திங்கள், 22 அக்டோபர், 2012

பக்ரீத் பண்டிகை :ஆர்.எஸ்.எஸ். மற்றும் போலீசாரால் சித்திரவதைக்கு உள்ளாக்கப்படும் முஸ்லிம் சமூகம்!


                                    வருடத்தில் 2 நாட்கள் மட்டுமே முஸ்லிம் பண்டிகைகள். அதில் ஒன்று பக்ரீத். இதில், குர்பானி கொடுப்பது முஸ்லிம்கள் மீது கடமையாகும்.

முஸ்லிம்களுக்கு தொல்லை கொடுப்பதை அடிப்படை கொள்கையாக கொண்டுள்ள ஆர்.எஸ்.எஸ். மற்றும் ஹிந்துத்துவா தீவிரவாதிகள், ஆடு மாடுகள் விற்கப்படும் சந்தைகளுக்கு அருகே ஒன்றாக சேர்ந்து கொண்டு, கொள்முதல் செய்யப்பட்டு கொண்டு செல்லப்படும் பிராணிகளின் வாகனங்களை வழி மறித்து "ரகளை" செய்து வருகின்றனர்.

"பசு"மாடு உள்ளதா? எனத்துவங்கி, இடவசதி சரியாக உள்ளதா? ஆரோக்கியம் குறித்த சான்று இருக்கிறதா? ஓவர் லோடா? போன்ற விஷயங்கள் குறித்து, ஆர்.எஸ்.எஸ். அரக்கர்களுக்கு பதில் சொல்லவேண்டிய "அவல நிலை "உள்ளது.

சட்டத்தை கையில் எடுத்துக்கொள்ளும் இந்த "காவிகளுக்கு காக்கி சட்டைகளும் துணை" புரிந்து வருவது தான் வேதனை.
காரணம், இதில் "மாமூல்" என்பதையும் தாண்டி "பறிமுதல்" என "மிரட்டல்" விடுத்து "பகல்கொள்ளை" அடிக்கும் வளம் கொழிக்கும் தொழிலாக பார்க்கிறது,போலீஸ்.

எனவே, நாடு முழுவதும் காவிகளும் காக்கிகளும் "கூட்டணி" அமைத்து, முஸ்லிம்கள் கொண்டு செல்லும் பிராணிகள் குறித்து "கேள்வி மேல் கேள்வி" கேட்டு, சொல்லொண்ணா  துயரத்துக்கு ஆளாக்குகிறார்கள்.

மேலும், பிராணிகள் சுமந்து செல்லும் வாகனங்களை, "மணல் கடத்தல் லாரி"களை துரத்தி செல்வது போல் துரத்தி செல்கிறார்கள்.
அப்படி துரத்தி செல்லப்பட்ட ஒரு டிராக்டர் (உ. பி."ஆசம்கர்" மலிக்) ஏரியில் கவிழ்ந்து, அதில் இருந்த 30 குர்பானி ஆடுகள் இறந்துவிட்டன.
மேலும், டிரைவர் உள்ளிட்ட மூன்று முஸ்லிம்கள் படுகாயமடைந்துள்ளனர்.
இதுபோன்ற சம்பவங்கள், தமிழகம் ஆந்திரம்  கேரளம் கர்நாடகம் மகாராஷ்டிரம் உத்திர பிரதேசம், என நாட்டின் எல்லா பாகங்களிலும் நடந்தேறி வருகிறது.


- maruppu.in