வங்கதேசத்தின் தென்கிழக்கு பகுதியில் திடிர் என ஏற்பட்ட நிலச்சரிவுகளிலும் வெள்ளத்திலும் 1000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன
வங்தேசத்தின் தென்கிழக்கு பகுதிகளில் பல நாட்களாக அடைமழை பெய்துள்ளது,
இதனையடுத்து அங்கே நிலச்சரிவுகளுடன் வெள்ளமும் ஏற்பட்டுள்ளது. இதில் பல
வீடுகள் சேதமுற்றதுடன் வீடுகளிலிருந்தோரும் நிலச்சரிவுகளில் சிக்கி
பலியாகியுள்ளனர்.
மேலும் சிட்டகொங் எனும் துறைமுக நகரில் ஏற்பட்ட வெள்ளத்தில் பலர்
அடித்துச் செல்லப்பட்டுள்ளனர். மேலும் பலர் தங்களது வாழ்விடங்களை விட்டு
வெளியேறவேண்டிய நிலைமையும் ஏற்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 100க்கும்
மேற்றப்பட்டோர் வெள்ளத்திலும் நிலச்சரிவுகளிலும் சிக்கி பலியாகியிருப்பதாக
தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிட்டகொங் நகரின் விமான நிலைய
போக்குவரத்தும் இடை நிறுத்தப்பட்டுள்ளதாகவும் மீட்பு பணிகளும்
பாதிப்புற்றோருக்கான நிவாரணம் வழங்குவதற்கான நடவடிக்கைகளும்
மேற்கொள்ளப்பட்டு வருதாக செய்திகள் கூறுகின்றன.