புதன், 18 ஜூலை, 2012

வெளிநாடு வாழ் சகோதரர்களே எச்சரிக்கை!

அன்பார்ந்த சகோதரர்களே,

கட்டாய வசூல் வேட்டையில் சுங்க இலாக்கா.
நம் இஸ்லாமிய சகோதரர்கள் ஏராளமானோர் வளைகுடா நாடுகளில் பணியாற்றி வருவதையொட்டி இந்த செய்தி.

வளைகுடா நாடுகளில் இருந்து தங்க நகைகளை சொந்த ஊருக்கு வாங்கிச்செல்ல எண்ணம் இருந்தால் கைவிட்டு விடுங்கள். ஏன் என்றால் அனைத்து விமான நிலையங்களிலும் சுங்க சோதனை செய்து கட்டாய வசூல் வேட்டை செய்யப்பட்டு வருகிறது.

இங்கே இணைக்கப்பட்டுள்ள ரசீது கடந்த வாரம் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் ஒருவர் கட்டிய தொகை 10 கிராமுக்கு 13 சதவிகிதம் என்ற அடிப்படையில் கூடுதலாக ஒரு கிராம் தங்க நகையின் தொகையை வரியாக கட்டியுள்ளார்.

வெளிநாடுகளில் வசிப்போர் சொந்த ஊருக்கு செல்லும் பொழுது தங்க நகை வாங்கி செல்லும் முன் சற்று சிந்தித்து செயல்படுவதே நன்று.