செவ்வாய், 11 செப்டம்பர், 2012

ஜல போராட்டத்துக்கு வெற்றி!





                             மத்திய பிரதேச மாநிலத்தில், நர்மதை நதியின் குறுக்கே கட்டப்பட்டிருக்கும் ஓம்கரேஷ்வர் அணை நீர்மட்டத்தை 262 மீட்டராக உயர்த்தியதால், விவசாய நிலங்கள் தண்ணீரில் மூழ்கிவிடவே... பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் கடு
மையாக பாதிப்புக்குள்ளானார்கள். இதையடுத்து, அணையின் நீர்மட்டத்தை இரண்டு மீட்டர் குறைக்க வலியுறுத்தி, ஹர்தா மற்றும் கண்ட்வா பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் தொடர்

போராட்டங்களில் குதித்தனர்.

இதன் ஒரு கட்டமாக நர்மதா ஆற்றில் கழுத்து வரை தண்ணீரில் மூழ்கியபடி, 17-வது நாளாக சத்தியாகிரக போராட்டம் நடத்தப்பட்ட நிலையில்... மாநில முதலமைச்சர் சிவ்ராஜ் சவுகான் 'அணையின் நீர்மட்டம் குறைக்கப்படும். அதன்பிறகும், பாதிப்புக்குள்ளாகும் விவசாயிகளுக்கு, அவர்கள் இழந்த நிலத்துக்கு பதிலாக வேறு இடத்தில் நிலம் வழங்கப்படும்' என்று அறிவித்திருப்பதோடு... 'மற்ற கோரிக்கைகள் குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தி 90 நாட்களுக்குள் முடிவு எடுக்கப்படும். இதற்காக ஐந்து பேர் கொண்ட குழு அமைக்கப்படும்' என்றும் அறிவித்துள்ளார்.


இதையடுத்து, 17 நாள் ஜல போராட்டம் முடிவுக்கு வர உள்ளது. போரடினால்தான் வெற்றி!


நன்றி : பசுமை விகடன்