திங்கள், 22 அக்டோபர், 2012

காற்றிலிருந்து பெட்ரோலை தயாரித்து சாதனைஉலகில் முக்கிய தேவையான பெட்ரோலை காற்றிலிருந்து தயாரித்து இங்கிலாந்தை சேர்ந்த நிறுவனம் சாதனை படைத்துள்ளது.
பூமியில் கச்சா எண்ணெயின் அளவு குறைந்து கொண்டே வருவதால், மாற்று எரிபொருளை கண்டுபிடிக்கும் முயற்சியில் நிபுணர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
 

இந்நிலையில் காற்றின் மூலம் மின்சாரம் தயாரித்துஇங்கிலாந்தை சேர்ந்த நிறுவனம் சாதனை படைத்துள்ளது.
காற்றில் உள்ள கார்பன் -டை ஆக்சைடுடன், ஹைட்ரஜன் கலந்து மெத்தனால் உருவாக்கப்படுகிறது.
 

அதில் இருந்து பெட்ரோல் தயாரிக்கப்படுகிறது. தற்போது இதுபோன்ற பெட்ரோலை 3 மாதத்தில் 5 லிட்டர் மட்டுமே தயாரிக்க முடிகிறது.
எனவே பெரிய அளவில் பிளாண்ட் அமைத்து அதன் மூலம் தினசரி டன் கணக்கில் பெட்ரோல் தயாரிக்க திட்டமிட்டுள்ளது. அதற்கு இன்னும் 2 ஆண்டுகள் ஆகும்.
 

இதைத் தொடர்ந்து 15 ஆண்டுகளில் மிகப்பெரிய அளவில் பெட்ரோல் தயாரிக்க முடியும் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
காற்று மூலம் பெட்ரோல் தயாரிக்கும் தொழில்நுட்பம் சமீபத்தில் லண்டனில் நடந்த பொறியியல் மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்டது.