புதன், 5 செப்டம்பர், 2012

ஈரானை தாக்கினால் அமெரிக்க தளங்களை தகர்ப்போம்: ஹிஸ்பொல்லா

 


      
                                ஈரான் இரகசியமாக அணு ஆயுதங்களை தயாரித்து வருவதாக அமெரிக்கா, இஸ்ரேல் போன்ற நாடுகள் குற்றம் சுமத்தி வருவதுடன், பல்வேறு தடைகளையும் விதித்துள்ளது.
 

இந்நிலையில் லெபனான் ஈரானியர்கள் ஆதரவுடன் செயல்பட்டு வரும் ஹிஸ்பொல்லா தீவிரவாத அமைப்பின் தலைவர் நஸ்ரல்லாகூறுகையில், ஈரான் நாட்டு அணு மின் திட்டங்களுக்கு எதிராக இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால், மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்களை தாக்குவோம்.
 

பதிலடி கொடுப்பது குறித்து முடிவு எடுத்து இருக்கிறோம். தாக்குதல் மிகக் கடுமையாக இருக்கும்.
 

இஸ்ரேல் ஈரான் மீது குறிவைத்தால், அமெரிக்க அதன் பொறுப்பை ஏற்க வேண்டியிருக்கும். ஈரானின் அணுத் திட்டங்களை அணு ஆயுத திட்டமாக கூறிவரும் அமெரிக்காவிற்கும் இஸ்ரேலுக்கும் இடையே கருத்து வேறுபாடு உள்ளது.
 

என்னைப் பொறுத்தவரை இஸ்ரேல் ஒரு எதிரி நாடல்ல, ஆனால் சமீபகாலமாக ஈரானுக்கு எதிராக பேசி வருவது ஏற்றுக் கொள்ள முடியாது என்று தெரிவித்துள்ளார்.