நாடு முழுவதும் தொழில் கல்வி மாணவர்களுக்கு ஒரே நுழைவுத் தேர்வு திட்டத்தை பற்றி கலந்து ஆலோசிக்க, அனைத்து மாநில நிர்வாக இயக்குனர்கள் கூட்டம் டெல்லியில் இன்று நடைப் பெற்றது. இத்தனை நாட்கள் தீர்வு எட்டப் படாமல் இருந்த இந்த சர்ச்சை இன்றுடன் முடிவுக்கு வந்தது. இந்த சமரச திட்டத்துக்கு அனைத்து மாநில ஐஐடி நிர்வாகமும் ஒத்துக் கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாடு முழுவதும் தொழிற்கல்விக்கு ஒரே நுழைவுத் தேர்வு எனும்
திட்டத்தை வரும் கல்வியாண்டுக்கு மத்திய அரசு அறிவித்திருந்தது. இதில் ஐ
ஐடி யும் அடங்கும். ஆனால், இதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று ஐஐடி நிர்வாக
இயக்குனர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். கான்பூர், லக்னோ, ஐஐடி நிர்வாக
இயக்குனர்கள், தாங்கள் தனித்தேர்வு முறையைக் கைவிட மாட்டோம் என்றுகூட
அறிவித்திருந்தனர்.
இந்நிலையில், அனைத்து மாநில ஐஐடி நிர்வாக இயக்குனர்கள் கூட்டம்
டெல்லியில் இன்று மத்திய அமைச்சர் கபில்சிபல் தலைமையில் நடப்பதாக இருந்தது.
சில தவிர்க்க முடியாத காரங்களால் மத்திய அமைச்சர் கபில்சிபல் கலந்து கொள்ள
முடியவில்லை என்றாலும், கூட்டத்தில் சமரச முடிவு எட்டப் பட்டுவிட்டதாக
அனைத்து மாநில ஐஐடி கவுன்சில் தலைவர் என்.எம்,சர்மா கூறியுள்ளார்.
அவர் மேலும் கூறியதாவது, +2 வில் குறிப்பிட்ட மதிப்பெண்கள்
பெற்றவர்களுக்கு மூலத் தேர்வு வைக்கப் படும்.அதிலிருந்து 1 லட்சத்து 50
ஆயரம் பேர் தேர்ந்தெடுக்கப் படுவர். பின்னர் தேர்ந்தெடுக்கப்
பட்டவர்களுக்கு சிறப்புத் தேர்வு வைக்கப்படும். இந்த சிறப்புத் தேர்வில்
அகில இநதிய அளவிலான தரவரிசைப் பட்டியல் நிர்ணயிக்கப் படும் அதன்படி மாணவ,
மாணவிகள் தேர்ந்தெடுக்கப் படுவார்கள் என்றும் என் எம் சர்மா கூறியதாக
தெரிகிறது. மொத்தத்தில் நாடு முழுவது ஒரே நுழிவு தேர்வு என்கிற இந்த
திட்டம், 2013 கல்வியாண்டில் நடைமுறைக்கு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.