புதன், 17 அக்டோபர், 2012

சென்னையின் பிரமாண்ட முன்னேற்றத்துக்கு ரூ. 879 கோடி ஒதுக்கீடு



                                                   சென்னை: சென்னை மாநகர வளர்ச்சிக்காகவும், முன்னேற்றத்துக்காகவும் ரூ. 879.78 கோடி நிதியை முதல்வர் ஜெயலலிதா ஒதுக்கி உத்தரவிட்டு உள்ளார்.(செய்தி)

தமிழகத்தில் டெங்குக் காய்ச்சல் பரவும் அளவுக்கு மின்சார வெட்டு இருக்கையில் சென்னைக்கு இப்போது 879.78 கோடிகளை அள்ளிக் கொட்ட வேண்டுமா? சிங்கார சென்னை என்று பல்லாயிரம் கோடிகளை செலவிட்டும் சாக்கடை நாற்
றத்தில் தான் சென்னையில் பெரும்பாலான மக்கள் வாழ்கின்றனர். மெரினாவை சுத்தப்படுத்த பல்லாயிரம் கோடிகளை செலவிட்டு மெரீனா சுத்தமாகத் தான் இருக்கிறதா?

முடிந்தவரை ஒப்பந்தகாரர்கள் சம்பாதிக்க வழிவிட்டு வரும் தேர்தலுடன் தமிழக முதல்வர் அரசியலுக்கு முழுக்குப் போடப் போகிறாரா? ஒருநாளைக்கு நான்கு மணிநேரம் கூட மின்சாரம் இல்லாமல் தமிழக மக்கள் சொல்லொணா துன்பத்தில் இருக்கையில் முதலமைச்சர் இப்படி ஒரு முடிவு எடுத்திருப்பது பற்றி மக்கள் ஆச்சரியத்துடன் விழி பிதுங்குகிறார்கள்.