புதன், 18 ஜூலை, 2012

108 ஆம்புலன்சில் பணிபுரிய மருத்துவ உதவியாளர், டிரைவர் தேர்வு பெரம்பலூரில் 21ம் தேதி நடக்கிறது


http://mmimages.maalaimalar.com/Articles/2012/Jul/53798087-fb32-4c69-b91b-f68af0f8ad79_S_secvpf.gif

                               108 ஆம்புலன்ஸ் சேவை திட்ட த்தில் மருத்துவ உதவியாளர் மற்றும் டிரைவர் பணிக் கான வேலைவாய்ப்பு முகாம் பெரம்பலூரில் வரும் 21ம் தேதி நடக்கிறது.
பெரம்பலூர் கலெக்டர் தரேஸ் அஹமது வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழக அரசு தமிழ்நாடு சுகாதார திட்டத்தின்கீழ் ஜி.வி.கே இஎம் ஆர்ஐ நிறுவனத்துடன் அவசரகால சேவைகளை புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் இணைந்து செயல்படுத்தி வருகிறது. 108 அவசரகால சேவை மையம் சென்னை அரசு கஸ்தூரிபாகாந்தி தாய்சேய்நல மருத்துவமனையில் செயல்பட்டு வருகிறது. ஜிவிகே இஎம்ஆர்ஐ நிறுவனத்திற்கு தேவைப்படும் ஆம்புலன்ஸ் டிரைவர்கள் மற்றும் அவசரகால மருத்துவ உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் பெரம்பலூர் துறையூர் சாலையில் உள்ள முத்துகிருஷ்ணா மக்கள் மன்றத்தில் வரும் 21ம் தேதி நடக்கிறது.


டிரைவர் பணிக்கு ஆண்கள் மட்டுமே நியமிக்கப்படுவர். 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்று நேர்முக தேர்வன்று 25 முதல் 35 வயதிற்குள்ளும், 162.5 செ.மீட்டர் உயரம் குறையாமலும் இருக்க வேண்டும். இலகுரக வாகன ஓட்டுனர் உரிமம் பெற்று 5 ஆண்டுகள் நிறைவு பெற்றிருக்க வேண்டும். தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு 8 நாட்களுக்கு வகுப்பறை பயிற்சி வழங்கப்படும். பயிற்சி காலத்தில் தங்கும் வசதி, உணவு வசதிக்காக ரூ.100 படி வழங்கப்படும். டிரைவர் பணிக்கு மாதஊதியமாக ரூ.6,800 வழங்கப்படும்.

அடிப்படை உதவியாளர் பணிக்கு ஆண், பெண் இருபாலரும் 20 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். பிஎஸ்சி நர்சிங், விலங்கியல், தாவரவியல், உயிர் வேதியியல், நுண்ணுயிரியல், பிளாண்ட் பயாலஜி, லைப் சயின்ஸ் அல்லது 12ம் வகுப்பு முடித்து 3 ஆண்டு ஜிஎன்எம் படிப்பு அல்லது ஏ.என்.எம் அல்லது 12ம் வகுப்பு முடித்து டிப்ளமோ நர்சிங் உதவியாளர் படிப்பு படித்திருக்க வேண்டும். இந்த பணிக்கு மாத ஊதியமாக ரூ.7,450 மற்றும் இதர படிகள் வழங்கப்படும்.

பயிற்சி மருத்துவ உதவியாளர் பணிக்கு 12ம் வகுப்பு முடித்து அரசு மருத்துவ கல்லூரியில் ஓராண்டு டிஎம்இ பட்டயப்படிப்பு படித்தவர்களும் தேர்வு செய்யப்படுவர். இந்த பணியிடத்திற்கு 19 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும். தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு ஓராண்டுக்கு ஊக்கத்தொகையாக மாதம் ரூ.6,000 வழங்கப்படும். தேர்வு பெற்றவர்களுக்கு பயிற்சி காலத்தில் மாத ஊக்கத்தொகையாக ரூ.3,000 வழங்கப்படும். மேலும் விவரம் அறிய 9677475306, 9003573787 என்ற செல்போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.