சவுதி, ஆரம்கோ எண்ணெய் மேடை கடலில் மூழ்கியதில் 3 பேர் பலி.(aramco)
சவுதி அரசுக்கு சொந்தமான ஆரம்கோ என்ற எண்ணெய் நிறுவனத்தின் பராமரிப்பின் கீழ் பல எண்ணெய் மேடைகள் அந்நாட்டின் கடற்பரப்பில் நிறுவப்பட்டுள்ளன. இவற்றில் ஒன்றான சபானியா சவுதியின் நிலப்பரப்பில் இருந்து 50 கி.மீ தொலைவில் 15 கி.மீ ஆழத்தில் நிறுவப்பட்டுள்ளது.
இங்கிருந்து தினமும்1.2 மில்லியன் பேரல்கள் எண்ணெய் எடுக்கப்படுகின்றது. உலகளவில் பெரிய எண்ணெய் மேடையாகக் கருதப்படும் இது சவுதி அரேபியாவின் கிழக்குப்பகுதியில் உள்ள தஹ்ரான் நகரிலிருந்து 265 கி.மீ வடக்கே உள்ளது.
உற்பத்தி மற்றும் கையிருப்பு அளவில் மிகப்பெரிய எண்ணெய் நிறுவனங்களின் அடிப்படைத்தளமாக தஹ்ரான் விளங்கி வருகின்றது. சபானியாவில் உள்ள எண்ணெய் மேடையில் நேற்று பராமரிப்புப்பணி நடைபெற்றுக் கொண்டிருந்தது.
இதற்காக நிறுவப்பட்ட பராமரிப்பு மேடையில் இருந்தவண்ணம் பல ஊழியர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக அந்த மேடை கடலில் மூழ்கியது. அந்த சமயத்தில் 19 கடல்மைல் தொலைவில் உள்ள ரஸ் அல் கப்ஜி துறைமுகத்தின் அருகே கடலோரப் பாதுகாப்புப் பிரிவினர் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனர்.
விபத்து குறித்த தகவல் தெரிந்ததும் விரைந்து வந்த அவர்கள் கடலில் விழுந்தவர்களில் 24 பேரைக் காப்பாற்றிக் கரை சேர்த்தனர்.
அவர்களில் பலருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டுள்ளது. இந்த ஊழியர்களில் இன்னும் இரண்டு இந்தியர்களையும், ஒரு வங்கதேசத்தவரையும் காணவில்லை என தேடும்பணி தொடர்ந்து நடைபெற்றதான் இறுதியில், காணமல் போன மூவரின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.
http://zeenews.india.com/news/nation/saudi-oil-rig-sinks-in-persian-gulf-2-indians-among-dead_900063.html