உலக விளைநிலம் வர்த்தகத்தில்...
உள்நாட்டிலும்,
வெளிநாடுகளிலும் விளைநிலங்களில் முதலீடு செய்வது தொடர்பாக சர்வதேச
புள்ளிவிபரம் ஒன்றை வாஷிங்டனைச் சேர்ந்த Matrix Project Land என்ற
ஆய்வுக்குழு வெளியிட்டிருக்கிறது. 2000ஆம் ஆண்டு முதல் நிலப் பரிவர்த்தனை
நடந்துள்ள விபரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. உலகம் முழுவதிலுமாக, 2000ல்
இருந்து இதுவரை 70.2 மில்லியன் ஹெக்டேர்கள் பரப்பளவு கொண்ட விவசாய நிலங்கள்
விற்கவும், குத்தகைக்கு விடவும் பட்டுள்ளன. அந்த அளவு கொண்ட நிலம் சுமார்
காங்கோ குடியரசு நாட்டின் பரப்பளவுக்கு இருக்கும். உலக விவசாய நிலங்களின்
அளவில் 1.4 சதவீதமாக இருக்கும் என மதிப்பிடப்படுகிறது. Land Matrix
பட்டியலிட்டுள்ள 82 முதலீட்டாளர்களில் இந்தியா, சீனா, பிரேசில் ஆகிய
நாடுகள் மட்டும் 16.5 மில்லியன் ஹெக்டேர் நிலங்களில் முதலீடு
செய்திருக்கின்றன. இது உலகம் முழுவதிலும் விற்கவோ, குத்தகைக்கு விடவோ பட்ட
மொத்த ஹெக்டேர் நிலங்களில் 24 சதவீதமாக இருக்கும்.
இந்தியா, கிழக்கு ஆப்ரிக்கா நாடுகளில் இருந்து மட்டும் (குறிப்பாக எத்தியோப்பியா, மடகாஸ்கர்) 3.2 மில்லியன் (30 லட்சத்து
20 ஆயிரம்) ஹெக்டேர் நிலங்களும், தென்கிழக்கு ஆசிய நாடுகளில்
(இந்தோனேசியா, லாவே மக்கள் குடியரசு) இருந்து 2.1 மில்லியன் (20 லட்சத்து
10 ஆயிரம் ஹெக்டேர்) நிலங்களையும் இந்தியா வாங்கி இருக்கிறது. அதுபோல் மற்ற
நாடுகளில் நிலம் வாங்கிய நாடுகளில் முதல் 10க்குள் இந்தியா வருகிறது.
சுமார் 4.6 மில்லியன் ஹெக்டேர் நிலங்கள் வெவ்வேறான 113 ஒப்பந்தங்களின் கீழ்
விற்கப்பட்டுள்ளன. 2000ல் இருந்து இந்தியா வாங்கியது
• கிழக்கு ஆப்ரிக்க நாடுகளிடம் இருந்து 30 லட்சத்து 20 ஆயிரம் ஹெக்டேர்,
• தென்கிழக்கு ஆசிய நாடுகளிடம் இருந்து 20 லட்சத்து 10 ஆயிரம் ஹெக்டேர்,
• இந்தியா விற்ற நிலம் 40 லட்சத்து 60 ஆயிரம் ஹெக்டேர் நிலங்கள்,
• உள்ளூர் நிறுவனங்கள் வாங்கிய நிலத்தின் அளவு 1 கோடியே 60 லட்சம் ஹெக்டேர்.
பெரும்பாலான நிலங்கள் விவசாயம் மற்றும் வனங்கள் உருவாக்குவதற்காக
வாங்கப்பட்டுள்ளன. இதில் 30 சதவீத நில பரிவர்த்தனை உணவு பயிர்களுக்காகவும்,
20 சதவீத நிலங்கள் உயர் எரிபொருள் உற்பத்திக்காகவும், வளர்ப்பு
பிராணிகளுக்கான உணவுகள் தயாரிக்கவும் வாங்கப்பட்டிருக்கின்றன.