அறிவியல், மருத்துவம் ஆகிய துறைகளில் சவுதி அரேபிய பெண்கள் சிறந்து விளங்கு என கல்ப் நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
யுனஸ்கோ வெளியிட்ட அறிக்கையை மேற்கோள் காட்டி சமார்பாட்னி என்பவர் கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார்.
அதில், மேற்கத்திய நாட்டு பெண்களை காட்டிலும் சவுதி அரேபிய பெண்கள் அறிவியல், மருத்துவம் ஆகிய துறைகளில் அதிக அளவில் பட்டம் பெறுகின்றனர்.
சவுதி அரேபியாவில் 40 சதவிகித மருத்துவர்கள் பெண்களே. அறிவியல் படித்த பெண்களில் பலருக்கு சிறந்த மருத்துவராகவும், விஞ்ஞானியாகவும் சர்வதேச அளவிலும் அங்கீகாரம் கிடைத்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.