வியாழன், 13 செப்டம்பர், 2012

சோமாலியாவின் புதிய ஜனாதிபதியாக இஸ்லாமியவாதியான பல்கலைக்கழக பேராசிரியர்



 
                              
                              சோமாலியாவில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் ஹசன் முகமது புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். பல்கலைக்கழக பேராசியரான 56 வயது ஹசன் பற்றி உள்நாட்டில் கூட யாருக்கும் பெரிய அளவில் தெரியாதாம்.

இதுபற்றி சோமாலிய தூதர் ஒருவர் கூறும்போது, ‘அவர் சோமாலி மக்கள் சமுதாயத்திலிருந்து வந்தவர். முஸ்லிம் சகோதரத்துவத்திற்கு சமமான அல்-இஸ்லாவுடன் தொடர்புடையவர். கடந்த இரண்டு நாட்களாகத்தான் அவரைப் பற்றி நாங்கள் கேள்விப்படுகிறோம்’ என்றார். மத்திய பிரதேச மாநிலம் போபால் பல்கலைக்கழகத்தில் படித்தவரான ஹசன் அதிபர் தேர்தலில் வெல்வார் என தேர்தலுக்கு முன்பாக ஒரு சிலரே கணித்துள்ளனர்.

தற்போதைய அதிபரான ஷாரிப் ஷேக் அகமது மீண்டும் வெல்வார் என பெரும்பாலானோர் கணித்திருந்த நிலையில், ஹசன் வென்றிருப்பது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.