சனி, 4 ஆகஸ்ட், 2012

தெரியாத சில உண்மைகள்!


இந்தியா முழுவதும் தொடர்ந்து குண்டு வெடிப்புகளை நடத்திய ஆர்.எஸ்.எஸ். இயக்கம் மீண்டும் நாசகார வேலைகளை செய்ய தீவிர பயிற்சி எடுத்து வருகிறது

புனேயில் புதன்கிழமை இரவு நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பிற்கும் ஹிந்துத்துவா பயங்கரவாதிகளுக்கும் தொடர்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.  புனே தொடர் குண்டுவெடிப்பில் சைக்கிள் குண்டில் வெடிப்பொருளாக அம்மோனியம் நைட்ரேட் உபயோகப்படுத்தப்பட்டுள்ளது.

பொதுவாக, ஹிந்துத்துவா பயங்கரவாத அமைப்புகள்தாம் அம்மோனியம் நைட்ரேட்டை பயன்படுத்தி குண்டுகளை தயாரித்து வந்துள்ளனர்.  மலேகானில் 2006-ஆம் ஆண்டு நடந்த குண்டுவெடிப்பிலும்  இதே பாணி கடைப்பிடிக்கப்பட்டது.

ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் பயங்கரவாத முகம்: சுதந்திரத்திற்கு பின்பு ஹிந்து முஸ்லிம் கலவரங்களை உண்டாக்கி இந்தியா பாக்கிஸ்தான் என்று பிரிய காரணமாக இருந்தனர். தேசத்தந்தை அண்ணல் காந்தியை கொன்றனர்.

நெல்லி, பாகல்பூர், பீவாண்டி, மும்பை, குஜராத், ஒரிசா, கோவை போன்ற கலவரங்களை நடத்தி சிறுபான்மை மக்களை கொன்று குவித்தனர். அது போதாது என்று இந்தியா முழுவதும் தொடர் குண்டு வெடிப்புகளை நடத்தி அந்த பழியை முஸ்லிம்கள் மீது சுமத்தி அவர்களை குற்றப்பரம்பரை ஆக்கினார்கள்.

சேது சமுத்திர திட்டம் முதல் அணுவுலை எதிர்ப்பு போராட்டங்கள் வரை மக்களின் அடிப்படை நலன்களுக்கு எதிராக செயல்பட்டு வருகின்றனர். இப்படி பட்ட ஒரு நாசகார இயக்கமாகிய ஆர்.எஸ்.எஸ். மற்றும் அதன் கிளை அமைப்புகளை தடை செய்யவேண்டும் என்பதே நடுநிலை பேணும் ஒவ்வொரு ஹிந்துக்களின் எண்ணமாகும் இதை உடனே இந்திய அரசு செய்யுமா?

*மலர்விழி*

தமுமுக பேச்சாளர் பயிற்சி முகாம் வி களத்தூர் 05.08.2012


புதன், 1 ஆகஸ்ட், 2012

பர்மா தூதரை வெளியேற்றுங்கள் : குவைத் எம்.பி ஆவேசம் !

                                         குவைத் : பர்மாவில் முஸ்லீம்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகளை அரபு மற்றும் முஸ்லீம் நாடுகள் தட்டி கேட்க வேண்டும் என்றும் குவைத் அதற்கு முண்ணனியில் நின்று வழிகாட்ட வேண்டும் என்றும் குவைத் நாடாளுமன்ற உறுப்பினர் கோரியுள்ளார்.

குவைத் நாடாளுமன்ற உறுப்பினர் முபாரக் அல் அவ்லான் மியான்மரில் முஸ்லீம்கள் திட்டமிட்ட முறையில் கொல்லப்படுவதாகவும் பர்மாவில் நடக்கிறதே என்று கண்டும் காணாமல் இருந்தால் இதே நிலை ஆசியாவில் எங்கு வேண்டுமானாலும் முஸ்லீம்களுக்கு இதே நிலை ஏற்படலாம் என்று கூறிய அவர் சர்வதேச சமூகம் இது விஷ்யத்தில் மெளனம் காப்பது குறித்து வேதனை தெரிவித்தார்.

ஒன்றுமறியா ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் கொல்லப்படுவது குறித்து மெளனமாக இருப்பது ஆபத்தான போக்கு என்று குறிப்பிட்ட முபாரக் ஐ.நாவில் பர்மாவை கண்டித்து குவைத் தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்க வேண்டும் என்றும் கோரினார்.

ஒன்றுமறியா மக்கள் கொல்லப்படுவதை தடுக்க வேண்டியது ஒவ்வொருவரின் கடமை என்று கூறிய முபாரக்பர்மிய தூதரை குவைத்திலிருந்து வெளியேற்றுவதுடன்பாசிச பர்மிய அரசுடனான அனைத்து உறவுகளையும் குவைத் முறித்து கொள்ள வேண்டும் என்றும் கூறினார். பர்மாவில் முஸ்லீம்களின் மீது அங்குள்ளராணுவமும் பவுத்தர்களும் மனித உரிமை மீறலில் ஈடுபட்டுள்ளதாக அம்னெஸ்டி இன்டர்நேஷன்ல் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

தமுமுகவின் கோரிக்கைகளை ஏற்று நிதி ஒதுக்கி தருவதாக அறிவித்தமைக்கு நன்றி அறிவிப்பு




                             வி.களத்தூர் தமுமுகவின் நீண்டநாள் கோரிக்கைகளான அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவ, மாணவியருக்கான கழிப்பறை மற்றும் குடிநீர் வசதி செய்து தருதல், அரசு மேல்நிலைப்பள்ளிகளில் மாணவ, மாணவியருக்காக குடிநீர் தொட்டி அமைத்து தருதல் ஆகிய கோரிக்கைகளை ஏற்று அதற்காக சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து 4 லட்சம் ரூபாய் ஒதுக்கி தருவதாக அறிவித்தமைக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.


மாப்பிள்ளை புகைபிடித்தால் மணைவி விவகாரத்து பெறலாம் - சவூதி நீதிமன்றம் தீர்ப்பு.

 

                                           புகைப்பிடிக்கும் கணவரிடமிருந்து விவாகரத்து பெறும் உரிமை பெண்களுக்கு உண்டு என்று சவூதி அரேபியாவின் நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். சவூதி பத்திரிகையான அல் வத்வான் இச்செய்தியை வெளியிட்டுள்ளது.

கணவன்மார்களின் புகைப்பிடிக்கும் பழக்கத்தால் அவதியுற்ற பெண்கள் அளித்த மனுவின் மீதான விசாரணையின் இறுதியில் காழி(நீதிபதி) டாக்டர் இப்ராஹீம் குழைரி, இஸ்லாமிய ஷரீஅத்(சட்டத்திட்டம்)  நிச்சயித்துள்ள(கணவனுக்கான) குறைபாடுகளில் புகைத்தலும் அடங்கும். எனவே பெண்களுக்கு புகைப்பிடித்தல் மூலம் கணவர் மீது அதிருப்தி ஏற்பட்டால் விவகாரத்து செய்யலாம் என தீர்ப்பளித்தார்.

டுபாயில் இஸ்லாமிய வாதிகளுக்கு எதிராக வேட்டை


ஐக்கிய அரபு இராச்சியத்தில் கடந்த ஒரு சில தினங்களுக்குள் குறைந்தது 10 இஸ்லாமியவாதிகள் கைது செய்யப்பட்டுள்ள தாக செயற்பாட்டாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இதன் மூலம் கடந்த ஜூலை 15 ஆம் திகதி தொடக்கம் இதுவரையில் ஐக்கிய அரபு இராச்சியத்தில் கைது செய்யப்பட்ட அரச அதிருப்தியாளர் களின் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்திருப்பதாக கூறப்பட்டுள்ளது. மறுபுறத்தில் நாட்டின் பாதுகாப்பிற்கு எதிரான குற்றச் செயல்களில் ஈடுபட திட்டமிட்டிருக்கும் வெளிநாட்டு தொடர்புடைய குழுக்கள் பற்றி விசாரணை நடத்தப்பட்டுவருவதாக ஐக்கிய அரபு இராச்சிய அரசு அறிவித்துள்ளது.

7 எமிரேட்களைக் கொண்ட ஐக்கிய அரபு இராச்சியத்தில் எதிர்க்கட்சிகளை அமைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அரபு நாடுகளில் ஏற்பட்ட மக்கள் எழுச்சி போராட்டம் ஏற்படுவதை தவிர்க்க அரசு போராடி வருகிறது.

இவ்வாறு அரச எதிர்ப்பு செயற்பாடுகளில் ஈடுபடுவோருக்கு எதிராக அந்நாடு கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கடந்த மார்ச் மாதம் முதல் இவ்வாறான 40 பேரளவில் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் பெரும் பாலானோர் இஸ்லாமியவாதிகளாவர். குறிப்பாக அல் இஸ்லாஹ் இஸ்லாமிய குழு உறுப்பினர்களே பெரும்பாலும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இந்த அமைப்பின் தோற்றுவிப்பாளர்களுள் ஒருவரான ஹமாத் ரொகைத் என்பவர் கடந்த வாரம் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டார். பாதுகாப்புபடையினர் தமது வீட்டுக்கு வந்து சோதனையிட்டு ரொகைதை கைது செய்ததாகவும் அவர் இப்போது எங்கே இருக்கிறார் என்ற தகவல் இல்லை என்றும் அவரது உறவினர் ஒருவர் ராய்ட்டருக்கு தெரிவித்துள்ளார். ஐக்கிய அரபு இராச்சியத்தின் இந்த செயற்பாட்டுக்கு ஐ.நா. மனித உரிமை அமைப்பு கண்டனம் வெளியிட்டுள்ளது.

JM NEWS


திங்கள், 30 ஜூலை, 2012

பெரம்பலூரில் குடிபோதையில் வாகனம் ஓட்டினால் நடவடிக்கை போலீசார் எச்சரிக்கை

                                         பெரம்பலூர் எஸ்பி ராஜசேகரன் உத்தரவுபடி இன்ஸ்பெக்டர் சர்புதீன் தலைமையிலான போலீசார் கடந்த 2 நாட்களாக வாகன சோதனையில் ஈடுபட்டனர். பெரம்பலூர்- திருச்சி சாலை, பெரம்பலூர்- துறையூர், பெரம்பலூர்- ஆத்தூர், பெரம்பலூர்- சென்னை, பெரம்பலூர்- அரியலூர் சாலை என 5 முக்கிய வழித்தடங்கள் மற்றும் பெரம்பலூர் நகர் பகுதியான பாலக்கரை, காமராஜர் வளைவு, நான்கு ரோடு உள்ளிட்ட பகுதிகளில் ஒரு எஸ்ஐ மற்றும் ஏட்டு அடங்கி குழுவினர் தனித்தனியாக வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து இன்ஸ்பெக்டர் சர்புதீன் கூறுகையில், வாகன தணிக்கையின்போது ஓட்டுனர் உரிமம் உள்ளதா, வாகன உரிம சான்றிதழ், இன்சூரன்ஸ் மற்றும் முறையான ஆவணங்கள் சரியாக இருக்கிறதா என்று சோதனை செய்யப்படும்.

குடிபோதையில் வாகனம் ஓட்டினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். 2 நாட்களில் 200 வாகனங்களுக்கு மேல் சோதனை செய்யப்பட்டுள்ளது. முதல்முறையாக  அனைத்து வாகன ஓட்டுனர்களுக்கும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இந்த வாகன தணிக்கை நடவடிக்கை தொடர்ந்து நடைபெறும். முறையான ஆவணங்கள் இல்லையென்றால் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் தீ விபத்து குறித்த தகவல்கள் அறிய உதவி எண்கள்...


                             டெ‌ல்‌லி‌யி‌ல் இரு‌ந்து கட‌ந்த ச‌‌னி‌க்‌கிழமை இரவு 10.20 ம‌ணி‌க்கு செ‌ன்னை‌க்கு புற‌ப்ப‌ட்டு வ‌ந்த த‌மி‌ழ்நாடு எ‌க்‌ஸ்‌பிர‌ஸ் இர‌‌யி‌ல் ஆ‌ந்‌திர மா‌நில‌ம் நெ‌ல்லூ‌ர் அருகே இ‌ன்று அ‌திகாலை 4.30 ம‌ணி‌க்கு வ‌ந்தபோது எ‌‌ஸ்11 எ‌ன்ற பெ‌ட்டி‌‌யி‌ல் ‌திடீரென ‌தீ‌ப்‌பிடி‌த்து எ‌ரி‌ந்தது.
இ‌ந்த பெ‌ட்டி‌யி‌ல் 72 பய‌ணிக‌ள் இரு‌ந்தன‌ர். அ‌திகாலை நேர‌ம் எ‌‌ன்பதா‌ல் பய‌ணிக‌ள் அனைவரு‌ம் தூக்கத்தில் இருந்தனர். இதனா‌ல் ‌தீ எ‌ரிவதை அவ‌ர்க‌ளு‌க்கு தெ‌ரிய‌வி‌ல்லை. ‌
இத‌ற்கு‌ள் 47 பே‌ர் உட‌ல் கரு‌கி உ‌யி‌ரிழ‌ந்தன‌ர். ‌இதுவரை 21 பே‌ரி‌ன் உட‌ல்க‌ள் ‌மீ‌ட்க‌ப்ப‌ட்டு‌ள்ளது. இதனா‌ல் ப‌லி எ‌ண்‌ணி‌‌க்கை அ‌திக‌ரி‌க்கு‌ம் எ‌ன்று அ‌ஞ்ச‌ப்படு‌கிறது.
‌மி‌ன் க‌‌சிவு காரணமாக ‌தீ ‌விப‌த்து ஏ‌ற்ப‌ட்டிரு‌க்கலா‌ம் எ‌ன்று முத‌ல் க‌ட்ட ‌விசாரணை‌யி‌ல் தெ‌ரியவ‌ந்து‌ள்ளது
ரயிலின் எஸ் 11 பெட்டியின் இரண்டு கதவுகளையும் திறக்க முடியாத அளவுக்கு அவை ஜாம் ஆகி விட்டதால்தான் பலர் தீயில் சிக்கி உயிரிழந்ததாக விபத்தில் சிக்கி உயிர் தப்பியவர்கள் கூறியுள்ளனர்.
தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில் தீவிபத்து குறித்து தகவல்கள் அறிய சிறப்புத் தகவல் மையம்
கீழ்க்கண்ட எண்களுடன் தொடர்பு கொண்டு தங்களது உறவினர்கள் நிலை குறித்து அறிந்து கொள்ளலாம்.

சென்னை

சென்னை சென்டிரல் 044- 25357398 செகந்திராபாத்: 040-27786723, 27700868; விஜயவாடா: 0866-2345863, 2345864 நெல்லூர்: 0861-2331477, 2576924

டெல்லி

டெல்லி 011-23342954, 23341072, 23341074; ஹஸரத் நிஜாமுதீன் 011-24359748

ஞாயிறு, 29 ஜூலை, 2012

மாணவனை சிறுநீர் குடிக்க வற்புறுத்தியதாக புகார்: கைதான ஆசிரியர்கள் 3 பேர் திருச்சி சிறையில் அடைப்பு

மாணவனை சிறுநீர் குடிக்க வற்புறுத்தியதாக புகார்: கைதான ஆசிரியர்கள் 3 பேர் திருச்சி சிறையில் அடைப்பு


                                    தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள சோழன்மாளிகையை சேர்ந்தவர் தேசிங்குராஜன் மகன் பரத்ராஜ் (வயது 14). இவர் பெரம்பலூர் மாவட்டம் அகரம்சீகூர் கிராமத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் விடுதியில் தங்கி 9-ம் வகுப்பு படித்துவந்தார்.

கடந்த 19-ந்தேதி இரவு மாணவர்கள் மாதாந்திர தேர்வுக்காக விடுதி அறையில் படித்துக்கொண்டு இருந்ததாகவும், அப்போது சிறுநீர் கழிக்க ஆசிரியரிடம் அனுமதி கேட்டபோது அவர் தன்னை அடித்து உதைத்தோடு சிறுநீர் குடிக்க வற்புறுத்தியதாகவும் தனது தந்தையிடம் சென்று கூறினார்.

இதையடுத்து கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட மாணவர் பரத்ராஜ் அங்குள்ள போலீசாரிடம் இதுபற்றி தெரிவித்தார். அதன்பேரில் பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு போலீசுக்கு புகார் அளிக்கப்பட்டது.

இதுபற்றிய தகவலின் பேரில் பெரம்பலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவ லர் மல்லிகா, தொடக்க கல்வி அலுவலர் ஜெயலட்சுமி ஆகியோர் புகார் கூறப்பட்ட பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். பின்னர் அவர்கள் கூறுகையில், பல்வேறு தீய பழக்கங்கள் கொண்ட மாணவர் பரத்ராஜை ஆசிரியர்கள் கண்டித்துள்ளனர். ஆனால் அவர்கள் சிறுநீர் குடிக்க வைத்ததாக மாணவர் தவ றாக கூறியுள்ளார்.

ஆசிரியர்கள் தன்னை அடித்தார்களே தவிர சிறுநீர் குடிக்க வற்புறுத்தவில்லை என்று பரத்ராஜ் வாக்குமூலம் அளித்துள்ளார். ஆனாலும் மாணவரை அடித்த ஆசிரி யர்கள் ராஜா, கருப்பையா, சக்திவேல் ஆகிய 3 பேரும் பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். தொடர்ந்து விசா ரணை நடத்தப்பட்டு வருகிறது என்று கூறினார்.

சம்பவம் குறித்து மங்கள மேடு இன்ஸ்பெக்டர் செல் வம் வழக்குப்பதிவு செய்து ஆசிரியர்கள் ராஜா, கருப் பையா, சக்திவேல் ஆகிய 3 பேரையும் மூவரையும் நேற்று மாலை கைது செய்தார். அவர்கள் மீது 294(பி) (தாக்கி காயப்படுத்துதல்) 324 (தகாத வார்த்தையால் திட்டுதல்) ஆகிய பிரிவுக ளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட ஆசிரியர்கள் பெரம்பலூர் குற்றவியல் நீதிமன்ற நீதி பதி சுரேஷ் முன்பு ஆஜர் படுத்தப்பட்டு இரவு 11 மணிக்கு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.


-maalaimala

பெரம்பலூர் அருகே இன்று விபத்து: மரத்தில் ஜீப் மோதி இன்ஸ்பெக்டர் பலி


பெரம்பலூர் அருகே இன்று விபத்து: மரத்தில் ஜீப் மோதி இன்ஸ்பெக்டர் பலி

                       பெரம்பலூர் அருகே உள்ள மங்களமேடு போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் செல்வம். (வயது 45). இவர் தற்போது திருவண்ணாமலைக்கு மாறுதல் செய்யப்பட்டு உள்ளார். இதையொட்டி நேற்று மாலை அவருக்கு வழியனுப்பு விழா நடந்தது. இந்த நிலையில் இன்று காலை போலீஸ் ஜீப்பில் திருச்சியில் இருந்து பெரம்பலூர் நோக்கி செல்வம் வந்தார். ஜீப்பை அவரை ஓட்டினார்.

சிறுவாச்சூர் என்ற இடத்தில் சென்றபோது ஜீப் கட்டுபாட்டை இழந்து ரோட்டோரம் நின்ற புளிய மரத்தில் மோதியது. இந்த விபத்தில் இன்ஸ்பெக்டர் செல்வம் சம்பவ இடத்தில் உடல் நசுங்கி இறந்தார்.

விபத்து குறித்து பெரம்பலூர் போலீசார் விசாரிக்கின்றனர். இன்ஸ்பெக்டருக்கு செல்வி என்ற மனைவியும், மகள் ஷாலினி, மகன் நித்தீஸ் ஆகியோர் உள்ளனர். இவர்கள் சென்னையில் வசித்து வந்தனர். 

தகவல் அறிந்ததும் அவர்கள் பெரம்பலூர் விரைந்தனர். செல்வத்தின் உடலை பார்த்து அவர்கள் கதறினர். பலியான இன்ஸ்பெக்டரின் உடலுக்கு போலீஸ் சூப்பிரண்டு ராஜசேகர், டி.எஸ்.பி சவுந்திரராஜன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். பலியான செல்வத்தின் சொந்த ஊர் நெல்லை மாவட்டம் கோடகநல்லூர் ஆகும்



-maalaimala

அஸ்ஸாம் முஸ்லிம்களை கொன்று குவிக்கும் போடோ விடுதலைப் புலிகள்

 குவஹாத்தி: ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் வாழும் கொக்ராஜர் மாவட்டத்தில் உள்ள படிபாரா கானிப்பாஸா கிராமம் அன்றைய தினம் பயந்து நடுங்கிக் கொண்டிருந்தது. காலை முதல் அங்குள்ள அனைவரும் கிராமத்தை பாதுகாப்பதில் மும்முரமாக ஈடுபட்டிருந்தனர். யாரும் அன்று வயலுக்கு வேலைக்கு செல்லவில்லை. குழந்தைகளை குடிசைக்குள் இருத்தி வாசலை மூடினார்கள்.

கால்நடைகளை பாதுகாப்பதற்கான ஏற்பாடுகளில் பெண்கள் மும்முரமாக ஈடுபட்டிருந்தார்கள். கலவரக்காரர்கள் கிராமத்தை நோக்கி வந்துகொண்டிருப்பது உறுதியானது. அருகில் உள்ள கிராமங்களில் இருந்து குடிசைகள் பற்றி எரிந்து புகை மேலெழும்புவது தெரிந்தது. இளைஞர்கள் கத்தி மற்றும் கம்புகளுடன் கிராமத்தின் நுழைவு பாதைகளில் பாதுகாப்பிற்காக நின்றனர்.

ஆனால் என்ன பயன்? “ராணுவ உடையில் 30க்கும் மேற்பட்ட போடா வன்முறையாளர்கள் துப்பாக்கியுடன் அத்துமீறி நுழைந்தனர். எங்களால் அவர்களை தடுக்க முடியவில்லை. எங்கள் கண் முன்னால் ஒருவரை சுட்டுக் கொன்றார்கள். வீடுகளை தீயிட்டு கொழுத்தினார்கள். விவசாயப் பொருட்களை கொள்ளையடித்தார்கள். துப்பாக்கி முனையில் எங்களை நிறுத்தி இங்கிருந்து சென்றுவிடுங்கள்” என மிரட்டினார்கள். கொக்ராஜர் கிராமத்தில் உள்ள அகதிகள் முகாமில் தங்கியிருக்கும் நயான் அலி(வயது 22) கூறுகிறார்.
டெஹல்கா பத்திரிகை அஸ்ஸாமில் முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட கொடூரங்களை வெளிக்கொணர்ந்துள்ளது.


 
நஸீருல்(வயது 4), ராக்கிஃபுல்(வயது 6) சகோதரர்களான இருவரும் போடோ இனவெறியர்களை கண்டதும் ஓடத் துவங்கினர். கொஞ்ச தூரம் சென்ற பிறகு இருவரும் திரும்பி பார்க்கையில் அவர்களது பெற்றோரை காணவில்லை. அவர்கள் திரும்பிச் சென்றபொழுது கிராமம் பற்றி எரிந்து கொண்டிருந்தது. அவர்கள் உதவியற்ற நிலையில் அழுதுகொண்டிருந்தார்கள். அப்பொழுது அக்கிராமத்தின் மூத்த நபரான மும்தாஸ் அலி(வயது55) அவர்கள் இருவரையும் அழைத்துக்கொண்டு அவ்விடத்தை விட்டு உயிரை காப்பாற்ற தப்பிச் சென்றார்.

“நான் அச்சிறுவர்களை அடையாளங் கண்டுகொண்டேன். அவர்கள் நவ்ஷாத் அலி என்பவரின் பிள்ளைகள். நவ்ஷாதையோ அவரது மனைவியையோ காணமுடியவில்லை. எனவே அவ்விரு சிறுவர்களையும் அழைத்துக் கொண்டு உயிரைக் காப்பாற்ற நான் அங்கிருந்து பயந்து ஓடினேன்” என மும்தாஸ் அலி நடந்த நிகழ்வை நினைவு கூறுகிறார்.

கடந்த நான்கு தினங்களாக அச்சிறுவர்களின் பெற்றோரை கண்டுபிடிக்க முடியவில்லை. சிறுவர்கள் அதிர்ச்சியில் இருந்து மீளாமல் உள்ளனர். இதைப்போல நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் குடும்பத்தினரை காணாமல் அகதி முகாமில் உள்ளதாக அகதிகள் முகாமில் உள்ளோர் கூறுகின்றனர்.


பி.எல்.டி(போடோ லிபரேசன் டைகர்ஸ்) என்.டி.எஃப்.பி(நேசனல் டெமோக்ரேடிக் ஃப்ரண்ட்ஆஃப் போடோ லாண்ட்) ஆகிய கிளர்ச்சி பிரிவினைவாத போடோ குழுக்களை சேர்ந்தவர்கள் முஸ்லிம்களுக்கு எதிரான கலவரத்தில் தீவிரமாக பங்கேற்றுள்ளனர். கலவரம் நடத்துவதில் அனுபவம் பெற்றவர்கள் என கிராமவாசிகள் கூறுகின்றனர்.

ஆயுத கலகங்களில் இவர்கள் ஈடுபடுவதால் துப்பாக்கிகள் இவர்களுக்கு சுலபமாக கிடைக்கிறது. சிறுபான்மை சமுதாயங்கள் பெரும்பான்மையாக வாழும் பிரதேசங்களை தேடி இவர்கள் ஆவேசத்துடன் பாய்ந்து செல்கின்றார்கள்.

குஜராத்தில் ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் நடத்தியது போன்ற திட்டமிட்ட இனப் படுகொலைகளை போடோ இனவெறிக் குழுக்கள் அஸ்ஸாமில் அரங்கேற்றியிருப்பதாக கூறப்படுகிறது.

மரண எண்ணிக்கை அதிகாரப்பூர்வ புள்ளிவிபரங்களை விட எத்தனையோ மடங்கு அதிகம் என கிராமவாசிகள் கூறுகின்றனர்.
உறவினர்கள் இல்லாத நூற்றுக்கணக்கான குழந்தைகள் அகதிகள் முகாமில் தங்கியுள்ளனர். கொக்ராஜரில் ஒரு சிறிய பள்ளிக்கூடத்தை அகதிகள் முகாமாக மாற்றியுள்ளனர். 5 அறைகளை மட்டுமே கொண்ட இந்த பள்ளிக்கூடத்தில் 5 ஆயிரம் பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.


 
10 கர்ப்பிணி பெண்கள் தங்கியுள்ள இங்கு கடந்த நான்கு தினங்களாக ஒரு டாக்டர் கூட இல்லை. அரிசி மற்று குடிநீரை ரேசன் போல இங்கு அதிகாரிகள் விநியோகிக்கின்றனர். ஒரேயோரு கழிப்பறையை ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பயன்படுத்த வேண்டிய நிலை. இதனால் நோய் பரவும் வாய்ப்புள்ளது. தாங்கள் சந்தித்த பயங்கர அனுபவத்தின் காரணமாக மீண்டும் தங்களது சொந்த கிராமங்களுக்கு திரும்பிச் சென்றால் சுட்டுக் கொல்லப்படுவோம் என அஞ்சுகிறார்கள். வீடுகளை இழந்த முஸ்லிம்கள் தாங்கள் உயிரோடு இருப்பது அல்லாஹ்வின் கருணை என கூறுகிறார்கள்.

தகவல் தூது ஒன்லைன்

மியன்மார் படுகொலைகளை விசாரிக்க ஐநா மனித உரிமை அமைப்பு கோரிக்கை



                     மியன்மார் படுகொலைகளை விசாரிக்க ஐநா மனித உரிமைகள் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. வடக்கு மியன்மார் முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெற்றுவரும் இலக்குவைக்கப் பட்ட படுகொலைகளை சுதந்திரமான முறையில் விசாரணை நடாத்தவேண்டும் என்று ஐநா மனித உரிமைகள் அமைப்பின் தலைவர் நவநீனம் பிள்ளை கோரிக்கை விடுத்துள்ளார் .
 
மியன்மாரில் பல ஆண்டுகளாக பங்களாதேஸ் வம்சாவளி ரோஹினிய முஸ்லிம்களை இலக்கு வைத்து தாக்குதல்கள் இடம்பெற்று வருகிறது . மியன்மார், ரோஹினிய முஸ்லிம்களை சட்டவிரோத குடியேற்றகாரர்கள் என்று அழைப்பதுடன். அவர்களை மியன்மார் மக்களாக அங்கீகரிக்க மறுப்பு தெரிவித்து வருகிறது .
மியன்மார் ஆசியாவின் பலஸ்தீன் என்று ஐநா வினால் வர்ணிக்கப்படுகிறது கடந்த ஜூன் 26 ஆம் திகதி முதல் 650 க்கும் அதிகமான முஸ்லிம்கள் படுகொலை செய்யபட்டுள்ளதுடன், 1200 பேர் காணாமல் போயுள்ளனர் .என்று தகவல்கள் தெரிவிக்கின்றது.

அதேவேளை பங்களாதேஸ் எல்லையில் சுமார் 4 இலட்சம் மியன்மார் முஸ்லிம்கள் அகதிகளாக பங்களாதேஸ் அரசிடம் புகலிடம் கோரிவருகின்றனர் ஆனால் அவர்களுக்கு அகதி அந்தஸ்தை வழங்கி அவர்களை அகதிகளாக பராமரிக்க பங்களாதேஸ் அரசாங்கமும் மறுத்து வருகிறது
 
அண்மையில் மியன்மார் ஜனாதிபதி ரோஹிணிய முஸ்லிம்களை தனது நாடு மியன்மார் மக்களாக ஏற்றுகொள்ளாது என்றும் அவர்களை வேறு ஒரு நாட்டில் ஐநா குடியேற்ற வேண்டும் என்றும் , ஐநாவே அவர்களை பராமரிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார் .


-ஏ.அப்துல்லாஹ்   Lankamuslim.org

சவூதி அரேபியாவில் நர்ஸ் பணிகள் விண்ணப்பிக்க கலெக்டர் அழைப்பு


21 பேருக்கு பணி நியமன ஆணை"சவூதி அரேபிய அமைச்சகத்தின் சுகாதார மருத்துவமனைகளில் செவிலியர் பணி செய்ய பெண்களுக்கு விண்ணப்பிக்கலாம்' என பெரம்பலூர் கலெக்டர் தரேஷ் அஹமது தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கை:


சவூதி அரேபிய அமைச்சகத்தின் சுகாதார மருத்துவமனைகளுக்கு பெருமளவில் தேவைப்படும் பெண் செவிலியர்களுக்கான நேர்முகத் தேர்வு டில்லி, கொச்சின் மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களில் செப்டம்பர் முதல் வாரத்தில் நடைபெற உள்ளது.


பி.எஸ்.சி., தேர்ச்சியுடன் நான்கு வருட பணி அனுபவம் மற்றும் எம்.எஸ்.சி., தேர்ச்சியுடன் இரண்டு வருட பணி அனுபவம் உள்ள 40 வயதிற்குட்பட்ட பெண் செவிலியர்கள் தகுதியுடையவர் ஆவர்.


தேர்ந்தெடுக்கப்படுவோருக்கு நிறைவான ஊதியத்துடன், இலவச விமான டிக்கெட், இலவச இருப்பிடம் ஆகியவை வேலையளிப்போரால் வழங்கப்படும்.


தகுதி மற்றும் அனுபவத்திற்குட்பட்டவர்கள், தங்களின் சுய விவரங்கள் அடங்கிய தட்டச்சு செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் கல்வி, அனுபவம், ஃபாஸ்போர்ட் ஆகியவற்றின் நகல்கள் மற்றும் வெள்ளை நிறப் பின்னணியில் எடுக்கப்பட்ட 6 புகைப்படத்துடன் விண்ணப்பிக்கலாம்.


முகவரி; எண்.48, டாக்டர் முத்துலெட்சுமி சாலை, அடையாறு, சென்னை என்ற முகவரியில் அமைந்துள்ள தமிழக அரசு நிறுவனமான அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்திற்கு அலுவலகப் பணி நாட்களில் நேரிலோ அல்லது தபால் மூலம் உடனடியாக விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு 09381800181, 044-24464267, 24464268 என்ற ஃபோன் நம்பரில் தொடர்பு கொள்ளலாம்.



-dinamala


"பள்ளிப் பேருந்து ஓட்டையிலிருந்து விழுந்து சிறுமி பரிதாப சாவு-தாளாளர் உள்பட 4 பேர் கைது!




                            சென்னை ஜியோன் பள்ளிப் பேருந்தின் ஓட்டையிலிருந்து விழுந்து 2ம் வகுப்பு படித்து வந்த சிறுமி ஸ்ருதி பரிதாபமாக உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து பள்ளியின் தாளாளர் விஜயன் உள்ளிட்ட 4 பேரை போலீஸார் கைது செய்தனர். கைதான நான்கு பேரும் உடனடியாக சிறையில் அடைக்கப்பட்டனர்.

சென்னை சேலையூர் சீயோன் பள்ளிக் கூடத்தில் 2
-ம் வகுப்பு படித்து வந்தவள் ஸ்ருதி. இவர் முடிச்சூர் வரதராஜபுரம் பரத்வாஜ் நகரைச் சேர்ந்த சேது மாதவன் என்பவரின் மகள். சேதுமாதவனின் மூத்த மகன் அதே பகுதியில் ஒரு பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வருகிறான். 2வது மகளை ஜியோன் பள்ளியில் சேர்க்க வேண்டும் என்று விரும்பி தூரத்தையும் பொருட்படுத்தாமல் பஸ்சில் அனுப்பி வைத்து வந்துள்ளனர்.

தினமும் பள்ளிக் கூட பேருந்தில் பள்ளிக்கு சென்றுவிட்டு ஸ்ருதி திரும்புவாள். நேற்று மாலை முடிச்சூர் லட்சுமிபுரம் அருகே பேருந்து வந்து கொண்டிருந்த போது பேருந்து வேகமாக சென்று கொண்டிருந்தது. அப்போது மாணவி ஸ்ருதி அமர்ந்திருந்த இருக்கை ஆடியது. அப்போது இருக்கையின் அடிப்பகுதியில் இருந்த ஓட்டை வழியாக ஸ்ருதி கீழே சாலையில் விழுந்தார். அப்போது அதே பேருந்தின் சக்கரம் ஸ்ருதியின் தலையில் ஏறியதில் அவர் மூளை சிதறி பரிதாபமாக உயிரிழந்தார்.


இதைப் பார்த்த பஸ்சில் இருந்த மாணவ, மாணவிகள் அலறித் துடித்தனர். ஆனால் டிரைவர் அதைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்து பஸ்சை ஓட்டியுள்ளார். பின்னர் சாலையில் போய்க் கொண்டிருந்த மக்கள் கூச்சல் போட்ட பிறகுதான் பஸ்சை நிறுத்தியுள்ளார்.


சாலையில் மாணவி ரத்த வெள்ளத்தில் கிடந்ததைப் பார்த்த பொதுமக்கள் பேருந்தை தடுத்து நிறுத்தி ஓட்டுநரை சரமரியாகத் தாக்கியுள்ளனர். பின்னர் ஓட்டுநரை போலீசில் பொதுமக்களே ஒப்படைத்தனர். இருப்பினும் ஆத்திரம் அடங்காத பொதுமக்கள் பேருந்துக்கும் தீ வைத்தனர்.


பஸ் ஓட்டையிலிருந்து கீழே விழுந்த சிறுமி ஸ்ருதி, மிகக் கோரமான முறையில் பிணமாகிக் கிடந்தது பார்ப்போர் நெஞ்சை உலுக்குவதாக அமைந்திருந்தது.


இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் பல்லாவரம் போக்குவரத்து பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். பின்னர் ஜியோன் பள்ளியின் தாளாளரான விஜயன், பஸ் உரிமையாளர் யோகேஸ்வரன், டிரைவர் ஸ்ரீமான், கிளீனர் சண்முகம் ஆகியோரைக் கைது செய்தனர்.


அனைவரும் தாம்பரம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை 15 நாள் சிறைக் காவலில் வைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். இதையடுத்து நான்கு பேரும் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.


oneindia

புஷ்ரா நல அறக்கட்டளைக்கு உங்களின் கேக் ஆர்டரை கொடுத்து பயனடைவீர்

                         புஷ்ரா நல அறக்கட்டளை கடந்த பல வருடங்களாக வி.களத்தூர், மில்லத் நகர் மக்களுக்கு ஈத் பெருநாள் கேக்குகளை சிறப்பாக வழங்கி வருகிறது.இந்த வருடமும் தனது சேவையை மேம்படுத்தும் விதமாக ரமலான் கேக்கை நீங்கள் கொடுக்கும் முகவரிக்கு குறித்த நேரத்தி்ல் டெலிவரி செய்யப்பபடும்.உங்களின் ஆர்டர்களை கீழ்கானும் பொருப்பாளர்களிடம் தருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.