வியாழன், 11 அக்டோபர், 2012

லப்பைகுடிகாட்டில் மின்வாரியம் முற்றுக்கை போராட்டம்.
                           
                                வரலாறு காணாத மின்வெட்டை மற்றும்  சில கோரிக்கைகளையும் வலியுறுத்தி நமதூரில் மின்வாரியம் முற்றுக்கை போராட்டம் நடந்தது. இதில் சுமார் 50 போ் கலந்துக்கொண்டனர்.
 
இது போக ஊர் பொதுமக்களை விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சில இளைஞர்கள்  தெரு தெருவாக சென்று போராட்டதிற்கு அழைப்பு விடுத்து வந்தனர். இதை காவல்துறைக்கு சிலர் தெரியப்படுத்தினர். பின்பு காவல் துறை வந்திரங்கியது. போராட்டகாரர்களை அப்புரவு படுத்த முயன்ற காவல்துறை, இவர்கள் மறுக்கவே பேச்சுவார்த்தை நடைப்பெற்றது.
 
 
இந்த பேச்சுவார்த்தையில் சில கோரிக்கைகள்.
மின்சாரம் இதுபோலதான் இருக்கும் என்று நிருபணமானது.
மினசாரம் இயங்கும் நேரத்தை அட்டவனை கெடுப்பது.
மின் அளவீட்டை குறித்த பிறகு கால அவகாசம் தேவை என்பதை பேசப்பட்டது.
 
 
லப்பைகுடிகாட்டில் நலவான திட்டம் எதுவும் ஆளும் கட்சி செயல் படுத்தாமல் ஒருதலை பட்சமாக செயல் படும் இந்த தருணத்தல், எதிர் கட்சியில் இருப்பவர்கள் கூட இதில் கலந்துக்கொள்ளாமல் புறக்கனித்தது அரசியல் கட்சியை நம்பியிருப்பவர்கள் மத்தியில் மிகுந்த மண வருத்தத்தை உருவாக்கியுள்ளது. இதில் ஒருவர் கூறுகையில் இனி எந்த முகத்தைக்கொண்டு ஓட்டு கேட்க வருவார்கள் என்பதை பார்ப்போம் என்றார்.
 
 
இதில் வழக்கம் போல் எந்த ஒரு சிந்தனையும் இல்லாமல் தன்னுடைய வயிறு நொம்பினால் போதும் என்று சமுதாயப்பணி செய்பவர்களை ஏலனம் செய்துக்கொண்டுள்ளார்கள்.நன்றி - Labbaikudikadu News

மக்கள் கொந்தளிப்பால் முறியடிக்கப்பட்ட மஸ்ஜித் தகர்ப்பு முயற்சி!                               டெல்லி வளர்ச்சி ஆணையம் (Delhi Development Authority – DDA) தகர்க்க முனைந்த முனிர்கா மஸ்ஜிதின் ஒரு பகுதி அப்பகுதி மக்களின் முயற்சியால் முறியடிக்கப்பட்டது.
 
டெல்லியில் முனிர்கா கிராமத்திலுள்ள நெல்சன் மண்டேலா சாலையில் இந்த மஸ்ஜித் உள்ளது. வசந்த் விகார் காவல் நிலையத்திற்கருகிலுள்ள இந்த மஸ்ஜிதின் ஒரு பகுதியைத் தகர்ப்பதற்காக நேற்று காலை 9 மணியளவில் புல்டோசர்களும், டிரக்குகளும் வரவழைக்கப்பட்டன.அவற்றிற்குப் பாதுகாப்பாக போலீசாரும் மஸ்ஜிதுக்கு அருகில் குவிந்தனர்.
இதனைக் கேள்விப்பட்ட அப்பகுதி மக்கள் சுமார் 500 பேர் மஸ்ஜிதைச் சுற்றி ஒன்றுகூடி விட்டனர். உள்ளூர் எம்.எல்.ஏ. பர்கா ஷுக்லாவும், அந்தப் பகுதி கவுன்சிலர் பிர்மிலா டோகாஸும் அந்த இடத்திற்கு வந்தனர். பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு மஸ்ஜிதைத் தகர்ப்பது நிறுத்தப்பட்டது.
டெல்லி வளர்ச்சி ஆணைய அதிகாரிகள் மஸ்ஜிதின் ஒரு பகுதி தோட்டக்கலைத் துறைக்குச் சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்திருப்பதாகவும், அதனால் அதனை இடிப்பதற்கு தங்களிடம் உத்தரவுகள் இருப்பதாகவும்  கூறினர். ஆனால் இதனை மஸ்ஜித் நிர்வாகிகள் மறுத்தனர். அந்த நிலம் மஸ்ஜிதுக்குச் சொந்தமானது என்பதற்கு அவர்கள் தகுந்த ஆவணங்களை வைத்துள்ளனர்.
இந்த மஸ்ஜித் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்திற்கு அருகில் இருப்பதால் வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகைக்கு சுமார் 3000 பேர் வருகை தருகின்றனர். அவர்கள் அனைவருக்கும் இடமளிக்கும் விதமாக கொளுத்தும் வெயில் படாமலிருக்க தகரத்தால் ஆன தற்காலிகக் கூரையை மஸ்ஜித் நிர்வாகம் மஸ்ஜிதுக்கு வெளியே அமைத்துள்ளது. கடைசி நேரத்தில் மத்திய நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கமல் நாத் தலையிட்டு மஸ்ஜித் இடிப்பைத் தடுத்தார்.
இனி வருங்காலத்திலும் இம்மாதிரி இடிப்பு முயற்சிகளைச் செய்யாமலிருக்க மஸ்ஜித் நிர்வாகம் டெல்லி முதல்வர் ஷீலா தீக்ஷித்துக்கு கடிதம் எழுதியுள்ளது.
 
  நன்றி - Labbaikudikadu News
 

பெரம்பலூரில் SDPI யின் மாவட்ட செயர்க்குழு கூட்டம் நடைப்பெற்றது

                                        பெரம்பலூரில் SDPI யின் மாவட்ட செயர்க்குழு கூட்டம் 10-10-1012 நேற்று காலை 11 மணி அளவில் நடைப்பெற்றது இதில் மாநில தலைவர் K.S.S.M.தெஹ்லான் பாக்கவி கலந்துக் கொண்டார். தகவல் : Mohamed Farook நன்றி - வி.களத்தூர்.காம்


அரியலூர் கிளையில் இஸ்லாத்தை ஏற்ற ஜோசப்

 

பெரம்பலூர் மாவட்டம்  அரியலூர் கிளையில் கடந்த 23-09-2012  அன்று ஜோசப் என்ற சகோதரர் தன் வாழ்க்கை நெறியாக தூய இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு தனது பெயரை  யூசுப் என மாற்றிக் கொண்டார். இவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கப்பட்டது

பெரம்பலூரில் இஸ்லாத்தை ஏற்ற சத்யமூர்த்தி

 

                    பெரம்பலூர் மாவட்டம், பெரம்பலூர் கிளை சார்பாக க்டந்த 03/10/2012அன்று மருவத்தூரைச் சேர்ந்த சகோ.சத்தியமூர்த்தி தூய மார்க்கமான இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டு தனது பெயரை முஹம்மது ரில்வான் என மாற்றிக் கொண்டார். இவருக்கு புத்தகங்கள் வழங்கப்பட்டது.

சகோதரர் PJ அவர்களுக்கு துஆ செய்வோம்!

 

சகோதரர் பி.ஜே. அவர்களுக்கு வலதுபுற மார்பின் மேற்பகுதியில் (Skin) தோலுக்கடியில் சிறிய அளவில் ஒரு கேன்சர் கட்டி உள்ளதாக மருத்துவ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த கட்டியை அறுவை சிகிச்சை மூலம் முற்றிலும் குணப்படுத்த முடியும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளார்கள்.மேலும் இதுவல்லாத மாற்று மருத்துவ முறைகளிலும் சிகிச்சைகள் உள்ளதாக சிலர் ஆலோசனை கூறுகின்றனர். எல்லாவற்றுக்கும் மேலாக படைத்தவனின் அருள் கொண்டே தவிர நிவாரணம் இல்லை என்பதே நமது நம்பிக்கை.

வழக்கம் போல் அவர்கள் தமது பணிகளைச் செய்து கொண்டு இருக்கிறார்கள்.
எனவே அவர்களுக்காக வல்ல அல்லாஹ்விடம் அதிகமதிகம் பிரார்த்தனை செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம். நேரிலோ அல்லது தொலைபேசியிலோ அவர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்திவிட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம். இது குறித்து சகோதரர் பி.ஜே. அவர்கள் மாநில நிர்வாகத்திற்கு அனுப்பிய கடிதத்தை கீழே தருகிறோம்.

இப்படிக்கு
மாநில நிர்வாகம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
10.10.2012

-tntj.netபுஷ்ரா நல அறக்கட்டளையின் மகிழ்ச்சியான அறிவிப்பு!

கடந்த பல வருடங்களாக வி.களத்தூர், மில்லத் நகர் மக்களுக்கு ஈத் பெருநாள் கேக்குகளை சிறப்பாக வழங்கி வருகிறது.இந்த வருடமும் தனது  சேவையை மேம்படுத்தும் விதமாக  வரும் பக்ரீத் பெருநாள் அன்று லப்பைகுடிகாட்டிலும் பக்ரீத் கேக்கை நீங்கள் கொடுக்கும் முகவரிக்கு குறித்த நேரத்தி்ல் டெலிவரி செய்யப்பபடும்.உங்களின் ஆர்டர்களை கீழ்கானும் பொருப்பாளர்களிடம் தருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

ஒரு கேக்கின் விலை 13 திர்ஹம் மட்டுமே!  

ஆர்டர் பெறும் கடைசி தேதி : 23.10.2012கேக் ஆர்டர்களுக்கு கிழ்க்கண்ட சகோர்களை  தொடர்பு கொள்ளவும்:

A . அப்துல் சலாம்                          055 1153584

 F அப்துல் ரஹ்மான்                    050 640238

F முஹம்மது இஸ்மாயில்      055 8498129

S பைஜுர் ரஹ்மான்                    055 2893450

அ சம்சு தீன் (அல்குஸ்)              050 3685044

S சலீம் பாஷா (ஷார்ஜா)           056 1522651

M முஹம்மது இஷாக் (அபுதாபி)     056 6737912

இப்படிக்கு
புஷ்ரா நல அறக்கட்டளை

செவ்வாய், 9 அக்டோபர், 2012

அமெரிக்காவில் வால்மார்ட் ஊழியர்கள் போராட்டம்!

                           வால்மார்ட் கொண்டு வரும் வேலை வாய்ப்பைப் பற்றி நம்ம ஊர் அறிவு ஜீவிகள் பேசி வியந்து கொண்டிருக்கும் அது எப்படி இருக்கும் என்பதை அமெரிக்கத் தொழிலாளர்கள் உணர்த்துகின்றனர்.

வால்மார்ட்-வேலை-நிறுத்தம்

                              ன்பது வால்மார்ட் கடைகளில் பணி புரியும் 70க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கடந்த வியாழக் கிழமை அடையாள வேலை நிறுத்தம் செய்தனர். தென் கலிபோர்னியாவில் உள்ள கடைகளைச் சேர்ந்த இந்த ஊழியர்கள் உட்பட 250 பேர் பிகோ ரிவைரா என்ற இடத்தில் உள்ள கடைக்கு முன் கூடி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

“உரிமைகளை கேட்பதற்கான உரிமைக்காக வேலை நிறுத்தம்”, “பழிவாங்குவதற்கு எதிரான வால்மார்ட் வேலை நிறுத்தம்” போன்ற பதாகைகளை ஊழியர்கள் பிடித்திருந்தனர்.

“பிரச்சனைகளை தாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. நிர்வாகத்தின் பழி வாங்கும் நடவடிக்கைகளை இனிமேலும் பொறுத்துக் கொள்ள முடியாது” என்கிறார் பிகோ ரிவேரா வால்மார்ட் ஊழியர் எவ்லின் குரூஸ்.
வால்மார்ட், லாபம் சம்பாதிப்பதற்காக
 • குறைவான கூலிக்கு ஒப்பந்த ஊழியர்களை வேலைக்கு அமர்த்துவது,
 • வேலை செய்த நேரத்தை பொறுத்து மட்டும் சம்பளம் கொடுப்பது
 • தேவையான எண்ணிக்கையை விட குறைவான ஆட்களை வேலைக்கு வைத்திருப்பது. அதன் மூலம் ஒருவரை இரண்டு ஆள் வேலை செய்ய வைப்பது
போன்ற கடுமையான சுரண்டல் நடவடிக்கைகளை பின்பற்றுகிறது.

உலகின் மிகப்பெரிய தனியார் நிறுவனமான வால்மார்ட், ‘தொழிலாளர்கள் யூனியன்களில் ஒன்று சேர்ந்து விடக் கூடாது’ என்பதற்காக கடுமையான கட்டுப்பாடுகளை வட அமெரிக்காவில் நிறுவனப்படுத்தியிருக்கிறது.

OUR வால்மார்ட் (வால்மார்ட்டில் கௌரவத்துக்கான நிறுவனம்) என்ற அமைப்பு கடந்த ஒரு ஆண்டாக வால்மார்ட் ஊழியர்களை யூனியனில் திரட்ட முயற்சித்து வருகிறது. அதன் உறுப்பினர்கள் வால்மார்ட் கடைகளில் பணிச்சூழலை மேம்படுத்த போராடியதோடு, வால்மார்ட் ஆண்டு பங்குதாரர் கூட்டத்தின்போது அங்கு ஒன்று கூடி  தமது கோரிக்கைகளை முழங்கினார்கள்.
வால்மார்ட் நிர்வாகம்
 • OUR வால்மார்ட் அமைப்புடன் சேர்ந்து செயல்படும் ஊழியர்களை வேலையிலிருந்து நீக்குவது
 • நேர அடிப்படையில் சம்பளம் பெறுபவர்களின் வேலை நேரத்தை குறைப்பது
 • OUR வால்மார்ட் அமைப்புடன் பேசக் கூடாது என்றும் அப்படி பேசினால் வால்மார்ட் கடையே மூடப்பட்டு விடும் என்று ஊழியர்களிடையே பிரச்சாரம் செய்வது
என்று பலவிதமான முறைகளில் ஊழியர்களை அச்சுறுத்தியிருக்கிறது. தொழிலாளருக்கு எதிரான அத்தகைய முறையற்ற நடவடிக்கைகள் குறித்து 20 புகார்கள் அமெரிக்க தேசிய தொழிலாளர் நல வாரியத்திடம் வால்மார்ட் ஊழியர்களால் பதிவு செய்யப்பட்டுள்ளன.

OUR வால்மார்ட் அமைப்பில் சேர்ந்த பிறகு தனது வேலை நேரம் 30 மணி நேரத்திலிருந்து 8 மணி நேரமாக குறைக்கப்பட்டு விட்டதாக சொல்கிறார் மோனிக் என்ற பிகோ ரிவேரா வால்மார்ட் ஊழியர். ஐந்து குழந்தைகளுக்கு தாயான மோனிக், “எட்டு மணி நேரத்துக்கான சம்பளத்தை வைத்துக் கொண்டு ஒரு பில் கூட அடைக்க முடியாது, வாழ்க்கை மிக மிக கடினமாகியிருக்கிறது” என்கிறார்.

வேலை நிறுத்தம் நடந்த அதே நாளில் தென் அமெரிக்கா, ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, கனடா நாடுகளைச் சேர்ந்த சுமார் 80 வால்மார்ட் தொழிலாளர்கள் லாஸ் ஏஞ்சல்ஸ் தொழிலாளர்களை சந்தித்தனர். யூனியன் அமைப்பது, உரிமைகளுக்காக போராடுவது குறித்து  விவாதித்த தொழிலாளர்கள். UNI வால்மார்ட் குளோபல் யூனியன் அலையன்ஸ் என்ற அமைப்பை தொடங்கினர்.

இன்னொரு பக்கம் செபடம்பர் மத்தியிலிருந்து வால்மார்ட் கான்ட்ராக்டரான  ரோட்லிங்க்  நிறுவனத்தின் வால்மார்ட் கிடங்கு ஊழியர்கள் 30 பேர் வேலை நிறுத்தம் செய்து வருகிறார்கள். சுகாதாரமான பணியிடம், சம்பள உயர்வு, முறைப்படுத்தபட்ட வேலை நேரம் வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் வேலை நிறுத்தம் செய்கின்றர்.

வால்மார்ட் மற்ற பெரு நிறுவனங்களை போலவே நிரந்தர ஊழியர்களை பணியில் அமர்த்திக் கொள்ளாமல், ஒப்பந்த நிறுவனங்கள் மூலம் தொழிலாளர்களை பயன்படுத்திக் கொள்கிறது. அதன் மூலம் குறைந்த சம்பளம், போதுமான வசதிகள் மறுப்பு, வேலை நிரந்தரமின்மை போன்ற கொள்கைகளை தடையின்றி கடைப்பிடிக்க முடிகிறது.
 • வேலையிடத்தில் கடும் வெப்பம் அல்லது வாட்டும் குளிரை தாங்க வேண்டியிருக்கிறது
 • தூசுகளும் வேதி பொருள் துகள்களும் நிரம்பிய காற்றை சுவாசிக்க வேண்டியிருக்கிறது
 • 100 கிலோவை விட அதிக எடையுள்ள பெட்டிகளை ஆயிரக்கணக்கான முறை சுமந்து செல்ல வேண்டியிருக்கிறது.
 • வேலைக்கு வரும் போது எத்தனை மணி நேரம் வேலை இருக்கும் என்று யாருக்கும் தெரியாது. சில சமயம் இரண்டு மணி நேரத்தில் முடிந்து விடலாம், சில சமயம் 16 மணி நேரம் வரை கூட நீளலாம்.
 • தொழிலாளர்கள் பணியில் காயமடைதல், பெண்களுக்கு எதிரான பாலின பாகுபாடு நடவடிக்கைகள், தட்டிக் கேட்கும் ஊழியர்கள் மீது சட்ட விரோதமான பழி வாங்கும் நடவடிக்கைகள் என்று கொத்தடிமைகளாக நடத்தப்படுகிறார்கள் இந்த ஊழியர்கள்.
என்கின்றது இந்த ஊழியர்களுக்கான கூட்டமைப்பு.
கடந்த திங்கள் கிழமை (அக்டோபர் 1, 2012) வேலை நிறுத்தம் செய்யும்  ஊழியர்களுக்கு ஆதரவாக 650 பேர் இல்லினாய்ஸில் உள்ள வால்மார்ட்டின் வினியோக மையத்திற்கு அணிவகுத்து சென்றனர். 17 பேரை கைது செய்து அடக்கு முறையை ஏவியது போலீஸ். பின்வாங்காத  போராட்டக்காரர்கள் சாலையில் உட்கார்ந்து கிடங்குக்குள் வண்டிகள் போய் வருவதை தடுத்து நிறுத்தினர்.

வால்மார்ட்டின் 50 ஆண்டு கால வரலாற்றில் முதன்முறையாக “நம்மால் எதிர்த்து நிற்க முடியும் என்று இவர்கள் உணர்ந்திருக்கிறார்கள். இது ஒரு இயக்கத்தின் இறுதிக் கட்டம் இல்லை, இதுதான் ஆரம்பம்” என்கிறார் OUR வால்மார்டை அமைப்பின் டான் ஷ்லாடமன்.

வால் மார்ட் இந்தியாவில் கொண்டு வரபோகும் வேலை வாய்ப்புகளைப் பற்றி நம்ம ஊர் அறிவுஜீவிகள் பேசி வியந்து கொண்டிருக்கும் போது  வால்மார்ட் கொண்டு வரும் வேலை வாய்ப்பு என்பது எப்படி இருக்கும் என்பதை அமெரிக்கத் தொழிலாளர்கள்  தமது போராட்டங்களின் மூலம் இந்திய மக்களுக்குஉணர்த்துகின்றனர்.

- வினவு

உலகையே வியப்பில் ஆழ்த்திய கூடங்குளம் போராட்டம்!


கூடன்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டக் குழு இன்று கடலில் முற்றுகையிடும் போராட்டடம் ஒன்றை அறிவித்திருந்தது.

அதன்படி இன்று காலை பல்வேறு கிராமங்களில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்ப்பட்ட படகுகளில் மீனவர்கள் வந்து குவிந்தனர். அணு உலைக்கு 500மீட்டர் தொலைவில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கன்னியாகுமரி, சின்ன முட்டம், கோவளம், மணக்குடி, ஆரோக்கியபுரம், புதுக்கிராமம், பள்ளம்துறை, அன்னை நகர், கீழமணக்குடி, மேலமணக்குடி, ராஜாக்க மங்கலம்துறை, பொழிக்கரை, பெரியகாடு, கேசவன் புத்தன்துறை, புத்தன் துறை, கொட்டில்பாடு உள்பட 15 கடற்கரை கிராம மீனவர்கள் இன்று கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

கூடங்குளம் பகுதியில் குவிக்கப்பட்டுள்ள போலீசாரைத் திரும்பப் பெற வேண்டும், போராட்டம் தொடர்பாக கைது செய்த அனைவரையும் விடுதலை செய்யவேண்டும், அனைத்து வழக்குகளையும் வாபஸ் பெறவேண்டும், கூடங்குளம் அணுஉலையை மூடவேண்டும் என்ற 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டத்தை நடத்துவதாக, அணுஉலை எதிர்ப்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர்

அணு உலையை சுற்றி உள்ள கடல் பகுதியை போலீசார் ரோந்து படகுகள் மூலம் சுற்றி வளைத்துள்ளனர். ரோந்து பணியில் கப்பல் மற்றும் ஹெலிக்காப்படரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. சுமார் 5000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பிற்காக அந்த பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர்

உலக வரலாறு இதுபோன்ற ஒரு போராட்டத்தை கண்டிருக்காது என்றே சொல்லலாம். உண்ணாவிரத போராட்டம், மணலில் புதைந்து போராட்டம், கடலில் இறங்கி முற்றுகை போராட்டம், படகுகள் மூலம் முற்றுகைப் போராட்டம், என்று இடிந்தகரை, கூடங்குளம் மக்கள் காட்டிய போர் குணம், அரசையும், ஆளும்வர்க்கத்தையும் அச்சம் கொள்ள வைத்திருக்கிறது.
 
கூடங்குளம் மக்களின் போராட்டம் வெற்றியடைய நமது வாழ்த்துக்கள்.

- சிந்திக்கவும்

வி.களத்தூரின் கல்லாற்று பாலம் இன்று திறப்புவிழாவின் - புகைபடம்

IMG-20121009-WA0014

பாலம்  திறப்பு  விழாவிற்கு மாவட்ட MLA தமிழ்செல்வன் கலந்து கொண்டார் மற்றும் மாவட்ட ஒன்றிய கவுன்சிலர் மற்றும் ஊறாட்சி மன்ற தலைவர் கலந்து கொண்டார்.
 

இந்த விழ முடிந்த பிறகு MLA  இடம் நமது சகோதர்கள் மின் வெட்டு கண்டித்து புகர் தெரிவித்தனர் சில மக்கள் மனுக்களும் கொடுத்தனர்.
நன்றி - M.மன்சூர் அலி