திருச்சி சீரங்கம் கோயில் அருகில் பிரச்சாரம் |
இவர் தான் முஹம்ம்த்(ஸல்) பிரச்சார
இயக்கத்திற்காக வெளியிடப்பட்ட சமரசம் சிறப்பிதழ், நபி(ஸல்) வரலாற்று
புத்தகங்கள், மடக்கோலை ஆகியவற்றை பொது மக்களுக்கு சமர்பிக்கும் வகையில்
தமிழகம் முழுவதும் இறைவனின் கிருபையால் தெருமுனை பிரச்சாரம், புத்தக அரங்கு
போன்ற பல்வேறு சிறப்பு நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றது.,
திருச்சி, கோவை, கிருஷ்ணகிரி, வேலூர்,
தஞ்சை, சென்னை, மதுரை, விருதுநகர், தேனி, கம்பம், இராமநாதபுரம், நாகை,
வாணியம்பாடி போன்ற பல்வேறு நகரங்களில் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் ஊழியர்கள்
பொதுமக்களை சந்தித்து முஹம்மத் நபி (ஸல்) அவர்களை அறிமுகம் படுத்து
வருகின்றனர்.
இதுவரை 5000க்கும் அதிகமான சமரசம், ஒரு
இலட்சத்திற்கும் அதிகமான மடக்கோலை, ஆயிரகணக்கான புத்தகங்கள் என ஆயிரகணக்கான
பொதுமக்களை சந்தித்து அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றது.
சென்னையில் முக்கிய பிரமுகர்களான திரு.பீட்டர் அல்போன்ஸ், பழகருப்பையா போன்றவர்களை தொடர்ந்து சந்தித்தவண்ணம் இருக்கின்றனர்.
எல்லாபுகழும் இறைவனுக்கே!
சமரசம், புத்தகங்கள் அறிமுகம் |
கடையநல்லூர் பேருந்து நிலையத்தில் புத்தகக் கடை
“இவர் தான் முஹம்மத் (ஸல்) பரப்புரை
இயக்கம் இன்று கடையநல்லூரில் துவக்கப் பட்டது! ஜாமிஉல் அன்வர் பள்ளியில்
ஜும்மா உரை நிகழ்த்தப்பட்டது. மாலை ஆறு மணிமுதல் இரவு ஒன்பது மணிவரை
காமராஜர் பேருந்து நிலையத்தில் புத்தகக் கடை நடத்தப்பட்டது.முன்னூறுக்கும்
மேற்பட்ட சகோதர சமய நண்பர்களுக்கு “இவர்தான் முஹம்மத் (ஸல்)” என்ற
மையக்கருத்தை விளக்கும் மடக்கோலை/ பேரா.கே.எஸ். கிருஷ்ணராவ் எழுதிய
“மனுடவசந்தம் நூல் / சமரசம் இதழ் வழங்கப்பட்டன.
இன்ஷாஅல்லாஹ் 07.10.12 ஞாயிற்றுக்
கிழமை மாலை ஆறு மணிமுதல் இரவு ஒன்பது மணிவரை மணிக்கூண்டு அருகே புத்தகக்
கடையும் பொதுக் கூட்டமும் நடைபெறும்.