திங்கள், 30 ஜூலை, 2012

பெரம்பலூரில் குடிபோதையில் வாகனம் ஓட்டினால் நடவடிக்கை போலீசார் எச்சரிக்கை

                                         பெரம்பலூர் எஸ்பி ராஜசேகரன் உத்தரவுபடி இன்ஸ்பெக்டர் சர்புதீன் தலைமையிலான போலீசார் கடந்த 2 நாட்களாக வாகன சோதனையில் ஈடுபட்டனர். பெரம்பலூர்- திருச்சி சாலை, பெரம்பலூர்- துறையூர், பெரம்பலூர்- ஆத்தூர், பெரம்பலூர்- சென்னை, பெரம்பலூர்- அரியலூர் சாலை என 5 முக்கிய வழித்தடங்கள் மற்றும் பெரம்பலூர் நகர் பகுதியான பாலக்கரை, காமராஜர் வளைவு, நான்கு ரோடு உள்ளிட்ட பகுதிகளில் ஒரு எஸ்ஐ மற்றும் ஏட்டு அடங்கி குழுவினர் தனித்தனியாக வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து இன்ஸ்பெக்டர் சர்புதீன் கூறுகையில், வாகன தணிக்கையின்போது ஓட்டுனர் உரிமம் உள்ளதா, வாகன உரிம சான்றிதழ், இன்சூரன்ஸ் மற்றும் முறையான ஆவணங்கள் சரியாக இருக்கிறதா என்று சோதனை செய்யப்படும்.

குடிபோதையில் வாகனம் ஓட்டினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். 2 நாட்களில் 200 வாகனங்களுக்கு மேல் சோதனை செய்யப்பட்டுள்ளது. முதல்முறையாக  அனைத்து வாகன ஓட்டுனர்களுக்கும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இந்த வாகன தணிக்கை நடவடிக்கை தொடர்ந்து நடைபெறும். முறையான ஆவணங்கள் இல்லையென்றால் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.