சனி, 20 அக்டோபர், 2012

"ராமஜென்ம பூமி" சுற்று வட்டாரங்களில் எந்த இடத்திலும் மசூதி கட்ட விடமாட்டோம் : உமா பாரதி!


                                  பாபர் மசூதியை ராமஜென்மபூமி என சார்ச்சைக்கு உள்ளாக்கிவிட்டதால், புதிதாக பொறுப்பேற்றுள்ள உத்தர பிரதேச அரசு, சுமூகமான ஒரு நிலைக்கு முயற்சிப்பதாக, ஊகங்கள் அடிப்படையில் "ஹிந்துத்துவா சக்திகள்" பேசி வருகின்றன.

குறிப்பிட்ட 70 ஏக்கர் நிலத்தை விட்டுவிட்டு, அதன் அருகில் உள்ள ஒரு இடத்தில் மசூதி கட்டும் நிலத்தை முலாயம் சிங் தேடி வருவதாக, அவர்கள் சொல்கின்றனர்.

இது தவிர, அலகாபாத் கட்டப்பஞ்சாயத்து (கோர்ட்) தீர்ப்பு மூலம், முஸ்லிம்களுக்கு கிடைக்கப்பெற்ற 3ல் ஒரு பகுதி நிலத்தில் "தோட்டம்" அமைத்து பராமரிக்கும் திட்டம் உள்ளதாகவும் "வதந்திகள்" கசிய விடப்படுகிறது.

இதில், முஸ்லிம்களுக்கு உடன்பாடு இல்லாவிட்டாலும், யூகங்களுக்கு பதிலளிக்க தேவையில்லை என்ற அடிப்படையில், முஸ்லிம்கள் அமைதி காத்து வருகின்றனர்.

இந்நிலையில் தான், ஹிந்துத்துவா சக்திகள் தொடர்ந்து அனல் கக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கங்கை நதி பாதுகாப்பு யாத்திரை மேற்கொண்டுள்ள பா.ஜ.க.வின் உமா பாரதி, நேற்று "காஸ் கஞ்" பகுதியில் அமைக்கப்பட்ட மேடையில் "மத துவேஷ கருத்து"க்களை கொட்டி தீர்த்தார்.
அங்கு பேசிய உமா பாரதி, எக்காரணம் கொண்டும், ராமஜென்மபூமியை சுற்றியுள்ள எந்த பகுதியிலும் மசூதி கட்டுவதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம்,என்றார்.

ராமர் கோவில் விவகாரம் அரசியல் ரீதியாக பலவீனமடைந்து விட்ட போதிலும், அதை பற்றி எனக்கு கவலை இல்லை.

ராமஜென்மபூமிக்கு அருகாமை பகுதிகளில் மசூதி உருவாவதை என்ன விலை கொடுத்தேனும் தடுப்போம், என்றார்,உமா பாரதி.

-maruppu.in