சனி, 20 அக்டோபர், 2012

தொலைபேசி உரையாடல் "டேப்" அழிந்து விட்டது : புலனாய்வுத்துறையின் "சதி" நீதிமன்றத்தில் அம்பலம்!


                  மும்பை குண்டுவெடிப்பில், தொலைபேசி உரையாடல்களை ஆதாரமாக கொண்டு, முஸ்லிம்கள் கைது செய்யப்பட வழக்கில், மேற்படி தொலைபேசி உரையாடல் குறித்த (CDR) "டேப்" அழிந்து விட்டதாக, கூறி நீதிமன்றத்தில் தலைகுனிந்து நின்றது,புலனாய்வுத்துறை.

சென்ற ஆண்டில் "மும்பை லோக்கல் ரெயிலில்" குண்டு வெடிப்பு நிகழ்த்தப்பட்ட வழக்கில், அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள், கமால் அஹ்மத் அன்சாரி, டாக்டர் தன்வீர் அஹ்மத், முஹம்மத் பைசல் ஷேக், இஹ்திஷாம் சித்தீகி, முஹம்மத் மாஜித் ஷரீப், ஷேக் ஆலம், முஹம்மத் சாஜித் அன்சாரி, அப்துல் வாஹித், முசம்மில், சுஹைல் மஸ்வூத், சமீர் அஹ்மத், நவீத் ஹுசைன் மற்றும் ஆசிப் கான் ஆகிய 13 நபர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

அப்பாவி முஸ்லிம்களின் விடுதலைக்காக "ஜம்யியதுல் உலமா" (அர்ஷத்  மதனி) சார்பில் தொடரப்பட்ட வழக்கில், முஸ்லிம்கள் சார்பில் ஆஜரான வக்கீல்களின் சரமாரிக்கேள்விகளுக்கு, பதிலளிக்கமுடியாமல் திணறினார்,புலனாய்வுத்துறை சார்பில் ஆஜரான "அடிஷனல் சாலிசிட்டர் ஜெனெரல்" தார் யூஷ் கம்பாட்டா.

குறிப்பாக, "தொலைபேசி உரையாடல்"களை முக்கிய ஆதாரமாக புலனாய்வுத்துறை கூறியிருந்தபடியால், அந்த உரையாடல்கள் அடங்கிய "டேப்" ஆதாரத்தை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய கோரினர்,முஸ்லிம் தரப்பு வழக்கறிஞர்கள்.

கைது செய்யப்பட்டவர்கள், குண்டுவெடிப்பின் போது சம்பவ இடத்தில் இருந்ததாக, புலனாய்வுத்துறை கூறியிருந்தது.
மேலும், அவர்கள் தங்களுக்கிடையில் பேசிக்கொண்டதாக சொல்லப்படும் உரையாடல்கள் மற்றும் சம்பவம் நிகழ்ந்த போது அவர்கள் எங்கிருந்தனர்? போன்ற "தொலைதொடர்பு" ஆதாரங்கள் குறித்து கேள்வியெழுப்பியபோது, அது குறித்த ஆவணங்கள் அழிந்து விட்டதாக, அரசு வக்கீல் கூறினார்.

இதை  கேட்டு கடும் கோபமடைந்தார் நீதிபதி "அபை தப்சே".
தொலைபேசி உரையாடல் அழிந்து விட்டதென்றால், புலனாய்வுத்துறை அதிகாரிகளை-குறிப்பாக, கைது நடவடிக்கைக்கு  தலைமை தாங்கிய "ராகேஷ் மாரியா" என்பவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும்படி கோரிக்கை விடுத்தனர், நமது வழக்கறிஞர்கள்.

இதை குறித்துக்கொண்ட நீதிபதி, முதல்கட்ட "வாத-பிரதிவாதங்களுக்கு பிறகு, அது குறித்து உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றார்.
முஸ்லிம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் வாதாடும்போது, கைது செய்யப்பட்டுள்ள முஸ்லிம்கள் அப்பாவிகள், அவர்கள் ஒருவருக்கொருவர் அறிமுகமில்லாதர்கள், சம்பவ இடத்தில் அவர்கள் இருக்கவுமில்லை, தொலைபேசியில் பரஸ்பரம் பேசிக்கொள்ளவுமில்லை என்று வாதிட்டனர்.

அத்துடன், குறிப்பிட்ட நாளின்போது, இவர்கள் எந்த எல்லைகளில் இருந்தனர்? யாரோடு பேசினர்? போன்ற எல்லா விவரங்கள் குறித்தும், உரிய தகவல்கள்களை வழங்கிட, சம்மந்தப்பட்ட தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு உத்தரவிட கோரிக்கை வைத்தனர்.

இந்த வழக்கில், "ஜம்யியதுல் உலமா" சார்பில், யோக் சௌத்ரி, ஷரீப் ஷேக், வஹாப் கான், மற்றும் அன்சாரி தம்போலி ஆகியோர் வாதாடினர்.

நன்றி - maruppu.in