புதன், 28 நவம்பர், 2012

பேஸ்புக்கில் கருத்து: 2 பெண்களுக்கு தண்டனை விதித்த மாஜிஸ்திரேட் திடீர் இடமாற்றம்: மும்பை ஐகோர்ட்

                                சிவசேனா தலைவர் பால்தாக்கரே மரணம் அடைந்ததைத் தொடர்ந்து மறுநாள் மும்பையில் முழு அடைப்பு நடத்தப்பட்டது. இதை மராட்டிய மாநிலம் பல்கர் நகரை சேர்ந்த 2 இளம்பெண்கள் பேஸ்புக் இணையத்தளத்தில் விமர்சனம் செய்திருந்தனர்.

சிவசேனா நிர்வாகிகள் கொடுத்த புகாரின் பேரில் அந்த 2 இளம்பெண்களும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது போலீசார் 2 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்களை 15 நாள் காவலில் வைக்க பல்கர் மாவட்ட ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு ராமச்சந்திர பகடே உத்தரவிட்டார். பிறகு ரூ.15 ஆயிரம் ஜாமீனில் விடுவித்தார்.

இதற்கிடையே பேஸ்புக்கில் கருத்து வெளியிட்ட 2 பெண்கள் கைதானது நாடெங்கும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. 2 பெண்களுக்கு தண்டனை கொடுத்ததும் விமர்சனம் செய்யப்பட்டது. இந்த நிலையில் மாஜிஸ்திரேட்டு ராமச்சந்திர பகடே இன்று திடீரென பல்கர் மாவட்டத்தில் இருந்து ஜல்கான் மாவட்டத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இதற்கான உத்தரவை மும்பை ஐகோர்ட் வெளியிட்டுள்ளது.

இந்த விவகாரத்தில், பேஸ்புக்கில் விமர்சனம் செய்த பெண்களை கைது செய்த எஸ்.பி. சஸ்பெண்ட் செய்யப்பட்டார். தானே மாவட்ட எஸ்.பி. ரவிந்தர் செகாவ்கர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார் என அம்மாநில அமைச்சர் பாட்டீல் தெரிவித்துள்ளார். பால்கர் காவல் நிலைய ஆய்வாளர் ஸ்ரீகாந்த் பிங்களேவும் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக அமைச்சர் பாட்டீல் கூறியுள்ளார்.


நன்றி tmmk.info