இச்செய்தியை அனைவருடனும் பகிருங்கள்!
மலைஜாதியினர் மற்றும் பூர்வீக குடியின மக்களை ஆபாசமாகப் படமெடுத்தால் 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையுடன் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. நேற்று நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கு ஒப்புதல் அளிக்கப் பட்டது.
அந்தமான், நிக்கோபாரில் வசிக்கும் ஜாரவா பழங்குடியினரை புகைப் படம் மற்றும் வீடியோ எடுக்க மத்திய அரசு தடை விதிக்கும் விதமாக, இந்த சட்டம் நிறைவேற்றப் பட்டுள்ளது. ஜாரபார் பழங்குடியின மக்களை புகைப் படம் எடுக்கக் கொட்டாது, வீடியோக் காட்சிகள் பதிவு செய்யக் கூடாது. இவர்கள் வசிக்கும் பகுதியை சுற்றி 5 கிலோ மீட்டர் தூரம் வரை வெளி மக்கள் யாரும் செல்லத்தடை உத்தரவு. மேலும் தடை செய்யப் பட்டப் பகுதிகளில் மதுபானம் விற்பனை செய்யத் தடை. கடைகள் போடத்தடை, விளம்பரங்கள் செய்யத் தடை எனும் பல அதிரடி தீர்மானங்களை மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது. மேலும் இந்த தடையை மீறுபவர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம், 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருக்கிறது.
அண்மையில் அந்தமான், நிக்கோபார் தீவுகளில் சுற்றுலா நிமித்தம்ம் சென்றவர்கள் அங்குள்ள பூர்வீக குடியின மக்களை ஆபாசமாக படம்பிடித்து இணையத்தில் பதிவேற்றம் செய்திருந்த சம்பவம் நாடுமுழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.