வரலாறு காணாத மின்வெட்டை மற்றும் சில கோரிக்கைகளையும் வலியுறுத்தி
நமதூரில் மின்வாரியம் முற்றுக்கை போராட்டம் நடந்தது. இதில் சுமார் 50 போ்
கலந்துக்கொண்டனர்.
இது போக ஊர் பொதுமக்களை விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சில இளைஞர்கள்
தெரு தெருவாக சென்று போராட்டதிற்கு அழைப்பு விடுத்து வந்தனர். இதை
காவல்துறைக்கு சிலர் தெரியப்படுத்தினர். பின்பு காவல் துறை வந்திரங்கியது. போராட்டகாரர்களை அப்புரவு படுத்த முயன்ற காவல்துறை, இவர்கள் மறுக்கவே பேச்சுவார்த்தை நடைப்பெற்றது.
இந்த பேச்சுவார்த்தையில் சில கோரிக்கைகள்.
மின்சாரம் இதுபோலதான் இருக்கும் என்று நிருபணமானது.
மினசாரம் இயங்கும் நேரத்தை அட்டவனை கெடுப்பது.
மின் அளவீட்டை குறித்த பிறகு கால அவகாசம் தேவை என்பதை பேசப்பட்டது.
லப்பைகுடிகாட்டில் நலவான திட்டம் எதுவும் ஆளும் கட்சி செயல் படுத்தாமல் ஒருதலை
பட்சமாக செயல் படும் இந்த தருணத்தல், எதிர் கட்சியில் இருப்பவர்கள் கூட
இதில் கலந்துக்கொள்ளாமல் புறக்கனித்தது அரசியல் கட்சியை நம்பியிருப்பவர்கள்
மத்தியில் மிகுந்த மண வருத்தத்தை உருவாக்கியுள்ளது. இதில் ஒருவர்
கூறுகையில் இனி எந்த முகத்தைக்கொண்டு ஓட்டு கேட்க வருவார்கள் என்பதை
பார்ப்போம் என்றார்.
இதில் வழக்கம் போல் எந்த ஒரு சிந்தனையும் இல்லாமல் தன்னுடைய வயிறு
நொம்பினால் போதும் என்று சமுதாயப்பணி செய்பவர்களை ஏலனம்
செய்துக்கொண்டுள்ளார்கள்.
நன்றி - Labbaikudikadu News