சனி, 15 செப்டம்பர், 2012

ஹஜ் பயணத்தில் வி.ஐ.பி. கோட்டா ரத்து : கூடுதல் பயணிகளுக்கு வாய்ப்பு!


                                                           இந்தியாவில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1 லட்சத்து 25ஆயிரம் பேர் ஹஜ் கமிட்டிகள் மூலம் ஹஜ் பயணம் மேற்கொள்கின்றனர். இதில் 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் சீட்கள் வரை வி.ஐ.பி.களுக்கு ஒதுக்கப்படுகின்றன. இந்த கோட்டாவில் சில வி.ஐ.பி.க்கள்தான் ஹஜ் பயணம் செல்கின்றனர். பெரும்பாலான வி.ஐ.பி.க்கள் இந்த சீட்களை பணம் வாங்கிக் கொண்டு விற்கின்றனர். சிலர் ஹஜ் பயணிகளிடம் போய் லஞ்சம் கேட்பதா? எனக் கருதி சும்மாவே சிபாரிசுக் கடிதம் கொடுக்கின்றனர்.

இந்த வி.ஐ.பி. கோட்டாவை உச்சநீதி மன்றம் ரத்து செய்துவிட்டது. அதனால் இனிமேல் மத்திய மந்திரிகள், மாநில அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், அரசு உயர் அதிகாரிகள், ஹஜ் பயணத்திற்கான சீட்டை விற்று காசு பார்க்க முடியாது. இதற்காக உச்சநீதி மன்றத்தை எவ்வளவு பாராட்டினாலும் தகும். ரத்து செய்யப்பட்ட இந்த வி.ஐ.பி.க்களின் கோட்டா குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படும் ஹஜ் பயணிகளுக்கு வழங்கப்பட உள்ளது. அதனால் கூடுதல் பயணிகள் ஹஜ் பயணம் செய்ய வாய்ப்பு உள்ளது.  

எனவே ஹஜ் செய்ய வேண்டும் என்ற ஆவலில் தனியார் ஹஜ் சர்வீஸ்களிடம் பல லட்சம் கொட்டிக் கொடுத்து மனம் நோவதை தவிர்த்து, ஹஜ் கமிட்டி குழுக்களில் இடம் கிடைத்தால் ஹஜ் செய்யுங்கள். இல்லையேல் ஹஜ் பயணத்தை அடுத்தாண்டு தள்ளிப் போடுங்கள். இதை அல்லாஹ் குற்றம் பிடிக்க மாட்டான். மூன்று ஆண்டு வரை தொடர்ந்து விண்ணப்பிப்பவருக்கு ஹஜ் கமிட்டி கட்டாயம் சீட் கொடுத்து விடுகிறது. இதை ஹஜ் பயணிகள் புரிந்து கொண்டு பணத்தை இழக்காமல் நடந்து கொள்வார்களா?




பெரம்பலூரில் பாபுலர் ப்ரண்ட் ஆப் இந்தியா நடத்திய அப்பாவி சிறைவாசிகளை விடுதலை செய்யக்கோரி மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது


பெரம்பலூரில் 15 - 09 -2012 (இன்று) காலை 11 மணியளவில் பாபுலர் ப்ரண்ட் ஆப் இந்தியா நடத்திய அப்பாவி சிறைவாசிகளை விடுதலை செய்யக்கோரி மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.
 
வி களத்தூர் நகரத் தலைவர் அப்துல் ரஹீம் தலைமை தங்கினார்.
 
எஸ்.டி.பி.ஐ மாவட்ட தலைவர் முஹமது ரபீக் முன்னிலை வகித்தார்.
 
பி எப் ஐ மாநில செயற்குழு உறுப்பினர் அஹ்மத் பாக்ருதீன் சிறப்புரையாற்றினார்.
 
லப்பைகுடிகாடு நகரத் தலைவர் சித்தீக் பாஷா நன்றியுரயற்றினார்.
 
அப்பாவி முஸ்லிம்களை சிறையில் தள்ளிய மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோசம் எழுப்பப்பட்டது.
 
இதில் பெருந்திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

முஸ்லிம்களை மோசமாக சித்தரித்து அமெரிக்கா வெளியிட்ட திரைப்படத்திற்கு ஐ.நா பொதுச் செயலாளர் பான்- கி- மூன் கடும் கண்டனம்


                                                    முஸ்லிம்களை மோசமாக சித்தரித்து அமெரிக்கா வெளியிட்ட திரைப்படத்திற்கு ஐ.நா பொதுச் செயலாளர் பான்- கி- மூன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
 

இது பற்றி பான்- கி- மூன் கூறுகையில், இந்த திரைப்படம் கொலை முயற்சிகளை ஊக்குவிப்பதற்காக வேண்டுமென்றே உருவாக்கப்பட்டுள்ளது என்று குற்றம் சாட்டினார்.
 

ஐ.நா உயர் பிரதிநிதி ஜார்ஜ் காம்பியோ, இவ் விவகாரம் குறித்து அமெரிக்க வெளிவிவகாரத்துறை அமைச்சர் கிளிண்டனுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அதில் தற்போது ஏற்பட்டுள்ள வெறுப்பான சூழ்நிலை, ஆபத்தான நிலைமை மற்றும் தாக்குதல்கள், மத அடிப்படையிலான வன்முறைகள் ஆகியவை கவலை அளிப்பதாகஉள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
 

மேலும் ஐ.நா பாதுகாப்பு சபையும், 15 நாடுகளின் பிரதிநிதிகளும் இவ்வாறான வன்முறை சம்பவங்களுக்கு கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


சென்னையில் அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட முயன்ற முஸ்லிம்கள் கைது







நபிகள் நாயகத்தை இழிவுபடுத்திய அமெரிக்க திரைப்படத்தைக் கண்டித்து சென்னையில் அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட முயன்ற முஸ்லிம்கள் கைது



                                                         உலகில் வாழும் 200 கோடி முஸ்லிம்கள் தங்கள் உயிரைவிட மேலானதாக ஒவ்வொரு நொடியும் கருதிக் கொண்டிருக்கும் அகிலத்தின் வழிகாட்டி, இறைத்தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை இழிவுபடுத்தும் விதமாக "இன்னொசன்ட் முஸ்லிம்ஸ்' என்ற திரைப்படத்தை சாம் பாசைல் என்ற யூத மதவெறியன் வெளியிட்டிருக்கிறார். இதன் பிரத்யேக காட்சிகள் "யூ டியூப்' இணையதளத்தில் வெளியாகி உலகமெங்கும் கொந்தளிப்புகளை உருவாக்கியுள்ளது.

இந்நிலையில், இத்திரைப்படத்தை தடை செய்ய வேண்டும்; அமெரிக்காவும் அதன் ஆதரவு சக்திகளும் முஸ்லிம்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்; இந்திய அரசு அமெரிக்கத் தூதரை அழைத்து தமது கண்டனத்தைப் பதிவு செய்ய வேண்டும்; "யூ டியூப்' இணையதளத்திலிருந்து அத்திரைப்படக் காட்சிகளை நீக்கவேண்டும் - ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பில், சென்னையில் உள்ள அமெரிக்க துணைத் தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது.

இத்திரைப்படம் குறித்து சென்னை உட்பட பல நகரங்களில் ஜும்ஆ உரையின் போது உலமாக்கள் உரை நிகழ்த்தினர். தொழுகைக்குப் பின்னர் முஸ்லிம்களிடையே தமுமுகவினர் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்து விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தனர். இதனையடுத்து அமெரிக்க தூதரகம் அருகிலுள்ள ஆயிரம் விளக்கு பள்ளிவாசல் அருகில் முஸ்லிம்கள் மாலை 4 மணியிலிருந்தே சாரை சாரையாக வந்தவண்ணம் இருந்தனர்.

மாலை 4.15 மணியளவில் தமுமுக துணைத் தலைவர் குணங்குடி ஆர்.எம்.அனிபா ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை ஏற்று தொடங்கி வைத்தார். மமக பொதுச் செயலாளர் எம். தமிமுன் அன்சாரி முழக்கங்களை எழுப்பினார். மூத்த தலைவர் செ. ஹைதர் அலி, தமுமுக பொதுச் செயலாளர் ப. அப்துல் சமது, மாநிலச் செயலாளர்கள் பி.எஸ்.ஹமீது, கோவை செய்யது, காஞ்சி மீரான் மொய்தீன், தென்சென்னை மாவட்டத் தலைவர் சீனிநெய்னா முஹம்மது, வடசென்னை மாவட்டத் தலைவர் உஸ்மான் அலி, காஞ்சி வடக்கு மாவட்டத் தலைவர் யாகூப், மற்றும் மாவட்ட, பகுதி, கிளை நிர்வாகிகள் உட்பட ஆயிரக்கணக்கானோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

இதனிடையே, ஒரு பெரும் கூட்டம் அண்ணா சாலையில் இறங்கி மறியலில் ஈடுபட்டது. அதற்குள் தொண்டரணியினர் களத்தில் இறங்கி தூதரகத்தை நோக்கிச் சென்ற மக்களை கட்டுப்படுத்தும் முயற்சிகளில் இறங்கினர்.
பல்லாயிரக்கணக்கில் மக்கள் கூடியதால் காவல்துறையினரால் கைது நடவடிக்கையை தொடர முடியாமல் போனது. முதல் இரண்டு மண்டபங்களும் நிரம்பி வழிந்தன. தொடர்ந்து கூட்டம் கட்டுக்கடங்காமல் அலைஅலையாய் அமெரிக்க தூதரகத்தை நோக்கி புறப்பட்ட வண்ணம் இருந்தனர். இதனிடையே முறைப்படுத்தப்பட்ட பேரணி இராயப்பேட்டையை நோக்கி திரும்பியது. தூதரகம் அருகே குவிந்த மக்கள் ஊர்வலத்தை நோக்கி திரும்பினர். அனைவரும் காவல்துறையினரால் பல்லாயிரக்கணக்கானோரை கைது செய்ய முடியாது என அறிவிக்கப்பட்டது.
இதனிடையே மணி 6ஐ நெருங்கியதும் அருகிலுள்ள புதுக்கல்லூரி வளாகத்துக்கு அனைவரும் அழைத்து வரப்பட்டனர். அனைவரையும் பதிவு செய்ய வசதி இல்லாததால் மக்ரிப் தொழுகை முடிந்ததும் அனைவரும் தாமாகவே கலைந்து சென்றனர்.
அமெரிக்க தூதரகமே அஞ்சி நடுங்கும் அளவுக்கு முஸ்லிம்களின் கோபம் கட்டுமீறியதை செய்தி ஊடகங்கள் இச்செய்தியை முதன்மை செய்தியாக்கின.

இதுபோல் தமிழகம் முழுவதும் 22 நகரங்களில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்ட ஆர்ப்பாட்டங்கள் மிகுந்த கோபாவேசத்துடன் நடந்து முடிந்திருக்கிறது. பல இடங்களில் தடையை மீறி ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றதால் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டனர்.

தொடர்ந்து சனி, ஞாயிறு மற்றும் திங்கட்கிழமை வரை பல்வேறு நகரங்களில் தமுமுக சார்பில் போராட்டங்கள் நடைபெற உள்ளன.










































*******

சென்னையில் பாப்புலர் ப்ரண்ட் நடத்திய அமெரிக்க தூதரக முற்றுகை போராட்டம் 

 




 


 










 *******
திருச்சியில் அமெரிக்க கொடி எரித்து தமுமுக ஆர்ப்பாட்டம் தவ்ஹித் அமைப்பும் போராட்டம்
 பதிவு செய்த நேரம்:2012-09-15 10:54:36
 
திருச்சி, : இஸ்லாம் பற்றிய சர்ச்சைக்குரிய அமெரிக்க திரைப்படத் துக்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டின் கொடியை எரித்து தமுமுகவினர் நேற்று திருச்சியில் எரித்தனர்.
 
இஸ்லாம் பற்றி சர்ச்சைக்குரிய அமெரிக்க திரைப்படத்தை தடை செய்யக்கோரியும், அமெரி க்க தூதரை இந்தியாவை விட்டு வெளியேற்ற மத்திய அரசை வலியுறுத்தியும் தமிழ்நாடு முஸ்லிம் முன் னேற்ற கழகம் சார்பில் திருச்சி மரக்கடை பாஸ் போர்ட் அலுவலகம் அருகே நேற்று ஆர்ப்பாட் டம் நடந்தது.
 
மாவட்ட தலைவர் அப்துல்ஹக்கீம் தலைமை வகித்தார். செயலாளர் இப்ராஹிம்ஷா, பொருளாளர் இம்தியாஸ் அஹமது ஆகி யோர் முன்னிலை வகித்தனர். மாநில உலமா அணி செயலாளர் யூசுப் விளக்கி பேசினார்.
 
ஆர்ப்பாட்டத்தின் போது, அருகில் இருந்த போலீஸ் பூத் மீது ஏறி நின்ற படி அமெரிக்க கொடியை சிலர் தீயிட்டு கொழுத்திய தால் பரபரப்பு ஏற்பட் டது. தகவல் அறிந்த போலீஸ் கமிஷனர் சைலேஷ்குமார் யாதவ் மற்றும் போலீசார், ஆர்ப்பாட்டத்தில் அமெ ரிக்க கொடியை எரித்தது தொடர்பாக 42 பேரை காந்திமார்க்கெட் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்தனர். பின்னர் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப் பட்டதாக போலீசார் தெரி வித்தனர்.
 
இதே கோரிக்கைக்காக திருச்சி மரக்கடை ராமகிருஷ்ணா தியேட்டர் அருகே தமிழ்நாடு தவ்ஹித் அமைப்பினர் நடத்திய ஆர்ப்பாட்டத்திலும் ஏராளமானோர் கலந்து கொண் டனர்.
 
 
 
 
 
 

 

 



 

*******
 இந்திய தவ்ஹித் ஜமாத்தின் ஆவேச ஆர்பாட்டம்!
அமெரிக்க தூதரகம் முற்றுகை காட்சி!