செப்.15
அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு 10 ஆண்டுகள் சிறைவாசம் கழித்த இஸ்லாமிய
சிறைவாசிகள் மற்றும் அனைத்து அரசியல் சிறைவாசிகளின் விடுதலை கோரிய தொடர்
போராட்டத்தை இன அழிப்புக்கு எதிரான இஸ்லாமிய இளைஞர்கள் இயக்கம் திருப்பூர்,
கோவை, மேலப்பாளையம், சென்னை ஆகிய பகுதிகளில் நடத்தியது அதன் இறுதி
நிகழ்வாக நேற்று 31-08-2012 அன்று சென்னை மண்ணடி தம்பு செட்டி தெருவில்
ஒற்றை கோரிக்கையை வலியுறுத்தி மாநாடு நடைபெற்றது.
இந்த
மாநாட்டிற்கு இன அழிப்புக்கு எதிரான இஸ்லாமிய இளைஞர்கள் இயக்கத்தின் தலைமை
ஒருங்கிணைப்பாளர் சகோ.வழக்கறிஞர்.உமர்கயான் அவர்கள் தலைமை வகிக்க கள
ஒருங்கிணைப்பாளர் திருப்பூர் நாசர்தீன் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்.
த.மு.மு.க வின் மாநில துணைத்தலைவர் பெரியவர்.குணங்குடி ஹனீபா அவர்களும்,
இ.த.ஜ வின் தேசிய தலைவர் சகோ. செய்யது முஹம்மது பாக்கர் அவர்களும்,
எஸ்.டி.பி.ஐ யின் மாநில தலைவர் தெஹ்லான் பாகவி அவர்களும், இ.தே.லீக்
பொதுசெயலாளர்.தடா ரஹீம் அவர்களும், கொங்கு இளைஞர் பேரவையின் மாநில தலைவர்
தனியரசு அவர்களும், மனித உரிமை வழக்கறிஞர் ப.பா.மோகன் அவர்களும்
கலந்துகொண்டு விடுதலை முழக்கம் எழுப்பினர்.
முகவைத்தமிழன் (எ) ரைசுதீன்
இராமேசுவரம் உட்பட தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால்
சுட்டுக்கொல்லப்படுவது பற்றியும், தமிழக மீனவர்களை கைது செய்து இலங்கையில்
அவர்கள் மீது போதை பொருள் கடத்தியதாகக வழக்கு பதிவு செய்வது பற்றீயும்
அந்த மீனவர்களை மீடு்பது பற்றியும் பேசினார். இன்னும் கோவை குண்டுவெடிப்பு
கைதிகளான 166 பேர் மட்டும் முஸ்லிம் சிறைவாசிகள் என்ற பரவலான கருத்து தவறு
என்றும் தமிழகமெங்கும் அனைத்து சிறைச்சாலைகளிலும் ஆயிரக்கணக்கில் வேறு பல
வழக்குகளிலும் ஆயுள் தண்டனை பெற்றும் முஸ்லிம்கள் துன்புற்று வருவதை
குறிப்பிட்டு அவர்களை மீட்க வேண்டியதன் அவசியத்தையும் முகவைத்தமிழன் (எ)
ரைசுதீன் தனது உரையில் வலியுருத்தினார்.
அதன் பின்னர் பேச வந்த சேவ் தமிழ் இயக்க தோழர் பரிமளா, கீற்று நந்தன், தோழர் ஆயீஷா உட்பட பலரும் சிறைவாசிகளின் விடுதலையை வலியுருத்தி பேசினர். இந்நிகழ்ச்சியில் அனைத்து சமுதாய மக்கள் உள்பட மனித உரிமை போராளிகள் ஏராளமானோர் கலந்துகொண்டு உரிமைகளுக்கு வலிமை சேர்த்தனர். இறுதியாக வேங்கை இப்றாகிம் அவர்கள் நன்றி கூறினார்.
அதன் பின்னர் பேச வந்த சேவ் தமிழ் இயக்க தோழர் பரிமளா, கீற்று நந்தன், தோழர் ஆயீஷா உட்பட பலரும் சிறைவாசிகளின் விடுதலையை வலியுருத்தி பேசினர். இந்நிகழ்ச்சியில் அனைத்து சமுதாய மக்கள் உள்பட மனித உரிமை போராளிகள் ஏராளமானோர் கலந்துகொண்டு உரிமைகளுக்கு வலிமை சேர்த்தனர். இறுதியாக வேங்கை இப்றாகிம் அவர்கள் நன்றி கூறினார்.