பெரம்பலூர் மாவட்டத்தில், வரும், 22ம் தேதி முதல், டூவீலர் ஓட்டுநர்கள்
கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும், என பெரம்பலூர் மாவட்ட போலீஸ் எஸ்.பி.,ராஜசேகரன் தெரிவித்தார்.இது குறித்து நிருபர்களிடம் அவர் கூறியதாவது:

பெரம்பலூர் மாவட்டத்தில், அக்டோபர், 22ம் தேதிமுதல், டூவீலர் ஓட்டுநர்கள்
ஹெல்மெட் அணிய வேண்டும், என்பது கட்டாயமாக்கப்படவுள்ளது. சாலை
விபத்துக்களில், பலர் தலையில் பலத்த காயமடைந்து, உயிரிழக்கின்றனர்.
இனிவரும் காலங்களில் அது போன்ற அசம்பாவித சம்பவங்களை தவிர்க்கவும், மனித உயிரிழப்புகள் ஏற்படாமல் இருக்கவும், டூவீலர் ஓட்டுநர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிந்து ஒத்துழைப்பு தர வேண்டும்.
மேலும், தரமான ஹெல்மெட்களை வாங்கி அணிய வேண்டும். 22ம் தேதிக்கு பின், ஹெல்மெட் அணியாமல் டூவீலர் ஓட்டினால், அவர்கள் மீது வ ழக்கு பதிவு செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்படும்.
பெரம்பலூரில், நேற்றுமுன்தினம் திடீரென வாகன சோதனையில் போலீஸார் முழுவீச்சில் ஈடுபட்டனர். இந்த சோதனையின் போது, குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக, 8 பேர், அதிவேகமாக ஓட்டியதாக ஒருவர், அதிக பாரம் ஏற்றியதற்காக, 45 பேர், அதிக வெளிச்சம் வைத்திருந்ததற்காக, 4 பேர், ஓட்டுநர் உரிமம் இல்லாததற்காக, 79 பேர், ஹெல்மட் இல்லாததற்காக, 12 பேர், டூவீலரில் மூவர் பயணம் செய்ததற்காக, 14 பேர், பர்மிட் இல்லாததற்காக, 15 பேர், நோ பார்க்கிங்கில் நிறுத்தியதற்காக, மூன்று பேர், யூனிபார்ம் இல்லாததற்காக 11 பேர், இதர குற்றங்களுக்காக, ஆறு பேர் என, 199 பேர் மீது
வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. 29 பேரிடம் சம்பவ இடத்திலேயே அபராதம் வசூலிக்கப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.