செவ்வாய், 25 செப்டம்பர், 2012

காவிரியில் தண்ணீர் திறக்கச் சொல்ல... உச்ச நீதிமன்றத்துக்கும் அதிகாரம் இல்லை!'


காவிரி பிரச்னை பழையபடி விஸ்வரூபமெடுக்க ஆரம்பித்துவிட்டது. Ôதினம்தோறும் 9 ஆயிரம் கன அடி தண்ணீரை ஒரு மாத காலத்துக்காவது திறந்துவிடுங்கள்' என்று காவிரி ஆணையத் தலைவர் என்கிற முறையில் பிரதமர் மன்மோகன் சிங் கூறியது... கர்நாடகத்தினரை கோபப்படுத்திவிட்டது.
'அதெல்லாம் முடியாது' என்று கூட்டத்திலிருந்தே வெளிநடப்பு செய்துவிட்டார் அந்த
மாநில முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர். ஆனாலும்கூட அங்கே சாமியார்கள், அரசியல்வாதிகள், நடிகர்-நடிகைள் என்று ஆளாளுக்கு களத்தில் இறங்கி 'தமிழகத்துக்கு தண்ணீர் தரமாட்டோம்..' என்றபடி போராடிக் கொண்டுள்ளனர். தமிழக வாகனங்களை தடுத்து நிறுத்தி கலாட்டா செய்கின்றனர். அதிலும் அந்த ஊர் சாமியார்கள்... 'காவிரி தண்ணீரை தரும்படி கூறுவதற்கு மத்திய அரசுக்கோ... உச்ச நீதிமன்றத்துக்கோ... வேறு எந்த அமைப்புகளுக்கோ அதிகாரம் இல்லை' என்று போர்முழக்கம் செய்கிறார்கள்.
கர்நாடகா... இந்தியாவில்தான் இருக்கிறதா என்பதே சந்தேகமாக இருக்கிறது!

எதற்கெடுத்தாலும் தேசியம் பேசும் காங்கிரஸ், ஜனதா மற்றும் பி.ஜே.பி. போன்ற கட்சிகள்தான் மாறி மாறி அங்கே ஆட்சி நடத்திக் கொண்டிருக்கின்றன. ஆனாலும், கூட அங்கே தேசிய உணர்வு ஏன் வளர்க்கப்படவில்லை? தமிழ்நாடும் இந்தியாவில்தான் இருக்கிறது அவர்களுக்கு தண்ணீரை பிரித்து தருவதில் தவறு இல்லை என்கிற சகோதர உணர்வை வளர்க்கத் தவறிவிட்ட இந்தக் கட்சிகள்தான்... ஒன்றுபட்ட இந்தியாவை உருவாக்குவோம் என்று தமிழ்நாட்டில் ஓயாமல் கூச்சல் போட்டுக் கொண்டுள்ளன.

வெட்கக்கேடு!


-ஜூனியர் கோவணாண்டிநன்றி : pasumai vikatan


கூடங்குளத்தில் கதிர் வீச்சு ஏற்படாது என்பதற்கு என்ன உத்தரவாதம்? : உச்ச நீதிமன்றம் கேள்வி                            கூடங்குளம் அணு மின் நிலையத்தில் கதிர்வீச்சு அபாயம் ஏற்படாது என்பதற்கு என்ன உத்தரவாடம் அளிப்பீர்கள் என மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

கூடங்குளம் அணு உலை செயல்படுவதற்குத் தடை விதிக்கமுடியாது என சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

நீதிபதிகள் கே.எஸ். ராதாகிருஷ்ணன், தீபக் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று வியாழக்கிழமை இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, கூடங்குளம் அணு உலையில் பயன்படுத்தப்பட்ட எரிபொருளில் இருந்து கதிர்வீச்சு ஏற்படாது என்பதற்கு என்ன உத்தரவாதம் இருக்கிறது? 1984-ம் ஆண்டு போபாலில் விஷவாயுக் கசிவு ஏற்பட்டது.  அதன் பாதிப்பு தற்போதும் உள்ளது. அதுபோன்று விபத்து ஏற்பட்டால் அதை அரசு எப்படி எதிர்கொள்ளும்? என்று மத்திய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் மோகன் பராசரனிடம் நீதிபதிகள் கேள்வியெழுப்பினர்.

மக்களின் உரிமையையும், அவர்களின் விருப்பத்தையும் நீதிமன்றம் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியமானது என கூறிய நீதிபதிகள்  சுற்றுச் சூழல் பாதிப்பு தொடர்பான ஆய்வு மேற்கொள்ளப்பட்டதா எனவும் கேள்வி எழுப்பினர்.

இதேவேளை இப்பிரச்சினையில் மனுதாரர் சுந்தர்ராஜன் தரப்பில் வழக்குரைஞர் பிரசாந்த் பூஷன் ஆஜரானார். அவர் வாதிடுகையில்

அணுசக்தி ஒழுங்காற்று வாரியத்தின் 17 பரிந்துரைகளில் 11 பரிந்துரைகள் மீறப்பட்டுள்ளன. அதுதவிர சுற்றுச்சூழல் விளைவு குறித்த ஆய்வு, பேரிடர் மேலாண்மை ஆய்வு உள்ளிட்ட அடிப்படை விதிமுறைகளும் பின்பற்றப்படவில்லை. அணு சக்தி ஒழுங்காற்று வாரியத்தின் பாதுகாப்பு பரிந்துரைகள் முழுவதுமாக அமல்படுத்த 6 மாதங்கள் தொடக்கி இரு வருடங்கள் வரை கால அவகாசம் தேவை என  அணு மின் நிலைய அதிகாரிகள் கூறியுள்ளனர். துரதிஷ்டவசமாக குறித்த காலப்பகுதியிக்குள் ஏதாவது ஒரு இயற்கை பேரழிவு நிகழ்ந்துவிட்டால், மாபெரும் கதிர்வீச்சு கசிவு ஏற்பட்டு, சுற்றியிருக்கும் ஒரு மிகப்பெரும் பகுதி அழிவுக்குள்ளாகும். மில்லியன் கணக்கான மக்களை அங்கிருந்து வெளியேற்றவேண்டிய நிலை உருவாகும்.

  ரஷியாவுடன் மேற்கொண்ட ஒப்பந்தத்தின் படி, பயன்படுத்தப்பட்ட எரிபொருள் ரஷியாவுக்குத் திருப்பி அனுப்பப்பட வேண்டும். ஆனால்,தற்போது 7 வருடங்களுக்கு இந்தியாவிலேயெ  வைத்துக்கொள்ள வேண்டும் என முடிவு செய்யப்பட்டுள்ளது. அந்த எரிபொருளில் இருந்து மரண அபாயம் விளைவிக்கக் கூடிய கதிர்வீச்சு சில ஆண்டுகளுக்கு வெளியாகும் என்ற நிலை காணப்படுகிறது.

இவ்விடயத்தில் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் வழிகாட்டு நெறிமுறைகள் கட்டாயம் பின்பற்றப்பட வேண்டும் என்ற போதும், அவற்றின் கருத்தை கூட மத்திய அரசு செவிசாய்க்கவில்லை என்றார். இதையடுத்து இவ்விவகாரத்தை முழுமையாக ஆய்வு செய்த பின்னரே, உத்தரவு பிறப்பிக்க முடியும் என்ற கூறிய நீதிபதிகள் அடுத்த கட்ட விசாரணையை செப்டம்பர் 27-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

முன்னதாக, கடந்த 13-ம் தேதி வழக்கு விசாரணையின் போது அணு உலையில் எரிபொருளை நிரப்புவதற்குத் தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

இவர்கள் நாட்டின் பாதுகாவலர்களா? ஐ.எஸ்.ஐயின் கைகூலிகளா?


முஸ்லிம்கள், முஸ்லிம் இயக்கங்கள் மீது தீவிரவாத முத்திரை குத்தி வேட்டையாடும் உளவுத்துறையின் அறிக்கைகளுக்கு பின்னால்  செயல்படுபவர்கள் மத்திய அரசு பீடங்களில் உள்ள RSS அனுதாபிகளே.

மத்திய இண்டலிஜன்ஸ் பீரோவான  ஐ.பியின் முன்னாள் இயக்குநர் அஜித்குமார் டோவல் தலைமையில் விவேகானந்தா இண்டர்நேசனல் ஃபவுண்டேசன் என்கிற அமைப்பு செயல்பட்டு வருகிறது.  இந்த அமைப்பே முஸ்லிம்கள் மீது தீவிரவாத முத்திரையை உண்டாக்கும் விசயங்களை திட்டமிட்டு செய்து வருகி
றது.

இந்த அமைப்பு கன்னியாகுமரியில் இருந்து செயல்படும் விவேகானந்த கேந்திரத்தின் கீழ் வருகிறது. ஆர்.எஸ்.எஸ் தலைவர்களுள் ஒருவரான ஏமகனாத் ரானடே என்பவர் தலைமையில் 1972 ல் இந்த இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது. நரசிம்மராவ் பிரதமராக இருந்த காலத்தில்  டெல்லி உள்ள  சாணக்யா புரியில் இலவசமாக வழங்கப்பட்ட இடத்தில்தான் இதன் தலைமையகம் அமைந்துள்ளது.

மூத்த ஆர்.எஸ்.எஸ் தலைவர்களுடன்  இந்திய இண்டலிஜன்ஸ் பீரோவான ஐ.பியின் முன்னாள் தலைவர்கள்,  உளவுத்துறையான ‘ரா’வின்  முன்னாள் தலைவர்கள், முன்னாள் ராணுவ காலால் படை தலைவர்கள், முன்னாள் விமானப்படை தலைவர்கள், முன்னாள் கப்பல் படை தலைவர்கள், முன்னாள் வெளியுறவுத்துறை செயலாளர்கள்,  முன்னாள் இந்திய தூதர்கள், பொருளாதார வல்லுநர்கள் ஆகியோர் இந்த இயக்கத்தின் தலைமை பதவிகளில் உள்ளனர்.

இந்த அதிகாரிகளின் பதவி காலக்கட்டத்தில்தான் முஸ்லிம் இயக்கங்களுக்கும், முஸ்லிம்களுக்கும் எதிரான தீவிரவாத தொடர்பு குற்றச்சாட்டை கூறும் உளவுத்துறையின் அறிக்கைகள் அதிகமாக வெளியாகின. ஆர்.எஸ்.எஸ். நடத்திய மலோகேன், அஜ்மீர், சம்ஜோதா ரயில், மக்கா மஸ்ஜித், ஆகிய குண்டு வெடிப்புகளை முஸ்லிம்கள் மீது திசை திருப்பி விட்டவர்களும் இவர்களே. இந்த அறிக்கைகளின் அடிப்படையில் அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் மீது தீவிரவாத முத்திரைக்குத்தப்பட்டு சிறைகளில் அடைப்பட்டனர்.

இந்தியாவின் பல மாநிலங்களில் உண்மைக்கு புறம்பாக ஆர்.எஸ்.எஸ். ஹிந்துத்துவா சித்தாந்தத்தின் அடிப்படையில் சிறுபான்மை மக்களை அழித்தொழிக்கும் இந்த வேலைகளைகன்னியாகுமரி சுவாமி விவேகானந்தா கேந்திரத்தின் கீழ் செயல்படும் விவேகானந்தா இண்டர்நேசனல் ஃபவுண்டேசன் என்கிற அமைப்பே செய்து வந்தது. இதன் பின்னணியில்தான் அதிராம் பட்டினத்தை சேர்ந்த முஸ்லிம் இளைஞ்சர் வெங்காய ஏற்றுமதி வியாபாரி அன்சாரியின் கைதும் அடங்கும். இதுவரை மற்றைய மாநிலங்களில் தங்கள் கைவரிசையை காட்டியவர்கள் இப்போது தமிழகம் வந்துள்ளனர்.

ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மதவாத செயல்களுக்கு துணை புரியும் இந்த அமைப்பின் அறிக்கைகளை முதலில் வெளியிடுவது இவர்களின் கைகூலிகளான தினமலர், தினமணி போன்ற பத்திரிக்கைகளே. மத்திய அரசுக்கு எதிராக அன்னா ஹஸாரே, பாபா ராம்தேவ் ஆகியோர் நடத்திய போராட்டத்தின் பின்னணியில் செயல்பட்டதும் இந்த அமைப்புதான்தான் என்பது குறிப்பிடத்தக்கது. உலக நாடுகளில் உளவுத்துறை என்பது நாட்டின் பாதுகாப்பு, மற்றும் வளர்ச்சிக்கு துணை புரிவார்கள் ஆனால் நம்நாட்டு உளவுத்துறையோ நமக்கு சாபக்கேடாக அமைந்துவிட்டது.
 *மலர்விழி*

தமீம் அன்சாரி: ஊடகங்கள்+போலீசு உருவாக்கிய தீவிரவாதி!


தமீம்-அன்சாரி

ஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தைச் சேர்ந்த தமீம் அன்சாரி (34) கடந்த செப்டம்பர் 16 அன்று திருச்சி விமான நிலையத்தில்  கைது செய்யப்படுகிறார். 

பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ-க்கு இந்திய ராணுவ ரகசியங்களைக் கடத்த முயன்றபோது அவரை கைது செய்ததாக‌ க்யூ பிரிவு போலீசார் செய்தி பரப்பினர். ஆதாரம் அவர் வைத்திருந்த செல்போனில் உள்ள குன்னூர் ராணுவ பயிற்சிக் கல்லூரி மற்றும் அணுமின் நிலையங்களின் புகைப்படங்கள். இணையத்தை திறந்தால் எளிதாக கிடைக்கும் இப்படங்களை ஒரு ஆள் வைத்து புகைப்படம் எடுக்குமளவுக்கு ஐஎஸ்ஐ என்னமோ  அர்ஜூன், விஜயகாந்த் படங்களில் வரும் காமடி பீசாக காட்டுகின்றனர் தமிழக போலீசார்.

வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கை இலங்கைக்கு ஏற்றுமதி செய்யும் தமீம் அன்சாரி அங்கு பாக். உளவுப்பிரிவில் உள்ள சாஷி, காஜி என்பவர்களை சந்தித்தாராம். கடந்த 8 மாதங்களில் அன்சாரி இலங்கைக்கு 5 முறை சென்றாராம்.  தமீம் அன்சாரிக்கு சாஜி தர வேண்டிய வியாபார பாக்கி 27 இலட்ச ரூபாய். அதாவது க்யூ பிராஞ்ச் மொழியில் சொல்வதென்றால் உளவு பார்ப்பதற்கான கைக்கூலி.

முதல் தகவல் அறிக்கையில் சாஜி பெயரும், இலங்கையிலுள்ள பாக். தூதரகத்திலுள்ள சில அதிகாரிகளின் பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது. ,,அவர்களில் யாரும் பாகிஸ்தான் உளவுப் பிரிவில் இருப்பவர்களா? என எனக்குத் தெரியாது.,, என்கிறார் தமீம் அன்சாரி. அவர்களுடம் வியாபாரம் செய்வதைத் தாண்டி அவர்களுடைய சொந்த விருப்பு வெறுப்பு தனக்கு எப்படித் தெரியும் என்கிறார் அன்சாரி.  இந்த லட்சணத்தில் கடந்த 8 மாதமாக அவரது செல்போன் பேச்சுக்களை வேறு உளவுப் பிரிவினர் கண்காணித்துதான் பொறி வைத்துப் பிடித்தார்களாம்.

அன்சாரி மீது இந்திய அரசாங்க ரகசிய சட்டம் 3,4,9 பிரிவின் கீழும், இந்திய தண்டனைச் சட்டம் 120பி இன் கீழும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தில் உறுப்பினராக உள்ள அன்சாரி முன்னாள் தஞ்சை மாவட்ட இந்திய மாணவர் சங்க செயலர். ஆனாலும் சிபிஎம் இக்கைது பற்றி வாய் திறக்கவேயில்லை. 

அதனால்தான் விமான நிலையத்தில் கைதுசெய்து விட்டு திருச்சி டோல்கேட்டில் வைத்து பிடித்ததாக முதல் தகவல் அறிக்கையில் போலீசாரால் துணிந்து பொய் சொல்லுவதோடு அவருக்கு தீவிரவாதி பட்டமும் கட்ட  முடிகிறது. சிபிஎம்மும் பொதுவான இந்து உளவியலின் செல்வாக்கில் இருப்பதால் அன்சாரிக்கு ஆதரவாக குரல் கொடுக்கவில்லை.

புகைப்படம் எடுப்பதில் ஆர்வமுள்ள அன்சாரி வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கை கொள்முதல் செய்ய குன்னூருக்கு சென்றபோது வெலிங்கடன் ராணுவக் கல்லூரியையும் புகைப்படம் எடுத்தாராம். தஞ்சைக்கருகில் உள்ள மல்லிப்பட்டிணம் கடற்படை தளத்தை கூட இதுவரை அவர் பார்த்ததில்லையாம். ஆனால் அவர் அங்கேயும் சென்று படம் எடுத்தாகக் கூறுகிறது போலீசு. எதிர்காலத்தில் ஒரு திரைப்படம் எடுக்க வேண்டும் என்பதும் அன்சாரியின் ஆசையாம். அதற்கு செல்லுமிடங்களெல்லாம் புகைப்படம் எடுக்கும் வழக்கம் உடையவர் அவர்.

குன்னூரில் இந்திய இராணுவம் இருக்கிறது, பயிற்சிக் கல்லூரிகள் இருக்கிறது என்பது உலகத்திற்கே தெரிந்த விசயம். அதுவும் இலங்கை வீரர்கள் எல்லாம் வந்து பயிற்சி செய்யும் இடம். ஒரு வேளை இலங்கை வீரர்கள் மூலம் குன்னூர் தகவல்கள் பாகிஸ்தான் சென்றால் இந்தியா என்ன செய்யும்? எனில் அப்படி ஒரு வாய்ப்பு இருக்கிறது என்பதோடுதான் அங்கு இலங்கை வீரர்கள் வந்து போகிறார்கள் என்றால் அதில் இரகசியம் ஏதுமிருக்க வாய்ப்பில்லை.

இந்தியாவின் மூலை முடுக்குகளையெல்லாம் அமெரிக்க விண்கோள்கள் வேவு பார்க்கும் போது அமெரிக்காவிடம் சொல்லி இந்திய இராணுவ இரகசியங்களை பாக் வாங்கிவிடலாம். இல்லையெனில் அப்படி ஒரு விண்கோளை விட்டால் முடிந்தது விசயம். இதெல்லாம் முடியாது என்று ஒரு திருச்சி வெங்காய வியாபாரியை வைத்துத்தான் ஐ.எஸ்.ஐ செயல்படுகிறது என்றால் சிரிப்பாக இல்லை?

ஏற்கெனவே முசுலீம்கள் பற்றிய சமூகத்தின் பொதுப்புத்தியில் உறைந்திருக்கும் புரிதலுக்கு ஏற்ப ஊடகங்கள் தமீம் அன்சாரியை முக்கியமான தீவிரவாதியாக ஓரிரவில் சித்தரித்து விட்டன• போலீசும், ஆளும் வ‌ர்க்க‌மும் நாடு முழுக்க‌ முசுலீம்க‌ளை தீவிர‌வாதிக‌ளாக‌ காட்டுவ‌தில் முன்னிற்கின்ற‌ன• காசுமீரில்  சாதார‌ண‌ அப்பாவிக‌ளை இந்திய‌ ராணுவ‌ம் தீவிர‌வாதிக‌ளாக‌ சித்த‌ரிக்கின்ற‌து. அதுபோல‌வே நாடு முழுதும் சித்த‌ரிப்ப‌த‌ன் ஒரு ப‌குதிதான் அன்சாரி தீவிர‌வாதி ஆன‌தும்.

-vinavu.com