புதன், 11 ஜூலை, 2012

பொது இடங்களில் அநாகரீகமாக நடந்து கொள்ளும் ஜோடிகளை கைது செய்ய முடிவு: சென்னை போலீஸ் நடவடிக்கை

பொது இடங்களில் அநாகரீகமாக நடந்து கொள்ளும் ஜோடிகளை கைது செய்ய முடிவு: சென்னை போலீஸ் நடவடிக்கை


                         பூங்கா, கடற்கரை மற்றும் பொழுதுபோக்கு இடங்களுக்கு வரும் காதலர்கள், இளம் ஜோடிகள், கள்ளக்காதல் ஜோடிகள் மற்றவர்களைப் பற்றி கவலைப்படாமல், அநாகரீகமாக நடந்து கொண்டு, சங்கடங்களை ஏற்படுத்துகின்றனர்.

இந்த இடங்கள் தவிர, பஸ்நிலையம், ரெயில் நிலையம், சினிமா தியேட்டர்கள் போன்ற இடங்களிலும் அத்துமீறல்கள் நடக்கின்றன. பொது இடங்களில் அநாகரீகமாக நடந்து கொள்பவர்களை எச்சரிக்கவும், தேவை ஏற்பட்டால் கைது செய்யவும் போலீசார் முடிவு செய்து, நடவடிக்கையிலும் இறங்கியுள்ளனர்.

இதற்காக 6 அதிகாரிகளை கொண்ட போலீஸ் குழு அமைக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் பொது இடங்களில் அநாகரீகமாக அன்பை வெளிப்படுத்திய 500 ஜோடிகளை போலீசார் பிடித்தனர். அவர்களில் சிலர் மீது, பொதுமக்களுக்கு இடையூறாக நடந்து கொண்டதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மற்றவர்கள் எச்சரித்து அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதுபோன்ற செயல்களை வளரவிடாமல் தடுக்க, தங்களது நடவடிக்கையை இறுக்க போலீசார் தீர்மானித்துள்ளனர்.