மேற்காசியாவில் மிகப்பெரிய தகவல் தொழில் நுட்ப, மின்னணு பொருட்களின் கண்காட்சியான (Gitex Shopper) ‘ஜிடெக்ஸ் ஷாப்பரை’ நேற்று (29-09-2012) துபாய் கல்ச்சர் அண்ட் ஆர்ட்ஸ் அதாரிட்டி தலைவரான ஷேக் மாஜித் பின் முஹம்மது ராஷித் துவக்கி வைத்தார். வேல்ட் ட்ரேட் செண்டரில் நடைபெறும் இந்த வர்த்தக திருவிழாவில் நேற்று காலை முதலே மக்கள் கூட்டம் அலைமோதியது.
நுகர்வோரை கவருவதற்காக பல்வேறு எலக்ட்ரானிக் நிறுவனங்கள் மிகப்பெரிய சலுகைகளுடன் 8 தினங்கள் நடைபெறும் இத்திருவிழாவில் பங்கேற்றுள்ளன.
எல்.ஜி நிறுவனம் உலகிலேயே மிகவும் கனம் குறைந்த தொலைக்காட்சிகளுடன் ஜிடெக்ஸில் பங்கேற்கிறது.
மின்னணு, தகவல் தொழில்நுட்பத் துறையில் மிகச்சிறந்த தயாரிப்புகள் இத்திருவிழாவில் அனைவரையும் ஈர்க்கும். 30 ஆயிரம் பல்வேறு தயாரிப்புகளுடன் 120 நிறுவனங்கள் ஜிடெக்ஸில் பங்கேற்கின்றன. நுகர்வோருடன் தொடர்பை ஏற்படுத்தும் மிகச்சிறந்த வாய்ப்பாக ஜிடெக்ஸ் அமைந்துள்ளது என்று இ-மேக்ஸ்(E-Max) சி.இ.ஒ நிலேஷ் பட்நாகர் கூறுகிறார்.
காலை 11 மணிமுதல் இரவு 10 மணி வரை கண்காட்சி நடைபெறும். நுழைவுக் கட்டணம் 30 திர்ஹம். தகவல் தொழில் நுட்ப துறையில் ப்ரொஃபஸனல்களை அதிகம் ஈர்க்கும் ஜிடெக்ஸ் டெக்னாலஜி வீக் அடுத்த மாதம் (அக்டோபர்) 14 ஆம் தேதி முதல்18-ஆம் தேதி வரை நடைபெறும். இந்த எக்ஸ்பிஷனில் இந்தியாவைச் சார்ந்த 40 நிறுவனங்கள் பங்கேற்கின்றன.