இரகசியமாக உலகைச் சுற்றி 270 நாட்கள் வேவு பார்த்த அமெரிக்க விமானம் ஜூனில் தரை இறக்கம்?
சர்வதேச விண்வெளி நிலையத்துக்குச் செல்லல், சந்திரனை ஆய்வு செய்தல், செவ்வாய்க் கிரகத்துக்கு
மனிதர்களை அனுப்பத் திட்டமிடல் ஆகிய பணிகளுக்காக விண்ணில் ஏவப்படும்
விண்கலங்களைப் பற்றிக் கேள்விப் பட்டிருப்போம். இதற்கு உதாரணமாக
அமெரிக்காவின் டிஸ்கவரி, என்டேவர், மற்றும் ரஷ்யாவின் சோயுஷ் ஆகிய
விண்கலங்களைக் கூறலாம்.
ஆனால் ஊடகங்களுக்குத் தெரிவிக்காமல் முற்றிலும் ரகசியமாக அரசியல் வேவு பணிக்காக ஒரு விண்கலம் இயங்கி வருகின்றது என்றால்? அப்படியான ஒரு விண்கலம் அல்லது உளவு விமானம் போயிங் நிறுவனத்தினது X-37B 2 எனப் பெயரிடப்பட்ட அமெரிக்க விமானம் ஒன்று 17 000 mph வேகத்தில் பூமியை 110 - 500 மைல் உயரத்தில் 270 நாட்களாக சுற்றி வந்தது. இது இம்மாதம் (ஜூன்) கடைசியில் தரையிறக்கப் படவுள்ளது.
இவ் விமானம் முக்கியமாக சீனாவின் டியாங்கொங் நகரில் சமீபத்தில் அமைக்கப் பட்ட புதிய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் செயற்பாடுகளை உன்னிப்பாக மாட்டிக் கொள்ளாமல் அவதானிக்கவே உருவாக்கப் பட்டது. எனினும் இதன் மூலம் வடகொரியா,ஈரான்,இராக்,பாகிஸ்தான் மற்றும் ஆஃபகானிஸ்தான் ஆகிய நாடுகளில் உள்ள அணு உலைகள் மற்றும் இராணுவப் பாசறைகள் வாகனங்கள் என்பவற்றையும் அவதானிக்கவும் இவ் விமானம் உபயோகப் படுத்தப் பட்டிருக்கும் எனவும் நம்பப் படுகின்றது.