்களை ஆய்வு செய்து அறிக்கை தரும்படி மத்திய அரசு மூவர் குழுவை 2010ல் அமைத்தது. சரியாக ஒரே ஆண்டில் (அக்டோபர் 12, 2011) அக்குழு தனது அறிக்கையை உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்திடம் சமர்ப்பித்தது. சுமார் ஆறு மாதங்கள் கழித்து உள்துறை அமைச்சகம் அவ்வறிக்கையை மே 24, 2012 அன்று வெளியிட்டது.
திலீப் பட்கவுன்கர் (பத்திரிக்கையாளர்), ராதாகுமார் (கல்வியாளர்), எம்.எம்.அன்சாரி (முன்னாள் தகவல் ஆணையர்) ஆகியோர் காஷ்மீரின் நிலவரம் குறித்து ஆராய்ந்துள்ளனர். நாடாளுமன்றத்தின் நிதி அறிக்கை தொடர் முடிவுற்ற இரண்டு நாள் கழித்து இந்த அறிக்கை விவாதத்திற்கு விடப்பட்டது. அதேநேரம், இந்தியா-பாகிஸ்தான் உள்துறை செயலர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தை இஸ்லாமாபாத்தில் நடந்துகொண்டிருந்தது. மே 24ஆம் தேதி, இந்த அறிக்கை மத்திய உள்துறை அமைச்சகத்தின் வலைதளத்தில் வெளியிடப்பட்டது. இவ்வறிக்கையானது, குழுவினது சொந்த கருத்து, அதன்மீது அரசு இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை, இதன் கருத்துக்கள் மீதான விவாதம் வரவேற்கப்படுகிறது என்கிறார் உள்துறையின் செய்தித் தொடர்பாளர் ஒருவர்.

ஜம்மு-காஷ்மீரின் அரசு, அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள், போராட்ட அமைப்புகள் என அனைத்துப் பிரிவினருடனும் இக்குழுவினர் விரிவான ஆய்வுகள் நடத்தியுள்ளனர். 1952ல் ஜம்மு-காஷ்மீருடன் ஒப்பந்தம் செய்துகொண்ட பின்னர் அங்கு பல ஆண்டுகளாக அமுலில் இருந்துவரும் மத்திய அரசு சட்டங்கள் மற்றும் இந்திய சாசன சட்ட விதிகள் அனைத்தையும் மீளாய்வு செய்ய மத்திய குழு (Constitution Committee) ஒன்றை அமைக்க வேண்டுமென மூவர் குழு பரிந்துரை செய்திருக்கிறது. 1953ஆம் ஆண்டுக்கு முன்பிருந்த நிலையை மீண்டும் கொண்டுவரத் தேவையில்லை, கடிகாரம் திருப்பிச் சுற்றுவதில்லை என்றும் தெரிவித்திருக்கிறது. ஆனால், 1953ஆம் ஆண்டுக்கு முன்பிருந்த உரிமைகள் வேண்டும் என்று ஜம்மு-காஷ்மீர் மக்கள் விரும்புகின்றனர். காஷ்மீர் சட்டமன்றத்திலேயே அதற்கான தீர்மானமும் இயற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. காஷ்மீருக்கு சிறப்புரிமைச் சட்டம் 370 இந்திய நடுவண் அரசால் வழங்கப்பட்டிருந்தது. ஆனால் அந்த உரிமைகள் பல ஆண்டுகளாக படிப்படியாக மீறப்பட்டு விட்டன. இந்த விதி 370ஐ மறு மதிப்பீடு செய்யும் அவசியம் இருப்பதாக அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. சாசன சட்டத்தின் பகுதி 21 மற்றும் விதி 370ன் தலைப்புகளில் ‘தற்காலிகமானது’ (Temporary) என்று எழுதப்பட்டுள்ளதை நீக்க வேண்டும். அதற்கு பதிலாக, இந்தியாவின் பிற மாநிலங்களுக்கான சிறப்பு விதி 371ன் தலைப்பில் உள்ளதைப் போன்று காஷ்மீரின் விதி 370க்கும் ‘சிறப்பானது’ (Special) என்று மாற்ற வேண்டும்.

விதி 370ஐ நீக்க வேண்டும் என்று சொல்லவில்லை என்று கூறும் பட்கவுன்கர், நாங்கள் புதிதாக எதையும் கண்டு கூறவில்லை என்கிறார். விதி 371ன் கீழ் இந்திய அரசின் பல மாநிலங்கள் சிறப்பு சட்டங்கள் கொண்டவையாக இருக்கின்றன என்கிறார். உருது மொழியில் பெயரிடப்பட்டுள்ளதைப் போல் ஆளுனர் மற்றும் முதல்வர் என்பதை ஆங்கிலத்தில் Governor மற்றும் Chief Minister என்று இப்போதுள்ள நிலையிலேயே பெயரிட்டுக் கொள்ளலாம் என்றுள்ளது அறிக்கை.

1965 வரை, ஜம்மு காஷ்மீரின் முதல்வர், பிரதமர் (வாஸிர்-இ-ஆஜம்) என்றும் கவர்னர், ஜனாதிபதி (சாதர்-இ-ரியாஸத்) என்றும் அழைக்கப்பட்டனர். அரசியல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும், சமூகம் மற்றும் கலாச்சார ரீதியாகவும் புதிய திட்டம் ஒன்றை குழு முன்வைத்துள்ளது. ஆனால் ஜம்மு-காஷ்மீர் மக்களுக்குத் தேர்வு செய்யப்பட்ட அடிப்படையில் ஒரே மாதிரியான ஹிμம்முறை பொருந்தாது என்றும் கூறுகிறது.

• அரசியல் ரீதியில், மத்திய-மாநில அரசுகள் இடையே ஒத்துழைப்பு வேண்டும்,

• மாநிலத்தின் அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்,

• நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் செயல்பாடுகள் அமைய வேண்டும்,

• பொதுமக்கள் பாதுகாப்புச் சட்டம் (Public Safety Act); கலவரப் பகுதி சட்டம் (Disturbed Areas Act); ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் (AFSPA) ஆகியவை மறுஆய்வு செய்யப்பட வேண்டும்,

• மத்திய அரசு மற்றும் ஹுரியத் அமைப்புக்கும் இடையே துரிதமாக பேச்சுவார்த்தைகள் நடைபெற வேண்டும், இந்தப் பேச்சுகள் மூலம் உணரத்தக்க விளைவுகள் காணப்பட வேண்டும், • சாசனக் குழு (Constitution Committee) வின் பரிந்துரைகள் மீதான விவாதத்தில் பாகிஸ்தான், பாகிஸ்தான் நிர்வகிக்கும் ஜம்மு-காஷ்மீர் பங்கேற்க அனுமதிக்க வேண்டும்,

• அரசுக்கும் ஹுரியத்துக்குமான பேச்சு வார்த்தையில் வெளிப்படும் விபரங்களும் சேர்க்கப்பட வேண்டும்,

• எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டிற்கு இருபு றமும் உள்ள மக்கள் இடையே உறவுகள் மேம்பட இந்தியா-பாகிஸ்தான் இடையே ஒப்பந்தம் இடப்பட வேண்டும்,

• தீர்வுகள் இந்தியா-பாகிஸ்தான் பேச்சுவார்த்தைகளை சார்ந்திருக்கக் கூடாது. ஜம்மு-காஷ்மீரில் உள்ள வர்த்தகர்கள் ஒரு உடன்பாட்டுக்கு வந்தால் பாகிஸ்தான் அதில் இணைந்துகொள்ள கதவு எப்போதும் திறந்தே இருக்க வேண்டும். கட்டுப்பாட்டுக் கோட்டை (LoC) அர்த்தமற்றதாக ஆக்குவதுதான் குறிக் கோளாக இருக்க வேண்டும். அது உடன்படிக்கை மற்றும் ஒத்துழைப்பின் சின்னமாக இருக்க வேண்டும்.

• பண்டிட்டுகள் உள்பட அனைத்து காஷ்மீரிகளும் காஷ்மீருக்குத் திரும்ப வேண்டும்,

• கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அப்பால் இருக்கும் ஆதரவற்ற காஷ்மீரிகள் திரும்புவதற் கான வழிகளை எளிமைப்படுத்த வேண்டும்,
• மறைக்கப்பட்ட படுகொலைகளை விசாரிக்க நீதி ஆணையம் அமைக்க வேண்டும். மனித உரிமைகளையும், சட்ட சீர்திருத்தங்களையும் வேகமாகக் கொண்டுவர வேண்டும்.

• ஜம்மு-காஷ்மீர்-லடாக் என மூன்று பிரிவுக்கும் மண்டல ஆட்சிக் குழுக்களை (Regional Councils) ஏற்படுத்த வேண்டும்.

• நாட்டின் உள் மற்றும் வெளிப்புறப் பாதுகாப்புக்கும், வலுவான பொருளாதார நலன்களுக்கும், குறிப்பாக ஆற்றல் மற்றும் நீர்வளங்களை ஈட்டுவதற்கும் தொடர்பில்லாத சட்டங்களை நாடாளுமன்றம் உருவாக்கக் கூடாது.

• மாநில அரசுக்கு தன்னாட்சிக்கான உரிமையை அதிகரிக்க வேண்டும், சட்டப்படியான நிறுவனங்களையும் அதிகப்படுத்த வேண்டும். அவைகளின் நடவடிக்கைகள் ஜம்மு-காஷ்மீரின் சாசன விதிகளுக்கு ஒத்திருக்க வேண்டும், அரசியல் தீர்வு காண்பதில் ஜம்மு-காஷ்மீர் அரசு மட்டுமே தலையிட வேண்டும்.

• மாநில அரசு ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கும் மூன்று பெயர்களில் இருந்து ஒரு நபரை அவர் கவர்னராக நியமிப்பார். சாசன விதி 356ல் எந்த மாற்றமும் இல்லை. மாநில அரசு கலைக்கப்பட்டால் மூன்று மாதங்களில் தேர்தல் நடத்தப்பட வேண்டும்,

• மத்திய அரசு நியமிக்கக்கூடிய அரசியல் சாசனக்குழு ஆறு மாதங்களில் தனது பணியை நிறைவு செய்ய வேண்டும். அதன் அறிக்கை நாடாளுமன்றத்திலும், ஜம்மு-காஷ்மீர் சட்டமன் றத்திலும் தாக்கல் செய்யப்பட வேண்டும்.

• ஜம்மு-காஷ்மீர் என்கிற இரண்டு வெவ்வேறான சிறப்பியல்புகளையும், அது இந்தியாவின் ஒருங்கிணைந்த ஒரு பகுதி என்பதையும் விதி 370ன் கீழ் சிறப்பு அதிகாரங்களை அனுபவித்து வருகிறது என்பதையும், இந்தியாவின் குடிமக்கள் என்பதைப் போன்று காஷ்மீர் குடிமக்கள் என்கிற இரண்டு சிறப்பம்சங்களையும் அது கவனத்தில் கொள்ள வேண்டும்.

• அடுத்தது, விதி 370ன் கீழ் அதிகாரங்களை நடைமுறைப்படுத்துவதும் சாசனக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்துவதற்கான உத்த ரவிடுவதும் ஜனாதிபதி செய்யவேண்டிய பணி.
• பொருளாதாரத்தில் ஜம்மு-காஷ்மீரின் தன்னம்பிக்கையை மேம்படுத்த வேண்டும்,

• மத்திய மாநில அரசுக்கிடையே புதிதாக நிதி சார்ந்த ஒப்பந்தம் இடவேண்டும்,
• கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு இருபுறமும் உள்ள பொதுமக்களும், பொருட்களும் எவ்வித இடையூறுமின்றி தாராளமாகச் சென்றுவருவது உள்ளிட்ட இருபுற மக்களுக்கும் இடையே உறவுகளை இணைக்க இந்தியா -பாகிஸ்தானிடையே ஒப்பந்தமிட வேண்டும்.

குடிநீர், பொருளாதாரம், சுற்றுலா மற்றும் வர்த்தகம் உள்ளிட்ட பொதுநலன்கள் சார்ந்த பிரச்சனைகளில் இருபுறமும் தேர்ந்தெடுக் கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளைக் கொண்டு ஆலோசனை வழங்கும் அமைப்பு ஒன்றை உருவாக்க வேண்டும்

-காஷ்மீருக்கும் மத்திய அரசுக்குமான நடுவண் குழு மேற்கண்டவாறு பரிந்துரைத்திருக்கிறது. பல நல்ல அம்சங்களை இந்த அறிக்கை உட்கொண்டிருந்தாலும், 1953க்கு முந்தைய நிலைமை திருப்பித் தரப்பட வேண்டாம்; முதல்வர், கவர்னர் என்ற பெயர்களையே வைத்துக் கொள்ளலாம்; ஜம்மு-காஷ்மீர் அரசைக் கலைக்கும் விதி 356ஐ மாற்றத் தேவையில்லை; காஷ்மீரின் கவர்னரை இந்திய ஜனாதிபதியே நியமிப்பார்; போன்றவற்றில் முந்தைய நிலை அப்படியே பரிந்துரைக்கப்பட்டுள்ளது. பொது வாக்கெடுப்பு நடத்துவது குறித்தும் பரிந்துரைக்கவில்லை. இந்நிலையில் காஷ்மீரின் பிரிவினை இயக்கங்கள் இப்பரிந்துரையை நிராகரித்துள்ளன.

காஷ்மீரின் தேர்தல் ஆணையம், உச்சநீதிமன்ற, அதிகாரம் பற்றி எதுவும் பேசவில்லை. இந்தப் பரிந்துரைகளுக்கான மூவர் குழுவில் காஷ்மீரிகள் யாரும் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனினும் இந்த அறிக்கையையும் பாரதீய ஜனதா கடினமாக விமர்சித்திருக்கிறது. இது அதிகப்படியான வார்த்தைகள் கொண்ட அறிக்கை என்று கூறியுள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கி ணைந்த பகுதி என 1994ஆம் ஆண்டு நாடாளுமன்றம் ஒப்புக்கொண்ட தீர்மானத்தை அறிக்கை பலகீனப்படுத்திவிட்டது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை (PoK) பாகிஸ்தான் நிர்வாக காஷ்மீர் (PAJK) என்று கூறியுள்ளது. ஜம்மு காஷ்மீருக்கும், நாட்டின் இதர பகுதிக்கும் இடையே ஒரு உளவியல் தடுப்பாக விதி 370 இருப்பதை ஏற்க மறுத்துள்ளது. அந்த விதியை ஒழிப்பதற்குப் பதிலாக அதை நிரந்தரப்படுத்த குழு பரிந்துரைத்துள்ளதாக பாரதீய ஜனதா குற்றம் சாட்டியுள்ளது.

--ஜி.அத்தேஷ்
-tmmkonline

எங்கோ தூரத்தில் தமிழின் அருமை




             மொரீசியசு நாட்டின் ரூபாய் தாளில் தமிழில் எழுத்துக்களும், எண்களும் ( ரூ.50 தமிழில் ௫௦) இடம் பெற்றிருப்பதை இப் படத்தில் காணலாம் கன்னட, தெலுங்கு, மராட்டிய மக்கள் தங்களை எண்களை மறக்காமல் பேருந்துகளிலும், அரசுத்துறைகளிலும் பயன்படுத்துகிறார்கள். எங்கோ தூரத்தில் ஆப்பிரிக்காவின் அருகில் உள்ள மொரிசியசு அரசு தமிழ் எண்களை பயன்படுத்துவது பெருமைக்குரியதே.தமிழின் அருமை நம்மை தவிர அனைவருக்கு தெரிந்திருக்கிறது!!!

மொரிசியசில் ஏறக்குறைய 55 000 தமிழர்கள் வாழ்கின்றனர். தமிழர்கள் இந்நாட்டின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றியுள்ளனர். தமிழர்கள் பலர் அமைச்சர்களாயும் நீதிமான்களாயும் பதவி வகித்துள்ளனர். சில பள்ளிகளில் தமிழ் மொழிப் பாடமாகக் கற்பிக்கப்படுகிறது. அண்மையில் தமிழ்நாடு அரசு இவர்களின் தமிழ்க் கல்விக்கு உதவிசெய்ய முன்வந்துள்ளது.

செவ்வாய், 26 ஜூன், 2012

நன்றி பாதிரியார் டெர்ரி ஜோன்ஸ் அவர்களே இஸ்லாத்துக்கு தாங்கள் புரிந்த சேவைக்காக - நூருல் இஸ்லாம் இளைஞர் அணி

(செப்டம்பர் 11 அன்று குரானை எரிக்க போவதாக சொன்னவர் இப்பாதிரியார்)

1. குரான் அதிக விற்பனையானது : அமேசான், உள்ளூர் மற்றும் வெளியூர் கடைகளிலும் இணையம் மூலமாகவும் குரான் அதிக அளவு விற்பனையானது. மனித இனத்தின் நேர்வழிக்காக அருளப்பட்ட குரானை மானுடம் சிந்திக்க வாய்ப்பு ஏற்பட்டது.

2. வியாபரம் சூடு பிடித்தது : நிறைய குரான்கள் மற்றும் இஸ்லாமிய புத்தகங்கள் விற்பனையானதின் மூலம் இஸ்லாமிய நிறுவனங்களின் உரிமையாளர்களூக்கு நல்ல லாபம் கிடைத்தது.

3. பள்ளிவாயில்களுக்கு அதிகமானோர் வருகை : உங்கள் சர்ச்சையால் இஸ்லாத்தை அறிந்து கொள்ள பள்ளி வாயில்களுக்கு அதிகமானோர் வருகை புரிந்ததின் மூலம் இஸ்லாத்தின் செய்தியை பெற்று கொன்டனர்.

4. இஸ்லாமிய அழைப்பு நிலையங்களின் ஹாட்லைன்கள் பிஸியானது : இஸ்லாமிய அழைப்பு நிலையங்களின் ஹாட்லைன் மற்றும் தொலைபேசிகள் இஸ்லாத்தை அறிய விரும்புவோரின் அழைப்புகளால் பிஸியாக இருந்தன.

5. கூகுளில் குரான் மற்றும் இஸ்லாம் தேடப்பட்டன : நீங்கள் குரானை பற்றியும் இஸ்லாத்தை பற்றியும் விமர்சனம் செய்ய செய்ய கூகுளில் இஸ்லாம் மற்றும் குரான் குறித்து தேடுவோரின், இஸ்லாத்தை குறித்து இணையதளங்களில் தேடுவோரின் எண்ணிக்கை அதிகரித்தது.

6. நூலகங்களில் குரான் காணாமல் போயின : எத்துணை பிரதிகள் வாங்கிய போதும் ஐரோப்பா, கனடா, அமெரிக்காவில் உள்ள நூலகங்களில் குரானை அனைவரும் எடுத்து கொண்டு போவதால் குரான் ஸ்டாக் இல்லாமல் போனது.

7. முஸ்லீம்களுக்கு மில்லியன் கணக்கான டாலர்கள் மிச்சம் : மில்லியன் கணக்கான டாலர்கள் செலவழித்து செய்ய வேண்டிய தஃவா பிரச்சாரத்தை தங்களின் வெறும் அறிக்கைகள் உண்டாக்கியதால் தஃவாவில் செலவழிக்க வேண்டிய மில்லியன் கணக்கான டாலர்கள் மிச்சமாயின.

8. முஸ்லீம்கள் உணர்வுகள் தூக்கத்திலிருந்து எழுந்தன : உலகெங்கும் வாழும் முஸ்லீம் சமூகம் உங்களின் உரைக்கு பின் தன் தூக்கத்தை கலைத்து குரானின் செய்தியை அறிந்து கொள்வதில், குரானுடனான தங்கள் உறவை புதுப்பித்து கொள்வதில், குரானின் செய்தியை பிற மக்களுக்கு அறிமுகம் செய்வதில் முனைப்பு காட்டின.

9. நிறைய மக்கள் இஸ்லாத்தை ஏற்றனர் : முன்பை காட்டிலும் இஸ்லாத்தை ஆராய்வதன் மூலம் இஸ்லாத்தை ஏற்று கொள்வோரின் எண்ணிக்கை அதிகரித்தது.

10. நீதியை நேசிப்பவர்களை ஒன்றிணைத்தது : இஸ்லாம், கிறிஸ்துவம், யூதர்கள், ஹிந்துக்கள், இறை மறுப்பாளர்கள் என அனைத்து பிரிவிலும் உள்ள நீதியை நேசிப்பவர்களை இக்கொடுமைகளை கண்டித்ததன் மூலம் ஒன்றிணைத்தது.

பாதிரியார் டெர்ரி ஜோன்ஸூக்கு ஒரு வேண்டுகோள் : நீங்கள் எரிக்க நினைத்த அக்குரானை திறந்த மனதோடு படியுங்கள். இயேசுவை பின்பற்றுபவராக இருந்தால் இயேசுவின் மார்க்கமான, நூஹ், இப்ராஹீம், மூஸா, ஈஸா, முஹம்மது (ஸல்) போன்ற நபிமார்களின் மார்க்கமான இஸ்லாத்தை ஏற்று கொள்ளுங்கள்.

குரானோடு மோதியவர்கள் ஒன்று குரானால் ஈர்க்கப்பட்டிருக்கிறார்கள் அல்லது அழிந்து போயிருக்கின்றார்கள். எது வேண்டும் என்று தீர்மானிப்பது உங்கள் கையில் தான் உள்ளது சகோதரரே


முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்வதற்கான போராட்டத்தை நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட் வீரியத்துடன் தமிழகத்தில் 4 மாவட்டங்களில் பிரம்மாண்டமாக நடத்தியுள்ளது.




மதுரை:
                 ஒவ்வொரு வருடமும் அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15ஆம் தேதியை முன்னிட்டு 7 ஆண்டுகள் கழிந்த ஆயுள் சிறைவாசிகளை கருணையின் அடிப்படையில் விடுதலை செய்வதுண்டு. ஆனால் இது முஸ்லிம் கைதிகளுக்கு மட்டும் விதிவிலக்காக இருக்கின்றது. சென்ற தி.மு.க ஆட்சியின் போதும், இப்போது ஆ.தி.மு.க ஆட்சி பொறுப்பேற்று 1 வருடம் நிறைவடைந்த போதிலும் முஸ்லிம் கைதிகளிடத்தில் பாரபட்சமாக நடந்து கொண்டுள்ளது.

முஸ்லிம் கைதிகளில் பெரும்பாலானோர் விசாரணை கைதிகளாக இருக்கும்போதே தண்டனை காலமான 7 வருடங்களை பூர்த்தி செய்துவிட்டனர். இருந்த போதிலும் தமிழக அரசு இது தொடர்பாக பொருட்படுத்துவதாகவே தெரியவில்லை. இதனை கருத்தில் கொண்டு நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட் தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, நெல்லை ஆகிய 4 மாவட்டங்களில் முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்து அவர்களது குடும்பத்தில் ஒளியேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி மாபெரும் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டங்களை நடத்தியது.

மதுரையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் வழக்கறிஞரும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில செயற்குழு உறுப்பினருமான முஹம்மது யூசுஃப் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இப்பேரணியில் ஆயிரக்கணக்கான பெண்கள் கலந்து கொண்டனர்

சென்னை:

 
                     

                இப்பேரணியை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில துணைத்தலைவர் எம். முஹம்மது இஸ்லாம்யில் கொடி அசைத்து துவக்கி வைத்தார். நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்டின் மாநில துணைத்தலைவி நஃபீஸா பானு சிறப்புரை நிகழ்த்தினார். ஏராளமான பெண்கள் இதில் கலந்து கொண்டு கோரிக்கை கோஷங்களை எழுப்பினர்.

முன்னதாக மாலை 4 மணிக்கு எழும்பூர் இராஜரத்தினம் மைதானத்திலிருந்து துவங்க இருந்த இப்பேரணி காவல்துறையினரின் கிறுபிடியால் அரை மணி நேரம் தாமதமாக துவங்கப்பட்டது. இப்பேரணிக்காக நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்டின் நிர்வாகிகள் ஆணையர் அலுவலகத்திற்கு சென்று இராஜரத்தினம் மைதானத்திலிருந்து காயிதே மில்லத் பெண்கள் கல்லூரி வரை பேரணி நடத்த அனுமதி கோரினர். இதற்கு அனுமதியும் வழங்கப்பட்டது. ஆனால் நிகழ்ச்சி நடைபெறும் இடத்தின் காவல்துறை அதிகாரிகள் கடைசி நிமிடத்தில் இவ்வழியாக பேரணி நடைபெறுவதற்கு அனுமதி வழங்க முடியாது என தடுத்தனர்.
 

திங்கள், 25 ஜூன், 2012

மார்பகப் புற்று நோய்க்கு இனி அறுவை இல்லா சிகிச்சை!


            மார்பகப்புற்றுநோய் வந்தவர்கள் இனி மார்பகத்தை நீக்கவேண்டிய கட்டாயம் இல்லை என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அதி நவீன ரேடியேஷன் தெரபி முறையில் உறுப்புகளை அகற்றாமல் புற்றுநோயை குணப்படுத்த முடியும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மார்பக புற்றுநோய் வந்தால் முன்பு மார்பகத்தையே நீக்கவேண்டிய கட்டாயம் இருந்தது. ஆனால் இன்று மார்பக புற்றுநோயின் ஆரம்ப நிலை என்றால் மார்பகம் முழுவதையும் எடுக்க வேண்டியதில்லை என்கின் றனர் மருத்துவர்கள்.

கேன்சர் வந்தால் எந்த உறுப்பில் கேன்சர் வந்திருக்கிறதோ அந்த உறுப்பை இழந்தால்தான் கேன்சரை குணப்படுத்த முடியும் என்றிருந்த நிலைமை மாறி, புதிய அதிநவீன புற்றுநோய் சிகிச்சை முறையில் உறுப்பினை இழக்காமல் கேன்சரை குணப்படுத்துவதற்குத்தான் பிராக்கி தெரபி (brachy therapy) என்று பெயர்.


புற்றுநோய் உள்ள பகுதியையும் அக்கிள் பகுதியில் உள்ள கட்டியையும் நீக்கி மார்பக கேன்சரை குணப்படுத்தி விடலாம்.பின்னர் ரேடியேஷன் தெரபி மூலம் கதிர்வீச்சு சிகிச்சை அளிக்கப்படும். கதிர்வீச்சினை (ரேடியேஷன்) சிறு சிறு குழாய்கள் மூலம் கேன்சர் கட்டி இருக்கிற அடித்தளம் வரை உள் செலுத்தி (இம்பிளாண்ட்) லோக்கல் ரேடியேஷன் என்கின்ற அதிக அளவு கதிர்வீச்சினை தருவதற்குதான் பிராக்கி தெரபி என்று பெயர்.


இச்சிகிச்சை மார்பக கேன்சர், வாய் புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய், வயதானவர்களுக்கு வருகிற புராஸ்டேட் கேன்சருக்கு இப்போது வந்துள்ள அதிநவீன புற்றுநோய் சிகிச்சையாகும். இச்சிகிச்சையின் நன்மைகள் என்னவெனில்-கேன்சர் வந்த உறுப்பினை இழக்க வேண்டியிருக்காது. அழகு எந்த விதத்திலும் பாதிக்கப்படாது, எந்த பக்க விளைவும் இல்லை என்பதுதான்.


குடும்பத்தில் தாய்க்கு மார்பகப்புற்றுநோய் இருந்து அந்த ஜீன் மகனுக்கு இருந்தாலும் இதற்கான வாய்ப்பு அதிகம். இதில் முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம் ஆண்களுக்கு மார்பகப்புற்றுநோய் வந்தால் மிகச்சீக்கிரமாக வலுவாக வளரும்.


லட்சத்தில் ஒரு ஆணிற்கு மார்பக புற்றுநோய் வரலாம். அதனால் ஆண் களுக்கு பெண்களைக் காட்டிலும் மார்பகப்புற்றுநோய் வரும் வாய்ப்பு மிக மிகக் குறைவாகவே இருக்கிறது. ஆண்களுக்கு மார்பக புற்றுநோய் வருவதற்கான காரணம் குழந்தை பருவத்தில் மார்பகம் வளர்ந்திருந்து அவர்கள் இளைஞர்களான பின்னும் மார்பக வளர்ச்சி குறையாமல் அப்படியே இருந்தாலும், இத்தகையானவர்களுக்கு மார்பகப்புற்று நோய் வ
ரும் வாய்ப்பு அதிகம் என்கின்றனர் மருத்துவர்கள்.
 

ஞாயிறு, 24 ஜூன், 2012

VAT என்றால் என்ன ?

   
                       உற்பத்தியாளர்கள் எந்தப் பொருளாக இருந்தாலும் உற்பத்திசெய்வதற்காக 4% வரி விகிதத்தில் அவைகளை வாங்கி உபயோகப் படுத்திக் கொள்ளலாம்.  உதாரணமாக ஒருவர் உற்பத்திக்காக ரூ. 1000/-க்குப் மூலப்பொருள்களை வாங்கினால் 4% வரியையும் சேர்த்து ரூ. 1040/-க்கு வாங்குகிறார்.  உற்பத்தி செய்த பொருளை  ரூ.1200/-க்கு அதே 4% வரி விகிதத்தில் விற்றால் அவர் ரூ. 1248/-க்கு விற்பனை செய்து விடுகிறார்.  அரசாங்கத்துக்குச் சேர வேண்டிய வரியைக் கட்டும்போது  அவர் வசூல் செய்த ரூ. 48/-ல் இருந்து அவர் கொடுத்த வரித் தொகையான ரூ.40/- ஐக் கழித்துக் கொண்டு மீதித் தொகையான ரூ.8/-ஐக் கட்டி விடுவார்.  அவர் கொடுத்த ரூ. 40/- "Input Credit"  என்றழைக்கப் படுகிறது.  இந்த  V.A.T.  சட்டத்தில் அவர் வாங்கிய மூலப் பொருள்களின் மதிப்பு ரூ. 1000/- ஆகவே இருந்து வருகிறது.  ஆனால் இதற்கு முந்தைய சட்டத்தில் இவ்வாறு கொடுத்த வரிப் பணத்தை திரும்பிப் பெறும் வாய்ப்பு இல்லாததால் அவர் விற்கும் பொருளை ரூ. 1200/- விற்றிருக்க மாட்டார். அதற்கு மேலாக ரூ. 1240/- க்காவது விற்றிருப்பார்.  ஆக பொருள்களின் விலை இதில் குறைய வாய்ப்பிருக்கிறது என்பது இவர்களின் வாதம்.

"Input Credit"  என்பது அந்த மாநிலத்திற்குள்ளேயே வாங்கும் பொருள்களுக்கு மட்டுமே கிடைக்குமென்பதால் உற்பத்தியாளர்கள் அந்த மாநிலத்திற்குள்ளேயே மூலப் பொருள்ளை வாங்க முயற்சி செய்வார்கள்.  உதாரணமாக ஒரு உற்பத்தியாளர் தன் உற்பத்திக்கு  Electric Motor - ஐ  பெங்களூரிலிருந்து 4% வரி விகிதத்தில் வாங்குகிறார்  எனக்கொள்ளுங்கள்.  இது வெளி மாநிலத்திலிருந்து வாங்கப் படுவதால் இந்தப் பொருளுக்கு அவர் கொடுக்கும் வரியை  Input Credit  ஆக எடுத்துக் கொள்ள முடியாது.  அதே  Elecatric Motor- ஐ கோயம்புத்தூரிலிருந்து வாங்குகிறார் எனக் கொள்ளுங்கள்; அந்த வரிப் பணத்தை  Input Credit  ஆக எடுத்துக் கொண்டு அந்த மாதம் அவர் செலுத்தும் வரியிலிருந்து கழித்துக் கொள்ளலாம்.  இவ்வாறு செய்வதால் உற்பத்தியாளர்கள் அந்த மாநிலத்திலேயே மூலப் பொருள்களை வாங்க முயற்சிப்பார்கள்.  அதனால் அந்த மாநிலத்தின் வர்த்தகம் பெருகும். அதனால் அரசுக்கு அதிக வரி கிடைக்கும்.

உள் மாநிலத்திலேயே பொருள்களை வாங்கி உள் மாநிலத்திலேயே அவற்றை வியாபாரிகள் ரூ. 10,00,000/- வரை விற்றால் அவர்கள் அரசாங்கத்தில் தங்களைப் பதிவு செய்து கொள்ள வேண்டாம்.  அவர்கள் சிறு வியாபாரிகள் எனக் கருதப் படுவர். அவர்கள் மாதம் விற்பனை வரி செலுத்துவது,  Assessmentக்குச் செல்வது போன்றவைகள் கடையாது.   V.A.T.  வருவதற்கு முன்பு இந்தச் சலுகை ரூ. 3,00,000/- வரை வியாபாரம் செய்பவர்களுக்கே இருந்து வந்தது.  இப்போது அது கணிசமாக உயர்த்தப் பட்டு விட்டது.
இதில்  Resale Tax, Surcharge, Turn-over- tax  போன்றவைகள் கிடையாது.
இதுபோன்ற சலுகைகள் இருப்பதாக ஒரு தரப்புக் கூறுகின்றது. சரி! அடுத்த தரப்பின் வாதம் என்ன?
இந்த "Input Credit"ஐ கழித்துக் கொள்ளும் வியாபாரிகள் அதற்குண்டான, பில்கள், ரிஜிஸ்டர்கள் ஆகியவற்றை ஜாக்கிரதையாக வைத்துக் கொள்ள வேண்டும். அரசாங்கத்தின்  Assessment  கிடையாது என்று அறிவித்திருந்தாலும், 20% வணிகர்கள் தேர்ந்தெடுக்கப் பட்டு அவர்கள் கணக்குகள் அதிகாரிகளால் சரிபார்க்கப்படும்.  ஆகவே எல்லா வணிகர்களும் சரியான முறையில் கணக்கு வைத்திருக்க வேண்டும்.

மாதந்தோரும் வரி கட்டும் போது மாதாந்திரக் கணக்குகளையும் சேர்த்துச் சமர்ப்பிக்க வேண்டும். கணக்குகளை வைத்துக் கொள்ள கம்ப்யூட்டர் தேவைப்படும். அதை இயக்கத் தெரிந்தவரும் தேவைப்படும். இதெற்கெல்லாம் அதிகச் செலவாகும்.  வணிகர்கள் இந்தச் செலவுகளைத் தாங்கிக் கொள்ள வேண்டும்.
 
உள் மாநிலத்தில் வாங்கும் பொருள்களுக்குத்தான் வரியைக் கழித்துக் கொள்ள இயலும். வெளி மாநிலத்தில் வாங்கும் பொருள்களுக்குக் கழிக்க முடியாது. ஆகவே பொருள்களின் விலை குறையும்  என்று எதிர்பார்க்க முடியாது.

மதிப்புக் கூடுதல் வரி அறிமுகப் படுத்தபோது இந்தியாவெங்கும் ஒரே சீரான வரி என்று அறிவிக்கப் பட்டது. ஆனால் நடை முறையில் வரி சீராக இல்லை; வட மாநிலங்களில் ஒவ்வொரு மாநிலத்திலும்  ஒவ்வொரு விதமான வரி விதிக்கப் படுகிறது. அறிவிக்கப் பட்டபோது "எந்தப் பொருளுக்கும் 12.5%க்கு மேல் வரி விதிக்கப்படமாடடாது" எனக் கூறப்பட்டது. ஆனால் கேரளாவில் பல பொருள்களுக்கு 16%, 20% என விதிக்கப்பட்டுள்ளது.  ஆகவே ஒரே சீரான வரியாக விதிக்கப் பட வில்லை.

அடுத்தது இதில் உள்ள தண்டனைச் சட்டங்கள். விதி எண் 71, 72-ல் கூறப்பட்டுள் ளவை வணிகர்களுக்குக் கடுமையாக இருக்கும் எனக் கருதப்படுகிறது. மாதந்தோறும்
கணக்குகளைச் சமர்ப்பிக்கத் தவறினாலோ, அல்லது வியாபாரத்தைச் சட்டப்படிப் பதிவு செய்யா விட்டாலோ கோர்ட் நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படும்.. முதல் தடவை செய்த தவற்றிற்கு அபராதத்துடன் போய்விடும். இரண்டாம் முறை அதே தவற்றைச் செய்தால் சிறைத் தண்டனைக்கும் சட்டத்தில் இடமுண்டு.  இதற்கு முந்தைய T.N.G.S.T. Act-ல் சிறைத் தண்டனைக்கு இடமில்லை. இப்போது அப்படி இல்லை. இது வணிகர்களுக்கு சிறிது கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

-BusyBee4U