ஞாயிறு, 3 ஜூன், 2012

வாழ்வில் வெற்றி பெற

 
 
அல்லாஹ்வால் தேர்ந்தெடுக்கப்பட்ட இறைத்தூதர்களின் உறவினர்கள் கூட இறைக்கட்டளையின்படி நடக்காவிட்டால் அவர்கள் இறைத்தூதர்களின் உறவினர்கள் என்பதற்காக மறுமையில் வெற்றியடைய முடியாது. நபி இப்ராஹீம் (அலை) அவர்களின் தந்தையாக இருந்த ஆஸர்,இறைத்தூதரின் தந்தை என்பதற்காக
அவர் மறுமையில் வெற்றியடைந்து விட முடியாது. அவருக்காக பாவமன்னிப்புக் கூட கேட்க அல்லாஹ் அனுமதிக்கவில்லை. “உங்களை விட்டும் அல்லாஹ்வையன்றி எதனை வணங்குகிறீர்களோ அதை விட்டும் நாங்கள் விலகியவர்கள். உங்களை மறுக்கிறோம். அல்லாஹ்வை மட்டும் நீங்கள் நம்பிக்கை கொள்ளும் வரை எங்களுக்கும் உங்களுக்குமிடையே பகைமையும் வெறுப்பும் என்றென்றும் ஏற்பட்டு விட்டது” என்று கூறிய விஷயத்தில் இப்ராஹீமிடமும் அவருடன் இருந்தோரிடமும் உங்களுக்கு அழகிய முன்மாதிரி இருக்கிறது. “உங்களுக்காக பாவ மன்னிப்புத் தேடுவேன். அல்லாஹ்விடமிருந்து உங்களுக்கு எதையும் செய்ய நான் அதிகாரம் பெற்றிருக்கவில்லை” என்று இப்ராஹீம் தம் தந்தையிடம் கூறியதைத் தவிர. (இதில் அவரிடம் முன்மாதிரி இல்லை) எங்கள் இறைவா! உன்னையே சார்ந்திருக்கிறோம். உன்னிடமே திரும்பினோம். மீளுதல் உன்னிடமே உள்ளது.
(அல்குர்ஆன் 60:4)
இப்ராஹீம் தம் தந்தைக்காகப் பாவ மன்னிப்புத் தேடியது, தந்தைக்கு அவர் அளித்த வாக்குறுதியின் காரணமாகவே! அவர் அல்லாஹ்வின் எதிரி என்பது அவருக்குத் தெரிந்த பின் அதிலிருந்து விலகிக் கொண்டார். இப்ராஹீம் பணிவுள்ளவர்;சகிப்புத் தன்மை உள்ளவர். (அல்குர்ஆன் 9:114)
இதைப் போன்று நபி நூஹ் (அலை) மற்றும் லூத் (அலை) அவர்களின் மனைவிமார்கள் மார்க்கத்திற்கு முரணாக நடந்தனர். அவர்கள் இறைத்தூதரின் மனைவி என்பதால் அவர்கள் சொர்க்கம் போக முடியவில்லை. மாறாக நரகவாதிகள் என்று தெளிவாக அல்லாஹ் கூறியுள்ளான்.
நூஹுடைய மனைவியையும், லூத்துடைய மனைவியையும் (தன்னை) மறுப்போருக்கு அல்லாஹ் முன்னுதாரணமாகக் காட்டுகிறான். அவ்விருவரும் நமது இரு நல்லடியார்களின் மனைவியராக இருந்தனர். அவர்களுக்குத் துரோகம் செய்தனர். எனவே அவ்விருவரையும் அல்லாஹ்விடமிருந்து அவர்கள் சிறிதளவும் காப்பாற்றவில்லை.“இருவரும் நரகில் நுழைவோருடன் சேர்ந்து நுழையுங்கள்!” என்று கூறப்பட்டது.
(
அல்குர்ஆன் 66:10)
இதைப் போன்று நூஹ் (அலை) அவர்களின் மகன், இஸ்லாத்தின் கொள்கைகளை ஏற்றுக் கொள்ளாததால் அவனையும் கடல் பேரலையால் மூழ்கடித்ததாக அல்லாஹ் கூறுகின்றான். அவர்களின் தந்தை, மகன் உறவு பயனளிக்கவில்லை.
நமது கட்டளை வந்து, தண்ணீர் பொங்கிய போது “ஒவ்வொன்றிலும் ஒரு ஜோடியையும், உமது குடும்பத்தாரில் நமது விதி முந்தி விட்டவர்களைத் தவிர மற்றவர்களையும், நம்பிக்கை கொண்டோரையும் ஏற்றிக் கொள்வீராக!” என்று கூறினோம். அவருடன் மிகச் சிலரே நம்பிக்கை கொண்டனர்.
“இதில் ஏறிக் கொள்ளுங்கள்! அல்லாஹ்வின் பெயராலேயே இது ஓடுவதும், நிற்பதும்உள்ளது. என் இறைவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்” என்று கூறினார்.
மலைகளைப் போன்ற அலை மீது அது அவர்களைக் கொண்டு சென்றது. விலகி இருந்த தன் மகனை நோக்கி “அருமை மகனே! எங்களுடன் ஏறிக் கொள்! (ஏக இறைவனை) மறுப்போருடன் ஆகி விடாதே!” என்று நூஹ் கூறினார்.
“ஒரு மலையில் ஏறிக் கொள்வேன்; அது என்னைத் தண்ணீரிலிருந்து காப்பாற்றும்” என்றுஅவன் கூறினான். “அல்லாஹ் அருள் புரிந்தோரைத் தவிர அல்லாஹ்வின் கட்டளையிலிருந்து காப்பாற்றுபவன் எவனும் இன்று இல்லை” என்று அவர் கூறினார். அவ்விருவருக்கிடையே அலை குறுக்கிட்டது. அவன் மூழ்கடிக்கப்பட்டோரில் ஆகி விட்டான். (அல்குர்ஆன் 11:40-43)
இவ்வுலகத்தின் அருட்கொடையாக வந்த நபிகளாரின் தந்தையும் தாயும் கூட இஸ்லாத்தை ஏற்காததால் அவர்களும் நரகவாதிகளாக ஆகிவிட்டார்கள். அவர்களின் உறவும் அல்லாஹ்விடத்தில் எந்தப் பயனையும் ஏற்படுத்தவில்லை.
நபி (ஸல்) அவர்கள் தம் தாயாரின் அடக்கத் தலத்தைச் சந்தித்தபோது அழுதார்கள்; (இதைக் கண்டு) அவர்களைச் சுற்றியிருந்தவர்களும் அழுதனர். அப்போது அவர்கள், “நான் என் இறைவனிடம் என் தாயாருக்காகப் பாவ மன்னிப்புக் கோர அனுமதி கேட்டேன். எனக்கு அனுமதி வழங்கப்படவில்லை. அவரது அடக்கத் தலத்தைச் சந்திப்பதற்கு அனுமதி கேட்டேன். எனக்கு அனுமதி வழங்கினான். எனவே, அடக்கத் தலங்களைச் சந்தியுங்கள். ஏனெனில், அவை மரணத்தை நினைவூட்டும்!”என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்:முஸ்லிம் (1777)
ஒரு மனிதர், “அல்லாஹ்வின் தூதரே! (இஸ்லாத்திற்கு முன் இறந்துவிட்ட) என் தந்தை எங்கே இருக்கிறார்?” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், (நரக) நெருப்பில்” என்று பதிலளித்தார்கள். அவர் திரும்பிச் சென்ற போது அவரை நபி (ஸல்) அவர்கள் அழைத்து, “என் தந்தையும் உன் தந்தையும் (நரக) நெருப்பில் தான் (இருக்கிறார்கள்)” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி), நூல்: முஸ்லிம் (347)
மார்க்கத்திற்கு முதலிடம் கொடுத்த நபிகளார்
மிகவும் அன்பிற்குரியவர்களாக நேசித்த தன் மகள் பாத்திமா (ரலி) அவர்கள் மார்க்கத்திற்கு முரணான காரியத்தைச் செய்த போது அன்பிற்குரிய மகளின் செயல் என்று அதை அங்கீகரிக்காமல் அதைக் கண்டிக்கும் வண்ணமாக அவர்களது வீட்டிற்குச் செல்லாமல் திரும்பி வந்துவிட்டார்கள்.
நபி (ஸல்) அவர்கள், (தமது மகள்) ஃபாத்திமா (ரலி) அவர்கன் வீட்டுக்கு வந்தார்கள். ஆனால், அவர்களிடம் செல்லவில்லை. அலீ (ரலி) அவர்கள் வந்தார்கள். ஃபாத்திமா (ரலி) அவர்கள் அலீ (ரலி) அவர்களிடம் விஷயத்தைச் சொன்னார்கள். அலீ (ரலி) அவர்கள் அதை நபி (ஸல்) அவர்களிடம் சொல்ல, “நான் ஃபாத்திமாவின் வீட்டு வாசலில் பல வண்ணச் சித்திரங்கள் வரையப்பட்ட திரைச் சீலை ஒன்றைக் கண்டேன். எனக்கும் இந்த (ஆடம்பரமான) உலகத்திற்கும் என்ன தொடர்பு? (அதனால்தான் திரும்பி வந்துவிட்டேன்)” என்று கூறினார்கள். அலீ (ரலி) அவர்கள், ஃபாத்திமா (ரலி) அவர்களிடம் சென்று, நபி (ஸல்) அவர்கள் கூறியதைச் சொன்னார்கள். அதற்கு ஃபாத்திமா (ரலி) அவர்கள், “அந்தத் திரைச் சீலையின் விஷயத்தில் நபி (ஸல்) அவர்கள், தாம் விரும்புவதை எனக்குக் கட்டளையிடட்டும்” என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள், “அதை இன்னாரின் வீட்டாரிடம் அனுப்பி விடு. அவர்களுக்குத் தேவையுள்ளது” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னுஉமர் (ரலி), நூல்: புகாரி (2613)
எந்தச் சோதனை வந்தாலும் எதிர்த்து நின்று போராடக் கூடிய ஈமானிய வலிமை மிகுந்த ஏகத்துவவாதிகள் பலரும் உறவு முறை என்று வந்து விட்டால் அவர்களது ஈமானிய நிலை ஆட்டம் கண்டு விடுவதையும், அவர்கள் மிக உறுதியாக நின்றாலும் அவரது மனைவிமார்கள் அவர்களது மதியை மயக்கி ஈமானை மலுங்கடித்து விடச் செய்வதையும் காண்கிறோம். இந்த நிலை மாற வேண்டும் என்றால் நபி (ஸல்) அவர்கள் காட்டித் தந்த முன்மாதிரியை நம் வாழ்வில் எடுத்து நடக்க வேண்டும். தானாடாவிட்டாலும் தன் சதையாடும் என்பார்கள். மார்க்க விஷயம் என்று வந்து விட்டால் நபியவர்கள் தானும் ஆடவில்லை, தன் சதையையும் ஆடவிடவில்லை.
சிறந்த தோழர்கள்
பயனளிக்காத இந்த உறவுக்காக மறுமை வாழ்க்கையைப் பாழாக்கி விடாதீர்கள். மறுமை வாழ்க்கைக்குப் பயனளிக்கும் மார்க்கக் கடமைகளுக்கு முதலிடம் கொடுங்கள். அல்லாஹ்வும் அவன் தூதரும் கூறிய கட்டளையை ஏற்று நடங்கள். அதற்கே முதலிடம் கொடுங்கள். மறுமை நாளில் சிறந்த தோழமை உங்களுக்குக் கிடைக்கும்.
அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் (முஹம்மதுக்கும்) கட்டுப்பட்டு நடப்போர்,அல்லாஹ்வின் அருள் பெற்ற நபிமார்கள், உண்மையாளர்கள், உயிர்த் தியாகிகள், மற்றும் நல்லோருடன் இருப்பார்கள். அவர்களே மிகச் சிறந்த நண்பர்கள். (அல்குர்ஆன் 4:69)
மறுமை நாள் ஏற்படும் போது வரும் சப்தத்தைக் கேட்டவுடன் நம்மை விட்டும் ஓட்டம் எடுக்கும் உறவுகள் ஒருபுறம் இருக்க, அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் கட்டுப்பட்டு நடப்பவர்கள் மிக உயர்ந்த நபிமார்கள், உயிர் தியாகிகள், உண்மையாளர்கள், நல்லவர்கள் ஆகியோருடன் இருக்கும் நல்வாய்ப்பு கிட்டும். இந்த வாய்ப்பைப் பெறுவதற்கு முழு முயற்சியை நாம் எடுப்போம்.

கழகத் தலைவர் கொளத்தூர் மணி, சென்னை-தாம்பரத்தில் மார்ச் 31 ஆம் தேதி நடந்த கழகக் கூட்டத்தில் ஆற்றிய உரையிலிருந்து:

   வால்மீகி இராமாயணத்தை சீனிவாச அய்யங்கார் என்பவர் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். சி.ஆர். நரசிம்ம ஆச்சாரியார் தமிழில் மொழி பெயர்த்தார். அதில்... எண்பது மைல் அகலம், எண்ணூற்று எட்டு மைல் நீளத்திற்கு இராமன் பாலம் கட்டியதாகத்தான் வால்மீகி இராமாயணம் சொல்கிறது. இங்கிருந்து இலங்கைக்கு முப்பது மைல் தூரம் தான். எனவே எண்ணூற்று எட்டு மைல் நீளத்திற்கு இங்கு பாலம் கட்டியிருக்க முடியாது. அப்படியே இருந்தாலும் கூட இராமாயணப்படி இராமன் கட்டியது மிதக்கும் பாலம் தானே தவிர, நிலம் வரைக்கும் இருந்த பாலம் அல்ல. அது மட்டும் அல்லாமல் இராமாயணக் கதைப்படி இராமன் திரும்பி வந்தவுடன், இதன் வழியாக அரக்கர்கள் வந்துவிடுவார்கள் எனக் கருதி, அம்பு எய்தி பாலத்தை அழித்து விடுகிறான்.

நாம் வைக்கும் வாதங்கள் என்னவென்றால்.... சூர்ப்பனகை இங்கு வருகிறாள், அவள் தாக்கப்பட்ட பிறகு, இராவணன் இங்கு வருகிறான். சூர்ப்பனகை, இராவணன், அனுமன் ஆகிய இவர்கள் அனைவரும் ராமன் பாலம் கட்டும் முன்பே பாலம் இல்லாமலேயே போகிறார்கள் - வருகிறார்கள் என்கிறபோது, கடவுள் அவதாரம்(?) இராமனுக்கு மட்டும் எதற்குப் பாலம்?

இராமாயணக் கதைப்படி, லட்சுமணன் மற்றும் போர் வீரர்கள் எல்லாம் இறந்து விடுகிறார்கள். அவர்களை பிழைக்க வைப்பதற்காக இந்தியாவி லுள்ள சஞ்சீவி வேர் தேவைப்படுகிறது. பறந்து வந்த அனுமனுக்கு சஞ்சீவி வேர் எதுவென்று தெரியாத தால், சஞ்சீவி மலையையே தூக்கிச் சென்று விடுகிறான். அதன் மருத்துவ சக்தியால் இராமனின் படையினர் உயிர்த்தெழுந்தார்கள் என்று இராமாயணம் கூறுகிறது. மீண்டும் அந்த மலையை இங்கு கொண்டு வந்து விட்டால் இங்கு உள்ள நோய்களையெல்லாம் தீர்த்துவிடலாம் அல்லவா? எனவே இராமர் பாலத்தை பாதுகாக்க வேண்டும் என்று போராடுகிற இந்து முன்னணி போன்றவர்கள் எல்லாம், முதலில் அந்த சஞ்சீவி மலையை தேடி கண்டுபிடித்து அதை மீட்பதற்காக போராட்டம் நடத்தலாமே? 

வலசை நீரோட்டம், இடசை நீரோட்டம் என்று சொல்வார்கள். அதாவது கடிகார முள் ஓடும் திசை, அதற்கு எதிர் திசை. கடலுக்கு அடியில் ஓடுகிற நீரோட்டங்கள் மூன்று மாதம் வலப் பக்கமாகவும், மூன்று மாதம் இடப் பக்கமாகவும் ஓடுகிறபோது இயற்கையாக ஏற்படுவது தான் மணற்திட்டு. இது உலகம் முழுவதும் பல இடங்களில் காணப்படுகிறது. முதல் மட்டம் பவளப் பாறைகளாகவும், அதற்கு மேல் சுண்ணாம்பு பாறைகளாகவும், அதற்கு மேல் மணலாகவும் மூன்று மட்டங்கள் இருப்பதாகவும், இவை நீரோட்டங்களால் இயற்கையாக உருவானவை என்றும் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

கின்னஸ் சாதனை படைக்க காத்திருக்கும் தமிழ் நாட்டின் புத்திசாலி மாணவி

இந்திய மாநிலமான தமிழ்நாட்டில் பாளையங்கோட்டையை சேர்ந்த 11 வயது மாணவி இன்ஜினியரிங் படிப்பு முடித்தவர்கள் எழுத வேண்டிய எம்.சி.பி., மற்றும் சி.சி.என்.ஏ., தேர்வுகள்உட்பட ஏழுதேர்வுகளை எழுதி சாதனைபடைத்துள்ளார்.
மேலும் இப் பெண்ணின் பெயர் விசாலினி வயது 11. இவர் பாளையங் கோட்டையில் உள்ள ஐ.ஐ.பி.இ., லட்சுமிராமன் மெட்ரிக் குலேஷன் பள்ளியில், எட்டாம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்த பெண் சாதாரண மனிதர்களை விட நுண்ணறிவுத்திறன் (ஐ.க்யூ.,) அதிகம் உள்ளதால், நான்கு வகுப்புகளை இரண்டு ஆண்டுகளில் படித்து தேர்ச்சி பெற்றதன் மூலம், 11 வயதில், எட்டாம் வகுப்பு படித்து வருகிறார்.
இவருக்கு இரண்டரை வயதாகும் போது இவரை பரிசோதித்த மருத்துவர் மற்றவர்களை விட நுண்ணறிவுத்திறன் அதிகம் உள்ளதாக தெரிவித்துள்ளார். சாதாரண மனிதர்களுக்கு நுண்ணறிவுத்திறன் அளவு, 90லிருந்து 110 வரை இருக்கும்.
ஆனால் விசாலினியின் ஐ.க்யூ., அளவு, 225 வரை உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். புனேயில் உள்ள நிறுவனம் ஒன்றும், விசாலினியின் ஐ.க்யூ., அளவு, 225 ஆக இருப்பதை, உறுதிசெய்துள்ளது.
விசாலியின் இந்த உலக சாதனை கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறுவதற்கு, 14 வயது பூர்தியாகியிருக்க வேண்டும் என்பதாலும், இவருக்கு தற்போது 11 வயது தான் ஆகிறது என்பதால் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடிப்பதற்கு இன்னும் மூன்று ஆண்டுகள் காத்திருக்க வேண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.



திருமண நிகழ்ச்சியில் நடனமாடிய பெண்களுக்கு பாகிஸ்தானில் மரண தண்டனை விதிப்பு


திருமண நிகழ்ச்சியில் ஆடிப் பாடியதற்காக 4 பெண்கள் 2 ஆண்களுக்கு வடக்கு பாகிஸ்தானில் உள்ள பழங்குடியின கவுன்சில் ஒன்று மரண தண்டனை விதித்துள்ளது.
கைபர்- பக்துன்குவா மாகாணத்தில் உள்ள ஹசாரா பகுதியில் 2 மாதங்களுக்கு முன்பு நடந்த திருமணம் ஒன்றில் அவர்கள் ஆடிப்பாடியுள்ளனர். அதை விருந்தினர் ஒருவர் கைபேசியில் வீடியோ பதிவு செய்துள்ளார். பிறகு அந்த வீடியோ அந்தப் பெண்களின் குடும்பத்தினருக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இதையடுத்து ஒரு மாதத்துக்கு முன்பாக கிராமப் பெரியவர்களை உள்ளடக்கிய கவுன்சில் கூட்டப்பட்டது. இருபாலரையும் பிரித்து வைத்தே பார்க்கும் இஸ்லாமிய மற்றும் பழங்குடியின விதிகளுக்கு இது முரணானதாக உள்ளதால் அவர்களுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
4 பெண்களில் இருவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளன. பழங்குடியின கவுன்சில் கூடுவதற்கு முன்பாகவே சம்பந்தப்பட்ட 2 ஆண்களும் ஊரிலிருந்து தப்பி விட்டனர்.
எனவே அந்த 4 பெண்களை சீர்டெய் கிராமத்தில் அறை ஒன்றில் கட்டி வைத்து பட்டினி போட்டு வருகின்றனர்.
அவர்களை துஷ்டர்களாக கவுன்சில் அறிவித்துள்ளது. அவர்கள் எப்போது வேண்டுமானாலும் கொல்லப்படுவார்கள் என்று தப்பியோடிய சம்பந்தப்பட்ட ஆண்களின் அண்ணன் முகமது அப்சல் தெரிவித்துள்ளார்.
6 பேரையும் கொல்வதற்கு கவுன்சில் 40 பேரை நியமித்துள்ளது. கவுன்சிலின் தீர்ப்புப்படி ஆண்கள்தான் முதலில் கொல்லப்பட வேண்டும்.
அந்த வீடியோ போலியானது என்று அப்சல் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக பழங்குடியின பெரியோர்களுடன் பேசியுள்ளதாகவும், அனைத்து வகையிலும் போராடி மரண தண்டனையை தடுப்பதாகவும் மாவட்ட பொலிஸ் தலைவர் அப்துல் மஜீத் அஃப்ரிதி தெரிவித்தார்.

பல்லி வகையைச் சேர்ந்த புதிய உயிரினம்(படங்கள் இணைப்பு)



ஆர்மட்டிலோ என அழைக்கப்படும் பல்லி வகையைச் சேர்ந்த இந்த உயிரனம் ஆப்பிரிக்கா பாலைவனத்தில் அதிகம் காணப்படுகின்றது. 16 முதல் 21 செ.மீ வரை வளரக்கூடியத் தண்மைக் கொண்டது.
அதிக நெகிழ்வுத் கொண்ட இந்த உயிரினம் தனது உடலை ரப்பர் போன்று வளைக்குமாம். மேலும் எதிரிகளை தாக்கவல்ல இதன் வால் பகுதி அதிக விசத்தன்மைக் உடையது.