புதன், 3 அக்டோபர், 2012

பாராளுமன்றத்தில் எடுத்து வைத்தோம் - எம். அப்துல் ரஹ்மான்



                                             முஸ்லிம் சமுதாயத்தில் திருமணம் சம்பந்தமான இன்னொரு பிரச்சினை அண்மை காலங்களில் விஸ்வரூபம் எடுத்திருப்பது வேதனை தருவதாக இருக்கிறது. மணப்பெண் 18 வயது பூர்த்தியடையவில்லை என்றால், ‘குழந்தை திருமணம்’ எனச் சொல்லி மணமேடையிலேயே கைது செய்து கொண்டு போகிற அவலநிலையை அதிகாரிகள் அரங்கேற்றி வருகிறார்கள். ‘‘ஒரு பெண் பருவம் அடைந்துவிட்டாலே அவள் திருமணத்திற்குத் தகுதியுடையவள் ஆகிறா
ள்’ என்கிறது மார்க்கம். நமக்கென பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டுள்ள ஷரீஅத் சட்டம் இதனை அப்படியே வலியுறுத்துகிறது. இதனைச் சுட்டிக்காட்டி டில்லி உயர்நீதிமன்ற தீர்ப்புகூட 15 வயதில் திருமணம் செய்த ஒரு முஸ்லிம் பெண்ணை வழக்கிலிருந்து விடுவித்திருக்கிறது. இத்தகவல்களை சென்ற மாத ‘பிறை மேடை’ தலையங்கம் விளக்கமாக விவரித்திருக்கிறது. இப்போது இந்தப் பிரச்சினையை நாடாளுமன்றத்தில் எழுப்பியிருக்கிறோம். சட்டத்துறை அமைச்சர் மாண்புமிகு சல்மான் குர்ஷித் அவர்களுடன் விவாதித்தும் இருக்கிறோம். இந்திய அரசின் தலைமை வழக்கறிஞர் திரு. வானாவதியுடன் பேசிவிட்டு இதற்கான ஒரு நல்ல தீர்வை சட்ட ரீதியாக தர உறுதியளித்திருக்கிறார் மத்திய அமைச்சர்.

மிக விரைவில் எதிர்பார்க்கக்கூடிய இந்த தீர்வு சமுதாயத்தில் ஒரு நிரந்தர தீர்வாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. சட்ட ரீதியாக அது சமுதாயத்தின் உயிரான பிரச்சினைகளுக்குச் சரியான தீர்வைப் பெறுவதில் தாய்ச்சபை முஸ்லிம் லீக் தன்னை முன்னிருத்துவதில் ஒருபோதும் தயங்கியதில்லை. அந்த சரித்திரத் தொடர் சங்கிலித் தொடராய் மிளிரும் காட்சி முஸ்லிம் லீகிற்குப் புதிதல்ல; கடமையை ஆற்றுகிறோம்;


வல்ல இறைவனின் பேரருளை நாடி.


இன்ஷா அல்லாஹ்.


அன்புடன்

எம். அப்துல் ரஹ்மான்
ஆசிரியர்.