ஞாயிறு, 7 அக்டோபர், 2012

காணவில்லை நேசனல் விமென்ஸ் பிரன்ட் - எதிர் பார்க்கும் லப்பைகுடிகாட்டு பெண்கள்!


                                        லப்பைகுடிகாட்டில் சுமார் 6 மாதங்களுக்கும் முன் நேசனல் விமென்ஸ் பிரான்ட்  நிகழ்ச்சி கிழக்கு பள்ளிவாசல் அருகில் உள்ள MGM கீழ் வளாகத்தில் சமுதாய கருத்தரங்கு என்ற தலைப்பில் நடைபெற்றது. இதில் சுமார் 500 க்கும் மேற்ப்பட்ட பெண்கள் கலந்துக்கொண்டனர். இதன்மூலம் பெண்களுக்கு எதிராக நிகழும் காபிர்களின் சூழ்ச்சிகளைப் பற்றியும் விரிவாக பேசப்பட்டது. இது பலருக்கு பயனுள்ளதாக இருந்தமையால் இதுபோன்ற கூட்டம் அதிகம் நடைபெறவேண்டும் என்றும் லப்பைகுடிகாட்டில் பெண்கள் அதில் தங்களின் கருத்துக்களை பகிர்ந்தார்கள். இறுதியாக வீடியோ கான்பரன்ஸ் மூலம் இஸ்லாமிய பெண்களுக்கு எதிராக விரிக்கப்படும் காபிர்களின் வலைகளைப்பற்றயும் ஒரு முன்னோட்டம் அதில் ஓட்டப்பட்டது.

                                    சமுதாய அக்கறையோடு செயப்படும் இப்படிப்பட்ட அமைப்பே! ஒருநாள் கூத்தோடு முடிந்ததுபோல் அதற்க்கு பிறகு
லப்பைகுடிகாட்டிருக்கு எந்த ஒரு தொடர்பும் இல்லாமல் இருப்பது லப்பைகுடிகாட்டில் பெண்களிடையே வருத்தத்தையும், மன சோர்வையும் அளிக்கிறது. பெண்களுக்கு இழைக்கப்படும் அணிதிகளுக்கு உரிமைகுரலாகவும்,சமநீதி பெற்றுத்தரும் அமைப்பாகவும், மற்ற மற்ற இடங்களில் முன்னேறிவரும் இந்த நேசனல் விமென்ஸ் பிரான்ட் அமைப்பு லப்பைகுடிகாட்டில் விசயத்தில் மிக மிக பின்தங்கியுள்ளது என்பதை யாராலும் மறுக்கமுடியாது.

இனிவரும் காலங்களில் பெண்கள் தங்களுடைய தன்மானத்தை காக்கவும், எதிரிகளின் சூழ்சியை பற்றி விழிப்புணர்வோடு இருக்கவும், இப்படிப்பட்ட அமைப்பு பெண்கள் மனதில் அல்லாஹ்வையும் மறுமையையும் பற்றி  ஊட்டிக் கொண்டே இருப்பார்களா?


நன்றி - labbaikudikadunews