ஞாயிறு, 14 அக்டோபர், 2012

ஒரு தமிழரின் சாதனை கடல் அலையின் ஆற்றலைக் கொண்டு மின்சாரம் - முகைதீன் சாபர்

முகைதீன் சாபர்



தமிழகத்தின் இருளை அகற்றி என்னால ஒளிரவைக்க முடியும்!
தமிழக அரசே எமக்கு உதவி செய்யுங்கள் வேண்டுகிறார் ஒரு தமிழர்.

கடல் அலையின் ஆற்றலைக் கொண்டு என்னால்

நாட்டுக்கு தேவையான மின்சாரத்தை எரிபொருள் இல்லாமல் உற்பத்தி செய்யமுடியும் என இராமதபுர மாவட்டத்தை சேர்ந்த முதுகளத்தூர் அருகே மேலச்சிறு போது என்ற கிராமத்தில் முகைதீன் சாபர் என்ற தமிழர் தன் கிராமத்திலே சிறு தொட்டியில் தண்ணீரை நிரப்பி அலையை ஏற்படுத்தி தன் கண்டுபிடிப்பின் ஆற்றலை செயல் விளக்கத்தின் மூலம் நிகழ்த்திக்காட்டி இருக்கின்றார்!

இந்த மின்சார உற்பத்தி முறையில் மனிதர்களுக்கோ,விலங்குகளுக்
கோ, கடல்வாழ் உயிரிணங்களுக்கோ, தாவரங்களுக்கோ எந்த விதமான பாதிப்பும் ஏற்படாது.
 
மேலும் நான் உற்பத்தி செய்யும் மின்சாரம் மேனுவல் சிஸ்டம் டெமோ.
இதுவரை மின்சார உற்பத்திக்கு செலவிடப்படும் பொருட்செலவைவிட மிக மிகக் குறைவுதான் எனது கண்டுபிடிப்பிற்கு ஆகும்.

என்னிடம் வேறு பார்முலாக்களும் உள்ளது

அதாவது ஒரு அணு அனலுக்கு என்ன ஆற்றல் இருக்கின்றதோ அதே ஆற்றலை என்னால் உற்பத்தி பண்ணமுடியும் என்று உறுதிபடக்கூறுகின்றார் முகைதீன் சாபர் அவர்கள்

இந்த மின் தமிழரின் அறிய கண்டுபிடிப்பினை பயண்படுத்தி
தமிழகத்தின் இருளைப் போக்குமா தமிழக அரசு!

அல்லது எப்போதும் போல தமிழர்களின் கண்டுபிடிப்பை முடமாக்குமா இந்திய அரசு!